என் மலர்
பெண்கள் உலகம்
- மென்மையான தாடிதான் எப்போதும் அழகு.
- தாடியை சீவுவதற்கென தனி சீப்பு வைத்துக்கொள்ளுங்கள்
இப்போதெல்லாம் 'கிளீன் ஷேவ்' செய்த ஆண்களை விட, தாடி வைத்திருக்கும் ஆண்களைத்தான் பெண்களுக்கு பிடிக்கிறது. இதனால் ஆண்கள் பலர் தாடி வளர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் கஷ்டப்பட்டு வளர்க்கும் தாடியை, பராமரிக்க முடியாமல் பலர் திண்டாடுகின்றனர். அவர்களுக்காக தாடியை பராமரிக்கும் சில வழிமுறைகளை இங்கு தருகிறோம்..!
தாடி வளர்க்கப் போவதாக முடிவெடுத்து விட்டால், ஒரு வாரத்திற்கு தினமும் கிளீன் ஷேவ் செய்யுங்கள். பின்னர் தாடி வளர்த்தால், அழகாகவும், மென்மையாகவும் தாடி வளரும்.
தாடியை வளர்க்க எவ்வளவு கவனம் செலுத்துகிறோமோ, அதே அளவுக்கு அதனை டிரிம் செய்யும்போதும் கவனம் செலுத்த வேண்டும். சற்று கவனம் சிதறினாலும் உங்களின் தாடி அஷ்ட கோணல் ஆகி விடும்.
மென்மையான தாடிதான் எப்போதும் அழகு. எனவே வாரத்திற்கு இரு முறை தாடிக்கு ஷாம்பு போடுங்கள். தாடிக்கென சில பிரத்யேக ஷாம்புகள் கடைகளில் விற்பனையாகிறது. அவற்றை தாடிக்கு பயன்படுத்தலாம்.
ஷாம்பு போட்டு தாடியை கழுவியதும் கண்டிஷனர் பயன்படுத்துங்கள். இது தாடியை மேலும் மென்மையாக்கும்.
தாடியை ஷாம்பு போட்டு கழுவும்போது, கவனமாக இருங்கள். நன்றாக தண்ணீர் ஊற்றி கழுவினால் மட்டுமே, ஷாம்பில் இருக்கும் வேதிப்பொருட்கள் தாடியில் தங்காமல் இருக்கும்.
தாடியை சீவுவதற்கென தனி சீப்பு வைத்துக்கொள்ளுங்கள். தலையில் பொடுகு இருக்கும் நபர்கள், தலைக்கு பயன்படுத்தும் சீப்பை தாடிக்கு பயன்படுத்த வேண்டாம்.
தலைக்கு தேய்க்கும் தேங்காய் எண்ணெய்யை தாடிக்கும் தடவலாம். இதனால் தாடியில் இருக்கும் முடியின் வேர்கள் வலுவடையும். மேலும் தாடி பழுப்பு நிறத்தில் மாறுவதும் தவிர்க்கப்படும்.
- பரந்த நெற்றி, எலும்பு தெரியும்படியான கன்னம் ஆகியவையே சதுர வடிவ முக அமைப்புக்கான முக்கிய அம்சம்.
- நீள்வட்ட முகம் கொண்ட ஒருவருக்கு பொருந்தும் ஒரு கண்ணாடி, மற்றொரு நீள்வட்ட முகம் உள்ள நபருக்குப் பொருந்தாது.
மூக்குக் கண்ணாடி தேர்ந்தெடுக்கும்போது அணிந்து பார்த்து, நீண்ட நேர முயற்சிக்குப் பின் நமக்குப் பிடித்ததை அணிவோம். எனினும், அந்த கண்ணாடி நம் முகத்துக்கு ஒத்துப்போகாமல் காட்சியளிக்கும்போது நேரம் மற்றும் முயற்சி வீணாகும். முக அமைப்புக்கேற்ற மூக்குக் கண்ணாடியை எப்படி தேர்ந்தெடுப்பது என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
அளவு
தலையை நேராக உயர்த்தி, ஒரு ஏ.டி.எம். கார்டின் பக்கவாட்டுப் பகுதியை கண்களுக்குக் கீழ், மூக்கின் நடுப்பகுதியில் இருக்கும்படி வைக்கவும். ஏ.டி.எம். கார்டு முழுவதுமாக உங்கள் கண்ணுக்குள் மறைந்தால் உங்கள் கண்ணாடியின் அளவு 'எல்', கார்டும் கண் அளவும் சரிசமமாக இருந்தால் கண்ணாடி அளவு 'எம்', கார்டை விட கண் அளவு சிறிதாக இருந்தால் கண்ணாடி அளவு 'எஸ்' ஆகும்.
சதுர முக அமைப்பு
பரந்த நெற்றி, எலும்பு தெரியும்படியான கன்னம் ஆகியவையே சதுர வடிவ முக அமைப்புக்கான முக்கிய அம்சம். இவ்வித அமைப்பு உள்ளவர்கள் வட்ட வடிவம் அல்லது 'டி' வடிவ கண்ணாடி பயன்படுத்தினால், முக அமைப்பு மென்மையாக காட்சியளிக்கும். மேலும், ஏவியேட்டர் வகை கண்ணாடிகள் கன்னத்தில் உள்ள சதை மற்றும் எலும்புகளை சமப்படுத்த உதவும். முக அமைப்பை சிறிதாகக் காட்ட 'ஓவல்' வடிவ கண்ணாடிகளையும் தேர்ந்தெடுக்கலாம். இவர்கள் கூர்மையான மூலைகளைக் கொண்ட சதுர கண்ணாடிகளைத் தவிர்ப்பது நல்லது.
வட்ட வடிவ முக அமைப்புக்கு..
