என் மலர்
நீங்கள் தேடியது "glasses"
- பரந்த நெற்றி, எலும்பு தெரியும்படியான கன்னம் ஆகியவையே சதுர வடிவ முக அமைப்புக்கான முக்கிய அம்சம்.
- நீள்வட்ட முகம் கொண்ட ஒருவருக்கு பொருந்தும் ஒரு கண்ணாடி, மற்றொரு நீள்வட்ட முகம் உள்ள நபருக்குப் பொருந்தாது.
மூக்குக் கண்ணாடி தேர்ந்தெடுக்கும்போது அணிந்து பார்த்து, நீண்ட நேர முயற்சிக்குப் பின் நமக்குப் பிடித்ததை அணிவோம். எனினும், அந்த கண்ணாடி நம் முகத்துக்கு ஒத்துப்போகாமல் காட்சியளிக்கும்போது நேரம் மற்றும் முயற்சி வீணாகும். முக அமைப்புக்கேற்ற மூக்குக் கண்ணாடியை எப்படி தேர்ந்தெடுப்பது என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
அளவு
தலையை நேராக உயர்த்தி, ஒரு ஏ.டி.எம். கார்டின் பக்கவாட்டுப் பகுதியை கண்களுக்குக் கீழ், மூக்கின் நடுப்பகுதியில் இருக்கும்படி வைக்கவும். ஏ.டி.எம். கார்டு முழுவதுமாக உங்கள் கண்ணுக்குள் மறைந்தால் உங்கள் கண்ணாடியின் அளவு 'எல்', கார்டும் கண் அளவும் சரிசமமாக இருந்தால் கண்ணாடி அளவு 'எம்', கார்டை விட கண் அளவு சிறிதாக இருந்தால் கண்ணாடி அளவு 'எஸ்' ஆகும்.
சதுர முக அமைப்பு
பரந்த நெற்றி, எலும்பு தெரியும்படியான கன்னம் ஆகியவையே சதுர வடிவ முக அமைப்புக்கான முக்கிய அம்சம். இவ்வித அமைப்பு உள்ளவர்கள் வட்ட வடிவம் அல்லது 'டி' வடிவ கண்ணாடி பயன்படுத்தினால், முக அமைப்பு மென்மையாக காட்சியளிக்கும். மேலும், ஏவியேட்டர் வகை கண்ணாடிகள் கன்னத்தில் உள்ள சதை மற்றும் எலும்புகளை சமப்படுத்த உதவும். முக அமைப்பை சிறிதாகக் காட்ட 'ஓவல்' வடிவ கண்ணாடிகளையும் தேர்ந்தெடுக்கலாம். இவர்கள் கூர்மையான மூலைகளைக் கொண்ட சதுர கண்ணாடிகளைத் தவிர்ப்பது நல்லது.
வட்ட வடிவ முக அமைப்புக்கு..
பரந்த கன்ன எலும்புகள், சதைப்பிடிப்பான கன்னம் மற்றும் சற்று குறுகிய நெற்றி வட்ட முக அமைப்பாக வகைப்படுத்தப்படுகிறது. இவர்கள், வட்ட வடிவக் கண்ணாடிகளைத் தவிர்ப்பது சிறந்தது. மாறாக, 'கிளாசிக் ரெட்ரோ ஸ்டைல் வைபெரர்கள்' அல்லது நீள் செவ்வக வடிவ கண்ணாடிகளை முயற்சிக்கலாம். இவை வட்ட முக வடிவத்திற்கு அற்புதமாகப் பொருந்தும்.
நீள்வட்ட வடிவ முக அமைப்புக்கு...
நீள்வட்ட முகம் கொண்ட ஒருவருக்கு பொருந்தும் ஒரு கண்ணாடி, மற்றொரு நீள்வட்ட முகம் உள்ள நபருக்குப் பொருந்தாது. எனவே கண்ணாடியைத் தேர்ந்தெடுக்கும்போது கவனத்துடன் இருக்க வேண்டும். சதுரம் மற்றும் செவ்வக பிரேம்கள் நீள்வட்ட வடிவ முக அம்சங்களை மெருகூட்டி காட்டும். ஆகையால், பெரிய சதுர கண்ணாடிகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது.
இதய வடிவ முக அமைப்பினருக்கு..
கிளாசிக் 'ஏவியேட்டர்' கண்ணாடிகள் இதய வடிவ முக அமைப்பினருக்கு கச்சிதமாக பொருந்தும். உங்கள் முக வடிவத்தை இன்னும் மெருகேற்ற 'ரிம்லெஸ்' கண்ணாடிகளையும் அணியலாம். இந்த வகை கண்ணாடிகள் அணிய எளிதாக இருக்கும். அதேசமயம் அழகாகவும் காட்சியளிக்கும். மூக்குப் பட்டைகள் கொண்ட உலோக பிரேம்கள் மற்றும் மெல்லிய பிரேம் கண்ணாடிகளைத் தேர்வு செய்து பயன்படுத்தலாம். பிளாஸ்டிக் பிரேம்கள் உங்கள் முகத்தின் வசீகரத்தை அதிகரிக்கும். எந்த வகை பிரேமாக இருந்தாலும், லென்ஸின் அடிப்பகுதி அகலமாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
- புறஊதாக் கதிர் பாதுகாப்பு சன்கிளாஸ்களை பயன்படுத்த வேண்டும்.
