என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு முட்டை சேர்த்து சைனீஸ் ஸ்டைலில் அருமையான தக்காளி முட்டை சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாசுமதி அரிசி - 1 கப்
    தக்காளி - 1
    தக்காளி கெட்சப் - 2 டேபிள் ஸ்பூன்
    வெங்காயத்தாள் - சிறிதளவு
    முட்டை - 3 (வேக வைத்து துண்டுகளாக்கப்பட்டது)
    பூண்டு - 10 பல்
    மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
    சோயா சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்
    வினிகர் - 2 டேபிள் ஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிது உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    பாசுமதி அரிசியை முக்கால் பாகம் உதிரியாக வேக வைத்து கொள்ளவும்.

    தக்காளி, வெங்காயத்தாள், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முட்டையை வேக வைத்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

    பின்னர் வெங்காயத்தாள், தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

    அடுத்து வேக வைத்த சாதம், உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்கு கிளற வேண்டும்.

    பிறகு சிறிது நேரம் கழித்து, அதில் தக்காளி கெட்சப், உப்பு, சோயா சோஸ், வினிகர் மற்றும் மிளகு தூள் போட்டு, கிளறி விட வேண்டும்.

    பின் முட்டைத் துண்டுகளை சேர்த்து பிரட்ட வேண்டும்.

    பின் அந்த சாதத்தை நன்கு 5 நிமிடம் கிளறி, கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்க வேண்டும்.

    இப்போது சுவையான தக்காளி முட்டை சாதம் ரெடி!!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிறுநீரக நோய்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுப்பிடிப்பது அவசியம். இல்லையெனில் நாட்பட்ட சிறுநீரகக்கோளாறு ஏற்பட்டபின் அதனை குணப்படுத்துவது கடினம்.
    சிறுநீரகங்கள் என்பது முதுகெலும்பு பகுதியில் உடலின் வலப்பக்கத்திலும், இடப்பக்கத்திலும் அவரை விதை வடிவில் அமைந்த உறுப்புகளாகும். நெடுநாட்பட்ட சிறுநீரகக்கோளாறு என்பது சிறுநீரகத்தின் முக்கியமான தொழிலான நீரில் கரையக்கூடிய கழிவுப்பொருள்களை குருதியிலிருந்து வடித்தெடுத்து வெளியேற்றும் செயல்பாடு சிறிது சிறிதாக குறைந்து நெடுநாட்களுக்குப்பின் சிறுநீரகத்தின் முழுமையான செயல்திறனும் குறைவதாகும்.

    சிறுநீரகத்தின் செயல்பாடுகள்

    குருதியில் அமில-கார நிலையை சமபடுத்துகிறது. குருதி அழுத்தத்தை கட்டுப்படுத்துகின்றது. குருதியில் உள்ள யூரியா மற்றும் கிரியாடினைன் என்னும் கழிவுப்பொருட்களை வெளியேற்ற உதவு கின்றது. எரித்ரோபோய்டின், ரெனின், கால் சிடிரால் என்னும் ஹார்மோனை உற்பத்திச் செய்கிறது. அதாவது தினமும் உடலில் உண்டாகும் நச்சுப்பொருட்களை வடி கட்டி கழிவுகளை சிறுநீரில் அனுப்புகிறது. தேவைக்கு அதிகமான உப்புகளையும், தாது களையும் பிரிக்கிறது.

    இந்தியாவில் ஏறக்குறைய 30 சதவீதம் பேர் சிறுநீர் நோயால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு காரணம் என்னவென்று தெரிந்துக் கொள்வது அவசியம், நம் உடலில் இருந்து அன்றாடம் சராசரியாக 1.5 மி.லி முதல் 2.5 மி.லி வரை சிறுநீர் பிரிகிறது. சிறுநீரகத்தின் தொழில்கள் பாதிப்பு ஏற்படும் போது சிறுநீரகங்கள் செயல் இழப்பு ஏற்பட்டு கழிவுகள் வெளியேறாமல் தங்கிவிடும் போது முற்றிலும் சிறுநீரகத்தின் செயல் பாதிப்படைகின்றது.

    காரணங்கள்

    தேவையான அளவு நீர் அருந்தாமை. உணவில் அதிகளவு உப்பு சேர்த்துக்கொள்ளுதல். அதிக சக்திவாய்ந்த மாத்திரைகள் அதிக நாட்களாக தொடர்ந்து உட் கொள்வதாலும், மருத்து வரின் ஆலோச னையின்றி தேவையற்ற மருந்துகளை உட்கொள்வதாலும், ஸ்டீராய்டு மருந்துகளை அதிகளவு உட்கொண்டவர்களுக்கும் ஆல்கஹால் மற்றும் புகைப்பிடித்தல் பழக்கம் உடையவர்களுக்கும், நாட் பட்ட சர்க்கரைநோய் மற்றும் ரத்த அழுத்தநோய் இருந்து அதற்கான மருந்துகளை அதிக நாட்கள் தொடர்ந்து உட்கொண்டவர்களுக்கும், அடிக்கடி சிறுநீர்பாதையில் தொற்றுகள், சிறு நீரகக்கற்கள் உடையவர்களுக்கும், சிறு நீரக கட்டிகள் உடையவர்களுக்கும், சிறு நீரகத்தின் வடிகட்டுதல் செயல்திறன் குறைந்தவர்களுக்கும், சிறுநீரக காசநோய் உடையவர்க்கும் இதய கோளாறு உள்ளவர்களுக்கும், அதிகரித்த உடல்எடை உள்ளவர்களுக்கும், சிறுநீரகம் பாதிக்கப்பட்ட மரபணு குறைபாடு உள்ளவர்களுக்கும், கார்டிசோல், ரெனின் மற்றும் ஆல்டோஸ்டீரான் ஹார்மோன் குறைபாடு உள்ளவர்களுக்கும், தன்னெதிர் தாக்குதல் நோய் உள்ளவர்களுக்கு அதாவது சிஸ்டமிக் லூபஸ் எரித்ரோமேட்டஸ், ருமாடிக் ஆர்த்ரைடிஸ் உள்ளவர்களுக்கும். கர்ப்பிணிகள் தேவையற்ற மருந்துகளை உட்கொள்வதால் அதனை தொடர்ந்து கன்ஜெனிடல் சிறுநீரகங்கள் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கும், நெப்ரோடிக் சின்ட்ரோம் நோயினை தொடர்ந்தும் நாட் பட்ட சிறுநீரகங்களின் கோளாறுகள் உண்டாகின்றது.
    இந்த காரணங்களை சரிசெய்வதின் மூலம் நெடுநாட்பட்ட சிறுநீரகங்களின் கோளாறுகளை தவிர்க்க முடியும்.

    குறி-குணங்கள்

    சிறுநீரக நோயின் முதல் அறிகுறி சிறுநீர் வெளியேறும் அளவிலும், அதனை எத்தனை முறை கழிக்கிறோம் என்ற விதத்திலும் ஏற்படும் மாற்றங்களை கவனிக்க வேண்டும். சிறுநீர் கழிக்கும் அளவு கூடுதலாகவோ (அ) குறைவாகவோ இருக்கலாம். சிறுநீரில் புரதம் அல்லது ரத்தம் காணல். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவுகுறைதல்.

    உடலில் வீக்கம் காணல்:--கைகள், கால்கள், முகம் இவ்விடங்களில் வீக்கம் உண்டாகும். சிறுநீரகத்தின் செயல்திறன் குறைவதால் நீர்த்தன்மை அதிகரித்து உடலில் வீக்கம் உண்டாகிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவதால் மூளைக்குச்செல்லும் ஆக்சிஜன் அளவு குறைந்து மயக்க உணர்வு ஏற்படும்.

