என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    பெண்கள் கர்ப்பமடைய உயிரணுக்கள்தான் அவசியம். ஆனால் அது எத்தனை நாட்கள் பெண்ணின் கருப்பைக்குள் உயிர்வாழும் என்பதை பொறுத்துதான் பெண்கள் கர்ப்பமடைவது உறுதிசெய்யப்படுகிறது.
    பெண்கள் கர்ப்பமடைய உயிரணுக்கள்தான் அவசியம். ஆனால் அது எத்தனை நாட்கள் பெண்ணின் கருப்பைக்குள் உயிர்வாழும் என்பதை பொறுத்துதான் பெண்கள் கர்ப்பமடைவது உறுதிசெய்யப்படுகிறது. விந்தணுக்களின் ஆயுட்காலம் என்பது மிகவும் முக்கியமானது. அது எந்த இடத்தில வெளிப்படுகிறது என்பதை பொறுத்து அதன் ஆயுட்காலம் மாறுபடும்.

    உதாரணத்திற்கு ஆண்கள் சுயஇன்பம் காணும்போது வெளிப்படும் உயிரணுக்கள் வெளியேறிய உடனே இறந்து விடும். உயிரணுக்கள் பெண்களின் உடலுக்குள் சென்றாலும் கூட அவற்றின் ஆயுட்காலம் என்பது நிர்ணயிக்க இயலாத ஒன்று. இந்த பதிவில் உயிரணுக்களை பெண்கள் உடலில் எவ்வளவு காலம் உயிரோடு இருக்கும் என்பதை பார்க்கலாம்.

    ஒரு பெண் கர்ப்பமடைய ஒரே ஒரு உயிரணு போதும். கோடிக்கணக்கான உயிரணுக்கள் வெளியே வரும்போது அதில் எத்தனை உயிரணுக்கள் பெண்களின் கருமுட்டையை சென்று அடைகிறதோ அதனை பொறுத்தே கர்ப்பமும், குழந்தைகளின் எண்ணிக்கையும் இருக்கும். ஒவ்வொரு முறையும் உயிரணுக்கள் வெளியேறும்போது அதில் கிட்டத்தட்ட 100 மில்லியன் உயிரணுக்கள் வெளியேறுகிறது. இந்த கோடிக்கணக்கான உயிரணுக்களில் இருந்து ஆரோக்கியமான ஒன்றோ அல்லது இரண்டு உயிரணுக்கள் தான் பெண்ணின் பிறப்புறுப்பு வழியாக பாலோப்பியன் குழாயை கடந்து பெண்ணின் கருமுட்டைக்குள் சென்று கருவாக உருவாகிறது.

    புகைப்பழக்கத்தை தவிர்த்தல் மற்றும் போதைப்பொருட்களை உபயோகிக்காமல் இருப்பது உங்களுடைய உயிரணுக்களின் தரத்தை அதிகரிக்க கூடும். மேலும் அளவாக மது அருந்துவது, சத்தான உணவுகளை சாப்பிட்டு எடையை சீராக பராமரிப்பது, இறுக்கமான உடைகளை அணியாமல் இருப்பது போன்றவை உயிரணுக்களின் தரத்தை அதிகரிக்கும்.



    உயிரணுக்கள் பெண்ணுறுப்புக்குள் சென்ற பிறகு 24 மணி நேரம் முதல் 48 மணி நேரம் வாய் உயிருடன் இருக்கும். பல அணுக்கள் ஆரம்ப நிலையிலேயே இறந்துவிடும். மீதமுள்ள உயிரணுக்களில் ஒன்றே கர்ப்பம் உண்டாக்கும் ஆற்றல் உடையதாக உள்ளது.

    இது கருப்பைக்குள் போதுமான அளவு வெப்பமும், திரவமும் உள்ளபோது நடக்க கூடியது. சொல்லப்போனால் கர்ப்பப்பை திரவம் கருமுட்டை உற்பத்தியாவதற்கான அறிகுறியாகும். இதுபோன்ற சூழ்நிலையில் உயிரணுக்கள் 5 நாட்கள் வரை உயிருடன் இருக்கும்.

    வெளிப்புறம் என்று வரும்போது உயிரணுக்களின் ஆயுட்காலம் என்பது மிகவும் குறைவுதான். மனித உடலில் உள்ள வெப்பநிலை இல்லாத இடங்களில் உயிரணுக்களால் நீண்ட நேரம் உயிருடன் இருக்க இயலாது. அவை வெளியே வந்தவுடனேயே இறந்துவிடும். இல்லையெனில் சூழ்நிலை மற்றும் இடத்தை பொறுத்து சில நிமிடங்கள் உயிருடன் இருக்கும்.

    பெண்களின் உடலில் உயிரணுக்களின் ஆயுளை அதிகரிப்பது என்பது இயலாது என்று. அதற்கு பதிலாக ஆண்கள் தங்கள் உயிரணுக்களின் ஆரோக்கியத்தையும், உற்பத்தியையும் அதிகரிக்க முயலலாம். ஆரோக்கியமான உயிரணுவிற்கு ஆயுள் அதிகம். உயிரணுவின் ஆரோக்கியத்தை அதிகரிக்க பின்வருவனற்றை முயற்சி செய்து பார்க்கவும்.