பரந்த கன்ன எலும்புகள், சதைப்பிடிப்பான கன்னம் மற்றும் சற்று குறுகிய நெற்றி வட்ட முக அமைப்பாக வகைப்படுத்தப்படுகிறது. இவர்கள், வட்ட வடிவக் கண்ணாடிகளைத் தவிர்ப்பது சிறந்தது. மாறாக, 'கிளாசிக் ரெட்ரோ ஸ்டைல் வைபெரர்கள்' அல்லது நீள் செவ்வக வடிவ கண்ணாடிகளை முயற்சிக்கலாம். இவை வட்ட முக வடிவத்திற்கு அற்புதமாகப் பொருந்தும்.
நீள்வட்ட வடிவ முக அமைப்புக்கு...
நீள்வட்ட முகம் கொண்ட ஒருவருக்கு பொருந்தும் ஒரு கண்ணாடி, மற்றொரு நீள்வட்ட முகம் உள்ள நபருக்குப் பொருந்தாது. எனவே கண்ணாடியைத் தேர்ந்தெடுக்கும்போது கவனத்துடன் இருக்க வேண்டும். சதுரம் மற்றும் செவ்வக பிரேம்கள் நீள்வட்ட வடிவ முக அம்சங்களை மெருகூட்டி காட்டும். ஆகையால், பெரிய சதுர கண்ணாடிகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது.
இதய வடிவ முக அமைப்பினருக்கு..
கிளாசிக் 'ஏவியேட்டர்' கண்ணாடிகள் இதய வடிவ முக அமைப்பினருக்கு கச்சிதமாக பொருந்தும். உங்கள் முக வடிவத்தை இன்னும் மெருகேற்ற 'ரிம்லெஸ்' கண்ணாடிகளையும் அணியலாம். இந்த வகை கண்ணாடிகள் அணிய எளிதாக இருக்கும். அதேசமயம் அழகாகவும் காட்சியளிக்கும். மூக்குப் பட்டைகள் கொண்ட உலோக பிரேம்கள் மற்றும் மெல்லிய பிரேம் கண்ணாடிகளைத் தேர்வு செய்து பயன்படுத்தலாம். பிளாஸ்டிக் பிரேம்கள் உங்கள் முகத்தின் வசீகரத்தை அதிகரிக்கும். எந்த வகை பிரேமாக இருந்தாலும், லென்ஸின் அடிப்பகுதி அகலமாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
- பெரும்பாலான ஆண்கள் சரியான அளவில் பொருந்தும் பேன்ட்களை அணிவதில்லை.
- எந்தவொரு உடை அலங்காரத்தையும், காலணிகள்தான் முழுமையாக நிறைவு செய்கின்றன.
அலுவலக மீட்டிங்கிற்கு தயாராகும் போது கவனிக்கவேண்டிய சில விஷயங்கள்:-
* மென்மையான சட்டை
அலுவலகத்தில் நடக்க இருக்கும் மீட்டிங்கிற்கு, மென்மையான நிற சட்டைகளை அணிந்து செல்வதுதான் நல்லது. கடுமையான நிறங்களை தவிர்க்கலாம்.
* பொருத்தமற்ற பேன்ட்கள்
பெரும்பாலான ஆண்கள் சரியான அளவில் பொருந்தும் பேன்ட்களை அணிவதில்லை. பேன்ட் மிகவும் இறுக்கமாகவோ அல்லது தளர்வாகவோ இருந்தால், அது முழுமையான தோற்றத்தை கெடுத்துவிடும். ஆண்களுக்கான பார்மல் பேன்ட்கள் இடுப்பு மற்றும் நீளத்திற்கு சரியாக பொருந்த வேண்டும்.
* காலணி
எந்தவொரு உடை அலங்காரத்தையும், காலணிகள்தான் முழுமையாக நிறைவு செய்கின்றன. அதனால் அலுவலக உடையை நிறைவு செய்ய, முறையான காலணிகளைத் தேர்ந்தெடுக்கவும். அலுவலக சந்திப்பு, கலந்துரையாடல் போன்றவற்றுக்கு பார்மல் காலணிகளை மட்டும் பயன்படுத்தலாம்.
* தேர்வு
அலுவலக சந்திப்பிற்கு சின்னசின்ன விஷயங்களும் ரொம்ப முக்கியம். குறிப்பாக பெல்ட், நேர்த்தியான கைக்கடிகாரம் மற்றும் பிரீமியம் கப்லிங்க்ஸ் போன்றவற்றை சரியாக தேர்ந்தெடுத்து அணியுங்கள்.
- 'ஜர்னல் ஆஃப் பிசிகல் கெமிஸ்ட்ரி லெட்டர்ஸ்' என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
- ஒரு ஃபோட்டான் என்பது ஒளி மற்றும் பிற மின்காந்த அலைகளின் அடிப்படை துகள் ஆகும்.
அனைத்து உயிரினங்களும் இறந்தவுடன் மறைந்து போகும் ஒரு சிறப்பு பிரகாசத்தைக் கொண்டிருப்பது அறிவியல் பூர்வமான ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
கனடாவின் கால்கரி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட இந்த ஆய்வு 'ஜர்னல் ஆஃப் பிசிகல் கெமிஸ்ட்ரி லெட்டர்ஸ்' என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி ஆய்வானது, இந்த தன்மையை, அல்ட்ராவீக் ஃபோட்டான் உமிழ்வு ( UPE ) என்று விவரிக்கிறது.
ஒரு ஃபோட்டான் என்பது ஒளி மற்றும் பிற மின்காந்த அலைகளின் அடிப்படை துகள் ஆகும்.
