என் மலர்tooltip icon

    சமையல்

    உடலுக்கு ஆரோக்கியம் தரும் கோதுமை மாவில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம். அந்த வகையில் இன்று கோதுமை கச்சாயம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கோதுமை - 250 கிராம்
    கட்டி வெல்லம் - 250 கிராம்
    வாழைப்பழம் - 1
    தேங்காய் துருவல் - தேவையான அளவு
    ஏலக்காய் - தேவையான அளவு

    செய்முறை

    கோதுமையை தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளவும். கோதுமையுடன் கட்டிவெல்லம் வாழைப்பழம் சேர்த்து நன்றாக தோசை மாவு பக்குவத்தில் நன்றாக அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    அரைத்த மாவுடன் தேங்காய்த்துருவல் மற்றும் ஏலக்காய் சேர்த்து நன்றாக கலக்கி எண்ணெய் காய்ந்ததும் பொரித்து பரிமாறலாம்.

    குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான உணவு. முதல் முறை செய்யம்போது பொறுமையாக கைப்பக்குவம் வரும் வரை பொரிக்கவும்.
    கறிவேப்பிலை இலையை மட்டுமே சமையலில் பயன்படுத்துவது உண்டு காம்பை குப்பையில் போட்டு விடுகிறோம் காரணம் அதன் மகத்துவம் அறிவதில்லை. கறிவேப்பிலை காம்பில் சூப் செய்முறையை பார்க்கலாம்.
    செய்முறை:

    கறிவேப்பிலை அதன் காம்போடு ஒன்றிரண்டாக வெட்டியது - 15 வரை
    துவரம்பருப்பு - 2 தேக்கரண்டி
    உப்பு - 1/2 தேக்கரண்டி
    மஞ்சள் பொடி - 1/4
    சிறிய வெங்காயம் - 3
    பூண்டு - 2 பல்
    தக்காளி - 1 சிறியது
    கரம் மசால் பொடி-1 சிட்டிகை
    எலுமிச்சை சாறு - 1/2 தேக்கரண்டி
    மிளகுத்தூள் - தேவையான அளவு

    தாளிக்க:

    வெண்ணெய் - 1/2 தேக்கரண்டி
    சோம்பு/ சீரகம் - 1/4 தேக்கரண்டி
    மிளகு-  3

    செய்முறை

    தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கறிவேப்பிலை, துவரம்பருப்பு, உப்பு, மஞ்சள் பொடி, சிறிய வெங்காயம், பூண்டு, தக்காளி அனைத்து பொருட்களையும் குக்கரில் போட்டு அதனுடன் 2 டம்ளர் தண்ணீரில் சேர்த்து 5 விசில் வரை வேகவிடவும்.

    விசில் போனவுடன் மத்தால் நன்கு கடைந்து வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.

    வாணலியில் வெண்ணெய் சேர்த்து தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்னர் வடிகட்டி வைத்துள்ள சூப்பை இதில் ஊற்றி கொதிக்க விடவும்.

    அதனுடன் கரம் மசால் பொடி சேர்க்கவும்.

    கடைசியாக சூப்பை இறக்கி அதில் மிளகுத்தூள் எலுமிச்சை சாறு சேர்த்து பரிமாறவும்.

    சத்தான சுவையான கறிவேப்பிலை காம்பு சூப் ரெடி.
    தர்ப்பூசணியில் பல்வேறு சத்துக்கள் நிறைந்த தோல் பகுதியை சமையலுக்கு பயன்படுத்தலாம் என்பது நிறையபேருக்கு தெரியாது. அதன் மூலம் சாம்பார் தயாரித்து புதுமையான சுவையை வீட்டில் உள்ளவர்களுக்கு அறிமுகம் செய்யலாம்.
    கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் அனைவரும் தர்ப்பூசணிபழத்தை விரும்பி உண்பதுண்டு. பல்வேறு சத்துக்களை உள்ளடக்கிய இந்தப்பழம் உடலின் நீர்ச்சத்து இழப்பை தடுக்கும் தன்மை கொண்டது. பொதுவாக பழத்தின் உட்பகுதியில் உள்ள சிவப்பான பகுதியை சாப்பிட்டு விட்டு மேற்புற பசுமையான தோல் பகுதியை தூக்கி எறிந்து விடுவது வழக்கம். ஆனால் பல்வேறு சத்துக்கள் நிறைந்த தோல் பகுதியை சமையலுக்கு பயன்படுத்தலாம் என்பது நிறையபேருக்கு தெரியாது. அதன் மூலம் சாம்பார் தயாரித்து புதுமையான சுவையை வீட்டில் உள்ளவர்களுக்கு அறிமுகம் செய்யலாம்.

