என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேர்க்கடலை"

    • வேர்க்கடலை 'ஏழைகளின் பாதாம்' என்று அழைக்கப்படுகிறது.
    • வேர்க்கடலையில் உள்ள புரதம், தசைகளின் வளர்ச்சி மற்றும் உறுதிக்கும் உதவி புரிகிறது.

    வேர்க்கடலையில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் இருப்பதால் இது, 'ஏழைகளின் பாதாம்' என்று அழைக்கப்படுகிறது.

    100 கிராம் வேர்க்கடலையில் கிட்டத்தட்ட 567 கலோரிகள், 25 கிராம் புரதம், 16 கிராம் கார்போஹைட்ரேட், 8 கிராம் நார்ச்சத்து, 49 கிராம் கொழுப்பு மற்றும் 15 கிராம் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. மேலும் இதில் வைட்டமின்கள் பி1, பி3, பி7, பி9, ஈ போன்றவையும், காப்பர், பாஸ்பரஸ், மெக்னீசியம், கால்சியம், பொட்டாசியம் போன்ற தாதுக்களும் உள்ளன.

    வேர்க்கடலையில் அதிகமான அளவு அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ள ரெஸ்வெராட்ரோல், ஐசோபிள வினாய்ட்ஸ், பைடிக்ஆசிட், பைட் டோஸ்டீராய்ட்ஸ் போன்ற ஆண்டி ஆக்சிடன்டுகள் உள்ளன.

    வேர்க்கடலை 14 என்ற மிக குறைந்த அளவு கிளைசெமிக் இன்டெக்ஸ் கொண்டிருந்தாலும் இதில் இருக்கும் அதிக அளவு கொழுப்பு மற்றும் கலோரிகளால் இதனை மிக குறைந்த அளவே சர்க்கரை நோயாளிகள் உட்கொள்ள வேண்டும்.

    வேர்க்கடலையில் இருக்கக்கூடிய அதிகமான அளவு நார்ச்சத்து செரிமானத்தை தாமதப்படுத்தி உணவு உட்கொண்ட பிறகு உடனே ஏற்படும் குளுக்கோஸ் ஸ்பைக்ஸ் வராமல் தடுக்கிறது.

    இதில் உள்ள கால்சியம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் உடலில் கெட்ட கொலஸ்ட் ரால் அளவு மற்றும் ரத்த அழுத்தத்தை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும் இதில் இருக்கும் மெக்னீசியம் இன்சுலின் சுரப்பதை துரிதப்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    வேர்க்கடலையில் உள்ள புரதம், தசைகளின் வளர்ச்சி மற்றும் உறுதிக்கும் உதவி புரிகிறது. வைட்டமின் பி3, பி9 அறிவாற்றல் செயல்பாட்டிற்கு ஒரு முக்கிய பங்காற்றுகிறது. இதிலுள்ள ரெஸ்வெராட்ரோல் போன்ற பயோ ஆக்டிவ் சேர்மங்கள் முதுமை தோற்றத்தை தடுக்கிறது.

    வேர்க்கடலையை வேகவைத்த வடிவில் சாப்பிடுவதே அதிக பயன்கள் தரும். வறுத்த வேர்க்கடலையை விட வேகவைத்த வேர்க்கடலையில் 4 மடங்கு அதிகமான அளவு ஆன்டிஆக்ஸி டன்ட்கள் இருப்பதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

    வேர்க்கடலை ஒவ்வாமை உள்ளவர்கள் எக்காரணம் கொண்டும் எந்த வடிவிலும் அதனை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். வேர்க்கடலை பருப்பில் உள்ள தோலில் சத்துக்கள் அதிகம் உள்ள தால் அதனை நீக்காமல் சாப்பிட வேண்டும்.

    அஜீரணம் ஏற்படுத்துவதால் பச்சையாக வேர்க்கடலை சாப்பிடுவதை தவிர்க்கலாம். வேர்க்கடலையை உப்பிட்டோ, மசாலாவுடன் சேர்த்தோ அல்லது பொரித்த வடிவிலோ சாப்பிடுவதை விட வேகவைத்து சாப்பிடுவது நல்லது.

    • சுத்தம் செய்து வைத்துள்ள இறாலை சேர்ந்து நன்கு வதக்கவும்.
    • பிரிஞ்சி இலையுடன் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    தேவையான பொருட்கள்:

    இறால்கள் - 1/4 கிலோ

    சின்ன வெங்காயம் - 5 முதல் 6 எண்

    வேர்க் கடலை - 50 கிராம்

    முந்திரி - 7

    பிரிஞ்சி இலைகள் - 2

    கிராம்பு - 2

    இலவங்கப்பட்டை குச்சி - 1 அங்குலம்

    பச்சை ஏலக்காய் - 2

    எண்ணெய் - தேவையான அளவு

    கொத்தமல்லி - தேவையான அளவு

    உப்பு - 2 பின்ச்

    செய்முறை:

    வேர்க்கடலையை சிறிது நேரம் (20 நிமிடம்) ஊறவைத்து பின்னர் அதை ஒரு மிக்ஸர் சாரில் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு விழுதாக அறைத்து எடுத்தக் கொள்ளவும்.

    ஒரு வாணலியில் சிறிது எண்ணெயை ஊற்றி சூடானதும், இலவங்கப்ட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரிஞ்சி இலையுடன் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    பின்னர் முந்திரியை சேர்க்கவும், பின்னர் சுத்தம் செய்து வைத்துள்ள இறாலை சேர்ந்து நன்கு வதக்கவும்.

    இறால் நன்றாக வெந்தவுடன் அறைத்து வைத்துள்ள வேர்க்கடலை விழுதை அதனுடன் சேர்ந்து 5 நிமிடம் கிளறவும்.

    இறுதியாக கொத்தமல்லி சேர்ந்து பரிமாறவும்.

    ×