என் மலர்
ஆரோக்கியம்
பணியை தொய்வின்றி செய்து முடிக்கவும், அலுவலக வாழ்க்கையில் நேர மேலாண்மையை கடைப்பிடிக்கவும் சில யோசனைகளை பகிர்ந்திருக்கிறோம். படித்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ, எங்கு இருந்தாலும் நம் முடைய பணியை நாம்தான் செய்யவேண்டும். அதுவும் சிறப்புற செய்தால், நம்முடைய மதிப்பும் மரியாதையும் உயரும். பணியை தொய்வின்றி செய்து முடிக்கவும், அலுவலக வாழ்க்கையில் நேர மேலாண்மையை கடைப்பிடிக்கவும் சில யோசனைகளை பகிர்ந்திருக்கிறோம். படித்து பயன்படுத்திக் கொள்ளுங்கள். உயர் அதிகாரிகளிடம் உங்களுக்கான நன்மதிப்பை உயர்த்திக் கொள்ளுங்கள்.
1. அதிகாலையில் எழுந்திருக்கப் பழகுங்கள். உடலை ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் வைத்துக்கொள்ளுங்கள். அதற்காக தினசரி உடற்பயிற்சிகளை செய்துவிட்டு அன்றைய தினத்தை ஆரம்பியுங்கள். அன்றைய அலுவலக வேலையை கவனமுடன் சிறப்பாகச் செய்து முடிப்பதற்கு உடற்பயிற்சி கைகொடுக்கும்.
2. உங்கள் வேலைகளை முதலில் திட்டமிடுங்கள். இது கேட்பதற்கு மிகவும் பழைய யோசனை போலத் தெரியலாம். ஆனால் திட்டமிடாத வேலை சிறக்காது. ஒரு தொழில் முனைவோர் என்றால் முடிவுகளை எடுக்க வேண்டும். தினசரி இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும். நிதி தொடர்பான காகிதங்களை சரிபார்க்க வேண்டும். வாடிக்கையாளர்களின் தேவைகளைப் புரிந்துகொள்ள வேண்டும். இதுபோன்ற வேலைகளை சரிவர முடிக்க திட்டமிடுதல் அவசியம். எனவே திட்டமிட மறக்காதீர்கள்.
3.எந்த வேலையை உடனடியாகச் செய்ய வேண்டும்; எந்த வேலையை சற்று நிதானமாகச் செய்யலாம் என்பதை இனம் கண்டுகொண்டு அதற்கேற்ப செயல்படுங்கள். இல்லையென்றால், தேவையற்ற வேலைகளில் உங்களின் பெரும் ஆற்றலை செல வழிக்க நேரிடும்.
4. நீங்கள் வேலையில் இருக்கும்பொழுது கவனச் சிதறலுக்கு ஒருபோதும் இடம் கொடுக்காதீர்கள். கதை புத்தகம் படிப்பது, வாட்ஸ்-அப்பில் செய்தி அனுப்புவது, மின்னஞ்சலை எடுத்துப்பார்ப்பது என்று நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக செலவழிக்கும் நேரங்கள் உங்கள் வேலைத் திறனில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.
5. உங்கள் அலைபேசி அல்லது மடிக்கணினியில் இருக்கும் நாட்காட்டியில் தினசரி செய்ய வேண்டிய மிக முக்கியமான வேலைகளை முன்கூட்டியே குறித்துவைத்துக் கொள்ளுங்கள். குறித்துவைப்பதோடு மட்டுமல்லாமல் அதை அவ்வப்பொழுது எடுத்துப் பார்த்து உங்கள் வேலைகளை அந்தந்த நேரத்தில் முடியுங்கள். இந்தப் பழக்கம் உங்கள் கடைசி நேரப் பரபரப்பைக் குறைக்க மிகவும் கைகொடுக்கும்.
6. தொழில் சார்ந்த கூட்டங்களை நாள்முழுக்க வளவளவென இழுத்துக்கொண்டே செல்லாதீர்கள். சுருக்கமாக அதே சமயம் மிகுந்த பயன் உள்ளதாக கூட்டங்களை நடத்தக் கற்றுக்கொள்ளுங்கள். அடுத்து என்ன செய்ய வேண்டும்? எப்படிச் செய்யவேண்டும்? யார் யாரெல்லாம் அதில் இணையப் போகிறார்கள் என்பது குறித்துத் தெளிவாகப் பேசினால் போதும்.
7. எல்லா வேலைகளையும் நீங்கள் ஒருவரே செய்தால் எந்த வேலையையும் உங்களால் முடிக்க முடியாது. அதனால் வேலைகளை திறமைமிக்க ஊழியர்களிடம் பிரித்துக்கொடுக்க மறக்காதீர்கள். நீங்கள் சிறுதொழில் முனைவோர் என்றால் வெளியிலிருந்து உங்களுக்கு வேலை செய்து கொடுக்கும் திறமைமிக்க மனிதர்களை கண்டறிந்து அவர்களிடம் உங்கள் வேலைகளைக் கொடுங்கள். கட்டணத்தின் பேரில் வேலைகளை செய்துகொடுக்க திறமைமிக்க நிறைய பேர் வெளியே காத்திருக்கிறார்கள்.

சீனர்களின் சுறுசுறுப்புக்கு அவர்கள் தங்கள் உணவில் முட்டைக்கோஸை முக்கிய உணவுப் பொருளாக சேர்ப்பது ஒரு காரணம் எனலாம்.
உருண்டு திரண்ட முட்டைக்கோஸ், சத்துக்கள் நிறைந்தது. சீனர்களின் சுறுசுறுப்புக்கு அவர்கள் தங்கள் உணவில் முட்டைக்கோஸை முக்கிய உணவுப் பொருளாக சேர்ப்பது ஒரு காரணம் எனலாம். உலகம் முழுவதும் விளையும் காய்கறிகளில் ஒன்றான முட்டைக்கோஸ் தன்னிடத்தில் அடக்கியுள்ள சத்துக்களை அறிந்து கொள்வோம்...