    நாவில் நீர் ஊற வைக்கும் தர்ப்பூசணி சாம்பாரை எப்படி தயார் செய்வது என்று பார்ப்போம்.

    தேவையான பொருட்கள்

    துவரம் பருப்பு - 1 கப்
    மாங்காய் துண்டுகள் - 6
    தர்ப்பூசணியின் தோல் பகுதி - 1 பழத்தின் துண்டுகள்
    வெங்காயம் - 2 பொடியாக நறுக்கியது
    தக்காளி -  பொடியாக நறுக்கியது
    வெந்தயம் - கால் டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
    சாம்பார் பொடி - 2 டேபிள் ஸ்பூன்
    துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
    சீரகம் - அரை டீஸ்பூன்
    கடுகு - கால் டீஸ்பூன்
    உப்பு - தேவைக்கேற்ப
    எலுமிச்சை சாறு - அரை மூடி
    எண்ணெய், தண்ணீர் - தேவையான அளவு
    கறிவேப்பிலை - தேவையான அளவு

    செய்முறை

    துவரம் பருப்புடன், மஞ்சள் தூள், சீரகம் சேர்த்து குழைய வேக வைத்து கொள்ளவும்.

    தர்ப்பூசணியின் தோல் பகுதியை சிறிய துண்டுகளாக நறுக்கிகொள்ளவும்.

    அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு கடுகு,வெந்தயம், கறிவேப்பிலை, சீரகம் ஆகியவற்றை சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு நன்று வதக்கி விட்டு மாங்காய், தர்ப்பூசணி துண்டுகள், தக்காளியை போட்டு வதக்கி மூடி வைக்க வேண்டும்.

    அடுப்பை மிதமான தீயில் வைத்து வேக விட வேண்டும். அதில் சாம்பார் பொடி, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்றாக வதக்க வேண்டும். அதனுடன் வேக வைத்த பருப்பை சேர்த்து தேவைக்கேற்ப சிறிது நீர் விட வேண்டும்.

    அனைத்தும் ஒன்றாக கலந்து சாம்பார் பதம் கிடைக்கும் நிலையில் அடுப்பை அணைத்து எலுமிச்சை சாற்றை சேர்க்க வேண்டும்.

    இறுதியாக துருவிய தேங்காய், கொத்தமல்லித்தழை ஆகியவற்றை தூவி இறக்கி வைத்தால் சூடான சாதத்துக்கு சுவையான சாம்பார் ரெடி.
    கேரள மக்கள் பிரியாணி போன்ற கனமான உணவை எடுத்துக் கொண்ட பிறகு அவர்களின் செரிமானத்திற்கும் புத்துணர்ச்சிக்கும் ஊக்கமளிக்கும் விதமாக இந்த சுலைமானி டீயை எடுத்துக் கொண்டு வந்துள்ளனர்.
    பொதுவாக இந்த சுலைமானி டீயை கேரளா மக்கள் எடுத்து வருவது உண்டு. கேரளாவில் உள்ள கோழிக்கோட்டில் இந்த சுலைமானி டீ மிகவும் புகழ்பெற்ற ஒன்று. கேரள மக்கள் பிரியாணி போன்ற கனமான உணவை எடுத்துக் கொண்ட பிறகு அவர்களின் செரிமானத்திற்கும் புத்துணர்ச்சிக்கும் ஊக்கமளிக்கும் விதமாக இந்த சுலைமானி டீயை எடுத்துக் கொண்டு வந்துள்ளனர்.

