என் மலர்tooltip icon

    சமையல்

    வரகரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை தினமும் அல்லது இரு நாளைக்கு ஒரு முறையாவது சாப்பிடும் நபர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு வேகமாக குறைந்து நீரிழிவு நோய் கட்டுக்குள் வருகிறது.
    தேவையான பொருட்கள் :

    கேரட் - 2
    உதிரியாக வடித்த வரகு அரிசி சாதம் - 1 கப்
    வெங்காயம் - 1
    கடுகு - அரை ஸ்பூன்
    எண்ணெய் - 2 ஸ்பூன்
    பச்சை மிளகாய் - 3
    முந்திரி - தேவையான அளவு
    கறிவேப்பிலை - சிறிதளவு (வெட்டியது)
    கொத்தமல்லி - சிறிதளவு

    செய்முறை :

    கேரட்டை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும்.

    வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் கேரட் துருவல், உப்பு சேர்த்து வதக்கி மூடி வைத்து வேக விடவும்.

    அடுத்து அதில் உதிரியாக வடித்த வரகு அரிசி சாதத்தை போட்டு கிளறி அடுப்பை மிதமான தீயில் வைத்து மூடி போட்டு 5 நிமிடங்கள் வைத்திருந்து கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான வரகு அரிசி கேரட் சாதம் ரெடி.
    கறிவேப்பிலையில் கெட்ட கொழுப்புக்களை எரிக்கும் பொருள் அதிகம் உள்ளது. கறிவேப்பிலை செரிமான பிரச்சனைகளைப் போக்கும். உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பைக் கரைக்கும்.
    தேவையான பொருட்கள்

    கறிவேப்பிலை - 1 கைப்பிடி,
    கொத்தமல்லி - சிறிது,
    புதினா - 1 கைப்பிடி,
    இஞ்சி - ஒரு சிறிய துண்டு,
    நாட்டு சர்க்கரை அல்லது பனங்கல்கண்டு -  1 மேசைக்கரண்டி,
    தண்ணீர் - 1/2 கப்,
    எலுமிச்சைச் சாறு - 2 மேசைக்கரண்டி.

    செய்முறை

    கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, இஞ்சி மற்றும் நாட்டு சர்க்கரை அல்லது பனங்கல்கண்டு சிறிது தண்ணீர் .சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.

    நன்கு அரைத்தவுடன் மீதம் இருக்கும் தண்ணீர் சேர்த்து வடிகட்டி எலுமிச்சைச்சாறு சேர்க்கவும்.

    தேவைப்பட்டால் ஐஸ் கட்டிகள் சேர்த்து ஜில்லென்று பரிமாறவும்.

    சூப்பரான கறிவேப்பிலை புதினா ஜூஸ் ரெடி.
    கேழ்வரகில் கால்சியம் சக்தி அதிகம் உள்ளது. வாரம் ஒரு முறை அல்லது இருமுறை கேழ்வரகு உணவுகளை சாப்பிட்டு வருவது, பற்கள் மற்றும் எலும்புகளின் உறுதித்தன்மையை அதிகரிக்கும்.
    தேவையான பொருட்கள்
     
    கேழ்வரகு - 50 கிராம்
    பாதாம், முந்திரி, திராட்சை (ஊற வைத்தது) - தலா 4
    பேரீச்சை - 5
    காய்ச்சியப் பால் - 200 மி.கி
    ஏலப்பொடி - 1 தேக்கரண்டி
    சர்க்கரை - சுவைக்கேற்ப

    செய்முறை:

    முதல்நாள் இரவு ஊற வைத்த கேழ்வரகை நீர் விட்டு அரைத்து வடிகட்டிக் கொள்ளவும். சக்கையை மீண்டும் சிறிது நீர் விட்டு அரைத்து வடிக்கட்டவும்.

