என் மலர்tooltip icon

    சமையல்

    ரமலான் நோன்பு காலத்தில் தயார் செய்யும் ஒரு ஆரோக்கிய உணவு தான் நோன்பு கஞ்சி. இன்று மட்டன் கீமா சேர்த்து நோன்பு கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    மட்டன்-100 கிராம்
    இஞ்சி பூண்டு விழுது- 2 டேபிள் ஸ்பூன்
    உப்பு- தேவையான அளவு
    மஞ்சள் தூள்-  அரை டீஸ்பூன்
    கரம் மசாலா தூள் -  அரை டீஸ்பூன்
    மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
    சீரகம்- 1  டீஸ்பூன்
    தேங்காய் எண்ணெய்  - 1 டேபிள் ஸ்பூன்
    பச்சை அரிசி - 3/4 கப்
    பாசிப்பருப்பு - 5 டேபிள் ஸ்பூன்
    சின்ன வெங்காயம்  - 10
    தக்காளி  - 1
    கேரட்  - 1
    பச்சை மிளகாய்  -3 சிறியது
    கொத்தமல்லி இலை - 1/4 கப்
    புதினா இலை- 1/4 கப்
    கறிவேப்பில்லை- 1 கொத்து
    தேங்காய் எண்ணெய்  - 2 டேபிள் ஸ்பூன்
    பட்டை - 1/2 இன்ச்
    கிராம்பு - 2
    ஏலக்காய் - 2  
    வெந்தயம்-1/4 டீ ஸ்பூன்
    பெருங்காயத்தூள்  - ஒரு சிட்டிகை
    தண்ணீர்  - 5 கப்
    உப்பு - தேவையான அளவு
    துருவிய தேங்காய் - 1/4 கப்

    செய்முறை

    மிக்ஸி ஜாரில் சுத்தம் செய்த மட்டன் (எலும்பு இல்லாதது) போட்டு மட்டன் கைமா போல் அரைத்து கொள்ள வேண்டும்.

    குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடான பின் சீரகம், மட்டன் கைமா, மஞ்சள் தூள் பாதி, கரம் மசாலா தூள் பாதி, உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து கிளறி 5 விசில் வரும் வரை வேக வைக்கவும்.

    வெங்காயம், தக்காளி, கேரட், கொத்தமல்லி இலை, புதினா இலைகளை நன்கு நறுக்கிக் கொள்ளவும்.

    பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.

    மிக்ஸி ஜாரில் அரிசி, பாசிப்பருப்பு சேர்த்து பொடித்து கொள்ளவும்

    தேங்காய் மற்றும் சீரகம் (1/4 டீஸ்பூன்) சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்.

    குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடான பின், மீதியுள்ள சீரகம், வெந்தயம், பட்டை, கிராம்பு, ஏலக்காய்  சேர்க்கவும்.

    பின் இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி, பச்சை மிளகாய், கேரட், புதினா, கொத்தமல்லி இலைகளை சேர்த்து கிளறவும்

    பின்பு மீதியுள்ள மஞ்சள் தூள், மிளகாய் தூள், பெருங்காயத்தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

    சிறிது வதங்கியதும், அரிசி பருப்பு குருனையை கழுவி சேர்க்கவும். இதனுடன் 5 கப் தண்ணீர் சேர்த்து கிளறவும்.

    இதனுடன் வேக வைத்த மட்டன் கைமா மற்றும் மட்டன் வேக வைத்த தண்ணீரை ஊற்றி கிளறவும்

    குக்கரை மூடி 4 விசில் வரும் வரை வேக வைக்கவும்.

    பின்பு விசில் அடங்கியதும், நன்றாக கலக்கி விட்டு அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து கிளறவும்.

    மிதமான சூட்டில் 5 நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பிலிருந்து இறக்கவும்.

    பின்பு கொத்தமல்லி இலைகளை தூவி பரிமாறலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நோன்பு காலங்களில் நாம் எடுத்துக்கொள்ளவேண்டிய முக்கியமான உணவு நோன்புக்கஞ்சி. நோன்புக்கஞ்சியை சாப்பிட்டதும், நம் உடலில் நீர்வறட்சி சரியாகி உடல் சராசரி நிலைக்கு வந்துவிடும்.
    தேவையான பொருட்கள்:
     
    பச்சரிசி - 100 கிராம்
    பயத்தம் பருப்பு - 25 கிராம்
    சின்ன வெங்காயம் - 100 கிராம்
    கேரட் - 1
    தக்காளி - 1
    வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
    சீரகம் - 1/2 டீஸ்பூன்
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 2
    பிரியாணி இலை - 1
    கொத்தமல்லி - சிறிது
    புதினா - சிறிது
    தேங்காய் பால் - அரை கப்
    எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
    நெய் - 1 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

     
    கேரட், சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பச்சை மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    அரிசியை நன்கு நீரில் ஊற வைத்து, கழுவிக் கொள்ள வேண்டும்.

