என் மலர்tooltip icon

    சமையல்

    வேர்கடலையில் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு சத்தும் அதனுடன் அதிகமான புரத சத்தும் இருக்கின்ற படியால் அவை உடலுக்கு தீங்கு விளைவிப்பதில்லை.
    தேவையான பொருட்கள்  

    வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை - ஒரு கப்,
    வெள்ளை எள் - கால் கப்,
    வறுத்த காய்ந்த மிளகாய் - 2,
    உப்பு, பெருங்காயத்தூள் - தேவையான அளவு.

    செய்முறை

    கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் வெள்ளை எள்ளை போட்டு நன்றாக பொரிந்து வாசனை வரும் வரை வறுத்து பின் ஆறவைக்கவும்.

    அதே போல் காய்ந்த மிளகாயையும் வறுத்த கொள்ளவும்.

    இரண்டும் நன்றாக ஆறியவுடன் மிக்சியில் போட்டு அதனுடன் வறுத்த வேர்க்கடலை, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து பொடித்து கொள்ளவும்.

    இப்போது சூப்பரான வேர்க்கடலை - எள்ளுப் பொடி ரெடி.

    சாதத்துடன் இந்தப் பொடியைக் கலந்து சாப்பிடலாம். தோசை, இட்லிக்கும் தொட்டுக் கொள்ளலாம்.
    உடல் எடையை வேகமாகக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தினமும் முட்டைகோஸ் சூப் குடித்து வந்தால் படிப்படியாக உடல் எடை குறைவதை காணலாம்.
    தேவையான பொருட்கள் :

    முட்டைகோஸ் - 1 கப்
    இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
    மிளகு - 1 ஸ்பூன்
    சீரகம் - 1 ஸ்பூன்
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    முட்டைகோஸை நன்றாக கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, மிளகு, சீரகம், இஞ்சி, பூண்டு விழுது, உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.

    பின் இதனுடன் நறுக்கிய முட்டைகோஸ், தண்ணீர் விட்டு கொதிக்க விட வேண்டும்.

    நன்கு கொதித்து வாசம் வந்ததும், இறக்கி பரிமாறினால் முட்டைகோஸ் சூப் தயார் !!!


    கொண்டக்கடலை தினமும் சிறிது சாப்பிட்டு வந்தால், பழங்கள் மற்றும் காய்கறிகள் மூலம் கிடைக்கும் சத்துக்களைப் பெறலாம். மேலும், எடையைக் குறைக்கவும், இதய நோயை கட்டுப்படுத்தவும் பயன்படுகின்றன..
    தேவையான பொருட்கள்

    கொண்டைக்கடலை - 1 கப்,
    காய்ந்தமிளகாய் - 5,
    பூண்டு - 2 பல்,
    சீரகம் - சிறிதளவு,
    எண்ணெய் - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை

    கொண்டைக்கடலையை 5 மணி நேரம் ஊறவைத்து பூண்டு, காய்ந்தமிளகாயுடன் கிரைண்டரில் தோசை மாவு பதத்திற்கு அரைத்து உப்பு சேர்த்து கலந்துக் கொள்ளவும். மாவை புளிக்க வைக்கத் தேவையில்லை.

    கடாயை அடுப்பில் வைத்து அரை டீஸ்பூன் சூடானதும் சீரகத்தை போட்டு தாளித்து மாவில் சேர்த்து கலந்து கொள்ளவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஊற்றி தோசையாக வார்த்து எண்ணெய் விட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.

    சூப்பரான சத்தான கொண்டைக்கடலை தோசை ரெடி.

    கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும் பச்சை பயறு உதவுகிறது. இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள் அன்றாட உணவில் பச்சை பயிறை சேர்த்து வாருங்கள்..
    தேவையான பொருட்கள்:

    பச்சைப்பயிறு - 1 கப்
    பச்சரிசி - 1/4 கப்
    தேங்காய்த் துருவல் - 1/4 கப்
    வெல்லம் - 1/2 கப்
    ஏலக்காய் - சிறிதளவு
    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை:

    அரிசி, பச்சைப்பயிறு இரண்டையும் 2 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு தனித்தனியாக அரைத்து கலந்துக் கொள்ளவும்.

