search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lesbian"

    • நாளடைவில் ஒருவருக்கு, ஒருவர் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. இதனால் இருவரும் பிரியமுடியாத நிலைக்கு சென்றனர்.
    • கடந்த பத்து நாட்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெறியேறினர்.

    பென்னாகரம்:

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த ஏர்கோல்பட்டியை சேர்ந்தவர் 22 வயது என்ஜினீயரிங் பட்டதாரி. இவர் தற்பொழுது கோவை தனியார் தனியார் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

    அதேபோல் ஏரியூரை சேர்ந்தவர் 20 வயது மாணவி. இவர் பயோடெக் 3 ஆண்டு படித்து வருகிறார். இவர்கள் இருவரும் சேலம் தனியார் கல்லூரியில் படித்தபோது ஏரியூரில் இருந்து ஒரே பேருந்தில் கல்லூரிக்கு சென்று வந்துள்ளனர்.

    அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் ஒருவருக்கு, ஒருவர் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. இதனால் இருவரும் பிரியமுடியாத நிலைக்கு சென்றனர். இதைத் தெரிந்த பெற்றோர் இவர்களை கண்டித்துள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெறியேறினர். இது குறித்து மாணவியின் பெற்றோர் ஏரியூர் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து இருவரையும் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் தனிப்படை போலீசார் கோவையில் தங்கி இருந்த இருவரையும் மீட்டு ஏரியூருக்கு அழைத்து வந்தனர். அங்கு இருவருக்கும் அறிவுரை கூறி இரு வீட்டாரின் பெற்றோரையும் அழைத்து அனுப்பி வைத்தனர்.

    பின்னர் நேற்று மதியம் கவுன்சிலிங் கொடுப்பதற்காக இருவரையும் பென்னாகரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

    அப்போது அனைத்து மகளிர் போலீசார் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனர். அவர்களிடம், நீங்கள் இருவரும் வாழ வேண்டியவர்கள். உங்களுக்கு என்று கணவன், குழந்தைகள் என குடும்ப வாழ்க்கை இருக்கிறது. இந்த உறவு நம்முடைய கலாசாரத்துக்கு சரிவராது என்று கவுன்சிலிங் கொடுத்ததாக தெரிகிறது.

    போலீசாரின் ஆலோசனைக்கு பிறகு, தான் செய்தது தவறு என பெண் என்ஜினீயர் உணர்ந்ததாக தெரிகிறது. உடனே கழிப்பறை செல்வதாக கூறி விட்டு சென்றார்.

    இந்த நிலையில் கழிவறைக்கு சென்ற அவர் தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் கழுத்து மற்றும் கைகளை அறுத்துக் கொண்டார். இதனால் வலி தாங்க முடியாமல் அலறிய அவரது சத்தத்தை கேட்டு போலீசார் சென்று பார்த்தனர்.

    அப்போது கழிவறைக்குள் பெண் என்ஜினீயர் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். உடனடியாக அவரை மீட்டு போலீசார் பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு பென்னாகரம் குற்றவியல் உரிமையியல் மற்றும் நடுவர் நீதிமன்ற நீதிபதி பிரவினா முன்னிலையில் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இரண்டு பெண்களுக்குள் ஏற்பட்ட முறை தவறிய உறவால் பெண் என்ஜினீயர் தற்கொலைக்கு முயன்றது பென்னாகரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • இருவரிடமும் மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர்.
    • கல்லூரி மாணவி கூறிய தகவல்கள் போலீசாரை அதிர்ச்சி அடைய செய்தன.

    தர்மபுரி :

    தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியை சேர்ந்தவர் 20 வயது கல்லூரி மாணவி. இவர், சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு பயோடெக் படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரிக்கு சென்ற மாணவி திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது பெற்றோர் ஏரியூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார், மாணவி மாயம் என வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

    இந்தநிலையில் கோவையில் இளம்பெண் ஒருவருடன் அந்த கல்லூரி மாணவி இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. உடனடியாக போலீசார் கோவை விரைந்து சென்றனர். அங்கு இருந்த கல்லூரி மாணவியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் கல்லூரி மாணவி கூறிய தகவல்கள் போலீசாரை அதிர்ச்சி அடைய செய்தன. அதன் விவரம் வருமாறு:-

    நான் சேலத்தில் உள்ள கல்லூரியில் 3-ம் ஆண்டு பயோடெக் படித்து வருகிறேன். நான் 2-ம் ஆண்டு படிக்கும் போது எங்களது கல்லூரியில் 3-ம் ஆண்டு என்ஜினீயரிங் படிக்கும் ஏரியூர் மாணவியுடன் எனக்கு நட்பு ஏற்பட்டது. முதலில் சாதாரணமாகத்தான் பழகினோம்.

