என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    கர்ப்பிணி பெண்கள் வாரம் மூன்று முறை மீன் சாப்பிடுவது குழந்தையின் வளர்ச்சியை மேம்படுத்தும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
    கர்ப்பிணி பெண்கள் வாரம் மூன்று முறை மீன் சாப்பிடுவது குழந்தையின் வளர்ச்சியை மேம்படுத்தும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து கொழுப்பு கலந்த மீன் வகைகளை சாப்பிட்டு வருவதன் மூலம் வயிற்றில் இருக்கும் குழந்தையின் பார்வை திறனும், மூளையின் செயல்பாடுகளும் மேம்படும். இதனை பின்லாந்தில் உள்ள துர்க்கு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

    ‘‘கர்ப்பிணி பெண்களின் கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சிக்கு மீன் பயன் தருவதாக எங்கள் ஆய்வு முடிவு அமைந்துள்ளது’’ என்கிறார், பல்கலைக்கழக அதிகாரியான, ஹிர்சி லெய்டீனன். இந்த ஆய்வுக்காக கர்ப்பிணி பெண்களின் உணவு பழக்கமும், உணவு ஆரோக்கியமும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. குழந்தையின் வளர்ச்சியும் கருத்தில் கொள்ளப்பட்டது.

    மீனில் இருக்கும் புரதம் குழந்தையின் சருமம், தசை, முடி, எலும்புகளின் வளர்ச்சிக்கு அவசியமானது. அதனால் கர்ப்பகாலத்தில் கர்ப்பிணி பெண்கள் கூடுதலாக 25 சதவீதம் புரதம் சாப்பிடுவது அவசியம். குழந்தைகளின் பற்கள், இதயம், நரம்புகள், தசைகளை வலுப்படுத்துவதில் வைட்டமின் டி-யின் பங்களிப்பும் இருக்கிறது.

    குழந்தைகளின் வளர்ச்சிக்கு மட்டுமின்றி கர்ப்பிணி பெண்களின் எலும்புகள், பற்களை வலுப்படுத்தவும் மீன் உதவும். கருவில் இருக்கும் குழந்தைக்கு ஆக்சிஜனை ரத்தத்தின் வழியாக எடுத்து செல்வதில் இரும்புச்சத்து முக்கிய பங்காற்றுகிறது. கர்ப்பிணி பெண்களின் நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்தும். அதனால் கர்ப்ப காலத்திற்கு முன்பும், பின்பும் உணவில் தவறாமல் மீனை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
    உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் அடிக்கடி உணவில் கொள்ளுவை சேர்த்து கொள்ளலாம். இன்று கொள்ளுவை வைத்து புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கொள்ளு - 2 கப்
    பச்சை மிளகாய் - 3
    தேங்காய் துருவல் - அரை கப்
    மஞ்சள்தூள் - சிறிதளவு
    பெருங்காயத்தூள், கடுகு - சிறிதளவு
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    ப.மிளாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இரவு முழுவதும் கொள்ளுவை நீரில் ஊற வைத்துக்கொள்ளவும். பின்னர் நீரை வடிகட்டி மிக்சியில் அரைத்துக்கொள்ளவும்.

    அதனை இட்லி தட்டில் கொட்டி வேக வைத்து உதிர்த்துக்கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, பெருங்காயத்தூள், மஞ்சள் தூள், மிளகாய், உப்பு ஆகியவற்றை சேர்த்து தாளித்து, புட்டு மீது ஊற்றி கிளறவும்.

    பின்னர் தேங்காய் துருவலை தூவி பரிமாறலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஹாக்கினி முத்திரை ஞாபகமறதியைப் போக்கப் பயன்படும். மறந்துபோன விஷயத்தைத் திரும்பவும் ஞாபகப்படுத்திப் பார்க்கவும் பயன்படுத்தலாம்.
    வலது மூளை இடது மூளை இரண்டையும் தூண்டிவிட்டு, ஒரே நேரத்தில் அவற்றை இணைந்து இயங்க வைக்கும் ஒரு எளிய தந்திர யோக வழியே ஹாக்கினி முத்திரையாகும். இதன் மூலம் நினைவு திறன் அதிகரிக்கும்.

    இந்த முத்திரை ஞாபகமறதியைப் போக்கப் பயன்படும். மறந்துபோன விஷயத்தைத் திரும்பவும் ஞாபகப்படுத்திப் பார்க்கவும் பயன்படுத்தலாம்.

    செய்முறை :

    இடதுகை வலதுகை விரல்கள் ஒன்றை ஒன்று தொடாமல் நேராக நீட்டி அவைகளின் நுனிகளை ஒன்றை ஒன்று தொட்டுக் கொண்டிருக்கவேண்டும்.

    விரிப்பில் அமர்ந்து கொண்டோ அல்லது நாற்காலியில் அமர்ந்து கொண்டோ இந்த முத்திரையை செய்யலாம்.