    ரத்தத்தில் உள்ள கழிவுப்பொருட்கள் குவிந்து கொண்டே செல்வதால் குமட்டலும் வாந்தியும் ஏற்படும். ரத்த அழுத்தம் அதி கரித்துக்காணும். தூக்கமின்மை உண்டாகும். இரவில் அடிக்கடி சிறுநீர் கழிதல் ஏற்படும். நுரையீரலில் நீர்மம் சேர்ந்து விடுவதால் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படும். ரத்தத்தில் யூரியா அளவு அதிகரித்துவிடுவதால் வெளிவிடும் மூச்சுக்காற்றில் கெட்ட வாடை வீசும்.

    ரத்தத்தில் யூரியா மற்றும் கிரியாடினைன் என்னும் கழிவுகள் குவிவதால் சருமத்தில் தீவிரமான சொறிகளும், அரிப்புகளும் ஏற்படும். சிறுநீரகமானது எரித்ரொபொய்டின் என்னும் ஹார்மோனை சுரப்பிக்கச் செய்கிறது. இது ரத்தச் சிவப்பணுக்களை ஆக்சிஜன் கொண்டு செல்ல உதவும். எரித்ரொபொய்டின் ஹார்மோன் அளவு குறைவதால் ரத்த சிவப்பணுக்களும் குறைந்து ரத்த சோகை ஏற்படும்.

    சிறுநீரக நோய்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுப்பிடிப்பது அவசியம். இல்லையெனில் நாட்பட்ட சிறுநீரகக்கோளாறு ஏற்பட்டபின் அதனை குணப்படுத்துவது கடினம்.

    நெடுநாட்பட்ட சிறுநீரக நோய் நிலை

    நிலை-1:-சிறுநீரக பாதிப்புடன் கூடிய இயல் பான சிறுநீரக செயல்பாடு.
    நிலை-2:- சிறிதளவு சிறுநீரக செயல்திறன் பாதிப்பு
    நிலை-3:- சிறிதளவு கொஞ்சம் தீவிரமான சிறுநீரகச் செயல்பாடு
    நிலை-4:- மிகத்தீவிரமான சிறுநீரக பாதிப்பு
    நிலை-5:-மிகமிகத் தீவிரமான சிறுநீரக பாதிப்பு சிறுநீரகங்கள் கோளாறு அடைந்த நிலை.

    சிறுநீரகங்கள் டயாலிசிஸ் (அ) டிரான்ஸ் பிளான்டேஷன் செய்யக்கூடிய நிலை.



    நோய்கணிப்பு:

    ரத்தப்பரிசோதனை: யூரியா மற்றும் கிரியாடினைன் அளவு அதிகரித்தல். ஹீமோகுளோபின் அளவு குறைதல். சிறுநீரில் புரதம் (அ) ரத்தம் கலந்து காணல். சிறு நீரகங்கள் வடிவம், சிறு நீரகங்கள் பாதிக்கப்பட்ட நிலை.

    டயாலிசிஸ்

    சிறுநீரகச் செயலிழப்பு காரணமாக சிறு நீரகத்தின் பயன்பாட்டை இழந்த நோயாளிகளுக்கு செயற்கை முறையில் டயாலிசிஸ் செய்யப்படுகிறது. அதாவது நெடுநாட்பட்ட சிறுநீரக கோளாறுகளில் நிலை 4, நிலை 5, முறைகளில் உள்ளவர்களுக்கு டயாலிசிஸ் செய்யப்படுகின்றது. சிறு நீரகங்கள் உடல் நலனைப் பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆரோக்கியமாக இருக்கும் போது சிறு நீரகங்கள் உடலின் நீர் மற்றும் கனிமங்களின் (சோடியம், பொட்டாசியம், குளோரைடு, கால்சியம், பாஸ் பரஸ், மக்னீசியம்) போன்றவற்றை சமநிலைப் படுத்துகின்றது.

    மேலும் சிறுநீரகமானது எரித்ரொபொயட்டின் மற்றும் 1,25- டைஹைட்ராக்சிகோல் கால்சிபெரால் ஆகியவற்றை உருவாக்குகின்றது. எரித்ரொபொயட்டின்-ரத்த சிவப்பணுக்களை உருவாக்குகிறது. கால்சிட்ரோல்- எலும்பு வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. டயாலிசிஸ் 2 வகைப்படும் அவை ஹீமோ டயாலிசிஸ், பெரிடோனியல் டயாலிசிஸ்.

    கவனத்திற்கு

    நெடுநாட்பட்ட சிறுநீரக கோளாறு உடைய வர்களின் முக்கிய கவனத்திற்கு:-

    முக்கியமாக உணவில் உப்பினை தவிர்க்க வேண்டும். தேவையான அளவு மட்டுமே நீர்பருக வேண்டும். நீர்ச்சத்துள்ள காய்கறிகள் மற்றும் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இரும்புச்சத்துள்ள உணவுப்பொருட்களை உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    மூக்கிரட்டை கீரை இலைச்சாறு 100மி.லி, துத்திவேர் 20 கிராம், கருஞ்சீரகம் அரை தேக்கரண்டி எடுத்து இத்துடன் ஒரு டம்ளர் நீர் ஊற்றி கொதிக்க வைக்கவும் இதனை அரை டம்ளராக வற்றவைக்கவும். அதாவது 60 மி.லி. குடிநீர் காலை மற்றும் மாலை இருவேளை தொடர்ந்து குடித்துவர யூரியா மற்றும் கிரியாடினைன் அளவை எளிமையாக குறைக்கலாம்.

    தாகம் ஏற்பட்டால் மட்டுமே குடிநீர் பருக வேண்டும். தேவையான அளவு மட்டுமே குடிநீர் பருகுவது நல்லது.

    நாம் சாப்பிடும் உணவில் இருக்க வேண்டிய சோடியத்தின் அளவு மிகவும் முக்கியமாகக் கட்டுப்படுத்தல் வேண்டும்.

    தீவிரமாக நெடுநாள்பட்ட சிறுநீரகநோய் உடையவர்களுக்கு சிறுநீரகங்களால் சோடியத்தை வடிகட்ட முடியாமல் இருக்கும். நாம் சாப்பிடும் சாப்பாட்டில் உப்பு சேர்த்துக் கொள்வதை முழுமையாக தவிர்க்க வேண்டும். உப்புச்சத்து உள்ள உணவுபொருள்கள் மற்றும் காய்கறிகளை தவிர்க்க வேண்டும்.

    சேர்க்க வேண்டிய உணவுப்பொருள்:

    மக்காச்சோளம், கோதுமை, பார்லி, அரிசி வகைகள், பச்சைபயறு, துவரம்பருப்பு, முட்டைகோஸ், காலிபிளவர், குடைமிளகாய், வெள்ளரிக்காய், புடலங்காய், சுரைக்காய், சிறுகீரை, கொத்தமல்லி, பாகற்காய், கொடை மிளகாய், திராட்சை, ஆப்பிள், ஸ்ட்ராபெர்ரி, அன்னாசிப்பழம், தரப்பூசணி, பப்பாளி, மாதுளைபழம், செர்ரி, எலுமிச்சைபழம், அக்ரோட்டு, முட்டைவெள்ளைக்கரு, கொழுப்புநீக்கப்பட்ட பால்பொருட்கள்.

    தவிர்க்க வேண்டிய உணவு பொருட்கள்:

    கத்தரிக்காய், வெந்தயம், கடுகு, பீட்ரூட், சிறுதானியங்கள், தேங்காய், இளநீர், வாழைப்பழம், மாம்பழம், ஆரஞ்சு, சப்போட்டா, கொய்யா, வேர்க்கடலை, முந்திரி, பிஸ்தா, உலர்திராட்சை, பேரீச்சைபழம், மீன், கோழி, ஆட்டுக்கறி, வெண்ணெய், நெய், உளுந்து, பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள், பால் பொருட்கள்.
    மாதவிடாய் காலங்களில் சரியான சுகாதாரம் கடைபிடிக்காமல் கர்ப்பப்பை வாய் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் போன்ற கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட நோய்களால் பெண்கள் பாதிப்படைவது அதிகரித்து வருகிறது.
    மாதவிடாய் காலங்களில் சரியான சுகாதாரம் கடைபிடிக்காமல் கர்ப்பப்பை வாய் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் போன்ற கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட நோய்களால் பெண்கள் பாதிப்படைவது அதிகரித்து வருகிறது என எச்சரிக்கும் மருத்துவர் மாதவிலக்கு நாளில் கடைபிடிக்க வேண்டிய சுகாதாரக் குறிப்புகளை பட்டியலிடுகிறார்.

