என் மலர்tooltip icon

    சமையல்

    சுடச்சுட சாதத்தில் நெய் விட்டு பருப்பு பொடி சேர்த்து பிசைந்து சாப்பிட்டால்.. அடடே என்ன ருசி என்பீர்கள்.. .உங்களுக்கும் உணவகங்களில் தரும் பருப்பு பொடி பிடிக்கும் என்றால் கண்டிப்பாக இதனை செய்து பாருங்கள், ரொம்ப நன்றாக இருக்கும்.
    தேவையான பொருட்கள்

    துவரம் பருப்பு - 1/4 கப்
    முழு உளுந்து - 2 டேபிள் ஸ்பூன்
    பாசி பருப்பு  - 2 டேபிள் ஸ்பூன்
    மிளகு - 1 டீஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 5
    பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
    உப்பு - தேவைக்கேற்ப

    செய்முறை

    கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் துவரம் பருப்பை போட்டு நன்கு சிவக்க வறுத்து கொள்ளவும். அதனை ஒரு தட்டில் கொட்டிவிட்டு, அடுத்து அதை போல்

    பாசி பருப்பை சிவக்க வறுத்து, துவரம் பருப்புடன் சேர்த்து கொள்ளவும்.

    அடுத்து உளுந்தம் பருப்பையும் நன்கு சிவக்க வறுத்து மற்ற பருப்புடன் சேர்த்து கொள்ளவும்.

    பின் காய்ந்த மிளகாயை நன்கு மொறுமொறுவென்று வறுத்து கொள்ளவும்.

    அதனையும் பருப்புடன் சேர்த்து கொள்ளவும்,

    கடைசியாக மிளகை லேசாக வறுத்து சேர்த்து கொள்ளவும்.

    கூடவே பெருங்காயத்தூள் சேர்த்து அனைத்தையும் சிறிது நேரம் ஆற விடவும்.

    பின் மிக்ஸி ஜாரில் வறுத்த பொருட்கள் மற்றும் உப்பு சேர்த்து  நன்கு நைசாக பொடித்து கொள்ளவும்.

    சுவையான பருப்பு பொடி தயார்.

    காற்று புகாத டப்பா அல்லது பாட்டிலில் போட்டு தேவையான போது பயன்படுத்தலாம்.

    சூடான சாதத்துடன் பருப்புப் பொடி போட்டு நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிடலாம்.

    குறிப்பு

    ஒவ்வொரு பருப்பையும் தனித்தனியாக வறுத்து கொள்ளவும்.  நன்கு நைசாக பொடித்து கொள்ளவும்.


    இதில் நார்ச்சத்து காணப்படுவதால் ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. வயிறு தொடர்புடைய நோய்களை குணமாக்குகிறது. அல்சர் மற்றும் குடல் கேன்சரையும் கட்டுப்படுத்துகிறது.
    தேவையான பொருள்கள்:-

    காலிஃப்ளவர் -250 கிராம்
    வெங்காயம் -1
    பூண்டு - 2
    கிராம்பு - 2
    கருப்பு மிளகு - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு
    பிரியாணி இலை -1
    மில்லி - சிறிதளவு
    தைம் இலைகள் - 2
    ஆலிவ் எண்ணெய் 1 ஸ்பூன்
    வேர்க்கடலை -10 கிராம்

    செய்முறை:

    வெங்காயம், காலிஃப்ளவர், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அடுப்பில் ஒரு கடாய் வைத்து சூடானதும், அதில் ஆலிவ் எண்ணெயைச் சேர்க்கவும். எண்ணெய் சூடானதும், பிரியாணி இலை சேர்க்கவும்.

    ஒரு நிமிடம் கழித்து, வெங்காயம் மற்றும் நறுக்கிய பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.

    இப்போது, தைம் இலையை சேர்க்கவும்.

    அடுத்து கடாயில் காலிஃப்ளவர் பூக்களைச் சேர்த்து, வேக வைக்கவும்.

    இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு, அடுப்பை அணைத்து, இந்த கலவையிலிருந்து பிரியாணி இலைகள் மற்றும் தைம் இலைகளை அகற்றி மீதமுள்ள கலவையை ஒரு பிளெண்டரில் போட்டு, உப்பு மற்றும் கருப்பு மிளகு சேர்த்து கலவையை நன்றாக பேஸ்டில் அரைக்கவும்.

    இப்போது அரைத்த கலவையை கடாயில் எடுத்துக் கொள்ளுங்கள்.

