என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    யோகாசனத்தில் புத்துணர்வூட்டும் புதிய பிரிவாக பிறந்திருக்கிறது, ‘அக்வா’ ஆசனம் எனப்படும் நீரடி ஆசனம். இந்த ஆசனத்தை பற்றி விரிவாக பார்க்கலாம்.
    யோகாசனத்தில் புத்துணர்வூட்டும் புதிய பிரிவாக பிறந்திருக்கிறது, ‘அக்வா’ ஆசனம் எனப்படும் நீரடி ஆசனம். நாட்டின் உயர்தர நலவாழ்வு மையங்களிலும், ரிசார்ட்களிலும் இந்த ஆசனத்தில் மக்கள் ஆர்வத்தோடு ஈடுபடத் தொடங்கியிருக்கிறார்கள்.

    தண்ணீருக்குள் நின்றபடி உடலின் மேற்பகுதி தண்ணீருக்கு வெளியே இருக்கும் படியும், சில வேளைகளில் முழுமையாக தண்ணீருக்குள் மூழ்கி மூச்சடக்கியும் இந்த தண்ணீர் ஆசனம் மேற்கொள்ளப்படுகிறது. தண்ணீரின் மீது மிதக்கும் பலகையிலும் ஆசனம் செய்கிறார்கள்.

    கடல் நீர் நிரப்பிய நீச்சல் குளங்கள், வெந்நீர் நிரப்பிய குளியல் தொட்டிக்குள் இந்த தண்ணீர் ஆசனங்களைச் செய்கின்றனர். இதை முடித்து வெளியே வரும் போது, உடல், மனம், உணர்வு எல்லாமே புத்துணர்ச்சி பெறுவதாகக் கூறுகிறார்கள். வழக்கமாக தரையில் ஒரு விரிப்பில் அமர்ந்து செய்யப்படும் யோகாசனமே இப்படி தண்ணீருக்கடியிலும் செய்யப்படுகிறது.

    யோகாசனத்தில் நன்கு தேர்ச்சி பெற்ற வர்களும், புதிதாக அதில் ஈடுபடுபவர்களும் தண்ணீர் ஆசனத்தை மேற்கொள்ளலாம். இதில் ஈடுபடுபவர்கள், தண்ணீரின் நலமளிக்கும் தன்மையை அனுபவப்பூர்வமாக உணரலாம்.

    தண்ணீருக்குள் சூரிய நமஸ்காரம், விருக்‌ஷாசனம், அர்த்த சக்கராசனம், தனுராசனம் ஆகியவை பெரும்பாலும் செய்யப்படுகிறது. சூரிய நமஸ்காரமானது ஒட்டுமொத்த உடம்பின் வலுவையும் ஒழுங்கையும் கூட்டுகிறது. விருக்‌ஷாசனம் நிலைத்தன்மையையும், நெகிழ்வுத்தன்மையையும், அர்த்த சக்ராசனமானது முதுகெலும்பு மற்றும் பின்பகுதித் தசைகளுக்கு நெகிழ்வுத்தன்மையையும், தனுராசனம் உடம்பின் மேற்பகுதியை வளைத்து, தோள்பட்டைகளை வலுப்படுத்தவும், முதுகெலும்பு நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தவும் உதவுகிறது என்கிறார்கள். வீரபத்ராசனமும் தண்ணீருக்குள் அதிகம் மேற்கொள்ளப்படுகிறது.

    வழக்கமாக தரையில் மேற்கொள்ளும் ஆசனத்தைவிட இதில் எடை குறைவாக உணரலாம். உடம்பின் சமச்சீர் நிலையை மேம்படுத்த இது கைகொடுக்கிறது. தண்ணீரின் அழுத்தமானது நுரையீரல்களை விரிவாக்க உதவுகிறது. அதனால் நாம் அதிகமான ஆக்சிஜனை உள்ளிழுக்க முடிகிறது.
    ஆல்கஹால் அருந்துவதால் செக்ஸில் நன்றாக ஈடுபட முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் பரவலாக இருக்கிறது. மது செயல்திறனை மட்டுமல்ல; செக்ஸின் மீதான ஆர்வத்தையும் குறைத்துவிடும்.
    ஆல்கஹால் அருந்துவதால் செக்ஸில் நன்றாக ஈடுபட முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் பரவலாக இருக்கிறது. இந்த மூட நம்பிக்கைக்கு ஷேக்ஸ்பியரின் பிரபலமான ஒரு வாசகத்தை உதாரணமாக சொல்ல லாம்... ‘Alcohol may increase your desire, but it takes away the performance'. இதில் பாதிதான் உண்மை. மது செயல்திறனை மட்டுமல்ல; செக்ஸின் மீதான ஆர்வத்தையும் குறைத்துவிடும்.

    மது அருந்துவதால் மனத்தடை ஒருவிதத்தில் குறைகிறது என்பது உண்மையே. என்ன செய்கிறோம் என்பது கூட சில நேரங்களில் தெரியாது. அது, மத்திய நரம்பு மண்டலத்தின் செயல்களை கட்டுப்படுத்தி விடுகிறது. மது அருந்தி இருந்தால், உடலுறவு கொள்ளும்போது நேரத்தின் மீது கவனம் இருக்காது. அதிக நேரம் ஈடுபட்டது போன்ற ஓர் உணர்வைக் கொடுக்கும். அது உண்மை இல்லை.

    தொடர்ந்து மது அருந்துவதால் கல்லீரல் பாதிப்படையும். ஆணுக்கு செக்ஸ்   ஹார்மோன் சுரக்கும் போது, கல்லீரல்தான் அதைப் பக்குவப்படுத்தி உடலுக்கு அனுப்பி வைக்கிறது. கல்லீரல் பாதிப்படைவதால், ஹார்மோன் சுரப்பு   சரியாக இருந்தாலும், உடலால் அதன் வேலைகளை சரியாக செய்ய இயலாது.



    இதனால்தான் ஆணுக்கு விறைப்புத்தன்மை குறைகிறது... பெண்ணுக்கு செக்ஸில் ஈடுபாடு வராமல் போகிறது. சிலர், ‘மன அழுத்தத்தைக் குறைக்க, பப்பில் ஆடுகிறோம்’ என்பார்கள். மது அருந்திவிட்டு ஆடினால் மன அழுத்தம் குறையாது. இரைச்சலான இசைக்கு ஆடுவதால், மன அழுத்தத்தை அதிகரிக்க சுரக்கும் அட்ரினலின் போன்ற ஹார்மோன்கள் அதிகமாக சுரந்து உடல்நலனைக் கெடுக்கும்.  

    அளவுக்கு மிஞ்சிய போதை, நண்பர்களோடு கண்மண் தெரியாமல் டான்ஸ் ஆடுவதையும் சண்டை போடுவதையும் சகஜமாக்கிவிடும். இதை நாகரிகம் என்று சொல்ல முடியாது. மது அருந்துவதால் வாயில் ஒரு வகை துர்நாற்றம் ஏற்படும். கணவனோ, மனைவியோ ஒருவருக்கொருவர் முத்தம் கொடுக்கும் போது நாற்றம் அடிக்கும்... பார்ட்னர் மீது அருவெறுப்பு ஏற்படும். செக்ஸ் தூண்டுதல் ஏற்படும் என்பதற்காக குடிக்கும் மது, செக்ஸ் வாழ்க்கையை பாதிக்கும் என்பதே உண்மை.

