என் மலர்
ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்
தூக்க பயத்திற்கான அறிகுறிகள் என்னவென்றால் பகல் நேரச் சோர்வு மற்றும் மயக்கம், எரிச்சல், ஊசலாடும் நிலை, வேலை செய்ய முடியாத நிலை, குறைந்த ஞாபக சக்தி ஆகியவை.
போதிய தூக்கமே மனிதனை சுறுசுறுப்பாக வைக்கும். உழைத்து களைத்த மனிதன் இரவு தூக்கத்தில் மட்டுமே நிம்மதி அடைகிறான். உயிர் வாழ்வதற்கு அடிப்படை தேவை தூக்கம். ஆனால் தூங்குவதற்கு சிலர் பயப்படுகிறார்கள்; இந்த அதீத பயத்துக்கு ‘சோம்னி போபியா’ என்று பெயர். அதாவது தூக்கத்தின் போது ஏதாவது நடக்கும் என்ற பயம்.
இதற்கான காரணம் பற்றி பல ஆய்வுகள் செய்யப்பட்டு இருக்கின்றன. பல காரணங்களால் தூக்கம் பற்றிய பயம் தோன்றலாம். கனவுகள் பற்றிய பயம், தூக்கத்தின்போது இறந்து விடுவோமா என்ற அச்சம், பேய்கள் பற்றிய பயம், தூக்கத்தில் நடப்பவர்கள், தூக்கத்தில் பேசுபவர்கள், தூக்கத்தில் பேசும் போது ரகசியங்களை கூறிவிடுவோமோ என்கிற கவலை என ஏராளமான காரணங்களால் பயம் கொள்கிறார்கள். இதில் பெரும்பாலானவர்களுக்கு தூங்கினால் அவர்களை பேய் கொன்றுவிடும் என்ற நம்பிக்கை இருக்கிறதாம். அதனால் இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருக்கிறார்கள்.
இன்னும் சிலருக்கு, இது சீசன் நோய் போலவும் வரும். அடுத்த நாள் தேர்வு என்றாலோ அல்லது அவர்கள் சந்திக்க விரும்பாத நிகழ்வு ஏதேனும் நடக்கவிருந்தாலோ முந்தைய நாள் இரவில் தூங்க முடியாமல் தவிப்பார்கள். திகில் திரைப்படம் பார்ப்பவர்கள், மறைமுகமாக அல்லது எதிர்மறையான அதிர்ச்சிகரமான சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது நேசித்தவரின் இழப்பு ஆகியவையும் தூங்க விடாமல் செய்யும்.
தூக்க பயத்திற்கான அறிகுறிகள் என்னவென்றால் பகல் நேரச் சோர்வு மற்றும் மயக்கம், எரிச்சல், ஊசலாடும் நிலை, வேலை செய்ய முடியாத நிலை, குறைந்த ஞாபக சக்தி ஆகியவை. இந்த பயமானது பாதிக்கப்பட்டவரின் தொழில் மட்டும் தனிப்பட்ட வாழ்க்கையையும் வெகுவாக பாதிக்கிறது என்பதால் உடனடியாக டாக்டரை கலந்தாலோசிப்பது நல்லது. மேலும் தியானம் மற்றும் யோகா போன்றவை நல்ல தூக்கத்தை தரும். ஆழ்ந்த சுவாசம் மனதை நிதானப்படுத்தும். முறையான சிகிச்சையைவிட, அன்புக்குரியவர்கள் தரும் ஆதரவே இது போன்ற பயங்களுக்கு சரியான மருந்தாகும். தேவைப்பட்டால் மனநல சிகிச்சையும் பரிந்துரைக்கப்படலாம்.

ஒருவர் தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிட்டு வந்தால், மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியமே இருக்காது. ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்களை அறிந்து கொள்ளலாம்.
ஒருவர் தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிட்டு வந்தால், மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியமே இருக்காது. ஆப்பிளில் உள்ள நார்ச்சத்து, ஆரோக்கியமான செரிமானத்திற்கு உதவும். ஆப்பிளை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், குடலியக்கம் சிறப்பாக நடைபெற்று, மலச்சிக்கல் மற்றும் இதர வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கலாம். நார்ச்சத்து நிறைந்த உணவுகள் கழிவுகளை எளிதில் மலக்குடல் வழியாக வெளியேற்றும். எனவே உங்களுக்கு மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், தினம் ஒரு ஆப்பிள் சாப்பிடுங்கள்.
ஆப்பிள் புற்றுநோயைத் தடுக்கும். குறிப்பாக ஆப்பிள் மார்பக புற்றுநோய் மற்றும் குடல் புற்றுநோய் போன்றவற்றின் அபாயத்தைத் தடுக்கும். உங்களுக்கு புற்றுநோய் வரக்கூடாது என்று நினைத்தால், தினமும் ஒரு ஆப்பிளை தோலுடன் சாப்பிடுங்கள். ஏனெனில் தோலில் தான் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன.
நம் உடலிலேயே நல்ல பாக்டீரியாக்கள் வாழும் பகுதி என்றால் அது குடலில் தான். ஆப்பிள் நமது பெருங்குடலில் வாழும் நல்ல பாக்டீரியாக்களின் செயல்பாட்டை மேம்படுத்த உதவும். ஆப்பிள் உடலில் மெட்டபாலிசத்தை தூண்டுவதோடு, பாக்டீரியாக்களை சமநிலையில் பராமரித்து, உண்ணும் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை அதிகம் உறிஞ்ச செய்து, தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் டாக்ஸின்களை வெளியேற்றும்.

