என் மலர்
சமையல்
இந்த சீசனில் கிடைக்கும் மாம்பழத்தை கொண்டு பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம். அந்த வகையில் இன்று மாம்பழத்தில் பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - 2 டீஸ்பூன்
பால் - 2 கப்
சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்
மாம்பழ கூழ் - 1/2 கப்
குங்குமப்பூ - 1 சிட்டிகை
கண்டென்ஸ்டு மில்க் - 1 டேபிள் ஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
முந்திரி - 5
மாம்பழம் - சிறிது
ஏலக்காய் - 1 சிட்டிகை
செய்முறை:
முதலில் பாசுமதி அரிசியை மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.
பின் 1 டேபிள் ஸ்பூன் வெதுவெதுப்பான பாலில் குங்குமப்பூ சேர்த்து ஊற வைக்கவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி, பொடித்த அரிசியை சேர்த்து நன்கு வேக வைக்க வேண்டும்.
பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி, அதனுள் அந்த பால் பாத்திரத்தை வைத்து, அத்துடன் குங்குமப்பூ பாலையும் ஊற்றி பாத்திரத்தை தட்டு கொண்டு மூடி, பின் குக்கரை மூடி 15-20 நிமிடம் குறைவான தீயில் வேக வைத்து இறக்கி, விசில் போனதும் குக்கரைத் திறக்க வேண்டும்.
பின் அதனை ஒரு அகன்ற கடாயில் ஊற்றி, அத்துடன் சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து, குறைவான தீயில் 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
பிறகு அதில் கண்டென்ஸ்டு மில்க்கை சேர்த்து கிளறி அடுப்பில் இருந்து இறக்கி குளிர வைத்து, மாம்பழக் கூழ் மற்றும் ஏலக்காய் பொடியை சேர்த்து கிளறி, மேலே முந்திரியையும், சிறிது மாம்பழத் துண்டுகளையும் தூவினால், மாம்பழ பாயாசம் ரெடி!!!

சர்க்கரை நோயாளிகள் ஒரே மாதிரியான சாலட்களை சாப்பிட்டுக்கொண்டிருந்தால், அது ருசியின்மையாகிவிடும். அவர்களுக்கு இது ஒரு புது வகையான சாலட். சத்துக்களும், சுவையும் நிறைந்தது. தயார் செய்து சுவைத்துப்பாருங்கள்.
சர்க்கரை நோயாளிகள் இந்தியாவில் மிக அதிகமாக இருக்கிறார்கள். அவர்கள் அடிக்கடி ஒரே மாதிரியான சாலட்களை சாப்பிட்டுக்கொண்டிருந்தால், அது ருசியின்மையாகிவிடும். அவர்களுக்கு இது ஒரு புது வகையான சாலட். சத்துக்களும், சுவையும் நிறைந்தது. தயார் செய்து சுவைத்துப்பாருங்கள்.
தேவையான பொருட்கள்
வெண்டைக்காய், குடைமிளகாய், கத்தரிக்காய் - 50 கிராம்
பார்மேஷன் பாலாடைக்கட்டி - 10 கிராம்,
மிளகு 10 கிராம்,
துளசி, பூண்டு, ஆலிவ் ஆயில், உப்பு - தேவையான அளவு
இதன் செய்முறை எளிதானது. முதலில் சாஸ் போன்ற கலவையை தயார்செய்ய வேண்டும். அதற்காக குடைமிளகாயை துண்டுகளாக நறுக்கி, தோசைக் கல்லை சூடாக்கி எண்ணெய்விடாமல் சுட வேண்டும். குடை மிளகாயை சுட்டதும் அத்துடன் துளசி, ஆலிவ் ஆயில், மிளகு, பூண்டு, உப்பு போன்றவைகளை சேர்த்து மிக்சியில் சாஸ் போன்று அரைத்தெடுங்கள்.
கத்தரிக்காயை வட்டமாக மெலிதாகவும், வெண்டைக்காயை நீளவாக்கிலும் வெட்டுங்கள். இரண்டையும் அடுப்புத்தணலில் பதமாக கருகாத விதத்தில் சுட்டு எடுங்கள்.
அகன்ற பாத்திரத்தில் முதலில் கத்தரிக்காயை அடுக்குங்கள். அதற்கு மேல் பாலாடைக்கட்டியை கலந்துவிட்டு, வெண்டைக்காயை அடுக்குங்கள். அதன் மேல் குடைமிளகாய் சாஸ் சேர்த்து சுவையுங்கள்.
இந்த சாலட் சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமின்றி எல்லோருக்கும் ஏற்றது. இதில் சேர்க்கப்படும் வெண்டைக்காயில் பெகடின் என்ற நார்ச்சத்து நிறைந்திருக்கிறது. இது இதய துடிப்பை சீராக்குவதோடு, கெட்டகொழுப்பையும் குறைக்கும். கத்தரிக்காயிலும் நார்ச்சத்து இருக்கிறது. அது குடல் புற்றுநோயை தடுக்கும் சக்திகொண்டது. குடைமிளகாயில் வைட்டமின் சத்துக்களும், பீட்டா கரோட்டினும் உள்ளது. கொழுப்பு மிக குறைவாகவே உள்ளது. பாலாடைக்கட்டியில் கால்சியமும், வைட்டமின் டி சத்தும் அதிகம் இருக்கிறது. சர்க்கரை நோயாளிகள் இதனை அடிக்கடி சாப்பிடலாம்.