    பட்டை, ஏலக்காய், கிராம்பு மற்றும் லெமன் போன்ற மசாலாப் பொருட்களை சேர்த்து இந்த தேநீர் தயாரிக்கப்படுகிறது. இது ஒரு ஆல்கஹால் அல்லாத செரிமான பானம் என்று கூறலாம். இந்த தேநீருக்கு சுலைமானி என்று பெயர். இது ஒரு அரபு வார்த்தை ஆகும். சுலைமானி என்பதற்கு "அமைதியான மனிதன்" என்று பொருள். திருமணம் மற்றும் நிறைய கொண்டாட்டங்களில் ஒரு கனமான உணவுகளுக்கு பிறகு மக்கள் இந்த தேநீரை எடுத்துக் கொள்கின்றனர். இந்த தேநீர் பார்ப்பதற்கு பழுப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் காணப்படும். இந்த மசாலா டீயை எப்படி தயாரிக்கலாம் என அறிந்து கொள்வோம்.

    தேவையான பொருட்கள்

    தோலுடன் நசுக்கிய ஏலக்காய் - 2
    இஞ்சி துருவியது - 1/2 ஸ்பூன்
    இலவங்கப்பட்டை - 1
    கிராம்பு - 1 அல்லது 2
    சர்க்கரை - 3-4 டீஸ்பூன்
    லெமன் ஜூஸ் - 1 டீஸ்பூன்
    டீத்தூள் - 2-3 டீஸ்பூன்

    செய்முறை

    ஒரு பாத்திரத்தில் மேற்கண்ட மசாலாப் பொருட்களை போட்டு அதனுடன் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடுங்கள். அதனுடன் டீத்தூள் மற்றும் சர்க்கரை சேர்த்து குறைந்த தீயில் கொதிக்க விடுங்கள்.

    பிறகு அடுப்பை அணைத்து விட்டு அதில் லெமன் ஜூஸ் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

    பிறகு வடிகட்டி கொள்ளுங்கள். வேண்டுமானால் அதனுடன் புதினா சேர்த்து குடியுங்கள்.

    இந்த டீயை பிரியாணி போன்ற கனமான உணவிற்கு பிறகு எடுத்துக் கொண்டு வருவது நன்மை பயக்கும்.

    இந்த டீ உங்க சீரண சக்தியை மேம்படுத்துகிறது. உங்களுக்கு ஏராளமான நன்மைகளை அளிக்கவும் உதவி செய்கிறது.
    கொரோனா ஊரடங்கு காலத்தில் குடும்பத்தினரின் மனம் கவரும் வகையில் இனிப்பான கோதுமை மாவு ஸ்நாக்ஸ் தயாரிக்கும் வழிமுறைகள் இதோ...
    தேவையான பொருட்கள்

    தயிர் - கால் கப்
    நெய் - 2 டீஸ்பூன்
    கோதுமை மாவு -  1 கப்
    பால் - 2 டேபிள் ஸ்பூன்
    பேக்கிங் சோடா - அரை டேபிள் ஸ்பூன்
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    பாகு தயாரிக்க..

    சர்க்கரை - முக்கால் கப்
    ஏலக்காய் தூள் - கால் டீஸ்பூன்
    தண்ணீர் - 1 1/4 கப்

    செய்முறை

    சோடா, உப்பு ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் விடாமல் சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்.

    பாலை நன்கு காய்ச்சி ஆறவைத்து தேவையான அளவு சேர்த்து கொள்ளலாம். பாலுக்கு பதிலாக பால் பவுடரையும் பயன்படுத்தலாம்.

    பிசைந்த மாவை சப்பாத்தி கல்லில் இட்டு அடர்த்தியாக தேய்க்கவும்.

    பின்னர் அதை சிறு சதுர வடிவ துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் சதுர வடிவ மாவுத் துண்டுகளை இட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    மற்றொரு வாணலியில் சர்க்கரை, தண்ணீர் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

    குலோப் ஜாமுன் செய்யும் பாகு போன்றே அதை தயாரிக்கவும்.