    சிறிது பால் மற்றும் வேர்க்கடலையைச் சேர்த்து, கலவையை சிறிது திக்கான பதம் வரும் வரை கிளறவும்.

    பத்தே நிமிடத்தில் சுவையான காலிஃப்ளவர் சூப் தயார்..

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ரம்ஜான் பண்டிகை என்றாலே பலருக்கும் நினைவிற்கு வருவது, பிரியாணி தான். அதோடு அந்நாளில் வித்தியாசமான ரெசிபியை செய்ய நினைத்தால், பெங்காலி ஸ்டைல் சிக்கன் ரெசலா செய்யுங்கள்.
    தேவையான பொருட்கள்:

    அரைப்பதற்கு...


    வெங்காயம் - 1
    இஞ்சி - 1 இன்ச்
    பூண்டு - 4 பல்
    முந்திரி - 10
    கசகசா - 2 டேபிள் ஸ்பூன்

    தாளிப்பதற்கு...


    சிக்கன் - 1 கிலோ
    தயிர் - 1 கப்
    பிரியாணி இலை - 2
    கிராம்பு - 4
    ஏலக்காய் - 2
    பட்டை - 1 இன்ச்
    வரமிளகாய் - 4
    கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
    மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
    உப்பு - சுவைக்கேற்ப
    கடுகு எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
    சர்க்கரை - 1 டீஸ்பூன்
    குங்குமப்பூ - சிறிது (அலங்கரிப்பதற்கு)

    செய்முறை:

    சிக்கனை நன்றாக கழுவி வைத்து கொள்ளவும்.

    வெங்காயம், இஞ்சி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முதலில் மிக்சர் ஜாரில் வெங்காயம், இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து நன்கு அரைத்து தனியாக வைத்து கொள்ளவும்.

    அடுத்து முந்திரி, கசகசா சேர்த்து நீர் ஊற்றி நன்கு மேன்மையாக அரைத்து, அதையும் தனியாக வைத்துக் கொள்ளவும்.

    கழுவிய சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் அரைத்த பாதி வெங்காய விழுது மற்றும் பாதி முந்திரி விழுதை சேர்த்து, தயிர், தேவையான அளவு உப்பு மற்றும் ஒரு டீஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து நன்கு பிரட்டி, குறைந்தது 2 மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைத்து ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

    பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், வரமிளகாய் சேர்த்து தாளித்த பின்னர் அதில் எஞ்சிய வெங்காய விழுதை சேர்த்து சில நிமிடங்கள் வதக்க வேண்டும்.

    பின்பு அத்துடன் மீதமுள்ள முந்திரி விழுதை சேர்த்து ஒருமுறை கிளறி விட வேண்டும்.

    இறுதியாக ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து, கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி, மூடி வைத்து குறைவான தீயில் 25 நிமிடம் சிக்கனை நன்கு வேக வைக்க வேண்டும்.

    பின்பு மூடியைத் திறந்து, அதில் சர்க்கரையை சேர்த்து கிளறி, உப்பு சுவை பார்த்து தேவைப்பட்டால் உப்பு சேர்த்து கிளறி இறக்கி, மேலே குங்குமப்பூவைத் தூவினால், சுவையான பெங்காலி ஸ்டைல் சிக்கன் ரெசலா தயார்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இதயத்தை நலமாக வைத்திருக்க விரும்புபவர்கள் சிவப்பு முள்ளங்கியை அதிகம் உட்கொள்ள வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துவதில் சிவப்பு முள்ளங்கி பெரும்பங்கு வகிக்கிறது.
    தேவையான பொருட்கள் :

    சிவப்பு முள்ளங்கி (ராடிஷ்) - கால் கிலோ,
    பொட்டுக்கடலை - ஒன்றரை டேபிள்ஸ்பூன்,
    காய்ந்த மிளகாய் - 5,
    புளி - சிறிதளவு, தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்,
    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,
    உப்பு - தேவையான அளவு.

    தாளிக்க

    கடுகு, கறிவேப்பிலை, எண்ணெய்

    செய்முறை:

    சிவப்பு முள்ளங்கியை துருவிக்கொள்ளவும்.

