search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    தாய்மைக்கு தயாராவதற்கு முன் இந்த கேள்விகளுக்கு விடை காணுங்கள்
    X
    தாய்மைக்கு தயாராவதற்கு முன் இந்த கேள்விகளுக்கு விடை காணுங்கள்

    தாய்மைக்கு தயாராவதற்கு முன் இந்த கேள்விகளுக்கு விடை காணுங்கள்

    திருமணமான ஜோடிகள் தாய்மைக்கு தயாராகுவதற்கு முன்னால் 14 கேள்விகளுக்கு விடைகாணவேண்டும். இந்த கேள்விகள் அனைத்தும் பெண்ணுக்குரியவை. அவை:
    கொரோனா காலகட்டத்தில் புதுமண தம்பதிகளிடம் மாறுபட்ட சிந்தனை உருவாகியிருக்கிறது. முன்பு திருமணமானதும் ஜோடிகள் தாய்மையடைவதை பற்றி சிந்திப்பதில்லை. கருத்தடை முறைகளை கடைப்பிடித்தபடி தங்களது பணியை வலுப்படுத்திக் கொள்வதற்கும், தங்களது பொருளாதார நிலையை மேம்படுத்திக்கொள்வதற்கும் முன்னுரிமை கொடுப்பார்கள். இப்போது அந்த சிந்தனையில் தலைகீழான மாற்றம் உருவாகியிருக்கிறது.

    தங்களது பணி, பொருளாதார நிலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் விரைவாக தாய்மையடைவது பற்றி சிந்திக்கிறார்கள். குறிப்பிட்ட வயதைக் கடந்துவிட்டால் தாய்மையடைவதில் சிக்கல் ஏற்பட்டுவிடும் என்று கருதுவதும், குழந்தையின்மையால் அவதிப்பட வேண்டியதாகிவிடும் என்று நினைப்பதுமே அதற்கு காரணமாக இருக்கிறது. அதுவும் ஒருவகையில் உண்மைதான், இந்தியாவில் குழந்தையில்லாத தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது!

    திருமணமான ஜோடிகள் தாய்மைக்கு தயாராகுவதற்கு முன்னால் 14 கேள்விகளுக்கு விடைகாணவேண்டும். இந்த கேள்விகள் அனைத்தும் பெண்ணுக்குரியவை. அவை:

    - கருத்தரிக்க ஏற்ற வயதுதானா?

    - முன்பே அம்மைத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறதா?

    - கணவருக்கும்- உங்களுக்கும் ரத்தப்பொருத்தம் இருக்கிறதா?

    - ஏதாவது கருத்தடை முறையை கடைப்பிடித்து வருகிறீர்களா? கடைப்பிடித்துவந்தால் அதனை அகற்றவேண்டிய காலம் எது?

    - புகைப்பழக்கம், மதுப்பழக்கம் இருக்கிறதா?

    - ஏற்கனவே ஏதேனும் நோய்கள் இருக்கிறதா? இருந்தால், அந்த நோய்களுக்கு பயன்படுத்திக்கொண்டிருக்கும் மருந்து மாத்திரைகள் என்னென்ன?

    - வேலைபார்க்கும் பெண் என்றால், பணியிடசூழல்கள் கர்ப்பத்தை தடுக்கும் விதத்தில் இருக்கிறதா?

    - பரம்பரையாக ஏதேனும் நோய்கள் தொடர்கிறதா? அந்த நோய் தொடர்ந்தால், எதிர்காலத்தில் குழந்தைக்கு அவை எத்தகைய பாதிப்புகளை உருவாக்கும்?

    - அடுத்து வரும் எந்த மாதங்களுக்குள் தாய்மையடையவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

    - சினைமுட்டை முதிர்ந்து வெளியாவதை உங்களால் அறிந்துகொள்ள இயலுமா?

    - கருத்தரித்தல் என்பது விஞ்ஞானபூர்வமாக எப்படி நிகழ்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?

    - கருத்தரித்த பின்பு பெண்ணின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன?

    - கர்ப்பகாலத்தில் தாம்பத்ய உறவை தொடரலாமா? கூடாதா?

    - கருக்குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை சட்டப்படி தெரிந்துகொள்ள இயலுமா?

    .. என்பன போன்ற முக்கியமான கேள்விகளுக்கு பெண்கள் விஞ்ஞானபூர்வமாக விடைகாண தயாராக வேண்டும். தாய்மையடையவும், கர்ப்பகாலத்தை மகிழ்ச்சியாக கடக்கவும் அந்த விடைகள் உதவும்.

    தாய்மைக்கு தயாராகும் பெண்கள் தங்கள் இனப்பெருக்க உறுப்புகளின் செயல்பாடுகள் பற்றியும் தெரிந்துகொள்ள முன்வரவேண்டும். பெண்களின் உடலில் உள்ள மற்ற உறுப்புகளைவிட இனப்பெருக்க உறுப்புகள் வேகமாக முதிர்ச்சியடைந்து விடுகின்றன. அதனால் பெண்கள் முப்பது வயதை கடக்கும்போதே கருத்தரிப்பதற்கான வாய்ப்பு கணிசமாகக் குறைந்துவிடுகிறது. நாற்பது வயதுக்கு மேல் அதற்கான சாத்தியக் கூறுகளே இல்லாமல் போய்விடக்கூடும்.

    பெண்களின் வயதைப் பொறுத்து அவர்களது சினைமுட்டைகளின் தரமும் பாதிக்கப்படுகிறது. சினைமுட்டையின் தரம் குறைந்தாலும் தாய்மையடையும் வாய்ப்பு குறைந்துவிடும். முப்பது வயதுக்கு மேல் செயற்கை முறையில் கருத்தரிப்பு ஏற்படுத்திக்கொள்ளும் பெண்களுக்கும் கர்ப்பம் நிலைப்பதில் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன. அதனால்தான் திருமணமானதும் தாய்மையடைந்துவிடவேண்டும் என்ற சிந்தனை பெண்களிடம் உருவாகியிருக்கிறது.

    தாய்மைக்கும்-பெண்ணின் வயதுக்கும் உள்ள தொடர்பு பற்றி ஆய்வு செய்திருக்கும் கருவாக்க நிபுணர்கள், ‘19 முதல் 25 வயதுதான் பெண்கள் தாய்மையடைய மிகவும் ஏற்றகாலம்’ என்று கூறியுள்ளனர். எல்லா புதுமணத்தம்பதிகளும் இதனை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
    Next Story
    ×