search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    அவல் மோர்க்கூழ்
    X
    அவல் மோர்க்கூழ்

    உடலுக்கு குளிர்ச்சி தரும் அவல் மோர்க்கூழ்

    அவல், மோர் சேர்த்து குடித்தால் இந்த கோடை வெயிலுக்கு உடலுக்கு குளிர்ச்சியாக இருக்கும். இன்று அவல் மோர்க்கூழ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    அவல் - ஒரு கப்
    சின்ன வெங்காயம் (தோலுரித்து, பொடியாக நறுக்கியது) - கால் கப்
    நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன்
    பச்சை மிளகாய் - 2 (கீறவும்)
    கறிவேப்பிலை - சிறிதளவு
    கடுகு - அரை டீஸ்பூன்
    உடைத்த உளுந்து - ஒரு டீஸ்பூன்
    சீரகம் - அரை டீஸ்பூன்
    கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்
    இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன்
    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
    புளித்த தயிர் - ஒரு கப்
    தேங்காய்த்துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
    எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.

    செய்முறை:

    அவலை வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் மாவாக அரைத்துக்கொள்ளவும்.

    தயிரில் தண்ணீர், உப்பு சேர்த்துக் கடைந்துகொள்ளவும் (மோராக இரண்டரை கப் வரை இருக்க வேண்டும்).

    வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி கடுகு, சீரகம், உளுந்து தாளித்து கடலைப்பருப்பு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி, பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி, அடுப்பைக் குறைந்த தீயில் வைக்கவும்.

    கடைந்த மோரை அதில் ஊற்றி கலக்கி, அவல் மாவை போட்டு, சிறிதளவு உப்பு சேர்த்துக் கிளறி, தேங்காய்த்துருவல் தூவி, நன்கு வெந்ததும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கிப் பரிமாறவும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×