அதாவது, அவற்றை ஒளியின் மிகச்சிறிய வெளிப்பாடு எனலாம். உயிரினங்கள் உடலில் ஆற்றலை உற்பத்தி செய்யும்போது, அந்த வேதியியல் எதிர்வினைகளின் விளைவாக மிகக் குறைந்த அளவிலான ஃபோட்டான்களை வெளியிடுகின்றன.
இதன் விளைவாக, உயிருள்ள உடலைச் சுற்றி மிகச் சிறிய ஒளி உருவாகிறது. உயிர் பிரிந்ததும் ஆற்றல் உற்பத்தி நின்றுவிடுவதால் அந்த ஒளி மறைகிறது. இந்த ஒளி மிகவும் மெல்லியதாக இருக்கிறது. இது 200 முதல் 1000 நானோமீட்டர்கள் வரையிலான வரம்பில் உள்ளது.
இது அனைத்து உயிரினங்களிலும் காணக்கூடிய ஒரு இயற்கை நிகழ்வு என்று ஆராய்ச்சியாளர்கள் விளக்குகிறார்கள்.
- படிக்கும்போது நாம் உட்காரும் முறை தான் தூக்கத்தை வரவழைக்கிறது.
- ஒரே இடத்தில் தொடர்ந்து இருக்கிறபோது தசைகளுக்கு செல்கின்ற ரத்த ஓட்டம் தடைபடுகிறது.
குழந்தைகளே... புத்தகத்தை கையில் எடுத்து உட்கார்ந்தாலே தூக்கம் வருகிறதா? இது நமக்கு மட்டும்தான் நடக்குதா? இல்லை எல்லோருக்கும் நடக்குதா? என்று தோன்றுகிறதா?
இது அனைவருக்கும் நடக்கிற ஒரு செயல் தான். அது ஏன் நடக்கிறது என்கிற காரணத்தை அறிந்து கொள்வோம்!
படிக்கும்போது நாம் உட்காரும் முறை தான் தூக்கத்தை வரவழைக்கிறது. அசையாமல் அப்படியே ஒரே இடத்தில் அமர்ந்துவிடக்கூடாது. இப்படி ஒரே இடத்தில் தொடர்ந்து இருக்கிறபோது தசைகளுக்கு செல்கின்ற ரத்த ஓட்டம் தடைபடுகிறது. தேவையான ரத்தம் கிடைக்காததால் ரத்தத்தை கொண்டு வருகிற ஆக்சிஜனும் கிடைக்காமல் போகிறது. அதனால் தசைக்கலங்கள் காற்றில்லாத சுவாசத்தை தொடர்கிறது.
ஆக்சிஜன் இல்லாத சுவாசத்தின்போது தசைக்கலங்களில் உள்ள சேமிப்பு உணவு அரைகுறையாக எரிக்கப்படுகிறது. அதனால் லாக்டிக் அமிலம் உருவாகிறது. இந்த அமிலம் ரத்தத்தில் கலந்து அதில் உள்ள ஆக்சிஜனுடன் வினை புரிகிறது. அப்போது மூளைக்குச்செல்ல வேண்டிய ஆக்சிஜன் கிடைக்காமல் போகிறது. அதனால் மூளை களைப்பாகி தூங்கி விடுகிறது. எனவே படிக்கிறபோது ஒரு இடத்தில் இருந்துவிடாமல் அவ்வப்போது எழுந்து நடப்பது, சிறிய இடைவெளி எடுப்பது போன்ற செயல்களை செய்ய வேண்டும்.
- அதிக சுவை கொண்ட பழங்களில் மாம்பழம் முதன்மையானது.
- மாம்பழங்கள் இயற்கையாகவே இனிப்பானவை.
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் மாம்பழம் சாப்பிட்டாலே போதும் என்று ஊட்டச்சத்து நிபுணர் சிம்ருன் சோப்ரா கூறுகிறார். மேலும் உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்கள் பெரும்பாலும் பழங்களை தவிர்த்து விடுவர். பழங்களைத் தவிர்த்து சாப்பிடும் உணவு முறை மிகவும் மோசமானது என்றும் சீரான உணவு மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு பழங்கள் அவசியம் என்றும் பழங்கள் ஊட்டச்சத்துக்கான முழுமையான அணுகுமுறை, உடல் எடையைக் கட்டுப்படுத்துவதை எளிதாக்குகிறது என்பதையும் அவர் வலியுறுத்துகிறார்.
ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைப்பதற்கு மாம்பழம் சிறந்தது என்று கூறும் ஊட்டச்சத்து நிபுணர் சிம்ருன் சோப்ரா சில நன்மைகளை எடுத்துரைக்கிறார்.
சிம்ருன் சோப்ரா சிறப்பித்துக் காட்டும் சில நன்மைகள்:
1. அளவாக உண்ணுங்கள்
அதிக சுவை கொண்ட பழங்களில் மாம்பழம் முதன்மையானது. சுவை அதிகமாக இருக்கிறது என்பதற்காக அளவில்லாமல் உட்கொள்ள கூடாது. உணவு கட்டுப்பாடு முக்கியம். எந்த உணவையும் அதிகமாக சாப்பிடுவது அதிகப்படியான கலோரி உட்கொள்ளலுக்கு வழிவகுத்து எடை அதிகரிக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது.
2. ஒட்டுமொத்த கலோரிகளை சமநிலைப்படுத்துங்கள்
உடல் தானாகவே கொழுப்புகளை அல்லது கலோரிகளை எரிப்பதற்கு முன்னதாகவே நாம் அதிக கலோரிகளை உட்கொள்வதால் எடை அதிகரிப்பு முதன்மையாக ஏற்படுகிறது. மாம்பழங்களில் குறைந்த கலோரி அடர்த்தி மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது, இவை இரண்டும் உங்களை நீண்ட நேரம் நிறைவாக உணர வைக்க உதவும் . ஒட்டுமொத்த கலோரி உட்கொள்ளலைக் குறைக்க வழிவகை செய்யும்.