    மது தாம்பத்திய வாழ்க்கையை மட்டும் பாதிப்பதில்லை. நம்மை அதற்கு அடிமையாக்கி, பொருளாதாரத்தையும் உடல் நலத்தையும் சேர்த்தே அழித்துவிடும்
    வெந்தயக்கீரை ஜீரண சக்தியை அதிகரித்து பசியை தூண்டுகிறது. சிறுநீர் உறுப்புகளை சுத்தம் செய்கிறது. இன்று இந்த கீரையை வைத்து சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சரிசி - 1 கப்,
    வெந்தயக்கீரை - 1 கட்டு,
    தக்காளி - 1,
    வெங்காயம் - 1,
    இஞ்சி - 1 துண்டு,
    பூண்டு - 5 பல்,
    பச்சை மிளகாய் - 3,
    மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் - தலா அரை டீஸ்பூன்,
    சீரகத்தூள், தனியாத்தூள், கரம் மசாலா - தலா 1 டீஸ்பூன்,
    தேங்காய்ப்பால் - ஒரு கப்,
    எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்,
    உப்பு - தேவைக்கு.



    செய்முறை :

    வெந்தயக்கீரையில் இலையை மட்டும் ஆய்ந்து நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இஞ்சி, பூண்டு, மிளகாயை நசுக்கி கொள்ளவும்.

    குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நசுக்கி வைத்த பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாயை போட்டு வதக்குங்கள்.

    பிறகு வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.

    தக்காளி குழைய வதங்கியதும் கீரையை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள், தனியாத்தூள், கரம் மசாலா சேர்த்து வதக்குங்கள்.

    பச்சை வாடை போனதும், இந்தக் கலவையோடு தேங்காய்ப்பால், நான்கு கப் தண்ணீர், தேவையான உப்பு, அரிசி ஆகியவற்றைச் சேர்த்து வேக வையுங்கள். ஒரு விசில் வந்ததும் தீயை மிதமாக்கி, இரண்டு நிமிடங்கள் வைத்து இறக்குங்கள்.

    சூப்பரான சத்தான வெந்தயக்கீரை சாதம் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    டயட் என்கிற பெயரில் கொழுப்புச்சத்தை அறவே தவிர்ப்பவர்களுக்கு கூந்தல் நுனிப் பிளவு பிரச்சனை எளிதில் பாதிக்கும். கூந்தலுக்குத் தேவையான ஈரப்பதமும் வழுவழுப்புத் தன்மையும் இருந்தால்தான் அது வறண்டு போகாமலும் வெடிக்காமலும் இருக்கும்.
    பெரும்பாலானவர்களின் முடியை உற்றுப் பார்த்தால் அது உடைந்து, நுனிகளில் வெடித்து, உயிரற்றுக் காணப்படுவது தெரியும். கூந்தல் நுனிப் பிளவு என்பது மிகவும் பரவலான ஒரு பிரச்சனை. அதற்கான காரணங்களை அறிந்து கொள்ளலாம்.

    காரணங்கள்...

    * ஊட்டச்சத்தில்லாத உணவு.

    * முடியை பின்னோக்கி வாருவது, ஈரமாக இருக்கும் போது வாருவது (ஈரத்தில் சீவும் போது, முடியானது 25 சதவிகிதம் அதிகமாக இழுக்கப்படவும் உடையவும் கூடும்), நிறைய நிறைய பிரஷ் செய்வது.

    * கடுமையான கெமிக்கல் சிகிச்சைகள்... சரியான முறையில் செய்யப்படாவிட்டாலோ, சிகிச்சைக்குப் பிறகான முறையான பராமரிப்பு இல்லாவிட்டாலோ கூந்தல் நுனிகள் வெடிக்கும்.

    * கூந்தலை உலர்த்த டிரையர் உபயோகிப்பவர்களுக்கு நுனிகள் அதிகம் வெடிக்கும். முடிந்தவரை இயற்கையான முறையில் உலரச் செய்வதே நல்லது. முடியாத
    பட்சத்தில் டிரையரின் சூட்டைத் தணித்தும், சற்றே தள்ளி வைத்தும் உபயோகிக்கலாம்.

    * ஈரமான கூந்தலை டவல் கொண்டு பரபரவென அழுத்தித் தேய்ப்பதும் இதற்கொரு காரணம்.

    தீர்வுகள்

    * டயட் என்கிற பெயரில் கொழுப்புச்சத்தை அறவே தவிர்ப்பவர்களுக்கு இந்தப் பிரச்சனை எளிதில் பாதிக்கும். கூந்தலுக்குத் தேவையான ஈரப்பதமும் வழுவழுப்புத் தன்மையும் இருந்தால்தான் அது வறண்டு போகாமலும் வெடிக்காமலும் இருக்கும். எனவே காய்கறிகள், பழங்கள், ஆலிவ் ஆயில், மீன், முட்டை மற்றும் முளைகட்டிய பயறு போன்றவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    * எலாஸ்டிக் ஹேர் பேண்டுகள் உபயோகிப்பதைத் தவிர்க்கவும்.

    * தலைக்குக் குளித்ததும், டவலால் மென்மையாகத் துடைத்து ஈரம் போனதும், சிலிகான் கலந்த சீரத்தை முடியில் தடவிக் கொண்டு, அகலமான பற்கள் கொண்ட சீப்பினால் வாரி விடலாம்.

    * டூவீலரிலோ, பேருந்து மற்றும் ரயிலில் ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்தபடியோ பயணம் செய்கிற போது, கூந்தலை விரித்து விடாமல், ஒரு துணியால் மூடியபடி கட்டிக்கொள்ள வேண்டியது அவசியம். இதையெல்லாம் தாண்டியும் கூந்தல் வெடிப்பும் நுனிப் பிளவும் சரியாகாவிட்டால், ட்ரைகாலஜிஸ்டை அணுகி, சரியான காரணத்தையும், அதற்கான தீர்வையும் கண்டறியலாம்.

    நன்கு பழுத்த அவகடோ (பட்டர் ஃப்ரூட்) - பாதி, நன்கு கனிந்த வாழைப்பழம் - பாதி, 1 முட்டை, 1 டீஸ்பூன் கற்றாழை ஜெல் - எல்லாவற்றையும் நன்கு கலந்து அடிக்கவும். கூந்தலின் மேல் பாகம் தொடங்கி நுனி வரை தடவி, 1 மணி நேரம் ஊற வைத்து அலசவும்.

    * புரோட்டீன் அதிகமுள்ள உணவுகளை சேர்த்துக் கொள்ளவும். பொரித்த மற்றும் இனிப்பு சேர்த்த உணவுகளைத் தவிர்க்கவும்.

    * 4 வாரங்களுக்கு ஒரு முறை கூந்தலின் நுனிப் பகுதிகளை வெட்டி விடவும். இது கூந்தல் நுனிப் பிளவுகளை அதிகரிக்காமல் காக்கும்.

    * தினமும் ஷாம்பு போட்டுக் குளிப்பதைத் தவிர்க்கவும்.

    * கூந்தலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கு ரத்த ஓட்டம் அவசியம். எனவே வாரம் ஒரு முறையாவது கூந்தலின் வேர்க்கால்களை நன்கு மசாஜ் செய்து விடவும். அதிக எண்ணெய் பசையான கூந்தல் உள்ளவர்கள் மசாஜ் செய்வதைத் தவிர்க்கவும்.

    * கூந்தலின் வேர் பகுதிகள்தான் சீபம் என்கிற எண்ணெய் பசையைச் சுரப்பவை. எனவே அந்தப் பகுதிகளுக்கு போதுமான கண்டிஷனிங் கிடைத்து விடும். கூந்தலின் நுனிப் பகுதிகளில் கண்டிஷனர் தடவி, காத்திருந்து அலச வேண்டியது முக்கியம்.

