என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    கொரோனா 2-வது அலையில் பலரும் சிக்கி தவித்து வரும் நிலையில் தற்போது கருப்பு பூஞ்சை எனும் புதிய நோய் உருவெடுத்து பொதுமக்களை மிரட்டிக் கொண்டிருக்கிறது.
    கருப்பு பூஞ்சை நோய் யாரை தாக்கும் என்பது குறித்து சுகாதார துறை செயலாளர் விளக்கமளித்துள்ளார். புதுவை சுகாதாரத்துறை செயலாளர் அருண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா 2-வது அலையில் பலரும் சிக்கி தவித்து வரும் நிலையில் தற்போது கருப்பு பூஞ்சை எனும் புதிய நோய் உருவெடுத்து பொதுமக்களை மிரட்டிக் கொண்டிருக்கிறது.

    இந்த கருப்பு பூஞ்சை நோய் தொற்று நீண்ட நாள் நோய் வாய்ப்பட்டுள்ள நபர்களுக்கும், எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். தொற்றில் இருந்து குணமடைந்து வந்தவர்களுக்கு பெருமளவு இந்த நோய் காணப்படுகிறது.

    கொரோனா தொற்றுக்கு ஸ்டீராய்டு உட்கொண்டவர்கள், சர்க்கரை நோயாளிகள், தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் செயற்கை சுவாசம் மூலம் சிகிச்சை பெற்றவர்கள், நீண்டகாலம் ஆக்சிஜன் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நோயாளிகள் ஆகியோரை இந்த நோய் பாதிக்கும்.

    அறிகுறிகள்

    இந்த நோய்க்குசரியான நேரத்தில் தக்க சிகிச்சை எடுக்காவிட்டால், இந்த நோய் மூக்கின் வழியாக மூளைக்கு பரவி பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. தலைவலி, முகத்தில் வலி, மூக்கடைப்பு, கருப்பு நிற சளி, கண் வலி, பல்வலி, பல் ஆடுதல், வாய் மற்றும் மூக்கின் உள் பகுதிகளில் கரும்புள்ளிகள் ஆகியவை இந்த நோயில் அறிகுறிகள் ஆகும். இதில் ஏதேனும் அறிகுறிகளில் தென்பட்டால் உடனடியாக மருத்துவரின் உதவியை அணுக வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படுவது எவ்வாறு? என்பது குறித்து குமரி மாவட்ட காசநோய் தடுப்பு துணை இயக்குனர் டாக்டர் துரை கூறியதாவது:-
    ஒரு நோயாளிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டவுடன் காய்ச்சல் ஏற்படும். சிலருக்கு இருமல், உடல்வலி போன்ற பிரச்சினைகள் இருக்கும். கொரோனா கிருமி நமது உடலுக்குள் சென்றவுடன் அதை எதிர்த்து நமது உடலிலுள்ள வெள்ளை அணுக்கள் போராடும். அப்போது நமது உடல் வெற்றி பெற்றால் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு விடும்.

    ஆனால் தற்போது உள்ள கொரோனாவை எதிர்த்து வெள்ளை அணுக்கள் தூண்டப்படும்போது சைட்டோகெய்ன்ஸ் எனப்படும் திரவங்கள் சுரக்கும். அது எதற்காக என்றால் வைரசை கொல்வதற்காகத்தான். ஆனால் இந்தத் திரவம் வைரஸை மட்டும் கொல்லாது. நமது நுரையீரலில் இருந்து ரத்தத்துக்கு பிராணவாயு செல்லும் இடத்தையும் சேதப்படுத்தும். இது கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நபருக்கு 5-வது நாள் அல்லது 6-வது நாளில் நடக்கும். நமது உடலில் கொரோனா வைரஸ் இந்த சேதத்தை ஏற்படுத்த வில்லை. அந்த வைரசை எதிர்த்துப் போராடும் நமது உடலில் உள்ள வெள்ளை அணுக்கள் அளவுக்கதிகமாக செயல்பட்டு சைட்டோகெய்ன்ஸ் திரவத்தை சுரப்பதினால் நுரையீரலின் மாற்றம் நடைபெறும் பகுதி சேதம் ஏற்படுகிறது. சேதத்தை பொறுத்து சம்பந்தப்பட்ட நபருக்கு ஆக்சிஜன் அளவு குறைய தொடங்கும்.

    அதனால் தான் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க டாக்டர்களால் சீராய்டு மருந்து கொடுக்கப்படுகிறது. இந்த சீராய்டு மருந்து வெள்ளை அணுக்களால் அதிகமாக சுரக்கப்படும் சைட்டோகெய்ன்ஸ் திரவத்தை கட்டுப்படுத்துகிறது.

    கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நபருக்கு காய்ச்சல் வந்தால் இரண்டு நாள் அல்லது மூன்று நாட்களில் சரியாகிவிடும். சம்பந்தப்பட்ட நபர் காய்ச்சல் ஏற்பட்டதும் மாத்திரைகளை மருந்து கடைகளில் வாங்கி சாப்பிடுவார். அதன் மூலம் குணமாகிவிடும். ஐந்து அல்லது ஆறாவது நாளில் மூச்சுத்திணறல் தொடங்கும். அப்படி தொடங்கினாலே கொரோனா வைரஸ் நுரையீரல் பகுதியில் வலுவாக இருக்கிறது என்று அர்த்தம்.

    எனவே முதலிலேயே நோயாளிகள் சிகிச்சைக்கு வந்துவிட்டால் எளிதாக அவர்களது உயிரைக் காப்பாற்றி விடலாம்.

    இவ்வாறு துணை இயக்குனர் டாக்டர் துரை கூறினார்.
    இந்தியாவின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் ‘பனாரஸ்’ புடவைகளை விரும்பாத பெண்களே இருக்க முடியாது. வட இந்தியா மட்டுமின்றி தென்னிந்திய திருமணங்களிலும் பனாரஸ் புடவைக்கு மவுசு கூடியிருக்கிறது.
    இந்தியாவின் பாரம்பரியத்துக்கு பெருமை சேர்க்கும் விஷயங்களில் ‘பனாரஸ்’ புடவைகளும் குறிப்பிடத்தக்கவை. இவை பட்டு நூலால் நெய்யப்பட்டு ஜரிகை வேலைப்பாடுகளால் அழகுற டிசைன்கள் செய்யப்பட்டிருக்கும். பார்ப்பதற்கு டிசைனர் புடவைகள் போல காட்சியளிக்கும். வாரணாசி என்றதும் சட்டென்று நினைவுக்கு வருவது பனாரஸ் புடவைகள்தான். இந்த பகுதியின் புவிசார் குறியீடும் இதற்கு கிடைத்திருப்பது பெருமைக்குரிய விஷயம்.

    இந்தியாவின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் இந்த புடவைகளை விரும்பாத பெண்களே இருக்க முடியாது. வட இந்தியா மட்டுமின்றி தென்னிந்திய திருமணங்களிலும் பனாரஸ் புடவைக்கு மவுசு கூடியிருக்கிறது. தன் மகளை பனாரஸ் புடவை உடுத்தி திருமண கோலத்தில் பார்க்க வேண்டும் என்பது பெரும்பாலான தாய்மார்களின் கனவாக இருக்கிறது. அதுபோலவே பல தாய்மார்களின் கனவை நிஜமாக்கிய பெருமை இந்த பனாரஸ் புடவைகளுக்கு உண்டு.

    பெண்களுக்கு புடவை போல் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய விஷயம் வேறு எதுவும் இல்லை. திருமணம் போன்ற எந்தவொரு சுப நிகழ்ச்சிகளுக்கு செல்ல நேர்ந்தாலும் அவர்களின் முதல் விருப்ப தேர்வு பட்டுப்புடவையாகத்தான் இருக்கும். எந்த புடவையை உடுத்தலாம் என்ற சிந்தனையிலேயே தங்களிடம் இருக்கும் அனைத்து புடவைகளையும் பார்த்து ரசித்து ஆனந்தத்தில் ஆழ்ந்துவிடு வார்கள். பெண்களை மன மகிழ்ச்சியில் ஆழ்த்துவது எது என்றால் அது புடவையாகத்தான் இருக்கும். அதிலும் பனாரஸ் புடவை பல பெண்களுக்கு இஷ்ட தெய்வம் போன்றது. ‘‘வாரணாசிக்கு பெருமை தரும் விஷயங்கள் பல இருந்தாலும் முதலில் நினைவுக்கு வருவது பனாரஸ் புடவைகள்தான்’’ என்று பிரதமர் நரேந்திர மோடியும் பனாரஸ் புடவை பற்றி பெருமையாக பேசி இருக்கிறார்.

    உத்தரபிரதேச மாநிலத்தின் பெரும்பாலான நகரங்களில் பரம்பரை பரம்பரையாக பனாரஸ் புடவை தயாரிப்பு தொழிலில் பலர் ஈடுபட்டு வருகிறர்கள். தற்போது இதன் வடிவமைப்பில் பல மாற்றங்கள் வந்துவிட்ட போதிலும் பனாரஸ் புடவைக்கான மவுசு குறையவில்லை. பண்டைய காலத்தில் அரசர் குடும்பத்தினரின் தேவைக்காக மட்டுமே தயாரிக்கப்பட்டு வந்த இந்த பனாரஸ் புடவைகள் இன்று அனைவரின் தேவைக்கு ஏற்றவிதமாகவும், விரும்பும் டிசைன்களுக்கு ஏற்பவும் வடிவமைக்கப்படுகின்றன.

