என் மலர்tooltip icon

    சமையல்

    வெள்ளரிக்காயில் உள்ள நார்ச்சத்து நமது உணவு எளிதில் செரிமானம் ஆகி மலச்சிக்கல், வயிறு கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கிறது. தினமும் வெள்ளரிக்காய் சாப்பிட்டு வருபவர்களுக்கு சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருப்பதோடு சிறுநீரக கற்கள் ஏற்படாமல் காக்கும்.
    தேவையான பொருட்கள் :

    வெள்ளரிக்காய் - 2 (தோல் நீக்கி துருவவும்)  
    காய்ச்சிய பால் - அரை லிட்டர்  
    நெய் - 3 டீஸ்பூன்  
    சர்க்கரை - தேவையான அளவு  
    பாதாம் மிக்ஸ் - 2 டேபிள்ஸ்பூன்  
    அரிசி மாவு - 5 டீஸ்பூன்  
    முந்திரி - தேவையான அளவு  
    ஏலக்காய் தூள் - சிறிதளவு

    செய்முறை:

    அரிசி மாவுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அதனுடன் பாதாம் மிக்ஸை கலந்து கொள்ளவும்.

    வாணலியில் நெய் ஊற்றி முந்திரி பருப்பை தனியாக வறுத்து எடுக்கவும்.

    வாணலியில் மீதமிருக்கும் நெய்யை ஊற்றி வெள்ளரிக்காயை நன்றாக வதக்கிக்கொள்ளவும்.

    பின்னர் சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைத்துக்கொள்ளவும்.

    நன்கு வெந்ததும் அரிசி மாவு கலவை சேர்த்து கிளறவும்.

    பின்னர் ஏலக்காய்த்தூள், சர்க்கரை சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கவும்.

    அதனுடன் காய்ச்சிய பால், முந்திரி பருப்பை சேர்த்து ருசிக்கலாம்.

    சூப்பரான வெள்ளரிக்காய் பாயாசம் ரெடி.
    பாசிப்பருப்பில் உள்ள அதிகப்படியான புரோட்டின் மற்றும் நார்ச்சத்து உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைக்க உதவுகிறது. இது எளிதில் செரிமானமாகக் கூடியது.
    தேவையான பொருட்கள் :

    பாசிப்பருப்பு- அரை கப்  
    தண்ணீர் - 1 கப்  
    மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்  
    மிளகாய்தூள் - அரை டீஸ்பூன்  
    நறுக்கிய சின்னவெங்காயம் - அரை கப்  
    நறுக்கிய தக்காளி - அரை கப்  
    சீரகம் - 1 டீஸ்பூன்
    கருஞ்சீரகம் - அரை டீஸ்பூன்  
    நெய்- 3 ஸ்பூன்  
    உப்பு - தேவைக்கேற்ப  
    பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்  
    கொத்தமல்லி தழை - தேவையான அளவு

    செய்முறை:

    பாசிப்பருப்பை கழுவி சுத்தம் செய்து அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர், மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்துக்கொள்ளவும்.

    மற்றொரு பாத்திரத்தில் நெய் ஊற்றி அது உருகியதும் சீரகம், கருஞ்சீரகம், வெங்காயம் ஆகியவற்றை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

    பிறகு மிளகாய்தூள், பெருங்காயத்தூள், உப்பு, தக்காளி ஆகியவற்றை கொட்டி வதக்கவும்.

    அனைத்தும் நன்கு வதங்கியதும் அதனை வேகவைத்த பாசி பருப்புடன் சேர்த்து கிளறி, கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

    ஆரோக்கிய பலன்: இது செரிமானத்தை சீராக்கும். சருமத்திற்கும், இதயத்திற்கும் நல்லது. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.
    குழந்தைகளுக்கு வித்தியாசமான முறையில் ஆம்லெட் செய்து கொடுக்கவிரும்பினால் உருளைக்கிழங்கு சேர்த்து ஆம்லெட் செய்து கொடுக்கலாம். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முட்டை - 5
    உருளைக்கிழங்கு - 2
    மிளகாய் - 5
    பெ.வெங்காயம் - 1
    வெண்ணெய் - சிறிதளவு
    உப்பு - தேவைக்கு
    கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை - சிறிதளவு

    செய்முறை:

    கொத்தமல்லி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை தோல் நீக்கி மெலிதாக சீவி, எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, உப்பு கலந்து சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    அதனுடன் வெங்காயம், உருளைக்கிழங்கு, கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து கிளறிக்கொள்ளவும்.

