என் மலர்tooltip icon

    சமையல்

    சூடான சாதம் மட்டுமல்ல, இட்லி, தோசைக்கும் அருமையாக இருக்கும் இந்த இறால் புளிக்குழம்பு. இன்று இந்த குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இறால் - கால் கிலோ  
    தக்காளி -2  
    பெ.வெங்காயம் - 2  
    பச்சை மிளகாய் - 3  
    இஞ்சி ,பூண்டு விழுது -சிறிதளவு  
    மிளகாய் தூள் - தேவையான அளவு  
    மஞ்சள் தூள் - சிறிதளவு  
    கொத்தமல்லித் தூள் - 2 டேபிள்ஸ்பூன்  
    புளி - சிறிதளவு  
    கடுகு, உளுந்தம் பருப்பு - சிறிதளவு  
    கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை - சிறிதளவு
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு

    செய்முறை:

    இறாலை சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    புளியை சிறிது நேரம் நீரில் ஊற வைத்து கரைத்துக்கொள்ளுங்கள்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு சேர்த்து தாளியுங்கள். அதனுடன் தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை போட்டு வதக்குங்கள்.

    நன்கு வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள், மிளகாய் தூள் போட்டு கிளறுங்கள்.

    பின்னர் புளிகரைசலை ஊற்றி கிளறிவிடுங்கள்.

    பின்னர் இறால் துண்டுகளை போட்டு சிறிதளவு தண்ணீர், போதுமான அளவு உப்பு சேர்த்து கலக்கிவிட்டு மூடி வையுங்கள்.

    அடுப்பை மிதமான சூட்டில் வைத்துவிட்டு எண்ணெய் பிரிந்து வரும் வரை வேக வைத்து இறக்குங்கள்.

    ருசியான இறால் புளிக்குழம்பு ரெடி.
    நேரம் தவறால் எடுத்துக்கொள்ளும் சத்தான உணவுகள் நம்முடைய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன் நோயை அண்ட விடாமலும் தடுக்கும். அதற்கு இந்த பார்லி துளசி சூப் உதவும்.
    தேவையான பொருட்கள்

    பார்லி தூள் - 2 டீஸ்பூன்
    பார்லி  அரிசி - 4 டீஸ்பூன்
    பீன்ஸ், கேரட் - தலா 50 கிராம்
    மிளகு தூள் - 3 டீஸ்பூன்
    வெங்காயத்தாள் - சிறிதளவு
    துளசி இலை - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    கேரட், பீன்ஸ், வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இரண்டு டீஸ்பூன் பார்லி தூள் தயாரிக்க தேவையான அளவு பார்லி அரிசியை நன்றாகக் கழுவி உலரவைக்கவும். பிறகு கடாயில் வறுத்து அரைத்துக்கொண்டால் பார்லி தூள் ரெடி. இதை இரண்டு டீஸ்பூன் எடுத்துக்கொள்ளவும்.

    பார்லி அரிசியை நான்கு மணி நேரம் ஊறவைத்து பிறகு நன்றாக வேகவைத்துக் கொள்ளவும்.

    பீன்ஸ், கேரட்டை தனியாக வேகவைத்துக்கொள்ளவும்.

    ஒரு கடாயில் வேகவைத்த பார்லி அரிசி, வேகவைத்த பீன்ஸ், கேரட்டைப் போட்டு தேவையான அளவு உப்பு, பார்லி தூள், தண்ணீர் சேர்த்து ஒரு கொதிவந்தவுடன் மிளகுத்தூள், உப்பு, நறுக்கிய வெங்காயத்தாள் சிறிதளவு, துளசி இலைகளைக் கிள்ளிப்போட்டு, ஒரு கொதிவந்தவுடன் இறக்கினால் சுவையான
    பார்லி துளசி வெஜிடபிள் சூப் ரெடி.
    கடைகளில் கிடைக்கும் விரலி மஞ்சள் விளை நிலங்களில் அறுவடை செய்யப்ப்டடு கொதிநீரில் இட்டு நன்கு வேக வைத்த பின்னரே விற்பனைக்கு வருகிறது. இங்கே சொல்லப்படும் ஊறுகாய் தயாரிப்பு முறையானது வேக வைக்காத பச்சை மஞ்சளை பயன்படுத்தி செய்யப்படுவதாகும்.
    தேவையான பொருட்கள்

