என் மலர்tooltip icon

    சமையல்

    பிரியாணிக்கு முக்கியமே மசாலா தாங்க.. அப்படி ஒரு அட்டகாசமான மசாலாவை கொஞ்சம் சேர்த்தாலே போதும் சுவையும், மணமும் கமகமக்கும்.. இந்த கமகமக்கும் பிரியாணி மசாலாவை எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்..
    தேவையான பொருட்கள்:

    நட்சத்திர சோம்பு - 2 டேபிள் ஸ்பூன்
    பிரியாணி இலை - 6
    பட்டை - 5
    கிராம்பு - 2
    டேபிள் ஸ்பூன்
    ஏலக்காய் - 2 டேபிள் ஸ்பூன்
    ஜாதிக்காய் - 3
    மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
    தனியா - 2 டேபிள் ஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 7

    செய்முறை:

    வாணலியை அடுப்பில் வைத்து மிதமாக சூடு செய்யவும். அதில், நட்சத்திரப் பூ, பட்டை, பிரியாணி இலை, பட்டை, ஜாதிக்காய், ஏலக்காய், காய்ந்த மிளகாய், கிராம்பு, தனியா, மிளகு சேர்த்து மிதமாக வறுத்துக் கொள்ளவும்.

    பின்னர் இதனை ஆறவைத்ததும், மிக்ஸி ஜாரில் போட்டு பொடித்துக் கொள்ளவும். அவ்வளவு தாங்க.. கமகமக்கும் பிரியாணி மசாலா ரெடி..!

    ஒரு கிலோ மட்டன் பிரியாணிக்கு 2 டேபிள் ஸ்பூன் அளவும், ஒரு கிலோ சிக்கன் பிரியாணிக்கு ஒன்றரை டேபிள் ஸ்பூன் அளவும், மீன் பிரியாணிக்கு ஒரு டேபிள் ஸ்பூன் அளவும், குஸ்கா, முட்டை பிரியாணிக்கு முக்காய் டேபிள் ஸ்பூன் மசாலா அளவும் சேர்த்தால் சுவையாக இருக்கும்..

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    புரதச்சத்து கொண்ட உணவு வகைகளை தொடர்ச்சியாக எடுத்துக்கொள்வதன் மூலம் உடலுக்கான ஊட்டச்சத்து தேவையில் பெரும்பங்கை பூர்த்தி செய்யலாம்.
    குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் உட்கொள்ளும் வகையில் காலை மற்றும் மாலை நேர சிற்றுண்டிக்கு இந்த உணவு மிகவும் ஏற்றதாக இருக்கும்.

    தேவையான பொருட்கள்

    முளைவிட்ட கருப்பு கொண்டைக்கடலை - 1 கப்
    முளைவிட்ட பச்சைப்பயிறு - அரை கப்
    துருவிய பன்னீர் - அரை கப்
    வெங்காயம் - 1
    தக்காளி - 2
    வெள்ளரி - 1
    ப.மிளகாய் - 2
    எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
    மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
    உப்பு - தேவைக்கேற்ப
    சாட் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
    கொத்தமல்லி -  சிறிதளவு

    செய்முறை


    பன்னீரை துருவிக்கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளி, வெள்ளரிக்காய், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    நறுக்கி வெங்காயம், தக்காளி, வெள்ளரி, ப.மிளகாய் அனைத்தையும் ஒரு பெரிய கிண்ணத்தில் போட்டு கலக்கவும்.

    அதில் முளைவிட்ட கொண்டைக்கடலை, பச்சைப்பயிறு சேர்க்கவும்

    அதன் பின்னர் எலுமிச்சை சாறு, மிளகுத்தூள், உப்பு, சாட் மசாலாத்தூள், பன்னீர் சேர்த்து கலக்கவும்.