    முதுகும் கழுத்தும் வளைவின்றி நேராக இருக்க வேண்டும். இரண்டு கைகளின் விரல் நுனிகளும் மறு கை விரல்களின் ஒத்த விரல்களை (படத்திலுள்ளபடி) தொட்டபடி இருக்கும்படி செய்ய வேண்டும் அழுத்தக்கூடாது.

    சுவாசம் இயல்பாகவும் சீராகவும் இருக்க வேண்டும். முழுக் கவனமும் செய்யும் முத்திரையின் மீது குவிந்திருக்க வேண்டும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்த முத்திரையை செய்யலாம்.

    மாணவர்கள் தினசரி நான்கு முறை (காலை, மதியம், மாலை, இரவு) 10-15 நிமிடம் வரையில் செய்யலாம்

    பயன்கள்

    இந்த ஹாக்கினி முத்திரையை செய்வதன் மூலம் பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்களை நினைவுக்கு கொண்டுவர முடியும். நினைவுத்திறனை மேம்படுத்தப் பயிற்சி தரும் அமைப்புகள் இந்த முத்திரையை பயன்படுத்துகிறார்கள்.

    இந்த முத்திரையைச் செய்துவிட்டு படிக்கத் துவங்கினால், படித்தவை அப்படியே மனதில் தங்கும். எளிதில் புரியும். மாணவர்கள் தேர்வு எழுதிக் கொண்டிருக்கும் போது ஒரு கேள்விக்கான பதில் மறந்து போனால், உடனே இந்த முத்திரையைச் செய்தால் அது நினைவுக்கு வந்துவிடும்.

    பெண்கள் வீட்டுத் தேவைக்கான செலவுகளில் ‘கடித உறை உத்தி’யைப் பயன்படுத்துவதன் மூலம் ஏராளமான பணத்தைச் சேமிக்க முடியும். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    அன்றாட வாழ்க்கையை நகர்த்திச் செல்வதற்கு பணம் அவசியமாக உள்ளது. ஆனால், தேவையான அளவைவிட அதிகம் செலவழிக்கிறோம் என்ற எண்ணம் நம்மில் பலரிடம் உள்ளது. தினசரி செலவுகளுக்கு கடிவாளம் போட்டு, குறிப்பிடத்தக்க அளவு சேமிப்பது எப்படி?

    இதோ விவரம்...

    வீட்டுத் தேவைக்கான செலவுகளில் ‘கடித உறை உத்தி’யைப் பயன்படுத்துவதன் மூலம் ஏராளமான பணத்தைச் சேமிக்க முடியும். ஒரு மாதத்தின் வெவ்வேறுவித செலவுகளுக்கு வெவ்வேறு கடித உறைகளைப் பயன்படுத்தவேண்டும். குறிப்பாக, பணத்தைச் சேமிப்பதில் பிரச்சினை ஏற்படும் வகைகளைத் தேர்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு வகைக்கும் தேவையான குறைந்தபட்ச பணத்தைத் தனித்தனி கடித உறைகளில் வைக்க வேண்டும். அதையே செலவழிக்க வேண்டும். இம்முறையைக் கண்டிப்புடன் பின்பற்றி வந்தால், நிச்சயமாகப் பணத்தைச் சேமிக்க முடியும்.

    சந்தையில் கிடைக்கும் பல்வேறு கேஷ்பேக் கிரெடிட் கார்டுகள் மூலம் உணவகங்கள், திரையரங்குகள், பெட்ரோல் நிலையம், காய்கறிக்கடைகளில் பல்வேறு கேஷ்பேக் சலுகைகளைப் பெறமுடியும். உங்களால் கிரெடிட் கார்டு செலவுகளைக் கட்டுப்படுத்த முடியும் என்றால் இந்த முறை சிறந்தது.

    நம்மில் பெரும்பாலானோர் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை அதிகம் பயன்படுத்துவதால், அதற்கேற்றாற் போல் அதிகமாகச் செலவழிகிறது. அதிலும், விறுவிறுவென்று உயரும் பெட்ரோல், டீசல் விலையும் அனைவரையும் கவலைப்படுத்துகிறது. இவ்விஷயத்தில் பணத்தைச் சேமிக்கப் பொதுப் போக்குவரத்து அல்லது வாகனங்களைப் பகிர்தல் முறையில் பயணம் செய்யலாம்.

    நீங்கள் போஸ்ட்பெய்டு எண்ணைப் பயன்படுத்தினால் உடனடியாக பிரீபெய்டு எண்ணுக்கு மாற வேண்டும். இதன் மூலம் பல்வேறு மதிப்புக் கூட்டு சேவைகளைத் தவிர்ப்பதால் அதிகப் பணத்தைச் சேமிக்க முடியும். போஸ்ட்பெய்டு திட்டத்தையே தொடர விரும்பினால், உங்களின் தேவைக்கு ஏற்ப மலிவுவிலை திட்டமாகத் தேர்வு செய்ய வேண்டும்.