வத்தக்குழம்பு செய்யும் போது கடையில் வாங்கும் பொடியை போட்டு செய்யலாமல் இந்த பொடியை போட்டு செய்தால் வீடே மணக்கும். இந்த இந்த பொடியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
நல்லெண்ணை - 2 டீஸ்பூன்
கடலை பருப்பு - 2 டீஸ்பூன்
தோலுரித்த முழு உளுந்து - 2 டீஸ்பூன்
மிளகு - ½ டீஸ்பூன்
வெந்தயம் - ½ டீஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
தனியா - 6 டீஸ்பூன்
கார சிகப்பு மிளகாய் - 20
அரிசி - 2 டீஸ்பூன்
பெருங்காயம் - ½ தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கப்
செய்முறை
கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணை ஊற்றி சூடானதும் கடலை பருப்பு, உளுந்து, மிளகு, வெந்தயம், சீரகம், தனியா என ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வாசனை வரும் வரை கிளற தனியா நிறம் மாறி நல்ல வாசனை வரும்.
அடுத்து மிளகாய், அரிசி, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்துகிளற வேண்டும். மிளகாய் காந்த கூடாது. வீடு முழுதும் வாசனை தூக்கும்.
அனைத்தையும் வறுத்த பின்னர் ஆறவைத்து சூடு ஆறியதும் மிக்சியில் போட்டுபொடித்து கொள்ளவும்.
அரைத்த பொடியை காற்று புகாத (air tight container) ஜாரில் வாரகணக்கில் சேமித்து வைக்கலாம்.
வத்தல் குழம்பு செய்யும் பொழுது, 6 கப் குழம்பிற்கு 2 மேஜை கரண்டி பொடி சேர்க்க வேண்டும். முடியும் தருவாயில் பொடி சேர்த்து 2 கொதி வந்ததும் அடுப்பை அணைக்க வேண்டும்.

கருப்பு உளுந்தில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று கருப்பு உளுந்தில் அடை செய்து அதை தேனில் ஊற வைத்து சாப்பிடுவது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
அரிசி - 250 கிராம்
தோல் உளுந்து - 50 கிராம்
உப்பு - 1 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் - 100 கிராம்
நெய் - தேவையான அளவு
தேன் - தேவையான அளவு
செய்முறை:
நன்கு ஊறிய அரிசி மற்றும் கருப்பு உளுந்தைப் பிறு பிறுவென அரைக்கவும்.
கூடவே தேங்காய்த் துருவலைச் சேர்த்து அரைக்கவும். அதிக உப்பு சேர்க்காமல் சுமார் 1 டீஸ்பூன் உப்பை அரைத்த மாவில் சேர்த்து கலக்கவும்.
மாவைப்புளிக்க விடக் கூடாது.
அடைச்சுடும் கல்லை அடுப்பின் மேல் வைத்துச் சூடுச் செய்யவும்.
கரைத்த மாலைக் கல் மேல் ஊற்றி போதுமான நெய்யைச் சேர்த்து அடையை மொது மொது வெனச் சுட்டு அதன் சுவைக்கு ஏற்பக் தேனைச் சேர்க்கவும்.
தேனுடன் அடை ஊறிய பின்பு சுவைக்கவும்.
குறிப்பு
* அடையை மூடி வைத்து சுட்டால் சுவை இன்னும் கூடுதலாம். அடுப்பை மிதமான சூட்டில் வைத்து அடையைச் சுடவும்.