    பலதரப்பட்ட மக்களும் பனாரஸ் புடவைகளை விரும்பி வாங்குவதால், அதன் தேவை அதிகமாகிவிட்டது. அதனால் குறைந்த விலையிலும் பனாரஸ் புடவைகளை தயார் செய்கிறார்கள். ஆனால் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு அசல் ஜரிகை கொண்ட பனாரஸ் புடவைகளே பயன்படுத்தப்படுகிறது. காலங்களை கடந்து பேசப்படும் நினைவு பரிசு போல் விலைமதிப்பற்றதாக விளங்கு வதால், இதன் விலையை பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. பனாரஸ் புடவையில் இடம் பெறும் ஜரிகைகள் பார்ப்பதற்கு பளபளப்பாக ஒரே மாதிரியாக காணப்பட்டாலும், அசல் ஜரிகைகள் வெகு காலம் பொலிவு மங்காமல் காட்சியளிக்கும். அதற்கு காரணம் இதற்கு பயன்படுத்தப்படும் பட்டு நூல் தனிச்சிறப்பு மிக்கது.

    வெகுகாலமாக சீனாவில் இருந்து இந்த பட்டு நூல் இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. இப்போது பெங்களூருவில் தயாராகி வருகிறது. பெரும்பாலும் இந்த புடவை கைகளாலேயே நெய்யப்படுகிறது. நுட்பமான கலை நுணுக்கத்துடனும், அழகிய டிசைன்களுடனும் தயார் செய்யப்படுகிறது. ஒரு புடவையை தயார் செய்வதற்கு மூன்று பேர் 30 நாட்கள் கூட பணி புரிவார்கள். வாரணாசி தெருக்களில் பனாரஸ் புடவை நெசவு செய்பவர்களை பார்க்கலாம்.

    பாலிவுட் பிரபலங்கள் பலரும் பனாரஸ் புடவையை விரும்பி அணிகிறார்கள். ஹேமமாலினி, ரேகா போன்றோர் சினிமா நிகழ்ச்சிகளில் பனாரஸ் புடவையில் தோன்றுவார்கள். பத்மாவதி படத்தின் வெற்றி விழாவில் தீபிகா படுகோனே பனாரஸ் புடவை அணிந்து வந்தார். அவருக்கு நடிகை ரேகா பச்சை நிற பனாரஸ் புடவையை பரிசாக வழங்கினார். ‘‘புடவைகளில் எனக்கு பிடித்தமானது பனாரஸ்தான். நான் எப்போதும் அதை தான் உடுத்துவேன். மற்றவர்களுக்கு பரிசளிக்கவும் செய்வேன்’’ என்கிறார், ரேகா.

    மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு மிகவும் பிடித்தமானது பனாரஸ் புடவைகள்தான். ‘பனாரஸ் புடவை உடுத்துவதற்கு எளிதாக இருக்கும். அழகான தோற்றத்தை தரும்’ என்று கூறுவார். இதில் நெகிழ்ச்சியான ஒரு விஷயம் என்னவென்றால் அவருடைய மறைவுக்கு பிறகு, அவர் உடலுக்கு பனாரஸ் புடவை போர்த்தப்பட்டது. தீபிகா படுகோனே, அனுஷ்கா, சோனம் கபூர் போன்றோர் திருமணத்தின்போது பனாரஸ் புடவைதான் அணிந்திருந்தார்கள். வித்யாபாலன், ஐஸ்வர்யாராய் விரும்பி அணிவதும் பனாரஸ் புடவைதான். பாலிவுட் நட்சத்திரங்களுக்காகவே பனாரஸ் புடவைகள் பிரத்யேகமாக தயார் செய்யப்படுவதுண்டு. அப்படி தயாரிக்கப்படும் புடவைகளை ஆல்பம் போட்டு தயாரிப்பாளர்கள் வைத்திருப்பார்கள். வித்யாபாலன் புடவை, ஐஸ்வர்யா ராய் புடவை என பனாரஸ் புடவைக்கு தனி பெயர்களும் இருக்கின்றன. பாலிவுட் திருமணங்களில் பனாரஸ் முக்கிய இடம் பிடித்திருக்கிறது.