சர்க்கரை நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியது அவசியம். ஆப்பிளில் உள்ள பாலிஃபீனால்கள், உணவுகளில் உள்ள கார்போஹைட்ரேட்டுக்களை உடல் உறிஞ்சுவதைக் குறைக்கும். இதனால் இரத்த சர்க்கரை அளவில் ஏற்றஇறக்கம் ஏற்படுவது குறையும். ஆப்பிளில் இருக்கும் பாலிஃபீனால்கள், க்ளுக்கோஸ் உறிஞ்சுவதையும் குறைக்கும் மற்றும் கணையத்தில் இருந்து இன்சுலின் வெளியீட்டையும் தூண்டிவிட்டு, இரத்த சர்க்கரை அளவை சீராக பராமரிக்கும்
ஆப்பிள் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, இதய நோயை எதிர்த்துப் போராடும் வலிமையை உடலுக்கு அளிக்கும். இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நினைப்பவர்கள், தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட வேண்டியது அவசியம். ஆப்பிளின் தோலில் உள்ள சக்தி வாய்ந்த ப்ளேவோனாய்டான க்யூயர்சிடின், இரத்த நாளங்களில் உள்ள அழற்சியைக் குறைக்கும்.

ஆப்பிள் இரத்த சோகையை சரிசெய்ய பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் இதில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இரத்த சோகை என்பது இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் குறைவாக இருப்பதாகும். இதனை இரும்புச்சத்து உள்ள உணவுகளைக் கொண்டு தான் சரிசெய்ய முடியும். இரத்த சிவப்பணுக்களின் அளவை அதிகரிப்பதன் மூலம், இரத்த சோகையைத் தடுப்பதுடன், உறுப்புக்களுக்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைத்து, உறுப்புக்களும் நன்கு செயல்படும்.

சர்க்கரை நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியது அவசியம். ஆப்பிளில் உள்ள பாலிஃபீனால்கள், உணவுகளில் உள்ள கார்போஹைட்ரேட்டுக்களை உடல் உறிஞ்சுவதைக் குறைக்கும். இதனால் இரத்த சர்க்கரை அளவில் ஏற்றஇறக்கம் ஏற்படுவது குறையும். ஆப்பிளில் இருக்கும் பாலிஃபீனால்கள், க்ளுக்கோஸ் உறிஞ்சுவதையும் குறைக்கும் மற்றும் கணையத்தில் இருந்து இன்சுலின் வெளியீட்டையும் தூண்டிவிட்டு, இரத்த சர்க்கரை அளவை சீராக பராமரிக்கும்
ஆப்பிள் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, இதய நோயை எதிர்த்துப் போராடும் வலிமையை உடலுக்கு அளிக்கும். இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நினைப்பவர்கள், தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட வேண்டியது அவசியம். ஆப்பிளின் தோலில் உள்ள சக்தி வாய்ந்த ப்ளேவோனாய்டான க்யூயர்சிடின், இரத்த நாளங்களில் உள்ள அழற்சியைக் குறைக்கும்.
கத்தரிக்காயில் வறுவல், கிரேவி, சட்னி செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று கத்தரிக்காய் வைத்து சூப்பரான பஜ்ஜி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பெரிய கத்தரிக்காய் - 1,
கடலை மாவு - 1 கப்,
மைதா மாவு - 1 டீஸ்பூன்,
அரிசி மாவு - 2 டீஸ்பூன்,
உப்பு - சுவைக்கேற்ப,
எண்ணெய் - தேவையான அளவு,
ஆப்ப சோடா - அரை சிட்டிகை.
அரைக்க:
இஞ்சி - 1 துண்டு,
பூண்டு - 3 பல்,
சோம்பு - 1 டீஸ்பூன்,

செய்முறை:
கத்தரிக்காயைக் கழுவித் துடைத்து மெல்லிய வட்டங்களாக நறுக்குங்கள்.
அரைக்கும் பொருட்களை ஒன்றாக அரைத்து, பாதியை வைத்து விட்டு மீதமுள்ளதில் சிறிது உப்பு சேர்த்து கலக்குங்கள்.
இந்த விழுதை ஒவ்வொரு கத்தரிக்காய் துண்டின் மீதும் சிறிது தடவுங்கள்.
கடலை மாவுடன் உப்பு, மீதமுள்ள அரைத்த விழுது, தேவையான தண்ணீர் சேர்த்து இட்லிமாவு பதத்தில் கரைத்துகொள்ளுங்கள்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடனாதும் கத்தரிக்காய் துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து மாவில் முக்கி எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுங்கள்.
பெரிய கத்தரிக்காய் - 1,
கடலை மாவு - 1 கப்,
மைதா மாவு - 1 டீஸ்பூன்,
அரிசி மாவு - 2 டீஸ்பூன்,
உப்பு - சுவைக்கேற்ப,
எண்ணெய் - தேவையான அளவு,
ஆப்ப சோடா - அரை சிட்டிகை.
அரைக்க:
இஞ்சி - 1 துண்டு,
பூண்டு - 3 பல்,
சோம்பு - 1 டீஸ்பூன்,
மிளகாய்தூள் - 1 டீஸ்பூன்.

