search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பாசிப்பருப்பு தட்கா
    X
    பாசிப்பருப்பு தட்கா

    சத்தான பாசிப்பருப்பு தட்கா

    பாசிப்பருப்பில் உள்ள அதிகப்படியான புரோட்டின் மற்றும் நார்ச்சத்து உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைக்க உதவுகிறது. இது எளிதில் செரிமானமாகக் கூடியது.
    தேவையான பொருட்கள் :

    பாசிப்பருப்பு- அரை கப்  
    தண்ணீர் - 1 கப்  
    மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்  
    மிளகாய்தூள் - அரை டீஸ்பூன்  
    நறுக்கிய சின்னவெங்காயம் - அரை கப்  
    நறுக்கிய தக்காளி - அரை கப்  
    சீரகம் - 1 டீஸ்பூன்
    கருஞ்சீரகம் - அரை டீஸ்பூன்  
    நெய்- 3 ஸ்பூன்  
    உப்பு - தேவைக்கேற்ப  
    பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்  
    கொத்தமல்லி தழை - தேவையான அளவு

    செய்முறை:

    பாசிப்பருப்பை கழுவி சுத்தம் செய்து அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர், மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்துக்கொள்ளவும்.

    மற்றொரு பாத்திரத்தில் நெய் ஊற்றி அது உருகியதும் சீரகம், கருஞ்சீரகம், வெங்காயம் ஆகியவற்றை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

    பிறகு மிளகாய்தூள், பெருங்காயத்தூள், உப்பு, தக்காளி ஆகியவற்றை கொட்டி வதக்கவும்.

    அனைத்தும் நன்கு வதங்கியதும் அதனை வேகவைத்த பாசி பருப்புடன் சேர்த்து கிளறி, கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

    ஆரோக்கிய பலன்: இது செரிமானத்தை சீராக்கும். சருமத்திற்கும், இதயத்திற்கும் நல்லது. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.
    Next Story
    ×