பல அடுக்கு இதழ்களைக் கொண்டது முட்டைக்கோஸ். பச்சை, பழுப்பு, சிவப்பு என பல நிறங்களில் முட்டைக்கோஸ்கள் விளைகிறது.
பச்சை முட்டைக்கோஸ் இணையற்ற சத்துக்கள் கொண்டது. குறைந்த கலோரி ஆற்றல் வழங்கக் கூடியது. சுறுசுறுப்பை கூட்டக்கூடியது. கொழுப்பு குறைந்தது. 100 கிராம் முட்டைக்கோஸில் 25 கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது.
முக்கியமான நோய் எதிர்ப்பு பொருளான ‘வைட்டமின் சி', முட்டைக்கோசில் மிகுந்துள்ளது. 100 கிராம் கோஸில் 36.6 மில்லிகிராம் ‘வைட்டமின் சி' கிடைக்கிறது. தொடர்ச்சியாக ‘வைட்டமின் சி' உடலில் சேர்த்துக் கொள்வது அதிகமான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும்.
‘வைட்டமின் பி-5’, ‘வைட்டமின் பி-6’, ‘வைட்டமின் பி-1’ போன்ற அத்தியாவசிய வைட்டமின்களும் முட்டைக்கோஸில் நிறைந்துள்ளது. இவை உணர்வுக்கும், இதர உடற் செயல்பாட்டிற்கும் உறுதுணை செய்யக்கூடியவை.
பொட்டாசியம், மாங்கனீசு, இரும்பு, மக்னீசியம் போன்ற தாது உப்புக்கள் முட்டைக்கோசில் உள்ளது. பொட்டாசியம் உடற்செல்கள் மற்றும் சருமம் வளவளப்புடன் இருக்க துணை செய்யும். இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதிலும் பங்கெடுக்கும். மாங்கனீசு, நோய் எதிர்ப்பு நொதிகள் செயல்பட துணைக் காரணியாக விளங்கும். இரும்புத் தாது, சிவப்பு ரத்த செல்கள் உருவாக்கத்தில் பங்கெடுக்கிறது.
முட்டைக்கோஸில் ‘வைட்டமின் கே’, நிறைய அளவில் உள்ளது. எலும்பு வளர்சிதை மாற்றத்தில் இது பங்கெடுக்கும். அல்சீமர் மற்றும் நரம்பு வியாதிகளின் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் ஆற்றலும் 'வைட்டமின் கே' விற்கு உண்டு.

வறண்ட கண்கள் பாதிப்புகள் யாருக்கும் எந்த வயதிலும் வரும். என்றாலும் ஆண்களை விட பெண்களுக்கு இப்பாதிப்பு அதிகம் ஏற்படும்.
* கண் எரிச்சல்,
* கண்ணில் உறுத்துதல்,
* கண் இமைகள் கனத்து இருத்தல்,
* கண்களில் சோர்வு,
* கண் சிவத்தல்,
* கண் வலி,
* அடிக்கடி பார்வை மங்கியது போல் இருத்தல்,
* கண்ணில் லென்ஸ் போடுபவர்களுக்கு போட முடியாமல் வலி எடுத்தல் ஆகியவைகளை இதனால் ஏற்படும் பாதிப்பாக கூறுவர்.
இந்த பாதிப்புகள் யாருக்கும் எந்த வயதிலும் வரும். என்றாலும் ஆண்களை விட பெண்களுக்கு இப்பாதிப்பு அதிகம் ஏற்படும். கண்ணில் நீர் வரும் முறையில் ஏற்படும் மாறுபாடு இதற்கு ஒரு முக்கிய காரணம் ஆகின்றது. மேலும் காற்று, புகை, வறண்ட காற்று போன்ற பல காரணங்கள் வறண்ட கண் பாதிப்பிற்கு காரணம் ஆகின்றன.
ஆனால் வயது கூடும் பொழுது இப்பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகளும் கூடுகின்றது. மேலும்,
* லென்ஸ் அணிபவர்கள்,
* ஹார்மோன் மாறுபாடு- குறிப்பாக பெண்களின் கர்ப்ப காலம், மாதவிடாய் காலம் போன்றவை,
* சர்க்கரை நோய்,
* தைராய்டு குறைபாடு,
* வைட்டமின் ஏ சத்து குறைபாடு,
* சில வகை மருந்துகள்,
* முறையாக கண் சிமிட்டாமல் கம்ப்யூட்டர், புத்தகம் போன்ற இவற்றினை உற்று பார்த்துக் கொண்டிருப்பது போன்றவைகளும் வறண்ட கண் பாதிப்பினை ஏற்படுத்துகின்றன.
இதனை முறையாக மருத்துவம் மூலம் கவனிக்காவிட்டால் கண்ணில் புண், கிருமி பாதிப்பு போன்றவை ஏற்படும். வெது வெதுப்பான வெந்நீர் ஓத்தடம் மூலம் சிறிது நிவாரணம் கிடைக்கும்.
* அதிக நேரம் கம்ப்யூட்டர், படிப்பு என்று இருப்பவர்கள் கண் மருத்துவர் ஆலோசனையின் பெயரில் கண்ணுக்கான சொட்டு திரவம் பயன்படுத்தலாம்.
* கண் சொட்டு மருந்துகளும் பரிந்துரையின் பேரில் பயன்படுத்தலாம்.
* தேவையான அளவு நீர் குடிக்க வேண்டும்.
* காபி, டீ இவற்றினை குறைத்துக் கொள்ள வேண்டும்.
* ஆல்கஹால் தவிர்க்க வேண்டும்.
* வெளியில் செல்லும் பொழுது கண்களை பாதுகாக்க கறுப்பு கண்ணாடி அணிய வேண்டும்.
* புகை பிடிப்பதனை நிறுத்துங்கள்.