    எந்த ஒரு பொருளை வாங்கும் முன்பும் விலையை ஒப்பிட்டுப் பார்ப்பது அவசியம். அதற்காகவே உள்ள இணையதளங்களைப் பயன்படுத்தலாம். மேலும் கூப்பன்கள் மற்றும் பல்வேறு இணையதளங்கள், குறிப்பிட்ட கிரெடிட் கார்டுகளுக்கு வழங்கும் கேஷ்பேக் சலுகைகளையும் பயன்படுத்தலாம்.

    ‘இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம்’ என்பது போன்ற சலுகைகளில் மயங்காதீர்கள்.

    மளிகைப் பொருட்கள் என்பது தவிர்க்க முடியாத அத்தியாவசியத் தேவைகளில் ஒன்று. ஒவ்வொரு முறையும் இப்பொருட்களை வாங்கச் செல்லும்போது பட்டியலிட்டு வாங்குங்கள். இதன் மூலம் தேவையில்லாதவற்றை வாங்குவதைத் தவிர்க்கலாம். மொத்தமாகப் பொருட்கள் விற்கும் கடைகளில் பொருட்களை வாங்குவதன் மூலம் விலை குறையும்.

    திரையரங்கம் செல்லும் எண்ணிக்கையைக் குறைப்பது, டி.வி. சந்தா தொகையைக் குறைப்பது என்று பொழுதுபோக்குச் செலவுகளில் கொஞ்சம் கை வைக்கலாம்.

    சாதாரண விளக்குகளுக்குப் பதிலாக சி.எப்.எல். அல்லது எல்.இ.டி. விளக்குகளைப் பயன்படுத்தலாம். தேவைப்படாத மின்னணுப் பொருட்களின் மின் இணைப்பைத் துண்டிக்கலாம் அல்லது நீக்கலாம்.

    பெரும்பாலான வீட்டு பட்ஜெட்களில் நெருக்கடியை ஏற்படுத்தும் விஷயம், வெளியே சென்று உணவு அருந்துவது. அடிக்கடி ஓட்டல்களில் உணவு உண்பதைத் தவிர்ப்பது ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல, பர்சுக்கும் நலம்.

    வெளியில் செல்லும்போது தண்ணீர் பாட்டில்கள் போன்றவற்றை வாங்குவதைத் தவிர்க்கவேண்டும். மேலும் பிராண்டட் பொருட்கள், திரையரங்கில் உணவு மற்றும் பானங்கள், உடற்பயிற்சி உறுப்பினர் அட்டை போன்றவற்றைத் தவிர்க்கலாம்.

    புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற சுகாதாரமற்ற பழக்கங்கள் அதிக பணத்தைச் செலவழிக்கச் செய்யும். இவற்றைத் தவிர்ப்பதால் செலவுகளைக் குறைப்பதுடன், உடல்நலம் கெடுவதையும் தடுக்கலாம்.

    மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் எதிர்பாராத, பெரிய அளவிலான மருத்துவச் செலவுகளைத் தவிர்க்கலாம்.

    வாரத்தின் சில நாட்களை ‘செலவழிக்காத நாட்களாக’த் தேர்வு செய்துகொள்ளலாம். அந்த நாட்களில் குறைந்தபட்ச பணம் அல்லது பணமே செலவழிக்காமலும் இருக்க முயலாம். இந்த முறையின் மூலம் பெருமளவு செலவுகளைக் கட்டுப்படுத்தலாம்.

    வாரவாரம் குறிப்பிட்ட தொகையைச் சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளலாம். இந்தத் தொகை, உங்களின் நிதி நிலைமைக்கு ஏற்றவாறு இருக்கலாம். ஒவ்வொரு வாரமும் ரூ. 100 சேமிக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டுடன் துவங்கி, அதைப் படிப்படியாக அதிகரிக்கலாம்.

    நீங்கள் தொடர்ந்து கிரெடிட் கார்டுகளை அதிகளவில் பயன்படுத்துபவராக இருந்தால், அதை அடியோடு தவிர்த்துவிட்டு அதற்கு மாற்றாகப் பணத்தைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் தேவையற்ற பொருட்களை வாங்குவதை தவிர்க்கலாம், செலவுகளைக் கட்டுக்குள் வைக்கலாம்.

    புகையிலைப் பழக்கமே, பல்வேறு நோய் பரவ முக்கிய காரணியாகவும், அதிகமான இறப்புக்கு காரணமாகவும் விளங்குகிறது. புகைப்பிடிப்பதால் என்னென்ன விளைவுகள் ஏற்படுகின்றன என்பதை தெரிந்துகொள்வோம்...
    எந்த நல்ல பழக்கத்தையும் பழகுவது கடினம். விடுவது எளிது. தீய பழக்கமோ, எளிதில் ஒட்டிக்கொண்டுவிடும். ஆனால் விடுவது மிகமிகக் கடினம். இது புகை பிடிப்பதற்கும் பொருந்தும். ஆனால் புகைப்பதை விட்டுவிட வேண்டும் என்ற நோக்கம் தீவிரமானதாக இருப்பின், விட்டுவிட முடியும்.

