search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    சோயா பீன்ஸ் சூப்
    X
    சோயா பீன்ஸ் சூப்

    கால்சியம் சத்து நிறைந்த சோயா பீன்ஸ் சூப்

    தினசரி கால்சியம் சத்தை பெற வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் பாலுக்கு பதிலாக சோயா பீன்ஸினை சாப்பிடலாம். எலும்பு முறிவு ஏற்பட்ட ஒருவர் தொடர்ந்து சோயா பீன்ஸினை சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமாகும்.
    தேவையான பொருட்கள் :

    சோயா பீன்ஸ் - அரை கப்,
    மஞ்சள் தூள் - சிறிதளவு,
    கேரட் - 1,
    மிளகுதூள் - சிறிதளவு,
    தக்காளி - சிறிதளவு,
    உப்பு - தேவைக்கு,
    சிறிய வெங்காயம் - ஒரு கைப்பிடி,
    கிராம்பு - 2,
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
    பட்டை, பூண்டு, தண்ணீர் - தேவைக்கு

    செய்முறை :

    சோயா பீன்சை தண்ணீரில் 2 மணிநேரம் ஊறவையுங்கள்.

    தக்காளி, வெங்காயம், கேரட், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ள வேண்டும்.

    குக்கரில் நறுக்கிய தக்காளி, கேரட், வெங்காயம், பூண்டு போன்றவற்றை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அதனுடன் பட்டை, கிராம்பு, மஞ்சள்தூள், மிளகுதூள் கலந்து 2 விசில் வைக்க வேண்டும்.

    பின்னர் சோயா பீன்சையும் குக்கரில் சேர்த்து வேகவிடுங்கள்.

    வெந்ததும் இறக்கி நன்றாக மசித்து வடிகட்டி மீண்டும் அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும்.

    பின்பு போதுமான உப்பு சேர்த்து, கொத்தமல்லித்தழை தூவி பரிமாற வேண்டும்.

    காரத்திற்கு மிளகுதூள் கலந்து சூடாக பருகலாம்.

    சூப்பை கொதிக்கவைத்தால் அதில் இருக்கும் சத்துக்கள் வீணாகிவிடும். அதனால் பாத்திரத்தை மூடி வைத்து தயார் செய்யவேண்டும் அல்லது குக்கரை பயன் படுத்தலாம்.
    Next Story
    ×