    மிக்சியில் சீரகம், வெந்தயத்தை போட்டு பொடி செய்து  கொள்ள வேண்டும்.
     
    ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 650 மில்லி லிட்டர் தண்ணீர் ஊற்றி, அதில் பயத்தம் பருப்பு, அரிசியைப் போட்டு நன்கு  10 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
     
    தண்ணீரானது நன்கு கொதித்ததும், நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, கேரட், புதினா, பிரியாணி  இலை, அரைத்து வைத்துள்ள பொடி மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விட்டு, தீயை குறைவில் வைத்து, குக்கரை மூடி 15 நிமிடம் அடுப்பில் வைத்து இறக்க வேண்டும். கலவையானது நன்கு வெந்ததும், அதனை பருப்பு மத்து கொண்டு நன்கு மசித்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.
     
    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும், எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானதும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, தேங்காய் பாலை ஊற்றி நன்கு நுரை வரும் வரை கொதிக்க விட்டு, அதை மசித்து வைத்துள்ள கலவையை  ஊற்றி, ஒரு கொதி விட்டு இறக்கவும்.

    சுவையான நோன்பு கஞ்சி தயார்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஹைதராபாத் உணவு வகையான ஹலீம் ரமலான் மாதத்தில் அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு உணவு வகை. இந்த உணவு ரமலான் மாதத்தில் மட்டுமே கிடைக்கும். இந்த உணவை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மட்டன் - 300 கிராம்
    எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
    சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
    மிளகு - 1 டீஸ்பூன்
    வெங்காயம் - 1 கப்
    இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்
    மிளகாய்த்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
    கரம் மசாலா - 1/2 டேபிள் ஸ்பூன்
    பச்சை மிளகாய் - 2
    தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
    எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
    புதினா - சிறிதளவு
    கொத்தமல்லி - சிறிதளவு
    ஜாதிக்காய் - 1 பிஞ்சு
    மூங் டால் - 3 டேபிள் ஸ்பூன்
    துவரம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
    மைசூர் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
    அரிசி - 1 டேபிள் ஸ்பூன்
    கோதுமை - 1/2 கப்
    கோதுமை ரவை - 3/4 கப்
    நெய் - தேவையான அளவு
    பாதாம் - சிறிதளவு

    செய்முறை:

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதனுடன் நெய் சேர்த்து சூடாக்கவும்.

    எண்ணெய் சூடானதும் அதில் சீரகம், மிளகு சேர்த்து அதனை வதக்கவும்.

    பிறகு அதனுடன் நறுக்கிய வெங்காயத்தினை சேர்த்து நன்றாக வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுது கலந்து கிளறவும்.

    பிறகு அதில் சின்ன சின்ன துண்டுகளாக மட்டன் போட்டு அதனுடன் மிளகாய்த்தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து கிளறவும்.

    பிறகு அதனுடன் பச்சை மிளகாய், தயிர் சேர்த்து நன்றாக வதக்கவும்.

    பிறகு அதனுடன் எலுமிச்சை சாறு, புதினா, கொத்தமல்லி மற்றும் ஜாதிக்காய் சேர்த்து கிளறவும்.

    நன்றாக வெந்ததும் தண்ணீர் சேர்த்து உப்பு போட்டு வேக விடவும்.

    பிறகு மேற்குறிப்பிட்டுள்ள அனைத்து பருப்பு வகைகள் மற்றும் அரிசியினை அதனுடன் சேர்க்கவும்.

    பிறகு அரைத்த கோதுமை மற்றும் கோதுமை ரவை அதில் சேர்த்து மீண்டும் அதனை நன்றாக வேக விடவும்.