    அத்துடன் இது கண்டிப்பாக கைவிட வேண்டிய ஒரு தீய பழக்கம். புகையிலைப் பழக்கமே, பல்வேறு நோய் பரவ முக்கிய காரணியாகவும், அதிகமான இறப்புக்கு காரணமாகவும் விளங்குகிறது. உலக அளவில் அதிக மரணங்கள் நிகழக் காரணமாக இருப்பதில் முதல் இடத்தில் இருப்பது புகையிலைப் பொருட்கள்தான். புகைப்பிடிப்பதால் என்னென்ன விளைவுகள் ஏற்படுகின்றன என்பதை தெரிந்துகொள்வோம்...

    1. புகையிலையில் உள்ள நிகோட்டின் என்ற ரசாயனம் அதைப் பயன்படுத்துபவர்களை அந்தப் பழக்கத்துக்கு அடிமையாக்கிவிடுகிறது. புகைப்பழக்கத்தால் மூச்சுவிடுவதில் சிரமங்கள் ஏற்படும். நாளடைவில் ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.

    2. வாய், உதடு, தொண்டை, குரல் வளையம், உணவுக் குழாய், சிறுநீர்ப்பை, சிறுநீரகம், கல்லீரல், வயிறு, கணையம் என உடல் உள் உறுப்புகளையும் இது பாதிக்கிறது. எதிர்காலத்தில் இதய ரத்தக் குழாய் அடைப்பு நோய்கள், மாரடைப்பு, பக்கவாதம், ரத்தக் குழாய்கள் பாதிப்பு போன்ற பல்வேறு பிரச்சினைகள் வருவதற்கும் வாய்ப்பை அதிகரிக்கிறது.

    3. சுவை அரும்புகள் தமது ஆற்றலை இழந்துவிடுவதால், நாளடைவில் உணவின் மீது விருப்பம் குறையத்தொடங்கும்.

    4. புற்றுநோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. புகையிலை நச்சு யாரையும் விட்டு வைப்பதில்லை, மற்றவர்கள் புகைக்கும் பொழுது வெளிவரும் புகைகூட நச்சு தன்மையுடையது. உயிருக்கு ஊறு விளைவிக்கும்.

    6. ‘இரண்டாவது உயிர்க்கொல்லி’ எனப் பெயர் பெற்றுள்ள புகைப் பழக்கத்தால் இந்தியாவில் மட்டும் லட்சக்கணக்கானவர்கள் புகையிலைப் பொருட்களால் உயிரிழந்துள்ளனர்.

    7. புகைப் பழக்கத்தால் இறப்பவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் நேரடியாகப் புகைப்பவர்கள் அல்ல. புகை பிடிப்பவர்களுக்கு அருகில் இருப்பதாலேயே பலியாகின்றனர். 
    கற்றாழை ஜெல்லில் இருக்கும் வைட்டமின் சி, இ மற்றும் பீட்டா கரோட்டின் போன்றவை சருமத்திற்கு பொலிவு சேர்த்து முதுமையையும் தள்ளிப்போடும்.
    குளிர்காலத்தில் வழக்கத்தை விட சரும பராமரிப்புக்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். சோர்வான முகம், வறண்ட உதடுகள், உலர்ந்த சருமம், தோல் வெடிப்பு போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். தண்ணீர் குறைவாக பருகுவதே அதற்கு முக்கிய காரணம். அது சருமத்தின் உள்புறமும், வெளிப்புறமும் உலர்தன்மை அடைவதற்கு வழிவகுத்துவிடும். ஆல்கஹால் சேர்க்கப்படாத கிரீம்களை பயன்படுத்துவதன் மூலம் சருமத்தின் பி.எச் அளவை சமநிலையில் பராமரிக்க முடியும்.



    குளிப்பதற்கும், முகம் கழுகுவதற்கும் வெதுவெதுப்பான நீரை பயன்படுத்த வேண்டும். அதிக சூடான நீரை ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது. அது சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். உடலில் எண்ணெய் சிறிதளவு தேய்த்துவிட்டு குளிக்க செல்லலாம். அது சருமத்தில் ஈரப்பதத்தை சீராக பராமரிக்க வழிவகை செய்யும்.

    குளித்து முடித்த பிறகு சருமத்திற்கு பொருத்தமான கிரீம் வகைகளை பயன்படுத்தலாம். சர்க்கரை, மது, காபி போன்றவை உடலில் உள்ள தண்ணீரின் அளவை குறைத்துவிடும். குளிர்காலத்தில் அவைகளை அளவோடு பருகுவது நல்லது. போதுமான அளவு தண்ணீர் பருகி வர வேண்டும். குளிர்காலத்துக்கு ஏற்ற மாய்ஸ்சரைசரை பயன்படுத்துவது அவசியம். அவை சருமம் மென்மையாக ஜொலிப்பதற்கும், இறந்த செல்களை நீக்கவும் துணை புரியும்.