    மிதமான சூட்டில் பொரித்த கோதுமை கேக்கை பாகில் சேர்த்து அரை மணி நேரம் ஊற விடவும். ஜீரா முழுவதையும் மாவு உறிஞ்சிய பின்னர் சாப்பிடுவதற்கு சுவையான கோதுமை மில்க் கேக் தயார்.

    ப்ளூ டீ நீல நிற சங்குப்பூவில் மூலம் தயாரிக்கப்படுவதாகும். ப்ளூ டீ அருந்துவதால் உடலில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படும் என்பதையும் அது தயாரிக்கும் முறையையும் பார்க்கலாம்.
    ப்ளூ டீ நீல நிற சங்குப்பூவில் மூலம் தயாரிக்கப்படுவதாகும். தேவையற்ற கொழுப்பை கரைத்து வெளியேற்றும் ஆற்றல் இதற்கு உண்டு. ப்ளூ டீ அருந்துவதால் ஏற்படும் நன்மைகளில் முக்கியமானது மன அழுத்தத்தை தவிர்க்க உதவுவதாகும்.

    கிரீன் டீ தயாரிப்பது போன்ற இதையும் தயாரிக்க வேண்டும். கொதிக்க வைத்த தண்ணீரில் சில சங்குப்பூக்களை போட்டு 5 நிமிடம் கழித்தவுடன் இறக்கி வடிகட்டிக்கொள்ள வேண்டும்.

    அதில் எலுமிச்சை சாறு சில சொட்டுகள் விட்டு தேவையான அளவு சுத்தமான தேன் சேர்த்து சூடாகவோ அல்லது குளிர்ச்சியாகவோ பருகலாம்.
    கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் சிகிச்சை பெறும் நோயாளிகள் ஆகியோர் கட்டாயம் தகுந்த மருத்துவ ஆலோசனையின்றி ப்ளூ டீ அருந்தக்கூடாது.
    உணவு பொருட்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பப்படுவது பிஸ்கட். வீட்டில் மைக்ரோவேவ் அவன் இல்லாதவர்கள் இந்த முறையில் பிஸ்கட் செய்யலாம்.
    தேவையான பொருட்கள் :

    மைதா மாவு - 200 கிராம்,
    வெண்ணெய் - 100 கிராம்,
    பொடித்த சர்க்கரை - 75 கிராம்,
    உப்பு, பேக்கிங் பவுடர் - தலா கால் டீஸ்பூன்.

    செய்முறை:


    மைதா மாவு, உப்பு, பேக்கிங் பவுடர் மூன்றையும் ஒன்றாகக் கலந்து பலமுறை சலித்துக் கொள்ளவும்.

    வெண்ணெய், சர்க்கரை இரண்டையும் கலந்து மிருதுவாகும் வரை குழைக்கவும்.

    சர்க்கரை நன்றாக கரைந்தவுடன் இதனுடன் மைதா, பேக்கிங் பவுடர் கலவையை சேர்த்துக் கலந்து பிசையவும்.

    இந்த மாவை சப்பாத்தி கல்லில் வைத்து வட்டமாக தட்டவும். இதனை பாட்டில் மூடி அல்லது பிஸ்கட் அச்சினால் கால் அங்குல பருமன் அளவுக்கு வட்டமாக வெட்டவும். வெட்டிய துண்டுகளை 'போர்க்’ (முள்கரண்டி) கொண்டு லேசாக குத்திவிடவும்.

    ஒரு தட்டில் நெய் தடவி, மேலே மைதா மாவு தூவி, செய்து வைத்த துண்டுகளை இடைவெளிவிட்டு அடுக்கவும். அடிகனமான வாணலியில் மணலை சூடுபடுத்தி, அதன் மேல் தட்டை வைத்து, இட்லி பானை மூடியால் அழுத்தி மூடவும் (அடுப்பை சிறு தீயில் வைக்கவும்). 20 நிடத்துக்குப் பிறகு, வாசனை வர ஆரம்பித்ததும் அடுப்பை அணைக்கவும். சிறிது நேரத்துக்குப் பிறகு பிஸ்கட்டுகளை வெளியே எடுக்கவும்.