செய்முறை:
கத்தரிக்காயைக் கழுவித் துடைத்து மெல்லிய வட்டங்களாக நறுக்குங்கள்.
அரைக்கும் பொருட்களை ஒன்றாக அரைத்து, பாதியை வைத்து விட்டு மீதமுள்ளதில் சிறிது உப்பு சேர்த்து கலக்குங்கள்.
இந்த விழுதை ஒவ்வொரு கத்தரிக்காய் துண்டின் மீதும் சிறிது தடவுங்கள்.
கடலை மாவுடன் உப்பு, மீதமுள்ள அரைத்த விழுது, தேவையான தண்ணீர் சேர்த்து இட்லிமாவு பதத்தில் கரைத்துகொள்ளுங்கள்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடனாதும் கத்தரிக்காய் துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து மாவில் முக்கி எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுங்கள்.
சூப்பரான கத்தரிக்காய் பஜ்ஜி ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
தலை முதல் கால் வரை சகலத்தையும் பாதிக்கிற நீரிழிவு கருத்தரிப்பதையும் பாதிக்க வைத்து விடுகிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
பெயரளவில் மட்டுமே இனிப்பைக்கொண்டது நீரிழிவு நோய். ஆனால் அது கொடுக்கிற இம்சைகள் அனைத்தும் கசப்பு. தலை முதல் கால் வரை சகலத்தையும் பாதிக்கிற நீரிழிவு கருத்தரிப்பதையும் பாதிக்க வைத்து விடுகிறது. தவறான உணவுப்பழக்கம், உடற்பயிற்சி இல்லாதது என மாறிப்போன வாழ்க்கை முறையால் இப்போது இளம் வயதிலேயே நீரிழிவு நோய் தாக்குகிறது. நீரிழிவு நோய்க்கும் மலட்டுத் தன்மைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.
குடும்ப பின்னணியில் நீரிழிவு இருந்தால் அந்த வழியில் வருவோருக்கும் அது பாதிக்க வாய்ப்புகள் அதிகம். அது தவிர நிறைய பெண்களுக்கு இப்போது பி.சி.ஓ.டி. என்னும் சினைப்பை நீர்க்கட்டி பிரச்சினையை ஏற்படுத்துகிறது. அதன் விளைவாக உடல் எடை அதிகரிப்பு, மாதவிலக்கு சுழற்சி தள்ளிப்போவது என்று அடுக்கடுக்கான பிரச்சினைகளை சந்திப்பார்கள்.
இவர்களுக்கு தைராய்டு கோளாறும் வரலாம். தைராய்டு ஹார்மோன், சினைப்பைகளில் இருந்து சுரக்கிற எப்.எஸ்.எச். திரவம், நீரிழிவுக்கு காரணமான இன்சுலின், இதுவெல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. இந்த ஹார்மோன்கள் சுரப்பதில் ஏற்ற இறக்கம் வரும்போது அதன் விளைவாக சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு நீரிழிவு நோய் வரலாம்.
நீரிழிவு நோய் இருக்கிற பெண்கள் கருத்தரிப்பது கஷ்டம். அப்படியே கருத்தரித்தாலும் அது கலையவும் கரு சரியாக உருவாகாமல் போகவும் அபாயங்கள் அதிகம். சில பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோய் வரும். பிரசவமானதும் அது தானாக போய்விடும். ஆனால் தாமதமாக கருத்தரிக்கிற, உடல் பருமன் அதிகமுள்ள, பி.சி.ஓ.டி. பிரச்சினை உள்ள பெண்களுக்கு கர்ப்ப காலம் முடிந்ததும் நீழிரிவு நோய் நிரந்தரமாக உடம்பில் தங்கலாம். கருத்தரிக்கும்போது அது தாயை மட்டுமல்ல குழந்தையையும் சேர்த்தே பாதிக்கும்.
முறையற்ற மாதவிலக்கு, உடம்பெல்லாம் முடி வளர்ச்சி, தாறுமாறாக எகிறும் உடற்பருமன் இதுவெல்லாம் இருக்கிற பெண்கள் கர்ப்பம் தரிப்பதற்கு முன்பாகவே ஸ்கேன் மூலமாக பி.சி.ஓ.டி. பிரச்சினை இருக்கிறதா? என்று தெரிந்து கொள்வது நல்லது. எடைக்கட்டுப்பாடு, வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலமாக இதையெல்லாம் சரி செய்தாலே நீரிழிவு நோய் ஆபத்திலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