    இறுதியாக அதன் மேல் கொத்தமல்லி தழையைத்தூவி பரிமாறவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நீர்ச்சத்து அதிகம் நிறைந்த சுரைக்காயை வெயில் காலங்களில் அதிகம் உணவில் சேர்த்து வருவது நல்லது. அதுவும் மதிய வேளையில் சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் வகையில் சுரைக்காயைக் கொண்டு பருப்பு குழம்பு செய்தால், அற்புதமாக இருக்கும்.
    தேவையான பொருட்கள்:

    சுரைக்காய் - 1/2
    பாசிப் பருப்பு - 1/2 கப்
    வெங்காயம் - 1
    தக்காளி - 1
    வரமிளகாய் - 3
    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
    சாம்பார் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
    கடுகு - 1/2 டீஸ்பூன்
    சீரகம் - 1 டீஸ்பூன்
    உப்பு - சுவைக்கேற்ப
    எண்ணெய் - 1 டீஸ்பூன்
    நெய் - 1 டீஸ்பூன்

    செய்முறை:

    வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முதலில் சுரைக்காயை நன்கு கழுவி உள்ள விதைகளை நீக்கிவிட்டு, துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

    பின்னர் பாசிப்பருப்பை நீரில் நன்கு கழுவிவிட்டு, அதை குக்கரில் போட்டு, அத்துடன், தக்காளி சேர்த்து 3 கப் அல்லது தேவையான நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். விசில் போனதும் குக்கரைத் திறந்து கொள்ள வேண்டும்.

    பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகத்தை சேர்த்து தாளிக்கவும்.

    பின் வெங்காயம், வரமிளகாய் சேர்த்து, வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.

    பிறகு குக்கரில் உள்ள பாசிப்பருப்பு மற்றும் சுரைக்காய் துண்டுகளை போட்டு, அதோடு மஞ்சள் தூள் மற்றும் சாம்பார் பவுடர் சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி, உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கி, மேலே நெய் ஊற்றினால், சுவையான சுரைக்காய் பருப்பு குழம்பு தயார்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காலை மற்றும் மாலையில் சத்தான ஸ்நாக்ஸ் சாப்பிட விரும்பினால் ஜவ்வரிசி பருப்பு சுண்டல் செய்து சாப்பிடலாம். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    ஜவ்வரிசி - 1 கப்
    சிறுபருப்பு - கால் கப்
    வறுத்த வேர்க்கடலை - ½ கப்
    தேங்காய் துருவியது - சிறிதளவு
    கடுகு, உளுந்து, கறிவேப்பிலை - தாளிக்க
    மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - தேவையான அளவு
    எண்ணெய் - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    ஜவ்வரிசியை முதல் நாள் இரவு அல்லது 5 மணிநேரம் ஊறவைக்கவும். அதிகம் தண்ணீர் ஊற்றக்கூடாது. அப்படி ஊற்றினால் குழைவாக வரும். உதிரியாக இருக்காது. சிறிது தண்ணீர் தெளித்து ஊற வைக்கவும்.

    சிறுபருப்பை நன்றாக கழுவி மஞ்சள் தூள் சேர்த்து உதிரியாக வேக வைத்து கொள்ளவும்.

    ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் ஊறவைத்த ஜவ்வரிசி, வேக வைத்த பருப்பு, வறுத்த வேர்க்கடலை, மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து சிறு தீயில் வைத்து நன்கு வதக்கவும்.

    கடைசியில் துருவிய தேங்காயைச் சேர்த்து இறக்கலாம்.

    சூப்பரான ஜவ்வரிசி பருப்பு சுண்டல் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சேமியா பாயாசம், ஜவ்வரிசி பாயாசம், பருப்பு பாயாசம் செய்து இருப்பீர்கள். ஆனால் கசகசாவை வைத்துக் கூட சுவையான பாயாசம் செய்யலாம் தெரியுமா? இன்று அதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    கசகசா விதைகள் - 3 டேபிள் ஸ்பூன்
    பச்சரிசி - 1 டேபிள் ஸ்பூன்
    தேங்காய் - 1/2 கப்
    வெல்லம் - 3/4 கப்
    தண்ணீர் - 1 1/2 கப்
    ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்
    நெய் - 1 டேபிள் ஸ்பூன்
    முந்திரி - 2 டேபிள் ஸ்பூன்

    செய்முறை:

    முதலில் பச்சரி மற்றும் கசகசாவை வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைத்துக் கொள்ள வேண்டும்.

