என் மலர்
சமையல்
குழந்தைகளுக்கு முந்திரி பிஸ்கட் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே எளிய முறையில் முந்திரி பிஸ்கட் தயார் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மைதா மாவு - கால் கிலோ
பெ.வெங்காயம் - 2 (நறுக்கவும்)
பச்சை மிளகாய் - 5
பேக்கிங் பவுடர் - சிறிதளவு
நறுக்கிய கொத்தமல்லி தழை - கால் கப்
பூண்டு - 4 பல்
சீரகப்பொடி - அரை டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
சீரகப்பொடியை சிறு தீயில் வறுத்துக்கொள்ளவும்.
கொத்தமல்லி தழை, வெங்காயம், மிளகாய், பூண்டு ஆகியவற்றை மிருதுவாக அரைத்துக்கொள்ளவும்.
அகன்ற பாத்திரத்தில் மைதா மாவை கொட்டி அதனுடன் அரைத்த விழுது, சீரகப்பொடி, பேக்கிங் பவுடர், உப்பு ஆகியவற்றை சேர்த்து கிளறவும்.
அதனுடன் சிறிதளவு சூடான எண்ணெய் ஊற்றி மாவு பதத்துக்கு பிசைந்து கொள்ளவும்.
பின்னர் சப்பாத்தி பதத்திற்கு தேய்த்து முந்திரி பருப்பு வடிவில் சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் துண்டுகளை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
முந்திரி வடிவத்தில் இருப்பதால் அந்த பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
முந்திரி பிஸ்கட் ரெடி.

சப்ஜா விதையில் நார்சத்து அதிகமாக இருப்பதினால் மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுவிக்கும். செரிமான பிரச்சனை, நெஞ்செரிச்சல், குடலில் புண் போன்ற அனைத்திற்கும் தீர்வாக சப்ஜா விதைகள் இருக்கிறது.
தேவையான பொருட்கள் :
தர்பூசணி - 1
சப்ஜா விதை - 2 டீஸ்பூன்
எலுமிச்சைச்சாறு - 1 டீஸ்பூன்
புதினா இலை - சிறிதளவு
தேன் - தேவைக்கு
செய்முறை:
சப்ஜா விதையை வெந்நீரில் அரை மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
தர்பூசணி பழத்தின் விதைகளை நீக்கி, துண்டுகளாக வெட்டி மிக்சியில் அரைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் தர்பூசணி ஜுஸ் உடன் சப்ஜா விதை, தேன், எலுமிச்சை சாறு, புதினா இலை சேர்த்து கலக்கவும்.
அதனை சிறிது நேரம் பிரிட்ஜில் வைத்துவிட்டு சுவைக்கவும்.

குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் சாப்பிட மிகவும் பிடிக்கும். இன்று பேபி கார்ன் வைத்து அருமையான ஸ்நாக்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பேபி கார்ன் - 5 கூம்புகள்
சோள மாவு - அரை கப்
மிளகாய்த்தூள் - சிறிதளவு
கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
எலுமிச்சைச்சாறு - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவைக்கு
செய்முறை:
பேபி கார்னை நீள வாக்கில் சிறிதாக நறுக்கிக்கொள்ளவும்.
அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
கொதிக்க தொடங்கியதும் பேபி கார்னை போட்டு ஓரிரு நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும்.
அவை ஆறியதும் அதனுடன் மிளகாய் தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கிளறவும்.
பின்னர் சோளமாவில் போட்டு புரட்டி எடுக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் பேபி கார்ன்களை ஒவ்வொன்றாக போட்டு பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்.
ருசியான பேபி கார்ன் பிரை ரெடி.
இதனை சிறுவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.