    பச்சை மஞ்சள்(தோல் சீவி துருவியது) - கால் கிலோ
    எலுமிச்சை பழம் - 3
    நல்லெண்ணெய் - 100 மிலி
    வெந்தயம் - 2 டீஸ்பூன்
    கடுகு - 2 டீஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 10
    கல்உப்பு - 4 டீஸ்பூன்
    பெருங்காயம் - கால் டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு

    செய்முறை

    வெந்தயம், கடுகு, காய்ந்த மிளகாய், உப்பு, பெருங்காயம் ஆகியவற்றை சிவக்க வறுத்து ஆறவைத்து பெருங்காயம் சேர்த்து பொடியாக அரைத்து கொள்ளவும்.

    எலுமிச்சை பழ சாறை பிழிந்து வடிகட்டி எடுத்து கொள்ளவும்.

    வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய்யை சூடாக்கி 1 டீஸ்பூன் கடுகு, கறிவேப்பிலை போட்டு வெடித்ததும். அடுப்பை மிதமாக வைத்து துருவி வைத்த மஞ்சளை போட்டு பச்சை வாடை போகும் வரை நன்றாக வதக்கவும்.

    அதன் பின்னர் அரைத்து வைத்த மசாலா பொருட்களுடன் சேர்த்து ஒன்றிரண்டு நிமிடங்கள் வதக்கி விட்டு எலுமிச்சைசாறு அதில் சேர்க்க வேண்டும். கொதிக்கும் எண்ணெயுடன் எலுமிச்சை சாறு கலக்கும் போது உருவாகும் வெடிப்பு தணியும் வரை காத்திருந்த பின்னர் 5 நிமிடங்கள் வதக்கி விட்டு அடுப்பை அணைத்து ஆற விடவும்.

    நன்றாக ஆறியவுடன் அதை கண்ணாடி பாட்டிலில் இட்டு பிரிட்ஜில் வைத்து சுமார் 6 மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.
    சங்க காலத்தில் மக்கள் அவர்களுக்குக் கிடைத்த பொருட்களைக் கொண்டு சுவையான உணவை உண்டு ஆரோக்கியமாக வாழ்ந்தனர். மூங்கிலரிசி அவரை புளியங்கூழ் எவ்வாறு செய்து ருசித்திருக்கலாம் எனப் பார்ப்போம்.
    தேவையான பொருட்கள் :

    மூங்கிலரிசி - 100 கிராம்
    உப்பு -தேவையானஅளவு
    அரிசி - 100 கிராம்
    மிளகு (பொடித்தது)-தேவையானஅளவு
    சீரகம் -1 டீஸ்பூன்
    புளிச்சாறு - 2 மேஜைகரண்டி
    அவரை பருப்பு (துவரம் பருப்பு) - 50 கிராம்
    தண்ணீர் -தேவையானஅளவு
    மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    கடுகு-1/2 டீஸ்பூன்

    செய்முறை :

    ஒரு அகலமானப் பாத்திரத்தில் கழுவிச் சுத்தம் செய்த மூங்கிலரிசி, அரிசியைச் சேர்த்து போதுமான உப்புடன் சுமார் 3 மடங்கு தண்ணீர் சேர்த்து நன்கு குழைய வேக விடவும்.

    அதனுடன் தனியே வேக வைத்த துவரம்ப்பருப்பைச் ( துவரம் பருப்பு)சேர்த்து மிக்ஸ் செய்யவும்.

    கூடவே சீரகம், மிளகைச் சேர்க்கவும்.

    தனியே கரைத்து வைத்த புளிக் கரைசலை சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைத்த அரிசி, துவரம் பருப்புடன் (துவரம் பருப்பு) சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.