* புகை பிடிப்பவர்கள் அருகில் நிற்காதீர்கள்.
* கண்களை சுத்தமாக வைத்திருங்கள்.
* கண்களை சிமிட்ட பழகுங்கள். (அதாவது ஒன்றினை உற்று பார்க்காமல் கண்களை மூடி, திறக்க பழகுங்கள்).
* கண்டிப்பாய் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், உடல் எடையை குறைக்கவும் கோடை காலத்தில் உணவு விஷயத்தில் சில கட்டுப்பாடுகளை பின்பற்றுவது அவசியமானது.

கோடை காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறையும். ஏனெனில் உடலில் இருந்து வியர்வை அதிகமாக வெளியேறும். அதனால் அதிக அளவு தண்ணீர் பருக வேண்டியது அவசியம். உடல் உறுப்புகளின் இயக்கத்திற்கு தண்ணீர் இன்றியமையாதது. குறிப்பிட்ட இடைவெளியில் தண்ணீரை தொடர்ந்து பருகி நீர்ச் சத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டும்.
வெறுமனே தண்ணீர் பருகுவதற்கு பதில் இளநீர், மாம்பழ ஜூஸ், எலுமிச்சை ஜூஸ், சீரகம் கலந்த பானம் போன்றவற்றை பருகலாம். உடலில் நீர்ச்சத்து சீராக இருந்தால்தான் கோடை காலத்தில் சுறுசுறுப்புடன் இயங்க முடியும். செரிமானம் சுமுகமாக நடைபெறவும் தண்ணீர் உதவுகிறது. இந்த சீசனில் கிடைக்கும் பழங்களை தவிர்க்காமல் சாப்பிட வேண்டும். அவற்றில் ஆன்டி ஆக்சிடென்டுகளும் தாதுக்களும் அதிகம் இருக்கும். தயிர் சாப்பிடுவதும் எளிதாக செரிமானம் நடைபெறுவதற்கு துணை புரியும். உடலில் குளிர்ச்சியையும் தக்க வைத்துக்கொள்ள உதவும்.
கோடை காலத்தில் இரவு உணவை குறைவாக சாப்பிடுவது நல்லது. சூப் வகைகள், சாலட்டுகள் போன்றவற்றை சாப்பிடலாம். இவை செரிமானத்தை எளிமைப்படுத்தும். அதிக உணவு சாப்பிட்டால் செரிமானம் ஆவதற்கு சிரமம் ஏற்படும். அதனால் வளர்சிதை மாற்றத்திலும் பாதிப்பு நேரும். செரிமானம் நன்றாக இருந்தால் அது உடல் எடை குறைப்புக்கும் வழி வகுக்கும். மேலும் வறுத்த, பொரித்த, பேக்கரி உணவுகளையும் தவிர்க்க வேண்டும். இவை கலோரிகள் அதிகம் நிரம்ப பெற்றவை. கொழுப்பு உடலில் சேருவதற்கும் காரணமாகிவிடும்.

கூந்தல் உதிர்வு, இளம்நரை, பொடுகு போன்ற பல்வேறு கூந்தல் பிரச்சனைகளுக்கு இயற்கை முறையில் நிரந்தரமாக தீர்வு காண்பது எப்படி என்று பார்க்கலாம்.
* வெந்தயத்தை அரைத்துத் தலையில் தடவிக் குளித்தால், தலை முடி பளபளப்பாகவும், கறுப்பாகவும், மென்மையாகவும் வளரும்.
* ஒரு பிடி வேப்பிலையை எடுத்து நீரில் வேக வைத்து ஒருநாள் கழித்து மறுநாளும் வேக வைத்து, அந்த நீரைக் கொண்டு தலைமுடியை அலசி வந்தால், முடிகொட்டுவது நின்று விடும். பேன் இருந்தாலும் ஒழிந்து போகும்.
* நரை முடி கொண்டவர்கள், இயற்கையான முறையில் நரை முடியைக் கறுப்பாக்கிக் கொள்ள விரும்புபவர்கள் அவுரி இலையையும், மருதாணி இலையையும் இடித்துத் தேங்காய் எண்ணெயில் காய்ச்சி வடிகட்டித் தலையில் தடவலாம். முடியின் நிறம் மாறும்.
* தலைமுடி நன்கு வளர செவ்வந்திப்பூவை எண்ணெயில் கலந்து தடவி வரவேண்டும்.
* கூந்தல் நரை மறைய வேண்டுமானால், தினமும் வெண் தாமரைப்பூ கஷாயம் செய்து, அரை டம்ளர் வீதம் 40 நாள்கள் பருகி வந்தால் நல்ல பலன் கிட்டும்.
* தேவையான அளவு மருதாணி இலைகளைப் பறித்து வந்து சுத்தம் செய்து, நன்கு அரைத்து தலையில் தடவி இரண்டு மணி நேரம் கழித்து குளித்தால், தலைமுடி மிருதுவாக இருக்கும். உடல் சூடும் குறையும்.
* நெல்லி இலையையும், இலந்தை இலையையும் மை போல் அரைத்து தலையில் தடவி பத்து நிமிடம் காயவிட்டு குளித்தால், தலைமுடி நரைப்பது நிற்கும்.
* கேரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேவையான தேங்காய் எண்ணெய் யில் காய்ச்சித் தலைக்குத் தேய்த்து வந்தாலும் கூந்தல் செழித்து வளரும்.
* நெல்லிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், இள நரை கருமை நிறத்திற்கு மாறும். முடியும் செழுமை பெறும்.
* முளைக்கீரையை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிட்டு வர, நரை நீங்கும். முளைக்கீரையை நன்கு உலர்த்திப் பொடி செய்து தினசரி அரை ஸ்பூன் சாப்பிட்டும் வரலாம். நரை விலகும்.
