என் மலர்
சமையல்
கேரளா ஸ்டைல் உணவுகளின் சுவையே தனி தான். அதிலும் மலபார் சிக்கன் ரோஸ்ட் மிகவும் அருமையாக இருக்கும். சரி, இப்போது அந்த மலபார் சிக்கன் ரோஸ்ட் எப்படி செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
சிக்கன் லெக் பீஸ் - 6
வெங்காயம் - 20 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
இஞ்சி - 1 துண்டு (நீளமாக நறுக்கியது)
தேங்காய் எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சமையல் எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
சிக்கன் ஊற வைப்பதற்கு தேவையான பொருட்கள்:
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சோள மாவு - 2 டீஸ்பூன்
அரிசி மாவு - 2 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
எலுமிச்சை - 1
செய்முறை:
முதலில் சிக்கன் லெக் பீஸை நீரில் சுத்தமாக கழுவி, அதில் ஆங்காங்கே கத்தியால் கீறி விட வேண்டும்.
பின் ஒரு பாத்திரத்தில் சிக்கன் லெக் பீஸை வைத்து, அதில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பிரட்டி, 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை எண்ணெயில் போட்டு நன்கு பொரித்து எடுக்க வேண்டும். சிக்கன் நன்றாக சிவக்கும் படி பொரிக்க வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து வதக்கவும்.
பின் அதில் வெங்காயத்தை சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு வதக்க வேண்டும்.
அடுத்து அதில் வறுத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து, அதோடு மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிரட்டி இறக்கினால், சூடான மற்றும் சுவையான மலபார் சிக்கன் ரோஸ்ட் ரெடி!!!

காலையில் சத்தான டிபன் சாப்பிட விரும்பினால் சிவப்பு அரிசி வேர்க்கடலை கார பணியாரம் செய்து சுவைக்கலாம். அதை மாலை நேர சிற்றுண்டியாகவும் சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்
சிவப்பு அரிசி, பச்சரிசி - தலா ஒரு கப்,
வேர்க்கடலை - அரை கப்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1,
பொடியாக நறுக்கிய கேரட், கோஸ் - தலா கால் கப்,
பச்சை மிளகாய் - 2 (நறுக்கிக் கொள்ளவும்),
உப்பு, பெருங்காயத்தூள், நெய் - தேவையான அளவு.
செய்முறை
அரிசி வகைகள், வேர்க்கடலை இரண்டையும் தனித் தனியாக ஊற வைத்து ஒன்றாக சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் காய்கறிகளை போட்டு சற்று வதக்கிய பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி அரைத்து வைத்துள்ள மாவில் கொட்டி அதனுடன் உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
பணியார கல்லை அடுப்பில் வைத்து குழியில் நெய் ஊற்றி, அதில் கலந்த மாவை ஊற்றி, இருபுறமும் வேகவிட்டு பொன்னிறமாக எடுக்கவும்.
சத்தான சுவையான சிவப்பு அரிசி வேர்க்கடலை கார குழிப்பணியாரம் ரெடி.

மாலை வேளையில் எப்போதும் பஜ்ஜி, போண்டா என்று செய்து சுவைத்து போர் அடித்துவிட்டதா? அப்படியெனில் இன்று மும்பை ஸ்டைல் பேல் பூரியை செய்து சுவையுங்கள்.
தேவையான பொருட்கள்:
பொரி - 1 கப்
ஓமப்பொடி - 1 டேபிள் ஸ்பூன் + 1 டேபிள் ஸ்பூன்
தட்டுவடை - 4
கடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
வேர்க்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் - 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
நறுக்கிய மாங்காய் - 1 டேபிள் ஸ்பூன்
வேக வைத்த உருளைக்கிழங்கு - 1/4 கப் (துண்டுகளாக்கப்பட்டது)
புதினா/கொத்தமல்லி சட்னி - தேவையான அளவு
தக்காளி சாஸ் - தேவையான அளவு ]
எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
சாட் மசாலா - 1/4 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடலைப் பருப்பு மற்றும் வேர்க்கடலையை பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பௌலில் பொரியைப் போட்டு, அதில் தட்டுவடையை கையால் உடைத்து சேர்த்து, அத்துடன் எலுமிச்சையைத் தவிர, மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு கிளறி விட்டு, இறுதியில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி மீண்டும் கிளறினால், சூப்பரான மும்பை ஸ்டைல் பேல் பூரி ரெடி.