    * இப்போது டாம்பூன்கள், சானிட்டரி நாப்கின்கள், மென்சுரல் கப்கள் என பல வழிகள் பெண்களுக்கு கிடைக்கிறது. இவற்றில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து உபயோகிக்கலாம். உதிரப்போக்கின் அளவுக்கு தகுந்தவாறும், உங்கள் உடலுக்கு ஒப்புக் கொள்ளக்கூடிய ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இவற்றில் நாப்கின்தான் சிறந்தது. டாம்பூன் (Tampoon)உபயோகிப்பவர்களுக்கு Toxic Shock Syndrome ஏற்படுவதற்கு சாத்தியமுண்டு.

    * சிலர் நாப்கின் நனையாதவரை மாற்ற மாட்டார்கள். அப்படிச் செய்வது தவறு. உதிரப்போக்கு குறைவாக இருந்தாலும், நாப்கின் நனையாவிட்டாலும்கூட 4 மணி நேரத்துக்கு ஒருமுறை கண்டிப்பாக மாற்றிவிட வேண்டும். ஏனெனில், ஒருமுறை உடலிலிருந்து வெளியேறி ஏற்கனவே நாப்கினில் படிந்திருக்கும் உதிரம் பூஞ்சைத் தொற்றை ஏற்படுத்தும்.

    இதனால் சிறுநீரகப்பாதைத் தொற்று, பிறப்புறுப்பில் அழற்சி, தொற்றுகள் ஏற்படலாம். பள்ளி செல்லும் பெண்குழந்தைகள் இடைவேளைகளிலோ, சாப்பாட்டு நேரத்திலோ சென்று மாற்றிக் கொள்ள வேண்டும். கல்லூரி, வேலைக்கு செல்லும் பெண்களும் மறக்காமல் இதை பின்பற்றவேண்டும்.

    * முழுவதும் நனைந்த நாப்கின்களை மாற்றாமல் இருப்பதால், சில பெண்களுக்கு தொடைப்பகுதியில் சிராய்ப்புகள் தோன்றும். இதை Pad rash என்று சொல்கிறோம். தொடை இடுக்குகளில் நனைந்த பேடுகள் உராசுவதால் இது வருகிறது. அதனால் ஈரப்பதம் இல்லாமல் உலர்வாக வைத்துக்கொள்வது முக்கியம். அப்படி Pad Rash வந்தால் அதற்கு ஆன்ட்டிசெப்டிக் ஆயின்மென்ட் தடவிக் கொள்ளலாம்.

    * மாதவிடாய் நேரங்களில் உதிரத்துளிகள் பிறப்புறுப்பைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஒட்டிக்கொண்டு இருக்கலாம். அதை சரியாக சுத்தம் செய்யாவிடில் துர்நாற்றம் வீசும். ஒவ்வொருமுறை நாப்கின் மாற்றும்போதும் சுத்தமான தண்ணீராலோ, அல்லது ஈரப்பதமுள்ள டிஷ்யூ பேப்பராலோ துடைத்து சுத்தம் செய்துவிட வேண்டும்.

    * இயற்கையிலேயே பெண்ணின் பிறப்புறுப்புக்கு தன்னைத்தானே சுத்தப்படுத்திக்கொள்ள மற்றும் பாக்டீரியா தொற்றுகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளக்கூடிய பாதுகாப்பு அமைப்பு இருக்கிறது. அதனால் சோப்புத் தண்ணீரால் பிறப்புறுப்பு உட்பகுதியை கழுவ வேண்டியதில்லை. சோப்பு நீர் நன்மை செய்யும் பாக்டீரியாவை அழித்துவிடும். வெளிப்புறப் பகுதிகளை வேண்டுமானால் சோப்பு நீரால் சுத்தப்படுத்தலாம். அவ்வாறு சுத்தம் செய்யும்போது ஈரப்பதம் உள்ள டிஷ்யூ பேப்பரால் யோனியிலிருந்து கீழ்ப்புறமாக மலவாய் வரை துடைக்க வேண்டும். கீழிருந்து மேலாக துடைப்பதால் மலவாய்ப்பகுதியில் இருக்கும் கிருமிகள் பிறப்புறுப்புக்குள் சென்றுவிட வாய்ப்புண்டு.

    * இன்றளவும்கூட மாதவிடாய் நாட்களில் குளிக்கக்கூடாது என்று ஒரு தவறான நம்பிக்கை சிலரிடம் உள்ளது. அது தவறான நம்பிக்கை. கண்டிப்பாக காலை, மாலை இருவேளையும் தவறாமல் குளிக்க வேண்டும்.

    * ஏதாவது ஒரு முறையை, ஒரு பிராண்டை வழக்கமாக உபயோகிக்க வேண்டும். சிலர் இந்த மாதம் ஒரு பிராண்டு, அடுத்த மாதம் ஒரு பிராண்டு. இன்று நாப்கின், நாளை டாம்பூன் என்று மாற்றி மாற்றி உபயோகிப்பார்கள். இது சில நேரங்களில் அலர்ஜியை ஏற்படுத்திவிடும் என்பதால் தனக்கு எந்த வகையான முறை ஒத்துக் கொள்கிறதோ அதை தொடர்ந்து கடைபிடிப்பது நல்லது. இப்போது இயற்கைப் பொருட்களால் ஆன நாப்கின்களும் சந்தையில் வந்துவிட்டது என்பதால் முடிந்தவர்கள் சுற்றுச்சூழலை பாதிக்காத இயற்கைப் பொருட்களால் ஆன நாப்கின்களை பயன்படுத்தத் தொடங்கலாம்.

    * இறுதியாக நமக்கு எத்தனை நாட்களில் மாதவிடாய் சுழற்சி ஏற்படும் என்பதை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். சுழற்சி சரியாக வருபவர்கள் 20-வது நாள் தொடங்கி கைப்பையில் தயாராக நாப்கினை வைத்துக் கொள்ளலாம்.

    மாதவிடாய் சுழற்சியில் மாறுபாடு இருப்பவர்கள் எப்போதுமே கைவசம் நாப்கினை வைத்திருப்பது நல்லது. இதனால் தேவையற்ற சங்கடங்களை தவிர்க்கலாமே. அதேபோல் கைப்பையில், சானிடைசர், பேப்பர் டவல், துணி டவல், தண்ணீர் பாட்டில், ஆன்ட்டிசெப்டிக் ஆயின்ட்மென்ட் போன்றவற்றை வைத்துக் கொள்ள வேண்டும்.
    பல இயற்கையான பொருட்களுடன் குங்குமப்பூ, சந்தனம் மற்றும் ரத்தச் சந்தன கலவையும் சேர்த்துச் செய்யப்படுகிற குங்குமாதி தைலத்தை சரும நிறத்தை அதிகரிக்க பயன்படுத்தலாமா என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
    பல இயற்கையான பொருட்களுடன் குங்குமப்பூ, சந்தனம் மற்றும் ரத்தச் சந்தன கலவையும் சேர்த்துச் செய்யப்படுகிற குங்குமாதிதைலம் உண்மையிலேயே நிறத்தை மேம்படுத்த உதவக்கூடியது தான். மங்கு எனப்படுகிற கரும்புள்ளிகளையும் நீக்கும். இரவு படுக்கச் செல்வதற்கு முன் சிறிதளவு எடுத்து சருமத்தில் தடவிக்கொண்டு அப்படியே விட்டு விடலாம். காலையில் கழுவிவிடலாம்.