    ஊற வைத்து தோல் நீக்கிய பாதாம், முந்திரி, திராட்சை, பேரீச்சையை சிறிது பால் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

    இரண்டு கேழ்வரகு பாலையும் ஒன்றாக சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் காய்ச்சவும்.

    அத்துடன் அரைத்த பாதாம் விழுது, மீதம் உள்ள பால், ஏலப்பொடி சேர்த்து மேலும் சிறிது நேரம் காய்ச்சி இறக்கவும்.

    சத்தான கேழ்வரகு மில்க் ஷேக் தயார்.

    (விருப்பப்பட்டால் பிரிட்ஜில் வைத்து குளிர வைத்தும் அருந்தலாம்)
    காலையில் இட்லி சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு கோலி இட்லி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இதை செய்வது மிகவும் சுபலம். சத்தானதும் கூட.
    தேவையான பொருட்கள்

    அரிசி மாவு - 1 கப்
    தண்ணீர் - 1 கப்
    நெய் - 1 தேக்கரண்டி
    உப்பு - அரை தேக்கரண்டி

    தாளிக்க

    கடுகு - அரை தேக்கரண்டி
    வெள்ளை எள் - 1 தேக்கரண்டி
    கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
    உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
    கறிவேப்பிலை - தேவையான அளவு
    கொத்தமல்லி - தேவையான அளவு
    பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
    ப.மிளகாய் - 1
    காய்ந்த மிளகாய் 2
    இஞ்சி - சிறிய துண்டு
    எண்ணெய் - 1 தேக்கரண்டி

    செய்முறை

    ப.மிளகாய், கொத்தமல்லி, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் 1 கப் தண்ணீர் ஊற்றி அதில் உப்பு, நெய் சேர்த்து கொதிக்க விடவும்.

    தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் அரிசி மாவை போட்டு கைவிடாமல் நன்றாக கலக்கவும். தண்ணீர் எல்லாம் வற்றியவுடன் அடுப்பை மிதமான தீயில் வைத்து மூடி போட்டு 5 நிமிடம் வேக விடவும்.

    பின்னர் மாவை நன்றாக பிசைந்து சிறிய உருண்டைகளாக ( கோலி குண்டு வடிவில்) பிடித்து வைக்கவும்.

    பிடித்து வைத்த உருண்டைகளை இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் காய்ந்த மிளகாய், கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, எள், பெருங்காயம், இஞ்சி, ப.மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் அதில் வேக வைத்த உருண்டைகளை போட்டு நன்றாக கிளறி விடவும்.

    பின்னர் 5 நிமிடம் அடுப்பை மிதமான தீயில் வைத்து மூடி போட்டு வேக விடவும்.

    கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான கோலி இட்லி ரெடி.
    தினசரி கால்சியம் சத்தை பெற வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் பாலுக்கு பதிலாக சோயா பீன்ஸினை சாப்பிடலாம். எலும்பு முறிவு ஏற்பட்ட ஒருவர் தொடர்ந்து சோயா பீன்ஸினை சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமாகும்.
    தேவையான பொருட்கள் :

    சோயா பீன்ஸ் - அரை கப்,
    மஞ்சள் தூள் - சிறிதளவு,
    கேரட் - 1,
    மிளகுதூள் - சிறிதளவு,
    தக்காளி - சிறிதளவு,
    உப்பு - தேவைக்கு,
    சிறிய வெங்காயம் - ஒரு கைப்பிடி,
    கிராம்பு - 2,
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
    பட்டை, பூண்டு, தண்ணீர் - தேவைக்கு

    செய்முறை :

    சோயா பீன்சை தண்ணீரில் 2 மணிநேரம் ஊறவையுங்கள்.

    தக்காளி, வெங்காயம், கேரட், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ள வேண்டும்.

    குக்கரில் நறுக்கிய தக்காளி, கேரட், வெங்காயம், பூண்டு போன்றவற்றை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அதனுடன் பட்டை, கிராம்பு, மஞ்சள்தூள், மிளகுதூள் கலந்து 2 விசில் வைக்க வேண்டும்.

