என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    ஆயுள் காப்பீடு எடுத்தால் ஆயுள் குறையும் என்கிற மூடநம்பிக்கை இப்போதும் மக்களிடையே இருக்கத்தான் செய்கிறது.காப்பீடு குறித்து தெரியாத காலத்தில் உருவான கருத்தை இப்போதும் நம்புகிறவர்கள் உள்ளனர்.
    நகர்ப்புறங்களில் மட்டுமே இருக்கும் காப்பீடு குறித்த விழிப்புணர்வு, கிராமப்புறங்களுக்கு இன்னும் பெரிய அளவில் போய்ச் சேரவில்லை. இதற்கு காரணம் நமது மக்களிடம் இருக்கும் மனத்தடைகள்தான். 130 கோடி மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் காப்பீடு எடுத்துள்ளவர்கள் வெறும் 35 கோடி பேர்தான் என்கிறது, புள்ளிவிவரம்.

    ஆயுள் காப்பீடு எடுத்தால் ஆயுள் குறையும் என்கிற மூடநம்பிக்கை இப்போதும் மக்களிடையே இருக்கத்தான் செய்கிறது. அதாவது, இறப்பை எதிர்பார்த்து காப்பீடு எடுக்கப்படுகிறது என்கிற தவறான புரிதல் இன்னும் மாறவில்லை என்றே சொல்ல வேண்டும். காப்பீடு குறித்து தெரியாத காலத்தில் உருவான கருத்தை இப்போதும் நம்புகிறவர்கள் உள்ளனர்.

    ஏற்கனவே காப்பீடு பாலிசி எடுத்துள்ளவர்கள் நிலை என்னவாக இருக்கிறது? எத்தனை பேர் அதன் பலனை முழுமையாக அனுபவிக்கிறார்கள்? என்கிற விவரங்களைப் பார்க்கிறபோது அதுவும் எதிர்மறையாகத்தான் இருக்கிறது. ஏதாவது ஒரு காரணத்தை வைத்து பலரும் பாலிசியை தொடராமல் விட்டு விடுகின்றனர்.

    பொதுவாக வீட்டில் இருந்து வெளியே கிளம்புகிறோம் என்றால் யாருக்கு என்ன நடக்கும் என்பது நம் கையில் இல்லை என்பதுதான் இன்றைய எதார்த்தம். இந்த நிலையில் வீட்டில் வருமானம் ஈட்டுபவருக்கு எடுக்கப்படும் ஆயுள் காப்பீடு பாலிசிகள்தான் அவருக்கு பிறகு அவருடைய குடும்பத்தை காப்பாற்றும் ஆதார சக்தியாக இருக்க முடியும்.

    இப்போதைய நமது வருமானத்தைபோல, நமக்கு பிறகு நமது குடும்பத்துக்கு கிடைக்க வேண்டும் என்கிற புரிதலோடு காப்பீடு கவரேஜ் தொகை இருக்க வேண்டும். அதாவது நமக்கு பிறகு கிடைக்கும் காப்பீடு தொகையை கொண்டு நமது குடும்பம் இதே வாழ்க்கைத் தரத்தோடு வாழ வேண்டும். இதற்கு தற்போதைய ஆண்டு வருமானத்தைபோல 10 முதல் 15 மடங்கு தொகைக்கு காப்பீடு பாலிசி இருக்க வேண்டும்.

    இந்தியாவில் ஆயுள் காப்பீடு பாலிசிகளை 24 நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. பொதுக் காப்பீடு பாலிசிகளை 28 நிறுவனங்கள் வழங்குகின்றன. இவற்றை ஐ.ஆர்.டி.ஏ. என்கிற காப்பீடு நிறுவனங்களின் கட்டுப்பாட்டு அமைப்பு முறைப்படுத்தி கண்காணித்து வருகிறது. உலக அளவில் நமது கட்டுப்பாட்டு அமைப்பு வலுவானதாக உள்ளதால் காப்பீடு நிறுவனங்களும் முறையாக செயல்பட்டு வருகின்றன. தற்போது செயல்பட்டு வரும் காப்பீடு நிறுவனங்கள் மேற்கொண்டு செயல்பட முடியாத நிலை ஏற்படும் என்றால் ஐ.ஆர்.டி.ஏ. தலையிட்டு காப்பீடுதாரர்களை பாதுகாக்கும் விதத்தில் நமது கட்டுப்பாட்டு அமைப்பு வலுவானது.
    கருப்பு பூஞ்சை நோய் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவாது என்றும், இந்த நோயின் அறிகுறிகள், பாதிப்புகள் குறித்தும் கண் மருத்துவ நிபுணர் டாக்டர் எஸ்.ராமகிருஷ்ணன் விளக்கம் அளித்தார்.
    சென்னை ;

    கொரோனா நோய்த் தொற்று பாதிப்பில் மக்கள் தத்தளித்து கொண்டு இருக்கும் நேரத்தில், தற்போது கருப்பு பூஞ்சை நோயின் தாக்கம் குறித்த தகவல் மக்களிடையே ஒருவிதமான அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்த நோயின் அறிகுறிகள், பாதிப்புகள், அதன் தன்மைகள் குறித்து சென்னை வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனையின் கண் மருத்துவ நிபுணர் டாக்டர் எஸ்.ராமகிருஷ்ணனிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- இதுவரையில் கேள்விப்படாத நோயாக கருப்பு பூஞ்சை என்ற ஒரு நோய் இப்போது திடீரென தமிழ்நாட்டில் தாக்க தொடங்கி இருக்கிறதே? கருப்பு பூஞ்சை (மியூகோர்மைகோசிஸ்) என்றால் என்ன?

    பதில்:- கேள்விப்படாத நோய் இல்லை. இது பல காலமாகவே இருந்து வருகிறது. மண், அழுகிப்போன மரம், இலைகள் ஆகியவற்றில் இது இருக்கும். காற்றில் பறந்து வந்து, வெட்டுக்காயங்கள் வழியாகவும், மூக்கு துவாரங்கள் மூலமாகவும் உடலை தாக்கும். இது பெயருக்கு தான் கருப்பு பூஞ்சை. உண்மையில் இதன் நிறம் வெள்ளையாகத் தான் இருக்கும். உடல் பகுதியில் ஒரு இடத்தை தாக்கி, அதனை அழுகும் நிலைக்கு கொண்டு சென்று, அந்த பகுதியில் கருப்பாக மாறிவிடும். அதனால்தான் இதற்கு கருப்பு பூஞ்சை என்று பெயர்.

    கேள்வி:- கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்கள், ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்களே? அப்படியானால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நோயினால் அபாயம் அதிகமாக இருக்குமா?

    பதில்:- தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில், பலர் நோய் எதிர்ப்பு சக்தியை இழந்து இருப்பார்கள். இந்த கருப்பு பூஞ்சை நோய், நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களைத்தான் தாக்குகிறது. அந்த வகையில் பார்க்கும்போது, தமிழகத்தில் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். எனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு நீண்டநாள் சிகிச்சையில் இருந்தவர்கள் 2 முதல் 3 மாதங்கள் வரை பாதுகாப்பாக இருப்பது நல்லது. இந்த நோய் வயது வித்தியாசம் பார்ப்பது இல்லை. அனைத்து தரப்பினரும் இதனால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

    கேள்வி:- இந்த நோய்க்கான அறிகுறிகளாக என்ன வரும்?