    காய்ந்த மிளகாய், தேங்காய்த் துருவல், புளி, உப்பு, பெருங்காயத்தூள், பொட்டுக்கடலை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து, சிறிதளவு தண்ணீர் தெளித்து அரைத்து, கடைசியில் துருவிய சிவப்பு முள்ளங்கியைச் சேர்த்து அரைத்தெடுக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானம் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்து சட்னியில் சேர்த்து கலந்து பரிமாறவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பிரியாணிக்கு முக்கியமே மசாலா தாங்க.. அப்படி ஒரு அட்டகாசமான மசாலாவை கொஞ்சம் சேர்த்தாலே போதும் சுவையும், மணமும் கமகமக்கும்.. இன்று ஹைதராபாத் பிரியாணி மசாலா பொடி எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்..
    தேவையான பொருட்கள்

    பிரிஞ்சி இலை - 5 இலை
    பட்டை - இரண்டு இன்ச் சைஸ் - 3
    கிராம்பு - 10 எண்ணிக்கை
    ஏலம் - 6 எண்ணிக்கை
    மிளகு - ஒரு மேசைகரண்டி
    ஷாஜீரா - ஒரு மேசைகரண்டி
    சீரகம்- இரண்டு மேசைகரண்டி
    ஜாதிக்காய் - ஒரு சிறிய துண்டு
    ஜாதிபத்திரி - முன்று இதழ்
    அன்னாசி பூ - ஒன்று

    இதில் மிளகாய் தூள் மற்றும் தனியாதூள் தேவைக்கு சமைக்கும் கறி வகைகளை பொருத்து அதற்கேற்றாற் போல் சேர்த்து கொள்ளுங்கள்.

    செய்முறை

    மேற்கண்ட அனைத்து பொருட்களையும் எல்லாம் காய்ந்த ஈரமில்லாத மிக்சியில் அல்லது பவுடர் செய்யும் மிக்சியில் திரித்து பவுடராக்கி, சிறிது நேரம் ஆறவைத்து ஈரமில்லாத காய்ந்த கண்டெயினர்களில் போட்டு வைத்து கொள்ளவும்.

    பிளாஸ்டிக் கண்டெயினரை விட காய்ந்த கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்தால் மிகவும் நல்லது.

    இதில் பிரிஞ்சி இலையின் காம்பை கிள்ளி விட்டு திரிவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கோடை வெயிலுக்கு உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ளும் உணவுகளை அடிக்கடி சாப்பிடுவது நல்லது. இந்த வகையில் இந்த பானம் உடலுக்கு குளுமை தரும். செய்வதும் மிகவும் சுலபம்.
    தேவையான பொருட்கள்:

    கெட்டித் தயிர் - 1 கப்
    தண்ணீர் - 1 கப்
    கொத்தமல்லி - 2 டீஸ்பூன்
    மோர் மிளகாய் - 1
    உப்பு - தேவையான அளவு

    தாளிப்பதற்கு...

    எண்ணெய் - 1 டீஸ்பூன்
    கடுகு - 1/4 டீஸ்பூன்

    அரைப்பதற்கு...

    பச்சை மிளகாய் - 1/2
    கறிவேப்பிலை - 3 இலை
    இஞ்சி - 1/4 இன்ச்

    செய்முறை:

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தயிரை ஒரு பௌலில் போட்டு, நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    மிக்ஸியில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் இஞ்சி சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

    அதே எண்ணெயில் மோர் மிளகாயை வறுத்துக் கொள்ள வேண்டும்.

    கடைந்து வைத்துள்ள மோரில் அரைத்த விழுது, அத்துடன் மோர் மிளகாயை உடைத்து போட்டு, தாளித்ததையும் ஊற்றி, கொத்தமல்லியைத் தூவி கலந்து பரிமாறினால், மசாலா மோர் ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நம்முடைய உணவில் தற்பொழுது இடம்பெற்று வரும் ஒரு முக்கிய உணவு பதார்த்தம் பன்னீர். இன்று பன்னீரை நம்முடைய வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பால் - 2 லிட்டர்
    எலுமிச்சை பழம் - 2

    செய்முறை

    எலுமிச்சையை விதை இல்லாமல் பிழிந்து சாறு எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

    ஒரு பாத்திரத்தில் 2 லிட்டர் பாலை விட்டு அடுப்பில் வைத்து சூடுபண்ணுங்கள். பால் முதல் கொதி வருகிற மாதிரி எழும்பி வரும் சமயம் அடுப்பை அணைத்து விடுங்கள். பிழிந்து வைத்திருக்கும் எலுமிச்சை சாறை பாலில் ஊற்றி விடுங்கள். பாலை கரண்டியால் நன்றாக கலக்கி கொண்டே இருங்கள்.