    எண்ணெய் பசையான சருமம் கொண்டவர்கள் குளிப்பதற்கு முன் தடவிக் கொண்டு, சிறிது நேரத்தில் குளித்து விட வேண்டும். குங்குமாதி லேபம் உபயோகிக்கிற போது சோப்பை தவிர்ப்பது நல்லது.



    அதற்கு பதில் எலுமிச்சை தோல், பயத்தம் பருப்பு,கிச்சிலிக்கிழங்கு மூன்றும் சம அளவு சேர்த்து அரைத்த பொடியைத் தேய்த்துக் குளிக்க வேண்டும்.

    இது சருமத்திலுள்ள இறந்தசெல்களையும் நீக்கும். தொடர்ந்து ஒரு மாதம் பயன்படுத்தினால் நல்ல மாற்றத்தை உணரலாம். மருத்துவரின் பரிந்துரையின் பேரில் ரத்தத்தை சுத்திகரிக்கிற டானிக்கையும் சேர்த்து எடுத்துக் கொண்டால் சருமம் பளபளக்கும்.
    குழந்தைகள் காய்கறி சாப்பிட மறுப்பார்கள். அவர்களுக்கு காய்கறிகள் சேர்த்து சூப் செய்து கொடுக்கலாம். கேரட். பீன்ஸ் சேர்த்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்
    வெண்ணெய் - 1/2 டீஸ்பூன்
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
    கேரட் - 1
    பீன்ஸ் - 3
    கொத்தமல்லி - சிறிதளவு
    மிளகு தூள் - தேவைக்கு
    உப்பு - தேவையான அளவு
    கார்ன் சிப்ஸ் - தேவைக்கு
    தண்ணீர் - தேவையான அளவு



    செய்முறை:

    கொத்தமல்லி, கேரட், பீன்ஸை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் 1 1/2 டேபிள் ஸ்பூன் சோள மாவை போட்டு, அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

    ஒரு அகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி, நறுக்கிய வைத்துள்ள காய்கறிகளை போட்டு, சிறிது உப்பு சேர்த்து, காய்கறிகளை வேக வைத்து, நீரை வடித்துவிட்டு காய்கறிகளை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் வெண்ணெய் போட்டு உருகியதும், 1/2 டேபிள் ஸ்பூன் சோள மாவு சேர்த்து கட்டி சேராதவாறு நன்கு கிளறி, பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கிளறி விட வேண்டும்.

    அடுத்து அதில் நீரில் கரைத்து வைத்துள்ள சோள மாவு கலவையை ஊற்றி கிளறி, வேக வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து, கலவையானது சற்று கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு இறக்கவும்.

    கடைசியாக மிளகு தூள், கொத்தமல்லி, கார்ன் சிப்ஸ் சேர்த்து கலந்து பரிமாறவும்.

    சுவையான கேரட் பீன்ஸ் சூப் ரெடி!!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் நோய்களே வராது. நரம்பு மண்டலம் சிறப்பாக இயங்கும். மலச்சிக்கல் தீரும். தைராய்டு பிரச்சனை நீங்கும். இடுப்பு சதைகள் குறையும்.
    செய்முறை

    விரிப்பில் நேராக படுக்கவும். இரு கால்களையும் மெதுவாக இடுப்பிற்கு மேல் உயர்த்தவும். கைகள் இரண்டையும் இடுப்புப் பக்கத்தில் பிடிக்கவும். இதுதான் சர்வாங்காசனம்.

    இப்பொழுது மெதுவாக கால்கள் இரண்டையும் பக்கவாட்டில் முடிந்தளவு விரிக்கவும். இப்படியே சாதாரண மூச்சில் 15 முதல் 25 நம்பர்களை என்னும் வரை நிலையாக இருக்கவும். பிறகு இரு கால்களையும் ஒன்று சேர்க்கவும்.

    பின்னர் மெதுவாக கைகளின் உதவியால் கால்களை தரைக்கு இடுப்பை தளர்த்தி கொண்டு வந்து படுக்கவும். இதே போல் இரண்டு முறை செய்யவும்.

    இதய பலவீனமுள்ளவர்கள், உடலில் அறுவை சிகிச்சை செய்தவர்கள், ரத்த அழுத்தும், நீரிழிவு, ஆஸ்துமா உள்ளவர்கள் யோகா ஆசிரியரின் நேரடி அறிவுரைப்படி இந்த ஆசனத்தை பயிலவும்.

    மற்றபடி, ஆரோகியமாக உள்ளவர்கள் ஒரே ஒரு மறை மட்டும் யோகா வல்லுனரின் மேற்பார்வையில் இந்த ஆசனத்தை பயில்வது சிறப்பு.

    பலன்கள்

    என்றும் இளமையுடன் வாழலாம். நோய்களே வராது. நரம்பு மண்டலம் சிறப்பாக இயங்கும். மலச்சிக்கல் தீரும். தைராய்டு பிரச்சனை நீங்கும். இடுப்பு சதைகள் குறையும்.

    ஜீரண மண்டலம் சிறப்பாக இயங்கும். மலட்டுத்தன்மை நீங்கும். இதயம் பாதுகாக்கப்படும். ரத்த அழுத்தம் வராது. ஆஸ்துமா, சைனஸ், டான்சில் நோய்கள் வரவே வராது.
    பள்ளிக்கு மாணவர்கள் வருகையை அதிகரிக்க புதிய கல்விக்கொள்கையில் அதிரடி திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பான கல்வி சூழலை ஏற்படுத்த பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளது.
    2016-17-ல் இந்திய அளவில் உயர் நிலைப்பள்ளிகளில் இடைநிற்றல் விகிதம் மிக அதிக அளவில் 22.13 சதவீதமாக உள்ளது. நடுநிலைப் பள்ளிகளில் இது 5.67 சதவீதமாகவும், ஆரம்பப்பள்ளிகளில் 6.35 சதவீதமாகவும் உள்ளது என்று இந்தியா ஸ்டாட் என்ற தகவல் திரட்டு நிறுவனம் தெரிவிக்கிறது. மேல்நிலைப்பள்ளிகளில் இது 13.9 சதவீதமாக இருந்தாலும் இது மிகவும் கவலையளிக்கும் விஷயமாக உள்ளது.

    இந்திய வான்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) முன்னாள் தலைவரான டாக்டர்.கே.கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு தயாரித்துள்ள புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை 2019-ல் பள்ளிகளில் இடைநிற்றல் விகிதம் அதிகமாக உள்ளதை சுட்டிக்காட்டி அதை குறைக்க பல பரிந்துரைகளை செய்துள்ளது.

    அருகமை பள்ளிகள் இல்லாத நிலை, பள்ளிகள் மீது நாட்டமின்மை, பாதுகாப்பற்ற சூழல், முக்கியமாக மாணவிகளுக்கு மோசமான உள்கட்டமைப்பு ஆகியவற்றை இடைநிற்றலுக்கான காரணங்களாக இந்த அறிக்கை சொல்கிறது.

    2016-17-ல் ஆரம்பக்கல்வியில் மொத்த சேர்க்கை விகிதம் அதிக அளவில் 95.1 சதவீதமாக இருந்தது. 6 முதல் 8 வரையிலான வகுப்புகளில் இது 90.7 சதவீதமாக குறைந்தது. 9, 10-ம் வகுப்புகளில் 79.3 சதவீதமாகவும், 11, 12-ம் வகுப்புகளில் 51.3 சதவீதமாகவும் உள்ளதாக பு.க.கொ வரைவு அறிக்கை கூறுகிறது.

    அஸ்திவாரத்தை பலப்படுத்துதல்

    பள்ளிகள் சுவாரசியம் மிகுந்த இடங்களாகவும் கற்றல் என்பது மகிழ்ச்சியளிக்கும் விஷயமாகவும் மாற்றப்பட வேண்டும் என்று புதிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கை கூறுகிறது.