    * உடைந்த கூந்தலில் வெதுவெதுப்பான ஆலிவ் ஆயிலை தடவி, மேலே ஒரு பிளாஸ்டிக் கவரால் சுற்றிக் கொண்டு எவ்வளவு நேரம் முடியுமோ (முடிந்தால் இரவு முழுக்கக் கூட) இருந்துவிட்டு, பிறகு அலசலாம்.
    அயோடின் என்பது ஒரு வகையான சத்துப்பொருள்.தைராக்ஸின் ஹார்மோன் சுரப்பதில் பாதிப்பு ஏற்படுவதால் தைராய்டு குறைபாட்டை உருவாக்குவது அயோடின் பற்றாக்குறைதான்.
    மனித உடலுக்கு தினசரி மிகக் குறைவான அளவே ‘150 மைக்ரோ கிராம்’ அயோடின் தேவைப்படுகிறது. குறைவாகத்தானே தேவைப்படுகிறது. இது இல்லாவிட்டால் என்ன? மற்றச் சத்துகள்தான் நிறையவே இருக்கிறது என்று அலட்சியமாக இருந்தால் அவதி தான். முதலில் அயோடின் என்றால் என்ன என்று கேட்டால் பலரும் அது ஒரு வகையான உப்பு என நினைப்பதுண்டு. ஆனால், அது தவறானது. அயோடின் என்பது ஒரு வகையான சத்துப்பொருள்.

    ஆறு, நதி, ஏரி போன்ற நீர்நிலைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் இயற்கையாகவே அயோடின் அதிகமாக காணப்படும். குறிப்பாக, நீர்நிலைகளின் மணற்பரப்பி லும் அயோடின் ஏராளமாக இருக்கும். இந்த அயோடின்தான் கடல்நீரிலும் மிகுந்து காணப்படுகிறது. உப்பில் அயோடின் ஒளிந்திருக்கும் ரகசியம் இதுதான். பச்சைத் தாவரங்களிலும் அயோடின் உள்ளது.

    இயற்கையான நீர் நிலைகளின் மூலமாக மனிதர்களுக்குக் கிடைக்க வேண்டிய அயோடின் சத்து பல நேரங்களில் கிடைக்காமல் போய்விடுகிறது. இதனால் அயோடின் சத்து குறைபாடு அதிகம் ஏற்படுகிறது. இதனால் பலவிதமான பாதிப்புகள் உருவாகின்றன. முக்கியமாக தைராக்ஸின் ஹார்மோன் சுரப்பதில் பாதிப்பு ஏற்படுவதால் தைராய்டு குறைபாட்டை உருவாக்குவது அயோடின் பற்றாக்குறைதான்.

    சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் மனிதர்களின் உடல் உயரம் மற்றும் பருமனை நிர்ணயிப்பது இது தான். சிலர் உயரமாகவும், சிலர் குள்ளமாகவும், சிலர் பருமனாகவும் இருப்பதற்கு இந்த அயோடினே காரணம். மேலும் அயோடின் பற்றாக்குறை குழந்தைகளில் உடல் வளர்ச்சி மற்றும் மூளை செயல்பாட்டை மந்தமாக்குகிறது. இதனால், பள்ளிப் படிப்பில் செயல்திறன் குறைந்துவிடுகிறது.



    மனித உடல் வளர்ச்சியில் வேறுபாடுகளை உருவாக்குவது, உடலிலுள்ள தைராய்டு சுரப்பிகளின் வேலை. இந்த தைராய்டு சுரப்பிகள் கழுத்தில் முன்பக்கமாக குரல் வளைக்கு கீழ் அமைந்துள்ளன. பக்கத்துக்கு ஒன்றாக இரு சுரப்பிகள் இருக்கின்றன. சுமார் 25 கிராம் எடையுள்ள இவை ஒரு திசு மூலம் ஒன்றோடு ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன. இவைகளில் இருந்து தைராக்ஸின் என்ற ஹார்மோன் சுரக்கிறது. இது உடலில் வளர்சிதை மாற்றத்தை கட்டுப்படுத்துகிறது. உடலில் உள்ள அயோடினில் பெரும்பகுதி தைரோகுளோபின் என்ற பொருளாக இருக்கிறது.

    காரணம் இல்லாமல் உடல் எடை அதிகரிப்பது அல்லது குறைவது, மலட்டுத் தன்மை, முடி உதிர்வு, சருமத்தில் வறட்சி, குளிர், வெப்பத்தை தாங்க முடியாமை, களைப்பு, மனச் சோர்வு, அதிக வியர்வை, படபடப்பு, எப்போதும் தூக்க கலக்கம், மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு, கழுத்தில் வீக்கம் போன்றவை அயோடின் குறைபாட்டுக்கான அறிகுறிகளாக இருக்கின்றன. ஆண்களுடன் ஒப்பிடும் போது பெண்களுக்கு தைராய்டு ஏற்படும் அபாயம் 5 மடங்கு அதிகம்.

    அயோடின் சத்து உடலில் குறைந்தால் பல்வேறு நோய்கள் உருவாவதை தடுக்க முடியாது. இதில், ஹைபோ தைராய்டிசன் நோய் அபாயகரமானது. இந்நோய் ஏற்பட்டால் கழுத்தில் உள்ள தைராய்டு சுரப்பி வீக்கமடைந்து கழுத்தின் முன் பக்கம் பெரிய கட்டிப் போல் பெருத்துவிடும்.அப்போது தைராய்டு சுரப்பி குறைந்த அளவில் வேலை செய்யும். அதன் விளைவு எடை அதிகரிப்பு, பசியின்மை, குறைவான இதயத் துடிப்பு, குறைந்த வளர்சிதை மாற்றம், மனவளர்ச்சி பாதிப்பு போன்றவை ஏற்படும்.
    படிக்கும் படிப்பு எதுவாக இருந்தாலும் திரைப்படங்களில் காட்டப்படுகின்ற மாதிரியான ஒரு கல்லூரி வாழ்க்கை அமைய வேண்டும் என்பதே பல மாணவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
    நம் ஒவ்வொருவருக்கும் பள்ளியில் படிக்கும் போதே கல்லூரி வாழ்க்கையை பற்றிய பல கனவுகள் இருந்திருக்கும். முக்கியமாக கிராமப்புற பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் நகர்ப்புறங்களில் உள்ள கல்லூரிகளில் படிக்கவே ஆர்வம் காட்டுகின்றனர். படிக்கும் படிப்பு எதுவாக இருந்தாலும் திரைப்படங்களில் காட்டப்படுகின்ற மாதிரியான ஒரு கல்லூரி வாழ்க்கை அமைய வேண்டும் என்பதே பல மாணவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    சில ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் திரைப்படங்களின் தாக்கம் மட்டுமே கல்லூரி மாணவர்களிடம் அதிகமாக இருந்து வந்தது. ஆனால் தற்போதைய காலகட்டத்தில் செல்போன் பயன்பாடு கல்லூரி மாணவர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. சராசரியாக ஒரு நாளைக்கு சுமார் முன்னூறு முறைக்கும் மேல் செல்போனால் கல்லூரி மாணவனின் கவனம் சிதறுகிறது.