3. நார்ச்சத்தை அதிகம் பயன்படுத்துங்கள்
மாம்பழங்களில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது பசியைத் தணித்து, மனநிறைவை ஊக்குவிக்கிறது. இது ஆரோக்கியமான எடை மேலாண்மைக்கு உதவும்.
4. மாம்பழங்களில் உள்ள இயற்கை சர்க்கரைகள்
மாம்பழங்கள் இயற்கையாகவே இனிப்பானவை. இருப்பினும், அவற்றின் நார்ச்சத்து உடலில் குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இந்த நன்மையைப் பெற, மாம்பழச் சாற்றைக் குடிப்பதை விட முழு மாம்பழங்களை கடித்து சுவைத்து சாப்பிடுவது நல்லது, ஏனெனில் இது நார்ச்சத்தை நீக்குகிறது.
5. ஊட்டச்சத்து நிறைந்த மாம்பழம்
மாம்பழங்கள் உட்பட அனைத்து பழங்களும் அவற்றின் வைட்டமின் மற்றும் தாதுப்பொருள் உள்ளடக்கம் காரணமாக ஊட்டச்சத்து நிறைந்தவை. எனினும் மாம்பழம் அதிக ஊட்டச்சத்துகளை கொண்டுள்ளது. எனவே உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் ஊட்டச்சத்து நிறைந்த மாம்பழங்களை எடுத்துக்கொள்ள ஊட்டச்சத்து நிபுணர் சிம்ருன் சோப்ரா பரிந்துரைக்கிறார்.
மேலும், அந்தந்த பருவ காலங்களில் கிடைக்கும் பழங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் உள்ளூர் விளைபொருட்களில் கவனம் செலுத்துமாறும் வலியுறுத்தி உள்ளார்.
- நடைபயிற்சி, சைக்கிள், நீச்சல் ஆகியவை நல்ல தேர்வுகள், ஏனெனில் இவை அதிகமாக முதுகை சிரமப்படுத்துவது இல்லை.
- எண்ணெய் மசாஜ் செய்யும்போது அந்த இடத்தில் உள்ள ரத்த ஓட்டம் மேம்படுகிறது.
முதுகு வலி என்பது பலவித உடல் நலப் பிரச்சனைகளினால் ஏற்படுகிறது. முதுகு வலி எந்த நோயுடன் தொடர்பு உடையது என்பதை அறிந்து அதற்கேற்ப சிகிச்சை எடுக்க வேண்டும்.
முதுகு வலிக்கான பொது காரணங்கள்:
தசைப் பிடிப்புகள், முதுகு எலும்புகளுக்கு இடையில் மெத்தைகளாக செயல்படுகின்ற வட்டுகள் வீங்கி அல்லது விலகி நரம்புகளை அழுத்துவதால் ஏற்படுகிற முதுகு வலி, குமட்டாய்டு (கீல் வாத) நோய்கள், ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்சனை (எலும்புகளில் கால்சியம் மற்றும் வைட்டமின்டி குறைவினால் நுண்துளைகள் ஏற்பட்டு உடையக்கூடியதாக மாறினால் முதுகெலும்புகளில் வலி ஏற்படும்), அன்கிலோசிங் ஸ்பான்டை விடிஸ், சயாட்டிகா, சாக்ரோலைடிஸ், குடல் பிரச்னைகள், சிறுநீரக பிரச்சனைகள், கர்ப்பப்பை பிரச்சனைகளிலும் முதுகு வலி ஏற்படும். விபத்துக்கள், அடிபட்ட காயங்கள், இவற்றைத் தொடர்ந்தும் முதுகில் வலி, குத்தல் ஏற்படும்.
இந்த நோய்க்கான மருத்துவ பரிசோதனைகள்:
இமேஜிங் (எம்.ஆர்.ஐ மற்றும் சிடி ஆய்வுகள்)
முதுகு வலிக்கான தடுப்பு முறைகள்
உடற்பயிற்சி:
தொடர்ந்து உடற்பயிற்சிகள் செய்வதன் மூலம் முதுகில் வலிமையும், நெகிழ்வுத் தன்மையும் அதிகரித்து தசைகள் சிறப்பாக செயல்பட உதவும். நடைபயிற்சி, சைக்கிள், நீச்சல் ஆகியவை நல்ல தேர்வுகள், ஏனெனில் இவை அதிகமாக முதுகை சிரமப்படுத்துவது இல்லை.
உடல் எடை:
ஆரோக்கியமான எடையை பராமரிக்க வேண்டும். அதிக எடை இருப்பது முதுகின் தசைகளை சிரமப்படுத்துகிறது.
எண்ணெய் மசாஜ்: மசாஜ் செய்யும்போது அந்த இடத்தில் உள்ள ரத்த ஓட்டம் மேம்படுகிறது. தசை இறுக்கம், சோர்வு, வலி, இவைகளை நீக்கி உடலுக்கு புத்துணர்ச்சியைத் தருகிறது.
சித்த மருத்துவ சிகிச்சைகள்
1) அமுக்கரா சூரணம் 1 கிராம், முத்துச்சிப்பி பற்பம் 200 மி.கி., குங்கிலிய பற்பம் 200 மி.கி., ஆறுமுகச் செந்தூரம் 200 மி.கி. இவைகளை மூன்று வேளை தேன் அல்லது வெந்திரில் சாப்பிட வேண்டும்.
2) வலியுடன் கூடிய வீக்கத்திற்கு சேராங் கொட்டை நெய் 5-10 மி.லி. வீதம் இருவேளை சாப்பிட வேண்டும்.