- கண்களை கைகளை கொண்டு அழுந்த தேய்க்கக் கூடாது.
தற்போது பலரும் கணினியில் நீண்டநேரம் வேலை பார்க்கிறார்கள். அவர்கள் தங்கள் கண் நலத்தில் கவனம் வைக்க வேண்டும். அதற்காக அவர்கள் எதிலெல்லாம் அக்கறையாக இருக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.
போதுமான அளவு தூக்கம்:
கண் ஆரோக்கியத்துக்கு போதுமான அளவு தூக்கம் மிகவும் அவசியமானது. தினமும் 7 முதல் 8 மணிநேரம் தூங்க வேண்டு. நாம் விழித்திருக்கும் போது கண்களும் தொடர்ந்து சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருப்பதால் அவற்றுக்கு ஓய்வு கொடுப்பது அவசியமாகிறது.
போதுமான தூக்கம் இல்லாதது, கண் சோர்வுக்கு வழிவகுக்கும். சோர்வான கண்களுக்கான அறிகுறிகள் கண் எரிச்சல், கவனம் செலுத்துவதில் சிரமம், கண்களில் வறட்சி அல்லது அதிகப்படியான கண்ணீர் வடிதல், மங்கலான பார்வை, ஒளி உணர்திறன் மற்றும் அதிகபட்சமாக கழுத்து மற்றும் தோள்களில் வலி ஆகியவை ஆகும்.
பாதுகாப்பு கண்ணாடிகள்:
நீங்கள் வெயிலில் அடியெடுத்து வைக்கும் போதெல்லாம் புறஊதாக் கதிர் பாதுகாப்பு சன்கிளாஸ்களை பயன்படுத்த வேண்டும். அதேநேரம் நீங்கள் பயன்படுத்தும் சன்கிளாசின் லென்சுகள் 99 முதல் 100 சதவீதம், புற ஊதா ஏ, புற ஊதா பி கதிர்களை தடுக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம்.

கைகளால் கண்களை தேய்க்காதீர்கள்:
கண்களை கைகளை கொண்டு அழுந்த தேய்க்கக் கூடாது. அதனால், உங்கள் கைகளில் இருக்கும் அழுக்கு, பாக்டீரியா போன்றவை கண்களில் சென்று தொற்றை ஏற்படுத்தலாம். மேலும் கண்பார்வை குறைபாட்டுக்கு கான்டாக்ட் லென்ஸ் அணிந்திருந்தால், கைகளால் அழுந்த தேய்க்கும்போது அது சேதம் அடையும் வாய்ப்புள்ளது.
வெளியே சென்றுவிட்டு வந்ததும் முகம், கை, கால்களை சுத்தம் செய்ய வேண்டும். முகத்தில் படிந்திருக்கும் அழுக்கு, தூசி, துகள் போன்றவை கண்களில் படுவதற்கு முன்னர் கழுவிவிட வேண்டும். இதன்மூலம் உங்கள் கண்களை பாதுகாக்கலாம்.
நீரேற்றம், உணவுமுறை:
உடலில் நீரிழப்பு இருக்கும் போது உடல் வறட்சி ஏற்பட்டு கண்களை சுற்றி கருவளையம் ஏற்படக்கூடும். குறிப்பாக ஒமேகா 3 நிரம்பிய மீன் அல்லது மீன் எண்ணெய் மாத்திரைகளை உட்கொள்வதால் கண்களை பாதிக்கும் மாகுலர் சிதைவை தடுக்கலாம்.
கணினி பார்க்கும் சரியான முறை:
கணினி அல்லது மடிக்கணினி திரை. உங்கள் கண்களில் இருந்து உங்கள் கையின் நீளம் உள்ள தூரத்தில் வைக்கப்பட வேண்டும். மேலும் கண் மட்டத்தில் இருந்து 20 டிகிரி கீழே இருக்க வேண்டும். கணினியில் நீங்கள் பணிபுரியும்போது, உங்கள் அறையில் போதுமான வெளிச்சம் இருப்பதை உறுதிசெய்ய வும். அதேநேரம், அதிக பிரகாசமான விளக்குகள் உங்கள் கண்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதை நினை வில் கொள்ளுங்கள்.
கண்களின் பாதிப்பை தடுக்கும் விதிமுறை:
கணினியில் பணிபுரியும்போது ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் எழுந்து சில அடிகள் நடக்க வேண்டும். திரையில் இருந்து விலகிச் செல்வது உங்கள் கண்களுக்கு ஓய்வு தருவதோடு, உங்கள் உடலின் தோரணையையும் மேம்படுத்தும்.
இவை எல்லாவற்றுடன், குறிப்பிட்ட கால இடைவெளியில் கண் மருத்துவரிடம் கண்களைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.