குழந்தைகளுக்கும், சர்க்கரை நோயாளிகளுக்கும் மாலையில் சத்தான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால் வேர்க்கடலை கோதுமை ரவை பிடி கொழுக்கட்டை செய்து கொடுக்கலாம்.
தேவையான பொருட்கள்
வேர்க்கடலை ரவை - ஒரு கப் (வேர்க்கடலையை ரவை போல பொடித்துக் கொள்ளவும்),
கோதுமை ரவை - அரை கப்,
தேங்காய் துருவல் - கால் கப்,
காய்ந்த மிளகாய் - 3,
கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்,
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை
கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு வறுக்கவும்.
பிறகு இதில் தேவையான தண்ணீர் விட்டு, உப்பை போட்டு கொதிக்க விடவும்.
நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் தேங்காய் துருவல், வேர்க்கடலை ரவை, கோதுமை ரவையைப் போட்டு 2 நிமிடம் கிளறவும்.
பிறகு அடுப்பிலிருந்து இறக்கி சிறிது நேரம் ஆறியதும், கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டு சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து இட்லி தட்டில் வைத்து 10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.
வேர்க்கடலை ரவை-கோதுமை ரவை பிடி கொழுக்கட்டை ரெடி.

கொழுக்கட்டையில் தேங்காய் பூரணம் செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று கேரட் அல்வா பூரணம் வைத்து கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கொழுக்கட்டை மாவு - 1 கப்
தண்ணீர் - ஒன்றரை கப்
கேரட் துருவல் - அரை கப்
தூளாக்கிய வெல்லம் - அரை கப்
தேங்காய் துருவல் - கால் கப்
ஏலக்காய் தூள் - சிறிதளவு
நெய் - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவைக்கு
செய்முறை:
வாணலியில் தண்ணீர் ஊற்றி அதனுடன் சிறிதளவு உப்பு, எண்ணெய் சேர்த்து கொதிக்கவிடவும். கொதிக்க தொடங்கியதும் கொழுக்கட்டை மாவை கொட்டி கட்டி பிடிக்காமல் கிளறி இறக்கவும். ஆறியதும் மாவு கலவையை நன்றாக பிசைந்து கொள்ளவும்.
வாணலியில் நெய் ஊற்றி அது உருகியதும் கேரட் துருவலை கொட்டி வதக்கிக்கொள்ளவும்.
அது வதங்கியதும் தேங்காய் துருவலை கொட்டி வதக்கவும்.
அதனுடன் வெல்லம், ஏலக்காய் தூள் சேர்த்து கிளறவும்.
பின்னர் சிறிதளவு நெய் ஊற்றி கிளறி பூரணம் பதத்துக்கு வந்ததும் இறக்கவும்.
மாவு கலவையை உருண்டை பிடித்து அதன் நடுப்பகுதியில் பூரணத்தை வைத்து மூடி இட்லி தட்டில் வேகவைத்து எடுக்கவும்.
ருசியான கேரட் அல்வா ஸ்டப்ஃடு கொழுக்கட்டை தயார்.

பெண்கள் தினமும் எள் சாப்பிடுவதால், மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கப்படும். வேர்க்கடலையில் உடம்புக்குத் தேவையான புரதச்சத்தும் அதிகமாக உள்ளது.
தேவையான பொருட்கள் :
எள்ளு - 2 டீஸ்பூன் (லேசாக வறுத்தது)
வறுத்த வேர்க்கடலை - அரை கப்
வறுத்த காய்ந்த மிளகாய் - மூன்று
தேங்காய் துருவல் -2 டீஸ்பூன்
புளி - ஒரு சிறு துண்டு
உப்பு - தேவைகேற்ப
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
கடுகு - கால் டீஸ்பூன்
கறிவேபில்லை - சிறிதளவு
செய்முறை :
எள்ளு, வேர்க்கடலை, வறுத்த காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல், புளி, உப்பு ஆகியவற்றை மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து சட்னி பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேபில்லை போட்டு தாளித்து அதில் கொட்டி பரிமாறவும்.
சத்தான எள்ளு வேர்க்கடலை சட்னி ரெடி.