    மாணவர்கள் மிகுந்த கவனத்துடன் நடத்தப்பட வேண்டும். அனைத்து பள்ளிகளுக்கும் ஆலோசகர்களும், சிறப்பு பயிற்சியாளர்களும் நியமிக்கப்படுவார்கள். தரமான உள்ளூடுகள் கிடைக்காமல் பாடங்களில் பின் தங்குவதால் பள்ளியில் இருந்து இடைநிற்கும் மாணவர்களுக்கு மனோரீதியான ஆதரவையும், ஆலோசனைகளையும், தீர்வுகளையும் அளிப்பார்கள்.

    அதிக அளவில் இடைநிற்றல் நடைபெறும் பகுதிகளில் மிகச்சிறந்த ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவார்கள். மாணவர்களின் வருகைப்பதிவு தொடர்ந்து கண்காணிக்கப்படும். அவர்களின் குடும்பத்தினரிடம் சமூக ஊழியர்கள் தொடர்பு கொண்டு கல்வியில் அம்மாணவர்கள் பின் தங்குவதற்கான காரணங்களை கண்டறிவார்கள்.

    காலை மற்றும் மதிய உணவு அளிக்கப்படுவதன் மூலம் வருகைப்பதிவை அதிகரிக்க வேண்டும். அதிக வருகைப்பதிவு உடைய மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் அளிக்கப்படும்.

    அணுகக்கூடிய தூரத்தில் பள்ளிகள்

    2016-17-ல், 100 ஆரம்பபள்ளிகளுக்கு 50 நடுநிலைப்பள்ளிகளும், 20 உயர்நிலைப்பள்ளிகளும், 9 மேல்நிலைப்பள்ளிகளும் இருப்பதாக அறிக்கை கூறுகிறது. இதை சீர்செய்யும் வகையில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளை அதிகரிக்க வேண்டும்.

    ஆரம்பப்பள்ளிகளையும், உயர்நிலைப்பள்ளிகளையும் தேவைப்படும் பகுதிகளில் ஒருங்கிணைப்பதன் மூலம் அனைவருக்கும் கல்வி வாய்ப்புகள் கிடைக்கச் செய்ய வேண்டும்.

    பாதுகாப்பு அம்சம்

    மாணவிகளின் பாதுகாப்பு ஒரு முக்கிய விஷயமாக உள்ளதால் நீண்ட தொலைவில் உள்ள பள்ளிகளுக்கு பொதுப்போக்குவரத்து வாகனங்களில் அனுப்ப குடும்பத்தினர் தயங்குகின்றனர். இதனால் மாணவிகளை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டில் இருக்க செய்வது அதிகரிக்கிறது.

    இந்த பிரச்சினையை சரி செய்ய பாதுகாப்பான போக்குவரத்து வசதிகள், தொலைதூரப் பகுதி மாணவிகளுக்காக பாதுகாப்பான விடுதிகள், சிறப்பு பேருந்துகள், நடந்து செல்ல குழுக்கள், மேல் வகுப்பு மாணவர்களுக்கு சைக்கிள்கள், போக்குவரத்து உதவித்தொகை ஆகியவற்றை ஏற்பாடு செய்ய வேண்டும்.



    பாதுகாப்பான விடுதிகள்

    நவோதையா பள்ளிகளில் உள்ளது போல் இலவச தங்கும் விடுதிகளை தேவைப்படும் பகுதிகளில் அரசு உருவாக்க வேண்டும். கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயாக்களை மேம்படுத்த வேண்டும்.

    இதன் மூலம் வெளியே தங்கி படிக்க வசதியில்லாத குடும்பங்களை சேர்ந்த மாணவிகள் கல்வி பெற முடியும்.

    சுகாதார திட்டங்கள்

    சுகாதாரம், துப்புரவு வசதிகள், ஊட்டச்சத்து இல்லாததால் உருவாகும் நோய்களின் காரணமாக இடைநிற்றல் அதிகம் உள்ள பகுதிகளில் பள்ளிகள், சமூக சேவகர்கள், ஆலோசகர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்கள் மூலம் பெற்றோர்கள், சமுதாய மக்களிடம், உடல் ஆரோக்கியம், சுகாதாரம், துப்புரவு பற்றிய விழிப்புணர்வு முகாம்களை நடத்தப்பட வேண்டும்.

    இந்த பள்ளிகளில் சுகாதாரத்துறை ஊழியர்கள் பணிபுரிவார்கள்.

    மிக இளம் வயதில் திருமணம், பாலியல் ரீதியான பாகுபாடுகள், தம்பி, தங்கைகளை பராமரிக்க வேண்டிய கட்டாயம், வருமானம் ஈட்ட வேண்டிய கட்டாயம் போன்ற சமூக, கலாசார காரணங்களும் மாணவிகளின் கல்வியை பாதிக்கின்றன.

    மறு வாய்ப்பு அளிப்பு திட்டங்கள்

    பள்ளியில் இருந்து இடைநின்றவர்கள், பிற்காலத்தில் கல்வியை தொடர விரும்பினால், அவர்களுக்காக ஒரு சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்படும்.

    இதன் மூலம் படிப்பை நிறுத்திய வகுப்பில் இருந்து மீண்டும் தொடர மறு வாய்ப்பு அளிக்கப்படும். வேலைக்கு செல்ல தொழில்முறை பயிற்சி, திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளிலும் சேரலாம்.

    இடைநின்றவர்களில் 15 வயதிற்கு மேற்பட்டவர்கள் பள்ளிகளுக்கு திரும்ப முடியாத நிலையில் வயது வந்தோருக்கான கல்வியில் சேரலாம்.

    தேசிய திறந்தவெளி பள்ளிக்கல்வி நிறுவனத்தின் திறந்தவெளி தொலைதூரக் கல்வி திட்டங்கள் மேம்படுத்தப்பட்டு விரிவுபடுத்தப்படும். பள்ளிகளுக்கு செல்ல முடியாத நிலையில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் இது பயன்படும்.

    அடிப்படை கற்றல் படிப்புகளுடன் 3, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு இணையான, ஏ, பி, சி என்ற மூன்று நிலை படிப்புகளை இது அளிக்கும். 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு இணையான மேல்நிலை படிப்புகளையும் அளிக்கும். மாநில திறந்தவெளி பள்ளிக் கல்வி நிறுவங்களை துவக்க மாநிலங்கள் ஊக்குவிக்கப்படும்.

    கல்வி உரிமை சட்டத்தை விரிவுபடுத்துதல்

    கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மேல்நிலைக்கல்வியை கொண்டு வருவதன் மூலம் 2030-ம் ஆண்டிற்குள் அனைத்து சிறார்களும் பள்ளிகளில் சேர்ந்து, 12-ம் வகுப்பு வரை கல்வி கற்க உறுதி செய்யப்படும்.

    குருக்குலங்கள், பாடசாலைகள், மதராசாக்கள், வீட்டுக்கல்வி போன்ற பல்வகையான பள்ளிகளை அனுமதிக்கும் வகையில் கல்வி உரிமை சட்டத்தில் உள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.

    மாணவர்களின் மனோரீதியான, உடல்ரீதியான பாதுகாப்பு அம்சங்கள், பாரபட்சமில்லாத சேர்க்கை, லாப நோக்கமற்ற கல்வி முறை, குறைந்தபட்ச கல்வித்தரம் ஆகியவற்றை ஒழுங்கு செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
    கடவுளுக்கு இணையாக முதியோரைக் கருதிய காலம் ஒன்று இருந்தது. முதியோரின் நிலைமை என்பது இன்று மிகவும் பரிதாபத்துக்குரியதாக உள்ளது, அவர்கள் வேண்டப்படாதவர்களாகவும், ஆறாவது விரலாகவுமே இருக்கிறார்கள்.
    கடவுளுக்கு இணையாக முதியோரைக் கருதிய காலம் ஒன்று இருந்தது. இப்போது காலம் மிகவும் மாறிப் போய்விட்டது. நமது கலாசாரத்துடன் பொருந்திப் போகிறதோ, இல்லையோ கூடுமானவரை மேலை நாட்டை பின்பற்ற நாம் முயன்று கொண்டிருக்கிறோம்.