மிகக்குறைவான கலோரி கொண்ட காய் இது. 100 கிராம் காயில் 26 கலோரிகள் கொண்டது. மஞ்சள் பூசணிக்காய் வாயு தொந்தரவு, செரிமான கோளாறை சரி செய்யும் தன்மை கொண்டது.
தேவையான பொருட்கள் :
மஞ்சள் பூசணிக்காய் - அரை கிலோ (நறுக்கியது)
கடலைப் பருப்பு - 100 கிராம்
தேங்காய்த் துருவல் - சிறிதளவு
தூளாக்கிய வெல்லம் - 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - சிறிதளவு
கடுகு - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 3
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவைக்கு
செய்முறை:
குக்கரில் சிறிது தண்ணீர் ஊற்றி கடலைப்பருப்பை வேக வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, மிளகாய், கறிவேப்பிலையை போட்டு தாளிக்கவும்.
பின்னர் வேகவைத்த கடலைப்பருப்புடன் பூசணி துண்டுகளை சேர்த்து வதக்கவும்.
அதனுடன் மஞ்சள் தூள், தேங்காய் துருவல், வெல்லம், சேர்த்து வதக்கி இறக்கி பரிமாறலாம்.
இந்த பூசணிக்கூட்டை சிறுவர்- சிறுமியர் விரும்பி சாப்பிடுவார்கள்.

சர்க்கரைவள்ளிக் கிழங்கில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் வயிறு நிரம்புவது போல் தோன்றுகிறது. உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.
தேவையான பொருட்கள் :
சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 1
புளி - சிறிதளவு
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - சிறிதளவு
கடுகு, பெருங்காயத்தூள் - சிறிதளவு
வெந்தயம் - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவைக்கு
செய்முறை:
சுடுநீரில் புளியை ஊறவைத்துக்கொள்ள வேண்டும்.
சர்க்கரை வள்ளிக்கிழங்கின் தோலை நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கிகொள்ள வேண்டும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, வெந்தயம், பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் சர்க்கரை வள்ளிக்கிழங்கை கொட்டி வதக்கி, போதுமான தண்ணீர் ஊற்றி வேகவிட வேண்டும்.
அதனுடன் புளியை கரைத்து ஊற்றி, சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கிவிடலாம்.
சூப்பரான சர்க்கரைவள்ளிக் கிழங்கு குழம்பு ரெடி.

சர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்கள் அடிக்கடி உணவில் கோதுமையை சேர்த்து கொள்வது நல்லது. அந்த வகையில் இன்று கோதுமை ரவை பிசிபேளாபாத் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கோதுமை ரவை - 100 கிராம்,
துவரம் பருப்பு - 50 கிராம்,
பிசிபேளாபாத் பவுடர் - 2 டேபிள்ஸ்பூன்,
பச்சை பட்டாணி - 30 கிராம்,
கரைத்த புளி - 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
கொத்தமல்லி - சிறிதளவு,
வெங்காயம் - 3
தக்காளி - 3,
நறுக்கிய கேரட், பீன்ஸ், முருங்கைக்காய் - 2 கப்,
உப்பு - தேவையான அளவு.
தாளிக்க:
கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, முந்திரி,
நெய் - தேவையான அளவு.
செய்முறை:
துவரம் பருப்பை நன்றாக கழுவி 30 நிமிடங்கள் ஊறவைத்து பிரஷர் குக்கரில் போட்டு வேக வைத்து இறக்கி வைக்கவும்.
கோதுமை ரவையை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து குக்கரில் போட்டு 2 விசில் போட்டு வேக வைத்து கொள்ளவும்.
கொத்தமல்லி, தக்காளி, காய்கறிகள், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய்விட்டு சூடானதும் தாளிக்கும் பொருட்களைச் சேர்த்து பொன்னிறமாக தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதங்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் பட்டாணி, காய்களை சேர்த்து வேகவைக்கவும்.
காய்கறிகள் நன்றாக வதங்கியதும் புளிக் கரைசல், உப்பு, பிசிபேளாபாத் பவுடர் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டுக் கொதிக்கவிடவும்.
10 நிமிடங்கள் கழித்து வேகவைத்த பருப்பு, கோதுமை ரவை இரண்டையும் சேர்த்துக் 5 நிமிடம் கிளறவும்.
கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.