    இயற்கை மூலிகையான அஸ்வகந்தா உயிரணுக்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்க கூடியது. ஆய்வுகளின் படி இது உயிரணுக்களின் உற்பத்தியையும் அதிகரிப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளார்கள். இதை தொடர்ந்து உபயோகித்து வரும்போது உயிரணுவின் உற்பத்தி மட்டுமின்றி அவற்றின் தரமும் உயர்வதை காண்பீர்கள்.

    லேப்டாப்பை உங்கள் மடியில் வைத்து உபயோகிப்பதை தவிருங்கள். அதிலும் வைபை இயக்கத்தில் உள்ள லேப்டாப் உங்கள் மடியில் இருக்கும்போது அதிக ரேடியோ அலைகளால் உங்கள் உயிரணுக்கள் வெகுவாக பாதிக்கப்படும். அதேபோல உங்கள் செல்போனையும் பேண்ட் பக்கத்திற்குள் வைப்பதை தவிருங்கள்.

    உயிரணுக்களை பொறுத்த வரையில் சூடான நீரை காட்டிலும், குளிர்ந்த நீர் குளியல் அதிக நன்மையை வழங்கக்கூடியது. குளிர்ந்த நீரில் குளிப்பது உங்களுக்கு நல்ல மனநிலையை வழங்குவது மட்டுமின்றி உங்களுடைய உயிரணுக்களின் உற்பத்தியையும் அதிகரிக்கிறது.

    சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு தணியும், வெப்ப நோய்கள் ஏற்படாது. இன்று சுரைக்காய் சேர்த்து அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சுரைக்காய்த் துருவல் - 2 கப்
    சீரகச் சம்பா அரிசி - ஒரு கப்
    துவரம்பருப்பு - அரை கப்
    கடலைப்பருப்பு, முழு உளுத்தம்பருப்பு - தலா கால் கப்
    காய்ந்த மிளகாய் - 10
    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
    புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
    கொத்தமல்லித்தழை -  சிறிதளவு
    சீரகம் - ஒரு டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    கடுகு - ஒரு டீஸ்பூன்
    சின்ன வெங்காயம்  - கால் கப்
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, சீரகம், பெருங்காயத்தூள், மீதமுள்ள இரண்டு மிளகாய் தாளித்து… நறுக்கிய சின்ன வெங்காயம், சுரைக்காய்த் துருவல் சேர்த்து தண்ணீர் வற்றும் வரை வதக்கி இறக்கவும். சுரைக்காய் மசாலா தயார்.

    அரிசி, பருப்பு வகைகளை நன்றாக கழுவி தண்ணீரில் தனித்தனியாக இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.

    எட்டு மிளகாயைத் தனியாக தண்ணீரில் ஊறவைக்கவும்.

    நன்றாக ஊறியதும் அரிசி, பருப்பைக் களைந்து, ஊறவைத்த மிளகாய்,  உப்பு, புளி சேர்த்து தண்ணீர் விடாமல் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    இதனுடன் சுரைக்காய் மசாலா, கொத்தமல்லித்தழை சேர்த்து கலக்கவும்.

    தோசைக்கல் அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அடைகளாக ஊற்றி,  சுற்றிலும் எண்ணெய்விட்டு, இருபுறமும் வேகவிட்டு எடுத்துப் பரிமாறவும்.

    சூப்பரான சுரைக்காய் அடை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இந்த ஆசனம் முதுகும் கால்களை வலுவடையச்செய்யும். முழங்கால், கணுக்கால் பிடிப்பினை நீக்கும். இந்த ஆசனம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    சுப்த வஜ்ராசனம் `சுப்த’ என்பது வடமொழிச் சொல், இதற்கு சமநிலை என்று பொருள். வஜ்ராசன இருக்கையிலிருந்து அப்படியே உடலை சமநிலைப்படுத்துவதால் இப்பெயர் வழங்கலாயிற்று.

    செய்முறை :

    விரிப்பில் கால்களை நீட்டி உட்கார வேண்டும். வலக்காலை மடக்கி, பாதம் பின்புறம் பார்த்திருக்குமாறு வைக்க வேண்டும். இடக்காலை மடக்கி, இரு பாதங்களையும் ஒன்று சேர்த்து, புட்டங்களை கிடத்தி அமர்ந்து வஜ்ராசன இருக்கைக்கு வர வேண்டும்.

    மூச்சினை உள்ளிழுத்தவாறு முழங்கைகளின் உதவியால் மல்லாந்த நிலையில் உடலைக் கிடத்தவும். சாதாரண சுவாச நிலையில் இரு கைகளையும் மடக்கி ஒன்று மீது ஒன்று வைத்து, தலையைக் கிடத்தவும். இந்த நிலையில் 5 விநாடிகள் நீடிக்கவும். பின் ஆரம்ப நிலைக்கு வரவும். இவ்வாறு 5 முதல் 7 முறை செய்ய வேண்டும்.

    பலன்கள் :

    * முதுகும் கால்களும் வலுவடையும்.

    * முழங்கால், கணுக்கால் பிடிப்பினை நீக்கும்.

