search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    வெஜிடபிள் பொங்கல்
    X
    வெஜிடபிள் பொங்கல்

    சத்தான சுவையான வெஜிடபிள் பொங்கல்

    காய்கறிகளை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு இவ்வாறு செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சரிசி - 1
    பாசிப்பருப்பு - அரை கப்
    பட்டாணி - 50 கிராம்
    கேரட் - 50 கிராம்
    பீன்ஸ் - 50 கிராம்
    வெங்காயம் - 2
    தக்காளி - 2
    இஞ்சி - 1 துண்டு
    பெருங்காய தூள் - 1 டீஸ்பூன்
    நெய் - 1 ஸ்பூன்
    சீரகம் - 1/2 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    தாளிக்க :

    மிளகு, சீரகம் - தலா 2 டீஸ்பூன்,
    பட்டை, லவங்கம், ஏலக்காய் தலா - 2.
    முந்திரி - 10.
    கறிவேப்பிலை - சிறிதளவு,
    நெய், எண்ணெய் தலா - 2 டேபிள் ஸ்பூன்,
    உப்பு - தேவைக்கு.

    செய்முறை :

    தக்காளி, வெங்காயம், இஞ்சி, காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அரிசி, பருப்பு இரண்டையும் ஒன்றாகக் கலந்து மூன்றரை கப் தண்ணீர், நெய், பெருங்காயம், சீரகம் சேர்த்து வேக வைக்கவும்.

    முக்கால் பதம் வெந்ததும் உப்பை சேர்த்து பதமாக வெந்ததும் இறக்குங்கள்.

    வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்னொய், நெய்யைக் காயவைத்து தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களையும், இஞ்சியையும் போட்டு தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கேரட், பீன்ஸ், வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து வேகும்வரை வதக்கவும்.

    கடைசியாக தக்காளி சேர்த்து சிறிது கிளறி பொங்கலைக் கொட்டி நன்றாகக் கிளறி இறக்குங்கள்.

    இப்போது சூடான சுவையான வெஜிடபிள் பொங்கல் தயார் !!!
    Next Story
    ×