சேமியாவில் கிச்சடி, உப்புமா,பாயாசம் போன்ற ரெசிபிகளை செய்து சாப்பிட்டு இருப்பீங்க.இன்று வித்தியாசமாக சேமியாவில் கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சேமியா - 200 கிராம்
தேங்காய் துருவல் - அரை கப்
காய்ச்சிய பால் - 2 கப்
அரிசி மாவு - 4 டேபிள்ஸ்பூன்
பெ.வெங்காயம் - 4 (நறுக்கவும்)
பச்சை மிளகாய் - 4 (நறுக்கவும்)
கறிவேப்பிலை, கடுகு, எள் - சிறிதளவு
சீரகம், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
வாணலியில் சேமியாவை லேசாக வறுத்து அரை மணி நேரம் பாலில் ஊற வைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
பிறகு வெங்காயம், மிளகாய் சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.
நன்கு வதங்கியதும் வாணலியை இறக்கிவிட்டு அதனுடன் தேங்காய் துருவலை சேர்த்து கிளறிக்கொள்ளவும்.
பின்னர் பாலில் ஊறிய சேமியா, அரிசி மாவு, எள், சீரகம், உப்பு ஆகியவற்றையும் ஒன்றாக சேர்த்து கிளறி நன்றாக மசித்துக்கொள்ளவும்.
பின்னர் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி இட்லி தட்டில் வேக வைத்து எடுக்கவும்.
சுவையான சேமியா கொழுக்கட்டை தயார்.

நீர்ச்சத்து நிறைந்த உணவு ஆகாரங்களை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது உடல் உஷ்ணத்தை போக்கி ஆரோக்கியத்தை வலுப்படுத்தும். அந்த வகையில் ஜவ்வரிசி கஞ்சியை தயார் செய்வது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
ஜவ்வரிசி - கால் கப்
நாட்டு சர்க்கரை - தேவையான அளவு
காய்ச்சிய பால் - அரை கப்
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு
வெந்நீர் - சிறிதளவு
செய்முறை:
வாணலியில் ஜவ்வரிசியை கொட்டி பொன்னிறமாகும் வரை வறுத்துக்கொள்ளவும்.
பிறகு மிக்சியில் தூளாக்கிக்கொள்ளவும்.
அதனுடன் வெந்நீர் சேர்த்து நன்றாக கரைத்துக்கொள்ளவும்.
காய்ச்சிய பால், நாட்டு சர்க்கரை, ஏலக்காய்தூள் ஆகியவற்றை அதனுடன் சேர்த்து கிளறவும்.
சுவையான ஜவ்வரிசி கஞ்சிரெடி.

கேரட்டில் பாயாசம், அல்வா. ஜூஸ் போன்ற சத்தான உணவு வகைகளை சுவையாக தயார் செய்து அனைவரையும் கவர முடியும். அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது கேரட் டிலைட்.
தேவையான பொருட்கள்
நறுக்கிய கேரட் - அரை கிலோ
சர்க்கரை - அரை கப்
சோள மாவு - கால் கப்
தண்ணீர் - 1 கப்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
அலங்கரிக்க தேவையான பொருட்கள்
கொப்பரை தேங்காய் பொடி - 2 டேபிள் ஸ்பூன்
பொடித்த சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை
குக்கரில் நறுக்கிய கேரட்டை போட்டு சிறிது தண்ணீர் விட்டு 2 விசில் வரும் வரை வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். கேரட் ஆறியவுடன் மிக்சியில் போட்டு விழுதாக அரைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, சோள மாவு கலந்து அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கரைக்க வேண்டும். பின்பு அதை கேரட் விழுதுடன் சேர்த்து கலக்க வேண்டும். அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் கேரட் கலவையை அதில் கொட்டி நன்றாக கிளற வேண்டும்.
அவ்வப்போது சிறிது நெய் சேர்ப்பதுடன் பாத்திரத்தில் ஒட்டி கொள்ளாதவாறும் கிளறி விட வேண்டும்.
பாத்திரத்தில் ஒட்டாமல் கலவை நன்றாக திரண்டு வரும் போது ஒரு தட்டில் நெய் தடவி அதில் பரவலாக கலவையை கொட்டவும். சிறிது நேரத்தில் சூடு ஆறியதும் தேவையான வடிவத்தில் அதை துண்டு போட்டு கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கொப்பரை தேங்காய் பொடி மற்றும் பொடித்த சர்க்கரையை ஒன்றாக கலந்து வெட்டி வைத்துள்ள துண்டுகளின் மீது அதை தூவினால் சுவையான கேரட் டிலைட் தயார்.