    பின்னர் சோயா பீன்சையும் குக்கரில் சேர்த்து வேகவிடுங்கள்.

    வெந்ததும் இறக்கி நன்றாக மசித்து வடிகட்டி மீண்டும் அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும்.

    பின்பு போதுமான உப்பு சேர்த்து, கொத்தமல்லித்தழை தூவி பரிமாற வேண்டும்.

    காரத்திற்கு மிளகுதூள் கலந்து சூடாக பருகலாம்.

    சூப்பை கொதிக்கவைத்தால் அதில் இருக்கும் சத்துக்கள் வீணாகிவிடும். அதனால் பாத்திரத்தை மூடி வைத்து தயார் செய்யவேண்டும் அல்லது குக்கரை பயன் படுத்தலாம்.
    காய்கறிகளை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு இவ்வாறு செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சரிசி - 1
    பாசிப்பருப்பு - அரை கப்
    பட்டாணி - 50 கிராம்
    கேரட் - 50 கிராம்
    பீன்ஸ் - 50 கிராம்
    வெங்காயம் - 2
    தக்காளி - 2
    இஞ்சி - 1 துண்டு
    பெருங்காய தூள் - 1 டீஸ்பூன்
    நெய் - 1 ஸ்பூன்
    சீரகம் - 1/2 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    தாளிக்க :

    மிளகு, சீரகம் - தலா 2 டீஸ்பூன்,
    பட்டை, லவங்கம், ஏலக்காய் தலா - 2.
    முந்திரி - 10.
    கறிவேப்பிலை - சிறிதளவு,
    நெய், எண்ணெய் தலா - 2 டேபிள் ஸ்பூன்,
    உப்பு - தேவைக்கு.

    செய்முறை :

    தக்காளி, வெங்காயம், இஞ்சி, காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அரிசி, பருப்பு இரண்டையும் ஒன்றாகக் கலந்து மூன்றரை கப் தண்ணீர், நெய், பெருங்காயம், சீரகம் சேர்த்து வேக வைக்கவும்.

    முக்கால் பதம் வெந்ததும் உப்பை சேர்த்து பதமாக வெந்ததும் இறக்குங்கள்.

    வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்னொய், நெய்யைக் காயவைத்து தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களையும், இஞ்சியையும் போட்டு தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கேரட், பீன்ஸ், வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து வேகும்வரை வதக்கவும்.

    கடைசியாக தக்காளி சேர்த்து சிறிது கிளறி பொங்கலைக் கொட்டி நன்றாகக் கிளறி இறக்குங்கள்.

    இப்போது சூடான சுவையான வெஜிடபிள் பொங்கல் தயார் !!!
    வயிற்றில் தேங்கியுள்ள அதிகப்படியான கொழுப்பை கரைத்து வெளியேற்ற, சௌ சௌ உதவி செய்யும். சௌ சௌவில் உள்ள கால்சியம் சத்து, குழந்தைகளின் உடல் வளர்ச்சிகளை ஊக்கப்படுத்தி, அவர்கள் எலும்பு வளர்ச்சியை வலுவாக்கும்.
    தேவையான பொருட்கள்:

    சௌ சொள - 2
    துவரம் பருப்பு - 1 கப்
    மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
    உப்பு - தேவையான அளவு
    துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
    சீரகம் - 1 டீஸ்பூன்
    கடுகு - 1 டீஸ்பூன்
    உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
    பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
    கறிவேப்பிலை - சிறிது
    பச்சை மிளகாய் - 1
    எண்ணெய் - 1 டீஸ்பூன்

    செய்முறை:

    முதலில் மிக்ஸியில் தேங்காய் மற்றும் சீரகம் சேர்த்து மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

    சௌ சௌவை தோல் நீக்கி பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    துவரம் பருப்பு வேகவைத்து மசித்து கொள்ளவும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் அதில் வெங்காயம் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து வதக்க வேண்டும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் அதில் சௌ சௌ, மஞ்சள் தூள் சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும்.