    பதில்:- தொண்டையில் கெட்டிச்சளி, மூக்கடைப்பு, தலைவலி என ஆரம்பகட்ட அறிகுறியாக இருக்கும். அதன்பிறகும் கவனிக்காமல் விட்டால், கண் பகுதியை பாதித்து, முதலில் இமை பகுதியை தாக்கி, கண் சிவந்து அல்லது வீக்கத்துடன் இருப்பது, இரட்டை பார்வையாக தெரிவது போன்ற அறிகுறிகள் இருக்கும். அதன் பின்னர் பார்வை நரம்புகளை அழுகச் செய்யும். இதனால் பார்வையிழப்பு ஏற்படும். அதனைத் தொடர்ந்து 2 அல்லது 3 நாட்களில் மூளைப்பகுதிகளை தாக்கி, மூளைக்காய்ச்சல் நோயினால் மரணத்தை கூட சந்திக்க நேரிடும்.

    கேள்வி:- இந்த நோயினால் யாருக்கு அதிக பாதிப்பு ஏற்படும்?

    பதில்:- நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள், ஸ்டீராய்டு மருந்து தொடர்ச்சியாக எடுப்பவர்கள், வயதானவர்கள், நீரிழிவு நோய் பாதிப்பு அதிகளவில் இருப்பவர்களுக்கு இந்த பாதிப்பு அதிகளவில் இருக்கக்கூடும். எனவே அவர்கள் தங்களை கவனமாகவும், பாதுகாப்பாகவும் பார்த்து கொள்ள வேண்டும்.

    கண் மருத்துவ நிபுணர் டாக்டர் எஸ்.ராமகிருஷ்ணன்

    கேள்வி:- இதனை தடுப்பதற்கு ஏதாவது வழிகள் இருக்கிறதா?. கட்டுப்படுத்த என்ன நடவடிக்கைகள் எடுக்கலாம்?

    பதில்:- வீட்டைச்சுற்றி இருக்கும் சுற்றுப்புற வளாகப் பகுதிகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். 3 மாதம் வரை வெளியில் செல்லாமல் வீட்டில் இருந்தாலே போதும். கொரோனாவில் இருந்து பாதுகாக்க நாம் எப்படி முககவசத்தை அணிகிறோமோ?. அதேபோல், இதற்கும் முககவசத்தை அணிவது அவசியம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய உணவு வகைகளை அதிகளவில் எடுத்து கொள்வதன் மூலம் இந்த நோயை கட்டுப்படுத்த முடியும்.

    கேள்வி:- கருப்பு பூஞ்சை நோய் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுமா?

    பதில்:- இந்த நோய் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவாது. ஏற்கனவே சொன்னது போல, மண், அழுகிப்போன மரங்கள், இலைகள் ஆகியவற்றில் இருந்து காற்றின் மூலம் தான் பரவுகிறது.

    கேள்வி:- இதற்கு என்ன சிகிச்சை வழிமுறைகள் இருக்கிறது?

    பதில்:- மூக்கடைப்பு, தொண்டையில் கெட்டிச்சளி போன்ற ஆரம்ப அறிகுறி வந்ததும், ‘பயாப்சி' சோதனை செய்து, கருப்பு பூஞ்சை பாதிப்பா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு அதனை உறுதி செய்துவிட்டால், ஊசி, மருந்து மூலமாகத் தான் சரிசெய்ய முடியும். அதிலும் கருப்பு பூஞ்சை ஒரு இடத்தில் பாதிப்பை ஏற்படுத்திவிட்டால், அந்த பகுதியை அறுவை சிகிச்சை மூலமாகவே அகற்ற முடியும்.

    கேள்வி:- கொரோனாவை போல் இதுவும் பரவத் தொடங்கிவிடுமோ?

    பதில்:- கொரோனாவை போல், பரவுவதற்கான வாய்ப்பு இல்லை.

    கேள்வி:- இந்த நோய்க்கு கண் டாக்டர் மட்டுமே சிகிச்சை அளிக்க முடியுமா? பொது மருத்துவர்களும் சிகிச்சை அளிக்கலாமா?

    பதில்:- காது, மூக்கு, தொண்டை (இ.என்.டி.) நிபுணர்கள், கண் டாக்டர்கள், நரம்பியல் டாக்டர்கள் மற்றும் பொது டாக்டர்களை அணுகி சிகிச்சை பெறலாம்.

    இவ்வாறு அவர் பதிலளித்தார்.
    திருமணமான ஜோடிகள் தாய்மைக்கு தயாராகுவதற்கு முன்னால் 14 கேள்விகளுக்கு விடைகாணவேண்டும். இந்த கேள்விகள் அனைத்தும் பெண்ணுக்குரியவை. அவை:
    கொரோனா காலகட்டத்தில் புதுமண தம்பதிகளிடம் மாறுபட்ட சிந்தனை உருவாகியிருக்கிறது. முன்பு திருமணமானதும் ஜோடிகள் தாய்மையடைவதை பற்றி சிந்திப்பதில்லை. கருத்தடை முறைகளை கடைப்பிடித்தபடி தங்களது பணியை வலுப்படுத்திக் கொள்வதற்கும், தங்களது பொருளாதார நிலையை மேம்படுத்திக்கொள்வதற்கும் முன்னுரிமை கொடுப்பார்கள். இப்போது அந்த சிந்தனையில் தலைகீழான மாற்றம் உருவாகியிருக்கிறது.

    தங்களது பணி, பொருளாதார நிலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் விரைவாக தாய்மையடைவது பற்றி சிந்திக்கிறார்கள். குறிப்பிட்ட வயதைக் கடந்துவிட்டால் தாய்மையடைவதில் சிக்கல் ஏற்பட்டுவிடும் என்று கருதுவதும், குழந்தையின்மையால் அவதிப்பட வேண்டியதாகிவிடும் என்று நினைப்பதுமே அதற்கு காரணமாக இருக்கிறது. அதுவும் ஒருவகையில் உண்மைதான், இந்தியாவில் குழந்தையில்லாத தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது!

    திருமணமான ஜோடிகள் தாய்மைக்கு தயாராகுவதற்கு முன்னால் 14 கேள்விகளுக்கு விடைகாணவேண்டும். இந்த கேள்விகள் அனைத்தும் பெண்ணுக்குரியவை. அவை:

    - கருத்தரிக்க ஏற்ற வயதுதானா?

    - முன்பே அம்மைத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறதா?

    - கணவருக்கும்- உங்களுக்கும் ரத்தப்பொருத்தம் இருக்கிறதா?

    - ஏதாவது கருத்தடை முறையை கடைப்பிடித்து வருகிறீர்களா? கடைப்பிடித்துவந்தால் அதனை அகற்றவேண்டிய காலம் எது?