    பன்னீர்

    சிறிது நேரம் கலக்கும் பொழுது பால் சிறு சிறு துண்டுகளாக பிரிந்து வரும். வெதுவெதுப்பான சூடு இருக்கும் பொழுது காட்டன் துணியில் பாலை வடிகட்டுங்கள். துணியை சுருட்டி நன்றாக பிழிந்து கொள்ளுங்கள். அதன்பிறகு துணி மூட்டையை ஒரு தட்டில் வைத்து ஏதாவது கனமான பொருளை அதன் மேல் வைத்து ஒரு 3 மணி நேரம் அப்படியே விட்டுவிடுங்கள்.

    3 மணி நேரம் கழித்து எடுத்துப்பார்த்தால் உங்களுக்கு தேவையான பன்னீர் அழகாக ரெடி ஆகி இருக்கும்.

    உங்கள் தேவைக்கு துண்டுகளாக போட்டு வைத்து கொள்ளுங்கள்.

    பன்னீர் துண்டுகளை இறுக்கமான டப்பாக்களில் அடைத்து பிரீஸரில் வைத்து தேவைக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உணவுகளை வேக வைத்து சாப்பிட்டால் அதில் உள்ள சத்துக்கள் அழியாது. அந்த வகையில் இன்று ஸ்டீம்டு லெமன் ஃபிஷ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    உங்களுக்கு பிடித்த மீன் துண்டுகள் - 6
    மிளகு - ¼ டீஸ்பூன்
    பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
    பூண்டு விழுது - சிறிதளவு
    எலுமிச்சை சாறு - இரண்டு டீஸ்பூன்
    வெர்ஜின் ஆலிவ் எண்ணெய் - இரண்டு டீஸ்பூன்
    கொத்தமல்லி இலைகள் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை


    மீன் துண்டுகளை சுத்தம் செய்து, அதனுடன் சிறிது உப்பு பூண்டு பேஸ்ட், மிளகு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து 20 நிமிடங்கள் ஊற விடவும்.

    பின்னர் அதை ஒரு குக்கரில் வைத்து தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். விசில் போட வேண்டாம்.

    மசாலா தடவிய மீன் துண்டுகளை ஸ்டீம் செய்யவும்.

    6 முதல் 8 நிமிடங்கள் வரை வைத்து பின்னர் இறக்கவும்.

    இதன் மேல் கொத்தமல்லி இலை தூவி அலங்கரித்தால் சுவையான ஸ்டீம் லெமன் ஃபிஷ் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாங்காய் என்றால் எல்லாருக்குமே மிகவும் பிடிக்கும். காரணம் அதிலிருக்கும் புளிப்பு சுவை தான். இன்று 10 நிமிடத்தில் சுவையான மாங்காய் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    அரிசி - 1 கப்
    மாங்காய் - 2
    சின்ன வெங்காயம் - 15
    பச்சை மிளகாய் - 2
    கேரட் துருவல் - ஒரு மேசைக்கரண்டி
    தேங்காய் துருவல் - ஒரு மேசைக்கரண்டி
    பூண்டு - 4 பல்
    மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
    சர்க்கரை - அரை தேக்கரண்டி
    நல்லெண்ணெய் - ஒரு கரண்டி
    கடுகு - அரை தேக்கரண்டி
    உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
    கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
    வறுத்த நிலக்கடலை - 2 தேக்கரண்டி
    கறிவேப்பிலை - 10
    கொத்தமல்லித் தழை - சிறிது
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    மாங்காயை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.

    கொத்தமல்லி, ப.மிளகாய், பூண்டு, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அரிசியைக் களைந்து குழையாமல் சாதத்தை வேக வைத்து எடுத்து 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து கலந்து ஆறவிடவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு மற்றும் வறுத்த நிலக்கடலை சேர்த்து தாளிக்கவும்.

    பருப்பு வகைகள் சிவந்ததும் பூண்டைச் சேர்த்து வதக்கி, பிறகு வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லித் தழை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்கு வதங்கியதும் மாங்காய்த் துருவல், மஞ்சள் தூள் மற்றும் உப்புச் சேர்த்து நன்கு வதக்கவும்.

    அனைத்தும் வதங்கியதும் கேரட் துருவல் மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும்.

    அத்துடன் ஆற வைத்த சாதம் மற்றும் சர்க்கரையை சேர்க்கவும்.