    * தைராய்டு சுரப்பிக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

    மனதையும் உடலையும் புத்துணர்வூட்டும். எந்த வகையான மன அழுத்தத்திலிருந்தும் உடனடி நிவாரணம் அளிக்கும்!
    அசையா சொத்தை வாங்கும்போது கவனிக்க வேண்டிய அம்சங்கள் நிறைய இருக்கின்றன. இதில் கவனமாக இல்லையென்றால், பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேரிடும்.
    நிலத்தில் முதலீடு செய்வது தான் இன்றைக்கு நல்ல முதலீடாக கருதப்படுகிறது. ஆனால், அசையா சொத்தை வாங்கும்போது கவனிக்க வேண்டிய அம்சங்கள் நிறைய இருக்கின்றன. இதில் கவனமாக இல்லையென்றால், பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேரிடும்.

    அப்படியென்றால், சொத்தை வாங்கும்போது எந்தெந்த வி‌ஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்? சொத்தின் உரிமையாளர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருந்தால், அந்த சொத்தை நேரடியாக வாங்க முடியாது. நீதிமன்றத்தின் அனுமதி கட்டாயம் தேவை. அதிகாரம் பெற்ற முகவரிடம் (பவர்) சொத்து வாங்குவதாக இருந்தால், நிலத்தை அல்லது சொத்தை விற்பதற்கான அதிகாரம் அவருக்கு இருக்கிறதா என்பதை முதலில் உறுதி செய்து கொள்ளுங்கள். சில நேரம் விற்பனை ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு மட்டும் ஒருவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டு இருக்கலாம்.

    எனவே, ஆவணத்தை கவனமாகப் படிக்கவும். அதிகாரம் கொடுத்தவர் உயிருடன் இல்லையென்றால், அந்த அதிகாரம் செல்லுபடியாகாது. நிலத்தின் உரிமையாளர் உயிருடன் இல்லையென்றால், அனைத்து வாரிசுதாரர்களின் சம்மதத்துடன் சொத்து விற்கப்படுகிறதா என்று பார்க்கவும். வாரிசு சான்றிதழ் மூலம் யாரெல்லாம் வாரிசுகள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். வாரிசுதாரர்களில், சொத்துக்கு உரிமையுள்ளவர்கள் 18 வயதுக்கு உட்பட்டவராக இருந்தால், உயர் நீதிமன்றம் நியமிக்கும் காப்பாளர் மூலம் தான் சொத்துப் பரிமாற்றம் நிகழ வேண்டும்.



    எப்போதும் சொத்தின் மூல ஆவணத்தை மட்டுமே நம்ப வேண்டும். எனவே, மூல ஆவணத்தைப் பார்க்காமல் முன்பணம் செலுத்த வேண்டாம். மூல ஆவணம் இல்லை என்றால் சொத்து அடமானத்தில் வைக்கப்பட்டிருக்க வாய்ப்புண்டு. அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வாங்கும்போது, மூல ஆவணம் அடமானத்தில் இருந்தாலும்கூட, நீங்கள் வாங்கும் வீட்டின் மீது வங்கிக்கு எந்த உரிமையும் இல்லையென்று சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும்.

    அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுவதற்கான அனுமதி, வரைபட அனுமதி உள்பட அனைத்து விதமான அனுமதிகளையும் சரிபார்க்க வேண்டும். அனுமதி பெற்ற வரைபடத்தை மீறி கட்டிடம் கட்டப்பட்டிருந்தால், பின்னாளில் பிரச்சினைகள் எழும். சலுகை விலையில் கிடைக்கிறது என கருதி அவசர அவசரமாக வாங்கி, அவதிப்படுவதை தவிருங்கள். பிரச்சினை வரும் போது பார்த்துக்கொள்ளலாம் என இந்த வி‌ஷயத்தில் அலட்சியமாக இருக்க வேண்டாம்.

    அனுமதிக்கப்பட்ட அளவைவிட அரையடி அதிகம் இருந்தாலும் பிரச்சினைதான். பத்திரப்பதிவுக்கு கால அவகாசம் தேவைப்படும் பட்சத்தில், விற்பனை ஒப்பந்தம் செய்து கொள்வது நல்லது. விற்பனை ஒப்பந்தத்தில் முன்பணம், விற்பனை தொகை, கால அவகாசம், நீட்டிப்புக்கான நிபந்தனைகள், விற்பனை தவறும் பட்சத்தில் தரப்பட வேண்டிய இழப்பீடு ஆகிய அனைத்தையும் குறிப்பிட வேண்டும்.

    நிறுவனங்களிடம் இருந்து சொத்து வாங்கும்போது உரிமை, உடைமைகளுடன், அந்த நிறுவனத்தின் விதிமுறைகளை பற்றியும் தெரிந்துக்கொள்ள வேண்டும். அதேபோல வில்லங்கச் சான்றிதழ் 30 ஆண்டுகளுக்கு எடுத்துக் கொள்வது உத்தமம்.
    வைட்டமின் டி, அதன் முக்கியத்துவம் இவற்றினைப் படிக்கின்றோம். ஆனால் இன்னமும் அது மக்களின் மனதில் முழு முக்கியத்துவத்தினைப் பெறவில்லை என்றே தோன்றுகின்றது.
    வைட்டமின் டியினை வைட்டமின் என்பதனை விட ஹார்மோன் என்றே சொல்ல வேண்டும். மிகவும் முக்கியமான சத்து கொண்டது. ஆயினும் இதன் குறைபாடு அநேகரிடம் காணப்படுவதன் காரணமாகவே இதன் முக்கியத்துவத்தினைப் பற்றி எழுத வேண்டி உள்ளது. இன்றைய ஆய்வுகள் வைட்டமின் டி குறைபாடு 200 வகையான நோய் பாதிப்புகளை ஏற்படுத்துவதாகக் கூறுகின்றன.