* இருபது செம்பருத்திப் பூக்களைப் பறித்து வந்து, காம்பை நீக்கி சுத்தம் செய்து தேவையான தேங்காய் எண்ணெயில் கசக்கிப் போட்டு, சடசடப்பு நின்றதும் இறக்கி வைத்து, ஆறிய பின் பாட்டிலில் சேகரித்து வைத்துக்கொண்டு தினமும் தடவி வந்தாலும் முடி செழித்து வளரும். முடி உதிர்வதும் நின்றுபோகும்.

வெள்ளை உளுந்தை விட அதன் தோல் நீக்காத பாரம்பரியமாய் பயன்படுத்தி வந்த கருப்பு உளுந்துக்கு சத்து அதிகம். சத்து மிக்க உளுந்தங்களி அனைத்து வயதினருக்கும் ஏற்ற அருமையான மாலை நேர சிற்றுண்டி.
தேவையான பொருட்கள்
கருப்பு உளுந்து - கால் கிலோ,
பனைவெல்லம் - கால் கிலோ,
நல்லெண்ணெய் - 200 மி.லி.
செய்முறை
உளுந்தை வெறும் கடாயில் வறுத்துக் கரகரப்பாகப் பொடித்துக் கொள்ளவும்.
பனைவெல்லத்தில் தண்ணீர் விட்டு, பாகு காய்ச்சி, வடிகட்டி, மறுபடி அடுப்பில் வைக்கவும்.
அதில் உளுந்து பொடியை சிறிது, சிறிதாகச் சேர்த்துக் கிளறவும்.
நன்கு வெந்ததும், நல்லெண்ணெய் விட்டுக் கிளறி, இறக்கவும்.
வயதுக்கு வந்த பெண்களுக்குக் கொடுத்தால் இடுப்பு எலும்பு வளர்ச்சி பெறும். ரத்தப் போக்கு சிக்கல்கள் தீரும்.

குழந்தைகளுக்கு வரும் டெங்கு காய்ச்சலின் தன்மை, அதிலிருந்து குணமாகும் வழிமுறைகள், கையாள வேண்டிய முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து அறிந்து கொள்ளலாம்.
தமிழகத்தில் தென் மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாக டெங்கு காய்ச்சலின் பாதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகிக் கொண்டி ருக்கின்றன. அதிலும் இந்த காய்ச்சலுக்கு குழந்தைகள் பலரும் உயிர் இழந்துள்ள தகவல் மக்களுக்கு ஒருவித பயத்தை உருவாக்கியிருக்கிறது. இந்நிலையில் குழந்தைகளுக்கு வரும் டெங்கு காய்ச்சலின் தன்மை, அதிலிருந்து குணமாகும் வழிமுறைகள், கையாள வேண்டிய முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து பாளையங்கோட்டை யைச் சேர்ந்த குழந்தைகள் மருத்துவ நிபுணர் டாக்டர் வே.த. ராஜேஷ் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
டெங்கு காய்ச்சல் என்றால் என்ன?
ஏடீஸ் (Aedis) கொசுக்களால் பரப்பப்படும் ஒருவித வைரஸ் கிருமியால் ஏற்படும் காய்ச்சல் டெங்கு காய்ச்சல். இதில் 4 வகை வைரஸ்கள் உண்டு.
1) சாதாரண டெங்கு, 2) தீவிரமான டெங்கு
சாதாரண டெங்கு
இதில் பிறவகை வைரஸ் காய்ச்சலைப் போல மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை காய்ச்சல், உடல்வலி, மூட்டு வலி, தலைவலி மற்றும் கண்களுக்கு பின்னால் வலி போன்ற அறிகுறிகள் ஏற்படும். சிகிச்சை எடுத்தாலும் அல்லது எடுக்காவிட்டாலும் குழந்தைகள் எந்தவித பாதிப்புமின்றி குணமடைந்து விடுவார்கள்.
தீவிரமான டெங்கு
முதல் மூன்று அல்லது நான்கு நாட்கள் சாதாரண டெங்கு காய்ச்சலை போன்றே இருக்கும். ஆனால் நான்கு அல்லது ஐந்தாவது நாட்களிலிருந்து குழந்தைகள் மிகவும் சோர்வடைந்து காணப்படுவார்கள். இந்த தருணத்தில் அவர்களுக்கு இரத்த பரிசோதனை செய்து பார்த்தால் இரத்த தட்டணுக்கள் (Platelets) குறைவாகவும், இரத்த அணுக்கள் அடர்த்தியாகவும் (Hemoconstration) இருக்கும். குழந்தையின் இரத்த அழுத்தத்தில் குறைவு ஏற்படும். (Circulatory Shock) இரத்த தட்டணுக்கள் மிகவும் குறைந்தால் (> 20,000 v 10000) இரத்தக்கசிவு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட குழந்தைகளை வீடுகளில் வைத்து பராமரிப்பது எப்படி?
டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளுக்கு அடிக்கடி நீராகாரங்களையும், தண்ணீரையும் கொடுத்து கொண்டிருக்க வேண்டும். வாந்தி வருவதாக இருந்தாலும் இவற்றை கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு என்னென்ன நீராகாரங்கள் கொடுக்கலாம்?
ஓஆர்எஸ் (oral rehidrations solution) எனப்படும் வாந்தி பேதி நேரத்தில் கொடுக்கும் உப்புக் கரைசல், இளநீர், பழச்சாறுகள், பால், கஞ்சி ஆகியவற்றைக் கொடுக்கலாம். திட உணவுகளை உட்கொண்டால் அவற்றையும் கொடுக்கலாம்.
மருத்துவமனையில் எந்த நிலையில் சேர்க்க வேண்டும்?
குழந்தைகள் நீரோ, நீராகாரங்களையோ அருந்தாமல் இருந்தால், சிறுநீர் கழிக்கும் அளவு குறைந்தால், குழந்தைகள் மிகவும் சோர்வடைந்து மயக்க நிலையில் இருந்தால் அவர்களுக்கு நரம்பு மூலம் நீர்ச்சத்து, உப்புச்சத்து கொடுக்கப்பட வேண்டும்.
