என் மலர்tooltip icon

    சமையல்

    மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு பத்தே நிமிடத்தில் ஏதாவது வித்தியாசமான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால் பன்னீர் உருளைக்கிழங்கு ரோல் செய்து கொடுக்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வேக வைத்த உருளைக்கிழங்கு - 2
    துருவிய பன்னீர் - அரை கப்
    ரொட்டி துண்டுகள் - 5
    கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி
    மிளகாய் விழுது - 1 டீஸ்பூன்
    மிளகாய்தூள் - 1 டீஸ்பூன்
    இஞ்சி - 1 துண்டு (நறுக்கவும்)
    கேரட் - 1 (துருவவும்)
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    ரொட்டி துண்டுகளை உதிர்த்துக்கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேகவைத்து அதனுடன் ரொட்டி பிசிறு, மிளகாய் விழுது, உப்பு, கொத்தமல்லி தழை, இஞ்சி, மிளகாய் தூள், பன்னீர் ஆகியவற்றை சேர்த்து பிசைந்துகொள்ளவும்.

    பின்னர் சிறு உருண்டைகளாக்கி அதன் நடுவில் கேரட் துருவலை வைத்து நீள வாக்கில் விரல் அளவுக்கு உருட்டிக்கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் பொரித்தெடுத்து ருசிக்கலாம்.

    சூப்பரான ஸ்நாக்ஸ்பன்னீர்  உருளைக்கிழங்கு ரோல் ரெடி.
    ஜவ்வரிசியில் அதிக அளவிலான புரதம் இருப்பதால், தசைகளை வலுவூட்டவும் செல்களைப் புதுப்பிக்கவும் ரத்த ஓட்டத்தை சீராக்கவும் செய்கிறது. இன்று ஜவ்வரிசி கோதுமை ரவை அடை செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ஜவ்வரிசி - ஒரு கப்,
    கோதுமைரவை- அரை கப் ,
    அரிசி மாவு, கேரட் துருவல் - தலா அரை கப்,
    வெங்காயம் - 4,
    இஞ்சி, பச்சை மிளகாய் - தேவையான அளவு,
    தேங்காய் துருவல் - தேவைக்கு
    எண்ணெய் - தேவைக்கு
    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை :

    இஞ்சி, ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஜவ்வரிசியை முதல் நாள் ஊற வைத்து, மறுநாள் பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் ஜவ்வரிசியுடன், கோதுமைரவை, அரிசி மாவு, கேரட் துருவல், வெங்காயம், இஞ்சி, ப.மிளகாய், தேங்காய் துருவல், உப்பு சேர்த்து நன்றாக கலந்து சிறிது தண்ணீர் தெளித்து கொட்டிய பிசைந்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும். இப்போது ரவை நன்றாக ஊறி மாவு கொட்டியான பதத்தில் இருக்கும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அடை போல மெல்லியதாக தட்டி, சுற்றிலும் எண்ணெய் விட்டு பொன்னிறமாக எடுக்கவும்.

    இதை ஏதாவது ஒரு சட்னியுடன் சாப்பிடலாம்.

    சூப்பான ஜவ்வரிசி கோதுமை  ரவை  அடை ரெடி.
    புலாவ், சாதம், நாண், சப்பாத்தியுடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த இறால் மஞ்சூரியன். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இறால் - கால் கிலோ
    சில்லி பிளேக்ஸ் - சிறிதளவு
    வெங்காயத்தாள் - தேவைக்கு
    பெ.வெங்காயம் - 1 (நறுக்கவும்)
    குடைமிளகாய் - 1 (நறுக்கவும்)
    பூண்டு - 5 பல்
    மிளகாய் சாஸ் - 1 டீஸ்பூன்
    தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன்
    சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
    மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    இறாலை கழுவி சுத்தம் செய்து மிளகுத்தூள், உப்பு சேர்த்து சிறிது நேரம் ஊறவைக்கவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் இறாலை போட்டு பொரித்தெடுத்துக்கொள்ளவும்.

    பின்னர் வெங்காயத்தை கொட்டி தனியாக வதக்கவும்.

    அடுத்து பூண்டு சேர்த்து வதக்கவும்.

    அதனுடன் சோயா சாஸ், மிளகாய் சாஸ், தக்காளி சாஸ், சில்லி பிளேக்ஸ், உப்பு போன்றவற்றை கலந்து பச்சை வாசம் நீங்கும்வரை வதக்கவும்.

    அதன் பிறகு குடைமிளகாய், வெங்காயத்தாள் சேர்த்து லேசாக வதக்கி, இறாலை கொட்டி கிளறி இறக்கவும்.