    பின்னர் வறுத்த பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் தேங்காய் மற்றும் சிறிது நீர் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

    பின்பு ஒரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் நீரை ஊற்றி, வெல்லத்தை முற்றிலும் உருக வைத்து இறக்கி வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

    பிறகு வெல்லப் பாகை அரைத்து வைத்துள்ள கசகசா விழுதை சேர்த்து அடுப்பில் வைத்து கட்டிகளின்றி நன்கு கிளறி, 10-15 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். இந்த நேரத்தில் பாயாசமானது சற்று கெட்டியாக ஆரம்பிக்கும்.

    பின் சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, பாயாசத்தில் ஊற்றி, அத்துடன் ஏலக்காய் பொடியை சேர்த்து நன்கு கிளறிவிட்டு இறக்கினால், சுவையான கசகசா பாயாசம் தயார்.

    குறிப்பு:

    பாயாசம் மிகவும் கெட்டியாகிவிட்டால், அத்துடன் காய்ச்சிய பாலை தேவைக்கேற்ப சேர்த்துக் கொள்ளலாம்.

    உங்களுக்கு இனிப்பு குறைவாக அல்லது அதிகமாக வேண்டுமானால், அதற்கு ஏற்ப வெல்லத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    அன்றாட வாழ்வில் தினமும் பயன்படுத்தும் காய்கறிகளிலே பல்லாயிரக்கணக்கான சத்துக்கள் நிரம்பியுள்ளது. அப்படிப்பட்ட பீர்க்கங்காய் தோலை வைத்து எப்படி சுவையான துவையல் செய்வது என்பதை பார்ப்போம்..
    தேவையான பொருள்கள்:

    பீர்க்கங்காய் தோல்- 1 கப்
    காய்ந்த மிளகாய் - 10
    உ.பருப்பு - 50 கிராம்
    க.பருப்பு- 50 கிராம்
    உப்பு- தேவையான அளவு
    வெங்காயம்- 1
    தேங்காய் துருவல்- 2 ஸ்பூன்
    புளி- சிறிதளவு,
    எண்ணெய்- 2 ஸ்பூன்

    பீர்க்கங்காய் தோல் துவையல்

    செய்முறை:

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முதலில் பீர்க்கங்காயில் உள்ள தோல்களை தனியாக சீவி வைத்து கொள்ளவும்.

    அடுப்பில் ஒரு கடாயை வைத்து உ .பருப்பு, க. பருப்பு மற்றும் காய்ந்த மிளகாய் ஆகியவற்றை பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து கொள்ளவும்.

    அதே கடாயில் தேவையான அளவு எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்தவுடன் பீர்க்கங்காய் தோல், வெங்காயம், துருவிய தேங்காய் மற்றும் உப்பு ஆகியவை சேர்த்து நன்றாக 10 நிமிடம் வதக்கி கொள்ளவும்.

    இரண்டு கலவையும் நன்றாக காற்றாட விட்டு பிறகு மிக்சியில் தேவையான தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளளவும்.

    பத்தே நிமிடத்தில் சுவையான பீர்க்கங்காய் துவையல் தயார்.

    இதனை சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். இட்லி,தோசை என டிபனுடன் சேர்த்து சாப்பிடலாம். .

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வெயில் காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர் வரை ஜில்லுனு சாப்பிடவே பிரியப்படுவார்கள். எவ்வளவு நாள் தான் பழச்சாறும் ரோஸ் மில்க்குமே செஞ்சி குடுப்பீங்க. கொஞ்சம் வித்தியாசமாக டிரை பண்ணலாமா?
    தேவையான பொருட்கள்

    கொழுப்பு நீக்காத பால் - 1 கப்
    சர்க்கரை - 2 டேபின் ஸ்பூன்
    கிரீம் பிஸ்கட் - 4 துண்டுகள்
    ஐஸ்கட்டி -  தேவையான அளவு

    செய்முறை

    மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் மிக்சியிலோ பிளெண்டரிலோ நன்றாக பிளெண்ட் செய்து ஜில்லுனு குடிக்கலாம்.