    அதேபோல செல்போனால் சராசரியாக நானூறு முறைக்கு மேல் மாணவிகளின் கவனம் சிதறுவதாகவும் ஆய்வுகள் கூறுகிறது. ஒரு கசப்பான உண்மை என்னவென்றால் இதுவரை இல்லாத அளவிற்கு கல்லூரி மாணவர்களிடம் கவனச்சிதறல் பெருமளவு அதிகரித்துள்ளது. இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியால் பல்வேறு வேலைகளை ஒரே நேரத்தில் செய்யும் கட்டாயம் ஏற்படுவதால் மாணவர்களின் ஒருமுகப்படுத்தும் திறனும் பாதிக்கப்படுவதாக அண்மையில் நடந்த பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    எப்போதும் தங்களை ஒருவித உற்சாக மனநிலையில் வைத்துக்கொள்ள கல்லூரி மாணவர்கள் அதிகம் கவனம் செலுத்துகின்றனர். இதனால் அதிகமாக பொழுதுபோக்கு சாதனங்களை நாடுகின்றனர். அதன் காரணமாக நேர பற்றாக்குறை ஏற்பட்டு அன்றாட வேலைகளை சரிவர செய்ய இயலாமல் பின்னடைவு ஏற்பட்டு தாழ்வுமனப்பான்மை மற்றும் குற்ற உணர்ச்சியால் தவிக்கின்றனர்.

    கணினி மற்றும் செல்போன் விளையாட்டுகளை தொடர்ந்து பல மணிநேரம் ஒரே இடத்தில் அமர்ந்து விளையாடுவதனால் பல்வேறு நோய்களுடன் இதயக் கோளாறுகளும் இளம் வயதிலேயே வந்துவிடுகின்றன. எந்த நேரமும் சமூக வலைத்தளங்களில் நேரம் செலவிடுவதால் நல்ல புத்தகங்களை படிக்கும் பழக்கம் கல்லூரி மாணவர்களிடையே வெகுவாக குறைந்து வருகிறது. மேலும் பாட புத்தகங்கள் படிப்பதிலும் நாட்டமின்றி வெறும் தேர்வுக்காக மட்டுமே படிக்கும் அவர்கள் நேர்முக தேர்வுகளில் கேட்கப்படும் அடிப்படை கேள்விகளுக்கு கூட பதில் தெரியாமல் தடுமாறுகின்றனர்.

    டீன்ஏஜ் என்னும் இந்த விடலை பருவத்தில் தொடங்கும் கல்லூரி வாழ்க்கை பேராசிரியர்கள் சொல்லித்தரும் பாடங்களை தாண்டி பல அனுபவ பாடங்களையும், படிப்பினைகளையும் சேர்த்தே சொல்லி தருகின்றன. கல்லூரி பருவமும், மாணவப்பருவம் தான் என்பதை சரிவர உணராமல் வயதிற்கு மீறிய செயல்களான படிப்பின் போதே திருமணம், போதை மருந்து பழக்கம், பகைமை உணர்வு போன்றவற்றால் உடல்நலத்துடன் உள்ளநலத்தையும் வீணாக்கி கல்லூரி படிப்பில் பலர் தோல்வி அடைகின்றனர். இத்தகைய நிலைக்கு திரைப்படங்களும், சமூக ஊடகங்களும் ஒரு பெரிய உந்துசக்தியாக செயல்படுகிறது என்பதை நிச்சயம் மறுக்க முடியாது.

    செய்துதான் பார்க்கலாமே வீட்டுக்கா தெரியப்போகிறது யார் பார்க்க போகிறார்கள் என சில கூடா நட்பின் தவறான ஊக்கத்தினால் பல தீயப்பழக்கங்கள் கல்லூரி பருவத்திலேயே மாணவர்களிடம் வந்து சேர்ந்துகொள்கிறது. கல்லூரி வாழ்க்கையில் எந்தெந்த பழக்கங்கள் தொற்றிக்கொள்கிறதோ, அதுவே வாழ்க்கையின் அடுத்த பகுதிக்கும் பின் தொடரும். ஆகவே கவனச்சிதறலில் இருந்து நம்மை காத்துக்கொள்ள பின்வரும் முறைகளை பின்பற்றினால் உதவியாக இருக்கும்.

    வகுப்பறையில் செல்போனின் இணைய சேவையை அணைத்து வைப்பது நல்லது. இதனால் “நோட்டிபிகேசனால்” உண்டாகும் கவனச்சிதறலை பெருமளவு தவிர்க்கலாம். வாரத்தில் இரண்டு நாட்கள் கட்டாயமாக இணைய பயன்பாட்டை தவிர்த்து நல்ல புத்தகங்களை படிக்க முயற்சிக்கலாம். இதை ஜப்பான் நாட்டில் தற்போது “இன்டர்நெட் பாஸ்டிங்” என்ற முறையில் பின்பற்ற தொடங்கி உள்ளனர். தேர்வுக்கு பத்து நாட்கள் முன்பிலிருந்து இணைய வசதி இல்லாத சாதாரண தொலைபேசியை உபயோகிப்பதால் தேவையற்ற கவனச்சிதறலை தவிர்த்து தேர்விற்கு முழுமையாக தயாராகலாம். வெறும் பொழுதுபோக்கிற்காக உருவாக்கப்படும் சில வாட்ஸ் அப் குழுக்களில் இருந்து வெளியே வருவதால் தேவையற்ற எண்ணங்களின் பாதிப்பிலிருந்து மனது தப்பிக்கும். அதுமட்டுமின்றி நேரடியாக அறிமுகம் இல்லாத நபர்களை சமூக வலைத்தளங்களின் நட்பு வட்டாரத்தில் சேர்ப்பதை தவிர்ப்பதால் வீண் பிரச்சினைகள் தவிர்க்கப்படும்.

    நேரம் கிடைக்கும் போது குழுவாக வெளியில் சென்று விளையாடுவதினால் மன ஆரோக்கியத்துடன், உடல் ஆரோக்கியமும் மேம்படும். மேலும் கல்லூரிகளுக்கு இடையே நடக்கும் பல்வேறு போட்டிகளில் பங்கு பெறுவதின் மூலம் செயல்திறனையும் அதிகரிக்கலாம். அனைத்திற்கும் மேலாக பெற்றோர் மற்றும் சகோதரர்களை தினசரி சந்திக்க முடியாவிட்டாலும் தொலைபேசி வாயிலாக அவர்களிடம் பேசி நேரத்தை செலவழித்தால் கல்லூரி நேரத்தில் ஏற்படும் மன அழுத்தங்கள் வெகுவாக குறையும்.

    கல்லூரி வாழ்க்கை மட்டுமல்ல அதையும் தாண்டி கவலையற்ற முழுமையான வாழ்க்கை வாழ புதிய தகவல்களை தெரிந்துகொள்ளும் ஆர்வமும், வாழ்க்கையில் முழுமையான ஈடுபாடும், எதையும் சவாலாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும் அவசியம் தேவை.

    ஆக மொத்தத்தில் இன்றைய நவீன உலகின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கல்லூரி வாழ்க்கையில் சக மாணவர்களிடம் நட்பு பாராட்டி ஆசிரியர் மற்றும் பெற்றோர் கொடுக்கும் ஊக்கம் மற்றும் வழிகாட்டுதலை பின்பற்றினால் இன்றைய இளைய தலைமுறை கவனச்சிதறல்களை உடைத்தெறிந்து உயர்ந்த குறிக்கோள்களை சுலபமாக அடையலாம்.

    இரா.ராஜ்குமார், உதவி பேராசிரியர்,

    கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை, தனியார் தொழில்நுட்ப கல்வி நிறுவனம், சென்னை.
    மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு முட்டை பஜ்ஜி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த பஜ்ஜியை செயவ்து எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முட்டை - 6
    கடலை மாவு - 100 கிராம்
    மிளகாய்தூள் - 2 டீஸ்பூன்
    சமையல் சோடா - சிறிதளவு
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை:

    முட்டைகளை வேகவைத்துகொள்ளவும். பிறகு உடைத்து, அதனை இரண்டு துண்டு களாக வெட்டிக்கொள்ளவும்.