    - புகைப்பழக்கம், மதுப்பழக்கம் இருக்கிறதா?

    - ஏற்கனவே ஏதேனும் நோய்கள் இருக்கிறதா? இருந்தால், அந்த நோய்களுக்கு பயன்படுத்திக்கொண்டிருக்கும் மருந்து மாத்திரைகள் என்னென்ன?

    - வேலைபார்க்கும் பெண் என்றால், பணியிடசூழல்கள் கர்ப்பத்தை தடுக்கும் விதத்தில் இருக்கிறதா?

    - பரம்பரையாக ஏதேனும் நோய்கள் தொடர்கிறதா? அந்த நோய் தொடர்ந்தால், எதிர்காலத்தில் குழந்தைக்கு அவை எத்தகைய பாதிப்புகளை உருவாக்கும்?

    - அடுத்து வரும் எந்த மாதங்களுக்குள் தாய்மையடையவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

    - சினைமுட்டை முதிர்ந்து வெளியாவதை உங்களால் அறிந்துகொள்ள இயலுமா?

    - கருத்தரித்தல் என்பது விஞ்ஞானபூர்வமாக எப்படி நிகழ்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?

    - கருத்தரித்த பின்பு பெண்ணின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன?

    - கர்ப்பகாலத்தில் தாம்பத்ய உறவை தொடரலாமா? கூடாதா?

    - கருக்குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை சட்டப்படி தெரிந்துகொள்ள இயலுமா?

    .. என்பன போன்ற முக்கியமான கேள்விகளுக்கு பெண்கள் விஞ்ஞானபூர்வமாக விடைகாண தயாராக வேண்டும். தாய்மையடையவும், கர்ப்பகாலத்தை மகிழ்ச்சியாக கடக்கவும் அந்த விடைகள் உதவும்.

    தாய்மைக்கு தயாராகும் பெண்கள் தங்கள் இனப்பெருக்க உறுப்புகளின் செயல்பாடுகள் பற்றியும் தெரிந்துகொள்ள முன்வரவேண்டும். பெண்களின் உடலில் உள்ள மற்ற உறுப்புகளைவிட இனப்பெருக்க உறுப்புகள் வேகமாக முதிர்ச்சியடைந்து விடுகின்றன. அதனால் பெண்கள் முப்பது வயதை கடக்கும்போதே கருத்தரிப்பதற்கான வாய்ப்பு கணிசமாகக் குறைந்துவிடுகிறது. நாற்பது வயதுக்கு மேல் அதற்கான சாத்தியக் கூறுகளே இல்லாமல் போய்விடக்கூடும்.

    பெண்களின் வயதைப் பொறுத்து அவர்களது சினைமுட்டைகளின் தரமும் பாதிக்கப்படுகிறது. சினைமுட்டையின் தரம் குறைந்தாலும் தாய்மையடையும் வாய்ப்பு குறைந்துவிடும். முப்பது வயதுக்கு மேல் செயற்கை முறையில் கருத்தரிப்பு ஏற்படுத்திக்கொள்ளும் பெண்களுக்கும் கர்ப்பம் நிலைப்பதில் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன. அதனால்தான் திருமணமானதும் தாய்மையடைந்துவிடவேண்டும் என்ற சிந்தனை பெண்களிடம் உருவாகியிருக்கிறது.

    தாய்மைக்கும்-பெண்ணின் வயதுக்கும் உள்ள தொடர்பு பற்றி ஆய்வு செய்திருக்கும் கருவாக்க நிபுணர்கள், ‘19 முதல் 25 வயதுதான் பெண்கள் தாய்மையடைய மிகவும் ஏற்றகாலம்’ என்று கூறியுள்ளனர். எல்லா புதுமணத்தம்பதிகளும் இதனை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
    நீராவி பிடிப்பதால் கொரோனா வைரஸ் அழியுமா? என்பது குறித்து நெல்லை அரசு சித்தா டாக்டர் மானக்‌ஷா விளக்கம் அளித்துள்ளார்.
    தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லூரி விரிவுரையாளர் டாக்டர் மானக்‌ஷா கொரோனா வைரஸ் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    கேள்வி: கொரோனா தொற்று வராமல் தடுக்க என்னென்ன வழிமுறைகள் உள்ளன?

    பதில்: பொதுமக்கள் வெளியே செல்லும்போது கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். அதுவே இந்த தொற்று மேலும் பரவாமல் தடுக்க சிறந்த வழிமுறையாகும். பொதுவாக வெயில் காலங்களில் இயற்கையாகவே மனித உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். அந்த நேரங்களில் இது போன்ற தொற்று நோய்கள் எளிதாக பரவக்கூடிய வாய்ப்பு அதிகமாக உள்ளது. எனவே, நாம் எதிர்ப்பு சக்திகள் அதிகரிக்கக் கூடிய உணவு பொருட்களை உட்கொண்டால் இந்த நோய் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள இயலும். உடலில் நீர்ச்சத்து அதிகரித்தால் எதிர்ப்பு சக்தி தானாக வந்து விடும். மேலும் அன்றாட உணவில் கிராம்பு, லவங்கப்பட்டை, ஓமம் உள்ளிட்ட பொருட்களை கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    கேள்வி: தொற்று பாதிக்காமல் இருக்க என்னென்ன உணவு பொருட்களை உட்கொள்ளலாம்?

    பதில்: தினமும் ஒரு கோழி முட்டை வேகவைத்து உட்கொள்ளலாம். அனைத்து வகையான கீரைகளையும் உட்கொண்டு வரலாம். இவை எல்லாம் நம் உடலுக்கு எதிர்ப்பு சக்தியை கொடுக்கக் கூடிய உணவு பொருட்கள் ஆகும். மேலும் ஒரு டம்ளர் பாலில் மிளகு, மஞ்சள் கலந்து குடிக்கலாம். வெற்றிலையை தேனில் கலந்து சாப்பிடலாம். தேனில் கலந்த நெல்லிக்காயை உட்கொள்ளலாம். தினமும் கொதிக்க வைத்த நீரை பருகி வருவது மிகவும் நல்லது. வாரம் ஒரு முறை நீராவி பிடிப்பது மிகச் சிறந்தது.

    கேள்வி: தொற்று பாதித்தவர்கள் உட்கொள்ள வேண்டிய உணவு பொருட்கள்?

    பதில்: பொதுவாக நோய் பாதித்தவர்கள் முதலில் மருத்துவர்களின் ஆலோசனை பெற்று, நமது உணவை தேர்ந்தெடுக்க வேண்டும். தொற்று பாதித்தவர்கள் வேக வைத்த நாட்டு கொண்டக்கடலை, பாசிப்பயறு, வேர்கடலை உள்ளிட்டவைகளை உட்கொள்ளலாம்.

    கேள்வி: பொது இடங்களில் நீராவி பிடிப்பதால் மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா?