    நான்ஸ்டிக் தவாவை அடுப்பில் வைத்து அது சூடானதும் வெண்ணெய் தடவி உருளைக்கிழங்குமுட்டை கலவையை ஊற்றி ஆம்லெட் போல வேகவிடவும்.

    நன்கு வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறலாம்.

    அதனை முக்கோணமாக வெட்டி கொடுத்தால் சிறுவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.
    பூசணிக்காயில் எல்லா விதமான மருத்துவ குணங்களும் சரிவிகிதத்தில் கலந்திருப்பதால் வாயு தொந்தரவு, செரிமான கோளாறு மற்றும் அல்சர் போன்ற பிரச்சனைகள் குணமாகும்.
    தேவையான பொருட்கள்:

    பூசணிக்காய் - 1 துண்டு
    கடலைபருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
    துவரம்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
    சிவப்பு மிளகாய் - 4
    புளி - நெல்லிக்காய் அளவு
    தேங்காய் - அரை மூடி
    எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
    உப்பு - சுவைக்கேற்ப
    மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை

    தாளிக்க

    கடுகு, உளுந்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன்
    கறிவேப்பிலை - ஒரு இணுக்கு

    செய்முறை:

    பூசணிக்காயை தோல் சீவி துருவிக் கொள்ளுங்கள்.

    தேங்காயை பூப்போல துருவி வைக்கவும்.

    பின் துருவிய பூசணி துருவலில் உப்பு சேர்த்து பிசறி ஒரு தட்டில் அமுக்கி தட்டை சாய்த்தார் போல் வைத்தால் நீரெல்லாம் வடிந்துவிடும். இப்படி செய்து சமைப்பதால் சளி பிடிக்காது. (பூசணியில் இருந்து வரும் நீரில் மிளகுதூள் சேர்த்து பழச்சாறாகக் குடிக்கலாம்)

    வாணலியை சூடாக்கி, எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து பின் அதில் கடலைபருப்பு, துவரம்பருப்பு இரண்டையும் மணம் வர வறுத்து, பின் பூசணி துருவல், சிவப்பு மிளகாய், புளி அனைத்தையும் சேர்த்து வதக்கவும்.

    ஆறியதும் துருவிய தேங்காய், உப்பு சேர்த்து அனைத்தையும் ஒன்றாக நைசாக அரைக்கவும்.

    பூசணி துவையல் தயார்.

    மணமும் ருசியும் சத்தும் உள்ளது. நல்லெண்ணெய் ஊற்றி சாதத்தில் கலந்து சாப்பிடலாம். சாம்பார் சாதம், ரசம் சாதத்திற்கும் அருமையான சைட் டிஷ்.
    குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே எளிய முறையில் வித்தியாசமான ஸ்பைசி ஃபிரை ஸ்நாக்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம,
    தேவையான பொருட்கள்

    சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - கால் கப்
    காய்ந்த மிளகாய் - கால் கப்
    வேர்க்கடலை - கால் கப்
    பொட்டுக்கடலை - கால் கப்
    அரிசி மாவு -  1 கப்
    வறுத்த ரவை - கால் கப்
    மைதா - கால் கப்
    உப்பு - 1 டீஸ்பூன்
    எண்ணெய், தண்ணீர் - தேவையான அளவு

    செய்முறை

    வாணலியில் கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், வேர்க்கடலை ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து வைத்துகொள்ளவும்.

    அவை  அனைத்தையும் சூடு தணியும் வரை வைத்திருநது அத்துடன் பொட்டுக்கடலை சேர்த்து மிக்ஸியில் அரை குறையாக அரைத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் அரைத்த பொடியுடன் சீரகத்தூள், அரிசி மாவு, மைதா மற்றும் உப்பு சேர்த்து கிளறவும். பின்னர் எண்ணெய்யை சூடு செய்து மாவுடன் கலந்து கிளற வேண்டும். அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து சப்பாததி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

    அதை சப்பாத்தி போல் தேய்த்து விருப்பமான டிசைன்களில் மாவை துண்டித்து சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

    இப்போது சுவையான மொறுமொறுப்பான ஸ்பைசி ஃபிரை பரிமாறத்தயார்.
    இஞ்சியை துவையலாக அரைத்து சாப்பிட்டு வர வாந்தி, பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் ஆகியவை ஏற்படாது. அசைவ உணவு சாப்பிட்டவுடன் ஒரு துண்டு இஞ்சியை மென்று சாப்பிட்டு வெந்நீர் அருந்தினால் உடனடியாக ஜீரணமாகிவிடும்.
    தேவையான பொருட்கள் :

    சுத்தம் செய்து, நறுக்கிய இஞ்சித் துண்டுகள் - ஒரு கப்,
    பூண்டு - 20 பல்,
    காய்ந்த மிளகாய் - 10 (அல்லது தேவைக்கேற்ப),
    புளி - பெரிய நெல்லிக்காய் அளவு,
    கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன்,
    வெல்லம் - சிறிய துண்டு,
    எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
    உப்பு - தேவைக்கேற்ப.