    அகன்ற பாத்திரத்தில் கடலை மாவை கொட்டி அதனுடன் சமையல் சோடா, மிளகாய்தூள், உப்பு சேர்த்து தோசை மாவு பதத்துக்கு கரைத்துக்கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவு கலவையில் முட்டை துண்டுகளை முக்கி எடுத்து சூடான எண்ணெயில் பொரிக்கவும். பொன்னிறமாக மாறியதும் எடுத்து சுவைக்கலாம்.

    சூப்பரான முட்டை பஜ்ஜி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மணவாழ்க்கையும், அதன் மூலம் உருவாகும் பிணைப்பும், நம்பிக்கையும் மற்ற எல்லாவற்றையும் விட மனிதர்களுக்கு உயர்ந்தது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    கணவர் கண்ணீர்விட்டு அழுதுகொண்டிருந்தார். மனைவி குத்துக்கல் போன்று அமர்ந்திருந்தாள். அவர் அழுதுகொண்டே சொன்ன கசப்பான உண்மை உள்ளபடியே சமூகத்திற்கு கவலையளிப்பதுதான். அதாவது அவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்திருக்கிறார்கள். அவர் நாற்பது வயதை தொட்டுக்கொண்டிருக்கிறார். மனைவிக்கு முப்பது வயது. அவர்களுக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது.

    “எங்களுக்கு திருமணமாகி ஏழு வருடங்கள் ஆகியிருக்கிறது. நான் இவளுக்கு எந்த குறையும் வைக்கவில்லை. நான் முதலில் சம்பளத்திற்குதான் லாரி ஓட்டினேன். இவளை திருமணம் செய்த பின்பு சொந்தமாக லாரி வாங்கியதால் இவளை என் உள்ளங்கையில் வைத்து தாங்கினேன். அவ்வப்போது லோடு ஏற்றிக்கொண்டு வெளியூர் சென்றுவிடுவேன். அப்போது இவளுக்கும், இவளைவிட ரொம்ப வயது குறைந்த கல்லூரி மாணவன் ஒருவனுக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது..” அதற்கு மேல் அவரால் பேசமுடியவில்லை. தன்னிலை மறந்து குலுங்கிக் குலுங்கி அழுதார்.

    இவர் லோடு ஏற்றிக்கொண்டு வட மாநிலத்திற்கு சென்றிருந்தபோது, இவள் திடீரென்று அந்த இளைஞனோடு வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறாள். குழந்தையையும் தன்னோடு அழைத்துச்சென்றிருக்கிறாள். பத்து நாட்கள் கடந்த பின்பே இவருக்கு விஷயம் தெரிந்திருக்கிறது. எப்படியோ அலைந்து திரிந்து அவர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்துள்ளார்.

    அங்கே சென்றதும் குழந்தை அப்பாவிடம் ஓடிவந்துவிட்டது. மனைவியோ அந்த இளைஞனிடம் இருந்து பிரிய மறுத்திருக்கிறாள். ஆனால் கல்லூரி படிப்பை தொடரமுடியாத கவலையிலும், தனது ஏழ்மை நிலையை பற்றிய வருத்தத்திலும் அந்த இளைஞன் இருந்திருக்கிறான். தப்பு செய்துவிட்டோமே எப்படி தப்பிப்பது என்ற எண்ணத்தில் இருந்த அந்த இளைஞனிடம் இவர், வாழ்க்கையின் யதார்த்தத்தையும் அவனது எதிர்காலத்தையும் பற்றி எடுத்துக்கூறியிருக்கிறார். அதனால் அவன், அவளுடனான தனது தவறான உறவில் இருந்து விடுபட முன்வந்து, ‘இனிமேல் தன்னை தொடர்பு கொள்ளவேண்டாம்’ என்று அவளிடம் கூறிக்கொண்டு, அந்த வீட்டைவிட்டு வெளியேறியிருக்கிறான்.

    அதன் பிறகு இவளிடம், அவமானமாக இருக்கிறதே இப்படி ஏன் நடந்துகொண்டாய்? என்று கேட்டு, குழந்தையின் எதிர்காலத்தை எல்லாம் எடுத்துச்சொல்லி, அவளை மன்னித்து, ஏற்று தன்னோடு அழைத்து வந்திருக்கிறார்.

    கண்கலங்க பேசிக்கொண்டிருந்தவரிடம், ‘இப்போது என்ன பிரச்சினை?’ என்று கேட்டதும், மீண்டும் கண்ணீர் பொங்கிவந்தது அவருக்கு. ‘இவள் என்னோடு மகிழ்ச்சியாக குடும்பம் நடத்துவதில்லை. அடிக்கடி தேவையே இல்லாமல் குழந்தையை அடிக்கிறாள். அவள் வாழ்க்கையை நான் நாசப்படுத்திவிட்டேன் என்றும், அந்த இளைஞனிடம் இருந்து பிரித்து அவள் மகிழ்ச்சியை நான் கெடுத்துவிட்டதாகவும் சொல்கிறாள். என்னால் நிம்மதியாக லாரி ஓட்டும் தொழிலை செய்யமுடியவில்லை. பயத்துடன் வாழ்கிறேன்’ என்றார்.

    இதே போன்று இன்னொரு சம்பவம். 50 வயது அரசு அதிகாரியோடு, 45 வயதான அவரது மனைவி வந்திருந்தார். அந்த அதிகாரியிடம் துறை சார்ந்த பயிற்சி ஒன்றுக்கு 28 வயதான இளம் பெண் வந்திருக்கிறாள். அவர்களுக்குள் தேவையற்ற நெருக்கம் ஏற்பட்டிருக்கிறது.

    அவரது மனைவி என்னிடம், ‘எங்களுக்கு திருமணமாகி 25 வருடங்கள் ஆகியிருக்கின்றன. இவரது உடலளவிலோ, மனதளவிலோ சின்னச்சின்ன மாற்றங்கள் ஏற்பட்டால்கூட நான் கண்டுபிடித்துவிடுவேன். திடீரென்று இவர் தூக்கமின்மையால் அவதிப்பட்டார். எதையோ நினைத்து பயம்கொள்ளத் தொடங்கினார். அடிக்கடி நள்ளிரவு கடந்த பின்பு வீட்டிற்கு வருவது வழக்கமானது.

    நான் உண்மையை சொல்லுங்கள் என்று கட்டாயப்படுத்திய பின்பு தனது வாழ்வியல் முறை மாற்றங்களுக்கு அந்த பெண்ணோடு ஏற்பட்டிருக்கும் தொடர்புதான் காரணம் என்றார். எனக்கு முதலில் ஆத்திரம் வந்தாலும் அதை அடக்கிக்கொண்டு அந்த பெண்ணிடம் போய் பேசினேன். அவள் ஏழைப்பெண். இவரது பதவியையும், இவரிடம் புழங்கும் பணத்தையும் பார்த்து சுயநலத்தோடு பழகியிருக்கிறாள். எங்களுக்கு திருமண வயதில் மகன் இருக்கிறான். எல்லாவற்றையும் பேசி, அவளுக்கு உண்மையை புரியவைத்தேன். கொஞ்சம் பணம் செலவானது. அவளும் விலகிவிட்டாள். இவரும், இனி ஒழுங்காக இருப்பேன் என்றார்.