சரும துளைகளில் இறந்த செல்கள் அடைத்துக்கொண்டால், வரக்கூடிய பிரச்சனை முகப்பரு. முகப்பருவை போக்கும் இயற்கையான தீர்வுகள், தடுக்கும் வழிமுறைகளை பார்க்கலாம்.
சரும துளைகளில் இறந்த செல்கள் அடைத்துக்கொண்டால், வரக்கூடிய பிரச்சனை முகப்பரு. அழுக்கு, தூசு, எண்ணெய் பசை ஆகியவை சரும துளைகளில் அடைத்துக்கொண்டால் முகப்பரு வரும். இது மரபியலாக வரும் பிரச்சனையல்ல.
முகப்பரு உள்ளவர், ஜெல் வகை கிரீம்கள் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். துரித உணவுகள், சாக்லேட், கேக், பிஸ்கெட் சாப்பிட்டால் முகப்பரு வரும்.
அடிக்கடி முகத்தில் கைவைத்துக்கொண்டே இருந்தாலும் பருக்கள் அதிகமாக வரும். பரவவும் செய்யும். ஒரு நாளைக்கு 2-3 முறை மிதமான ஃபேஸ் வாஷ் அல்லது ஃபேஸ் வாஷ் பவுடரால் முகத்தைக் கழுவுங்கள்.
தலையில் பொடுகு, தலைமுடி சுத்தமில்லாமல் இருந்தாலும் பரு வரும். வாரம் 3-4 முறையாவது மிதமான ஷாம்பு போட்டு தலைமுடி சுத்தப்படுத்துங்கள். முகத்துக்கு மட்டும் தனியாக துண்டு அல்லது டிஷ்ஷூ பயன்படுத்தலாம். தலை துவட்டும் துண்டிலே முகத்தைத் துடைக்க கூடாது.
* கடையில் ஈஸ்டை வாங்குங்கள். ரோஸ் வாட்டரில் ஈஸ்ட் போட்டு 20 நிமிடம் ஊற வையுங்கள். பேஸ்டாக வரும். பேஸ்ட் பக்குவத்தில் இல்லையெனில் கொஞ்சமாக ரோஸ் வாட்டர் கூட சேர்க்கலாம். இதை முகத்தில் பூசி அரை மணி நேரம் கழித்துக் கழுவுங்கள். 15 நாட்களுக்கு ஒருமுறை செய்யுங்கள். வந்த பரு நீங்கும். இனி பருவோ ஆக்னியோ வராது.
* துளசி இலை பவுடர் ஒரு ஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் ஒரு சிட்டிகை, முல்தானிமிட்டி ஒரு ஸ்பூன் நன்றாக கலந்து அதனுடன் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் பேக்காக போட்டு 20 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.
* வேப்பிலை பவுடரை ரோஸ் வாட்டர் கலந்து குழைத்துக் கொள்ளுங்கள். இரவில் முகம் முழுவதும் பூசிய பிறகு, படுத்து உறங்கி மறுநாள் கழுவி விடலாம். முகப்பரு குறைந்து இருப்பது தெரியும்.
* பட்டைத்தூளை தேன் கலந்து குழைத்துக் கொள்ளவும். பரு உள்ள இடத்தில் மட்டும் தடவுங்கள். 15 நிமிடங்கள் கழித்துக் கழுவலாம். 2 மாதம் தொடர்ந்து செய்யலாம்.

குழந்தைகளுக்கு 6 மாதம் வரை தண்ணீர் கொடுக்கலாமா? வேண்டாமா? என்ற சந்தேகமும் பரவலாகக் காணப்படுகிறது. இதற்கான விளக்கங்களை அளிக்கும் பதிவுதான் இது.