    அடுத்து அதில் மசித்த பருப்பை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து, நன்கு கொதிக்க விட வேண்டும்.

    இறுதியில் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து கிளறி, பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், சௌ சௌ கூட்டு ரெடி!!!
    ரமலான் மாதத்தில் முஸ்லீம்கள் நாள் முழுவதும் நோன்பிருந்த பின், நோன்புக் கஞ்சி குடிப்பது செரிமான மண்டலம் நன்கு செயல்படுவதற்கு உறுதுணையாக இருக்கும்.
    தேவையான பொருட்கள் :

    பச்சரிசி - 100 கிராம்
    பயத்தம் பருப்பு - 25 கிராம்
    சின்ன வெங்காயம் - 100 கிராம்
    கேரட் - 1
    தக்காளி - 1
    வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
    சீரகம் - 1/2 டீஸ்பூன்
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 2
    பிரியாணி இலை - 1
    கொத்தமல்லி - சிறிது
    புதினா - சிறிது
    தேங்காய் பால் - அரை கப்
    எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
    நெய் - 1 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    கேரட், சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பச்சை மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    அரிசியை நன்கு நீரில் ஊற வைத்து, கழுவிக் கொள்ள வேண்டும்.

    மிக்சியில் சீரகம், வெந்தயத்தை போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.

    குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 650 மில்லி லிட்டர் தண்ணீர் ஊற்றி, அதில் பயத்தம் பருப்பு, அரிசியைப் போட்டு நன்கு 10 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

    தண்ணீரானது நன்கு கொதித்ததும், நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, கேரட், புதினா, பிரியாணி இலை, அரைத்து வைத்துள்ள பொடி மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விட்டு, தீயை குறைவில் வைத்து, குக்கரை மூடி 15 நிமிடம் அடுப்பில் வைத்து இறக்க வேண்டும்.

    கலவையானது நன்கு வெந்ததும், அதனை பருப்பு மத்து கொண்டு நன்கு மசித்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும், எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானதும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, தேங்காய் பாலை ஊற்றி நன்கு நுரை வரும் வரை கொதிக்க விட்டு, அதை மசித்து வைத்துள்ள கலவையை ஊற்றி, ஒரு கொதி விட்டு இறக்கவும்.

    இப்போது சுவையான நோன்பு கஞ்சி ரெடி.
    இரத்த அழுத்த பிரச்சனை தீர அடிக்கடி உணவில் துவரம் பருப்பை சேர்த்து கொள்வது அவசியம். துவரம் பருப்பில் உள்ள வைட்டமின் சி சத்தானது, உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கிறது.
    தேவையான பொருட்கள் :

    துவரம் பருப்பு     - 50 கிராம்
    கடலை பருப்பு     - 50 கிராம்
    தேங்காய் துண்டுகள் - 3 பத்தை
    காய்ந்த மிளகாய் - 4
    பெருங்காயம்      - 1 சிறிய துண்டு
    எண்ணெய் - அரை தேக்கரண்டி
    உப்பு - சுவைக்கு

    செய்முறை :

    கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்த கடலை பருப்பு, துவரம் பருப்பு, பெருங்காயம், தேங்காய் துண்டுகளை போட்டு நன்றாக வதக்கவும்.

    அடுத்து காய்ந்த மிளகாயை போட்டு வறுத்து கொள்ளவும்.

    வறுத்த பொருட்களை ஆறவைத்து கொஞ்சம் தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாக அரைத்தால் பருப்பு துவையல் தயார்!!!