    வெல்லத்தை சிறிதளவு தண்ணிர் விட்டு கெட்டியான பாகு காய்ச்சி வடிக்கட்டி மாவுடன் சேர்த்து தோசைமாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.

    அடுத்து அதில் பொடித்த ஏலக்காய், தேங்காய்த் துருவல் போட்டு நன்கு கலக்கவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு கரண்டி மாவு விட்டு தோசையாக வார்க்கவும். இருபுறமும் நெய் விட்டு வெந்தவுடன் எடுத்து பரிமாறவும்.

    சுவையான பச்சைப்பயிறு இனிப்பு தோசை தயார்.

    காலையில் சத்தான உணவை சாப்பிடுவது அன்றைய தினம் முழுவதும் புத்துணர்ச்சியுடன் வைக்க உதவும். இன்று குதிரைவாலி அரிசி, காய்கறிகள் சேர்த்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    குதிரைவாலி அரிசி- கால் கப்
    நறுக்கிய கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு - 1 கப்,
    பச்சை பட்டாணி - கால் கப்
    வெங்காயம் - 1,
    தக்காளி - 1
    இஞ்சி - சிறிய துண்டு
    பூண்டு - 6 பல்
    புதினா, கொத்தமல்லி - கைப்பிடி அளவு
    வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
    சீரகம், மிளகுப் பொடி - தலா 1 டீஸ்பூன்
    பிரியாணி இலை - 1
    தேங்காய்ப்பால் - 1 கப்
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    குதிரைவாலி அரிசியை நன்றாக கழுவி அரை மணிநேரம் ஊறவைக்கவும்.

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இஞ்சி பூண்டு நன்றாக தட்டி வைக்கவும்.

    குக்கரில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், பிரியாணி இலை, சீரகம் போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டை போட்டு வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.

    அடுத்து அதில் நறுக்கிய காய்கறிகள், பட்டாணி சேர்த்து வதக்கவும்.

    அடுத்து சுத்தம் செய்த குதிரைவாலியைச் சேர்க்கவும்.

    ஐந்து கப் நீர் சேர்த்து குக்கரை மூடி 4 விசில் வந்ததும் சிம்மில் 10 நிமிடம் வைத்து இறக்கிவிடவும்.

    பிரஷர் அடங்கியதும் மூடியைத் திறந்து, உப்பு, மிளகுத் தூள், தேங்காய்ப்பால் சேர்த்துக் கிளறவும்.

    இப்போது சூப்பரான குதிரைவாலி காய்கறி சூப் ரெடி.

    குதிரைவாலியில் கோதுமையில் இருப்பதை விட ஆறு மடங்கு நார்ச்சத்து உள்ளது. குதிரைவாலியை தினமும் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.
    தேவையான பொருட்கள் :

    குதிரைவாலி அரிசி - ஒரு கப்
    காய்கறிக் கலவை (கேரட், பட்டாணி, உருளைக்கிழங்கு, பீன்ஸ்) - 1 1/2 கப்
    வெங்காயம் - ஒன்று
    தக்காளி - ஒன்று
    பச்சை மிளகாய் - 4
    இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிதளவு
    நெய் - ஒரு டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    தாளிக்க:
     
    பட்டை, லவங்கம் - 2
    பிரியாணி இலை - 2
    மராத்தி மொக்கு - ஒன்று
    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை:

    தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    குதிரைவாலி அரிசியை நன்றாகக் கழுவி, அரை மணிநேரம் ஊறவைக்கவும்.

    குக்கரில் எண்ணெய்விட்டு சூடானதும் தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களை போட்டு தாளித்த பின்னர், பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனவுடன் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

    அடுத்து அதில் காய்கறிகள், உப்பு சேர்த்து வதக்கவும்.

    அத்துடன் ஊறவைத்த அரிசி, 2 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி ஒரு விசில் விட்டு இறக்கவும்.

    குக்கரில் ஆவி அடங்கிய பிறகு மூடியைத் திறந்து, கொத்தமல்லி, நெய்விட்டுக் கிளறிச் சூடாகப் பரிமாறவும்.

