search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சுரைக்காய் பருப்பு குழம்பு
    X
    சுரைக்காய் பருப்பு குழம்பு

    நீர்ச்சத்து நிறைந்த சுரைக்காயில் குழம்பு செய்யலாம் வாங்க

    நீர்ச்சத்து அதிகம் நிறைந்த சுரைக்காயை வெயில் காலங்களில் அதிகம் உணவில் சேர்த்து வருவது நல்லது. அதுவும் மதிய வேளையில் சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் வகையில் சுரைக்காயைக் கொண்டு பருப்பு குழம்பு செய்தால், அற்புதமாக இருக்கும்.
    தேவையான பொருட்கள்:

    சுரைக்காய் - 1/2
    பாசிப் பருப்பு - 1/2 கப்
    வெங்காயம் - 1
    தக்காளி - 1
    வரமிளகாய் - 3
    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
    சாம்பார் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
    கடுகு - 1/2 டீஸ்பூன்
    சீரகம் - 1 டீஸ்பூன்
    உப்பு - சுவைக்கேற்ப
    எண்ணெய் - 1 டீஸ்பூன்
    நெய் - 1 டீஸ்பூன்

    செய்முறை:

    வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முதலில் சுரைக்காயை நன்கு கழுவி உள்ள விதைகளை நீக்கிவிட்டு, துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

    பின்னர் பாசிப்பருப்பை நீரில் நன்கு கழுவிவிட்டு, அதை குக்கரில் போட்டு, அத்துடன், தக்காளி சேர்த்து 3 கப் அல்லது தேவையான நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். விசில் போனதும் குக்கரைத் திறந்து கொள்ள வேண்டும்.

    பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகத்தை சேர்த்து தாளிக்கவும்.

    பின் வெங்காயம், வரமிளகாய் சேர்த்து, வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.

    பிறகு குக்கரில் உள்ள பாசிப்பருப்பு மற்றும் சுரைக்காய் துண்டுகளை போட்டு, அதோடு மஞ்சள் தூள் மற்றும் சாம்பார் பவுடர் சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி, உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கி, மேலே நெய் ஊற்றினால், சுவையான சுரைக்காய் பருப்பு குழம்பு தயார்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×