3) முதுகு வலி உள்ள இடத்தில், வாதகேசரி தைலம், சிவப்பு குங்கிலியத் தைலம், கற்பூராதி
தைலம் இவைகளில் ஒன்றைத் தேய்ந்து நொச்சி பழுத்த எருக்கு இலை, தழுதாழை, வாதநாராயணன் இலைகளை வதக்கி இளஞ்சூட்டில் ஒற்றடம் கொடுக்க வேண்டும்.
சித்த மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மருந்துகளை எடுத்துக் கொள்வது அவசியம்.
- ரோஸ் வாட்டரை சருமத்திற்கு பயன்படுத்துவது மிகவும் நல்லது.
- காட்டன் துணியை ரோஸ்வாட்டரில் நனைத்து அதனை கண் கருவளையம் உள்ள பகுதியில் வைக்க வேண்டும்.
இன்றைய தலைமுறையினர் சந்திக்கும் சரும அல்லது அழகு சார்ந்த பிரச்சனைகளில் கருவளையமும் ஒன்று. முன்பெல்லாம் பெரும்பாலான முதியவர்களுக்கு மட்டும் தான் கருவளையம் இருக்கும். ஆனால் தற்போது வயது வரம்பு இல்லாமல் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என எல்லோருக்கும் வந்து விடுகிறது.
கருவளையம் ஏற்பட காரணம்?
உடலில் மெலனின் அதிகமாக உற்பத்தி ஆகும் போது தான் கருவளையம் ஏற்படுகிறது. சில நேரங்களில் தோல் அழற்சி, நீரிழப்பு காரணமாகவும் கருவளையம் ஏற்படும்.
கருவளையம் வந்துவிட்டதே என்ன செய்யலாம் என்று அதற்கான தீர்வை தேடுவோம். ஆனால் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே கருவளையத்தை போக்குவதற்கான சிறந்த வழிகள் இதோ...

கற்றாழை ஜெல்
சரும பராமரிப்பில் கற்றாழைக்கு எப்போதும் முதல் இடம் தான். ஏனென்றால் சருமத்திற்கு மாய்ஸ்சரைசராக செயல்படும் கற்றாழையின் ஜெல் சருமத்திற்கு நீண்ட கால ஆரோக்கியத்தைத் தருகிறது. கற்றாழை ஜெல்லை நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அதன்பிறகு அதை எடுத்து கண்ணுக்குக் கீழ் உள்ள கருவளையம் இருக்கும் பகுதியில் தடவ வேண்டும். பிறகு 5 முதல் 10 நிமிடங்கள் வரை மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். இவற்றை இரவு முழுவதும் வைத்திருப்பது சிறந்தது. கண்கள் குளிர்ச்சியாக இருப்பதுடன், நல்ல ஓய்வு கிடைக்கும். இவ்வாறு செய்து வர, கண்களின் கீழ் உள்ள கருவளையத்தை எளிதாக நீக்கி விடலாம்.
உருளை மற்றும் வெள்ளரி சாறு
உருளைக்கிழங்கு மற்றும் வெள்ளரிக்காய் சாற்றில் ஆன்டி ஆக்ஸிடன்டுகள், வைட்டமின்கள் போன்றவை அதிகமாக நிறைந்துள்ளன. இவை சருமத்தில் உண்டாகும் தொற்றுக்களை சரி செய்ய உதவுகிறது. உருளைக்கிழங்கு மற்றும் வெள்ளரிக்காயை தனித்தனியே சிறிதளவு துருவி, அதன் சாற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் இரண்டையும் கலந்து கண்களுக்குக் கீழ் உள்ள கருவளையத்தில் தடவ வேண்டும். பின்னர் 20 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம். தொடர்ந்து இவ்வாறு செய்துவர கருவளையம் படிப்படியாக குறையும்.

ரோஸ்வாட்டர்
ரோஸ் வாட்டரை சருமத்திற்கு பயன்படுத்துவது மிகவும் நல்லது. இது இறந்த செல்களை நீக்கி, புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது. காட்டன் துணியை ரோஸ்வாட்டரில் நனைத்து அதனை கண் கருவளையம் உள்ள பகுதியில் வைக்க வேண்டும். இவ்வாறு 15 – 20 நிமிடங்கள் வைத்திருக்கலாம். இதனைத் தினமும் தொடர்ந்து செய்து வர கருவளையங்கள் எளிதாக நீங்கி விடும்.
பால்
பாலில் உள்ள லாக்டிக் அமிலம், சருமத்தின் கருமை நிறத்தை நீக்கி, கண்ணுக்குக் கீழ் உள்ள கருவளையங்களையும் நீக்க உதவி செய்கிறது. மேலும், இதில் உள்ள பொட்டாசியம் சத்துகள் சருமத்தை மாய்ஸ்சரைசராக வைத்திருக்க உதவுகிறது. இதற்கு காட்டன் பஞ்சு ஒன்றை பாலில் நனைத்து, அதனை கண்ணைச் சுற்றியுள்ள பகுதிகளில் தடவ வேண்டும். அதன்பிறகு 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி விடலாம்.
- மாறிவரும் காலநிலை மற்றும் பல காரணங்களால், சருமத்தின் ஈரப்பதம் குறைந்து சருமம் வறண்டு போகத் தொடங்குகிறது.
- உங்கள் உடல் எடைக்கு ஏற்றாற்போல் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது நல்லது.
கோடை வெயில் வாட்டி வதைக்க தொடங்கிவிட்டது. வெயிலினால் ஏற்படும் பாதிப்பு ஒருபுறம் என்றால்
மறுபக்கம் தூசி, அழுக்கு, மண் துகள்கள் போன்றவை உங்கள் தோலின் துளைகளில் குவிந்து நாளாக நாளாக உங்கள் சருமத்தை உயிரற்றதாக மாற்றிவிடுகிறது.
