என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "படிக்கும் காலம்"

    • படிக்கும்போது நாம் உட்காரும் முறை தான் தூக்கத்தை வரவழைக்கிறது.
    • ஒரே இடத்தில் தொடர்ந்து இருக்கிறபோது தசைகளுக்கு செல்கின்ற ரத்த ஓட்டம் தடைபடுகிறது.

    குழந்தைகளே... புத்தகத்தை கையில் எடுத்து உட்கார்ந்தாலே தூக்கம் வருகிறதா? இது நமக்கு மட்டும்தான் நடக்குதா? இல்லை எல்லோருக்கும் நடக்குதா? என்று தோன்றுகிறதா?

    இது அனைவருக்கும் நடக்கிற ஒரு செயல் தான். அது ஏன் நடக்கிறது என்கிற காரணத்தை அறிந்து கொள்வோம்!

    படிக்கும்போது நாம் உட்காரும் முறை தான் தூக்கத்தை வரவழைக்கிறது. அசையாமல் அப்படியே ஒரே இடத்தில் அமர்ந்துவிடக்கூடாது. இப்படி ஒரே இடத்தில் தொடர்ந்து இருக்கிறபோது தசைகளுக்கு செல்கின்ற ரத்த ஓட்டம் தடைபடுகிறது. தேவையான ரத்தம் கிடைக்காததால் ரத்தத்தை கொண்டு வருகிற ஆக்சிஜனும் கிடைக்காமல் போகிறது. அதனால் தசைக்கலங்கள் காற்றில்லாத சுவாசத்தை தொடர்கிறது.

    ஆக்சிஜன் இல்லாத சுவாசத்தின்போது தசைக்கலங்களில் உள்ள சேமிப்பு உணவு அரைகுறையாக எரிக்கப்படுகிறது. அதனால் லாக்டிக் அமிலம் உருவாகிறது. இந்த அமிலம் ரத்தத்தில் கலந்து அதில் உள்ள ஆக்சிஜனுடன் வினை புரிகிறது. அப்போது மூளைக்குச்செல்ல வேண்டிய ஆக்சிஜன் கிடைக்காமல் போகிறது. அதனால் மூளை களைப்பாகி தூங்கி விடுகிறது. எனவே படிக்கிறபோது ஒரு இடத்தில் இருந்துவிடாமல் அவ்வப்போது எழுந்து நடப்பது, சிறிய இடைவெளி எடுப்பது போன்ற செயல்களை செய்ய வேண்டும்.

    • போதைப்பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
    • குழந்தைகளை நன்றாக படிக்க வைத்து, வாழ்க்கையில் முன்னேற பெற்றோர் அரும்பாடுபடுகின்றனர்.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் முழுவதும் போலீசார் பள்ளி, கல்லூரிகளுக்கு நேரடியாகச்சென்று அங்கு மாணவ, மாணவிகளிடையே போதைப்பொருள் பயன்பாடு மற்றும் அதன் பின்விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.அவ்வகையில் உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. உடுமலை கல்வி மாவட்ட அலுவலர் பழனிசாமி, தலைமை வகித்தார்.கோவை சரக டி.ஐ.ஜி., முத்துசாமி பேசியதாவது:-

    குழந்தைகளை நன்றாக படிக்க வைத்து, அவர்கள் வாழ்க்கையில் முன்னேற பெற்றோர் அரும்பாடுபடுகின்றனர்.ஆனால் பெற்றோர்களின் உழைப்பை சிதைக்கும் வகையில் சமூக விரோத நட்புகள் வாயிலாக போதைக்கு அடிமையாகி இளைஞர்கள் சிலர், தவறான பாதைக்குச்செல்கின்றனர்.போதைக்கு அடிமையாகும் இளைஞர்கள் தங்களது வாழ்க்கையை இழந்து வருகின்றனர்.

    சமீபகாலமாக இளைஞர்களிடம் கஞ்சா பயன்பாடு அதிகரித்துள்ளது.இத்தகைய போதைப்பொருட்களை உட்கொள்வதால் உடல் பலவீனம் அடைந்து பசியின்மை ஏற்படுவதுடன் எந்தவொரு பணியையும் செய்ய முடியாது. ஞாபக மறதி அதிகரிக்கும்.படிக்கும் காலத்தில் நல்ல நண்பர்களைத்தேர்ந்தெடுங்கள். போதைப்பொருட்கள் பயன்பாட்டை தடுக்க அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு வருகின்றனர். இளைஞர்கள் எச்சரிக்கையாக செயல்பட்டு வாழ்க்கையில் முன்னேற்றம் காண வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

    ×