    ருசியான இறால் மஞ்சூரியன் ரெடி.
    காலையில் சாலட் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று வேர்க்கடலை, வெஜிடபிள் சேர்த்து சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்  

    ஊற வைத்து வேக வைத்த வேர்க்கடலை - ஒரு கப்,
    பொடியாக நறுக்கிய வாழைத் தண்டு - கால் கப்,
    வெள்ளரித் துண்டுகள் - கால் கப்,
    கேரட் துண்டுகள் - கால் கப்,
    தக்காளி துண்டுகள் - 2 டேபிள்ஸ்பூன்,
    பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1,
    எலுமிச்சைச் சாறு - , ஒரு டீஸ்பூன்,
    கடுகு - ஒரு டீஸ்பூன்,
    எண்ணெய் - அரை டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு
    பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 2 டீஸ்பூன்.

    செய்முறை

    ஒரு பாத்திரத்தில் வேக வைத்த வேர்க்கடலையை போட்டு அதனுடன் நறுக்கிய வாழைத்தண்டு, வெள்ளரிக்காய், கேரட், தக்காளி, ப.மிளகாய் போட்டு நன்றாக கலக்கவும்.

    அடுத்து அதில் எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளித்து சலாட் கலவையில் கொட்டி கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

    சத்தான சுவையான சாலட் ரெடி.
    அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு பதார்த்தம் என்றால், அது பன்னீரில் செய்யப்படும் உணவுகள் தான். இன்று பன்னீரை வைத்து செய்யப்படும் பன்னீர் பாப்கார்ன் ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பன்னீர்  150 கிராம்
    கார்ன் பிளக்ஸ்  - 100 கிராம்
    மைதா மாவு - 3 டீஸ்பூன்
    சோள மாவு  - 3 டீஸ்பூன்
    மிளகாய் தூள்  - 2 டீஸ்பூன்
    சில்லி சாஸ் -  2 டீஸ்பூன்
    உப்பு  - தேவையான அளவு
    எண்ணெய்  - தேவையான அளவு
    பூண்டு  - 4 (அரைத்து)
    வெங்காயம்  - 1/2 (அரைத்து)
    மிளகு தூள் - 2 டீஸ்பூன்

    செய்முறை

    முதலில், பன்னீரை சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்து கொள்ள வேண்டும்.

    பின், ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, சோள மாவு, மிளகாய் தூள், உப்பு, பூண்டு மற்றும் வெங்காயம் இவை அனைத்தையும் போட்டு நன்றாக பிரட்டி கொள்ளவும்.

    பின், இதில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கிண்டி விட்டு கொண்டே இருக்க வேண்டும். பின், இதில் நாம் எடுத்து வைத்துள்ள பன்னீரை சேர்த்து கிளறி கொள்ள வேண்டும்.

    ஒரு தட்டில் கார்ன் பிளக்ஸ் எடுத்து அதனை நொறுக்கி வைத்து கொள்ள வேண்டும்.

    பின், ஊற வைத்துள்ள பன்னீர் துண்டுகளை போட்டு பிரட்டி எடுக்கவும்.

    பன்னீரை தனி தனியாக எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.

    இதனை ஒரு அரை மணி நேரம் பிரிட்ஜில் வைத்து எடுத்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பன்னீரை பிரிட்ஜில் இருந்து எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து கொள்ளவும்.

    இதனை அப்படியே சூடாக பரிமாறலாம்.


    வேர்க்கடலையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த பொடிமாஸை உணவிற்கு தொட்டுக்கொள்ளவும் செய்யலாம் சாலட் போன்றும் சாப்பிடலாம். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    வேர்க்கடலை - 2 கப்,
    பச்சை மிளகாய் - 2,
    கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு
    இஞ்சி - சிறிய துண்டு,
    எலுமிச்சைச் சாறு - 1 டீஸ்பூன்,
    கடுகு - கால் டீஸ்பூன்,
    பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்,
    எண்ணெய் - அரை டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை

    வேர்க்கடலையை வேக வைத்து கொள்ளவும்.

    இஞ்சியை துருவிக்கொள்ளவும்.

    ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    வேக வைத்த வேர்க் கடலையை மிக்ஸியில்போட்டு கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகைப் போட்டு, வெடித்ததும் பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

    பின்னர் வேக வைத்து பொடித்த வேர்க்கடலை, உப்பு போட்டு, மூன்று நிமிடங்கள் கிளறவும்.