பொலிவிழந்த சருமத்தை மீட்டெடுப்பது எப்படி என்று தெரியாமல் பலர் சருமத்தை பளபளக்க வைக்க பல வகையான அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக பேஸ் மாஸ்க், கிரீம், ஸ்க்ரப், ஃபேஸ் வாஷ் போன்றவை. பளபளப்பான சருமத்தைப் பெற பெண்கள் நிறைய பணம் செலவழிக்கிறார்கள், அவர்களில் சிலர் மட்டுமே தெளிவாக சரியான தயாரிப்புகளை பயன்படுத்துகிறார்கள். மேலும் சிலர் சருமத்தை எப்படி பாதுகாத்துக்கொள்வது என்று அறியாதவர்களாக உள்ளனர். அவர்ளுக்கான பயனுள்ள பதிவுதான் இது. சுட்டெரிக்கும் கோடை வெயிலில் சருமத்தை எவ்வாறு பாதுகாத்துக்கொள்ளலாம் என்று பார்க்கலாம்...
Facewash மூலம் முகத்தை கழுவவும்
முதலில் உங்களது சருமத்திற்கு பொருத்தமான ஃபேஸ் வாஷைத் தேர்ந்தெடுத்து நம்பகமான பிராண்டைப் பயன்படுத்த தொடங்குங்கள். காலையில் சருமத்தைப் பொலிவாக்கவும், மாலையில் மாசு தொடர்பான அழுக்குகளை அகற்றவும் உங்கள் முகத்தை ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது கழுவுவது நல்லது. அதிக ஃபேஸ் வாஷ் பயன்படுத்த வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இல்லையெனில் தோல் வறண்டு போகலாம்.

Cleanser மூலம் சுத்தப்படுத்துதல்
தோல் பராமரிப்பு வழக்கத்தில் சுத்தப்படுத்துதல் ஒரு முக்கியமான படியாகும். ஒருவருடைய சருமத்தின் வகையைப் பொறுத்து நல்ல க்ளென்சரைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம். வெளியில் இருந்து வந்த பிறகு அல்லது இரவில் தூங்கும் முன், நீங்கள் தேர்ந்தெடுத்த க்ளென்சரைக் கொண்டு முகத்தை நன்றாக சுத்தம் செய்யவும். இது சருமத்தை ஆழமாக சுத்தப்படுத்துவதோடு, மேக்கப்பை அகற்றவும் உதவும்.
TONER முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்குகிறது
சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க, சுத்தம் செய்த பிறகு Toner-ஐ பயன்படுத்துவது அவசியம். Toner சருமத்தில் ஆழமாக ஊடுருவி, க்ளென்சரால் தவறவிட்ட மேக்கப் மற்றும் அசுத்தங்களை நீக்குகிறது. கூடுதலாக, Toner சருமத்தின் pH அளவை சமப்படுத்த உதவுகிறது மற்றும் குளிர்ச்சியை அளிக்கிறது. உங்கள் சருமத்திற்கு ஏற்ற Toner என்னவென்று தெரியவில்லை என்றால் தோல் மருத்துவருடன் கலந்தாலோசித்த பின் உங்களுக்கான பிராண்டை உபயோகிக்கலாம்.
முகத்தை ஈரப்பதமாக வைத்திருத்தல்...
மாறிவரும் காலநிலை மற்றும் பல காரணங்களால், சருமத்தின் ஈரப்பதம் குறைந்து சருமம் வறண்டு போகத் தொடங்குகிறது. அத்தகைய சூழ்நிலையில், சருமத்திற்கு ஈரப்பதம் தேவை. எனவே, நீங்கள் ஃபேஸ் வாஷ், ஸ்க்ரப்பிங் அல்லது முகத்தை சுத்தம் செய்யும் போதெல்லாம், மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள். உங்கள் வீட்டில் உள்ள தேன், தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் முதலானவற்றையும் மாய்ஸ்சரைசர்களாகப் பயன்படுத்தலாம்.
சன்ஸ்கிரீன் அவசியம்
கோடை வெயிலில் வெளியே செல்லும் போது சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளைத் தவிர்க்க, பகலில் வெளியே செல்லும் போதெல்லாம் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது அவசியம். சன்ஸ்கிரீன் கோடையில் மட்டுமே அவசியம் என்று சிலர் நம்பினாலும், மழை மற்றும் குளிர்காலத்தில் கூட உங்கள் சருமத்திற்கு தேவையானது தான். ஒரு சன்ஸ்கிரீனைத் தேர்ந்தெடுக்கும்போது, உங்கள் தோல் வகைக்கு பொருத்தமான SPF-ஐத் தீர்மானிக்க தோல் மருத்துவரை அணுகுவது முக்கியமானது.
நைட் கிரீம் பயன்படுத்துதல்
நைட் க்ரீம் தோல் பராமரிப்பு வழக்கத்தின் இன்றியமையாத பகுதியாகும், ஏனெனில் இது சருமத்திற்கு ஊட்டமளித்து ஈரப்பதமாக்குகிறது. மேக்கப்பை நீக்கிவிட்டு, இரவில் உங்கள் முகத்தைச் சுத்தப்படுத்திய பிறகு சருமம் வறண்டு போகும், எனவே நைட் க்ரீமைப் பயன்படுத்துவது சருமம் மென்மையாகவும் மிருதுவாகவும் இருக்க உதவுகிறது.
நைட் க்ரீமை சிறிதளவு எடுத்து மெதுவாக வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்வது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. மேலும் ஒட்டுமொத்த தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. உங்கள் சருமத்தின் வகைக்கு ஏற்ற நைட் க்ரீமைத் தேர்ந்தெடுத்து, ஆரோக்கியமான சருமத்தைப் பராமரிக்க ஒவ்வொரு இரவும் தூங்கும் முன் அதைத் தடவுவது முக்கியம்.