நாண், சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த இறால் கிரீன் மசாலா. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
இறால் - கால் கிலோ
நறுக்கிய இஞ்சி - சிறிதளவு
பெ.வெங்காயம் - 2 (நறுக்கவும்)
நறுக்கிய பூண்டு - 4 பல்
பச்சை மிளகாய் - 2
சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் - கால் டீஸ்பூன்
தேங்காய் பால் - கால் கப்
எலுமிச்சை சாறு - சிறிதளவு
தண்ணீர் - 2 கப்
உப்பு, எண்ணெய் - தேவைக்கு
புதினா - 1 கட்டு
கொத்தமல்லி தழை- ஒரு கைப்பிடி
செய்முறை:
இறாலை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
அதனுடன் எலுமிச்சை சாறு, உப்பு கலந்து ஊறவைத்துக்கொள்ளவும்.
மிக்சியில் இஞ்சி, பூண்டு, புதினா, கொத்தமல்லி தழை, மிளகாய், கொத்தமல்லி தூள், சீரகத்தூள் போன்றவற்றை கொட்டி விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் வெங்காயத்தை கொட்டி பொன்னிறமாக வதக்கிக்கொள்ளவும்.
அதனுடன் மிக்சியில் அரைத்து வைத்த கலவையை கொட்டி கிளறவும்.
பின்னர் அடுப்பை சிறுதீயில் வைத்துவிட்டு தேங்காய் பால் ஊற்றி கொதிக்கவிடவும்.
நன்கு கொதிக்க தொடங்கியதும் இறால் கலவையை கொட்டி உப்பு, தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
ஓரங்களில் எண்ணெய் பிரிந்து கிரேவி பதத்துக்கு வரும் வரை வேகவைத்துவிட்டு இறக்கி பரிமாறலாம்.
சுவையான இறால் கிரீன் மசாலா ரெடி.

தினமும் ஏதாவது ஒரு சாலட் சாப்பிடுவது அன்றைய தினம் முழுவதும் உங்களை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
ஸ்வீட் கார்ன் - 100 கிராம்,
அன்னாசிப் பழம் - 100 கிராம்,
பூண்டு - ஒரு பல்,
வால்நட் - 4,
துளசி இலை - 5,
எலுமிச்சம் பழம் - 1,
மிளகுத் தூள் - அரை டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து சாறு எடுத்து கொள்ளவும்.
மிளகுத் தூள், வால்நட், பூண்டு, துளசி இலை இவற்றை மிக்ஸியில் போட்டு, எலுமிச்சைச் சாற்றை விட்டு, மையமாக அரைத்து, சாஸ் போல் தயாரிக்கவும்.
அன்னாசிப் பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சோளம், அன்னாச்சி சேர்த்து கலக்கவும்.
அடுத்து அதில் சாஸ் சேர்த்துக் கலக்கியோ, அல்லது அன்னாசிப் பழம், சோளத்தை சாஸில் முக்கியோ சாப்பிடலாம்.
சூப்பரான அன்னாசி ஸ்வீட் கார்ன் சாலட்ரெடி.

குழந்தைகளுக்கு கேக் என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் கப் கேக் என்றால் சொல்லவே வேண்டாம் குஷியாகி விடுவார்கள். இன்று வீட்டிலேயே எளிய முறையில் எக்லெஸ் சாக்கோ சிப்ஸ் கப் கேக் செய்வது என்று பார்க்கலாம்.
தேவையானவை:
மைதா மாவு - 40 கிராம்
சர்க்கரை - 50 கிராம்
கோகோ பவுடர் - 10 கிராம்
பேக்கிங் பவுடர் - அரை டீஸ்பூன்
பேக்கிங் சோடா - கால் டீஸ்பூன்
எண்ணெய் - 50 மில்லி
வெனிலா எசென்ஸ் - அரை டீஸ்பூன்
வெதுவெதுப்பான நீர் - 60 மில்லி
சாக்கோ சிப்ஸ் - 10 கிராம்
செய்முறை:
அகலமான பாத்திரத்தில் மைதா மாவுடன், கோகோ பவுடர், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, சாக்கோ சிப்ஸ் சேர்த்துக் நன்றாக கலக்கவும்.
பிறகு சர்க்கரை, எண்ணெய், வெனிலா எசென்ஸ், வெதுவெதுப்பான நீர் சேர்த்துக் கலக்கவும். `
கப் கேக் லைனர்ஸ்’ஸில் கேக் கலவையை ஊற்றி 150 டிகிரி செல்ஷியஸுக்கு ப்ரீஹீட் செய்த அவனுள் வைத்து 20 நிமிடங்கள் வரை `பேக்’ செய்து எடுக்கவும்.
இப்போது சூப்பரான எக்லெஸ் சாக்கோ சிப்ஸ் கப் கேக் ரெடி.