    முதியோரை மதிக்கும் பண்பாடு என்பது பெரிதும் குறைந்துவிட்டது. கடவுளாகக் கருதப்பட்ட அவர்கள் சுமையாகவோ செலவாகவோ கருதப்படுகிறார்கள். இந்த பிரச்சினையை நாம் ஆழ்ந்து நோக்கினால் முதியோரின் நிலைமை என்பது இன்று மிகவும் பரிதாபத்துக்குரியதாக உள்ளது, அவர்கள் வேண்டப்படாதவர்களாகவும், ஆறாவது விரலாகவுமே இருக்கிறார்கள். தனிமையும் புறக்கணிப்பும் அவர்களை பெருமளவில் பாதிக்கிறது. தாம் இருப்பதே தேவையற்ற ஒன்று என்று கருதத் தொடங்குகிறார்கள்.

    இந்த உணர்வு அவர்களின் உடல் உபாதைகளுடன் இணைந்துகொண்டு அவர்களுக்கான வாழ்க்கையை நரகமாக்கி விடுகிறது. ஒவ்வொரு நாளும் நாம் இவ்வாறான பல்வேறு சோகக்கதைகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

    முதியோர் அவமதிப்பு என்பது வயதானவர்களுக்கு மன இறுக்கத்தை ஏற்படுத்தும் செயல்பாடானவையாகும். இது குறித்து யாரும் கலந்துரையாட எண்ணுவதில்லை. மரபு சார்ந்து முதியோர் என்பவர் குடும்பத்திலும், சமூகத்திலும் மதிப்பிற்குரியவர்கள் ஆவார்கள். அவர்கள் அவமதிக்கப்படுவதை யாரும் சிந்திப்பதில்லை.அவர்கள் பல்வேறு விதத்தில் அவமதிப்பை சந்திக்கின்றனர்

    வயதானவர்களை பாரமாக கருதும் அவர்களின் உறவினர்கள் முதியோர்களை அடித்தல் ,கிள்ளுதல், கை, கால்களை முறுக்கி துன்புறுத்தும் செயலில் ஈடுபடுகின்றனர்,மேலும் வீட்டிற்கு வரும் விருந்தாளிகளிடம் பேச விடாமல் தடுப்பது, பேரக்குழந்தைகளை அவர்களிடம் விளையாட விடாமல் தடுப்பது, ஒரே குடும்பத்தில் இருப்பவர்கள் கூட அவர்களிடம் யாரும் பேசாமல் இருப்பது போன்ற நிகழ்வுகள் மூலம் முதியோர்கள் மனதளவில் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

    முதியோரின் வருமானம் அல்லது நிதி ஆதாரத்தைத் தமது சொந்தக் காரியங்களுக்காக, கவனித்துக் கொள்பவர் அல்லது ஆலோசகர் முதியோரிடம் தவறான முறையில் உயில் எழுதும்படி வற்புறுத்துவதும் அவர்களை உதாசீனப்படுத்துவதும் முதியவர்களின் அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்யாமல் இருப்பது அல்லது வேண்டும் என்றே தவிர்ப்பது போன்றவை முதியோரை மிகுந்த துயரத்துக்கு ஆளாக்கி விடுகிறது.

    முதுமையில் எந்தவிதமான வருமானமோ சொத்தோ இல்லாமல் இளைஞர்களைச் சார்ந்து வசிப்பவர்கள், ஒரே குழந்தையை பெற்ற முதியவர்கள், நாள்பட்ட நோய் உள்ள முதியவர்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையில் கிடக்கும் முதியவர்கள், தங்களுடைய எல்லா தேவைகளுக்கும் வீட்டில் இருப்பவர்களின் உதவியை நாடும் போது முதியவர்களிடம் வெறுப்பும், கோபமும் ஏற்படுகிறது.

    சரியில்லாத குடும்பச் சூழ்நிலையில் வளர்ந்து வரும் குழந்தை, பெரியவனாகும் போது தன் கோபத்தை முதியவர்களிடம் காண்பிக்கிறான். வீட்டில் தொடர்ந்து முதியவர் நோய்வாய்ப்பட்டு கிடக்கும் போது இடவசதி மற்றும் நிதி வசதி குறைவினால் முதியவர்கள் அவமதிக்கப்படுகிறார்கள். முதியவர்களை தொடர்ந்து கவனித்துக் கொள்ளும் போது அவர்களை கவனித்து கொள்ளும் உறவினர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும். இதனால் நிதி வசதியும் குறையும். சில சமயங்களில் செய்யும் தொழிலில் இழப்பும் ஏற்படும். இவர்கள் மது அல்லது மருந்துக்கு அடிமை ஆகிவிடுகிறார்கள்.

    மேற்கொண்ட பலவித காரணங்களால் பாதிக்கப்படும் உறவினர்கள், முதியவர்களை அவமதிக்க தொடங்குகின்றனர்.சமூகத்தில் மதிப்பிழந்த பெரியவர்கள் மற்றும் நிதி வசதியில்லாத முதியவர்கள் வீட்டில் இளைஞர்களால் அவமதிக்கப்படுகிறார்கள்.ஹெல்பேஜ் இந்தியா’ எனும் தொண்டு நிறுவனம் 2014-ல் நடத்திய கணக்கெடுப்பில் சுமார் 32சதவீத முதியவர்கள் இளைய சமுதாயத்தினரால் அவமதிக்கப்படுகிறார்கள் அல்லது தக்க மரியாதை இல்லாமல் நடத்தப்படுகிறார்கள். இதைவிட இன்னமும் அதிர்ச்சி யூட்டும் செய்தி, 56 சதவீத முதியவர்கள் தனது மகன்களால் புறக்கணிக்கப்படுகிறார்கள் மற்றும் 23 சதவீத முதியவர்கள் தனது மருமகள்களால் புறக்கணிக்கப்படுகிறார்கள்.



    இளைஞர்கள் அவர்களாகவே முதியோர்களை புறக்கணித்தலை உணராதபட்சத்தில், சமூகம் அதை உணர வைக்க வேண்டும். பள்ளிகள், கல்லூரிகளில் முதியவர்களின் பெருமைகளைப் பற்றியும், அவர்களின் தேவையைப் பற்றியும் சொல்லித் தர வேண்டும். தொலைக்காட்சி, வானொலி போன்ற ஊடகங்களில் பெற்றோர்கள், முதியோர்களின் அவசியத்தை உணர்த்தும் வகையில் நிகழ்ச்சிகள் ஒலி-ஒளி பரப்பப்பட வேண்டும். பத்திரிகைகள் வாயிலாகவும் இது பரவலாக்கப்பட வேண்டும். முதியவர்களை மதித்து நடக்கும் இளைஞர்களைப் பாராட்டி விழா எடுத்து பரிசுகளை வழங்கலாம். இது மற்ற இளைஞர்கள் மனதிலும் மாற்றத்தை விளைவிக்கும்.ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 15- ம் தேதியை “முதியோருக்கு எதிரான கொடுமைகள் ஓழிய விழிப்புணர்ச்சி எட்டும் நாளாக‘ அனுசரித்து வருகிறது. அன்று எல்லா இளைஞர்களும், குடும்பத்தினரும் கீழ்க்கண்ட உறுதிமொழியை எடுத்துக்கொள்ள வேண்டும்.