    அடுப்பிலிருந்து இறக்கும்போது எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

    சூப்பரான சத்தான வேர்க்கடலை பொடிமாஸ் சாலட் ரெடி.
    டெல்லி, ஆக்ரா, உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களில் மிகவும் பிரபலமான உணவென்றால் அது பெட்மி பூரி தான். மிகவும் சத்து நிறைந்த இந்த பூரிதான் ஆக்ராவாசிகளின் காலை நேர பிரதான உணவு.
    தேவையான பொருட்கள்

    கோதுமை மாவு - 2 கப்
    ரவை - கால் கப்
    முழு உளுந்து - அரை கப்
    உப்பு - தேவையான அளவு
    மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    கஸ்தூரி மேத்தி - 1 டேபிள் டீஸ்பூன்
    எண்ணெய் பொரிக்க - 2 டேபிள் டீஸ்பூன்

    பூரணத்துக்கு

    முழு உளுந்து - 1 கப்
    ப.மிளகாய் - 2
    இஞ்சி  - 1 துண்டு
    பெருங்காயம் - சிறிதளவு
    சோம்பு தூள் - அரை டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    தனியா தூள் - 1 டேபிள் டீஸ்பூன்
    ஆம்சூர் தூள் - 1 டீஸ்பூன்
    சீரகத்தூள் -  1 டீஸ்பூன்
    கொத்தமல்லி தழை - சிறிதளவு
    எண்ணெய் -  டேபிள் டீஸ்பூன்
    உப்பு - சுவைக்கு

    செய்முறை

    உளுந்தை 2 மணிநேரம் ஊறவைத்து சிறிது தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து கொள்ளவும்.

    இஞ்சி, ப.மிளகாயை விழுதாக அரைத்து கொள்ளவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அதில் ஒரு பகுதியை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பூரி மாவுக்கான பொருட்களை சேர்த்து பிசைத்து இரண்டு டேபிள் டீஸ்பூன் எண்ணெய் தடவி அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

    அடுப்பில் கடாயை வைத்து அதில் ஒரு டேபிள் டீஸ்பூன் எண்ணெய் விட்டு மசாலா பொருட்களையும் அரைத்த பச்சைமிளகாய், இஞ்சி விழுதையும் அத்துடன் சேர்க்கவும். சிறிது வதங்கியபின் மீதமுள்ள உளுந்து விழுது, உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.

    உளுந்த நன்றாக வெந்து உதிரி உதிரியாக வரும் வரை வதக்கி கொண்டே இருக்க வேண்டும். கட்டியில்லாமல் பொடி போன்று உதிரியாக வரும் போது கொத்தமல்லி தழையை சேர்த்து இறக்கி விட வேண்டும்.

    சிறிது ஆறியவுடன் பூரி செய்ய தொடங்க வேண்டும். பிசைந்து வைத்துள்ள மாவை, சிறிதளவு எடுத்து கப் போன்று செய்து கொள்ள வேண்டும். இதில் பூரணத்தை உள்ளே வைத்து மூடி பூரியாக திரட்டி கொள்ள வேண்டும்.

    உருட்டி வைத்துள்ள பூரியை எண்ணெயில் போட்டு மிதமான சூட்டில் பொரித்து எடுக்க வேண்டும். இந்த பூரியை ஆலு சப்ஜியுடன் பரிமாறினால் சுவையாக இருக்கும்.
    உணவை குறைக்காமல் உடல் எடையை குறைக்க உங்களுக்கு பூசணிக்காய் உதவும். பூசணிக்காயில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன. பூசணிக்காயில் வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவை அதிகமாக உள்ளன.
    தேவையான பொருட்கள் :

    பூசணிக்காய் - 1 துண்டு
    தயிர் - அரை கப்
    பச்சை மிளகாய் - 2
    தேங்காய் துருவல் - கால் கப்
    கடுகு, உளுத்தம்பருப்பு - சிறிதளவு
    கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு
    பெருங்காயத்தூள் - சிறிதளவு
    எண்ணெய், உப்பு -தேவைக்கு

    செய்முறை:

    பூசணிக்காயை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ப.மிளகாயை அரைத்து கொள்ளவும்.

    வாணலியில் சிறிதளவு நீர் ஊற்றி பூசணிக்காயை வேகவைத்துக்கொள்ளவும்.

    நன்கு வெந்ததும் மிளகாய், உப்பு சேர்த்து கிளறவும்.

    மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து தாளித்து வெந்து கொண்டிருக்கும் பூசணிக்காய் கலவையில் கொட்டி கிளறி இறக்கவும்.

    அது ஆறியதும் தயிர், கொத்தமல்லித்தழை, தேங்காய் துருவல் கலந்து பரிமாறவும்.