    சருமம் புத்துணர்ச்சி பெறுவதற்கு பழங்களை கொண்டு மசாஜ் செய்வது பலனளிக்கும். அது, வேதிப்பொருட்கள் மற்றும் நச்சுத்தன்மை பாதிப்புகளில் இருந்து சருமத்தை பாதுகாக்க சிறந்த வழிமுறையாகவும் அமையும். வாழை, தர்பூசணி, பப்பாளி, கிவி, ஆரஞ்சு மற்றும் ஆப்பிள் போன்ற பழ வகைகளை சாப்பிடுவதும் சரும ஆரோக்கியத்திற்கு நல்லது.

    குளிர்காலத்தில் கற்றாழை ஜெல்லை பயன்படுத்துவதும் அவசியமானது. அதில் உள்ளடங்கி இருக்கும் வைட்டமின் சி, இ மற்றும் பீட்டா கரோட்டின் போன்றவை சருமத்திற்கு பொலிவு சேர்ப்பதுடன் முதுமையையும் தள்ளிப்போடும். அதிலும் எண்ணெய் சருமம் கொண்டவர்கள் கற்றாழை ஜெல்லை பயன்படுத்துவது நல்லது. யோகா செய்து வருவதும் சருமத்திற்கு புத்துணர்ச்சி தரும். ரத்த ஓட்டத்தை அதிகரித்து, அதிக அளவு ஆக்சிஜன் உடலுக்குள் செல்வதற்கும் வழிவகை செய்யும்.

    உருளைக்கிழங்கு, பன்னீர் சேர்த்து சப்ஜி செய்தால் அருமையாக இருக்கும். இந்த சப்ஜி சப்பாத்தி, நாண், புலாவ், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.
    தேவையான பொருட்கள் :

    உருளைக்கிழங்கு - 3
    இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
    பன்னீர் - 200 கிராம்
    தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
    வெங்காயம் - 2
    சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி
    தக்காளி - 3
    ஏலக்காய் - 3
    சீரகம் - அரை தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
    கொத்தமல்லித்தழை - சிறிது
    கரம்மசாலாத் தூள் - அரை தேக்கரண்டி
    பச்சை மிளகாய் - 2
    எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    முதலில் உருளைக்கிழங்கை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.

    பன்னீரை சிறுத்துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

    கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    பச்சை மிளகாயை கீறி வைக்கவேண்டும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், ஏலக்காய் போட்டு தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், தனியாத் தூள், சீரகத்தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

    அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளி, கீறிய பச்சை மிளகாய் சேர்த்து 5 நிமிடம் வதக்கி விட்டு பன்னீர், உருளைக்கிழங்கு, உப்பு, அரை கப் தண்ணீர் சேர்த்துக் கிளறி அடுப்பை சிம்மில் வைத்து வேக விடவேண்டும்.

    உருளைக்கிழங்கு வெந்ததும் கரம்மசாலா தூள், கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கவும்.

    சுவையான ஆலு பன்னீர் சப்ஜி தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மார்பக புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது என்பதற்கான காரணங்கள் தெளிவாக இதுவரை இல்லை. மார்பக புற்றுநோய் யாருக்கெல்லாம் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று பார்க்கலாம்.
    நேற்று வரை நம்முடன் சிரித்துப் பேசி மகிழ்ந்த பெண்கள், திடீரென இன்று புற்றுநோய்க்கு இரையாகி, நம் கண்முன்னே தவணை முறையில் உயிரை விடுவதைப் பார்க்கிறோம். ஆனால் மார்பக புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது என்பதற்கான காரணங்கள் தெளிவாக இதுவரை இல்லை. அதேநேரம் யாருக்கெல்லாம் இந்த மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

    அவற்றை பார்க்கலாம்...

    பொதுவாக புற்றுநோய் உயிரணுக்கள், ஈஸ்ட்ரஜன் எனப்படும் ஹார்மோனால் வளர்ந்து, பின்னர் பல இடங்களுக்கு  பிரியக்கூடியதாகும்.

    இள வயதில் அதாவது 9 வயதுக்கு முன்பு பூப்பெய்துவது, மிக தாமதமான மெனோபாஸ், அதாவது 55 வயதுக்குப் பிறகு... இந்த இரண்டுமே மார்பகப் புற்றுநோய்க்கான பிரதான காரணங்கள்.

    30 வயதுக்குப் பிறகு முதல் குழந்தையைப் பிரசவிப்பது ஒரு காரணமாக உள்ளது.

    பெண்களுக்கு பூப்பெய்தியதில் இருந்து, 15 வருடங்களில், உடலுக்கு ஒரு மாற்றம் தேவைப்படும். ஈஸ்ட்ரோஜென் சுரப்பு அதிகமாக இருந்தால் மார்பகப் புற்றுநோய் வரும். அதை ஈடுகட்ட உடலுக்கு சில தற்காலிக மாற்றங்கள் அவசியம். அது நடக்காத போது புற்றுநோய் அபாயம் அதிகமாகும்.