    நறுக்கிய கறிவேப்பிலையைச் சேர்த்து மிக்ஸ் செய்யவும்.

    சுவையான மூங்கிலரிசி அவரை புளியங்கூழ்

    சங்க கால சமையல் முறையில் செய்து ருசிக்கவும். சூடாகவோ (அ) சூடு ஆறியபின்போ இதைச் சுவைக்கவும்.

    குறிப்பு :

    * கருங்கறி என்று மிளகைச் சங்க காலத்தில் கூறினார்கள்.
    * புரதச் சத்துள்ள அவரைப் பருப்புடன் நார்ச்சத்தும் ரூ மாவுச்சத்து கொண்டு மூங்கிலரிசியுடன் கூடவே மாவுச்சத்துள்ள அரிசியை உடலின் ஆரோக்கியத்திற்கு நம் முன்னோர்கள் அன்றே உணவைத் தேர்வு செய்து உண்டுள்ளனர்.
    * நாம் இப்பொழுது தேடித் தேடி வாங்கும் ராகி, கம்பு, வரகரிசி, சோளம் ரூ தினையை நம் முன்னோர்கள் அதனை மிகுதியாய் பயன்படுத்தி உண்;டு ஆரோக்கியமாக வாழ்ந்துள்ளனர் என்று சங்க இலக்கிய பாடல்களில் நிறையக் காண முடிகிறது.
    * புளி சேர்த்து வைத்த பொருள்கள் பல நாட்களுக்குக் கெடாது என்பது இன்றும் அறியப்பட்ட உண்மை.

    P.Priya Baskar

    9843456520.

    தனிப்சிறப்பு பெற்ற திருநெல்வேலி மாவட்டத்தின் மேலப்பாளையம் பிரியாணி தயார் செய்யும் முறையை இங்கே பார்க்கலாம் வாங்க...
    தேவையான பொருட்கள்

    விருப்பமான இறைச்சி வகை - 2 கிலோ
    சீரக சம்பா அரிசி - 2 கிலோ
    கரம் மசாலா தூள் -  1 ஸ்பூன்
    மிளகாய்த்தூள் - 6 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    தயிர் - 200 கிராம்
    நெய் - 200 மில்லி
    நல்லெண்ணெய் - 100 மில்லி
    பெரிய வெங்காயம் - 800 கிராம்
    தக்காளி - 800 கிராம
    மிளகாய் - 16
    புதினா, கொத்தமல்லி தழை - தேவையான அளவு
    பட்டை - 10 கிராம்
    அன்னாசி பூ - 3
    ஏலக்காய் - 10 கிராம்
    கிராம்பு - 10 கிராம்
    பிரியாணி இலை - 3
    இஞ்சி பூண்டு விழுது - 100 கிராம்
    அலுமினியம் பாயில் பேப்பர்

    செய்முறை

    பிரஷர் குக்கரில் இறைச்சியை போட்டு வேகவைக்க தேவையான அளவு நீர் ஊற்றி, 1 டேபிள் ஸ்பூன் உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள இஞ்சி பூண்டு விழுதில் பாதியை சேர்த்த 4 விசில் வரும் வரை வேக வைத்து தனியாக எடுத்து கொள்ளவும். பின்னர் 2 கிலோ சீரக சம்பா அரிசியில் 1.5 லிட்டர் தண்ணீர் சேர்த்து குக்கரில் தனியாக பாதியளவு வேக வைத்து  கொள்ளவும்.

    இன்னொரு பாத்திரத்தில் நெய் மற்றும் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் அன்னாசி பூ. கிராம்பு. பட்டை, ஏலக்காய், பிரியாணி இலை ஆகியவற்றை சேர்த்து சிறிது வதக்கிய பின்னர் நறுக்கிய வெங்காயம், தக்காளியை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

    அடுத்து அதில் மீதியுள்ள இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து 5 நிமிடம் வதக்கி விட்டு கரம் மசாலா தூள், புதினா இலை, மிளகாய்த்தூள், உப்பு, தயிர் சேர்த்து கிரேவி தயார் செய்யவும்.