    சூப்பரான ஸ்நாக்ஸ் பட்டர் பிஸ்கட் ரெடி.
    காலையில் சாப்பிடும் உணவு ஆரோக்கியம் நிறைந்ததாக இருப்பது மிகவும் முக்கியம். அந்த வகையில் சத்தான் இந்த ரெசிபியை 10 நிமிடத்தில் செய்து விடலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை ரொட்டி - 5 துண்டுகள்
    துருவிய பன்னீர் - கால் கப்
    நறுக்கிய காளான் - அரை கப்
    பெ.வெங்காயம் - 1
    குடைமிளகாய் - 1
    தக்காளி - 1
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    செய்முறை:


    பெரிய வெங்காயம், தக்காளி, குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அடுப்பில் தோசைக்கல்லை வைத்து ரொட்டி துண்டுகளை பரப்பி இரு புறமும் புரட்டி போட்டு பொன்னிறமாக பொரித் தெடுக்கவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் வெங்காயம், குடைமிளகாய், தக்காளி, காளான், உப்பு ஆகியவற்றை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

    இந்த கலவையை ரொட்டி துண்டுகளின் மீது பரப்பி அதன்மேல் துருவிய பன்னீரை தூவி மைக்ரோ ஓவனில் வைத்து டோஸ்ட் செய்து பரிமாறவும்.
    கோடைகாலத்தில் கிடைக்கும் தர்பூசணியில் பல்வேறு சூப்பரான ரெசிபிகளை செய்யலாம். அந்த வகையில் இன்று தர்பூசணி பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தர்பூசணி சாறு - அரை கப்
    ஓட்ஸ் - கால் கப்
    பால் - அரை லிட்டர்
    சர்க்கரை - தேவையான அளவு
    முந்திரி பருப்பு, பாதாம் - சிறிதளவு

    செய்முறை:


    ஓட்ஸை சிறிது நேரம் தண்ணீரில் ஊறவைத்து மிக்சியில் மாவாக அரைத்துக்கொள்ளவும்.

    பாலை கொதிக்கவைத்து ஆறவிடவும். பின்னர் அகன்ற பாத்திரத்தில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

    ஓட்ஸ் மாவை சிறிதளவு தண்ணீரில் கரைத்து கொதிக்கும் நீரில் ஊற்றி கிளறிவிடவும்.

    ஓட்ஸ் வெந்ததும் சர்க்கரை சேர்த்து கிளறவும்.

    பின்னர் பால் ஊற்றி ஒரு கொதி வந்ததும் தர்பூசணி சாறை ஊற்றி கிளறி இறக்கி விடவும்.

    பாதாம், முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து பாயாசத்துடன் சேர்த்து பரிமாறலாம்.

    நீர்ச்சத்து நிறைந்த தர்பூசணியில் ஜூஸ், ஐஸ்கிரீம் மட்டுமல்ல பல்வேறு சுவையான ரெசிபிகளை செய்யலாம். அந்த வகையில் இன்று தர்பூசணியில் அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தர்பூசணி - 1
    புழுங்கல் அரிசி - 1 கப்
    துவரம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
    தேங்காய் துருவல் - சிறிதளவு
    பச்சை மிளகாய் - 3
    கறிவேப்பிலை - சிறிதளவு
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு

    செய்முறை:

    தர்பூசணி பழத்தின் தோலை மெலிதாக சீவிவிட்டு வெள்ளை நிறப்பகுதியை மட்டும் தனியாக வெட்டி எடுத்து துருவிக்கொள்ளவும்.

    அரிசியையும், துவரம் பருப்பையும் தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளவும். பின்னர் அதனுடன் மிளகாய், உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

    அரைத்த மாவு கலவையுடன் தர்பூசணி துருவல், தேங்காய் துருவல், கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

    அடுப்பில் தோசைக்கல்லை வைத்து அது சூடானதும் எண்ணெய் விட்டு தடவி, மாவை அடைகளாக தயார் செய்து வைக்கவும்.