    கல்யாணத்துக்குப் பிறகு பெண்கள், எடை விஷயத்தில் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. அதிகப்படியான கொழுப்பு, ஈஸ்ட்ரோஜென்னாகவே மாறும். அது ஆபத்தின் அறிகுறி.

    அதிகப்படியாக கருத்தடை மாத்திரைகள் உட்கொள்வதும், மெனோபாஸுக்கு பிறகு பெண்மையைத் தக்க வைத்துக்கொள்ள எடுத்துக்கொள்கிற ஹார்மோன் ரீப்ளேஸ்மென்ட் தெரபியும் கூட மார்பகப் புற்றுநோய்க்கு வாசல்படியாக உள்ளது.

    தினமும் அரை கோப்பை ஒயின் அல்லது சிறிதளவு பீர் அருந்துவது மார்பக புற்றுநோய்க்கான ஆபத்தை அதிகரிக்கிறது என்று உலக புற்றுநோய் ஆராய்ச்சி நிதியத்தின் ஓர் அறிக்கை கூறுகிறது.

    50 வயதை கடந்த பெண்ணாக மாதவிடாய் காலத்தை கடந்தவராக இருக்கும் பட்சத்தில், உங்களது குடும்பத்தில் மார்பக புற்றுநோயால் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால், அந்நோய் உங்களுக்கு வருவதற்கான அபாயம் அதிகமாகவே இருக்கின்றது.

    அநேக மார்பக கட்டிகள் புற்றுநோயாக இருப்பதில்லை. ஆனால் மார்பக கட்டி என்றாலே உடனடியாக புற்று நோய் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அது போல் நீர்கசிவு, ரத்த கசிவு இருந்தால் மருத்துவ பரிசோதனை மிக மிக அவசியம் ஆகும். பெண்கள் ஒவ்வொரு மாதமும் மார்பகத்தில் கட்டி இருக்கின்றதா என சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

    அழகைப் பராமரிக்க தனியே மெனக்கெடாமல் நாம் வீட்டில் சாப்பிட வைத்திருக்கும் பொருள்களையே அதற்கும் பயன்படுத்தினால் ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்.
    அழகைப் பராமரிக்க தனியே மெனக்கெடாமல் நாம் வீட்டில் சாப்பிட வைத்திருக்கும் பொருள்களையே அதற்கும் பயன்படுத்தினால் ஒரே கல்லில் ரெண்டு மாங்காய். இப்போது எந்த பொருட்கள் சருமத்தின் அழகை பாதுகாக்கும் என்பதை பற்றி அறிந்து கொள்ளலாம்.

    கடலைமாவு தலைமுடி மற்றும் முகம் இரண்டையும் அழகூட்டும். அந்த கடலைமாவுடன் தயிர், மஞ்சள் தூள், எலுமிச்சை ஆகியவற்றைக் கலந்து முகத்தில் அப்ளை செய்து சிறிதுநேரம் கழித்து முகத்தைக் கழுவவும். முகம் பொலிவுடன் இருப்பதை நீங்களே நன்கு உணர்வீர்கள்.

    கொண்டைக்கடலையில் உள்ள நார்ச்சத்து உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியத்துக்கும் அழகுக்கும் சேர்த்து நன்மை பயக்கும். கடலையை அரைத்து முகத்தில் மாஸ்க் போட்டு வந்தால், வயது முதிர்ந்த தோற்றத்தைத் தவிர்த்து சருமத்தை அழகூட்டும்.

    தயிர் எல்லோருக்கும் பிடித்த ஒரு உணவுப்பொருள். இது ஏராளமான சருமப் பிரச்னைகளைத் தீர்க்கும். தயிர் சருமத்துக்கு சிறந்த மாய்ச்சரைஸராகவும் கரும்புள்ளிகளைப் போக்கவும் பயன்படுகிறது. தலைமுடிக்கும் தயிர் மிகச்சிறந்த ஊட்டச்சத்தாகத் திகழ்கிறது. தலைமுடியை மிருதுவாக வைத்திருப்பதோடு பொடுகுத்தொல்லையில் இருந்தும் விடுதலை தரும்.

    புளியை வைத்து சருமத்தின் நிறத்தை இரண்டு மடங்காக ஆக்க முடியும். புளியை நன்கு திக்காகக் கரைத்து சிறிது உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கிய பின், சிறிதுநேரம் குளிரவைத்து முகத்தில் அப்ளை செய்யுங்கள். புளியில் உள்ள வைட்டமின் சி மற்றும் பி3 சருமத்தை ஆரோக்கியமாகவும் பொலிவுடனும் வைத்திருக்கும். சருமத்தின் நிறத்தை அதிகரிக்கச் செய்யும். புளியைக் கரைத்து அதில் நீர் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி, அந்த நீரை தலைமுடியை அலசப் பயன்படுத்தினால் தலைமுடியை பிசுபிசுப்பிலிருந்து காக்கும்.