    செய்முறை:

    வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெயை சூடாக்கி, இஞ்சி, பூண்டு காய்ந்த மிளகாய், புளி, உப்பு சேர்த்து வதக்கவும்.

    பின்னர் அதனை ஆற வைத்து உப்பு, வெல்லம் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும்.

    மீதமுள்ள எண்ணெயை சூடாக்கி... கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அரைத்த விழுதைச் சேர்த்து சுருள வதக்கவும்.

    சத்தான இஞ்சி சட்னி ரெடி.

    இதை பல நாட்கள் வைத்திருந்து பயன்படுத்தலாம்.

    ஜீரண சக்தியைத் தூண்டும். பசியின்மை, மந்தம், வயிற்றுப் பொருமல் தீரும்.
    மாலையில் நேரத்தில் குழந்தைகள் சாப்பிட அருமையான ஸ்நாக்ஸ் இந்த பிஸ்கீமியா. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று அறிந்து கொள்ளலாம்.
    தேவையான பொருட்கள்

    முட்டை கோஸ் - கால்கிலோ
    மைதா மாவு - கால் கிலோ
    பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
    பொடியாக நறுக்கிய ப.மிளகாய் -  2
    வேக வைத்த முட்டை - 3
    கொத்தமல்லி தழை - தேவையான அளவு
    மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்
    உப்பு, எண்ணெய், தண்ணீர் - தேவையான அளவு

    செய்முறை

    ஒரு பாத்திரத்தில் வேக வைத்த முட்டையை துண்டுகளாக நறுக்கி போட்டு அதனுடன் நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், முட்டை கோஸ், மிளகு தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பிசையவும்.

    மற்றொரு பாத்திரத்தில் மைதா மாவை கொட்டி அதோடு சிறிதளவு காய்ச்சிய எண்ணெய் சேர்க்கவும். பின்பு அதில் வெதுவெதுப்பான தண்ணீர் மற்றும் தேவையான உப்பு சேர்த்து சமோசா மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

    சிறிய உருண்டைகளாக மாவை உருட்டி முன்னர் பிசைந்து வைத்திருந்த ஸ்டபிங்கை உள்ளே வைத்து ஓரங்களில் தண்ணீர் விட்டு மடித்துகொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் அதை பொன்னிறத்தில் பொரித்து எடுக்கவும்.

    பின்னர் என்ன? சுவையான ஸ்நாக்ஸ் பிஸ்கீமியா தயார்.
    ரசம் சாதத்துடனும், சூடான சாதத்துடனும் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும் இந்த பருப்பு துவையல். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, தேங்காய் துருவல் - தலா 4 டேபிள்ஸ்பூன்,
    காய்ந்த மிளகாய் - 8 (அல்லது தேவைக்கேற்ப),
    பூண்டு - 2 பல்,
    புளி - கோலி அளவு,
    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
    உப்பு - தேவைக்கேற்ப.

    செய்முறை:

    வெறும் வாணலியை சூடாக்கி... அதில் கடலைப்பருப்பு, துவரம்பருப்பை போட்டு சிவக்க வறுக்கவும்.

    அடுத்து வாணலியில் எண்ணெய் விட்டு தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், புளி, பூண்டு ஆகியவற்றை வறுத்து ஆற வைக்கவும்.

    வைத்தும் ஆறியவுடன் மிக்சியில் போட்டு அதனுடன் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும்.

    ரசம் சாதத்துக்கு இந்த பருப்பு துவையல் சரியான ஜோடி.
    பருப்பு வடை சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வித்தியாசமான சுவையில் வேர்க்கடலையில் வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுலபம்.
    தேவையான பொருட்கள்

    வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலைப் - 2 கப்,
    கடலைப்பருப்பு - அரை கப்,
    வெங்காயம் - 2
    இஞ்சித் துருவல் - 1 டீஸ்பூன்,
    காய்ந்த மிளகாய் - 5,
    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

    செய்முறை

    வேர்க்கடலையை ரவை போல் பொடித்து கொள்ளவும்.