    ஆனால் இவர் இப்போது நிம்மதியாக இல்லை. முன்புபோல் நன்றாக உடை அணிவதில்லை. மகிழ்ச்சியாக நடந்துகொள்வதில்லை. என்னோடு வெளியே வருவதும் இல்லை. எப்போதும் வீட்டில் முடங்கிக் கிடக்கிறார். அலுவலகத்திற்கு போகச்சொன்னால், விருப்ப ஓய்வு பெற்றுவிடப்போவதாக சொல்கிறார். அவ்வப்போது அந்த பெண்ணின் நினைவுகளில் மூழ்கி, அவள் எங்கே இருக்கிறாள் என்றெல்லாம் இவரது அலுவலக நண்பர்களிடம் விசாரிக்கிறார். எங்கள் மகனுக்கு இதெல்லாம் தெரிந்துவிட்டால் இவரது மானம், மரியாதை எல்லாம் காற்றில் பறந்துவிடும். இவரே தன்னை காட்டிக்கொடுத்து மரியாதையை கெடுத்துக்கொள்வார் போல் தெரிகிறது. நான் என்ன செய்வது?’ என்று கேட்டார்.

    இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. மிகப்பெரிய சமூக பிரச்சினையாகவும் உருவெடுத்திருக்கிறது. இது குடும்பத்தின் கட்டுறுதியையும், கணவனும் மனைவியும் ஒருவர் இன்னொருவர் மீது வைத்திருக்கும் ஆழமான நம்பிக்கையையும் அசைத்துப்பார்க்கிறது. இதில் குறிப்பிடத்தக்க மாற்றம் என்னவென்றால், ‘நம்மில் யாராவது ஒருசிலரது வாழ்க்கையில்கூட இப்படிப்பட்ட தொடர்புகள் ஏற்படவும் செய்யலாம்’ என்ற முன்ஜாக்கிரதை உணர்வு ஆணுக்கும், பெண்ணுக்கும் இப்போது ஏற்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட தொடர்பு ஏற்பட்டால் இருக்கிற நிம்மதியும், மகிழ்ச்சியும் இல்லாமல் போய்விடும் என்பதும் அவர்களுக்கு புரிகிறது. அதனால் பெரும்பாலானவர்கள், முதலிலே தேவைக்கு அதிகமாக எதிர்பாலினரிடம் நெருங்குவதில்லை. எல்லையை வகுத்துக்கொண்டு அதற்கு தகுந்தபடி பழகிக்கொள்கிறார்கள்.



    இரண்டாவது விஷயம்! அந்த முன்ஜாக்கிரதை உணர்வையும் மீறி கணவருக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்போ, மனைவிக்கு இன்னொரு ஆணுடன் தொடர்போ ஏற்பட்டுவிட்டாலும், அதை அறியும்போது பெரும்பாலானவர்கள் ஆத்திரப்பட்டு விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுவதில்லை. உடனே அவசரப்பட்டு விவாகரத்து செய்துவிடுவேன் என்று மிரட்டி, அதற்கான நடவடிக்கைகளிலும் இறங்குவதில்லை. அவர்கள் நிதானமாக அந்த பிரச்சினையை கையாள முன்வருகிறார்கள்.

    ‘முன்பின் யோசிக்காமல் எப்படியோ அதில் சிக்கியுள்ளார். எப்படியாவது அதில் இருந்து அவரை மீட்டுக்கொண்டுவர வேண்டும்’ என்று நினைத்து, மீட்கும் முயற்சிகளில் இறங்குகிறார்கள். அவர் செய்த குற்றத்தை மன்னித்து அவரை ஏற்றுக்கொள்ளவும் தயாராக இருக்கிறார்கள்.

    அப்படி ஏற்றுக்கொண்ட பின்பு என்ன நடக்கிறது? அவர்கள் எவ்வளவு கவனமாக மீதமுள்ள வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவேண்டும்? என்பதுதான் இப்போது நாம் சொல்ல வருகிற விஷயங்கள்.

    பிரச்சினைக்குரிய தொடர்பில் இருந்து தனது வாழ்க்கைத் துணையை பிரித்து, அவரை மீண்டும் தன்னோடு சேர்த்துக்கொள்வதற்கு (ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும்) மிகுந்த மனப்பக்குவம் தேவை. ஆனால் எப்போது அவரை ஏற்றுக்கொள்கிறோமோ அப்போதே நடந்து முடிந்த அந்த பழைய சம்பவங்களை முழுமையாக மனதில் இருந்து அழித்துவிட வேண்டும். பார்வையாலோ, பேச்சாலோ, செயலாலோ, ‘நீங்கள் அப்படிப்பட்ட ஆள்தானே’ என்ற அர்த்தம் தொனிக்கும் சூழலை உருவாக்கிவிடக்கூடாது. குத்திக்காட்டும் மனநிலை உருவாகிவிட்டால், மீண்டும் அவர்கள் எட்டிப்போகும் சூழ்நிலை தோன்றிவிடும்.

    பெரும்பாலும் இந்த மாதிரியான தவறான தொடர்புகளில் இருந்து விலகி, தனது வாழ்க்கைத்துணையோடு வந்து சேர்ந்துகொண்டவர்களிடம் நான்குவிதமான மன அழுத்த சிந்தனைகள் உருவாகின்றன.

    ஒன்று: தான் தவறு செய்துவிட்டோம் என்ற குற்ற உணர்வு.

    இரண்டு: தான் செய்த தவறு வாழ்க்கைத்துணைக்கு தெரிந்துவிட்டது என்ற தலைகுனிவு.

    மூன்று: பழைய தொடர்பில் இருந்தவரை (ஆண் அல்லது பெண்ணை) பற்றிய சிந்தனை.

    நான்கு: தன்னை தற்போது ஏற்றுக்கொண்ட வாழ்க்கைத்துணை என்றாவது ஒருநாள் அதை சுட்டிக்காட்டி தன்னை தண்டிப்பாரோ என்ற கவலை.

    இதைவைத்து பார்க்கும்போது ஏற்றுக்கொண்டவர் நிம்மதியாக இருப்பார். ஏற்றுக்கொள்ளப்பட்டவர் நிம்மதியின்றி தவிப்பார். ஒரே குடும்பத்திற்குள் இந்த தடுமாற்ற தவிப்பு அதிக நாட்கள் நீடிப்பது நல்லதல்ல. தவிப்பை அகற்றி, இடைவெளி இல்லாத நிலையை உருவாக்க கணவன்-மனைவி இருவரும் மனம்விட்டுப்பேச வேண்டும். அதற்கு முதலில், தங்கள் மனதில் இருக்கும் பழைய நினைவுகளையும், கசப்புகளையும் அகற்றவேண்டும். அகற்றுவதற்கு யோகா, தியானம், மியூசிக்தெரபி போன்றவைகளில் மனதை செலுத்தவேண்டும். மனதுக்கு பிடித்தவைகளில் நினைவை செலுத்தும்போது, தேவையற்ற பதிவுகள் கொஞ்சம் கொஞ்சமாக அகலும். மனதும் புத்துணர்ச்சி பெறும். வாழ்க்கையில் மீண்டும் வசந்தம் வீசும்.

    மணவாழ்க்கையும், அதன் மூலம் உருவாகும் பிணைப்பும், நம்பிக்கையும் மற்ற எல்லாவற்றையும் விட மனிதர்களுக்கு உயர்ந்தது. அதில் கறைபடிந்த பின்பு துடைக்கவும் முடியும். கைதவறி விழுந்த பின்பு ஒட்டவைக்கவும் முடியும். ஆனால் அதற்கு அதிக முயற்சியும், பயிற்சியும், பக்குவமும் தேவை என்பதால் கறைபடியாமலும், கைதவறாமலும் வாழ்க்கையை காப்பதே சிறந்தது.