    எலுமிச்சையை சிறு துண்டாக வெட்டிக் கொண்டு அதை முகம், கழுத்து, கை மற்றும் கால்களில் நன்கு தேய்க்க வேண்டும். இது சருமத்துக்குப் பொலிவைத் தருவதோடு மட்டுமல்லாமல் சருமத்தில் உள்ள இறந்த செல்களைப் புதுப்பிக்கவும் செய்யும்.

    தேன் மிகச்சிறந்த ஆன்டி- பாக்டீரியலாகப் பயன்படுகிறது. இது வறண்ட, எண்ணெய் பசையுள்ள என எல்லா வகையான சருமத்துக்கும் ஏற்றது. அதனால் தயிர், லெமன், கடலைமாவு, தக்காளி, ஓட்ஸ் என எவற்றுடனும் தேனைச் சேர்த்து முகத்துக்குப் பயன்படுத்தலாம்.

    உடல் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை உடையவர்கள் தங்களுடைய உணவில் ஓட்ஸை சேர்த்துக் கொள்கிறார்கள். அந்த ஓட்ஸை தேன் சேர்த்து நன்கு குழைத்து முகத்தில் மாஸ்க் போட்டு, அரைமணி நேரம் கழித்து கழுவ முகம் பளிச்சென ஜொலிப்பதை நீங்களே கண்கூடாக உணர்வீர்கள். 
    பிறந்த பச்சிளம் குழந்தைக்கு ஒரு வருடத்திற்குள் மொட்டை போட வேண்டும் என்று சொல்கிறார்கள். அது பின்னணி என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    பிறந்த பச்சிளம் குழந்தைக்கு ஒரு வருடத்திற்குள் மொட்டை அடிக்க வேண்டும் இல்லையென்றால் சாமி குத்தம் ஆகிவிடும் என்று பல பெரியவர்கள் சொல்லி கேட்டதுண்டு.

    ஆனால் அதன் உண்மையான காரணம் என்னவென்று தெரியுமா?

    நாம் அம்மாவின் கருவறையில் இரத்தம், சிறுநீர், மலம் போன்ற தண்ணீர் நிறைந்த சூழலில் இருந்திருக்கிறோம். அதில் உள்ள கழிவுகள் தலையில் தேங்கியிருக்கும். சாதாரணமாக கடல்நீரில் 5 நிமிடம் கை வைத்திருந்தாலே கை கழுவிய பிறகும் கூட உப்பின் ருசி ஒட்டியிருக்கும், கை ஊறி போய்விடும். அப்படி இருக்கையில் 10 மாதம் தண்ணீரிலே இருந்து வந்த குழந்தையின் உடல் எந்தளவு ஊறியிருக்கும். உடம்பில் உள்ள கழிவுகள் வெளியேறிவிடும். ஆனால் தலையில் தேங்கிய கழிவுகள் முடியில் வேர் கால்கள் வழியாகத் தான் வெளியேறும்.  

    அதனை வெளியேற்ற என்ன வழி மொட்டை அடித்தால் மட்டுமே அந்த வேரின் வழியாக தேங்கியிருக்கும் கழிவுகள் வெளிவரும். இது தான் உண்மையான காரணம். ஆனால் இப்படி கூறினால் யாருடைய செவிக்கும் எட்டாது. இதையே சாமி கண்ண குத்தும், தெய்வம் பார்க்குது, குலதெய்வ வேண்டுதல் என பட்டியலிட்டு கூறினால் அனைவரும் கேட்பர்.

    எதையும் தெய்வீக ரீதியாக கூறினால் நம் மக்களின் செவிக்கு எட்டும். இதே போல் 3 வயதிலும் ஒரு மொட்டை அடிப்பர் அதற்கு காரணம், ஒரு வயதில் அடித்த மொட்டையில் சில கழிவுகள் வெளிவராமல் இருக்கும். அப்படி வராமல் இருக்கும் கழிவுகள் 3 வயதில் அடிக்கும் மொட்டையில் வந்துவிடும்.

    இதற்காகவே ஒரு வயதிலும், மூன்று வயதிலும் மொட்டை சாமியின் பெயரில் அடிப்பர். இதன் உண்மை பின்னணியே இதுதான். முன்னோர்கள் எதை செய்தாலும் அதன் பின் ஒரு அறிவியல் பின்னணி இருக்கக்கூடும் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துகாட்டாகும்.