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடலைப்பருப்புடன் காய்ந்த மிளகாய் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

    இதனுடன் வேர்க்கடலைப் பொடி, வெங்காயம், இஞ்சித் துருவல், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும்.

    இதிலிருந்து மாவை எடுத்து சிறு உருண்டைகளாக செய்து உள்ளங்கையில் வைத்து வடைகளாகத் தட்டிக் கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் அதில் வடைகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

    சூப்பரான வேர்க்கடலை பருப்பு வடை ரெடி.
    சிறிது இஞ்சியை வாழைத்தண்டு சாற்றுடன் சேர்த்து குடித்துவர, வயிற்றில் உள்ள கொழுப்பு குறையும். இதில் நார்ச்சத்து அதிகமுள்ளதால் மலச்சிக்கலுக்கு தீர்வாக அமையும்.
    தேவையான பொருட்கள்:

    நார் நீக்கி, பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு - அரை கப்
    சின்ன வெங்காயம் -  50 கிராம்
    கடுகு - அரை டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
    தயிர் - ஒரு கப்
    பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
    சீரகம் - அரை டீஸ்பூன்
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு
    தோல் சீவி துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாழைத்தண்டுடன் தண்ணீர் சேர்த்து வேகவிட்டு எடுக்கவும்.

    வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், பச்சை மிளகாய், இஞ்சி தாளித்து, தயிருடன் கலக்கவும்.

    அதனுடன் வேகவைத்த வாழைத்தண்டு, உப்பு, வெங்காயம், கொத்தமல்லித்தழை விழுது சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

    சூப்பரான வாழைத்தண்டுப் பச்சடி ரெடி.
    விதவிதமான பக்கோடா சாப்பிட்டு இருப்பீங்க. இன்று மாலை நேரத்தில் காபி டீயுடன் சாப்பிட அருமையான காளான் பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    காளான் - 125 கிராம்
    கரம் மசாலா  2 டேபிள் ஸ்பூன்
    வெங்காயம் - 1
    இஞ்சி, பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்
    பச்சை மிளகாய் அரைத்த விழுது - 1 டேபிள் ஸ்பூன்
    சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்
    தண்ணீர் - தேவையான அளவு
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
    கேசரி பவுடர் - சிறிதளவு

    செய்முறை

    காளான்களை துண்டுகளாக நறுக்கிகொள்ளவும்.

    வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    பாத்திரத்தில் பாதியாக நறுக்கிய காளான், வெங்காயம், கரம்மசாலா, இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய் விழுது சோள மாவு, கேசரி பவுடர் ஆகியவற்றை சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து பிசையவும்

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் காளான் கலவையை உதிரியாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    சூடான சுவையான காளான் பக்கோடா தயார்.
    எப்போது ரவையில் கிச்சடி செய்து அலுத்து விட்டதா? இன்று வித்தியாசமான சத்தான சுவையான வேர்க்கடலை-ஜவ்வரிசி கிச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள

    வேர்க்கடலை  - ஒரு கப்,
    ஜவ்வரிசி - அரை கப்,
    உருளைக்கிழங்கு - 1
    பச்சை மிளகாய் - 2  
    எண்ணெய் - 2 டீஸ்பூன்,
    கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, எலுமிச்சைச் சாறு - தலா ஒரு டீஸ்பூன்,
    கொத்தமல்லி - சிறிதளவு,
    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை

    வேர்க்கடலையை வறுத்து, தோல் நீக்கி பொடித்து கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேக வைத்து துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஜவ்வரிசியை அரை மணி நேரம் ஊற விடவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு போட்டுத் தாளித்து, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பை போடவும்.

    அடுத்து அதில் வேக வைத்த உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய் துண்டுகளைப் போட்டு, சிறிது நேரம் வதக்கவும்.

    பிறகு இதில் ஊற வைத்த ஜவ்வரிசி, உப்பு சேர்த்து, 5 நிமிடம் கிளறவும்.

    வேர்க்கடலைப் பொடி சேர்த்துக் கிளறி, கீழே இறக்கும்போது கொத்தமல்லி தூவி எலுமிச்சைச் சாறு சேர்த்துப் பரிமாறவும்.

    சூப்பரான வேர்க்கடலை-
    ஜவ்வரிசி கிச்சடி ரெடி.

    ×