எனவே அவர்களை மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். மேலும் குழந்தைகளுக்கு வாய், மூக்கு, மலத்துவாரம், பல் வழியாக ரத்தக் கசிவு காணப்பட்டால் கண்டிப்பாக அவர்களை மருத்துவமனையில் கால தாமதம் இல்லாமல் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து விட வேண்டும்.
குழந்தைகள் அனைவருக்கும் ரத்தம் கொடுக்க வேண்டும் என்பது உண்மையா?
உண்மை கிடையாது. எல்லா குழந்தைகளுக்கும் ஏற்ற வேண்டியிருக்காது. ரத்தக் கசிவு ஏற்படும் குழந்தைகளில் பிளேட்லெட் எண்ணிக்கைகள் அதிரடியாகக் குறைந்து அபாய நிலையில் உள்ள குழந்தைகளுக்கு ரத்தமோ அல்லது பிளேட்லெட்டுகளையோ ஏற்ற வேண்டி இருக்கலாம்.
ஆண்டிபயாட்டிக் கொடுக்கலாமா? கொடுத்தால் உதவுமா?
டெங்கு காய்ச்சல் வைரஸ் வகை என்பதால் ஆன்டிபயாட்டிக் மருந்துகள் உபயோகப்படாது.
டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?
பகல் நேரங்களில் கடிக்கும் ஏடிஎஸ் வகை கொசுக்களால் மட்டுமே இந்த காய்ச்சல் ஏற்படுகிறது. எனவே பகல் நேரங்களில் கொசுக்கள் கடிக்காமல் விழிப்புடன் இருக்க வேண்டும். வீடுகள், தெருக்களில் சுத்தமான தண்ணீர் நாள்படத் தேங்காமல் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
டெங்கு காய்ச்சலால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன?
டெங்கு காய்ச்சல் வந்த 4 அல்லது 5 நாள்களில் சிலருக்கு மட்டுமே ஷாக்சின்ட்ரோம் விளைவுகள் ஏற்படுகின்றன. ரத்தத்தில் உள்ள நீர் பிளாஸ்மா ரத்தக் குழாயை விட்டு திசுக்களுக்கு இடையே கசிவதால் ரத்த நாளங்களில் உள்ளே இருக்கும் ரத்தத்தின் அளவும், நீர்த்தன்மையும் குறைந்து விடுகிறது. இதனால் ரத்தம் ஓட் டம் குறைபடுவதுடன் ரத்த அழுத்தமும் குறைகிறது.
டெங்கு காய்ச்சலை உறுதி செய்ய ரத்தப் பரிசோதனை உள்ளதா?
1) Card, 2) Eliza, 3) Immunoflorescence, 4) PCR
தற்போதுள்ள பரிசோதனைகள் மூலம் முதல் நாளில் இருந்தே டெங்கு வைரஸ் தாக்குதலை கண்டறிய முடியும்.
டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க தடுப்பூசி ஏதும் உள்ளதா?
தற்போது ஏதும் இல்லை. ஆனால் ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
டெங்கு காய்ச்சல் என்றால் பயப்பட வேண்டுமா?
எல்லா டெங்கு காய்ச்சலுக்கும் பயப்பட வேண்டியது இல்லை. ஒரு வயதுக்கு கீழுள்ள குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் தீவிரமாக இருந்தால் அவர்களை தொடக்க நிலையிலேயே மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெறுவது நல்லது. சரியான நேரத்தில் மருத்துவரிடம் குழந்தைகளை காண்பிப்பதன் மூலம் நாம் பயப்படாமல் இருக்கலாம்.
டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெறாமல் தொக்கம் எடுப்பது, கயிறு கட்டுவது, சீர் தட்டுவது என்றெல்லாம் மூட நம்பிக்கைகளில் இறங்கக் கூடாது.
டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உரிய நீராகாரங்களை கொடுத்து, உரிய நேரத்தில் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெறுவதன் மூலம் குணம் பெற முடியும்.
குழந்தைகள் மருத்துவ நிபுணர், முத்தமிழ் மருத்துவமனை, குழந்தைகள் நல சிறப்பு சிகிச்சை மையம், 59, திருவனந்தபுரம் சாலை, பாளையங்கோட்டை. தொலைபேசி: 0462- 2560783, 2570783, 9486559911.

கிரெடிட் கார்டு பயன்படுத்துவதில் கவனம் தேவை. அதனை மட்டும் சரியாக பின்பற்றினால் கிரெடிட் கார்டு உங்களுக்கு அட்சய பாத்திரம் தான்...
நமது நாட்டில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பின்னர், புதிய ரூ.2000, ரூ.500 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த நிகழ்வுக்கு பிறகு நாட்டில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்றவற்றின் மூலம் நோட்டில்லா பணம் வர்த்தகம் அதிகரித்துள்ளது என்றே கூறலாம். எனவே கிரெடிட் கார்டு பயன்படுத்துவதில் கவனம் தேவை. அதனை மட்டும் சரியாக பின்பற்றினால் கிரெடிட் கார்டு உங்களுக்கு அட்சய பாத்திரம் தான்...
வசதிகள் மற்றும் சலுகைகள்
முதலில் கிரெடிட் கார்டை தேர்ந்தெடுக்கும் போது வசதிகள் மற்றும் சலுகைகள் தரும் கார்டுகள் எது? என்பதை அறிந்து கொண்டு அந்த நிறுவனத்தை தேர்வு செய்ய வேண்டும். கிரெடிட் கார்டு உங்களுக்கு கிடைத்தவுடன் அதனை பயன்படுத்த அவசரம் காட்டக்கூடாது. முதலில் அதற்கான நிபந்தனைகள், கட்டுப்பாடுகள் போன்ற அனைத்தையும் தெளிவாக படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
அதில் சந்தேகம் இருந்தால் அதனை அதன் நிறுவனத்திடம் கேட்டு தெரிந்து கொள்வது அவசியம். இவ்வாறு விசாரித்து அறிந்து கொள்ளாமல் பின்னர் ஏதாவது அதிக கட்டணம் விதிக்கப்பட்டால் இப்படி ஒரு விதிமுறை இருப்பது எனக்கு தெரியாது என்று அவர்களிடம் கூற முடியாது. அதனை அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்து விடுவார்கள். அப்புறம் உங்களது பணம் வீணாகி விடும். பில்களுக்கு உரிய தொகை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செலுத்தி விட வேண்டும்.