தண்ணீர் குடிக்கவும்
உங்கள் உடல் எடைக்கு ஏற்றாற்போல் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது நல்லது. இதன் மூலம் உடலில் உள்ள நச்சுகள் நீங்கி, செல் மீளுருவாக்கம் செய்வதன் மூலம் நமது சருமத்தின் தோற்றம் மேம்படும். தண்ணீர் குடிப்பது உங்களை எப்போதும் நீரேற்றமாக வைத்திருக்கும், இதனால் உங்கள் சருமம் சுத்தமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.
- தோசை மாவில் தேங்காய் பால் ஊற்றி தோசை செய்தால் மணம் அமோகமாக இருக்கும்.
- மிளகு ரசத்திற்கு குழைவாக வெந்திருக்கும் பட்டாணி நீரை சேர்த்தால் ரசம் சுவையாக இருக்கும்.
* அடை மாவு புளித்து விட்டால் இட்லி தட்டில் இட்லி போல் மாவை ஊற்றி 7 நிமிடம் வேக வைத்து பின்பு அதை உதிர்த்து கடுகு, மஞ்சள் தூள், கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, வெங்காயம் கறிவேப்பிலை தாளித்து சிறிது உப்பு போட்டு வாணலியில் வறுக்க சூப்பர் அடை காரபுட்டு ரெடி.
* பலகாரம் செய்ய எண்ணெயை கொதிக்க வைக்கும்போது சிறிது இஞ்சியை அம்மியில் அல்லது மிக்சியில் நசுக்கிப் போட்டு உபயோகித்தால் பலகாரம் அதிக எண்ணெய் குடிக்காது. பொங்கியும் வழியாது. எண்ணெய் புகையில் வாந்தி தலை, சுற்றல் வராது.
* வாழைக்காய், கோவைக்காய் போன்ற காய்கறிகளை சிறிய பாத்திரத்தில் போட்டு குக்கரில் வைத்து ஒரு விசில் சத்தம் வந்ததும் எடுத்து பொரியல் செய்தால் எண்ணெய் அதிகம் விட வேண்டாம்.
* தோசை மாவில் தேங்காய் பால் ஊற்றி தோசை செய்தால் மணம் அமோகமாக இருக்கும்.
* வாணலியில் ஒரு கரண்டி எண்ணெய் அல்லது நெய் ஊற்றி அது காய்ந்ததும் பஜ்ஜி செய்தால் வாசனையாக இருக்கும்.
* பிடி கொழுக்கட்டை செய்யும்போது கொதிக்கும் நீரில் கேரட், பீன்ஸ், பட்டாணி இவைகளையும் வேக வைத்து அரிசி மாவை சேர்த்து வெஜிடபிள் கொழுக்கட்டை செய்யலாம்.
* கோவைக்காயை கொதிநீரில் கொட்டி 5 நிமிடம் கழித்து வடிகட்டி உப்பு, பச்சை மிளகாய் அரைத்துப்போட்டு புளித்த தயிர் கடைந்து கிளறி ஒரு நாள் ஊறவைத்து காய போட்டால் கோவைக்காய் வற்றல் ரெடி.
* முருங்கை பூவை தேங்காய் எண்ணெயில் பொன்நிறமாக வறுத்து மோர் குழம்பில் போட்டு கொதி வந்தவுடன் இறக்கவும், வாசம் சூப்பராக இருக்கும்.
* மிளகு ரசத்திற்கு குழைவாக வெந்திருக்கும் பட்டாணி நீரை சேர்த்தால் ரசம் சுவையாக இருக்கும்.
* வெல்லம் சேர்த்து செய்யும் பொங்கல் பாயசத்திற்கு கொஞ்சம் வெல்லம் குறைவாகப் போட்டு கடைசியில் சர்க்கரையை கொஞ்சம் சேர்க்க சுவை கூடும்.
* கூட்டு, குழம்பு இவற்றிற்கு அரிசி மாவு கரைத்து விடுவதற்கு பதிலாக பொட்டுக்கடலை மாவு சேர்த்து விட்டால் சீக்கிரம் கெட்டுப்போகாது, கெட்டியாகவும் இருக்கும்.
- ஆரோக்கியமான மற்றும் சீரான உணவு உங்கள் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது.
- தூக்கம் என்பது அனைவருக்கும் மிகவும் இன்றியமையாதது.
ஒருவர் எப்போதும் ஆரோக்கியமாக இருப்பதற்கு நல்ல உணவு முறை, தூக்கம், மனநலம் ஆகிய இம்மூன்றும் மிகவும் முக்கியமானது.
இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் வாருங்கள்.
உணவு முறை

ஆரோக்கியமான மற்றும் சீரான உணவு உங்கள் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது.
உங்கள் உணவில் புதிய பருவகால பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், புரதங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளைச் சேர்த்துக்கொள்ளுங்கள்.
நொறுக்குத் தீனி மற்றும் சர்க்கரையைத் முழுமையாக தவிர்த்துவிட வேண்டும். எல்லாவற்றையும் விட முதன்மையானது எந்த வேலையாக இருந்தாலும் கொஞ்சம் நேரம் ஒதுக்கி போதுமான அளவு தண்ணீர் குடித்து, சரியான நேரத்தில் உணவு உண்ணுங்கள். இப்படி செய்தாலே ஆரோக்கியமாக இருக்கலாம்.