    அதில் வேக வைத்த இறைச்சியை நீருடன் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

    பாதி வெந்த நிலையில் உள்ள அரிசியில் அதன் ஒரு பாதியில் கிரேவியில் பாதியளவு ஊற்றி அதன் மேலாக மீதமுள்ள சாதத்தை பரப்பி மறு பாதி கிரேவியை அதன் மீது ஊற்றி பாயில் பேப்பர் மூலம் பாத்திரத்தை மூடி தம் போட வேண்டும்.

    தீயை பாதி அளவுக்கு பத்து நிமிடம் எரிய விட்ட பின்னர் அலுமினியம் பேப்பரை அகற்றி கொத்தமல்லி சேர்த்து நன்றாக கிளறி விட்டால் மேலப்பாளையம் பிரியாணி ரெடி.

    பீட்ரூட் - கேரட்டில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இந்த சாலட்டில் வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
    தேவையான பொருட்கள்  :

    துருவிய பீட்ரூட் - 1/2 கப்
    துருவிய கேரட் - ½ கப்
    தேங்காய்த் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்
    ஊறவைத்த நிலக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
    எலுமிச்சை ஜூஸ் - பாதி பழம்
    மிளகுத் தூள் - ¼ டீஸ்பூன்
    இந்துப்பு - சிறிதளவு

    தாளிக்க :

    கடுகு, உளுத்தம் பருப்பு - ½ டீஸ்பூன்
    கொத்தமல்லி, கறிவேப்பிலை - தேவையான அளவு
    எண்ணெய் - அரை டீஸ்பூன்

    செய்முறை :

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அகலமான பாத்திரத்தில் துருவிய பீட்ரூட், கேரட், தேங்காய் போட்டு கிளறவும்.

    பின்னர் அதில் நிலக்கடலை போட்டு கிளறவும்.

    மேலும், இதில் மிளகு தூள், இந்துப்பு போட்டு கலக்க வேண்டும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்து சாலட்டில் போட்டுக் கிளற வேண்டும்.

    கடைசியாக எலுமிச்சை சாறு பிழிந்து கலந்து பரிமாறவும்.

    சத்து நிறைந்த பீட்ரூட் - கேரட் சாலட் ரெடி.
    என்னதான் சீஸ் விருப்பமானது என்றாலும் அது விலை அதிகம் என்பதால் அடிக்கடி வாங்க முடியாது. அந்த கவலை இனிமே இல்ல. இன்று வீட்டிலேயே அரை மணிநேரத்தில் சீஸ் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    பன்னீர் - 150 கிராம்
    அடித்த முட்டை - 3 ஸ்பூன்
    உப்பு கலந்த வெண்ணெய் - 200 கிராம்
    பேக்கிங் சோடா - 1/4 ஸ்பூன்
    உப்பு - சுவைக்கு ஏற்ப

    செய்முறை:

    பன்னீரை உடைத்து தூளாக்கிக்கொள்ளவும்.

    அதில் அடித்த முட்டையை ஊற்றவும்.

    பின் உப்பு கலந்த வெண்ணெய் சேர்க்கவும்.

    அடுத்ததாக பேக்கிங் சோடா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

    இந்தக் கலவையை தற்போது நன்கு பிசைந்துகொள்ளவும்.

    தற்போது அகலமான பாத்திரத்தில் மற்றொரு பாத்திரம் வைக்கும்படியாகத் தண்ணீர் ஊற்றவும். காரணம், இவ்வாறு செய்வதால் சீஸ் கிளறும்போது

    அடிப்பிடிக்காது.

    தண்ணீர் நன்கு கொதிக்கும்போது மற்றொரு பாத்திரத்தை அதில் வைக்கவும்.

    தற்போது பிசைந்த பன்னீர் பேஸ்டை அதில் போட்டு நன்கு கிளறவும். இடைவெளியின்றி கிளறிக் கொண்டே இருக்கவும்.

    15 நிமிடங்கள் கிளறிக் கொண்டே இருந்தால் உருகி பேஸ்ட் வடிவில் சீஸ் பதத்திற்கு வரும்.