    - விஜயலட்சுமி பந்தையன்.
    முகம் என்றும் பொலிவுடனும், மென்மையாகவும் இருக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய இயற்கை வழிமுறைகளை பின்பற்றி வந்தால் நல்ல பலனை காணலாம்.
    1. தக்காளிச் சாறு அரை ஸ்பூன், தேன் அரை ஸ்பூன், சமையல் சோடா ஒரு சிட்டிகை, மூன்றையும் கலந்து கழுத்தில் போட்டு வர கருவளையம் சிறிது நாளில் மறைந்துவிடும்.
     
    2. முகம் மற்றும் மேனி அழகிற்கு கடலைப் பருப்பு கால் கிலோ, பாசிப் பயறு கால் கிலோ, ஆவாரம் பூ காய வைத்தது 100 கிராம் என மூன்றையும் அரைத்து சோப்புக்கு பதிலாக பயன்படுத்தினால் பயன் கிடைக்கும்.
     
    3. முகப்பரு தழும்பு மாற புதினா சாறு 2 ஸ்பூன், எலுமிச்சைசாறு ஒரு ஸ்பூன், பயத்தம் பருப்பு மாவு இவற்றை கலந்து போட்டால் தழும்பு மாறும்.
     
    4. வெள்ளரிச்சாறு இரண்டு,ஸ்பூன், துளசிச்சாறு இரண்டு ஸ்பூன், புதினா சாறு அரை ஸ்பூன், எலுமிச்சைசாறு அரை ஸ்பூன் எடுத்து நன்றாக கலக்கி முகத்தில் தேய்த்து 15 நிமிடம் கழித்து கழுவினால் முகம் பட்டுப்போல் மென்மையாக இருக்கும்.
     
    5. உலர்ந்த சருமத்திற்கு கேரட்டை நன்றாக அரைத்து ஒரு ஸ்பூன் தேன் கலந்து 20 நிமிடம் முகத்தில் பூசி பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
     
    6. பாலை காய்ச்சும் போது அதிலிருந்து வரும் ஆவியில் முகத்தை காட்டி அந்த வியர்வையை துடைக்காமல் காயவிட்டு அரை மணி நேரம் கழித்து முகம்
    கழுவினால் முகம் பளபளப்பாகும்.
    தலைமுறைப் பெண்களின் ஏக்கம், விடுதலை வேட்கை, ஒரு பால் ஈர்ப்பு என பல விஷயங்கள் லெஸ்பியன் உறவைப் பெண்கள் ஏற்றுக் கொள்ளக் காரணம் ஆகிறது.
    பெண்ணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான ஒரு பால் ஈர்ப்புக்கு ஹார்மோன்கள் தான் காரணம். லெஸ்பியன் ஈர்ப்பு எல்லாக் காலத்திலும் இருந்து வருகிறது. லெஸ்பியன் உறவில் பெண்கள் 10 முதல் 15 சதவீதம் வரை உணர்ச்சி பெறுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தனக்கு மிகப் பிடித்த பெண்ணைக் கட்டிக் கொள்வதும், முத்தமிடுவதும் இன்று அதிகரித்து வருகிறது. வெளிநாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பிற பெண்களிடம் ஈடுபாடு கொண்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. இதில் 45 சதவீதம் பெண்கள் பிற பெண்களை முத்தமிட்டுள்ளனர். 50 சதவீதம் பேர் பிற பெண்களுடன் உறவில் ஈடுபட்டுள்ளனர்.

    அமெரிக்காவின் Boise university உளவியல்துறை பேராசிரியர் எலிசபெத் மோர்கன் மேற்கொண்ட ஆய்வில் கூறியுள்ளார்.ஆண்-பெண் உடலுறவில்தானே அதிகபட்ச இன்பம் பெற முடியும். பெண்ணும் பெண்ணும் எப்படி முழுமையான இன்பம் பெற முடியும் என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். பெண்ணும் பெண்ணும் காமுறும்போது அவள் கூடுதல் இன்பத்தை அடைகிறாள். மேலும் தனக்குத் தேவையானவற்றைத் தயக்கம் இன்றிக் கேட்டுப் பெறுகிறாள். ஒருவரைப் பேரின்பம் கொள்ளச் செய்வதில் மற்றவர் ஈடுபாடு காட்டுவதும் லெஸ்பியன் உறவின் பாசிட்டிவ் விஷயங்கள்.

    ஆணும் பெண்ணும் உறவு கொள்வதில் ஆண் தனது ஆதிக்க மனப்பான்மையையே வெளிப்படுத்துகிறான். பெண்ணை தனது மகிழ்வுக்காகத் தயார்படுத்தி, அதன்பிறகு தான் மட்டுமே பேரின்பம் அடைவதில் ஆண் கவனம் செலுத்துகிறான். தன்னோடு கூடும் பெண் எங்கே இன்பம் அடைகிறாள், எவையெல்லாம் அவளுக்குப் பிடிக்கும் என ஆண் கேட்பதுமில்லை; அவள் சொல்வதுமில்லை.

    ஒரு பெண்ணை ஆண்  கையாளும்போது முரட்டுத்தனமாக நடந்து கொள்ளும் வாய்ப்புகள் அதிகம். லெஸ்பியன் உறவில் இரு பெண்களும் மென்மையாக நடந்துகொள்கின்றனர். மேலும் இதில் குழந்தைப் பேறு ஏற்படுவதில்லை. இது போன்ற பாசிட்டிவ் காரணங்கள் பெண்கள் லெஸ்பியன் உறவை விரும்பக் காரணம் ஆகிறது. லெஸ்பியன் உறவை சமூகம் ஏற்றுக் கொள்ளாத நிலையில் பெண்கள் மத்தியில் இது பெரும்பாலும் ரகசியமாக உள்ளது.



    திருமணத்துக்குப் பின்னர் ஆண்-பெண் உறவில் முழுமை அடையாதபோது லெஸ்பியன் உறவில் பெண்கள் ஆர்வம் காட்ட வாய்ப்புண்டு. லெஸ்பியன் உறவில் பெண்கள் சுதந்திரமாகவும் கூடுதல் இன்பத்தையும் உணர்கின்றனர். தனக்கு பிடித்ததை எல்லாம் லெஸ்பியன் தோழியிடம் கேட்டுப் பெறுகின்றனர். மேலும் வைபரேட்டர் போன்ற செக்ஸ் உபகரணங்களைப் பயன்படுத்தியும் ஒருவரை ஒருவர் இன்பத்தில் திளைக்கச் செய்கின்றனர்.

    ஆண் - பெண் உறவில் ஆண் ஆதிக்கம் செலுத்துகிறான். லிவ்விங் டு கெதர் வாழ்க்கை முறையே ஆனாலும் ஆணிடம் இந்த ஆதிக்க மனோநிலை தவறுவதில்லை. மேலும் ஆணுடன் உறவு கொள்ளும்போது கர்ப்பம் தரித்து விடுவோமோ என்ற பயமும் தொற்றிக் கொள்கிறது. இவற்றை விரும்பாத பெண்களுக்கு லெஸ்பியன் உறவு சாதகமானதாகி விடுகிறது. சிறு வயதில் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகும் பெண்களுக்கு ஆண்களைப் பார்த்தாலே வெறுப்பு வரவும் வாய்ப்புண்டு. அந்த வயதில் ஏற்பட்ட மோசமான நிகழ்வால் ஆணுடனான செக்ஸ் உறவே வெறுத்துப் போகலாம்.