ஸ்வீட் கார்ன் மிகவும் சத்து நிறைந்தது என்பதோடு அத்துடன் கேரட், மாங்காய், தேங்காய் இவற்றை சேர்த்து சாப்பிடுவதால் இன்னும் அதிகமான பலன்களைப் பெறலாம்.
தேவையான பொருட்கள்
சோளம் வேகவைத்து உதிர்ந்தது - 1 கப்
கேரட் துருவியது - சிறிதளவு
மாங்காய் துருவியது - சிறிதளவு
தேங்காய் துருவியது - சிறிதளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லி - தேவைக்கேற்ப
கடுகு, பெருங்காயத்தூள், சில்லி ஃப்ளோக்ஸ் - சிறிதளவு
செய்முறை
சோளக்கதிரை வேகவைக்கும் பொழுதே உப்பு சேர்த்து வேகவைக்க வேண்டும்.
பின்பு சோளமணிகளை உதிர்த்து எடுத்துக் கொள்ளலாம்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு வெடித்ததும் கறிவேப்பிலை, கேரட் துருவியதைப் போட்டு வதக்கி (பச்சை வாசம் போவதற்காக) பின்பு வேக வைத்த சோளம், பெருங்காயத்தூள் போட்டு ஓரளவு வதங்கிய பின்பு உப்பு தேவைப்பட்டால் சேர்க்கலாம்.
சில்லி ஃப்ளோக்ஸ் போட்டு ஒரு கிளறு கிளறி மாங்காய்த் துருவல் மற்றும் தேங்காய்த் துருவல் சேர்த்து இறக்கலாம்.
கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து பரிமாறலாம்.
இப்போது ஸ்வீட் கார்ன் கேரட் மாங்காய் சுண்டல் ரெடி.
கோவக்காய் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கற்கள் கரைந்து, சிறுநீரகங்களின் நலம் காக்கப்படும். வாரத்தில் இருமுறை கோவக்காயை சாப்பிட்டு வந்தால் செரிமான கோளாறு, மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.
தேவையான பொருட்கள் :
நறுக்கிய கோவக்காய் - 3 கப்
நறுக்கிய சின்னவெங்காயம் - அரை கப்
நறுக்கிய தக்காளி - அரை கப்
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
மிளகாய்தூள் - அரை டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
எண்ணெய் - 5 டீஸ்பூன்
கறிவேப்பிலை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அகன்ற பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
அதனுடன் வெங்காயத்தை கொட்டி பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தக்காளி, உப்பு போன்றவற்றையும் சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியதும் கோவக்காயை போட்டு வேகவைத்து இறக்கவும்.
சூப்பரான கோவக்காய் பொரியல் ரெடி.
ஆரோக்கிய பலன்: இது எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்டது. கல்லீரல், சிறுநீரகங்களின் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும்.

உடல் உள் உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு வகைகளை வீட்டிலேயே தயாரித்து சாப்பிடுவது அவசியமானது. அந்த வகையில் இன்று திரிபலாவை வீட்டிலேயே தயார் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
நெல்லிக்காய் - கால் கிலோ
கடுக்காய் - கால் கிலோ
தான்றிக்காய் - கால் கிலோ
செய்முறை: நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகியவற்றின் கொட்டைகளை நீக்கிவிட்டு வெயிலில் உலர்த்தவும். நன்கு காய்ந்ததும் நைசாக அரைத்து பயன்படுத்தலாம்.
ஆரோக்கிய பலன்: இவை மூன்றும் பழ வகைளை சேர்ந்தது. நம் முன்னோர்களால் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இரவில் ஒரு டம்ளர் தண்ணீரில் அரை ஸ்பூன் பொடியை போட்டு ஊறவைக்கவும். அதை மறுநாள் காலை வெறும் வயிற்றில் குடிக்கவும். இதில் தாதுக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது. இது இதயத்திற்கு மிகவும் நல்லது. மூளை, வயிறு மற்றும் செல் களின் வளர்ச்சிக்கு ஏற்றது. மலச்சிக்கலையும் சரி செய்யும். ரத்தத்தையும் சுத்தப்படுத்த உதவும். மூன்று மாதங்கள் தொடர்ந்து பருகிவிட்டு பின்னர் ஒரு மாதம் இடைவெளி விட்டு மறுபடியும் பருகி வரலாம்.