    பின் அதை ஒரு டப்பாவில் அடைத்து ஃபிரிஜில் வைத்துக்கொள்ளலாம். தேவைப்படும்போது பயன்படுத்திக்கொள்ளலாம்.

    கோடை காலத்தில் சுரைக்காயை சாப்பிட்டு வர தாகம் ஏற்படாது. உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ள விரும்பினால் சுரைக்காயை பயன்படுத்தலாம்.
    தேவையான பொருட்கள்:

    2 நடுத்தர அளவுள்ள சுரைக்காய் பகுதிகள் , (சமைத்த, உரித்த, நறுக்கிய வகையில் இருக்க வேண்டும்)
    நெல்லிக்காய் - 4
    புதினா இலைகள் - 15 முதல் 20 வரை
    சீரகம் - 1 டேபிள்ஸ்பூன்
    எலுமிச்சை சாறு - 2 முதல் 3 தேக்கரண்டி
    இஞ்சி - 2 சிறு துண்டுகள்  (நறுக்கியது )
    உப்பு - தேவைக்கேற்ப
    ஐஸ் க்யூப்ஸ் - தேவைக்கேற்ப

    செய்முறை

    சுரைக்காய், சீரகம், நெல்லிக்காய், இஞ்சி, புதினா இலை, உப்பு ஆகியவற்றை சேர்த்து அரைக்கவும். பின்னர், ஒரு கப் தண்ணீர் சேர்த்து 2 முதல் 3 நிமிடங்கள் அரைக்கவும்.

    மற்றொரு கப் தண்ணீரில், எலுமிச்சை சாறு, ஐஸ் க்யூப்ஸ் அரைத்த ஜூஸ் சேர்த்து நன்றாக கலக்கவும் . பின்னர், தனி கண்ணாடி டம்ளர்களை வடிகட்டி, குளிர்ச்சியுடன் குடிக்கவும்.

    இந்த பழச்சாறை தயாரிக்கும் முன், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று இருக்கிறது.

    சுரைக்காய் ஜூஸ் அளவுக்கு அதிகப்படியாக உட்கொண்டால், சாத்தியமான அசுத்தங்கள் காரணமாக சில நச்சு அறிகுறிகள் ஏற்படலாம்.

    கசப்பாக இருந்தால் சுரைக்காய் ஜூஸ் குடிப்பதை தவிர்ப்பது அவசியம். பச்சையாக அல்லது சமைக்காத சுரைக்காய் ஜூஸ் உடல்நலத்திற்கு ஆபத்தானதும் கூட. சமைத்த சுரைக்காய் சாறு சிறந்தது, ஒருவேளை தீங்கற்றதும் கூட. ஒரு சிறிய சுரைக்காய் சுவைத்தால் (அதன் இரண்டு முனைகளிலும்) கசப்பாக இருக்கும். அது கசப்பாக இருந்தால், தயவு செய்து அதை எடுக்க வேண்டாம்.

    சுரைக்காய் சாறு ஊட்டச்சத்து நிறைந்ததாகவும், தயார் செய்ய எளிதாகவும் உள்ளது. அது உங்கள் காலை உணவு பழக்கத்தில் ஒன்றாக சேர்த்து கொள்ளலாம். தொடர்ந்து சாறு உட்கொள்வதன் மூலம், தேவையான ஊட்டச்சத்துக்கள் உங்கள் உடலை மீண்டும் நிரப்பலாம்.

    ஆனால் நச்சுத்தன்மையை பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வீட்டிலேயே ஜூஸ் தயார் செய்து கொள்ள அறிவுறுத்துகிறோம். மேலும், பச்சை காய்கறியில் இருந்து ஜூஸ் போட்டு குடிப்பதை தவிருங்கள். எப்போதும் மறக்காமல் சுரைக்காயை கண்டிப்பாக சமைத்திருக்க வேண்டும்.
    காரக்குழம்பு மற்றும் மீன்குழம்புக்கு பொருத்தமான‌, கூடுதல் சுவை சேர்க்கும் குழம்புப் பொடியை தயாரிப்பது எப்படி என்று அறிந்து கொள்ளலாம்.
    தேவையான பொருட்கள்