    நன்றாக வெந்ததும் கரண்டி கொண்டு மசிய வைத்து அதன் மீது நெய் ஊற்றி நறுக்கிய பாதாம் போட்டு இறக்கினால் சுவையான ஹைதராபாத் மட்டன் ஹலீம் தயார்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கேழ்வரகில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. தினமும் உணவில் கேழ்வரகை சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று கேழ்வரகு அவல் கொழுக்கட்டை செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு அவல் (ஆர்கானிக் கடைகளில் கிடைக்கும்) - ஒரு கப்
    காய்ந்த மிளகாய் - 3
    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
    பல்லு பல்லாக நறுக்கிய தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்
    ஒன்றிரண்டாக உடைத்த மிளகு - அரை டீஸ்பூன்
    ஒன்றிரண்டாக உடைத்த துவரம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
    கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை (அலசி ஆய்ந்தது) - தலா ஒரு டேபிள்ஸ்பூன்
    கடுகு - அரை டீஸ்பூன்
    உடைத்த உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
    பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப்
    தண்ணீர் - ஒன்றரை கப்
    எண்ணெய், உப்பு  தேவையான அளவு.

    செய்முறை:

    அவலை நன்கு கழுவி 15 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைத்து நீரை வடித்து ஒட்டப் பிழிந்து எடுத்துக்கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளிக்கவும்.

    இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, மிளகு, பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும்.

    பின்னர் பல்லு பல்லாக நறுக்கிய தேங்காயைச் சேர்க்கவும்.

    இதனுடன் ஒன்றரை கப் தண்ணீர், தேவையான உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும்.

    தண்ணீர் கொதித்தவுடன் ஒன்றிரண்டாக உடைத்த துவரம்பருப்பு, அவல், நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறவும்.

    கலவை நன்கு வெந்ததும் கீழே இறக்கி பிடிகொழுக்கட்டையாகப் பிடிக்கவும்.

    அவ்வளவு தான் கேழ்வரகு அவல் கொழுக்கட்டை ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சப்பாத்தி, நாண், பூரி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த குடைமிளகாய் கிரேவி. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    குடைமிளகாய் - 2
    பெ.வெங்காயம் - 1
    தக்காளி - 2
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    தனியா தூள் - 1 டீஸ்பூன்
    இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
    முந்திரி பருப்பு - 6
    தேங்காய்த்துருவல் - கால் கப்
    சீரகம் - 1 டீஸ்பூன்
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு

    செய்முறை:

    குடைமிளகாய், தக்காளி, கொத்தமல்லி வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முந்திரி பருப்பை சிறிது நேரம் நீரில் ஊறவைத்து அதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் சீரகத்தை போட்டு தாளிக்கவும்.

    பின்னர் வெங்காயத்தை கொட்டி பொன்னிறமாக வதக்கவும்.

    அதில் தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து கிளறவும்.

    தக்காளி குழைய வதங்கிய பின்னர் குடை மிளகாய், தனியா தூள், மிளகாய் தூள், முந்திரி பருப்பு விழுது, உப்பு ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக கொட்டவும்.

    அவை அனைத்தும் கலந்து நன்கு வெந்ததும் கொத்தமல்லி தழையை தூவி இறக்கி விடலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ப்ரோக்கோலியில் உள்ள நார்ச்சத்து கொலஸ்ட்ராலை குறைக்கவும், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராகவும், கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது.
    தேவையான பொருட்கள் :

    ஓட்ஸ் - கால் கப்
    ப்ரோக்கோலி - 2 மொட்டுகள்
    ஓமம் - கால் டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 1
    பிரிஞ்சி இலை - சிறிதளவு
    இஞ்சி - 1 துண்டு
    பால் - அரை கப்
    சர்க்கரை - அரை டீஸ்பூன்
    தனியாதூள், மிளகுதூள் - அரை டீஸ்பூன்
    வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
    உப்பு - தேவைக்கு

    செய்முறை:

    ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் வெண்ணெய்யை ஊற்றி அது சூடானதும் ப்ரோக்கோலி மொட்டுகள், பிரிஞ்சி இலையை போட்டு கிளறவும்.

    பின்பு பால், ஓட்ஸ், மிளகாய், இஞ்சி ஆகியவற்றை சேர்த்து குக்கரை மூடி வேகவைக்கவும்.

    ஒரு விசில் வந்ததும் இறக்கி மிளகாய், இஞ்சி ஆகியவற்றை தனியாக எடுத்துவிட்டு மற்றவற்றை மிக்சியில் போட்டு விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

    பின்பு அவற்றை வடிகட்டிக்கொள்ளவும்.