    ஒருபுறம் வெந்ததும் திருப்பி போட்டு மறுபுறத்தையும் வேகவைத்து ருசிக்கலாம்.
    நீங்கள் ரசப் பிரியராக இருந்தால், வித்தியாசமான சுவையுடைய ரசங்களை செய்து சுவைக்க விரும்புபவராக இருந்தால், தேங்காய் பால் சேர்த்த மசாலா ரசம் செய்து சுவையுங்கள். இதை சூப் போன்றும் குடிக்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    சின்ன வெங்காயம் - 8-10
    தக்காளி - 2 (பெரியது)
    பூண்டு - 3 பல்
    பச்சை மிளகாய் - 4
    துருவிய தேங்காய் - 1/4 கப்
    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிது
    கொத்தமல்லி - சிறிது
    உப்பு - சுவைக்கேற்ப
    எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

    தாளிப்பதற்கு...

    கிராம்பு - 5
    பட்டை - 1 இன்ச்
    அன்னாசிப்பூ - 2
    சோம்பு - சிறிது

    செய்முறை:

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தக்காளியை ஒரு பாத்திரத்தில் போட்டு, தக்காளி மூழ்கும் அளவில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, தக்காளியை மென்மையாக வேக வைத்து இறக்கிக் கொள்ளவும். பின் தக்காளியின் தோலை நீக்கிவிட்டு, தக்காளியை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

    அடுத்து தேங்காயை போட்டு அரைத்து, அதிலிருந்து தேங்காய் பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    அதன் பின் பச்சை மிளகாய், பூண்டு ஆகியவற்றை ஒன்றாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, பட்டை, கிராம்பு மற்றும் அன்னாசிப்பூ சேர்த்து தாளித்து, கறிவேப்பிலை மற்றும் வெங்காயத்தைப் போட்டு ஒரு நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.

    இந்நிலையில் அரைத்த பச்சை மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து நன்கு வதக்கி, பின் அரைத்து வைத்துள்ள தக்காளி மற்றும் தக்காளி வேக வைத்த நீரை ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

    பிறகு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 5-6 நிமிடம் கொதிக்க வைக்கவும்.

    இப்போது கொத்தமல்லி மற்றும் தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கினால், சுவையான தஞ்சாவூர் ஸ்டைல் மசாலா ரசம் தயார்.
    வெந்தயக்கீரையை உருளைக்கிழங்குடன் சேர்த்து ஒரு ரெசிபி செய்து சாதம், சப்பாத்தியுடன் சாப்பிட்டால், மிகவும் அருமையாக இருக்கும். இன்று வெந்தயக்கீரை உருளைக்கிழங்கு ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
    சீரகம் - 1/2 டீஸ்பூன்
    பூண்டு - 10 பற்கள்
    பச்சை மிளகாய் - 3-4
    பேபி உருளைக்கிழங்கு - 1/2 கிலோ
    வெந்தயக் கீரை - 250 கிராம்
    மல்லி தூள் - 2 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    மாங்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    வெந்தயக்கீரை, ப.மிளகாய், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முதலில் பேபி உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி 1 டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து 3-4 விசில் விட்டு இறக்கி, தோலை உரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.

    அடுத்து மல்லி தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மாங்காய் தூள் மற்றும் உப்பு சேர்த்து 2-3 நிமிடம் கிளறி விட வேண்டும்.

    பின்பு வேக வைத்துள்ள உருளைக்கிழங்கு மற்றும் வெந்தயக்கீரையை சேர்த்து, தீயை குறைவில் வைத்து, 10 நிமிடம் கீரை நன்கு வேகும் வரை அடுப்பில் வைத்து, வாணலியில் உள்ள பொருட்கள் அனைத்தும் ஒன்று சேரும் வரை கிளறி இறக்கினால், சுவையான வெந்தயக்கீரை உருளைக்கிழங்கு ரெடி!!!
    ×