    சிறு வயதிலேயே பெண்கள் விடுதியில் தங்கிப் படிக்கும் பெண் குழந்தைகள் லெஸ்பியன் உறவில் சிக்குகின்றனர். பருவ வயதில் செக்ஸ் பற்றித் தெரிந்து கொள்ளும் ஆர்வம், பெண்கள் மட்டுமே இருக்கும் சூழலும் இவர்களிடையே லெஸ்பியன் உறவுக்கான வாய்ப்புக்களை அதிகரிக்கச் செய்கிறது. பெண்ணுக்கு பெண் மீதே ஈர்ப்பு ஏற்படுவதற்கு ஹார்மோன்கள்தான் காரணம். ஏதோ ஒரு சூழலில் பெண்கள் இதுபோன்ற உறவில் மாட்டிக் கொண்டிருக்கலாம்.

    இதனால் ஒரு புறம் பெண்களுக்கு செக்ஸ் இன்பம் கிடைத்தாலும், இது வெளியில் தெரிந்தால் என்னவாகும் என்ற பயம் மனதில் இருக்கும். லெஸ்பியன் உறவால் குடும்பத்தில் கணவன் மனைவி உறவில் விரிசல் உண்டாகும். இதனால் இவர்களை நம்பி இருக்கும் குழந்தைகளின் வாழ்வும் பாதிக்கப்படும். லெஸ்பியன் உறவுக்கு ஆளான சில பெண்கள் அதிலிருந்து வெளியில் வர விரும்புவார்கள். ஆனால், அவர்களின் பார்ட்னர் விடாமல் தொந்தரவு செய்யவும் வாய்ப்புள்ளது.



    லெஸ்பியன் உறவில் இருந்து வெளியில் வர விரும்பும் பெண்களுக்கு ஹார்மோன் சிகிச்சை மற்றும் உளவியல் சிகிச்சையால் தீர்வு காணலாம். பதின் பருவத்தில், படிக்கும் காலத்தில் லெஸ்பியன் உறவில் ஈடுபாடு காட்டும் பெண்களின் கல்வியும் வளர்ச்சியும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. லெஸ்பியன் உறவில் உள்ளவர்களில் யாருக்காவது பால்வினை நோய்த்தொற்று அல்லது எய்ட்ஸ் இருக்கும் பட்சத்தில் இவை பரவவும் வாய்ப்புள்ளது.

    பெண்கள் இது போன்ற விஷயங்களில் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். திருமண பந்தத்துக்குள் போகாத லெஸ்பியன் பெண்களாக இருந்தாலும் நோய்த்தொற்று ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்’’. ஆண்-பெண் இணைந்து உருவாக்கும் குடும்ப அமைப்பில் உடமை, அதிகாரம் என சட்டதிட்டங்கள் இறுக்கமான நிலை காணப்படுகிறது.

    பாலியல் இன்பத்துக்காக ஓர் ஆணை நம்பும் பெண் முழுமையாக தன்னை ஒப்படைப்பதுடன் அவளது திறமை வளர்ச்சி ஆகியவற்றை விட்டுக்கொடுக்க வேண்டிய கட்டுப்பாடுகள் கொண்ட குடும்ப அமைப்பில் பெண்களுக்கு வெறுப்பு ஏற்பட்டு வருகிறது. இன்றைய குடும்ப அமைப்புகள் விரைவில் உடைவதற்கும் இதுவும் ஒரு காரணம்.

    பெண்கள் மனமும் சுதந்திரத்துக்காக பல ஆண்டுகாலமாக ஏங்குகிறது. தலைமுறைப் பெண்களின் ஏக்கம், விடுதலை வேட்கை, ஒரு பால் ஈர்ப்பு என பல விஷயங்கள் லெஸ்பியன் உறவைப் பெண்கள் ஏற்றுக் கொள்ளக் காரணம் ஆகிறது. இதுவும் பாலுறவில் ஒரு வகைதான். இவர்களை வெறுப்பதும், இவர்களிடம் கொடூரமாக நடந்து கொள்வதும் மனிதப்பண்புக்கு எதிரானது. இன்னும் சில ஆண்டுகளில் லெஸ்பியன் இணைகளும் அங்கீகாரத்துடன் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.
    சர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்கள் தினமும் கோதுமை, ஓட்ஸை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று கோதுமை ரவை, ஓட்ஸை வைத்து பணியாரம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ஓட்ஸ் - 1 கப்
    பச்சரிசி மாவு - 1 டம்ளர்
    கோதுமை ரவை - 1/4 கப்
    தயிர் - 1/2 கப்
    உப்பு - தேவையான அளவு

    தாளிக்க :

    எண்ணெய் - 1 தேக்கரண்டி
    கடுகு - 1 தேக்கரண்டி
    கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
    வெள்ளை உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
    பச்சைமிளகாய் - 2
    இஞ்சி - சிறிய துண்டு
    பூண்டு - 4 பல்
    கறிவேப்பிலை - 1/2 இணுக்கு
    பெருங்காயம் - சிறிதளவு
    வெங்காயம் - 2.



    செய்முறை :

    இஞ்சி, பூண்டு, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் ஓட்ஸையும், கோதுமை ரவையையும் தனித்தனியாக போட்டு வறுத்து ஒன்றாகத் திரிக்கவும்.

    அரைத்த ஓட்ஸ் கலவையை ஒரு பாத்திரத்தில் கொட்டி அதனுடன் அரிசிமாவு, தயிர், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கலக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் வதக்கின பொருட்களை ஓட்ஸ் கலவையுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.

    அடுப்பில் குழிப்பணியாரச்சட்டியை வைத்து எண்ணெய் விட்டு மாவை ஒவ்வொரு குழியிலும் விடவும். வெந்ததும் திருப்பிப் போட்டு வேக வைத்து எடுக்கவும்.

    சுவையான ஓட்ஸ் - கோதுமை ரவை கார பணியாரம் தயார்.

    மிளகாய்ப்பொடி, தக்காளி சட்னி, சட்னியுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இந்த பிராணாயாமம் பயிற்சியில் மூச்சை இழுத்து விடும் போது உருவாகும் வெப்பமானது வயிற்றின் உள்ளே இருக்கும் நச்சுக்கள் மற்றும் கழிவுகளை கரைக்கிறது.
    முதலில் யோகா விரிப்பில் நேராக நிமிர்ந்து கண்களை மூடிய நிலையில் அமர்ந்து கொள்ள வேண்டும். இரண்டு கைகளையும் முழங்கால்களில் ஊன்றிக் கொள்ள வேண்டும். மூக்கின் இரு துவாரங்கள் வழியாக நுரையீரல் நிரம்பும் வகையில் நன்றாக மூச்சை உள்ளிழுக்க வேண்டும்.

    வயிறு நன்றாக உள்ளிழுத்த நிலையில் இருக்க வேண்டும். இப்போது மூச்சு முழுவதும் வேகமாக வெளியே விடவேண்டும். இப்போது வயிறில் ஒரு அழுத்தம் கிடைக்கும். இதேபோல் 5 நிமிடங்கள் மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும்.

    பலன்கள்: மூச்சை இழுத்துவிடும்போது உருவாகும் வெப்பமானது வயிற்றின் உள்ளே இருக்கும் நச்சுக்கள் மற்றும் கழிவுகளை கரைக்கிறது. செரிமானத்தை தூண்டி, சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரலின் செயல்பாடுகளை அதிகரிக்கிறது. அனைத்து குடல் பிரச்னைகளையும் குணப்படுத்துகிறது.

    கண்களில் உள்ள அழுத்தத்தை குறைப்பதால் கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களை போக்குகிறது. உடலின் அனைத்து பாகங்களிலும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. வயிற்று சதை குறைவதுடன் மனதை அமைதிப்படுத்தி மனப்பதற்றத்தையும் குறைக்கிறது.
    ×