    * வைட்டமின் டி குறைபாடால் அடிக்கடி ஏற்படும் குறைபாடுகளான சளி, ஃப்ளூ போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

    * இதன் குறைபாடு நோய் எதிர்ப்பு சக்தியினைக் குறைக்கின்றது.

    * வைட்டமின் டி உடலில் கால்ஷியம் உறிஞ்சப்படுவதற்கு மிகவும் அவசியமான ஒன்று. இதுவே எலும்பு முறிவுகளைத் தவிர்க்க பெரிதும் உதவுகின்றது. எலும்புகள் உறுதியாய் இருக்கவும், சமச்சீரான உடல் அசைவுக்கும் வைட்டமின் டி பெரிதும் அவசியமாகின்றது. இதன் குறைபாடு எளிதில் எலும்பு முறிவுகளை ஏற்படுத்தி விடும்.

    * நுரையீரலை ஆரோக்கியமாக வைப்பதற்கும் டி வைட்டமின் உதவுகின்றது.

    * குறைந்த வைட்டமின் டி என்பது அதிக உயர் ரத்த அழுத்தம் என ஆய்வுகள் கூறுகின்றன. ஆக வைட்டமின் டி ரத்த அழுத்தம் சீராய் இயங்கவும். இருதய பாதுகாப்பிற்கும் அவசியம் ஆகின்றது.

    * சிறுநீரக செயல்பாட்டிற்கு உதவுகின்றது.

    * போதுமான அளவு வைட்டமின் டி உடலில் இல்லை என்றால் எவ்வளவு சாப்பிட்டாலும் பசி இருந்து கொண்டே இருக்கும். ஓயாத பசி இருந்தால் வைட்டமின் டி அளவினையும் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

    * கூர்ந்து கவனித்து செயல்படுவது குறிப்பாக வயது கூடும் பொழுது ஏற்படும். வைட்டமின் டி குறைபாடு இத்தகு பாதிப்பினை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம் என்பதால் மருத்துவர் இப்பரிசோதனை செய்து வைட்டமின் டி தேவைகளுக்கான மாத்திரைகள் அளிப்பார்.

    வெண்டைக்காயில் கூட்டு, பொரியல், குழம்பு, வறுவல் செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வெண்டைக்காயில் பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வெண்டைக்காய் - 10
    அரிசி மாவு - 1 டேபிள்ஸ்பூன்
    சோள மாவு - 1 டேபிள்ஸ்பூன்
    கடலை மாவு - அரை கப்
    மஞ்சள் தூள், மிளகு தூள் - சிறிதளவு
    சீரக தூள், தனியாத்தூள் - சிறிதளவு
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு
    ரொட்டித்தூள் - சிறிதளவு



    செய்முறை :

    வெண்டைக்காயை நன்றாக கழுவி தண்ணீர் இல்லாமல் துடைத்து விட்டு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    ஒரு அகன்ற பாத்திரத்தில் அரிசி மாவு, சோள மாவு, கடலை மாவு மற்றும் மசாலா தூள் வகைகளை ஒன்றாக கலந்து கொள்ளவும்.

    அதனுடன் வெட்டிய வெண்டைக்காய், போதுமான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

    இந்த கலவையை அரைமணி நேரம் ஊற விடவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ஊறவைத்த வெண்டைக்காயை ரொட்டித்தூளில் புரட்டி எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

    சூப்பரான வெண்டைக்காய் பக்கோடா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பணி செய்யும் இடத்தில் சில சபலபுத்தி கொண்டவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். அவர்களிடம் இருந்து தப்பிக்கும் கலையை பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிறார்கள், உளவியலாளர்கள்.
    பணி இடத்தில் அனைவரும் பெண்களிடம் கண்ணியமாக நடந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. சில சபலபுத்தி கொண்டவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். அவர்களிடம் இருந்து தப்பிக்கும் கலையை பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிறார்கள், உளவியலாளர்கள்.

    சக ஆண் ஊழியர்கள் தொடக்கத்தில் நல்ல மாதிரி பட்டால்கூட அளவுக்கு அதிகமாக அவர்களிடம் பேச வேண்டாம். யாரை பற்றியுமே சரியான முடிவுக்குவர சிறிது காலம் தேவை. அதுவரை பொறுத்திருந்து, பிறகு நட்பு பாராட்டுவது நல்லது. பெண்களுக்கு அவர்கள் வேலை மிகவும் தேவையானதாக இருக்கலாம்.

    அந்த வருமானத்தை நம்பித்தான் அவர்களின் குடும்பமும், வருங்காலமும் இருக்கிறது என்கிற நிலைகூட இருக்கலாம். ஆனால் இதை எல்லாம் உங்கள் உயர் அதிகாரியிடம் சொல்லாதீர்கள். சொந்த சோகங்களை அதிகமாக வெளிப்படுத்தினால் “நான் இருக்கிறேன் உனக்கு, கவலைப்படாதே“ என்கிற போர்வையில் எல்லைமீறப் பார்க்கலாம்.