    பதில்: கண்டிப்பாக பொது இடங்களில் நீராவி பிடிப்பதால் மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். அதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. பொது இடங்களில் ஒருவர் நீராவி பிடிக்கும்போது அவர் விடக்கூடிய மூச்சுக்காற்று மூலமாக இந்த வைரஸ் மற்றவர்களுக்கு பரவும் அபாயம் உள்ளது. எனவே, கண்டிப்பாக பொது இடங்களில் நீராவி பிடிக்க கூடாது.

    கேள்வி: நீராவி பிடிப்பதால் கொரோனா வைரஸ் அழியுமா?

    பதில்: நீராவி பிடிப்பதால் வைரஸ் முற்றிலும் அழியும் என்று நாம் உறுதியாக கூறிவிட முடியாது. ஆனால், நீராவி பிடிப்பதனால் மூக்கு அடைப்பு, சளி ஆகியவை குணமாக வாய்ப்பு அதிகமாக உள்ளது. நோய் தொற்று ஆரம்ப காலத்தில் உள்ளவர்கள் நீராவி பிடிப்பதால் அவர்கள் அந்த தொற்றிலிருந்து விடுபட வாய்ப்பு உள்ளது. ஒருவர் நீராவி பிடித்த பாத்திரத்தையோ, போர்வையையோ உடனே மற்றொருவர் பயன்படுத்த கூடாது.

    அதனை சுத்தப்படுத்திய பின்னரே மீண்டும் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் நீராவி கண்டிப்பாக பிடிக்கக்கூடாது. நீராவி பிடிக்கும்போது மஞ்சள், நொச்சி இலை, துளசி ஆகியோவற்றை சேர்த்து பிடித்தால் நல்லது.

    கேள்வி: கபசுர குடிநீர் பருகுவதால் தொற்று கட்டுப்படுமா?

    பதில்: கபசுர குடிநீர் பருகுவதால் தொற்று கட்டுப்படும் என்று முற்றிலுமாக கூறிவிட முடியாது. ஆனால், கபசுர குடிநீர் அன்றாடம் பருகி வந்தவர்களுக்கு தொற்று பாதிப்பு குறைவாகவே காணப்படுகிறது. தொற்று பாதிக்காதவர்கள் கபசுர குடிநீர் ஒரு வாரத்திற்கு ஒரு முறை குடித்தாலே போதுமானது.

    கேள்வி: கொரோனா வைரஸ் யாரை அதிகமாக பாதிக்கிறது?

    பதில்: இந்த வைரஸ் தொற்று பொதுவாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கிறது. உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை அதிகம் தாக்குகிறது.

    கேள்வி: கொரோனா தடுப்பூசி பற்றி?

    பதில்: பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் உலர்த்தி பொடியாக அரைத்து அத்துடன் சில பொருட்களை கலந்து வெயில் காலத்திலும் சருமத்தை பளபளப்பாக வைப்பது எப்படி என்பதை இங்கே பார்க்கலாம்.
    ஆரஞ்சுப்பழத்தோலில் அடங்கியுள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடென்ட் காரணமாக பாகடீரியாக்கள் உருவாக்கும் நோய்த்தொற்று தடுக்கப்படுகிறது. ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் உலர்த்தி பொடியாக அரைத்து அத்துடன் சில பொருட்களை கலந்து வெயில் காலத்திலும் சருமத்தை பளபளப்பாக வைப்பது எப்படி என்பதை இங்கே பார்க்கலாம்.

    பாதாம் ஸ்க்ரப்

    ஆரஞ்சுப்பழத்தோல் பொடியுடன் 20 பாதாம் பருப்புகளை சேர்த்து ரவை பக்குவத்தில் அரைத்து அதை தினமும் சிறிதளவு பாலுடன் கலந்து முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து கழுவிக்கொள்ளலாம்.இந்த கலவை சருமத்தில் உள்ள நச்சுக்களை அகற்றி பொலிவை ஏற்படுத்துகிறது.

    தயிர் கலவை

    ஆரஞ்சு பழத்தோல் பொடியுடன் தயிர் கலந்து தயாரிக்கப்படும் கலவை சருமத்தில் உள்ள சுருக்கங்களை நீக்குவதுடன் சருமத்தில் இறந்த செல்களையும் அகற்றவும் உதவி புரிகிறது. இந்த கலவையை முகத்தில் தடவி, நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவிக்கொள்ளலாம்.

    சர்க்கரை ஸ்க்ரப்

    வறட்சியான மற்றும் ஈரப்பதமற்ற சருமம் கொண்டவர்கள் இந்த முறையை கடைப்பிடிப்பதன் மூலம் புத்துணர்ச்சி மற்றும் தூய்மையான சருமத்தை பெறலாம்.ஆரஞ்சு தோலை துருவி அதனுடன் சர்க்கரை கலந்து கிண்ணத்தல் எடுத்து கொண்டு அதில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் ஒரு ஸ்பூன் தேன் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கிக்கொள்ளவும். இந்த ஸ்க்ரப்பை முகத்தில் தடவி விட்டு 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

    பால் ஃபேஸ் மாஸ்க்

    இந்த முறை சருமத்தை ஈரப்பதம் மற்றும் புத்துணர்ச்சி கொண்டதாக பராமரிக்கவும், மாநிறம் கொண்ட தோற்றத்தை அளிக்க உதவுவதாகவும் குறிப்பிடப்படுகிறது. இரண்டு ஸ்பூன் அரஞ்சுத்தோல் பொடியுடன் பால் அல்லது பால் கிரீம் மற்றும்  1ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.இந்த கலவையை நன்றாக முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். அதன் பின்னர் 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிக்கொள்ளலாம்.

    வேப்பிலை பொடி கலவை

    இந்த ஸ்கின் பேக் பருவால் உருவாகும் தொல்லையை அகற்ற உதவுகிறது. ஆரஞ்சுத்தோல் பவுடர் மற்றும் வேப்ப இலை பவுடர் ஆகிய இரண்டையும் இரண்டு ஸ்பூன் அளவு எடுத்து அதில் தேவையானஅளவு தேங்காய் எண்ணெயை கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை முகத்தில் தடவி, அரை மணி நேரம் கழித்து கழுவிக்கொள்ளலாம்.
    சங்க காலத்தில் மக்கள் அவர்களுக்குக் கிடைத்த பொருட்களைக் கொண்டு சுவையான உணவை உண்டு ஆரோக்கியமாக வாழ்ந்தனர். மூங்கிலரிசி அவரை புளியங்கூழ் எவ்வாறு செய்து ருசித்திருக்கலாம் எனப் பார்ப்போம்.
    தேவையான பொருட்கள் :

    மூங்கிலரிசி - 100 கிராம்
    உப்பு -தேவையானஅளவு
    அரிசி - 100 கிராம்
    மிளகு (பொடித்தது)-தேவையானஅளவு
    சீரகம் -1 டீஸ்பூன்
    புளிச்சாறு - 2 மேஜைகரண்டி
    அவரை பருப்பு (துவரம் பருப்பு) - 50 கிராம்
    தண்ணீர் -தேவையானஅளவு
    மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    கடுகு-1/2 டீஸ்பூன்

    செய்முறை :

    ஒரு அகலமானப் பாத்திரத்தில் கழுவிச் சுத்தம் செய்த மூங்கிலரிசி, அரிசியைச் சேர்த்து போதுமான உப்புடன் சுமார் 3 மடங்கு தண்ணீர் சேர்த்து நன்கு குழைய வேக விடவும்.