இல்லையென்றால் கூடுதல் வட்டி மட்டுமின்றி அபராதமும் விதிப்பார்கள். ஒரு வேளை ஒரே பில் மிக அதிகமாக இருந்தால் அதனை மொத்தமாக செலுத்துவது உங்களுக்கு கடினமாக இருக்கலாம். இது போன்ற நேரங்களில் நிறுவனத்தினிடம் பேசி தவணை முறையில் கட்டுவதற்கு அனுமதி கேட்கலாம். அதற்கு ஒரு சிறிய அளவு வட்டி மட்டுமே விதிப்பார்கள்.
நன்மை தரும்
கிரெடிட் கார்டுகளுக்கான மாத பில்லை பார்த்து விட்டு குப்பை தொட்டியில் போடும் பழக்கம் இருந்தால் அதை உடனடியாக நிறுத்தி விடுங்கள். அந்த பில்களை தனியாக ஒரு கோப்பில் பாதுகாத்து வைத்திருங்கள். ஏனெனில் அப்போது தான் கணக்கு சரியாக உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள முடியும். குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு அவற்றை அழித்து விடலாம். இது போன்ற பல்வேறு அம்சங்களை நீங்கள் நினைவில் கொண்டால் கிரெடிட் கார்டு உங்களுக்கு நன்மை தரும். சிலர் மலிவாக கிடைக்கிறதே என்பதற்காக 3, 4 கிரெடிட் கார்டுகளை வாங்கி வைத்துக்கொள்கிறார்கள். இதனால் அவர்களுக்கு பிரச்சினை தான். எனவே கிரெடிட் கார்டு விஷயத்தில் கவனமாக நடந்து கொள்ளுங்கள்...

பெண்கள் தங்கள் முகத்தை அழகாக்க கண்ட கண்ட கிரீம்களை பயன்படுத்தாமல் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த இயற்கை வழிமுறைகளை பின்பற்றி பயன்பெறவும்.
தோல் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்றால், கொத்தமல்லி இலையில் சாறு எடுத்து அதில் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள்தூளைக் கலந்து தோல் மீது தடவி வந்தால் தோல் மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாற ஆரம்பிக்கும்.
பாதாம் பருப்பை அரைத்து தேன், எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவிவர முகம் பளப்பளப்பாகும்.
உருளைக்கிழங்கு சாறுடன் கடலைமாவையும் சேர்த்து முகத்தில் தேய்த்து வந்தாலும் முகம் பொலிவு பெறும்.
கஸ்தூரி மஞ்சள் தூளை பன்னீரில் கலந்து வெயிலில் வைத்து சூடாக்கி, அதை முகத்தில் தேய்த்து வந்தால் முகப்பருக்கள் மற்றும் அவை வந்த அடையாளங்கள் மாயமாகிவிடும்.
பெண்கள் கஸ்தூரிமஞ்சள், பூலாங்கிழங்கு, ஆகிய இரண்டையும் அரைத்து முகத்தில் பூச முகம் பளபளப்பாக இருக்கும்.
2 ஸ்பூன் வெள்ளரிக்காய் சாறுடன் ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து குழைத்து முகத்தில் பூசிக்கொள்ள வேண்டும். 10 நிமிடங்களுக்கு பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். சருமம் பொலிவுடன் காட்சியளிக்கும்.
1 ஸ்பூன் ரோஸ் வாட்டருடன் ஒரு ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து பசைபோல் நன்றாக குழைத்து முகத்தில் பூச வேண்டும். அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.வாரம் இருமுறை இவ்வாறு செய்துவந்தால் சரும ஆரோக்கியம் மேம்படும்.

20 வயது முதல் 40 வயது வரையிலான பெண்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதால் கருவுறுதல் பாதிக்கும் என கருதி தடுப்பூசியை தவிர்த்து வருகின்றனர்.
இந்தியாவில் ஆண்களை விட பெண்கள் குறைவாகவே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். 20 வயது முதல் 40 வயது வரையிலான பெண்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதால் கருவுறுதல் பாதிக்கும் என கருதி தடுப்பூசியை தவிர்த்து வருகின்றனர்.
இதுபற்றி புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி டீனும், மகப்பேறு நிபுணருமான டாக்டர் பூவதி கூறும்போது, கொரோனா தடுப்பூசி மலட்டு தன்மைக்கு காரணமாகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. கட்டுக்கதைகளால் ஏற்படுத்தப்பட்ட பீதியால் இளம்பெண்கள் தடுப்பூசியை தவிர்க்கிறார்கள். இதில் உண்மை இல்லை. ஆகவே கொரோனாவை தடுக்க இளம்பெண்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும் என்றார்.
திருச்சி தனியார் ஆஸ்பத்திரி இயக்குனர் டாக்டர் சர்மிளா அய்யாவு பேசும் போது, கர்ப்பிணி பெண்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதால் வயிற்றில் இருக்கும் குழந்தையை பாதிக்கும் என்றோ, தாயை பாதிக்கும் என்றோ எந்த ஆய்வுகளும் உறுதிப்படுத்தவில்லை. தடுப்பூசி போட்டுக்கொள்வது அந்த கர்ப்பிணி பெண்ணின் உடல் சார்ந்தது. இதில் டாக்டர்தான் தடுப்பூசி வேண்டுமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்ய வேண்டும் என்றார்.