தூக்கம்

தூக்கம் என்பது அனைவருக்கும் மிகவும் இன்றியமையாதது. ஆனால், இன்றைய வாழ்க்கை முறையில் பகல் முழுவதும் அலுவலகத்தில் வேலை செய்துவிட்டு இரவு வெகுநேரம் வரை நண்பர்களுடன் நேரம் செலவிடுவது, அதிக நேரம் சமூக வலைதளத்தில் நேரத்தை செலவிடுவது போன்றவை போதிய தூக்கம் இல்லாமல் உடல் நலத்தை மோசமாக பாதிக்கிறது. இதன் காரணமாக இளைஞர்களிடையே தூக்கம் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகிறது.
நல்ல தூக்கம் என்பது நம் உடலையும் மூளையையும் புதுப்பிக்கிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. ஒவ்வொரு நாள் இரவும் 7- 8 மணிநேரம் நல்ல தூக்கத்தைப் பெற முயற்சி செய்யுங்கள். படுக்கைக்கு முன் திரை நேரத்தைக் குறைத்து, உறக்க அட்டவணையை அமைத்துக்கொள்ளுங்கள்.
மனநலம்

ஒருவருக்கு உடல் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமானதோ அதே அளவு மனநலமும் முக்கியமானது. பெரும்பாலான நேரங்களில் மக்கள் அதை புறக்கணிக்கின்றனர்.
மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வு போன்ற மன பிரச்னைகள் நம் வாழ்க்கையை பாதிக்கலாம். எனவே, மன ஆரோக்கியத்தை பராமரிக்க யோகா மற்றும் தியானம் முதலானவற்றை செய்ய வேண்டும்.
சமூக உறவுகளை உருவாக்கி உங்கள் உணர்வுகளை வெளிப்படையாக வெளிப்படுத்துங்கள். உங்களுக்கு ஏதேனும் மனநலப் பிரச்னை இருப்பதாக உணர்ந்தால், தேவைப்பட்டால் உடனடியாக மனநல நிபுணரை அணுகவும்.
- வேர்க்கடலை 'ஏழைகளின் பாதாம்' என்று அழைக்கப்படுகிறது.
- வேர்க்கடலையில் உள்ள புரதம், தசைகளின் வளர்ச்சி மற்றும் உறுதிக்கும் உதவி புரிகிறது.
வேர்க்கடலையில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் இருப்பதால் இது, 'ஏழைகளின் பாதாம்' என்று அழைக்கப்படுகிறது.
100 கிராம் வேர்க்கடலையில் கிட்டத்தட்ட 567 கலோரிகள், 25 கிராம் புரதம், 16 கிராம் கார்போஹைட்ரேட், 8 கிராம் நார்ச்சத்து, 49 கிராம் கொழுப்பு மற்றும் 15 கிராம் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. மேலும் இதில் வைட்டமின்கள் பி1, பி3, பி7, பி9, ஈ போன்றவையும், காப்பர், பாஸ்பரஸ், மெக்னீசியம், கால்சியம், பொட்டாசியம் போன்ற தாதுக்களும் உள்ளன.
வேர்க்கடலையில் அதிகமான அளவு அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ள ரெஸ்வெராட்ரோல், ஐசோபிள வினாய்ட்ஸ், பைடிக்ஆசிட், பைட் டோஸ்டீராய்ட்ஸ் போன்ற ஆண்டி ஆக்சிடன்டுகள் உள்ளன.
வேர்க்கடலை 14 என்ற மிக குறைந்த அளவு கிளைசெமிக் இன்டெக்ஸ் கொண்டிருந்தாலும் இதில் இருக்கும் அதிக அளவு கொழுப்பு மற்றும் கலோரிகளால் இதனை மிக குறைந்த அளவே சர்க்கரை நோயாளிகள் உட்கொள்ள வேண்டும்.
வேர்க்கடலையில் இருக்கக்கூடிய அதிகமான அளவு நார்ச்சத்து செரிமானத்தை தாமதப்படுத்தி உணவு உட்கொண்ட பிறகு உடனே ஏற்படும் குளுக்கோஸ் ஸ்பைக்ஸ் வராமல் தடுக்கிறது.
இதில் உள்ள கால்சியம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் உடலில் கெட்ட கொலஸ்ட் ரால் அளவு மற்றும் ரத்த அழுத்தத்தை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும் இதில் இருக்கும் மெக்னீசியம் இன்சுலின் சுரப்பதை துரிதப்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
வேர்க்கடலையில் உள்ள புரதம், தசைகளின் வளர்ச்சி மற்றும் உறுதிக்கும் உதவி புரிகிறது. வைட்டமின் பி3, பி9 அறிவாற்றல் செயல்பாட்டிற்கு ஒரு முக்கிய பங்காற்றுகிறது. இதிலுள்ள ரெஸ்வெராட்ரோல் போன்ற பயோ ஆக்டிவ் சேர்மங்கள் முதுமை தோற்றத்தை தடுக்கிறது.
வேர்க்கடலையை வேகவைத்த வடிவில் சாப்பிடுவதே அதிக பயன்கள் தரும். வறுத்த வேர்க்கடலையை விட வேகவைத்த வேர்க்கடலையில் 4 மடங்கு அதிகமான அளவு ஆன்டிஆக்ஸி டன்ட்கள் இருப்பதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
வேர்க்கடலை ஒவ்வாமை உள்ளவர்கள் எக்காரணம் கொண்டும் எந்த வடிவிலும் அதனை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். வேர்க்கடலை பருப்பில் உள்ள தோலில் சத்துக்கள் அதிகம் உள்ள தால் அதனை நீக்காமல் சாப்பிட வேண்டும்.
அஜீரணம் ஏற்படுத்துவதால் பச்சையாக வேர்க்கடலை சாப்பிடுவதை தவிர்க்கலாம். வேர்க்கடலையை உப்பிட்டோ, மசாலாவுடன் சேர்த்தோ அல்லது பொரித்த வடிவிலோ சாப்பிடுவதை விட வேகவைத்து சாப்பிடுவது நல்லது.