    அதனுடன் தனியே வேக வைத்த துவரம்ப்பருப்பைச் ( துவரம் பருப்பு)சேர்த்து மிக்ஸ் செய்யவும்.

    கூடவே சீரகம், மிளகைச் சேர்க்கவும்.

    தனியே கரைத்து வைத்த புளிக் கரைசலை சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைத்த அரிசி, துவரம் பருப்புடன் (துவரம் பருப்பு) சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.

    நறுக்கிய கறிவேப்பிலையைச் சேர்த்து மிக்ஸ் செய்யவும்.

    சுவையான மூங்கிலரிசி அவரை புளியங்கூழ்

    சங்க கால சமையல் முறையில் செய்து ருசிக்கவும். சூடாகவோ (அ) சூடு ஆறியபின்போ இதைச் சுவைக்கவும்.

    குறிப்பு :

    * கருங்கறி என்று மிளகைச் சங்க காலத்தில் கூறினார்கள்.
    * புரதச் சத்துள்ள அவரைப் பருப்புடன் நார்ச்சத்தும் ரூ மாவுச்சத்து கொண்டு மூங்கிலரிசியுடன் கூடவே மாவுச்சத்துள்ள அரிசியை உடலின் ஆரோக்கியத்திற்கு நம் முன்னோர்கள் அன்றே உணவைத் தேர்வு செய்து உண்டுள்ளனர்.
    * நாம் இப்பொழுது தேடித் தேடி வாங்கும் ராகி, கம்பு, வரகரிசி, சோளம் ரூ தினையை நம் முன்னோர்கள் அதனை மிகுதியாய் பயன்படுத்தி உண்;டு ஆரோக்கியமாக வாழ்ந்துள்ளனர் என்று சங்க இலக்கிய பாடல்களில் நிறையக் காண முடிகிறது.
    * புளி சேர்த்து வைத்த பொருள்கள் பல நாட்களுக்குக் கெடாது என்பது இன்றும் அறியப்பட்ட உண்மை.

    P.Priya Baskar

    9843456520.

    மனோதத்துவ ரீதியாக சொல்வதென்றால் சண்டை ஏற்படாத உறவுகள் குறைவாகவே இருக்கும், இரு உறவுகளுக்குள் நல்ல புரிதல் உருவாக சில சண்டைகள் அவசியமாகக்கூட இருக்கலாம்.
    வீட்டிற்கு வீடு வாசற்படி என்ற சொல்வழக்கு கேற்ப ஒவ்வொரு வீட்டிலும் கணவன் மனைவி இடையே உருவாகும் கருத்து வேறுபாடுகள் காரணமாக வாக்குவாதம் அல்லது சண்டைகள் ஏற்படக்கூடும். அவற்றை எவ்வாறு தவிர்ப்பது அல்லது கையாள்வது என்பதற்கான பதிலை இங்கே பார்க்கலாம்.

    மனோதத்துவ ரீதியாக சொல்வதென்றால் சண்டை ஏற்படாத உறவுகள் குறைவாகவே இருக்கும், இரு உறவுகளுக்குள் நல்ல புரிதல் உருவாக சில சண்டைகள் அவசியமாகக்கூட இருக்கலாம். இருப்பினும் தொடர்ச்சியான சண்டை என்பது உறவை பாதிப்பதாக அமையக்கூடும். அதனால் சண்டைக்கான காரணங்களை கண்டறிந்து அவற்றை தவிர்ப்பதே உறவுகளுக்கு மத்தியில் இனிமையை அளிக்கும்.

    கருத்துக்களை நிதானமாக வெளிப்புடுத்துங்கள்

    தவிர்க்க இயலாத சூழலில் சண்டை ஏற்பட்டு விட்டாலும் கூடி அது முடிந்த பின்னர் ஒருவர் சமாதான நடவடிக்கையை மேற்கொள்வது  அவசியம். எல்லா தவறுகளுக்கும் ஒருவரே காரணம் என்ற அளவில் அது இருக்கக்கூடாது. வாக்குவாதம் அல்லது சண்டைக்கு அடிப்படையான காரணம் மற்றும் உணர்வுகள் பாதிக்கப்பட்ட விதம் குறித்த இரு தரப்பு கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    இணையின் எண்ணங்களை கேளுங்கள்

    சண்டை என்ற விஷயத்திற்கு இரு பக்கம் உள்ளது என்ற அடிப்படையில் இணையின் கருத்துக்களை எவ்வித குறுக்கீடும் செய்யாமல் பொறுமையாக காது கொடுத்து கேளுங்கள். அது உணர்வுகளை தூண்டுவதாக இருந்தாலும். அமைதியாக கேட்பதன் மூலம் சமாதானம் ஏற்பட வழி பிறக்கும்.

    தூண்டுதலுக்கான காரணத்தை கண்டறியுங்கள்

    மனதில் எழுந்த கோபம் காரணமாக இணையின் மனதில் வெறுப்பை ஏற்படுத்தும் விதத்தில் குறிப்பிட்ட விஷயங்களை பேசுவது அல்லது செய்வது ஆகியவற்றை கண்டறிந்து தவிர்க்க வேண்டும்.

    தவறுகளை ஒப்புக்கொள்ளுங்கள்

    உணர்ச்சிப்பூர்வமான வாக்குவாதத்தில் இணையில் மனதை காயப்படுத்தும் சொற்களை பயன்படுத்துவது பொதுவான விஷயம் தான். அது முழு உணர்வு இல்லாத மனநிலையில் பேசப்பட்ட வார்த்தைகளாக இருந்தாலும் இணையின் மனம் அதனால் புண்பட்டிருக்கக்கூடும்.  அதனால் தப்பா சொல்லிட்டேன். மன்னிச்சுடு என்று சொல்லி அதற்கு முற்றுப்புள்ளி வைத்து விடுங்கள்.

    மனம் விட்டு உரையாடுங்கள்

    வாக்குவாதம் அல்லது சண்டையின் போது பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் குற்றங்களை சுமத்துவது பொதுவான விஷயம். அதன் பின்னர் இருவரும் சமாதானத்தை குறிக்கோளாக கொண்டு மனம் விட்டு பேசுங்கள். எது பிடிக்காமல் போனது, ஏன் சண்டை நடந்தது. சண்டை வளர என்ன காரணம் இனி சண்டை வராமலிருக்க என்ன செய்யலாம் போன்ற விஷங்களை விவாதியுங்கள்.

    ரிலாக்ஸ் அவசியம்

    சண்டை குறித்த விவாதங்கள் முடிந்த பின்னர் சூழலை மகிழ்ச்சியாக மாற்றுவது அவசியம். இருவருக்கும் பிடித்த விளையாட்டில் ஈடுபடலாம். வெளியே சென்று வரலாம்.