* களி மண்ணால் செய்த கெட்டியான தட்டையானச் சிறு குழியுடன் இருந்த கல்லை அடைச் சுட பயன்படுத்தியுள்ளனர்.
P.Priya Baskar
9843456520.
9843456520.
நாவிற்கு சுவையை கொடுக்கும் இந்த இட்லி பொடியை சுடச்சுட இட்லியோடு நல்லெண்ணெய் ஊற்றி பரிமாறினால் அவ்வளவு அருமையாக இருக்கும். ஆந்திரா ஸ்பெஷல், ‘நல்ல கார பொடி’ ஒருவாட்டி இப்படி செஞ்சுதான் பாருங்களேன்
தேவையான பொருட்கள்:
வர மல்லி - 1/2 கப்,
உளுந்து - 1/4 கப்,
கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்,
சீரகம் - 1 ஸ்பூன்,
வரமிளகாய் - 10,
கறிவேப்பிலை - 2 கொத்து,
பூண்டு - 5 பல்,
சிறிய நெல்லிக்காய் அளவு - புளி,
தேவையான அளவு உப்பு.
செய்முறை
சிலபேருக்கு வர மல்லி வாசம் பிடிக்காது. இப்படிப்பட்டவர்கள் 1/2 கப் உளுந்து, 1/4 கப் அளவு வரமல்லி என்று அளவுகளை எடுத்துக்கொள்ளலாம். இந்த பொடிக்கு, காரம் கொஞ்சம் தூக்கலாக தான் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.
அடுப்பில் ஒரு கனமான கடாயை வைத்து 1/2 ஸ்பூன் அளவு எண்ணெய் விட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து முதலில் வர மல்லியை போட்டு, வர மல்லி வாசம் வரும் வரை சிவக்க வேண்டும்.
அடுத்தபடியாக உளுந்தையும், கடலை பருப்பையும் ஒன்றாக சேர்த்து பொன்னிறமாக சிவக்கும் வரை வறுக்க வேண்டும்.
மூன்றாவதாக சீரகத்தை மட்டும் தனியாக சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து சீரகத்தை கருக விடாமல் வறுத்து தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
மிளகாயையும் உப்பையும் ஒன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும்.
இறுதியாக கறிவேப்பிலையை மொறுமொறுவென வறுக்க வேண்டும்.
பூண்டு சூடாகும் வரை வறுக்கவேண்டும்.
புளியை சிறிய சிறிய துண்டுகளாக கிள்ளி போட்டு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அப்போது தான் நன்றாக அரைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
புளியை மொத்தமாக ஒரு நிமிடம் வறுத்தால் கூட போதும்.
வறுத்த அனைத்து பொருட்களும் நன்றாக ஆறிய பின்னர் மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
இப்போது சூப்பரான காரசாரமாக ஆந்திரா ஸ்டைல் இட்லி பொடி ரெடி.

தினமும் ஒரு மூலிகை பானம் அருந்தினால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. இந்த வகையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆவாரம் பூ டீ தயாரிக்கும் முறையை தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஆவாரம்பூ பொடி - ஒன்றரை டீஸ்பூன் (காயவைத்து அரைத்துக்கொள்ளவும்)
இஞ்சி - சிறிய துண்டு ஒன்று
கருப்பட்டி - சிறிய துண்டு
மிளகு அரை - டீஸ்பூன்
தண்ணீர் - ஒரு கப்
ஏலக்காய் - 2
செய்முறை :
ஆவாரம் பூ பொடி, கருப்பட்டி, ஏலக்காய், மிளகு சேர்த்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் இஞ்சி, ஆவராம் பொடி கலவையைச் சேர்த்து கொதிக்கவிடவும்.
நிறம் மாறியதும் இறக்கி வடிகட்டி குடிக்கவும்.