    உடை வி‌ஷயத்தில் சுயசிந்தனை இருப்பதில் தவறில்லை. என்றாலும் பொதுவாக ஆடை குறித்து ஒரு சில ஆண்களின் எண்ணம் கொஞ்சம் வேறுவிதமாகத்தான் இருக்கிறது. அதனால் ஆடை வி‌ஷயத்தில் கவனம் தேவை. அதே சமயம் உடையைவிட முக்கியம் உடல் மொழி. துணிச்சலான பெண்களிடம் வாலாட்டுவதைவிட பயந்து நடுங்கும் பெண்களிடம் எல்லைமீறப் பார்ப்பது சபலக்காரர்களுக்கு எளிது.



    பலரும் காரில் செல்லும்போது ஒன்றை மறந்து விடுவார்கள். டிரைவர் ஒருவர் இருக்கிறார் என்பதை மறந்துவிட்டு வீட்டின் அந்தரங்கங்களை எல்லாம் பேசிக் கொள்வார்கள். இதேபோல பணி இடத்திலும் ஒரு தவறு நடக்கலாம். தொலைபேசியில் அந்தரங்க வி‌ஷயங்களைப் பேசும்போது பிறர் கேட்க வாய்ப்பு உண்டு என்பதை மறக்க வேண்டாம்.

    எந்த நியாயமான காரணமும் இல்லாமல் மேல் அதிகாரி உங்களுக்கு தனி சலுகை எதையாவது அளித்தால், அதை உறுதியுடன் மறுத்து விடுங்கள். ‘எனக்குப் பிறந்த நாள்‘ என்று சுவீட் பாக்சை நீட்டினால், மறுப்பது நாகரிகமாக இருக்காது என்கிறீர்களா? வாங்கிக் கொள்ளுங்கள். உடனடியாக உங்கள் துறையிலிருக்கும் பிறரையும் கூப்பிட்டு, அந்த மேல் அதிகாரி முன்பாகவே, பகிர்ந்து கொள்ளுங்கள்.

    சக ஆண் ஊழியர்கள் ஜோக்குகள் என்ற பெயரில் இரட்டை அர்த்தத்துடன் பேசினால், உடனே உங்கள் எதிர்ப்பை பதிவு செய்துவிடுங்கள். அதைவிட முக்கியம் நீங்களும் அதுபோன்ற ஜோக்குகளை பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது. சக பெண் ஊழியர்களிடம் நட்பை வளர்த்துக் கொள்ளுங்கள். சபல ஆண் பணியாளர்களை எதிர்க்க இது உதவும்.

    உங்கள் முழு நம்பிக்கையைப் பெற்ற சக ஊழியர்களும் உங்களுக்கு உதவ முன்வருவர். தனித்தீவாக இருக்காதீர்கள். உங்கள் வேலையில் நீங்கள் மிகச் சிறப்பானவராக இருந்துவிட்டால், எந்த மேல் அதிகாரியும் உங்களை அலட்சியப்படுத்திவிடவோ, தவறான கண்ணோட்டத்தில் அணுகவோ முயற்சிக்க மாட்டார்கள். எனவே பணியில் திறமைசாலிகளாக விளங்க முயற்சியுங்கள்.

    புற்றுநோய் வகைகள் தான் நம்மை அதிகம் மறைந்திருந்து தாக்க கூடும். உடலில் இருந்து கொண்டே அறிகுறிகளை இறுதி நாட்களில் காட்டும் புற்றுநோய் வகைகள் என்ன என்பதை அறியலாம்.
    இன்று வருகின்ற நோய்களின் எண்ணிக்கையை பார்த்தால் நம்மை அறியாமலே உள்ளுக்குள் பயம் வருகின்றது. சில வகையான நோய்கள் அறிகுறிகளை முன்கூட்டியே காட்டி விடும். ஆனால், சில வகையான கொடூரமான நோய்கள் உங்கள் உடலுக்குள் இருந்து கொண்டே இறுதி நாட்களில் மட்டுமே வெளிப்படுத்தும்.

    இந்த வகையான நோய்கள் வருவதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. குறிப்பாக நோய்களில் புற்றுநோய் வகைகள் தான் நம்மை அதிகம் மறைந்திருந்து தாக்க கூடும். உடலில் இருந்து கொண்டே அறிகுறிகளை இறுதி நாட்களில் காட்டும் புற்றுநோய் வகைகள் என்னென்ன என்பதை இனி அறிவோம்.

    நாம் நினைத்து கூட பார்க்காத அளவிற்கு புற்றுநோய்கள் ஏராளமான வகையில் உள்ளது. பொதுவாக புற்றுநோய் என்பது புற்றுநோய் செல்களால் உருவாகிறது. இந்த செல்கள் பல நாட்கள் நம் உடலில் இருந்து கொண்டே வெள்ளை ரத்த அணுக்களின் எண்ணிக்கையை குறைத்து விடும். பிறகு உடல் முழுக்க இவர்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்து விடும்.