    மஞ்சள் ‍- 4 துண்டு
    மிளகாய் வற்றல்- கால் கிலோ
    தனியா (மல்லி) - கால் கிலோ
    கடுகு - 40 கிராம்
    மிளகு - 3 தேக்கரண்டி
    சீரகம் - 20 கிராம்
    வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
    சோம்பு (பெருஞ்சீரகம்) - இரண்டு தேக்கரண்டி (விரும்பினால்)
    கடலைப்பருப்பு - இரண்டு மேஜைக்கரண்டி
    துவரம்பருப்பு - இரண்டு மேஜைக்கரண்டி
    கறிவேப்பிலை - சிறிது

    செய்முறை

    மிளகாய் வற்றலை நன்றாக வெயிலில் காய வைத்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து அனைத்தையும் ஒன்றின் ஒன்றாக தனித்தனியாக போட்டு பக்குவமாக‌ வறுத்து ஆற வைத்து மிஷினில் கொடுத்து அரைத்துக் கொண்டால் இரண்டு மாதத்திற்கு குழம்புப் பொடி ரெடி.
    சங்க காலத்தில் வாழ்ந்த மகளிர் கோடை காலத்தில் உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக் கூடிய நுங்கின் நீரும், கரும்பின் இனிய சாறும், இளநீரும் கலந்து தயாரிக்கப்பட்ட ஒரு வகை பானத்தை அருந்தியிருக்கின்றனர்.
    தேவையான பொருட்கள் :

    பனை நுங்கு - 5
    கம்புச்சாறு - 100மி.லி
    இளநீர் - 1

    செய்முறை :
     
    பனை நுங்கை ஓட்டைப் போட்டு, அதன் நீரைத் தனியே எடுக்கவும்.

    அதனுடன் சீவி உடைத்த இளநீரைச் சேர்க்கவும்.

    இனிப்புச் சுவை, சீரணச் சக்தியை தரக் கூடிய கரும்புச் சாற்றை மிக்ஸ் செய்து, தனியே எடுத்து வைத்த நுங்கின் தோலைச் சீவி பானத்துடன் கலந்து இனிதாகப் பருகவும்.

    சுவையான கோடை கால முந்நீர் பானம் ரெடி.

    குறிப்பு :

    சங்க காலத்தில் சர்க்கரை, நாட்டுச்சர்க்கரை பயன்பாட்டில் இல்லை. சங்க காலத்தில் கரும்பாளை நிறைய இருந்தது. காளை மாட்டைக் கொண்டு
    செக்கில் கரும்பைப் பிழிந்து ஆளையில் கரும்புச் சாற்றை எடுத்துள்ளனர் என்பதை சங்க இலக்கிய பாடல்கள் மூலம் அறியலாம். நம் சுவைக்கு ஏற்ப இஞ்சிச் சாறு & எலுமிச்சை சாற்றைச் சேர்த்து, சிறிது நேரம் பிரிட்ஜில் வைத்து ஜில்லென்று குடிக்கலாம்.

    பயன்கள் :

    இயற்கை அன்னை கொடுத்த நுங்கிலும், இளநீரிலும் உடலுக்குப் பயன்கள் தரக்கூடிய கால்சியம், மெக்னீசியம், பாஸ்பொரஸ், பொட்டாசியம், சோடியம், விட்டமின்கள் & மினரல்கள் உள்ளது. வறத்தேங்காயின் நீரைவிட இளநீரில் சத்துக்கள் அதிகம் உள்ளது. நீரிழிவு நோய் உள்ளவர்கள் இளநீரையும் நுங்கையும் சாப்பிடலாம். ஆனால் கரும்புச்சாற்றைத் தவிர்க்கவும். உடல் சூட்டைக் குறைக்க கூடிய அனைத்து தாதுக்கள் & மினரல்கள் நுங்கிலும் & இளநீரிலும் உள்ளது.