உங்கள் குழந்தைகளுக்கு சற்று வித்தியாசமாகவும், விரும்பி சாப்பிடும் வகையிலும் பிரெட் கொண்டு அற்புதமான ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுத்து அசத்துங்கள். இப்போது பிரட் சீஸ் பைட்ஸ் எப்படி செய்வதென்று காண்போம்.
தேவையான பொருட்கள்:
பிரெட் துண்டுகள் - 2
பிரெட் தூள் - 1/2 கப்
சோள மாவு - 3 டேபிள் ஸ்பூன்
சீஸ் துண்டுகள் அல்லது துருவிய சீஸ்
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
தண்ணீர் - 1/4
செய்முறை:
முதலில் ஒரு பிரெட் துண்டை எடுத்து, அதன் மேல் தேவையான சதுர சீஸ் துண்டுகளை வைக்கவும் அல்லது தேவையான அளவு துருவிய சீஸ் தூவிக் கொள்ளவும்.
பின் அதன் மேல் மற்றொரு பிரெட் துண்டை வைக்க வேண்டும். பின்பு ஒரு கத்தியால் துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பிறகு சோள மாவை நீர் சேர்த்து ஓரளவு நீர் போன்று கலந்து கொள்ள வேண்டும்.
பின் வெட்டி வைத்துள்ள ஒரு பிரெட் துண்டை எடுத்து, சோள மாவில் பிரட்டி, பின் பிரெட் தூளில் பிரட்டி எடுத்து, ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இதேப் போல் அனைத்து பிரெட் துண்டுகளையும் பிரட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
எண்ணெய் சூடானதும், பிரெட் துண்டுகளைப் போட்டு முன்னும் பின்னும் பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான பிரெட் சீஸ் பைட்ஸ் தயார்.

சங்க காலத்தில் வீட்டில் உள்ளவர்களுக்கு நவதானியங்களுள் ஒன்றான சுண்டக்கடலையை நெய்யிலே பொரித்துக் கொடுப்பார்களாம். சுண்டல் வருவலை எப்படி செய்திருப்பார்கள் எனப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
சுண்டல் - 100 கிராம்
மிளகுத்தூள் -1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நெய் - 50 மி.லி
கறிவேப்பிலை- சிறிதளவு
தேங்காய் துருவல் - 50 கிராம்
சீரகம் - ½ டீஸ்பூன்
செய்முறை :
கடாயில் நெய்யைச் சேர்த்து, சுத்தம் செய்த சுண்டலை நெய்யில் நன்கு பொரித்துக் கொள்ளவும்.
கூடவே கறிவேப்பிலையைச் சேர்த்து பொரிக்கவும்.
இதன் சுவையை அதிகரிக்க தேங்காய் துருவல் போதுமான உப்பு, சீரகம், மிளகுத்தூளைச் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.
இதனை வேக வைத்த சாதத்துடன் சேர்த்து உண்டார்களாம்.
குறிப்பு :
* சங்க கால மக்கள் தங்களுக்கு கிடைக்கக் கூடிய பொருட்களை கொண்டு சமைத்தார்கள்.
* சுண்டல் ஒரு பழமையான நவதானியமாகும்.
* சங்க காலத்தில் சமையலுக்குப் பச்சைமிளகாய், வெங்காயம், பூண்டு தக்காளி, சர்க்கரை, ரீபெண்ட் ஆயில், உருளைக்கிழங்கு பயன்படுத்தவில்லை. காரத்துக்கு மிளகைப் பயன்படுத்தி உள்ளனர்.
* சுங்க காலத்தில் தேங்காயை சமையலில் அதிகம் பயன்படுத்தியுள்ளனர்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் தர்ப்பூசணி பழத்தில் ஐஸ்கிரீம் தயாரித்தும் ருசிக்கலாம். அதுவும் உடலுக்கும், உள்ளத்திற்கும் குளிர்ச்சியை ஏற்படுத்தும். ஐஸ்கிரீம் தயாரிக்கும் விதம் குறித்து பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
தர்பூசணி துண்டுகள் - 1 கப்
பிரஷ் கிரீம் - 1 டேபிள்ஸ்பூன்
ரோஸ் எசன்ஸ் - 2 துளி
சர்க்கரை - சிறிதளவு
செய்முறை:
தர்பூசணி பழ துண்டுகளை மிக்சியில் போட்டு விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
பின்பு அதனுடன் பிரஷ் கிரீமை சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
நன்கு அரைபட்டதும் ரோஸ் எசன்ஸ் மற்றும் சர்க்கரை சேர்த்து லேசாக அரைத்து இறக்கவும்.
இந்த கலவையை அகன்ற கிண்ணத்தில் ஊற்றி பிரீசரில் வைக்கவும்.
சில மணி நேரத்தில் கெட்டி பதத்திற்கு மாறிவிடும்.
சுவையான தர்ப்பூசணி ஐஸ்கிரீம் தயார்.

