என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    கேரட் அல்வா ஸ்டப்ஃடு கொழுக்கட்டை
    X
    கேரட் அல்வா ஸ்டப்ஃடு கொழுக்கட்டை

    கேரட் அல்வா ஸ்டப்ஃடு கொழுக்கட்டை

    கொழுக்கட்டையில் தேங்காய் பூரணம் செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று கேரட் அல்வா பூரணம் வைத்து கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கொழுக்கட்டை மாவு - 1 கப்
    தண்ணீர் - ஒன்றரை கப்
    கேரட் துருவல் - அரை கப்
    தூளாக்கிய வெல்லம் - அரை கப்
    தேங்காய் துருவல் - கால் கப்
    ஏலக்காய் தூள் - சிறிதளவு
    நெய் - சிறிதளவு
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு

    செய்முறை:

    வாணலியில் தண்ணீர் ஊற்றி அதனுடன் சிறிதளவு உப்பு, எண்ணெய் சேர்த்து கொதிக்கவிடவும். கொதிக்க தொடங்கியதும் கொழுக்கட்டை மாவை கொட்டி கட்டி பிடிக்காமல் கிளறி இறக்கவும். ஆறியதும் மாவு கலவையை நன்றாக பிசைந்து கொள்ளவும்.

    வாணலியில் நெய் ஊற்றி அது உருகியதும் கேரட் துருவலை கொட்டி வதக்கிக்கொள்ளவும்.

    அது வதங்கியதும் தேங்காய் துருவலை கொட்டி வதக்கவும்.

    அதனுடன் வெல்லம், ஏலக்காய் தூள் சேர்த்து கிளறவும்.

    பின்னர் சிறிதளவு நெய் ஊற்றி கிளறி பூரணம் பதத்துக்கு வந்ததும் இறக்கவும்.

    மாவு கலவையை உருண்டை பிடித்து அதன் நடுப்பகுதியில் பூரணத்தை வைத்து மூடி இட்லி தட்டில் வேகவைத்து எடுக்கவும்.

    ருசியான கேரட் அல்வா ஸ்டப்ஃடு கொழுக்கட்டை தயார்.
    Next Story
    ×