கொரோனா வைரஸ் தடுப்பூசி, கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பானதுதான் என்று அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு முடிவு கூறுகிறது. மகளிர் மற்றும் மகப்பேறு பத்திரிகையில் இந்த ஆய்வு முடிவு வெளியாகி உள்ளது. இந்த ஆய்வை நடத்திய நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தின் பீன்பெர்க் மருத்துவக்கல்லூரி உதவிப் பேராசிரியர் ஜெப்ரி கோல்டுஸ்டீன் இதுபற்றி கூறுகையில், “கர்ப்பிணிக்கு நஞ்சுக்கொடி என்பது விமானத்தின் கருப்பு பெட்டி போன்றது.
கர்ப்பத்தில் ஏதேனும் தவறு நடந்தால் என்ன நடந்தது என்று கண்டறிய நாங்கள் நஞ்சுக்கொடியின் மாற்றங்களைத்தான் ஆராய்வோம். கொரோனா வைரஸ் தடுப்பூசியை பொறுத்தமட்டில் இது கர்ப்பிணி பெண்களின் நஞ்சுக்கொடியை சேதப்படுத்தாது” என குறிப்பிட்டுள்ளார். கர்ப்பிணி பெண்களிடம் தடுப்பூசி தொடர்பாக நிறைய தயக்கம் இருப்பதாகவும், தங்களது ஆய்வுத்தரவுகள் ஆரம்ப கட்ட தகவல்களாக இருந்தபோதும், கர்ப்ப காலத்தில் தடுப்பூசி ஆபத்து குறித்த கவலையை குறைக்கும் என்றும் கூறி உள்ளார்.

அதீத குறை கூறி வளர்க்கப்படும் பிள்ளைகள் தன்னம்பிக்கை குறைவானவர்களாகவும், தைரியமற்றவர்களாகவும் வளர்வதோடு, மனஅழுத்ததிற்கும் ஆளாகிறார்கள்.
இந்த உலகமே தன் பிள்ளையைப் புகழ வேண்டும் என விரும்பும் பெற்றோர்கள் அவர்களை தட்டிக் கொடுத்து வளர்த்து அதை சாதிப்பதில்லை. கொட்டிக் கொட்டியே வளர்க்கிறார்கள் என்கிறது மன இயல் ஆய்வுகள். இந்த ஆய்வுகள் ஒவ்வொரு வீட்டிலும் தவிர்க்க முடியாத பிரச்னையாக இருப்பது பெற்றோருக்கும் பிள்ளைக்குமான கருத்து வேறுபாடும், பெற்றோரின் கண்டிப்பும் தான் எனக் கூறுகிறது.
அதீத குறை கூறி வளர்க்கப்படும் பிள்ளைகள் தன்னம்பிக்கை குறைவானவர்களாகவும், தைரியமற்றவர்களாகவும் வளர்வதோடு, மனஅழுத்ததிற்கும் ஆளாகிறார்கள். குறைகளையே கேட்டு கேட்டு வளரும் அவர்கள் பாஸிட்டிவான சிந்தனைகள் இல்லாமல் நெகட்டிவான சிந்தனை மிக்கவர்களாகவும், தன்னைச் சுற்றி இருப்பவர்களிடம் குறை காணக் கூடியவர்களாகவும் வளர்கிறார்கள் என்று அதிர்ச்சி தகவல் தருகிறது.
பிரெஞ்ச் நாட்டின் புகழ் பெற்ற கட்டுரையாளரான “ஜோசப் யுபர்ட்” குழந்தைகளுக்கு குறை சொல்லிக் கொண்டே இருக்கும் விமர்சகர்கள் தேவையில்லை, அவர்களுக்கு நல்ல முன் மாதிரியே தேவை என நச்சென்று முன் வைக்கிறார். நம் பிள்ளைகளை நாம் குறை சொல்லாவிட்டல் பின் எப்படி திருந்துவார்கள்? இது ஒவ்வொரு பெற்றோரின் அசைக்க முடியாத நம்பிக்கை.உண்மையில் ஒரு மாற்றுக் குறையில்லா பிள்ளையை நான் உருவாக்கி இருக்கிறேன் என்று இந்த உலகிற்கு மார் தட்டிச் சொல்ல வேண்டும் என்று நாம் நினைப்பது தவறில்லை தான்.
ஆனால் அதனால் நம்மையுமறியாமல் என்ன செய்கிறோம். அவர்களிடம் இருக்கும் நிறைகளையெல்லாம் நாம் மிக இயல்பாக எடுத்துக் கொள்கிறோம். அதைப் பற்றி சிறிதளவு கூட அவர்களிடம் சிலாகித்துப் பேசுவதில்லை. ஆனால் இதுவே குறைகளைக் கண்களில் விளக்கெண்ணையை விட்டுக்கொண்டு துருவித் துருவி பார்த்து சரி செய்ய வேண்டும் என்று முனைகிறோம்.
இதில் அந்தக் குழந்தைக்கு என்ன சொல்லிக் கொடுக்கிறோம்? உன்னிடம் குறையே இருக்கக் கூடாது என்று மட்டுமா சொல்லித் தருகிறோம். நீயும் இப்படித் தான் மற்றவரிடம் என்ன குறை இருக்கிறது என்று உற்றுப் பார்த்து சுட்டிக் காட்டிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதைத் தானே அந்த பிஞ்சு மனதில் விதைக்கிறோம்.
ஏனென்றால் ஒரு குழந்தை பிறந்து ஏழு வயது வரை தன்னைச் சுற்றி நடப்பவற்றிலிருந்தே எல்லாவற்றையும் கற்றுக் கொள்கிறது. நல்லதும் அல்லதும் நம்மிடம் இருந்து தான் அவர்களுக்கு தொடர்கிறது.வாழ்வியல் பட்டறை ஒன்றில், எப்போது பார்த்தாலும் என் கணவர் என்னிடம் குறை கண்டுபிடித்துக் கொண்டே இருக்கிறார் என்று அங்கலாய்த்த பெண்ணிடம் அந்த பயிற்சியாளர் கேட்டார், ‘உங்கள் பையன் எப்படி இருக்கிறான் நன்றாகப் படிக்கிறானா?’