தாய்ப்பாலிலே 85% நீர்ச்சத்து இருப்பதால், தனியாகக் குழந்தைகளுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. 6 மாத குழந்தைக்கு மினரல் வாட்டர், நிலத்தடி நீர் - குடிநீர் போன்ற எதுவும் தேவையில்லை.
6 மாதம் முடியாத குழந்தைகளுக்கு, தண்ணீர் கொடுத்தால், தாய்ப்பாலில் உள்ள ஊட்டச்சத்துகளும் ஃபார்முலா மில்கில் உள்ள ஊட்டச்சத்துகளும் உறிஞ்சப்படும். உடலில் ஊட்டச்சத்துகள் சேராமல் தடுக்கப்படும். வயிறு விரைவில் நிறைந்துவிடும். இந்த உணர்வால் குழந்தைகள் தாய்ப்பாலை சரியாகக் குடிக்க மாட்டார்கள்.
உடலில் உள்ள சோடியத்தை அதிக தண்ணீர் கரைத்து விடலாம். உடலில் எலக்ட்ரோலைட் சீரற்ற அளவில் இல்லாமல் போகலாம். திசுக்கள் வீக்கமடையும் பிரச்சனைகளும் வரலாம்.
குழந்தையின் சிறுநீரகங்கள் அந்தளவுக்கு வளர்ச்சி பெற்றிருக்காது. அதிகபடியானத் தண்ணீர் குழந்தையின் முகத்தை வீக்கமடைய செய்யும். கண்களை சுற்றி பஃபினெஸ் பிரச்னை வரலாம்.
வெப்ப காலமாக இருந்தாலும், பனிக்காலமாக இருந்தாலும் குழந்தைக்கு 6 மாதம் வரை தண்ணீர் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தாய்ப்பாலிலே நீர்ச்சத்துகளே போதும். அதுவே தண்ணீர் தாகத்தை தணிக்கும்.
ஃபார்முலா மில்க் குடிக்கும் குழந்தையாக இருந்தாலும், 6 மாதம் வரை தண்ணீர் தனியாகக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. சில குழந்தைகள் அதிகமாகத் தண்ணீர் குடித்தால், வாட்டர் இன்டாக்ஸிஃபிகேஷன் (Water intoxification) எனும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.
6 மாதம் ஆன குழந்தைக்கு, தண்ணீர் கொடுக்கலாம். குழந்தைக்கு தண்ணீர் தேவைப்படும் போதெல்லாம் தண்ணீர் கொடுப்பது நல்லது.6-12 மாதங்கள் வரை, குழந்தை கேட்கும் போதெல்லாம் தண்ணீர் கொடுக்கலாம்.
ஒரு வயது ஆன பிறகு, தண்ணீர் நன்றாகவே குடிக்க வைக்கலாம். குழந்தையை தண்ணீர் குடிக்க சொல்லி நீங்களும் நினைவுப்படுத்தலாம். குழந்தையின் 3 வயது வரை, வெந்நீரை கொதிக்க வைத்து ஆற வைத்துக் கொடுப்பது நல்லது. அதன் பிறகு பெரியவர்கள் குடிக்கும் தண்ணீரே குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.

வாரம் ஒருமுறை பயறு கஞ்சியை காலை வேளையில் குடிக்கலாம். இந்த கஞ்சி உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. இன்று இந்த கஞ்சியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
அரிசி - 1 கப்
பச்சை பயறு - 3/4 கப்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
பூண்டு - 1 பல்
சின்ன வெங்காயம் - 3-4
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 8 கப்

செய்முறை:
பச்சை பயறு, அரிசியை நன்றாக கழுவி ஊறவைக்கவும்.
சின்ன வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெந்தயத்தைப் போட்டு வறுக்க வேண்டும்.
பின்னர் அதில் பூண்டு, வெங்காயம் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, பின் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும்.
நீரானது நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் கழுவி வைத்துள்ள அரிசி மற்றும் பச்சை பயறு சேர்த்து குக்கரை மூடி 5 விசில் போட்டு வேக வைக்கவும்.
அரிசி - 1 கப்
பச்சை பயறு - 3/4 கப்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
பூண்டு - 1 பல்
சின்ன வெங்காயம் - 3-4
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 8 கப்
எண்ணெய் - 1 டீஸ்பூன்

செய்முறை:
பச்சை பயறு, அரிசியை நன்றாக கழுவி ஊறவைக்கவும்.
சின்ன வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெந்தயத்தைப் போட்டு வறுக்க வேண்டும்.
பின்னர் அதில் பூண்டு, வெங்காயம் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, பின் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும்.
நீரானது நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் கழுவி வைத்துள்ள அரிசி மற்றும் பச்சை பயறு சேர்த்து குக்கரை மூடி 5 விசில் போட்டு வேக வைக்கவும்.
விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து அதில் உப்பு மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து கிளறி பரிமாறினால், பச்சை பயறு - அரிசி கஞ்சி ரெடி!!!
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் தோள்கள் வலிமையடையும். புஜங்கள் மெலிந்து சீராக அமையும். இடுப்பு பகுதி ஊளைச்சதை கரையும்.
செய்முறை :
விரிப்பில் கால்களை நன்றாக நீட்டி தளர்த்திக் கொண்டு அமர வேண்டும். வலது காலை இடது தொடை பக்கமாகவும், இடது காலை வலது தொடை பக்கமாகவும் படத்தில் உள்ளது போன்று மேல் நோக்கி இருக்குமாறு வைக்க வேண்டும்.
அதாவது பத்மாசன முறையில் உட்கார்ந்து கொண்டு பின்பு 2 கைகளையும் தரையில் நன்றாக அழுத்தியவாறு 2 கால் முட்டிகளையும் ஊன்றி நிற்க வேண்டும். பின்னர் மெதுவாக உடலை மேல் நோக்கி தூக்கி 2 கைகளையும் கும்பிட்ட நிலையில் வைக்க வேண்டும்.
இது தான் பர்வத ஆசன முறை ஆகும். இந்த ஆசனத்தை முதலில் சுவரை ஒட்டிய நிலையில் பயிற்சி செய்யலாம். நன்றாக பயிற்சி செய்த பின்னர் வழக்கமான இடத்தில் செய்யலாம். மூட்டு வலி உள்ளவர்கள் வலி இருக்கும் போது இந்த ஆசனத்தை செய்ய கூடாது.
முதலில் கைகளை தளர்த்திய பின்னர் மெதுவாக தரையில் உட்கார்ந்து கால்களை தளர்த்த வேண்டும். பயிற்சியை முடித்த பின்னர் கால்களை நீட்டி மடக்கி 5 முறை செய்வது நல்லது. இப்படி செய்வதால் மூட்டு வலி வருவது தடுக்கப்படுகிறது.
மூச்சின் கவனம்
கைகளை மேலே தூக்கும் போது உள்மூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, கீழே இறங்கும் போது வெளிமூச்சு.
பலன்கள்
தோள்கள் வலிமையடையும். புஜங்கள் மெலிந்து சீராக அமையும். இதயம் வலிமையடையும். இடுப்பு பகுதி ஊளைச்சதை கரையும். தோள்களில் படியும் தேவையற்ற அதிக கால்சியம் குறையும். அதிக உடல் எடை குறையும்.