    கணைய புற்றுநோய்


    கணையங்கள் மிக முக்கிய உறுப்பாக கருதப்படுகிறது. உங்களின் கணையம் பாதிக்கப்பட்டால் செரிமான கோளாறு, ஹார்மோன்கள் குறைபாடு, சர்க்கரை அளவு அதிகரித்தல் போன்றவை ஏற்படும். கணையத்தில் புற்றுநோய் வந்தால் அடிவயிற்றில் வலி, வயிற்று உப்பசம், பசியின்மை போன்ற அறிகுறிகள் கடைசி கட்டத்தில் ஏற்படும். ஆனால், இதனை பலர் தொப்பை விழுந்துள்ளதாக சாதாரணமாக கருதுகின்றனர்.

    ப்ரோஸ்டேட் புற்றுநோய்

    ஆண்களை அதிகமாக தக்க கூடிய புற்றுநோய் வகைகளில் இது தான் முதலிடத்தில் உள்ளது. இந்த நோயின் அறிகுறிகள் தென்படுவது மிக கடினம். விந்தணுக்களுடன் சீழ் போன்று வருதல், பிறப்புறுப்பு வீங்குதல் போன்ற அறிகுறிகளை இவை இறுதியாக உணர்த்தும். அத்துடன் சிறுநீருடன் ரத்தமும் கலந்து வர கூடும்.

    சிறுநீரக புற்றுநோய்

    மிக கடினமாக கண்டறியப்படுகின்ற புற்றநோய் வகையை சார்ந்தது இது. ஆரம்ப நிலையில் எந்த ஒரு அறிகுறியையும் இது தருவதில்லை. ஆனால், இறுதி தருவாயில் பின் முதுகு வலி, திடீரென்று உடல் எடை குறைதல், சிறுநீரகத்தில் ரத்தம் வருதல் போன்ற அறிகுறிகள் ஏற்பட கூடும். இதை முதல் நிலையில் அறிவது மிக கடினமாகும்.



    நுரையீரல் புற்றுநோய்

    புகை பிடிப்பதாலே பாதிக்கும் மேற்பட்டோர்க்கு இந்த புற்றுநோய் வருகிறது. இதன் அறிகுறிகளும் பல நாட்கள் உடலில் ஊறியே பின்னரே தெரிய வரும். ஆரம்ப நிலையில் X-ray எடுத்து பார்த்தல் கூட இந்த புற்றுநோய் இருப்பதாக கண்டறிய முடியாதாம். அதிக இரும்பல், நீண்ட நாள் காய்ச்சல், மூச்சு திணறல் ஆகியவை இதற்கான அறிகுறிகளாகும்.

    கருப்பை புற்றுநோய்

    ஆண்களை போலவே பெண்களை பிரத்தியேகமாக தாக்க கூடிய கொடூரமான புற்றுநோய்களில் இதுவும் ஒன்று. ஆரம்ப நிலையில் இதன் அறிகுறிகளை கண்டறிவது மிக கடினம். இவை பெண்களின் பிறப்புறுப்புகளில் உண்டாக கூடும். மலத்தில் ரத்தம் வருதல், குடலில் பாதிப்பு போன்ற அறிகுறிகள் பின்னாளில் தென்பட கூடும்.

    சார்க்கோமா

    தசைகளிலும் எலும்புகளிலும் உருவாக கூடிய புற்றுநோய் இது. குறிப்பாக கொழுப்புகளிலும், மெல்லிய திசுக்களிலும், நரம்புகளிலும், ரத்த நாளங்களிலும் இவை ஊடுருவி இருக்கும். மேலும், தோலில் அடிப்பகுதியில் இவை உருவாகவும் கூடும். இவை எந்த உறுப்புகளில் வேண்டுமானாலும் வரலாம். இதன் அறிகுறியை ஆரம்பத்தில் அறிய இயலாது.

    கல்லீரல் புற்றுநோய்


    மிக மோசமான நோய்களில் இதுவும் அடங்கும். கல்லீரலில் புற்றுநோய் உண்டாக்கினால் கண்டறிவது மிக கடினமாகும். முதலில் கல்லீரல் வீங்க தொடங்கி, புற்றுநோய் செல்கள் கல்லீரல் முழுவதும் பரவும். சிலருக்கு பரம்பரை ரீதியாகவும் இந்த நோய் வர கூடும்.

    விறைப்பை புற்றுநோய்

    20 முதல் 45 வயதுடைய ஆண்களுக்கு இந்த புற்றுநோய் உருவாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக ஆய்வுகள் சொல்கிறது. விந்தணுக்களை உருவாகும் போது அதனுடனே புற்றுநோய் கிருமிகளும் உருவாகி உயிரை எடுத்து விடும். இதனை முதல் நிலையில் அறிவது மிக கடினம்.

    மூளை புற்றுநோய்

    மூளை மற்றும் தண்டு வடத்தில் இந்த புற்றுநோய் செல்கள் உருவாக கூடும். இவை இறுதி நிலையில் தான் தனது அறிகுறியை வெளிப்படுத்தும் என்றே மருத்துவர்கள் கூறுகின்றனர். அடிக்கடி தலைவலி, பேசுவதில் தடுமாற்றம், மண்டை பகுதியில் புதுவித அறிகுறி இருந்தால் மூளை புற்றுநோய் என்று அர்த்தம்.
    தினமும் மதிய வேளையில் ஒரே மாதிரியான சமையல் செய்து போர் அடித்திருந்தால், சற்று வித்தியாசமாக காளான் மிளகு சாதம் செய்து சுவைக்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உதிரியாக வடித்த சாதம் - 1 கப்
    காளான் - 250 கிராம்
    வெங்காயம் - 1
    மிளகு - 2 டேபிள் ஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
    மல்லி தூள் - 1 டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 1
    கொத்தமல்லி - சிறிதளவு
    எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    காளானை நன்றாக நீரில் கழுவி பெரிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    மிளகை கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

    பின்பு அதில் மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.