நாம் கணவரைப் பற்றி பேசினால் இவர் அதற்கு பதில் சொல்லாமல் நம் பையனைப் பற்றி கேட்கிறாரே என்று சம்பந்தமில்லாத அவர் கேள்வியால் கொஞ்சம் எரிச்சலடைந்த அந்தப் பெண், “படிப்பு பரவாயில்லை நல்ல மார்க் தான் வாங்குகிறான். ஆனால் பொறுப்பு என்பது கொஞ்சம் கூட இல்லை. எதையும் எடுத்த இடத்தில் வைப்பதில்லை. அவன் தம்பியிடம் எதற்கெடுத்தாலும் சண்டை, அப்படி, இப்படி என குறைகளை ஒரு ஆதங்கத்தோடு அடுக்கிக் கொண்டே போகத் தொடங்கினார். அவர் முடிப்பதற்காகக் காத்திருந்த பயிற்சியாளரும், அது முடிவதாகத் தெரியவில்லை என்பதால் வேறு வழியில்லாமல் அவர் குறைகளினூடே இடை மறிக்கிறார்.
இதையெல்லாம் நீங்கள் என்னிடம் தான் சொல்கிறீர்களா இல்லை உங்கள் பிள்ளையிடமும் சொல்லி இருக்கிறிர்களா? என்ன கேட்கிறீர்கள் அவனிடம் சொல்லாமலா ஒவ்வொரு முறையும் அவன் குறைகளை சுட்டிக் காட்டுவதிலே தான் என் பொழுதே போகிறது.
“ஏன்?” இது பயிற்சியாளர்.
சொன்னால் தானே தெரியும் .அப்போது தானே திருந்துவான். அவன் அவனைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்று தான் சொல்கிறேன். ஆனால் எங்கே திருத்திக் கொள்கிறான், கோபம் தான் படுகிறான். நாம் ஏதோ அவனிடம் குறை கண்டு பிடித்துக் கொண்டிருக்கிறோம் என்று எரிச்சல் தான் வருகிறது அவனுக்கு என்றார். சற்று முன் தன் கணவர் தன்னிடம் குறை கண்டுபிடித்துக் கொண்டே இருக்கிறார் என்று எரிச்சல் பட்ட அந்தப் பெண்.
இது தான் நிதர்சனம். நாம் குறை சொல்லும்போது நாம் அவர்கள் அக்கறை எடுத்து திருத்துகிறோம் என்று பலமாக நம்புகிறோம். ஆனால் இதுவே நம்மை யாராவது குறை சொன்னால,” ஏன் இப்படி இருக்கிறாரகள்?! எப்போது இவர்கள் திருந்துவார்கள் என்று பலவீனமாகித் துடிக்கிறோம்.
படிப்பில் ஒரு குழந்தை கொஞ்சம் மார்க் குறைத்து வாங்கி விட்டால் போதும், அது என்ன செய்தாலும் குற்றம். எது கேட்டாலும் சாடைப் பேச்சு. அது சற்று நேரம் டி.வி பார்த்தால் கூட, “இப்போது என்ன டி.வி. கேட்கிறது முதலில் மார்க் அதிகம் வாங்கப் பார்” என்கிறோம்.
அந்தக் குழந்தை சட்டை வாங்கிக் கேட்டாலும், ஸ்வீட் வாங்கிக் கேட்டாலும் வாங்கிக் கொடுப்பதில் நாம் தவறுவதில்லை. ஆனால் நம் செயலின் முடிவு அவர்கள் தவறு களை சுட்டிக் காட்டுவதிலும் அதை அவர்கள் மறந்துவிடக் கூடாது என்பதிலும் தான் முடிகிறது.

நேரம் தவறால் எடுத்துக்கொள்ளும் சத்தான உணவுகள் நம்முடைய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன் நோயை அண்ட விடாமலும் தடுக்கும். அதற்கு இந்த பார்லி துளசி சூப் உதவும்.
தேவையான பொருட்கள்
பார்லி தூள் - 2 டீஸ்பூன்
பார்லி அரிசி - 4 டீஸ்பூன்
பீன்ஸ், கேரட் - தலா 50 கிராம்
மிளகு தூள் - 3 டீஸ்பூன்
வெங்காயத்தாள் - சிறிதளவு
துளசி இலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
கேரட், பீன்ஸ், வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
இரண்டு டீஸ்பூன் பார்லி தூள் தயாரிக்க தேவையான அளவு பார்லி அரிசியை நன்றாகக் கழுவி உலரவைக்கவும். பிறகு கடாயில் வறுத்து அரைத்துக்கொண்டால் பார்லி தூள் ரெடி. இதை இரண்டு டீஸ்பூன் எடுத்துக்கொள்ளவும்.
பார்லி அரிசியை நான்கு மணி நேரம் ஊறவைத்து பிறகு நன்றாக வேகவைத்துக் கொள்ளவும்.
பீன்ஸ், கேரட்டை தனியாக வேகவைத்துக்கொள்ளவும்.
ஒரு கடாயில் வேகவைத்த பார்லி அரிசி, வேகவைத்த பீன்ஸ், கேரட்டைப் போட்டு தேவையான அளவு உப்பு, பார்லி தூள், தண்ணீர் சேர்த்து ஒரு கொதிவந்தவுடன் மிளகுத்தூள், உப்பு, நறுக்கிய வெங்காயத்தாள் சிறிதளவு, துளசி இலைகளைக் கிள்ளிப்போட்டு, ஒரு கொதிவந்தவுடன் இறக்கினால் சுவையான
பார்லி துளசி வெஜிடபிள் சூப் ரெடி.