    இப்போது சூப்பரான குதிரைவாலி கிச்சடி ரெடி.
    பொட்டுக்கடலை உருண்டையை கடையில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று இந்த ரெசிபியை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்  :

    பொட்டுக்கடலை - 1 கப்,
    பொடித்த வெல்லம் - ¾ கப்,
    ஏலப்பொடி, சுக்குப் பொடி- 1 ஸ்பூன்.

    செய்முறை:


    முதலில் பொட்டுக்கடலையை (உடைத்த கடலை) ஒரு பாத்திரத்தில் போடவும்.

    வேறு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு சிறிது நீர் விட்டு கரைத்து வடிகட்டி பாகு காய்ச்சவும்.

    பாகில் ஏலம், சுக்குப் பொடி சேர்த்து நன்கு உருட்டுப் பதம் வரும் வரை காய்ச்சவும்.

    பாகு காய்ந்ததும் பொட்டுக் கடலையில் ஊற்றி கரண்டியால் கலந்து விடவும். கையில் அரிசி மாவு அல்லது நெய் தொட்டுக் கொண்டு உருட்டவும்.

    இப்போது சத்தான சுவையான பொட்டுக்கடலை உருண்டை ரெடி.

    இருமல், சளி தொல்லை, தொண்டை வலியால் அவதிப்படுபவர்கள் தினமும் இந்த கற்பூரவல்லி இஞ்சி டீயை பருகலாம். இன்று இந்த டீ செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க...
    தேவையான பொருட்கள் :

    டீத்தூள் - ஒரு டீஸ்பூன்,
    கற்பூரவல்லி  - 5 இலை,
    இஞ்சி - சிறிய துண்டு
    எலுமிச்சை சாறு - தேவையான அளவு
    தண்ணீர் - 2 கப்.
    தேன் - 1 டீஸ்பூன்.

    செய்முறை :

    கற்பூரவல்லி இலையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இஞ்சியை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

    தண்ணீர் நன்றாக கொதிக்கும் போது டீத்தூளுடன், கற்பூரவல்லி இலை, இஞ்சி துருவல் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும்.

    நன்றாக கொதித்து டீ ரெடியானதும் இறக்கி வடிகட்டி அதனுடன் தேன், எலுமிச்சை சாறு சேர்த்துப் பருகவும்.

    இப்போது கற்பூரவல்லி இஞ்சி டீ ரெடி.

    வரகரிசி ரத்தத்தை தூய்மைப்படுத்துவதோடு, ரத்த ஓட்டத்தை சீராக்கும். அரிசி, கோதுமையைக் காட்டிலும் வரகில் நார்ச்சத்து மிகவும் அதிகம். மாவுச்சத்தும் குறைந்து இருப்பதால், உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.
    தேவையான பொருட்கள் :

    வரகரிசி - 1 கப்
    வெங்காயம் - 2
    ப.மிளகாய் - 2
    கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு - தலா 1 தேக்கரண்டி
    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு
    பெருங்காயத்தூள் - சிறிதளவு

    செய்முறை :

    வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வரகரிசியை நன்றாக சுத்தம் செய்து கழுவி வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு போட்டு நன்றாக வறுக்க வேண்டும்.

    அடுத்து அதில் பெருங்காயத்தூள், வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.

    அடுத்து அதில் 3 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.

    தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் வரகரிசியை சேர்த்து கிளற வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைக்க வேண்டும்.

    அரிசி நன்றாக வெந்ததும் வரும் போது உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாக கிளறி இறக்கி பரிமாற வேண்டும்.

    சத்தான வரகரிசி உப்புமா ரெடி.