    பின்னர் வடிகட்டிய கலவையை குக்கரில் கொட்டி அதனுடன் உப்பு, ஓமம், சர்க்கரை, சிறிதளவு தண்ணீர் சேர்த்து சிறு தீயில் கொதிக்கவிட்டு இறக்கவும்.

    அதனுடன் தனியாதூள், மிளகு தூள் தூவி பரிமாறலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இட்லி, தோசை, சாதத்திற்கு குடைமிளகாய் உருளைக்கிழங்கு சாம்பார் அருமையாக இருக்கும். செய்வதும் மிகவும் சுலபம். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    துவரம் பருப்பு - ஒரு கப்
    குடைமிளகாய் - 2
    உருளைக்கிழங்கு - 1
    பெ.வெங்காயம் - 1
    தக்காளி - 2
    சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன்
    மிளகு தூள் - கால் டீஸ்பூன்
    பெருங்காய தூள் - கால் டீஸ்பூன்
    கொத்தமல்லித் தழை - சிறிதளவு
    உப்பு - தேவைக்கு
    கடுகு - சிறிதளவு
    வெந்தயம் - அரை டீஸ்பூன்
    சீரகம் - அரைடீஸ்பூன்
    மிளகு - கால் டீஸ்பூன்
    பூண்டு - 3 பல்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை:

    வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    குக்கரில் பருப்பை போட்டு போதுமான அளவு தண்ணீர் ஊற்றி 5 விசில் வரும் வரை வேகவைத்துக்கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, சீரகம், மிளகு, வெந்தயம், கறிவேப்பிலை போட்டு தாளித்துக்கொள்ளவும்.

    பின்னர் வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் ஓரளவு வதங்கியதும் குடைமிளகாய், தக்காளி, உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும்.

    அவை நன்கு வதங்கியதும் மிளகுதூள், சாம்பார் பொடி சேர்த்து கிளறவும்.

    பின்னர் வேகவைத்த பருப்பை கொட்டி போதுமான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

    சற்று கெட்டியாகி சாம்பார் பதத்துக்கு வந்ததும் பெருங்காயத்தூள், கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

    ருசியான குடைமிளகாய் உருளைக்கிழங்கு சாம்பார் ரெடி.

     இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாதுளை தோலில் இருந்து தயாரிக்கப்படும் தேநீர் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இன்று இந்த தேநீரை எப்படி தயார் செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    மாதுளை தோல் - 1 பழத்தினுடையது
    ஆரஞ்சு தோல் அல்லது லெமன் தோல் - 1 பழத்தினுடையது
    துருவிய இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன்
    புதினா இலைகள் - 4-5  
    தேன் அல்லது சுவைக்கேற்ப மாபிள் சிரப்

    செய்முறை

    பழத்தின் தோல்களை நன்றாக தண்ணீரில் கழுவிக் கொள்ளுங்கள்.

    இந்த தோலில் தண்ணீர் ஊற்றி 1-2 நிமிடங்கள் வரை கொதிக்க விட வேண்டும்.

    அதனுடன் இஞ்சி மற்றும் புதினாவை சேர்த்துக் கொள்ளுங்கள்.

    இப்பொழுது ஜாரை மூடி அடுப்பை அணைத்து விடுங்கள்.

    15-20 நிமிடங்கள் கழித்து அதை வடிகட்டி குடியுங்கள்.

    இதனுடன் தேன் அல்லது சர்க்கரை சேர்த்து குடியுங்கள்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு பிடித்தமான இந்த மாம்பழ மஸ்தானியை கடையில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே எளியமுறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    மாம்பழம் சதைப் பற்றுள்ளது - 1 பெரியது,
    கொழுப்பு சத்து நிறைந்த பால் அல்லது கிரீம் - 100 மில்லி,
    சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்,
    மாம்பழ ஐஸ்கிரீம் அல்லது வெனிலா ஐஸ்கிரீம் -  2 ஸ்கூப் (குழிகரண்டி).

    மேலே அலங்கரிக்க

    பாதாம், பிஸ்தா, முந்திரி - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது),
    செர்ரி - 2 அலங்கரிக்க,
    மாம்பழம் (கொஞ்சம் - பொடியாக நறுக்கியது.

    செய்முறை

    மிக்சியில் மாம்பழம், கிரீம், சர்க்கரை, ஐஸ்கட்டி சேர்த்து நன்கு அடிக்கவும்.