கறிவேப்பிலையை தினமும் உடலில் சேர்த்து கொள்வது உடலுக்கு மட்டுமல்ல, கூந்தல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. இந்த ரசத்தை சூப் போன்றும் குடிக்கலாம்.
தேவையான பொருட்கள்
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கையளவு
பூண்டு - 6 பல்
தக்காளி - 1
கடுகு - 1 ஸ்பூன்
வெந்தயம் - 1/4 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கொத்தமல்லி - சிறிதளவு
புளி - சிறிய எலுமிச்சை பழ அளவு
உப்பு - தேவையான அளவு
பெருங்காயத்தூள் - சிறிதளவு
எண்ணெய் - 2 ஸ்பூன்
செய்முறை
மிக்ஸியில் மிளகு, சீரகம், பூண்டு, தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து நன்கு பேஸ்ட் போல் அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
புளியை தண்ணீரில் ஊற வைத்து கரைத்து எடுத்து கொள்ளவும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம் போட்டு தாளித்த பின்னர் காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும்.
பிறகு அரைத்த பேஸ்ட் ஊற்றி நன்கு வதக்கி விடவும்.
இதில் கரைத்து வைத்து உள்ள புளியை ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொத்தமல்லி தூவி ரசம் லேசாக நுரை தட்டி வரும் போது அடுப்பை அணைத்து விடவும்.
சூப்பரான கறிவேப்பிலை ரசம் தயார்.

தயிர் சாதம், சாம்பார் சாதம், தோசை, நாண், சப்பாத்தியுடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த கொத்தமல்லி - உருளைக்கிழங்கு வறுவல். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு - 3,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - 3 டீஸ்பூன்.
அரைக்க...
கொத்தமல்லி - 1/2 கப்,
பச்சை மிளகாய் - 2,
பூண்டு - 3.
செய்முறை
உருளைக்கிழங்கை நன்கு வேக வைத்து, தோல் நீக்கி, நறுக்கிக் கொள்ளவும்.
மிக்ஸியில் அரைக்க வேண்டிய பொருட்களை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த விழுதை உருளைக்கிழங்குடன் சேர்த்து கலந்து 15 நிமிடங்கள் ஊற விடவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு வறுக்கவும். சாதத்துடன் பரிமாறவும்.

கறிவேப்பிலை இலைகளையோ அல்லது அந்த இலைகளின் பொடிகளையோ அதிகம் சாப்பிட்டு வர இரத்த சோகை நீங்கி சிவப்பு இரத்த அணுக்கள் விருத்தி உண்டாகும்.
தேவையான பொருட்கள்
கறிவேப்பிலை - 1 கப்,
மைசூர் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்,
உளுத்தம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்,
வெந்தயம் - 1/2 டேபிள்ஸ்பூன்,
புளி - சிறிது,
பெருங்காயம் - 1 சிட்டிகை,
சிவப்பு மிளகாய் - 7,
உப்பு - தேவைக்கு,
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
பச்சரிசி - 1 டேபிள்ஸ்பூன்.
செய்முறை
கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மைசூர் பருப்பு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
அத்துடன் கறிவேப்பிலை, புளி, பெருங்காயம், மிளகாய், பச்சரிசி சேர்த்து வதக்கவும்.
ஆறியதும் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும்.
சூடான சாதத்தில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, இந்தப் பொடியை தேவைக்கு சேர்த்துக் கலந்து சாப்பிடலாம்.