    இப்போது ஆன்லைன் பயன்பாடு அதிகரித்திருப்பதால் குழந்தைகளின் ‘ஸ்கிரீன் டைம்’ கால அளவு அதிகமாகிவிட்டது. இது குழந்தைகளின் பார்வைத்திறனையும், செயல்திறனையும் பாதிக்கும் அம்சங்களாகும்.
    பள்ளிக் குழந்தைகளுக்கு வீடுகளிலேயே ‘ஆன்லைன்’ வகுப்புகள் நடந்துகொண்டிருக்கின்றன. அதனால் பெரும்பாலான நேரம் அவர்கள் போனையும், லேப்டாப்பையும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். குழந்தைகள் அத்தகைய ஸ்கிரீன்களை பார்க்கும் நேரத்தை ‘ஸ்கிரீன் டைம்’ என்று குறிப்பிடுகிறோம். இப்போது ஆன்லைன் பயன்பாடு அதிகரித்திருப்பதால் குழந்தைகளின் ‘ஸ்கிரீன் டைம்’ கால அளவு அதிகமாகிவிட்டது. இது குழந்தைகளின் பார்வைத்திறனையும், செயல்திறனையும் பாதிக்கும் அம்சங்களாகும்.

    எப்போதுமே குழந்தைகளை இரண்டு வயது வரை டி.வி, போன், கம்ப்யூட்டர் போன்றவைகளின் ஸ்கிரீன் முன்பு கொண்டு செல்லக்கூடாது. இரண்டு முதல் ஐந்து வயதுவரை உள்ள குழந்தைகளுக்கு தொடர்ச்சியாக தினமும் அரை மணிநேரம் மட்டுமே அத்தகைய ஸ்கிரீன்களை பார்க்க அனுமதிக்கவேண்டும். அதைவிட அதிக நேரம் ஸ்கிரீன்களை பார்த்தால் அதனை ஸ்கிரீன் அடிக்ஷன் என்று கூறுவார்கள்.

    குழந்தைகள் எந்த மாதிரியான நிகழ்ச்சிகளை பார்க்கிறார்களோ அதற்கு ஏற்றபடி அவர்களது குணநலன்கள் உருவாகிவிடும். வன்முறை எண்ணமும், ஆத்திரமும் கொண்ட குழந்தைகளாக வளர்ந்துகொண்டிருந்தால், அதுபோன்ற நிகழ்ச்சிகளை பார்க்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ளலாம். குழந்தைகள் எதை பார்க்கிறார்கள் என்பதை பெற்றோர் கவனத்தில் கொள்ளவேண்டும். குழந்தைகளை வன்முறை நிறைந்த கார்ட்டூன்களைகூட பார்க்க அனுமதிக்கக்கூடாது.

    டி.வி. நிகழ்ச்சிகளை காட்டியபடியே குழந்தைகளுக்கு உணவூட்டுவதையும் தவிர்க்கவேண்டும். அதுபோல் குழந்தை களின் படுக்கை அறையில் கம்ப்யூட்டர், டி.வி. போன்றவைகளையும் வைத்திருக்கக்கூடாது. வீட்டின் பொது அறைகளில் இருந்துகொண்டிருக்கும் டி.வி., கம்ப்யூட்டர் போன்றவைகளை தூங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு ‘ஆப்’ செய்துவிடுங்கள். படுத்துக்கொண்டு டி.வி. நிகழ்ச்சிகளை பார்த்துக்கொண்டே தூங்கிவிட குழந்தைகளை அனுமதிக்காதீர்கள். அது அவர்களது ஆழ்ந்த தூக்கத்தைகெடுக்கும். அதனை ‘டிஸ்டர்ப்டு ஸ்லீப்’ என்று கூறுவார்கள். அவர்கள் திடீரென்று தூக்கத்தில் விழித்து கத்தலாம், பயங்கொள்ளலாம், அழவும் செய்யலாம்.

    குழந்தைகளின் ‘ஸ்கிரீன் டைம்’மை குறைக்க வழி இருக்கிறது. விளையாட்டு, கைவினைப் பொருட்கள் தயாரிப்பு, விவசாயம், சமையல் போன்று, அவர்களுக்கு பிடித்தமானவைகளில் மனதை திருப்பிவிடலாம். பெற்றோர்கள் டி.வி., செல்போன்களின் பயன்பாட்டை குறைத்தால், குழந்தைகளும் தாமாகவே அதில் இருந்துவிடுபடும். பெற்றோர் அவைகளை அதிக நேரம் பயன்படுத்திக்கொண்டே குழந்தைகளை மட்டும் குறைக்கச் சொல்வது எதிர்பார்க்கும் பலனைத்தராது. குழந்தைகளிடம் ஸ்கிரீன் டைம் அதிகரித்தால் கண்பார்வைக் குறைபாடு மட்டுமின்றி ஒற்றைத்தலைவலி போன்ற பிரச்சினைகளும் உருவாகும்.

    எல்லா வீடுகளிலும் தினமும் ஒருமுறையாவது அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தும் பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். அந்த நேரத்தை ஒருவருக்கொருவர் மனம்விட்டுப்பேசவும், கருத்துக்களை பரிமாறிக்கொள்ளவும் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். குழந்தைகளிடம் ஏதாவது குழப்பங்கள் இருக்கிறதா? பிரச்சினைகள் எதிலாவது அவர்கள் சிக்கியிருக்கிறார்களா? என்பதை அறியவும் அந்த நேரத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த ‘பேம்லி டைம்’மில் மனதில் இருப்பதை எல்லாம் வெளிப்படுத்தலாம் என்ற நம்பிக்கையை குழந்தைகளிடம் ஊட்டவேண்டும்.

    குழந்தைகளை தற்போது ஆடவும், பாடவும், சிரிக்கவும் வைத்து போட்டோக்களையும், வீடியோக்களையும் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிடும் வழக்கம் அதிகரித்திருக்கிறது. அது நல்ல பழக்கம் இல்லை. அத்தகைய காட்சிப் பதிவுகள் தவறாக பயன்படுத்தப்படலாம். குழந்தைகளிடம் நல்ல பழக்கவழக்கங்களை உருவாக்கவேண்டும். அவர்களுக்கு யதார்த்த உலகத்தை புரியவையுங்கள். அவர்களுக்கு சமூக வலைத்தள பிரவேசம் இப்போது அவசியம் இல்லை.
    எல்லா வகை எண்ணெய்யும் எல்லோருடைய கூந்தலுக்கும் ஒத்துக்கொள்ளாது. பொதுவாக கூந்தல் வளர்ச்சிக்கு ஏற்ற எண்ணெய் வகைகள் எதுவென்று பார்ப்போம்!
    கூந்தலின் அழகுக்கும், ஆரோக்கியத்திற்கும் நாம் பயன் படுத்தும் எண்ணெய் பக்க பலமாக இருக்கிறது. முடி உதிர்வு, பொடுகு பிரச்சினை, முடி வளர்ச்சி போன்றவற்றை கவனத்தில் கொண்டு பல விதவிதமான எண்ணெய்வகைகளை சிலர் உபயோகிக்கிறார்கள். எல்லா வகை எண்ணெய்யும் எல்லோருடைய கூந்தலுக்கும் ஒத்துக்கொள்ளாது. பொதுவாக கூந்தல் வளர்ச்சிக்கு ஏற்ற எண்ணெய் வகைகள் எதுவென்று பார்ப்போம்!