    தேங்காய் பால் அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் பாஸ்பரஸ் சத்து அதிகம் சேர்ந்து எலும்புருக்கி நோய் போன்றவவை ஏற்படாமல் தடுக்கிறது.
    தேவையான பொருட்கள் :

    தேங்காய்ப்பால் - 1 கப்
    கடலை மாவு - 1 டீஸ்பூன்
    பொடித்த வேர்க்கடலை - 1 டீஸ்பூன்
    வெள்ளரிக்காய் - 1 (நறுக்கவும்)
    தக்காளி - 1 (நறுக்கவும்)
    கொத்தமல்லிதழை - சிறிதளவு
    பச்சை மிளகாய் - 1
    எண்ணெய் - சிறிதளவு
    சீரகம் - கால் டீஸ்பூன்
    உப்பு, மிளகு தூள் - தேவைக்கு

    செய்முறை:

    வெள்ளரிக்காய், தக்காளி, கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தேங்காய்ப்பால், கடலை மாவு இரண்டையும் தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்துக்கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் ப.மிளகாய், சீரகம் போட்டு தாளித்த பின்னர், வெள்ளரிக்காய், தக்காளியை போட்டு வதக்கவும்.

    நன்கு வதங்கியதும் மாவு கரைசலை ஊற்றி கிளறவும்.

    அடுத்து அதில் வேர்க்கடலை, மிளகுதூள், உப்பு, கொத்தமல்லித் தழை ஆகியவற்றை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

    ருசியான தேங்காய்ப்பால் வேர்க்கடலை சூப் தயார்.

    காலையில் சத்தான உணவு சாப்பிட விரும்புபவர்கள் பிரெட், பயறு வகைகள், காய்கறி சேர்த்து சூப்பரான சாலட் செய்து சாப்பிடலாம். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை பிரெட் துண்டுகள் - 6,
    கேரட், வெள்ளரிக்காய், தக்காளி - தலா 1,
    முளைக் கட்டிய பாசிப்பயறு, முளைக்கட்டிய கொண்டைக் கடலை - தலா 50 கிராம்,
    எலுமிச்சம்பழம் - 1,
    கொத்தமல்லி - சிறிதளவு,
    மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கேரட், வெள்ளரி, தக்காளியை வட்டமாக நறுக்கவும்.

    கோதுமை பிரெட்டை சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு பெரிய பிளேட்டில் வைத்து நடுநடுவே வெள்ளரி, தக்காளி, கேரட், முளைகட்டிய பயறு, கொண்டைக் கடலை, உப்பு, மிளகுத்தூள், நறுக்கிய கொத்தமல்லி சேர்க்கவும்.

    எலுமிச்சைச் சாறு பிழிந்து பரவலாக விடவும்.

    காலை நேர பரபரப்பில் ஈஸியாக தயாரிக்கலாம். முழுமையான ஊட்டச்சத்துடன் கூடிய பிரேக்ஃ பாஸ்ட்டாக இருக்கும்.

    டயட்டில் இருப்பர்கள் காலையில் எப்போதும் ஓட்ஸ் சாப்பிட்டு போர் அடித்திருக்கும். இவர்கள் வாரம் ஒருமுறை பயறு கஞ்சியை எடுத்து வரலாம். இந்த பயறு கஞ்சியானது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது.
    தேவையான பொருட்கள்:

    அரிசி - 1 கப்
    பச்சை பயறு - 3/4 கப்
    வெந்தயம் - 1 டீஸ்பூன்
    பூண்டு - 1 பல்
    சின்ன வெங்காயம் - 5
    துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    தண்ணீர் - 8 கப்
    எண்ணெய் - 1 டீஸ்பூன்

    செய்முறை:

    சின்ன வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெந்தயத்தைப் போட்டு வறுக்க வேண்டும்.

    பின்னர் அதில் பூண்டு, வெங்காயம் சேர்த்து சிறிது நேரம் வதக்கிய பின்னர் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும்.

    நீரானது நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் கழுவி வைத்துள்ள அரிசி மற்றும் பச்சை பயறு சேர்த்து மூடி வைத்து, அரிசி மற்றும் பயறு வேகும் வரை அடுப்பில் வைத்து, வேண்டுமானால் இன்னும் சிறிது நீர் சேர்த்து நன்கு வேக வைக்க வேண்டும்.

    அரிசி மற்றும் பயறு நன்கு வெந்ததும், அதில் உப்பு மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து கிளறி பரிமாறினால், பச்சை பயறு கஞ்சி ரெடி!!!

    ×