    பிஸ்கட் தூளை தூவி பருக கொடுத்தால் பிள்ளைகள் குஷியாகி விடுவார்கள்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இன்றைய காலகட்டத்தில் உடல் நலத்திற்கு ஊட்டமளிக்கும் உணவு வகைகளை வீட்டிலேயே சமைத்து சாப்பிடுவது அவசியமானது. அத்தகைய தன்மை கொண்ட கருப்பு கொண்டையை பயன்படுத்தி ரொட்டி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கருப்புகொண்டைகடலை மாவு - 2 கப்
    தண்ணீர் - தேவையான அளவு

    செய்முறை:

    தண்ணீரை லேசாக சுடவைத்து கருப்பு கொண்டைகடலை மாவில் ஊற்றி பிசைந்து கொள்ளவும்.

    ரொட்டி தயார் செய்யும் பதத்திற்கு வரவில்லை என்றால் சிறிதளவு கோதுமை மாவை சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

    பின்னர் மாவு கலவையை சிறு சிறு உருண்டைகளாக்கி சப்பாத்தி தேய்ப்பது போல் தேய்த்து தவாவில் போட்டு சுட்டு எடுக்கவும். இது சப்பாத்தியை விட சற்று கனமாக இருக்கும்.

    ஆரோக்கிய பலன்:

    இதில் இரும்பு சத்து, நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்திருக்கிறது. இதை சாப்பிடுவதால் உடல் எடை கூடாது. ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு சீராக இருக்கும். சருமத்திற்கும் நல்லது.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வீட்டில் சாட் ரெசிபிக்களை செய்யும் போது அதனுடன் சேர்த்து சாட் மசாலா தூளை வீட்டிலேயே எளிய முறையில் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சீரகம் - கால் கப்,
    தனியா - கால் கப்,
    அம்சூர் பவுடர் - கால் கப் (மாங்காய்த் ள் – பெரிய மளிகைக் கடைகளில் கிடைக்கும்)
    மிளகு – ஒரு டீஸ்பூன்,
    காய்ந்த மிளகாய் – அரை கப்,
    கருப்பு உப்பு (பெரிய மளிகைக் கடைகளில் கிடைக்கும்) – ஒரு டீஸ்பூன்,
    ஏலக்காய், லவங்கம் – தலா 5,
    உப்பு – தேவையான அளவு.

    செய்முறை  :

    முதலில் வெறும்  கடாயில்  சீரகம் மற்றும்  தனியா சேர்த்து  வறுத்துக் கொள்ள  வேண்டும்.

    பின் இதனை ஆறவைத்து, இவற்றோடு காய்ந்த மிளகாய், மாங்காய் தூள், மிளகு, உப்பு ஆகியவற்றையும் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

    பின் இதனுடன் தூளாக்கிய கருப்பு உப்பை நன்கு கலந்தால்  சாட் மசாலா  தயார் !!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கற்பூரவல்லி குழந்தைகளின் அஜீரண வாந்தியை நிறுத்தக் கூடிய மருத்துவ குணத்தைப் பெற்றிருக்கிறது. வயிறு சம்பந்தப்பட்ட நோய், இளைப்பு நோய்களுக்கு உள் மருந்தாகவும், கண் அழற்சிக்கும் இதன் சாறு மேல் பூச்சாக தடவ குணம் தரும்.
    தேவையான பொருட்கள் :

    கற்பூரவல்லி இலைகள் - 15,
    தேங்காய்த் துருவல் - கால் கப்,
    பச்சை மிளகாய் - 2,
    புளி - கோலி குண்டு அளவு,
    பெருங்காயம் - சிட்டிகை,
    கடுகு, உளுந்தம் பருப்பு - தலா கால் டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு,
    எண்ணெய் - அரை டீஸ்பூன்.

    செய்முறை :

    கற்பூரவல்லி இலைகளை நன்றாக கழுவி வைக்கவும்.

    வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு பச்சை மிளகாய், கற்பூரவல்லி இலைகள், தேங்காய்த் துருவல், புளியை தனித்தனியாக சேர்த்து வதக்கி ஆற விடவும்.

    அனைத்தும் நன்றாக ஆறிய பின் மிக்சியில் போட்டு உப்பு சேர்த்து அரைத்த கொள்ளவும்.

    அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, பெருங்காயம் சேர்த்து தாளித்து சட்னியில் சேர்த்து கலந்து பரிமாறவும்.

    சூப்பரான கற்பூரவல்லி சட்னி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கடைகளில் கிடைக்கும் ரசப்பொடியை வாங்கி உபயோகிக்காமல் வீட்டிலேயே எளிய முறையில் மண மணக்கும் ரசப்பொடியை தயார் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மிளகாய் வற்றல் - 200 கிராம்
    தனியா - 500 கிராம்
    மிளகு - 200 கிராம்
    சீரகம் -200 கிராம்
    துவரம் பருப்பு -250 கிராம்
    விரளி மஞ்சள் -100கிராம்
    காய்ந்த  கறிவேப்பிலை - தேவையான அளவு
    கடுகு - 2 டேபிள் ஸ்பூன்

    செய்முறை:


    எல்லா சாமான்களையும் சுத்தம் செய்து நன்றாக வெயிலில் காயவைக்கவும். அல்லது மிதமான சூட்டில் வாணலியில் லேசாக வறுக்கவும்.

    மெஷினில் கொடுத்து சற்று கரகரப்பாக அரைத்து சூட்டை ஆற்றி காற்று புகாத பாட்டில்களில் அடைத்து உபயோகிக்கவும்.

    வீட்டிலேயே  குறைந்த அளவில் தயாரிப்பதானால் சற்று நன்றாகவே பருப்பை வறுக்கவேண்டும்.

    மஞ்சளையும் உடைத்து லேசாக வறுத்து, மற்ற சாமான்களையும் வறுத்து சீரகத்தை வறுக்காமல் சேர்த்து அரைக்கவும்.

    இந்த மாதிரி மிக்ஸியில் பொடித்த பொடி போட்டு செய்தால், ரசம், தெளிவாகவும், வாசனையாகவும் இருக்கும்.

    ஆறு மாதம் வரை பயன்படுத்தலாம்.

    ரசம் வைக்கும் போது 1 லிட்டருக்கு 1 ஸ்பூன் ரசப் பொடி போட வேண்டும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தர்பூசணியில் அதிகளவு நீர்ச்சத்து நிறைந்துள்ளது. இன்று நாம் பார்க்க இருப்பது தர்பூசணி பருப்பு தோசை. சரி, இந்த ரெசிபியை எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    தர்பூசணியின் வெள்ளை நிற தோல் பகுதி (சிவப்பு பகுதியை எடுத்துவிட்டு, பச்சைத் தோலை லேசாக சீவினால் கிடைப்பது) - ஒரு கப்
    புழுங்கல் அரிசி - 2 கப்
    துவரம்பருப்பு - 4 டேபிள்ஸ்பூன்
    தேங்காய்த் துருவல் - கால் கப்
    காய்ந்த மிளகாய் அல்லது பச்சை மிளகாய் - 2
    நறுக்கிய கறிவேப்பிலை கொத்தமல்லித்தழை - தலா ஒரு டேபிள்ஸ்பூன்
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    புழுங்கல் அரிசி, துவரம்பருப்பு இரண்டையும் ஒன்றாக சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.

    பிறகு, உப்பு, காய்ந்த மிளகாய் (அ) பச்சை மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

    தர்பூசணியின் வெள்ளை நிற தோல் பகுதியை துருவி, அரைத்த மாவுடன் சேர்த்து, தேங்காய்த் துருவலையும் சேர்க்கவும்.

    இதனுடன் கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

    தோசைக்கல்லை சூடாக்கி, மாவை தோசைகளாக ஊற்றி, ஓரங்களில் எண்ணெய் விட்டு, ஒருபுறம் வெந்ததும் திருப்பிப் போட்டு, வேகவிட்டு எடுக்கவும்..

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×