ஒரே இடத்தில் தொடர்ச்சியாக 8 மணி நேரத்துக்கு மேலாக அமர்ந்து பணி செய்யும் போது நம் உடலிலும் தசை நார்களிலும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி விடுகிறது.
விவசாயத்தை நம்பி வாழ்ந்து கொண்டிருந்த நாம் தொழில் புரட்சியால் ஏற்பட்ட மாற்றங்களால் ஒரு அலுவலகத்துக்குள் உட்கார்ந்து கொண்டு பணி செய்யும் நிலையில் இருக்கிறோம். அதிலும் ஒரே இடத்தில் தொடர்ச்சியாக 8 மணி நேரத்துக்கு மேலாக அமர்ந்து பணி செய்யும் போது நம் உடலிலும் தசை நார்களிலும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி விடுகிறது.
பொதுவாக அலுவலகத்தில் கணிப்பொறி முன் அமர்ந்து எட்டு மணி நேரத்துக்கும் அதிகமாக பணி செய்யும் சூழ்நிலையில் உள்ளவர்கள் வேலையை முடித்துக்கொண்டு வீட்டிற்கு திரும்பும் போது சோர்வையும் உடல் வலியையும் உணர்வர். உட்கார்ந்து கொண்டு வேலை செய்வது புகைப்பிடிப்பது போன்ற விளைவை ஏற்படுத்தும் என்று சமீபத்தில் இங்கிலாந்தில் வெளியான ஒரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
தினந்தோறும் 8 மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள் அன்றாடம் மேற்கொள்ளும் 6 மணி நேர உறக்கத்தையும் கணக்கில் சேர்த்தால் 14 மணி நேரம்ஆகிறது. இந்த நேரத்தில் உடலின் மூட்டுக்களின் இயக்கம் குறைகிறது. சதைகள் தசை நார்கள் வேலை செய்யாமல் இருக்கும் போது அது இறுகி போவதற்கும் வளைவு தன்மை குறைந்து போகவும் நேரிடும். கணிப்பொறி முன்போ அலுவலகத்திலோ உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கு, கழுத்துவலியோ முதுகுவலியோ ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
பொதுவாக நாம் உணவு உண்டபின் சிறிது தூரம் நடைபயிற்சி செய்ய வேண்டும். அப்போது நாம் உண்ட உணவு உடல் தேவைக்கு ஏற்ப சக்திகளைப் பெற்றுக் கொள்ள உண்ட உணவை உடைத்து குளுக்கோஸ் கொழுப்பாகவும் வைட்டமின் சத்தாகவும் இன்னும் பிற சத்துக்களாக மாற்றும். மாறாக உடலின் இயக்கங்களை மேற்கொள்ளாத பட்சத்தில் கொழுப்பாக மாற்றும் சத்துக்கள் உடலில் சேர்வதை திரும்பத் திரும்ப செய்யும் போது உடல் பருமன் ஏற்பட காரணமாகிறது. உடல் பருமன் அதிகமாகும் போது பல்வேறு கெட்ட கொழுப்புகள் உடலில் சேரும். இது இருதய நோய்களுக்கு வழிவகுக்கிறது. தொடர்ந்து ஒரு இடத்தில் அமர்ந்துகொண்டு நீர் கூட அருந்தாமல் வேலைப்பளுவில் மூழ்கி போய்விடும் சிலருக்கு சிறுநீரகக் கற்கள் பிரச்சினைகளும் ஏற்படலாம்.
ஒரு இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள் தனது உட்காரும் நிலையை தன் நிலை மறந்து கவனிப்பு இல்லாமல் ஒரு கட்டுக்கோப்பு இல்லாமல் அமரும் போது அதாவது குனிந்த நிலையிலேயே கழுத்தை வைத்திருக்கும் போது கழுத்து எலும்பு தேய்மானம் கழுத்து தசைப் பிடிப்புக்கள் முதுகு எலும்பு தேய்மானம் ஏற்பட வாய்ப்பளிக்கிறது. உலக சுகாதார ஆய்வின் படி சுமாராக ஒரு வாரத்திற்கு 150 நிமிடங்கள் கடுமையான உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறது.

