என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    மீன் கேக்
    X
    மீன் கேக்

    சூப்பரான ஸ்நாக்ஸ் மீன் கேக்

    மீனில் குழம்பு, வறுவல் என்று எப்போதும் ஒரே மாதிரியாக செய்யாமல் இன்று வித்தியாசமான முறையில் மீன் கேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம். குழந்தைகளுக்கு இது மிகவும் பிடிக்கும்.
    தேவையான பொருட்கள்

    சதைப்பிடிப்புள்ள மீன் - 200 கிராம்
    உருளைக்கிழங்கு - 200 கிராம்
    உலர்ந்த ரொட்டித்தூள் - 1 கப்
    நெய் - 1 டீஸ்பூன்
    எலுமிச்சை பழச்சாறு -  1 டீஸ்பூன்
    மைதா மாவு -  1 டீஸ்பூன்
    எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
    உப்பு - சுவைக்கு
    மிளகுத்தூள் - அரை  டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - அரை  டீஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிதளவு

    செய்முறை

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    மீன் மற்றும் உருளைக்கிழங்கை தனித்தனியாக வேக வைத்து கொள்ளவும்.

    மீனின் தோல், முள் ஆகியவற்றை நீக்கி, உருளைக்கிழங்கை தோலை அகற்றி நெய் விட்டு நன்றாக மசித்து கொள்ளவும்.

    மீனை உதிர்த்து விட்டு அத்துடன் உப்பு, மிளகுத்தூள், மஞ்சள் தூள், எலுமிச்சைபழச்சாறு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை மற்றும் மசித்த உருளைக்கிழங்கு ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைய வேண்டும்.

    சப்பாத்தி பலகையில் மைதா மாவை தூவி, பிசைந்த மீன் கலவையை வைத்து 2 செ.மீ கனத்துக்கு நீளமாக வெடிப்பு இல்லாமல் உருட்ட வேண்டும். பின்னர் அதை 6 அல்லது 8 துண்டுகளாக நறுக்கவும். அதன் பின் ஒவ்வொரு துண்டும் சம அளவில் இருக்குமாறு தட்ட வேண்டும்.

    ஒரு டேபிள் ஸ்பூன் மைதா மாவில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி ஒரு சிட்டிகை உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கெட்டியான குழம்பு போல கரைத்து கொள்ள வேண்டும். அதில் மீன் துண்டுகளை நன்றாக தோய்த்து அதை ரொட்டி தூளில் அழுத்தமாக புரட்டி எல்லா பக்கமும் படியுமாறு செய்ய வேண்டும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி, கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் மீன் துண்டுகளை போட்டு பொரித்துஎடுக்கலாம் அல்லது தோசைக்கல்லை வைத்து இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு ஒவ்வொன்றாக வேக வைத்தும் எடுக்கலாம்.

    சுவை மிகுந்த மிருதுவான மீன் கேக் தயார்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×