    அதை கண்டுகொள்ளாமல் மொட்டை அடித்து கொள்ளலாம் என்று அலட்சியமாக விட்டால், பிற்காலத்தில் குழந்தைக்கு நோய் பாதிப்புகளை ஏற்படுத்தும். 
    சளி தொல்லை, காய்ச்சல் இருப்பவர்களுக்கு மிளகு சாதம் செய்து கொடுக்கலாம். ருசியும் அருமையாக இருக்கும். இன்று இந்த சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அரிசி - கால் கிலோ
    மிளகு - 1 டேபிள்ஸ்பூன்
    சீரகம் - 2 டீஸ்பூன்
    வெங்காயம் - 1  
    முந்திரிப் பருப்பு - 5
    நெய் - சிறிதளவு
    கடுகு, வேர்க்கடலை - சிறி்தளவு
    கறிவேப்பிலை - தேவைக்கு
    உப்பு - தேவைக்கு



    செய்முறை:

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அரிசியை நன்றாக கழுவி வேகவைத்து உதிரி சாதமாக வடித்துக்கொள்ளவும்.

    வாணலியில் மிளகு, சீரகம் இரண்டையும் தனித்தனியாக வறுத்தெடுத்து பொடித்துக்கொள்ளவும்.

    பிறகு வாணலியில் நெய் ஊற்றி அது உருகியதும் கடுகு, வேர்க்கடலை, முந்திரிப்பருப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.

    பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கி அவற்றுடன் வேகவைத்த சாதம், பொடித்த மிளகு, சீரகம், உப்பு ஆகியவற்றை சேர்த்து கிளறி சிறிது நேரம் மூடிவைத்துவிட்டு இறக்கவும்.

    ருசியான மிளகு சாதம் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உடலின் எந்தப் பகுதியிலாவது தீராத வலி இருந்தால் இந்த முத்திரையைச் செய்வதன் மூலம் வலி குறைவதை உணரலாம். இந்த முத்திரை செய்முறையை பார்க்கலாம்.
    நம் உடலில் ஐம்பூதங்களும் சமநிலையில் இருக்க வேண்டும் என்கிறார்கள். இதற்கான எளிய வழி சமான முத்திரை. ஐம்பூதங்களும் சமநிலை அடைவதால் உடலுக்கு அபரிதமான ஆற்றல் கிடைக்கிறது.  

    செய்முறை  :


    விரிப்பில் அமர்ந்து கொண்டு அல்லது சேரில் அமர்ந்து கொண்டு ஐந்து விரல்களையும் குவித்து, கட்டை விரல் நுனியை மற்ற நான்கு விரல்களின் நுனிகளும் தொட்டுக்கொண்டிருக்கும்படி வைக்க வேண்டும்.

    கட்டளைகள்: சப்பளம் இட்டு அமர்ந்த நிலையில் செய்யலாம். முதுகுத்தண்டு நிமிர்ந்து நாற்காலியில் அமர்ந்து பாதங்களைத் தரையில் பதித்தபடி செய்யவேண்டும். நின்ற நிலையில் செய்யக் கூடாது. முத்திரை செய்யும்போது உள்ளங்கையும் விரல்களும் மேல்நோக்கி இருக்கவேண்டும்.  ஐந்து முதல் 20 நிமிடங்கள் வரை செய்யவேண்டும்.

    பலன்கள்: உடல் மற்றும் மனதின் சக்திநிலை அதிகரிக்கிறது. அனைத்து உறுப்புகளுக்கும் பலம் கிடைக்கும். குறிப்பாக மூளை சுறுசுறுப்படையும். பல நாட்களாகப் படுத்தபடுக்கையாக இருப்பவர்களும் இந்த முத்திரையை 40 நிமிடங்கள் செய்துவர தெம்பு கிடைக்கும். உடலின் எந்தப் பகுதியிலாவது தீராத வலி இருந்தால் இந்த முத்திரையைச் செய்வதன் மூலம் வலி குறைவதை உணரலாம்.

    தினந்தோறும் குறைந்தது 10 நிமிடங்களாவது செய்துவர நல்ல மாற்றத்தை உணர முடியும். கைவிரல்கள், வயிறு, தோள்பட்டை, முழங்கை, முன்கை, உள்ளங்கால், தொடை ஆகிய பகுதிகளில் ஏற்படும் வலிகள் சரியாகும். தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் அதிகாலையில் 20 நிமிடங்கள் செய்யலாம். மனதில் உற்சாகம் பிறந்து சுறுசுறுப்பாகத் தயாராக முடுயும். தன்னம்பிக்கை, மனஉறுதி ஆகிய நல்லுணர்வுகள் உருவாகும். தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் செய்துவந்தால் ஆண்களுக்கு விந்தணு வீரியத்தன்மையில் உள்ள குறைபாடு நீங்கும்.

    வேலைச் சுமை காரணமாக ஏற்படும் அலுப்பு, முதுகு வலி, கழுத்து வலி போன்ற உடல் வலிகள் சரியாகும். எந்த முத்திரை நமக்கு சரி எனத் தெரியாதவர்கள், ஒரே நாளில் இரண்டு, மூன்று முத்திரைகள் செய்ய முடியாதவர்கள் சமான முத்திரையை  மட்டும் செய்தாலே போதும். நல்ல தீர்வு கிடைக்கும்.
    ×