search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "parvatasana"

    இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் தோள்கள் வலிமையடையும். புஜங்கள் மெலிந்து சீராக அமையும். இடுப்பு பகுதி ஊளைச்சதை கரையும்.
    செய்முறை :

    விரிப்பில் கால்களை நன்றாக நீட்டி தளர்த்திக் கொண்டு அமர வேண்டும். வலது காலை இடது தொடை பக்கமாகவும், இடது காலை வலது தொடை பக்கமாகவும் படத்தில் உள்ளது போன்று மேல் நோக்கி இருக்குமாறு வைக்க வேண்டும்.

    அதாவது பத்மாசன முறையில் உட்கார்ந்து கொண்டு பின்பு 2 கைகளையும் தரையில் நன்றாக அழுத்தியவாறு 2 கால் முட்டிகளையும் ஊன்றி நிற்க வேண்டும். பின்னர் மெதுவாக உடலை மேல் நோக்கி தூக்கி 2 கைகளையும் கும்பிட்ட நிலையில் வைக்க வேண்டும்.

    இது தான் பர்வத ஆசன முறை ஆகும். இந்த ஆசனத்தை முதலில் சுவரை ஒட்டிய நிலையில் பயிற்சி செய்யலாம். நன்றாக பயிற்சி செய்த பின்னர் வழக்கமான இடத்தில் செய்யலாம். மூட்டு வலி உள்ளவர்கள் வலி இருக்கும் போது இந்த ஆசனத்தை செய்ய கூடாது.

    முதலில் கைகளை தளர்த்திய பின்னர் மெதுவாக தரையில் உட்கார்ந்து கால்களை தளர்த்த வேண்டும். பயிற்சியை முடித்த பின்னர் கால்களை நீட்டி மடக்கி 5 முறை செய்வது நல்லது. இப்படி செய்வதால் மூட்டு வலி வருவது தடுக்கப்படுகிறது.

    மூச்சின் கவனம்

    கைகளை மேலே தூக்கும் போது உள்மூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, கீழே இறங்கும் போது வெளிமூச்சு.

    பலன்கள்


    தோள்கள் வலிமையடையும். புஜங்கள் மெலிந்து சீராக அமையும். இதயம் வலிமையடையும். இடுப்பு பகுதி ஊளைச்சதை கரையும். தோள்களில் படியும் தேவையற்ற அதிக கால்சியம் குறையும். அதிக உடல் எடை குறையும்.
    ‘பர்வதா’ என்றால் மணல் என்று பொருள். இந்த ஆசன நிலையில் உடல் அமைப்பு மலைபோல் இருப்பதால் பர்வதாசனம் என அழைக்கப்படுகிறது.
    பெயர் விளக்கம்: ‘பர்வதா’ என்றால் மணல் என்று பொருள். இந்த ஆசன நிலையில் உடல் அமைப்பு மலைபோல் இருப்பதால் பர்வதாசனம் என அழைக்கப்படுகிறது.

    செய்முறை: சூரியநமஸ்காரத்தின் ஏழாம் நிலையிலிருந்து பிருஷ்டத்தை (புட்டத்தை) உயர்த்தி (படத்தில் உள்ளது போல்) மார்பையும், தலையையும் உள்நோக்கி கொண்டு வந்து தலை, மார்பு கீழ்நோக்கியபடி வைக்கவும். முழங்கால் முழங்கை மூட்டுகளை மடக்காமல் வைக்கவும். உள்ளங்கை, உள்ளங்கால்களை தரையில் பதிக்கவும். மூச்சை வெளியே விடவும்.
    மந்திரத்தைக்கூறி சக்கரத்தை மனதால் நினைக்கவும்.

    கவனம் செலுத்த வேண்டிய இடம்: உடலை தளர்வாக வைத்து கொள்வதின் மீதும், விசுத்தி சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.

    பயிற்சிக் குறிப்பு: இந்த ஆசன நிலை ‘க்ஷி’ என்ற ஆங்கில எழுத்தின் தலைகீழ் நிலை போல் வர வேண்டும். ஆரம்பப் பயிற்சியில் பாதங்களை தரையில் ஊன்றி வைப்பது சிலருக்கு கடினமாக தோன்றலாம். அத்தகையவர்கள் முடிந்தவரை செய்து வந்தால் தொடர்ந்து பயிற்சியில் கால் நரம்புகளில் வளையும் தன்மை அதிகரித்து சரியான தோற்றம் வந்து விடும்.

    பயன்கள்: கை, கால் விரல்கள் மற்றும் தசைகள், மணிக்கட்டுகள், கணுக்கால் மற்றும் குதிகால் நரம்புகள், கழுத்து வலிமை பெறும்.
    ×