    ஆலிவ் எண்ணெய்: கூந்தலுக்கு ஆலிவ் எண்ணெய் ஏற்றதுதான். ஆனால் மிருதுவான, நேரான முடியை கொண்டவர்கள் ஆலிவ் எண்ணெய்யை தவிர்த்துவிடலாம். அதனை தடவினால் கூந்தல், எண்ணெய் பிசுபிசுப்புத்தன்மையுடன் காட்சியளிக்கும். மேலும் ஆலிவ் எண்ணெய்யில் இருக்கும் ஒலிரோபெயின் எனும் மூலக்கூறு அப்படிப்பட்ட கூந்தல் கொண்டவர்களின் முடி வளர்ச்சியை நேரடியாகவே பாதிக்கும். மேலும் ஆலிவ் எண்ணெய் சரும துளைகளை அடைத்து முகப்பருவை தூண்டக்கூடியது. அதனால் ஆலிவ் எண்ணெய் தேய்த்த பிறகு முகப்பரு தோன்றுவதாக உணர்ந்தால் அதனை கூந்தலுக்கு பயன்படுத்துவதை அறவே தவிர்த்துவிட வேண்டும்.

    விளக்கெண்ணெய்: முடி வளர்ச்சிக்கு விளக்கெண்ணெய் துணைபுரிந்தாலும் சிலருக்கு ஒவ்வாமை மற்றும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும். கூந்தலில் தடவியதும் முடிகளில் சிக்கு ஏற்பட்டாலோ, முடி உதிர்ந்தாலோ விளக்கெண்ணெய்யை தவிர்த்துவிடலாம்.

    மினரல் ஆயில்: இதில் பெரும்பாலும் பாரபின் மெழுகு, பெட்ரோலியம் போன்றவை சேர்க்கப்பட்டிருக்கும். இவை கூந்தலில் தேவையற்ற நெருக்கடிகளை ஏற்படுத்தி முடி உதிர்வை அதிகப்படுத்தும். உச்சந்தலையில் எரிச்சல், அரிப்பு, சொறி, வீக்கம், ஒவ்வாமை போன்ற பிரச்சினைகளும் ஏற்படக்கூடும்.

    கற்பூர எண்ணெய்: இது முடி உதிர்தலை தடுக்கவும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவும் என்று பலர் கருதுகிறார்கள். ஆனால், இது முடியின் ஆரோக்கியத்தை பாதிக்கும் சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும். உச்சந்தலையில் வறட்சி ஏற்படவும் வழிவகுக்கும். முகப்பரு, தடிப்பு, பூஞ்சை தொற்றுகளையும் எதிர்கொள்ள நேரிடும். பொதுவாக இதில் நன்மையைவிட தீமையே அதிகம்.

    எலுமிச்சை எண்ணெய்: எலு மிச்சை சாறையோ, எலுமிச்சை எண்ணெய்யையோ சிலர் தலையில் தடவு வார்கள். எலுமிச்சை எண்ணெய்யில் சேர்க்கப்படும் ரசாயனங்கள் சரியாக கலக்கப்படவில்லை என்றால் தீங்கு விளைவிக்கும். மேலும் அதிக அமிலத்தன்மை கொண்டது என்பதால் மயிர்க்கால்களை சுருங்கவும் செய்துவிடும்.

    சரும டாக்டரின் ஆலோசனைப்படி கூந்தலுக்கு பொருத்தமான எண்ணெய்யை தேர்ந்தெடுப்பதே சிறந்தது.
    கொரோனாவால் இதயம், நீரிழிவு நோயாளிகள் பாதிக்கப்படும் அபாயம் அதிகமா? என்பது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விளக்கம் அளித்துள்ளது.
    கொரோனாவால் இதயம், நீரிழிவு நோயாளிகள் பாதிக்கப்படும் அபாயம் அதிகமா? என்பது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விளக்கம் அளித்துள்ளது.

    கேள்வி-பதில்

    கொரோனா வைரஸ் குறித்து மக்கள் மனதில் எழும் சந்தேகங்கள், கேள்விகளுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கேள்வி-பதில் வடிவில் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

    அதன் விவரம் வருமாறு:-

    கேள்வி:- இதய நோயாளிகள், நீரிழிவு அல்லது ரத்த அழுத்த நோயாளிகள் கொரோனா வைரசால் பாதிக்கப்படும் அபாயம் அதிகமா? அவர்களுக்கு தொற்று ஏற்பட்டால் உடல் மோசம் அடைவதற்கு அதிகம் வாய்ப்பு உள்ளதா?

    பதில்:- மற்றவர்களை விட இதய நோயாளிகள், நீரிழிவு அல்லது ரத்த அழுத்த நோயாளிகள் கொரோனா வைரசால் பாதிக்கப்படும் அபாயம் அதிகம் இல்லை. தற்போது தொற்று உறுதி செய்யப்பட்ட 80 சதவீத பேருக்கு சுவாச பாதிப்பு (காய்ச்சல், தொண்டை வறட்சி, இருமல்) போன்ற மிதமான அறிகுறிகள் ஏற்பட்டு முழுவதும் குணமடைகின்றனர்.

    ஆனால் நீரிழிவு, இதய பலவீனம் உள்பட இதய நோய் மற்றும் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு கடுமையான அறிகுறிகள் மற்றும் சிக்கல்கள் ஏற்படலாம். ஆகையால், இதுபோன்ற நோயாளிகளுக்கு கூடுதல் கவனிப்பு தேவை.

    மிதமான அறிகுறிகள் ஏற்பட்டாலும், மருத்துவர்கள் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து மருந்துகளையும் தவறாமல் எடுத்துக்கொள்கிறீர்களா? என்பதை உறுதி செய்யுங்கள். மருத்துவர் அறிவுரையின்றி, எந்த மருந்தையும் நிறுத்த வேண்டாம்.

    ஒருவேளை, மருத்துவரை சந்திக்க முடியவில்லை என்றால், உங்களின் ரத்தஅழுத்த, நீரிழிவு மற்றும் இதய நோய் மருந்துகளை தொடருங்கள். கொழுப்பு அளவை கட்டுப்படுத்தும் மருந்துகளும் தொடர வேண்டும்.

    கேள்வி:- ரத்த அழுத்த மருந்துகள், தொற்றை அதிகப்படுத்துவதாக கூறப்படும் தகவல்கள் உண்மையா?