அதாவது தினந்தோறும் 30 நிமிட உடற்பயிற்சியை கட்டாயமாக மாற்றிக் கொள்ளும் போது உட்கார்ந்த நிலையில் எட்டு மணி நேரம் வேலை செய்பவருக்கு ஏற்படும் இருதய, உடல் பருமன், எலும்பு தேய்மானம், தசை நார்களின் வளைவுத் தன்மை குறைந்து போதல் போன்ற பிரச்சினைகள் இருந்து நாம் ஓரளவுக்கு தன்னை தற்காத்துக் கொள்ள முடியும். அதேபோல் நீங்கள் 8 மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவராக இருந்தால் உங்கள் இருக்கையின் கட்டமைப்பு அதாவது அதன் வசதி சிறப்பாக இருக்குமாறு அமைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையாவது உங்கள் இடத்திலிருந்து எழுந்து நீர் அருந்தவோ அல்லது உங்கள் நண்பரிடமோ அளவளாவி விட்டு வாருங்கள் ஒரு நிமிடமோ அல்லது இரண்டு நிமிடமோ செய்து வாருங்கள். இது நற்பயனை அளிக்கும், அதே போல தொழில் சார்ந்த மன இறுக்கத்தையும் வெகுவாக குறைக்கும். இதனால் ரத்த கொதிப்பு போன்ற விளைவுகளிலிருந்தும் விடுபடலாம்.
8 மணி நேரத்துக்கு மேலாக வேலை செய்பவர்கள் தினமும் அதிகாலை 20 நிமிடம் நடைபயிற்சி செய்ய வேண்டும். வாரத்தில் 7 நாட்கள் நடக்காவிட்டாலும் 3 நாட்களாவது அவசியம் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். குளிர்சாதன அறையில் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். மதிய வேளையில் அசைவ உணவு, துரித உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
அடிக்கடி டீ, காபி குடிக்க கூடாது. உடல் பருமனை தடுப்பதற்கும், மலச்சிக்கல் வராமல் தடுப்பதற்கும் நார்ச்சத்து மிக்க உணவுகளை அதிகமாக சாப்பிட வேண்டும்.
செந்தில்குமார், விரிவுரையாளர் பிசியோதெரபி மருத்துவகல்லூரி, குமாரபாளையம் .
நமக்கு வெற்றிகள் வந்து சேர்வதற்கென்று தனியாக ஒரு நேரம் எதுவும் இல்லை. விடாமுயற்சியோடு செயல்படுகின்றவர்களிடத்தில் எந்த நேரத்திலும் வெற்றிகள் வந்து சேரும்.
முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்று சொல்வார்கள். முடியாது என்று எண்ணும் கடினமான காரியங்களைக்கூட திரும்ப திரும்ப விடா முயற்சியுடன் செய்தால் கட்டாயம் வெற்றி அடைய முடியும். எந்த செயலை செய்வதற்கு விடாமுயற்சி எடுக்கிறோமோ அதனை சாதிக்க முடியும். எந்தக் காரியமுமே தொடங்கும்போது மலைப்பாகத்தான் தோன்றும். குழந்தைகள்கூட நடப்பதற்கு முன்பு விழுந்து எழுந்துதான் நடை பயிலுகின்றனர்.
கீழே விழுகிறோமே என்று அவர்கள் முயற்சிக்காமல் விடுவதில்லை. விடாமுயற்சி மட்டும் இல்லாவிட்டால் பல சாதனைகள் நிகழ்ந்திருக்காது. புத்தகங்களை தொடர்ந்து படித்து வந்தால் பல அறிஞர்களின் பொக்கிஷங்களை நம்மால் அறிய முடியும். நாம் எல்லாம் படித்து முடித்துவிட்டோம் என்று எண்ணுவது சுலபம். ஆனால் கற்றது கை மண்அளவுதான் என்று புத்தகங்களை படிக்க படிக்க புரியும்.
ஒவ்வொரு சாதனையாளரும் ஆரம்பத்தில் எவ்வளவு சோதனைகளை சந்தித்திருக்கிறார்கள். அரசியல், ஆராய்ச்சி, இலக்கியம், இசை என்று எந்தத் துறையிலும் புகழ் பெறுவதற்கு முன்பு எத்தனை முறை தோல்வியைத் தழுவியிருக்கிறார்கள் என்பதும் தெரியும். தோல்விகள் கதவை மூடும்போது தொடர்ந்து விடாமுயற்சியுடன் கதவுகளை தட்டித் திறப்பதுதான் வெற்றிக்கான சாவி. விவேகானந்தர் சொல்கிறார், “வெற்றி பெறுவதற்கு தேவையானது முடிவில்லா விடாமுயற்சியும், அதீதமான நம்பிக்கையும் தான் அவசியம். நன்றாக உழைத்திரு, உனது குறிக்கோளை நிச்சயம் நீ அடைவாய்” என்கிறார்.
ஓரிரு முறை தோல்வியை சந்தித்துவிட்டால் பின் துவண்டுவிடாதே. தோல்வி நிரந்தரம் அல்ல, தோல்வியுற்றால் அதில் உள்ள தவறை ஒத்துக்கொண்டு அதிலிருந்து மீண்டு முன்னேறு. ஆனால் ஒருபோதும் முயற்சி செய்ய மறக்காதே. இதனை மறவாமல் இருந்தாலே வெற்றி நம் காலடியில் சரணடையும்.
பெர்னாட்ஷாவின் வாழ்க்கை கொடுமையான வறுமை நிறைந்த வாழ்க்கை. அவரது அறிவோடு தினம் ஐந்து பக்கம் எழுதும் விடாமுயற்சியே அவரை உலக அறிஞராக்கியது. விடாமுயற்சிக்கு உதாரணங்களாக மேடம் கியூரி, மார்க்கபோலோ என்று அடுக்கிக் கொண்டே போகலாம். காந்திஜியின் விடாப்பிடியான அகிம்சை கொள்கைதானே நமக்கு சுதந்திரத்தையே வாங்கித் தந்தது. உலகில் சாதனையாளர்கள் எல்லாரிடத்திலும் அவரவர் துறைசார் அறிவோடு விடாமுயற்சியும் இருந்து வருகிறது.
அதனாலே அவர்கள் வெற்றி பெற்றார்கள். சாதனை படைத்தார்கள். இந்த உலகில் முயற்சியை விட வேறொன்றும் சிறந்த இடத்தை பெற்றுவிட முடியாது. திறமை, மேதைத்தனம், கல்வி இருந்தாலும் அதனுடன் விடாமுயற்சியும், எதை அடையவேண்டும் என்ற தெளிவான முடிவும் மட்டுமே வெற்றிக்கு வழிகாட்டும் சர்வ வல்லமை படைத்தது. திருவள்ளுவரும் இதைத்தானே சொல்கிறார். முயற்சி திருவினையாக்கும், முயற்றின்மை இன்மை புகுத்தி விடும் என்று.

