search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பெண்களுக்கு ஏற்படும் வறண்ட கண் பாதிப்பு
    X
    பெண்களுக்கு ஏற்படும் வறண்ட கண் பாதிப்பு

    பெண்களுக்கு ஏற்படும் வறண்ட கண் பாதிப்பு

    வறண்ட கண்கள் பாதிப்புகள் யாருக்கும் எந்த வயதிலும் வரும். என்றாலும் ஆண்களை விட பெண்களுக்கு இப்பாதிப்பு அதிகம் ஏற்படும்.
    * கண் எரிச்சல்,
    * கண்ணில் உறுத்துதல்,
    * கண் இமைகள் கனத்து இருத்தல்,

     * கண்களில் சோர்வு,
    * கண் சிவத்தல்,
    * கண் வலி,
    * அடிக்கடி பார்வை மங்கியது போல் இருத்தல்,
    * கண்ணில் லென்ஸ் போடுபவர்களுக்கு போட முடியாமல் வலி எடுத்தல் ஆகியவைகளை இதனால் ஏற்படும் பாதிப்பாக கூறுவர்.

    இந்த பாதிப்புகள் யாருக்கும் எந்த வயதிலும் வரும். என்றாலும் ஆண்களை விட பெண்களுக்கு இப்பாதிப்பு அதிகம் ஏற்படும். கண்ணில் நீர் வரும் முறையில் ஏற்படும் மாறுபாடு இதற்கு ஒரு முக்கிய காரணம் ஆகின்றது. மேலும் காற்று, புகை, வறண்ட காற்று போன்ற பல காரணங்கள் வறண்ட கண் பாதிப்பிற்கு காரணம் ஆகின்றன.

    ஆனால் வயது கூடும் பொழுது இப்பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகளும் கூடுகின்றது. மேலும்,

    * லென்ஸ் அணிபவர்கள்,
    * ஹார்மோன் மாறுபாடு- குறிப்பாக பெண்களின் கர்ப்ப காலம், மாதவிடாய் காலம் போன்றவை,
    * சர்க்கரை நோய்,
    * தைராய்டு குறைபாடு,
    * வைட்டமின் ஏ சத்து குறைபாடு,
    * சில வகை மருந்துகள்,
    * முறையாக கண் சிமிட்டாமல் கம்ப்யூட்டர், புத்தகம் போன்ற இவற்றினை உற்று பார்த்துக் கொண்டிருப்பது போன்றவைகளும் வறண்ட கண் பாதிப்பினை ஏற்படுத்துகின்றன.

    இதனை முறையாக மருத்துவம் மூலம் கவனிக்காவிட்டால் கண்ணில் புண், கிருமி பாதிப்பு போன்றவை ஏற்படும்.  வெது வெதுப்பான வெந்நீர் ஓத்தடம் மூலம் சிறிது நிவாரணம் கிடைக்கும்.

    * அதிக நேரம் கம்ப்யூட்டர், படிப்பு என்று இருப்பவர்கள் கண் மருத்துவர் ஆலோசனையின் பெயரில் கண்ணுக்கான சொட்டு திரவம் பயன்படுத்தலாம்.
    * கண் சொட்டு மருந்துகளும் பரிந்துரையின் பேரில் பயன்படுத்தலாம்.
    * தேவையான அளவு நீர் குடிக்க வேண்டும்.
    * காபி, டீ இவற்றினை குறைத்துக் கொள்ள வேண்டும்.
    * ஆல்கஹால் தவிர்க்க வேண்டும்.
    * வெளியில் செல்லும் பொழுது கண்களை பாதுகாக்க கறுப்பு கண்ணாடி அணிய வேண்டும்.
    * புகை பிடிப்பதனை நிறுத்துங்கள்.
    * புகை பிடிப்பவர்கள் அருகில் நிற்காதீர்கள்.
    * கண்களை சுத்தமாக வைத்திருங்கள்.
    * கண்களை சிமிட்ட பழகுங்கள். (அதாவது ஒன்றினை உற்று பார்க்காமல் கண்களை மூடி, திறக்க பழகுங்கள்).
    * கண்டிப்பாய் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
    Next Story
    ×