    சூப்பரான பூசணிக்காய் பச்சடி ரெடி.
    குழந்தைகளுக்கு மாலைநேரத்தில் சத்தான ஸ்நாக்ஸ் கொடுக்க விரும்பினால் சர்க்கரைவள்ளிக்கிழங்கு உருண்டை செய்து கொடுக்கலாம். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சர்க்கரைவள்ளிக்கிழங்கு - அரை கிலோ
    தேங்காய் துருவல் - அரை கப்
    பொடித்த வெல்லம் - 200 கிராம்
    முந்திரி பருப்பு - 5 (பொடிக்கவும்)
    மில்க்மெய்டு - 2 டீஸ்பூன்

    செய்முறை:

    வாணலியில் தேங்காய் துருவலை கொட்டி பொன்னிறமாக வதக்கவும்.

    சர்க்கரைவள்ளிக்கிழங்கின் தோலை சீவி விட்டு இட்லி தட்டில் வேகவைத்து துருவிக்கொள்ளவும்.

    அதனுடன் வெல்லம், முந்திரி பருப்பு, மில்க்மெய்டு ஆகியவற்றை கலந்து உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.

    அதனை தேங்காய் துருவலில் புரட்டி சுவைக்கலாம்.
    காலையில் ஈஸியாக சமைத்து சாப்பிட வேண்டுமெனில் அதற்கு ஆம்லெட் சரியாக இருக்கும். இன்று வெஜிடபிள் சேர்த்து ஆம்லெட் எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    முட்டை - 2
    வெங்காயம் - 1
    தக்காளி - 1/2
    பச்சை மிளகாய் - 2  
    பீன்ஸ் - 1
    மிளகு தூள் - 1 சிட்டிகை
    மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
    பால் - 1 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை:

    வெங்காயம், தக்காளி, பீன்ஸ், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி, நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

    பின் அதில் பால், வெங்காயம், தக்காளி, பீன்ஸ், பச்சை மிளகாய், உப்பு, மிளகு தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

    அடுத்து தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, சூடானதும், அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, அடித்து வைத்துள்ள முட்டையை ஆம்லெட் போல் ஊற்றி, தீயை குறைவில் வைத்து, முன்னும், பின்னும் வேக வைத்து எடுக்க வேண்டும்.

    இப்போது சுவையான வெஜிடபிள் ஆம்லெட் ரெடி!!!
    மாலையில் குழந்தைகளுக்கு செய்து கொடுக்க அருமையான ஸ்நாக்ஸ் இது. இந்த ரெசிபியை 10 நிமிடத்தில் செய்யலாம். இன்று இந்த ஸ்நாக்ஸ் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ரவை - அரை கப்
    மைதா - அரை கப்
    சர்க்கரை - முக்கால் கப்
    வாழைப்பழம் - 1
    தேங்காய் துருவல் - கால் கப்
    நெய் - தேவையான அளவு

    செய்முறை :

    தண்ணீரில் ரவையை மூன்று மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவும்.

    பின்னர் அதனுடன் சர்க்கரை, மைதா, தேங்காய் துருவல், வாழைப்பழத்தை போட்டு பிசைந்து கொள்ளவும்.

    சர்க்கரை நன்கு கரைந்து கட்டிப்பிடிக்காமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.

    வாணலியில் நெய் ஊற்றி அது சூடானதும் மாவு கலவையை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு இருபுறமும் திருப்பி போட்டு பொரித்தெடுக்கவும்.

    ருசியான ரவை வாழைப்பழம்பணியாரம் தயார்.
    வேப்பம்பூவில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. வாரம் ஒருமுறை வேப்பம்பூவை உணவில் சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. இன்று வேப்பம்பூ வேர்க்கடலை துவையல் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :  

    வேப்பம்பூ -  ஒரு கப்,  
    கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு - தலா 2 டீஸ்பூன்,
    வேர்க்கடலை - கால் கப்,
    கடுகு, பெருங்காயம் - சிறிதளவு,
    காய்ந்த மிளகாய் - 2,
    உப்பு, புளி, எண்ணெய் - தேவையான அளவு.

    செய்முறை:

    கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு, அதில் வேப்பம்பூவைச் சேர்த்து, நன்கு சிவக்க வறுத்து, தனியாக வைத்து கொள்ளவும்.  

    சிறிதளவு எண்ணெயில் கடுகு,  பெருங்காயத் தூள், காய்ந்த மிளகாய் தாளித்து, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு சேர்த்து, சிவக்க வறுத்து இறக்கவும்.

    வறுத்த பொருட்களை மிக்சியில் போட்டு அதனுடன் வேர்க்கடலை, உப்பு, புளி சேர்த்து, தண்ணீர் தெளித்து துவையல் பதத்தில் அரைக்கவும்.

    அருமையான வேப்பம்பூ வேர்க்கடலை துவையல் ரெடி.

    பலன்கள்: சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். எளிதில் செரிமானம் ஆகும்.  வாய்க் கசப்பைப் போக்கும்.
    ×