search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Paneer Sabzi"

    பன்னீர் குடைமிளகாய் சப்ஜி ரெசிபியை வீட்டிலேயே எளிதாக விரைவிலேயே செய்ய முடியும். சப்ஜி கிரேவியுடன் அல்லது கிரேவி இல்லாமலும் செய்யலாம்.
    தேவையான பொருட்கள் :

    குடைமிளகாய் - 1
    வெங்காயம் - 1
    தக்காளி - 3
    தண்ணீர் - 11/2 கப்
    பூண்டு (தோலுரித்து) - 4 பல்
    எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
    சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவைக்கேற்ப
    சிவப்பு மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
    பன்னீர் துண்டுகள் - 1 கப்
    கஸ்தூரி மெத்தி - 1 டேபிள் ஸ்பூன்



    செய்முறை :


    குடைமிளகாயை 2 அங்குலம் அளவிற்கு நீளமான துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்

    பெரிய வெங்காயத்தை நீளமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    பிரஷ்ஷர் குக்கரில் தக்காளியை போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து ஒரு விசில் வேக விடவும்.

    வேக வைத்த தக்காளியை ஆறவைத்து தோல் நீக்கி மிக்சியில் போட்டு அதனுடன் பூண்டையும் சேர்த்து நன்றாக வழுவழுவென அரைத்து கொள்ளவும்.

    அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடனாதும் சீரகம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

    வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் நறுக்கிய குடை மிளகாயை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அரைத்த தக்காளி விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும்.

    அடுத்து அதில் உப்பு, சிவப்பு மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.

    இப்பொழுது பன்னீர் துண்டுகளை சேர்க்க வேண்டும்.

    அடுத்து கஸ்தூரி மெத்தி சேர்த்து நன்றாக கிளறி மூடி போட்டு 5 நிமிடம் வரை வேக விடவும்.

    கடைசியாக அதன் மேல் கஸ்தூரி மெத்தியை தூவி அலங்கரித்து சூடாக பரிமாறவும்.

    சூப்பரான பன்னீர் குடைமிளகாய் சப்ஜி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உருளைக்கிழங்கு, பன்னீர் சேர்த்து சப்ஜி செய்தால் அருமையாக இருக்கும். இந்த சப்ஜி சப்பாத்தி, நாண், புலாவ், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.
    தேவையான பொருட்கள் :

    உருளைக்கிழங்கு - 3
    இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
    பன்னீர் - 200 கிராம்
    தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
    வெங்காயம் - 2
    சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி
    தக்காளி - 3
    ஏலக்காய் - 3
    சீரகம் - அரை தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
    கொத்தமல்லித்தழை - சிறிது
    கரம்மசாலாத் தூள் - அரை தேக்கரண்டி
    பச்சை மிளகாய் - 2
    எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    முதலில் உருளைக்கிழங்கை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.

    பன்னீரை சிறுத்துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

    கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    பச்சை மிளகாயை கீறி வைக்கவேண்டும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், ஏலக்காய் போட்டு தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், தனியாத் தூள், சீரகத்தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

    அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளி, கீறிய பச்சை மிளகாய் சேர்த்து 5 நிமிடம் வதக்கி விட்டு பன்னீர், உருளைக்கிழங்கு, உப்பு, அரை கப் தண்ணீர் சேர்த்துக் கிளறி அடுப்பை சிம்மில் வைத்து வேக விடவேண்டும்.

    உருளைக்கிழங்கு வெந்ததும் கரம்மசாலா தூள், கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கவும்.

    சுவையான ஆலு பன்னீர் சப்ஜி தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×