    நாளடைவில் எங்களை அறியாமல் இருவருக்கும் இடையே ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் நெருங்கி பழக தொடங்கினோம். ஒருவர் மீது ஒருவர் காதல் கொண்டோம். நாங்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று தனிமையில் சந்தித்து கொண்டோம்.

    அந்த மாணவி படிப்பை முடித்து கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலைக்கு சேர்ந்தார். அதன்பிறகு நாங்கள் அடிக்கடி சந்திக்க முடியவில்லை. இருந்தாலும் விடுமுறை நாளில் அவளும், நானும் சந்தித்து வந்தோம்.

    எங்களது விவகாரம் என்னுடைய பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் என்னை கண்டித்தனர். என் தோழியை சந்திக்க கூடாது என்று தடை போட்டனர். ஆனால் என்னால் அவளையும், அவளால் என்னையும் மறக்க முடியவில்லை. எனவே நாங்கள் வீட்டை விட்டு கடந்த 10 நாட்களுக்கு முன்பு வெளியேறினோம்.

    கோவைக்கு வந்த நான், தோழியுடன் தனியாக வீடு எடுத்து தங்கினேன். கடந்த 10 நாட்களாக நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தோம். வரும் நாட்களில் எங்களால் பிரிந்து வாழ முடியுமா என்றால், நிச்சயமாக முடியாது என்று போலீசாரிடம் கூறியதாக தெரிகிறது.

    இளம்பெண் 2 பேரும் ஒருவர் மீது ஒருவர் தீரா காதல் கொண்டு இருப்பதை அறிந்த போலீசார் இருவரிடமும் சாதுர்யமாக பேசி தர்மபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். அங்கு இருவரிடமும் மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர்.

    மேலும் அவர்களிடம், நீங்கள் இருவரும் வாழ வேண்டியவர்கள். உங்களுக்கு என்று கணவன், குழந்தைகள் என குடும்ப வாழ்க்கை இருக்கிறது. இந்த லெஸ்பியன் உறவு நம்முடைய கலாசாரத்துக்கு சரிவராது என்று கவுன்சிலிங் கொடுத்ததாக தெரிகிறது.

    போலீசாரின் ஆலோசனைக்கு பிறகு, தான் செய்தது தவறு என பெண் என்ஜினீயர் உணர்ந்ததாக தெரிகிறது. உடனே கழிப்பறை செல்வதாக கூறி விட்டு சென்றார். திடீரென அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு போலீசார் சென்றனர். அங்கு அந்த பெண் என்ஜினீயர் கழுத்து, கைகளில் பிளேடால் அறுத்துக் கொண்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

    இதைக்கண்டு பதறிப்போன போலீசார் பெண் என்ஜினீயரை மீட்டு பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரிடம் பென்னாகரம் குற்றவியல் மற்றும் உரிமையியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பிரவீனா விசாரணை நடத்தி ரகசிய வாக்குமூலம் பெற்றார். கல்லூரி மாணவியை பெற்றோரிடம் ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    மலேசியாவில் ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட 2 பெண்களுக்கு முதன்முறையாக பிரம்படி தண்டனை நிறைவேற்றப்பட்டது. #Malaysia #lesbian
    கோலாலம்பூர்:

    முஸ்லிம் நாடான மலேசியாவில் இஸ்லாமிய சட்டம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் டிரெங்கானு மாநிலத்தில் காருக்குள் 22 மற்றும் 32 வயது மதிக்கத்தக்க பெண்கள் ஓரின சேர்க்கையில் (‘லெஸ்பியன்’ )ஈடுபட்டிருந்தனர்.

    அவர்களை கைது செய்த போலீசார் ‌ஷரியா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அவர்களை குற்றவாளி என அறிவித்தார்.

    மேலும் அப்பெண்கள் 2 பேருக்கும் தலா 6 தடவை பிரம்படி தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். அதை தொடர்ந்து கோர்ட்டில் வைத்தே அவர்களுக்கு பிரம்படி தண்டனை நிறைவேற்றப்பட்டது.

    அப்போது கோர்ட்டில் 100-க்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர். ஓரின சேர்க்கை குற்றத்துக்காக மலேசியாவில் பெண்களுக்கு பிரம்படி தண்டனை நிறை வேற்றப்பட்டது. இதுவே முதன்றையாகும்.



    இதற்கு மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது ஒரு கொடுஞ்செயல் என கூறியுள்ளனர். அதே நேரத்தில் டிரெங்கானு மாநில செயல் கவுன்சில் உறுப்பினர் சாதிபுல் பக்ரி மமத் கூறும்போது, ‘‘ஒருவரை துன்புறுத்தி காயப்படுத்த இந்த தண்டனை வழங்கப்படவில்லை. இத்தகைய குற்றம் புரியக்கூடாது என பொதுமக்களுக்கு உணர்த்தவே தண்டனை வழங்கப்பட்டுள்ளது’’ என்றார். #Malaysia #lesbian
    ×