என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சிவப்பு அரிசி வேர்க்கடலை கார பணியாரம்
Byமாலை மலர்22 Jun 2021 5:27 AM GMT (Updated: 22 Jun 2021 5:27 AM GMT)
காலையில் சத்தான டிபன் சாப்பிட விரும்பினால் சிவப்பு அரிசி வேர்க்கடலை கார பணியாரம் செய்து சுவைக்கலாம். அதை மாலை நேர சிற்றுண்டியாகவும் சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்
சிவப்பு அரிசி, பச்சரிசி - தலா ஒரு கப்,
வேர்க்கடலை - அரை கப்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1,
பொடியாக நறுக்கிய கேரட், கோஸ் - தலா கால் கப்,
பச்சை மிளகாய் - 2 (நறுக்கிக் கொள்ளவும்),
உப்பு, பெருங்காயத்தூள், நெய் - தேவையான அளவு.
செய்முறை
அரிசி வகைகள், வேர்க்கடலை இரண்டையும் தனித் தனியாக ஊற வைத்து ஒன்றாக சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் காய்கறிகளை போட்டு சற்று வதக்கிய பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி அரைத்து வைத்துள்ள மாவில் கொட்டி அதனுடன் உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
பணியார கல்லை அடுப்பில் வைத்து குழியில் நெய் ஊற்றி, அதில் கலந்த மாவை ஊற்றி, இருபுறமும் வேகவிட்டு பொன்னிறமாக எடுக்கவும்.
சத்தான சுவையான சிவப்பு அரிசி வேர்க்கடலை கார குழிப்பணியாரம் ரெடி.

Next Story
×