    அடுத்து உப்பு, காளானை சேர்த்து வதக்கி, பின் பொடி செய்து வைத்துள்ள மிளகை சேர்த்து, குறைவான தீயில் காளானை வேக வைக்க வேண்டும்.

    காளானானது நன்கு வெந்ததும், அதில் சாதத்தைப் போட்டு, மசாலா சாதத்தில் நன்கு ஒன்று சேரும் வரை 10 நிமிடம் நன்கு கிளறி விட்டு கொத்தமல்லி தூவி இறக்கினால், சுவையான காளான் மிளகு சாதம் ரெடி!!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளை வீட்டுப்பாடம் செய்யவைக்க அன்றாடம் அம்மாக்கள் படும்பாடு சொல்லி மாளாது. ஹோம் வொர்க் நேரத்தில் குழந்தைகளை எப்படிக் கையாள வேண்டும் என்று பார்க்கலாம்.
    குழந்தைகளை வீட்டுப்பாடம் செய்யவைக்க அன்றாடம் அம்மாக்கள் படும்பாடு சொல்லி மாளாது. ஹோம் வொர்க் நேரத்தில் குழந்தைகளை எப்படிக் கையாள வேண்டும் என்று பார்க்கலாம்.

    ‘`பொதுவாக அம்மாக்கள், தங்கள் வேலைக்கு என ஒரு அட்டவணை வைத்திருப்பார்கள். அதில் ஒன்றாக, மாலை நேரத்தில் குறிப்பிட்ட சில மணி நேரம் பிள்ளைகளின் ஹோம்வொர்க்குக்காக ஒதுக்கப்பட்டிருக்கும். அந்த நேரத்துக்குள் குழந்தைகளை வீட்டுப்பாடம் முடிக்க வைத்து, சீரியல், இரவு சமையல் என தங்களின் அடுத்த வேலையைப் பார்க்கச் செல்ல வேண்டுமே என்கிற அவசரம் அவர்களுக்கு இருக்கும்.

    ஆனால், உங்களின் அவசரத்துக்கு குழந்தைகளால் ஈடுகொடுக்க முடியாது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். ‘ஒரு மணி நேரமா சொல்லிக் கொடுக்கிறேன், இன்னும் படிக்கல’ என்பது போன்ற உங்களின் கோபம், பதற்றம், கண்டிப்பு போன்றவை குழந்தைகளை அடுத்த ஐந்து நிமிடங்களில் அனைத்தையும் கற்க வைத்துவிடாது. ரைம்ஸையோ, எழுத்துக்களையோ, கணித எண்களையோ அவர்கள் கற்கும்வரை பொறுமையாக அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள். அதற்கு முதல்படியாக, உங்கள் அட்டவணையில் இருந்து நீங்கள் வெளிவர வேண்டும்!

    படிக்க, விளையாட, சாப்பிட என குழந்தைகளை அந்தந்த நேரத்துக்கான செயல்களைச் செய்யப் பழக்கப்படுத்துங்கள். அதே நேரம், செல்போன், டி.வி, அவுட்டிங் என்பதை எல்லாம்விட உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் அதிகப்படியான நேரத்தை ஒதுக்குங்கள். அப்படி செய்யும்போது, வீட்டுப்பாடத்துக்கான நேர நிர்ணயத்துக்குள் முடிக்கவைக்க வேண்டிய கட்டாயம் காணாமல் போகும்.



    குழந்தைகளுக்குப் புரியும்படி பாடம் கற்றுக் கொடுப்பதற்கான வழி என்ன தெரியுமா? அதை அவர்களுக்குப் பிடிக்கும் விதங்களில் கற்றுக்கொடுப்பதுதான். அதற்கு உங்களின் கற்பிக்கும் முறையில் மாற்றம் செய்யுங்கள். ஒரு வாரமாக கஷ்டப்பட்டும், திட்டியும், அடித்தும் சொல்லிக்கொடுத்து அவர்கள் மனதில் பதியாத ரைம்ஸை, நடனம், கதை என உடல் அசைவுகளின் வாயிலாகவும், சந்தோஷமான மனநிலையிலும் சொல்லிக்கொடுங்கள்.

    அது நிச்சயம் அவர்கள் மனதில் பதிந்துவிடும். ‘சர்க்கிள் ஷேப்’பை கற்றுக்கொடுக்க, புத்தகத்தில் உள்ள வட்டத்தையே நம்பாமல் பூரி, வளையல், தட்டு என்று வாழ்க்கையில் இருந்து அவர்களுக்கு அந்த வடிவத்தைக் காட்டுங்கள். மேலும், கண்ணால் பார்த்து, வாய்விட்டுப் படித்து, எழுதிப் பார்த்து என இந்த மூன்று முறைகளில், எந்த முறையில் பாடம் கற்க உங்கள் குழந்தைக்கு விருப்பம் என்பதைத் தெரிந்து, அதற்கேற்ற வகையிலும் சொல்லிக் கொடுங்கள்.

