search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rice Green Gram Porridge"

    வாரம் ஒருமுறை பயறு கஞ்சியை காலை வேளையில் குடிக்கலாம். இந்த கஞ்சி உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. இன்று இந்த கஞ்சியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    அரிசி - 1 கப்
    பச்சை பயறு - 3/4 கப்
    வெந்தயம் - 1 டீஸ்பூன்
    பூண்டு - 1 பல்
    சின்ன வெங்காயம் - 3-4
    துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    தண்ணீர் - 8 கப்
    எண்ணெய் - 1 டீஸ்பூன்



    செய்முறை:

    பச்சை பயறு, அரிசியை நன்றாக கழுவி ஊறவைக்கவும்.

    சின்ன வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெந்தயத்தைப் போட்டு வறுக்க வேண்டும்.

    பின்னர் அதில் பூண்டு, வெங்காயம் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, பின் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும்.

    நீரானது நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் கழுவி வைத்துள்ள அரிசி மற்றும் பச்சை பயறு சேர்த்து குக்கரை மூடி 5 விசில் போட்டு வேக வைக்கவும்.

    விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து அதில் உப்பு மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து கிளறி பரிமாறினால், பச்சை பயறு - அரிசி கஞ்சி ரெடி!!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×