    “முதியோருக்கு எதிராக இழைக்கப்படும் அனைத்து வகை கொடுமைகளையும் இவை வாய்மொழியாகவோ, வன்முறை மூலமாகவோ, பொருளாதார ரீதியாகவோ எந்த உருவில் வந்தாலும் அவற்றை களைவதற்காக முளையிலேயே கண்டுபிடித்துத் தலையிட்டுத் தடுக்கவும், அறவே நீக்கவும், என் சொந்த முயற்சியாலும், தேவைப்பட்டால் அரசு மற்றும் தொண்டு நிறுவனங்களின் துணையோடும் பாடுபடுவேன்.

    மேலும், அவர்களுடைய அனைத்து வகையான தேவைகளுக்கும் அதாவது உடல் வளத்துக்கும், பாதுகாப்புக்கும், அன்பு மற்றும் மனவளத்துக்கும், மதிப்பிற்கும், மரியாதைக்கும், அங்கீகாரத்துக்கு இடையூறு ஏற்பட்டால் அவற்றைத் தடுத்து பாதுகாப்பேன் என்றும் உறுதி ஏற்கிறேன்”.இயலாமையைப் பொறுத்தல் ஓர் உயர்ந்த குணம் ஓசையின்றி முதியோருக்கு இழைக்கும் கொடுமை தண்டனைக்குரிய வன்முறை. முதியோருக்கு எதிரான கொடுமை ஒரு மனிதாபிமானமற்ற செயல்.முதுமையில் இயலாமை இயற்கையின் நியதி, முதியோருக்குக் கொடுமை செய்வோர் இயற்கையின் எதிரியாவர். இது ஓரு வீட்டுப்பிரச்சினையாக யாரும் எண்ணிவிடக்கூடாது. இதுவே விரைவில் ஓரு சமுதாயப் பிரச்சினையாக உருவெடுத்தாலும் வியப்படைவதற்கு ஒன்றுமில்லை. முதியோர்களை மதிப்போம். அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வோம். அவர்கள் நிம்மதியாக, கவுரவமாக வாழ எல்லோரும் துணை இருப்போம்.

    டாக்டர் வி.எஸ்.நடராஜன்,

    முன்னாள் தலைவர், முதியோர்நலப்பிரிவு, ராஜீவ்காந்தி பொது மருத்துவமனை, சென்னை.
    பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு வெரைட்டி சாதம் செய்து கொடுக்க விரும்பினால் பன்னீர் புலாவ் செய்து கொடுக்கலாம். இன்று இந்த புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பன்னீர் - 250 கிராம்,
    உதிரியாக வடித்த சாதம் - 2 கப்,
    வெங்காயம் -  ஒன்று
    இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,
    பட்டை - சிறிய துண்டு,
    கிராம்பு, ஏலக்காய் தலா - 2,
    பிரியாணி இலை - ஒன்று,
    பச்சை மிளகாய் - 4,
    நெய் - ஒரு டீஸ்பூன்,
    புதினா, கொத்தமல்லி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பன்னீரை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை போட்டு தாளித்த பின்னர் அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் பச்சை மிளகாய், சிறிதளவு புதினா, கொத்தமல்லி, உப்பு சேர்த்துக் கலக்கவும்.

     பின்னர் அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதி வந்தவுடன் பன்னீரை போடவும்.

    கலவை சேர்ந்து திக்காக வரும்போது சாதத்தை சேர்த்து, மிதமான தீயில் வைத்து கிளறவும்.

    மீதியுள்ள புதினா, கொத்தமல்லி மற்றும் நெய் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

    சுவையான பன்னீர் புலாவ் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இந்த உணவு தொடர்ந்து எடுத்துக்கொள்ளும் போது வாதம், இருதய நோய், சர்க்கரை நோய், உடல் எடை என அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக வந்துவிடும்.
    * இந்த உணவு ரத்த அழுத்தத்தினைக் கூட்டும். தொடர் உள் வீக்கத்தினை உருவாக்கும். இவை இரண்டும் சேர்ந்து இருதய நோயினை உருவாக்கும்.

    * இந்த உணவு உணவுக் குழாயில் புற்றுநோயினை உருவாக்கும். நுரையீரல் புற்றுநோய், சிறுகுடல் புற்றுநோய் சர்க்கரைப்பை புற்று நோய் என அனைத்தினையும் உருவாக்கும்.

    * கல்லீரலுக்கு அதிக கனத்தினைக் கொடுத்து கொளுப்பு கல்லீரலாக்கும் தன்மையினை இந்த உணவு கொண்டது.

    * இந்த உணவு சிறுநீரகம், கவுட் மற்றும் மறதி நோய்களை உருவாக்கும்.

    * 20 சதவீத சக்தியினை இந்த உணவில் இருந்து நீங்கள் பெற்றால் 25 சதவீதம் கூடுதலாக இருதய நோய் பாதிப்பு ஏற்படும்.

    * இந்த உணவு சர்க்கரை நோய்க்கு ஆபத்தானது.

    * இந்த உணவு நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியினைக் குறைத்து கிருமி, நோய் தாக்குதல்களை எளிதில் வரவழைக்கும்.

    * இந்த உணவு சருமத்தில் முதுமையைக் கூட்டும்.

    * இந்த உணவு ஈறுகள் நோய், மன உளைச்சல், தலைவலி, சோர்வு, கவனம் செலுத்த இயலாமை, டென்ஷன், கோபம் இவற்றினை ஏற்படுத்தும். ஏனெனில் இந்த உணவு வைட்டமின்கள் ஏ.சி.பி.12 மற்றும் கால்ஷியம் இவை இருக்க வேண்டிய இடத்தினை ஆக்கிரமித்து விடுகின்றது.

    * இந்த உணவு தொடர்ந்து எடுத்துக்கொள்ளும் போது வாதம், இருதய நோய், சர்க்கரை நோய், உடல் எடை என அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக வந்துவிடும்.

    * இந்த உணவு ஒருவரை சத்தமில்லாமல் கொன்றுவிடும்.



    இந்த உணவு என்னவென்று தெரியாமல் இருக்க முடியுமா? இதுதான் சர்க்கரை. அன்றாட உணவில் அதிக சர்க்கரையினை சேர்ப்போருக்கு இத்தகு விளைவுகள் ஏற்படும் வாய்ப்புகள் மிகமிக அதிகம். எனவே சர்க்கரை உணவினை தவிர்ப்போமாக.

    * புரத குறைபாடு: நன்றாகத்தான் உணவு உட்கொள்கின்றேன் என்று கூறினாலும் சிலருக்கு புரதக் குறைபாடு இருக்கத்தான் செய் கின்றது. நல்ல புரத உணவு எடுத்துக் கொள்பவர்களுக்கும் புரதக் குறைபாடு ஏற்படத்தான் செய் கின்றது. புரதத்தினை உடல் ஏற்றுக் கொள் ளும்போது மட்டுமே புரத குறைபாடு தவிர்க்கப்படுகிறது. புரத குறைபாட்டின் சில அறிகுறிகளை காண்போம்.

    * வயிற்று உப்பிசம், காற்று: ஒவ்வொரு உணவிற்குப் பின்னும் வயிறு உப்பிசமும், காற்றும் இருந்தால் உடல் புரதத்தினை உடைக்கும் என்ஸைம்களை உற்பத்தி செய்யவில்லை என்று பொருள்.

    * மலச்சிக்கல்: தேவையான ஜீரண என்ஸைம்ஸ் உடலால் உற்பத்தி செய்யப்படவில்லை என்பதும் மலச் சிக்கலுக்கு காரணமாக இருக்கலாம்.

    * உங்கள் ஜீரண மண்டலம் சக்தி அற்றதாக இருக்கலாம்.

    * படபடப்பு, சோகம், இவை யும் புரத குறைபாட்டி னை ஏற்படுத்த முடியும்.

    * தைராய்டு, இன்சுலின் இன்னும் மற்ற ஹார்மோன்களின் குறைபாடு ஏற்படும் பொழுதும் புரத குறைபாடு காணப்படலாம்.

    * தொடர்ந்து அதிக எடை கூடிக்கொண்டு இருந்தால் மருத்துவர் ஆலோசனையின் பேரில் புரதம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    * சருமம் நன்கு இருக்க, முடி நன்கு இருக்க புரதம் மிக அவசியம்.