மரவள்ளிக்கிழங்கில் கார்போஹைட்ரேட் சத்து அதிகமாகவும் கொழுப்பு சத்து குறைவாகவும் இருப்பதால் உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்க வல்லது.
தேவையான பொருட்கள் :
மரவள்ளிக்கிழங்கு- 500 கிராம்
தேங்காய் துருவல்- 2 மேஜைகரண்டி
உப்பு - 1 டீஸ்பூன்
தேன் - 3 மேஜைகரண்டி
தண்ணீர்- தேவையான அளவு
செய்முறை :
கழுவிச் சுத்தம் செய்த கிழங்கின் தோலை நீக்கிக் கொள்ளவும்.
பாத்திரத்தில் போதுமானத் தண்ணீரைச் சேர்த்து, துண்டுகளாக நறுக்கிய கிழங்கைச் சேர்த்து வேக வைக்கவும். கூடவே உப்பைச் சேர்த்து வேக வைக்கவும்.
வேக வைத்த கிழங்கை மசித்து, அதனுடன் தேங்காய்த் துருவல்ரூ தேனைச் சேர்த்து மிக்ஸ் செய்யவும்.
சுவையாகச் சாப்பிடவும். கிழங்கை மசிக்காமலும் சிறுத் துண்டுகளாக நறுக்கித் தேனைத் தொட்டும் சாப்பிடலாம்.
குறிப்பு :
உப்பு, மிளகுத்தூளைச் சேர்க்காமல், தேனை மட்டும் கிழங்குடன் சேர்த்து உண்ணலாம்.

மாங்காய் சேர்த்த மீன் குழம்பை இட்லி, சூடான சாதத்துடனும், பழைய சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும். இன்று இந்த குழம்பு செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மீன் - அரை கிலோ
புளி - சிறிதளவு
பெ.வெங்காயம் - 5
தக்காளி - 4
மாங்காய் - 1
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
மிளகாய்த் தூள் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மாங்காயை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
மீன்களை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
புளியை சிறிது நேரம் நீரில் ஊற வைத்து கரைத்து கொள்ளவும்.
கரைத்த புளிக்கரைசலுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கரைத்துக்கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
அதனுடன் தக்காளி, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியதும் புளிக்கரைசலை ஊற்றி கொதிக்க விடவும்.
கொதிக்க தொடங்கியதும் மீன் துண்டுகளை போட்டு கிளறிவிடவும்.
பின்னர் மாங்காய் துண்டுகளை போடவும்.
மீன் துண்டுகள் நன்கு வெந்து குழம்பு பதத்துக்கு வந்ததும் இறக்கி ருசிக்கலாம்.

வெள்ளை உளுந்தை விட அதன் தோல் நீக்காத பாரம்பரியமாய் பயன்படுத்தி வந்த கருப்பு உளுந்துக்கு சத்து அதிகம். சத்து மிக்க உளுந்தங்களி அனைத்து வயதினருக்கும் ஏற்ற அருமையான மாலை நேர சிற்றுண்டி.
தேவையான பொருட்கள்
கருப்பு உளுந்து - கால் கிலோ,
பனைவெல்லம் - கால் கிலோ,
நல்லெண்ணெய் - 200 மி.லி.
செய்முறை
உளுந்தை வெறும் கடாயில் வறுத்துக் கரகரப்பாகப் பொடித்துக் கொள்ளவும்.
பனைவெல்லத்தில் தண்ணீர் விட்டு, பாகு காய்ச்சி, வடிகட்டி, மறுபடி அடுப்பில் வைக்கவும்.
அதில் உளுந்து பொடியை சிறிது, சிறிதாகச் சேர்த்துக் கிளறவும்.
நன்கு வெந்ததும், நல்லெண்ணெய் விட்டுக் கிளறி, இறக்கவும்.
வயதுக்கு வந்த பெண்களுக்குக் கொடுத்தால் இடுப்பு எலும்பு வளர்ச்சி பெறும். ரத்தப் போக்கு சிக்கல்கள் தீரும்.