குழந்தைகளுக்கு சாக்லேட் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று சாக்லேட் சேர்த்து சூப்பரான லஸ்ஸி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
தயிர் - 2 கப்
டேரிமில்ஸ் சாக்லேட் (dairy milk chocolate) - 6 துண்டுகள்
பூஸ்டு (boost) - 2 டீஸ்பூன்
சர்க்கரை - தேவையான அளவு
பாதாம், பிஸ்தா - தேவையான அளவு
சூடான பால் - 4 டீஸ்பூன்

செய்முறை:
பூஸ்டில் சூடான பால் சேர்த்து கட்டியில்லாமல் நன்றாக கலந்து கொள்ளவும்.
பாதாம், பிஸ்தாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
டேரிமில்ஸ் சாக்லேட்டை ஒரு கிண்ணத்தில் போட்டு அதை சூடான தண்ணீரின் மேல் வைத்து கிளறிக்கொண்டு இருந்தால் சாக்லேட் உருக ஆரம்பிக்கும். சாக்லேட் நன்றாக உருகி கட்டியில்லாமல் ஆனவுடன் அதை இறக்கி தனியாக வைக்கவும்.
மிக்சியில் தயிர், சக்கரை சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
அடுத்து அதில் கரைத்து வைத்துள்ள பூஸ்டு, சாக்லேட், ஐஸ்கட்டிகள் சேர்த்து மறுபடியும் நுரைக்க அரைக்கவும்.
அரைத்த லஸ்ஸியை கண்ணாடி கப்பில் ஊற்றி பொடியாக நறுக்கி பாதாம், பிஸ்தா, பூஸ்டு தூவி பருகவும்.

ஐஸ்கட்டிகள் - சிறிதளவு

சூப்பரான சாக்லேட் லஸ்ஸி ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
‘பிராண’ என்றால் ஆற்றல், சக்தி. ‘நியமம்’ என்றால் ஒழுங்கு. மூச்சை முறையாக ஒழுங்குபடுத்தி விடுவதே பிராணாயாமம்.

கால்களை நன்றாக மடித்து சம்மணக்காலிட்டு தரையில் அமரவேண்டும். இந்த நிலையை சுகாசனம் என்கிறோம். முதுகுத்தண்டு நேராக இருக்க வேண்டும். ஆரம்ப நிலையில் சுவரில் சாய்ந்து உட்கார்ந்துகொள்ளலாம். இரு கைகளையும் தியான முத்திரையில் வைத்துக் கொள்ளுங்கள்.
ஆள்காட்டி விரலை கட்டை விரல் தொட்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நீட்டி இருக்க வேண்டும். இதுதான் தியான முத்திரை. இப்போது மூச்சை பொறுமையாக இழுத்து பொறுமையாக விடவேண்டும். இதை 15-25 முறை தொடர்ச்சியாக செய்ய வேண்டும்.
காலை மற்றும் மாலையிலும் 4 மணி முதல் 6 மணிக்குள் செய்வது அதிக பலன் தரும். எவ்வளவு தூரம் மூச்சை உள்வாங்க முடியுமோ இழுத்து, மெதுவாக மூச்சை வெளியில் விடவும். ஆரம்ப நிலையில், ஒருபோதும் மூச்சை உள்ளடக்கி வைக்க முயற்சிக்க வேண்டாம். இதனால் இதயம் சிரமப்படும்.