    இது கார குழம்பு வகைகளுக்கு ஏற்றதாக இருக்கும்...
    தர்பூசணி பழங்களில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கல் பிரச்சனை தீருகிறது. தர்பூசணியின் வெள்ளை பகுதியை சாப்பிடுவதால் ஆண்மை குறைபாடுகளை போக்க முடியும்.
    தேவையான பொருட்கள் :

    நறுக்கிய தர்பூசணி – 2 கப்
    இஞ்சி பூண்டு விழுது – ½ டேபிள்ஸ்பூன்
    புதினா – சிறிதளவு
    சில்லி ஃப்ளேக்ஸ் – ¼ டேபிள்ஸ்பூன்
    ஆலிவ் எண்ணெய் – தேவைக்கு

    செய்முறை :

    கடாயில் சிறிது ஆலிவ் எண்ணெய் விட்டு இஞ்சி பூண்டு விழுதுடன் சில்லி ஃப்ளேக்ஸ் சேர்த்து வதக்கவும்.

    தர்பூசணி மற்றும் புதினாவை மிக்ஸியில் நைசாக அரைத்து, அந்த விழுதை இஞ்சி பூண்டு விழுதுடன் சேர்க்கவும்.

    கலவை நன்றாக கொதித்து கெட்டியாகும்வரை அடுப்பை சிம்மில் வைக்கவும்.

    அடுப்பை அணைத்து சூப் பரிமாறும் போது நறுக்கிய புதினா தூவி பரிமாறவும்.
    கேரள மாநிலத்தில் ராமசேரி இட்லி மிகவும் பிரபலமானது. இத்துடன் சாப்பிடுவதற்கு கொடுக்கப்படும் இட்லிப்பொடி பிரத்யேக சுவை கொண்டது. அதன் செய்முறை இதே..
    தேவையான பொருட்கள்

    பச்சரிசி - 1 கப்
    உளுத்தம் பருப்பு - கால் கப்
    மிளகு - அரை தேக்கரண்டி
    சீரகம் - அரை தேக்கரண்டி
    காய்ந்த மிளகாய் - 10
    பெருங்காயம் - அரை தேக்கரண்டி
    கல் உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சிறு தீயில் பச்சரிசியை சிவக்க வறுக்கவும். அதை ஒரு தட்டில் கொட்டி ஆறவைக்கவும்.

    அரிசி வறுத்த அதே கடாயில் உளுத்தம் பருப்பை போட்டு சிவக்க வறுத்து ஆற வைக்கவும்.

    மீண்டும் கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாய் மிளகு, சீரகம் போன்றவற்றை போட்டு வறுக்கவும்.

    அதில் பெருங்காயத்தை போட்டு சில நொடிகள் வறுத்தெடுக்கவும்.

    வறுத்த பொருட்களை ஆறவைத்து கல் உப்பு சேர்த்து மிக்சியில் கரகரப்பாக பொடியாக அரைத்து கொள்ளவும்.

    இட்லி அல்லது தோசையுடன் இந்த பொடியை தேங்காய் எண்ணெய் கலந்து சாப்பிடலாம்.
    அதிமதுரம் ஊறவைக்கப்பட்ட நீரை அவ்வப்போது அருந்தி வந்தால் சிறுநீர்ப்பையில் இருக்கும் கிருமிகள் அழிந்து, புண்கள் ஆறும். சிறுநீரகங்களில் கற்கள் உருவாவதையும் தடுக்கும்.
    தேவையான பொருட்கள் :

    அதிமதுரம் தூள் - 1 டீஸ்பூன்
    தண்ணீர் - 1 டம்ளர்
    நாட்டு சர்க்கரை - தேவைக்கு

    செய்முறை:

    அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட வேண்டும்.

    அதனுள் அதிமதுரம் தூளை தூவி இரண்டு நிமிடங்கள் கொதிக்கவிட வேண்டும்.

    கொதிக்க தொடங்கியதும் நாட்டு சர்க்கரையை கொட்ட வேண்டும்.

    அது கரைந்ததும் இறக்கி வடிகட்டி பருகலாம்.

    இது தொண்டை வலி மற்றும் புண்ணை ஆற்ற உதவும். சளியையும் போக்கும்.
    ×