    கவனிக்கும் திறன் குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கு சற்று கூடுதல் மெனக்கெடல் தேவைப்படும்தான். ஆனால், அது இயலாத காரியம் என்றில்லை. இவர்களுக்கு அடிப்படைகளை தெளிவுறப் புரியவைப்பது, மீண்டும் மீண்டும் அவற்றை நினைவுபடுத்துவது, கூடுதல் பொறுமையுடன் கற்றுக் கொடுப்பது அவசியம்.

    சிறு வயதிலேயே குழந்தைகளுக்குப் படிப்பில் அக்கறை வரவேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. கற்றுக் கொடுக்கும் பாடத்தின் அருமை உங்களுக்குப் பெரிதாக தெரியலாம். குழந்தைகளுக்கோ அது ஒரு வீட்டுப்பாடம்… அவ்வளவுதான். விளையாட்டு, பொழுதுபோக்குபோல அன்றாடமான ஒரு விஷயம்தான் அவர்களைப் பொறுத்தவரை படிப்பும். 
    பெண்களில் பாத அழகை கெடுப்பதில் குதிகால் வெடிப்பு ஒரு பெரும் பிரச்சனையாக உள்ளது. இந்த பிரச்சனைக்கு உடனடி தீர்வு தரும் சிறந்த வழி ஒன்று உள்ளது.
    குதிகால் வெடிப்பு பிரச்சனை ஒரு பெரும் பிரச்சனையாக மாற வாய்ப்பு உள்ளது. அந்த பிரச்சனையால் அவதிப்படபவர்களுக்குத்தான் தெரியும் அதன் வலி. சில சமயம் சாதரணமாக வெளியே கால்களை நீட்டி உட்கார முடியாது. சில சமயங்களில் கடினமாக தளங்களில் அவர்களால் நடக்கவும் முடியாது. இதை சரி செய்ய ஓர் எளிய இயற்கை மருத்துவம் உள்ளது.

    அதற்கு முதலில் எலுமிச்சை பழத்தை எடுத்து இரண்டாக வெட்டி, அதிலிருக்கும் சாறை முற்றிலுமாக எடுத்து விடவேண்டும். நமக்கு தேவை அந்த எலுமிச்சை  தோல் மட்டும் தான்.



    சற்றே காய்ந்த அந்த தோலை எடுத்து, அதை உங்கள் குதிக்காலில் படும்படி வைக்கவும். உங்கள் குதிகால் வெடிப்புகளை முழுவதும் கவர்  செய்யும்படியாக வைக்கவேண்டும். பிறகு அந்த எலுமிச்சை தோலின் நிலை விலகாத வண்ணம், சாக்ஸை அணிந்துக் கொள்ளுங்கள். இது சருமத்தின் வறட்சி மற்றும் வெடிப்புகளை சரி செய்ய  உதவும்.

    இதை இரவு நேரங்களில் பின்பற்றுவதால், எங்கும் நடக்காமல் ஓரிடத்தில் இருப்பதால் நல்ல பலன் அடையமுடியும். எலுமிச்சையின் நறுமணம் இரவு உங்கள் தூக்கமின்மை பிரச்சனையை போக்க உதவும். இதை தொடர்ந்து செய்து வருவதால், உங்கள் குதிகால் வெடிப்பு மெல்ல, மெல்ல குணமடைவதை நன்கு  உணர முடியும்.

    இந்த முட்டைகோஸ் மிளகு சாலட்டாவும் சாப்பிடலாம். தோசை, சப்பாத்தி, சாதத்துடனும் சேர்த்து சாப்பிடலாம். இன்று இந்த சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முட்டைகோஸ் - 200 கிராம்,
    தேங்காய்த் துருவல் - கால் கப்,
    மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்,
    தேங்காய் எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    முட்டைகோஸிலுள்ள தண்டுகளை நீக்கிவிட்டு இதழ் இதழாகப் பிரித்துக்கொள்ளவும். பின்னர் நீளமாக மெல்லியதாக நறுக்கிக்கொள்ளவும்.

    நறுக்கிய முட்டைகோஸை இட்லித் தட்டில் வைத்து, அடுப்பைக் குறைந்த தீயில் வைத்து, 5 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்துக்கொள்ளவும்.

    வேக வைத்த முட்டைகோஸை ஓரு அகலமான பாத்திரத்துக்கு மாற்றிக்கொள்ளவும்.

    வாணலியில் தேங்காய் எண்ணெய்விட்டுச் சூடானதும் வேகவைத்த முட்டைகோஸைச் சேர்த்து ஒரு நொடி வதக்கவும்.

    இதனுடன் உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலந்து அடுப்பை அணைத்துவிடவும்.

    கடைசியில் தேங்காய்த் துருவல் சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.

    குறிப்பு: இதை முட்டைகோஸ் சாலட் என்றும் கூறலாம். இதை தோசையின் மேல்வைத்து சுவையான முட்டைகோஸ் ஊத்தப்பம் செய்யலாம்.

    சப்பாத்தி, கலந்த சாதம் வகைகளுக்கு சூப்பரான சைடிஷ்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×