    நன்கு கலந்து 5 நிமிடங்கள் குறைந்த தணலில் வைத்து இறக்கவும்.

    வண்ணமயமான சுவையான மாங்காய் சாதம் தயார்.

    சர்க்கரை சேர்ப்பதால் மாங்காயின் புளிப்புத் தன்மை குறைத்து, சுவையை அதிகரித்துக் கொடுக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சோளத்தை பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ சாப்பிடுவதால் நார்ச்சத்து நமக்கு முழுமையாக கிடைக்கின்றது. இன்று சோளத்தில் சுண்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    ஸ்வீட் காரன் - 1
    பொடியாக நறுக்கிய கேரட்  - 2 மேஜைக்கரண்டி
    துருவிய தேங்காய் - 2 மேஜைக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு

    தாளிக்க

    எண்ணெய் - 1 தேக்கரண்டி
    கடுகு - 3/4 தேக்கரண்டி
    உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
    சிகப்பு மிளகாய் - 1
    கறிவேப்பிலை - 1 கொத்து
    பெருங்காயம் - 2 சிட்டிகை

    செய்முறை

    ஸ்வீட் கார்னை உரித்து, உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும்.

    ஒரு கடாயில், என்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து தாளித்த பின்னர் கேரட்டை சேர்த்து வதக்கவும்.

    பிறகு வேகவைத்த சோளத்தை சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.

    தண்ணீர் சுண்டியவுடன் துருவிய தேங்காய் சேர்த்து இறக்கவும்.

    சத்தான ஸ்வீட் காரன் சுண்டல் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு இறால், உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இது இரண்டையும் சேர்த்து சூப்பரான ரெசிபி செய்யலாம் வாங்க...
    தேவையான பொருட்கள் :
     
    இறால் - 1/2 கிலோ
    உருளை கிழங்கு - 2 பெரியது
    மிளகாய் தூள் - தேவையான அளவு
    மிளகு தூள் - அரை ஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    எண்ணெய் - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு
     
    செய்முறை :
       
    இறாலை கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.

    உருளைக் கிழங்கை தோலை நீக்கி விட்டு சிறிதாக நறுக்கி கொள்ளவும்.
     
    ஒரு பாத்திரத்தில் இறால், உருளை கிழங்கை போட்டு அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள், கறிவேப்பிலை, உப்பு போட்டு கிளறி 1 மணி நேரம் ஊற விடவும்
     
    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் இறால் கலவையை போட்டு நன்றாக 5 நிமிடம் கிளறவும். அடுத்து அடுப்பை மிதமான தீயில் வைத்து மூடி வைத்து வேக விடவும்.
     
    நன்றாக வெந்து பொன்னிரமாக வந்ததும் இறக்கி சூடாக பரிமாறவும். இறால் 10 நிமிடத்தில் வெந்து விடும்.

    இறால் உருளை கிழங்கு ஃபிரை ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சர்க்கரை நோயாளிகள் மட்டுமல்ல டயட்டில் இருப்பவர்களும் இந்த உணவை சாப்பிடலாம். அதை டிபனாகவும் சாப்பிடலாம். ஸ்நாக்ஸ் போன்றும் சாப்பிடலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை ரவை - 1 கப்
    கடலை பருப்பு - கால் கப்
    காய்ந்த மிளகாய் ? 2
    தேங்காய் துருவல் - கால் கப்
    தண்ணீர் - 2 கப்
    உப்பு - தேவைக்கு

    தாளிக்க :

    எண்ணெய் - தேவைக்கு
    கடுகு - 1 டீஸ்பூன்
    கடலைபருப்பு - 1 டீஸ்பூன்
    உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

    செய்முறை :

    வெறும் வாணிலியில் கோதுமை ரவையை போட்டு வாசனை வரும் வரை வறுக்கவும்.

    கடலைப்பருப்பை அரை மணிநேரம் ஊற வைத்து காய்ந்த மிளகாயுடன் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் இதில் கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் வறுத்த ரவை, அரைத்த கடலைப்பருப்பு விழுது, சிறிது உப்பு சேர்த்து கைவிடாமல் கிளறவும்.

    கலவை உப்புமா பதத்தில் வந்தவுடன் அதை கொழுக்கட்டைகளாக பிடித்து இட்லி சட்டியில் வேக வைத்து எடுக்கவும்.

    சத்தான கோதுமை ரவை உப்புமா கொழுக்கட்டை ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×