    பின் அதை டம்ளரில் ஊற்றி (சிறிது இடம் விட்டு ஊற்றவும்) ஐஸ்கிரீம் அதில் சேர்த்து பொடியாக நறுக்கிய மாம்பழம், நட்ஸ் தூவி செர்ரி வைத்து அலங்கரித்து பரிமாறவும்.

    மாம்பழ சீசன் என்பதால் இதை ருசியான மாம்பழம் கொண்டு எளிதில் செய்யலாம். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காலையில் சத்தான உணவு சாப்பிட விரும்பினால் தஹி அவல் பழ சாட் செய்து சாப்பிடலாம். இந்த சாட் ரெசிபியை சாப்பிட்டால் விரைவில் பசி எடுக்காது.
    தேவையான பொருட்கள்:

    சிவப்பு அவல் - அரை கப்
    புளிப்பில்லாத தயிர் - ஒரு கப்
    மாதுளை முத்துகள் - 2 டேபிள்ஸ்பூன்
    நறுக்கிய ஆப்பிள் - ஒரு டேபிள்ஸ்பூன்
    வாழைப்பழம் (வட்டமாக நறுக்கியது) - 2 டேபிள்ஸ்பூன்
    உலர்திராட்சை - ஒரு டேபிள்ஸ்பூன்
    சர்க்கரை - ஒரு டீஸ்பூன்
    சாட் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
    வறுத்த உலர் விதை (பூசணி, வெள்ளரி விதை போன்றவை) - ஒரு டேபிள்ஸ்பூன்
    உப்பு - ஒரு சிட்டிகை.

    செய்முறை:

    சிவப்பு அவலை தண்ணீரில் 15 நிமிடங்கள் ஊறவைத்து நீரை ஒட்டப் பிழிந்துள்ளவும்.

    தயிரைக் கடைந்து வாய் அகன்ற பவுலில் சேர்த்து மற்ற அனைத்துப் பொருள்களையும் அதனுடன் சேர்த்துப் பரிமாறவும்.

    ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து `ஜில்’லென்றும் பரிமாறலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ருமாலி ரொட்டியை ஹோட்டலில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே ருமாலி ரொட்டியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    மைதா மாவு - 2 கப்
    கோதுமை மாவு - 1 கப்
    பால், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை :

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, மைதா மாவு உப்பு சேர்த்து கலக்கவும்.

    பின்னர் அதில் வெதுவெதுப்பான பாலை ஊற்றி கெட்டியாக பிசைந்து கடைசியாக எண்ணெய் ஊற்றி பிசைந்து ஈரத்துணியால் மூடி 1 மணி நேரம் வைக்கவும்.

    பின் தேவையானளவில் உருண்டை எடுத்து நன்கு மெலிதாக தேய்க்கவும்.

    நான்ஸ்டிக் தவாவை குப்புற கவிழ்த்து அடுப்பில் வைத்து சூடாக்கவும்.

    தேய்த்த ரொட்டியை போட்டு வேக வைக்கவும்.

    ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு வேகவிட்டு எடுக்கவும்.

    சுவையான ருமாலி ரொட்டி தயார்

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நாம் தினந்தோறும் சாப்பிடும் உணவுகளில் நார்ச்சத்து இருப்பது அவசியம். வாரத்திற்கு ஒரு முறையாவது ஓட்ஸ் கஞ்சி, கூழ் போன்றவற்றை செய்து சாப்பிட்டு வருவது வயிற்றில் இருக்கும் நச்சுகள் வெளியேற செய்யும்.
    தேவையான பொருள்கள்

    துருவிய கேரட் - அரை கப்
    கோஸ் - அரை கப்
    சோம்பு - 1 டீஸ்பூன்
    ஓட்ஸ் - 1 கப்
    பச்சை மிளகாய் - 2
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு போட்டு தாளித்தபின்னர் துருவிய கேரட், கோஸ் சேர்த்து 5 நிமிடம் வதக்கி ஆற வைத்து அரைத்து கொள்ளவும்.

    ஓட்ஸை வெறும் கடாயில் போட்டு வறுத்து மிக்சியில் போட்டு பொடித்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.

    பின்னர் அதனுடன் அரைத்த விழுது, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கரைத்து கொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் மாவை சற்று தடியாக அடைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் வெந்ததும் திருப்பி போட்டு இருபுறமும் வேகவைத்து எடுத்து பரிமாறவும்.

    இதில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின், மினரல்கள் உள்ளன.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×