    * வயது கூடும் பொழுது தேவை யான அளவு புரதம் இருக்கின்றதா என மருத்துவரிடம் கேட்டறிய வேண்டும்.

    * அசிடிடிக்காக அதிக அன்டாசிட் மாத்திரை எடுத்துக் கொள்பவர்களுக்கு அதிக புரத குறைபாடு ஏற்படும்.
    குழந்தைகளிடம் கூட பொறாமை குணம் உண்டு. ஆனால் பெரும்பாலும் அது அர்த்தம் தெரியாத பொறாமையாக இருக்கும். அதனால் ஏற்படும் விளைவுகளையும் குழந்தைகள் அறிந்திருக்கமாட்டார்கள்.
    குழந்தைகளிடம் ஏற்படும் பொறாமை குணத்தை சரியான நேரத்தில் கண்டறிந்து பெற்றோர் தவிர்க்கவேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் இளம் குற்றவாளிகள் ஆகும் கொடூரம் நிகழ்ந்து விடக்கூடும்.

    பொறாமைக் குணம் கொண்ட குழந்தைகள் எளிதாக அடையாளம் காணப்பட்டு, மற்றவர்களால் ஓரங்கட்டப்படுவார்கள். அப்படி ஓரங்கட்டப்படும் போது, அவர்களுக்குள் அது வெறுப்பை உருவாக்கும். அதனால் அவர்களுடைய செயல் பாடுகளில் மாற்றம் ஏற்படும். அப்போது மற்றவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கவும் முயற்சிப்பார்கள். அதுவே குற்றச் செயலாகி, இளங்குற்றவாளியாகி விடுவார்கள்.

    குழந்தைகளிடம் பொறாமை குணம் வளர பெற்றோர்களும் ஒரு விதத்தில் காரணம். பின்விளைவுகளைப் பற்றி அறியாமல் இரு குழந்தைகளிடையே அவர்கள் போட்டி மனப்பான் மையை உருவாக்கி விடுகிறார்கள். குழந்தை களின் வேகத்தையும், திறமைகளையும் வெளிக் கொண்டுவர போட்டி மிகவும் அவசியம். இரு குழந்தைகளுக்கு இடையே போட்டி இருந்தால் தான் அவர்கள் உற்சாகத்துடன் செயல்படுவார்கள் என்பது உண்மைதான். ஆனால் அந்த போட்டி நாளடைவில் பொறாமையாக மாறிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

    அதுபோல் வெற்றி பெற்ற குழந்தைகளை தலையில் தூக்கி வைத்து பாராட்டுவதும், தோற்றுப்போன குழந்தைகளை இகழ்வதும் அவர்கள் மனதை வெகுவாக காயப்படுத்திவிடும்.

    குழந்தைகளுக்கு தோல்வி ஏற்படும்போது பெற்றோர்கள் அறிவுபூர்வமாக செயல்பட்டு, குழந்தைகளின் மனதில் தொய்வு ஏற்பட்டுவிடாமல் சீராக்கவேண்டும். இல்லையென்றால் அது குழந்தைகளை பொறாமை என்னும் இருளில் தள்ளிவிடும். போட்டிக்கும், பொறாமைக்கும் நூலிழைதான் வித்தியாசம். அந்த எல்லையை பெற்றோர் புரிந்துகொண்டு, குழந்தைகளுக்கும் தெளிவாக்கவேண்டும்.

    எல்லா குழந்தைகளும் ஒரே மாதிரி இருப்பதில்லை. மனநிலை, உடல்நிலை, செயல்பாடுகளில் ஒவ்வொரு குழந்தைக்கும் வித்தியாசம் இருக்கும். இதில் குறை நிறை என்று எதையும் பிரித்துப் பார்க்க முடியாது. அவர்களை தன் போக்கில் வளரவிட வேண்டும். தவறுகளை சுட்டிக் காட்டும் போதும் ஒரு பக்குவம் வேண்டும். மற்றவர்கள் முன் குறை கூறுவதும், மற்ற குழந்தைகளோடு ஒப்பிட்டு தாழ்த்தி பேசுவதும் அவர்களின் குறைகளை களைய உதவாது. குழந்தைகளால் ஒருபோதும் அவமரியாதைகளை தாங்கிக் கொள்ளமுடியாது.
    கர்ப்பிணி பெண்கள் எப்போதும் ஒரு உணவை சாப்பிட்டு, அதை தன் உடல் ஏற்றுக்கொள்ளாவிட்டால் உடனடியாக தவிர்த்துவிட வேண்டியது நல்லது.
    கர்ப்பிணி பெண்கள் எப்போதும் ஒரு உணவை சாப்பிட்டு, அதை தன் உடல் ஏற்றுக்கொள்ளாவிட்டால் உடனடியாக தவிர்த்துவிட வேண்டியது நல்லது. ஆம், ஒரு சில உணவை நாம் வழக்கமான நாளில் எடுத்துக்கொண்டாலும், கர்ப்ப காலத்தில் தேவையற்ற ஒவ்வாமை பிரச்சனையை அது ஏற்படுத்த அதிக வாய்ப்பிருக்கிறது.

    சோயா, கோதுமை, பசு பால், முட்டை, வேர்க்கடலை, பாதாம், அக்ரூட் பருப்புகள், மீன் போன்றவை ஒருமுறை அலர்ஜி ஏற்படுத்தும்போது மீண்டும் உண்ண முயலாதீர்கள். ஆனால் ஒரு சில ஆய்வின் முடிவுப்படி தெரியவருவது என்னவென்றால், அலர்ஜி அற்ற உணவை நீங்கள் கர்ப்ப காலத்தில் எடுத்துக்கொள்வதால் உங்களுக்கும், உங்கள் கருவில் வளரும் குழந்தைக்கும் மிகவும் நல்லது.
     
    கர்ப்ப காலத்தில் எந்த வகையான உணவுகள் என்ன பலனை தருகிறது? நச்சுக்கள் அடங்கிய உணவுகள் எவை? அவற்றை நாம் எவ்வளவு சாப்பிடுவதன் மூலம் உங்களுக்கும், உங்கள் கருவிலிருக்கும் குழந்தைக்கும் மிகவும் நல்லது போன்ற பல விஷயங்களை பற்றி அறிவது அவசியம். இயற்கையை பாட்டிலிலும், பிளாஸ்டிக் கவரிலும் அடைத்து வைத்து பதப்படுத்தப்பட்ட உணவை உண்ணுவதில் எந்த வித பயனுமில்லை.
     
    கர்ப்பிணிகளுக்குப் பால் அவசியமானது. கால்சியம் பற்றாக்குறையைச் சரிசெய்ய எல்லாருக்கும் பால் குடிக்கச் சொல்லி பரிந்துரைப்பார்கள் மருத்துவர்கள். பதப்படுத்தப்படாத பால் மற்றும் பால் பொருட்களை உபயோகிப்பது கிருமித் தொற்றுகளுக்கும் அவை ஏற்படுத்துகிற நோய்களுக்கும் வழிவகுக்கும். பாலை எப்போதும் நன்றாகக் காய்ச்சியே குடிக்க வேண்டும்.
     
    கர்ப்ப காலத்தில் சீஸை தவிர்ப்பதே சிறந்தது. அதிலும் மிகவும் மென்மையான சீஸ் வகைகளில் பாக்டீரியாக்கள் அதிகமிருக்கும். அவை கருவின் வளர்ச்சியைப் பாதிக்கக்கூடியவை.
     
    வெளியிடங்களில் அசைவம் சாப்பிடுவதைத் தவிர்ப்பது கர்ப்பிணிகளுக்குப் பாதுகாப்பானது. வீட்டில் செய்கிற போதும் முழுமையாக சமைக்கப்பட்டவையா எனப் பார்த்து சாப்பிட வேண்டும்.
    ×