    பதில்:- கிடைக்கும் தகவல்களை ஆய்வு செய்தபின், விஞ்ஞானிகள் மற்றும் இதய நிபுணர்களின் ஒருமித்த கருத்து இது தான். இரண்டு விதமான மருந்துகள் ஏ.சி.இ. மருந்துகள் (உதாரணத்துக்கு ரமிபிரில், எனலாபிரில் போன்றவை) மற்றும் ஏஆர்பி மருந்துகள் (லோசர்டன், டெல்மிசர்டன் போன்றவை) கொரோனா தொற்றை கடுமையாக அதிகரிப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

    இதய செயல் இழப்புக்கு இந்த மருந்துகள் பயனுள்ளவை மற்றும் அதிக ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. இவற்றை நீங்கள் நிறுத்தினால் ஆபத்தை ஏற்படுத்தலாம். இது உங்கள் இதயத்தின் நிலைமையை மிகவும் மோசமாக்கும்.

    கேள்வி:- வலி நிவாரணி அல்லது காய்ச்சல் மாத்திரை இவற்றில் எதை எடுத்துக் கொள்ளலாம்?

    பதில்:- ‘இபுபுரொபன்' போன்ற வலி நிவாரணிகள் கொரோனா பாதிப்பை மோசமாக்குவதாக கண்டறியப்பட்டுள்ளது. இது போன்ற மருந்துகள் இதய செயல் இழப்பு நோயாளிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மற்றும் சிறுநீரக பாதிப்பையும் அதிகரிக்கலாம். எனவே இதுபோன்ற மருந்துகளை தவிர்த்து, மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை மட்டும் சாப்பிடுங்கள். தேவைப்பட்டால், பாதுகாப்பான வலி நிவாரணியான ‘பாரசிட்டாமலை’ மட்டும் பயன்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    பெண்களால் 10 வருடங்களுக்கு முன்னர் நடந்த சம்பங்களையும் எளிதாக நினைவுகூற முடியும். சம்பங்கள் மட்டுமின்றி வாசனைகளை கூடி அவர்களால் நினைவில் வைத்துக்கொள்ள முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
    ஆரஞ்சு பழத்தின் அளவே இருக்கும் பெண்ணின் கருப்பை, ஒரு குழந்தையைதாங்கி பெற்றெடுக்கும் அளவுக்கு பெரிதாகும் என்பதே பேரதிசயம். இதை தவிர பெண்களின் உடலில் பல அதிசயங்கள் உள்ளன. இயற்கை , பெண்மைக்கென்றே சிறப்பாக அளித்த அந்த வரங்களை பற்றி இங்கே பார்க்கலாம்.

    நோய் எதிர்ப்பு சக்தி

    குடும்பம், குழந்தை வளர்ப்பு, உற்றார் உறவினர் விருந்தோம்பல், சமூகம், பொருளீட்டுதல் என்று பெண்கள் உழைத்து கொண்டே இருக்கிறார்கள். ஒரு சிறு நோய்த்தொற்றுக் கூடி அவர்களை சோர்வடைய செய்யாத வகையில் நோயெதிர்ப்பு சக்தி பெண்களுக்கு இயற்கையிலேயே அதிகமாக உள்ளது. கொரோனா தொற்று பாதித்தவர்களில் ஆண்களை விட பெண்கள் குறைவு எனும் ஆய்வறிக்கையே இதற்கு சான்று

    நினைவாற்றல்

    பெண்களால் 10 வருடங்களுக்கு முன்னர் நடந்த சம்பங்களையும் எளிதாக நினைவுகூற முடியும். சம்பங்கள் மட்டுமின்றி வாசனைகளை கூடி அவர்களால் நினைவில் வைத்துக்கொள்ள முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

    பல நிறங்களை காணுதல்

    சமீபத்தில் நடத்தப்பட் ஆய்வு முடிவுகளின் படி பெண்களால் ஓரே நேரத்தில் 12 வெவ்வேறு நிறங்களை காண முடியுமாம்.

    நெகிழ்வு தன்மை

    பிரசவ காலங்களில் குழந்தை பிறப்புக்கு ஏற்றார் போல அவர்களின் உடற்கட்டமைப்பில் பல்வேறு நெகிழ்வு தன்மைகள் உருவாகின்றன. தசைகளின் விரிவாக்கமானது அதில் பெரும்பங்கு வகிக்கிறது.

    உறக்கத்திலும் ஒலியை உணர்தல்

    ஆழ்ந்து தூங்கினாலும் தன்னைச்சுற்றி கேட்கும் ஒலியை பெண்களால் உணர முடியும். தாய்மார்கள் குழந்தை லேசாக அழ ஆரம்பித்தாலே சட்டென்று எழுந்து விடுவது இதனால் தான்.

    கழுத்து தசைகள்

    யாராவது கூப்பிட்டால் திரும்பிப்பார்க்கும் போது ஆண்கள் முழு உடலையும் திருப்புகிறார்கள். ஆனால் பெண்கள் தலையை மட்டுமே திருப்புகிறார்கள். பெண்களின் கழுத்து தசைகள் அத்தகைய சிறப்பான அமைப்பை பெற்றுள்ளன.

    சுவை மொட்டுக்கள்

    அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகம் சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தினார்கள். அதில் ஆண்களை விட பெண்களின் நாக்கில் சுவை மொட்டுக்கள் அதிகம் இருப்பதை கண்டுபித்தனர். மேலும் பெண்களின் 35 சதவீதம் பேர் சூப்பர் டேஸ்டர்கள் என்கின்றனர் ஆய்வு நடத்தியவர்கள் இது தவிர பெண்களின் மூளை ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யும் திறன் படைத்தது. பெண்களால் ஒரு நாளில் 8000 வார்த்தைகளை உச்சரிக்க முடியும்.
    பீட்ரூட் - கேரட்டில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இந்த சாலட்டில் வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
    தேவையான பொருட்கள்  :

    துருவிய பீட்ரூட் - 1/2 கப்
    துருவிய கேரட் - ½ கப்
    தேங்காய்த் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்
    ஊறவைத்த நிலக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
    எலுமிச்சை ஜூஸ் - பாதி பழம்
    மிளகுத் தூள் - ¼ டீஸ்பூன்
    இந்துப்பு - சிறிதளவு

    தாளிக்க :

    கடுகு, உளுத்தம் பருப்பு - ½ டீஸ்பூன்
    கொத்தமல்லி, கறிவேப்பிலை - தேவையான அளவு
    எண்ணெய் - அரை டீஸ்பூன்

    செய்முறை :

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அகலமான பாத்திரத்தில் துருவிய பீட்ரூட், கேரட், தேங்காய் போட்டு கிளறவும்.

    பின்னர் அதில் நிலக்கடலை போட்டு கிளறவும்.

    மேலும், இதில் மிளகு தூள், இந்துப்பு போட்டு கலக்க வேண்டும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்து சாலட்டில் போட்டுக் கிளற வேண்டும்.

    கடைசியாக எலுமிச்சை சாறு பிழிந்து கலந்து பரிமாறவும்.

    சத்து நிறைந்த பீட்ரூட் - கேரட் சாலட் ரெடி.
    ×