    P.Priya Baskar

    9843456520.
    அவலை கொண்டு வெறும் உப்புமா மட்டுமே தயாரிக்க முடியும் என்ற நிலை மாறிவிட்டது, குடும்பத்தினர் மட்டுமல்லாமல் நண்பர்கள் விரும்பும் வகையில் பல்வேறு உணவு வகைளை அவல் மூலம் தயார் செய்து அசத்தலாம்.
    தேவையான பொருட்கள்

    அவல் - 1 கப்
    கடலை மாவு - அரை கப்
    தக்காளி - 1
    வெங்காயம் - 1
    குடைமிளகாய் -
    பச்சை மிளகாய் - 2
    இஞ்சி - சிறிய துண்டு
    பூண்டு - 2 பல்
    பெருங்காயம் - சிறிதளவு
    ஓமம் - அரை டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
    மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
    கரம் மசாலா தூள் - அரை டீஸ்பூன்
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
    கொத்தமல்லி - சிறிதளவு

    செய்முறை

    வெங்காயம், தக்காளி, குடை மிளகாய், கொத்தமல்லி, ப.மிளகாய், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இஞ்சியை துருவிக்கொள்ளவும்.

    அவலை நன்றாக கழவி 5 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.

    தக்காளி, பூண்டு, ப.மிளகாயை மிக்சியில் போட்டு ஒன்றாக அரைத்து கொள்ளவும்.

    ஊறவைத்த அவலுடன் அரைத்த விழுது, வெங்காயம், குடைமிளகாய், இஞ்சி, பெருங்காயம், ஓமம், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்க்க வேண்டும். தண்ணீர் விடாமல் மாவை கெட்டியாக பிசைந்து கொள்ள வேண்டும்.

    கைகளில் சிறிது நல்லெண்ணெய் தடவிக்கொண்டு பிசைந்த மாவை நீள வாக்கில் விரல் போன்று உருட்டி கொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பிங்கர்ஸ்சை கவனமாக போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.

    அதை சாஸ் உடன் பரிமாறவும்.
    பழங்களை கொண்டு தயாரிக்கப்படும் சாலட் வகையில், மிகவும் வண்ணமயமான உணவைதான் இந்த வார ரெசிபியாக செய்து பார்க்க இருக்கிறோம்.
    பழங்களை கொண்டு தயாரிக்கப்படும் சாலட் வகையில், மிகவும் வண்ணமயமான உணவைதான் இந்த வார ரெசிபியாக செய்து பார்க்க இருக்கிறோம். ‘ரெயின்போ சாலட் என அழைக்கப்படும் இது, குழந்தைகளுக்கானது. வெளிநாடுகளில், காலை நேர உணவுகளில் இந்த ரெயின்போ சாலட்டிற்கு முக்கிய பங்கு உண்டு. இதை எப்படி தயாரிப்பது என பார்ப்போமா...?

    வீட்டில் இருக்கும் பழங்கள் எதுவாக இருப்பினும் அதை எடுத்துக் கொள்ளலாம்.

    உதாரணத்திற்கு வாழைப்பழம், மாம்பழம், திராட்சை, மாதுளை, பலா, ஸ்ட்ராபெர்ரி, புளூ பெர்ரி, ராஸ்பெர்ரி, கிவி, ஆரஞ்சு... என வண்ணமயமான பழங்களை எடுத்து, அவற்றின் தோல் பகுதிகளை நீக்கிவிட்டு, சிறுசிறு துண்டுகளாக நறுக்கியோ அல்லது உதிர்த்தோ, சுளைகளை உரித்தோ வைத்து கொள்ளுங்கள்.

    ஒரு பெரிய தட்டில் ரெயின்போ வடிவில் ஒவ்வொரு பழங்களாக எடுத்து அடுக்கி பரிமாறவும்.

    வானவில் வண்ண கோர்வையில், சத்தான சாலட் ரெடியாகிவிடும்.

    குழந்தைகள் விரும்பாத பழங்களைகூட, இதில் கலந்து கொடுத்து சாப்பிட வைத்துவிடலாம்.
    ×