    பனாரஸ் என்பது ஒரு ஊரின் பெயராக அறியப்பட்டாலும் அது முகலாயர் காலத்தில் உருவாக்கப்பட்ட பாரம்பரியமிக்க டிசைன்களை குறிப்பிடுவதாகும். முகலாய காலத்தில் வடிவமைக்கப்பட்ட டிசைன்கள் பனாரஸ் புடவைகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. உரிமம் பெற்ற இந்த டிசைன்களை வேறு யாரும் பயன்படுத்தக்கூடாது.

    பனாரஸ் புடவையை எப்படி அடையாளம் காண்பது என்பது குறித்து பார்ப்போம்.

    * பனாரஸ் புடவைகளை தயார் செய்வதற்கு வேலைப்பாடுகள் அதிகம் என்பதால் விலையும் அதிகமாகத்தான் இருக்கும். குறைந்த விலையில் பனாரஸ் புடவைகளை வாங்க முடியாது.

    * கைவேலை நிறைந்த ஒரிஜினல் பனாரஸ் புடவைகளை தொட்டு பார்த்தாலே தெரிந்துவிடும். டிசைன்கள் வழவழப்பாக இருந்தால் அது இயந்திரத்தில் நெய்யப்பட்டதாக இருக்கும். ஜரிகை நூல்கள் மேலும், கீழுமாக இருந்தால் அது கைவேலைப்பாடுகளால் தயார் செய்யப்பட்டதாகும். ஒரிஜினல் ஜரிகைகளை கைகளால்தான் டிசைன்களாக வடிவமைக்க முடியும். தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இந்த காலத்திலும் ஒருசில பணிகளை கவனமாகவும், நுணுக்கமாகவும் செய்ய வேண்டியிருக்கும்.

    * பனாரஸ் புடவையில் பட்டாம்பூச்சி வடிவத்தில் ‘சில்க் மார்க்’ போடப்பட்டிருக்கும். முந்தானை டிசைன்கள் ஆரம்பிக்கும் இடத்தில் கொஞ்சம் இடம் விட்டு டிசைன்கள் தொடங்கும்.
    கருப்பு உளுந்தில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று கருப்பு உளுந்தில் அடை செய்து அதை தேனில் ஊற வைத்து சாப்பிடுவது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அரிசி - 250 கிராம்
    தோல் உளுந்து - 50 கிராம்
    உப்பு - 1 டீஸ்பூன்
    தேங்காய்த் துருவல் - 100 கிராம்
    நெய் - தேவையான அளவு
    தேன் - தேவையான அளவு

    செய்முறை:

    நன்கு ஊறிய அரிசி மற்றும் கருப்பு உளுந்தைப் பிறு பிறுவென அரைக்கவும்.

    கூடவே தேங்காய்த் துருவலைச் சேர்த்து அரைக்கவும். அதிக உப்பு சேர்க்காமல் சுமார் 1 டீஸ்பூன் உப்பை அரைத்த மாவில் சேர்த்து கலக்கவும்.

    மாவைப்புளிக்க விடக் கூடாது.

    அடைச்சுடும் கல்லை அடுப்பின் மேல் வைத்துச் சூடுச் செய்யவும்.

    கரைத்த மாலைக் கல் மேல் ஊற்றி போதுமான நெய்யைச் சேர்த்து அடையை மொது மொது வெனச் சுட்டு அதன் சுவைக்கு ஏற்பக் தேனைச் சேர்க்கவும்.

    தேனுடன் அடை ஊறிய பின்பு சுவைக்கவும்.

    குறிப்பு

    * அடையை மூடி வைத்து சுட்டால் சுவை இன்னும் கூடுதலாம். அடுப்பை மிதமான சூட்டில் வைத்து அடையைச் சுடவும்.

    * களி மண்ணால் செய்த கெட்டியான தட்டையானச் சிறு குழியுடன் இருந்த கல்லை அடைச் சுட பயன்படுத்தியுள்ளனர்.

    P.Priya Baskar

    9843456520.
    பெண்கள் நம் வீட்டை, நம் அறையை இப்படி அழகாக்கலாம், அப்படி அழகுபடுத்தலாம் என திட்டம் வைத்திருப்பார்கள். ஆனால் அதை நிறைவேற்ற நினைப்பவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை.
    வீட்டைக் கலை நயத்துடன் பராமரிப்பது என்பதும் ஒருவகை தனித்திறமை என்றே கூறலாம். அதுவும் நம் கலைவண்ணத்திலேயே உருவானது என்றால், அதற்கு தனி பெருமை. நம் வீட்டை, நம் அறையை இப்படி அழகாக்கலாம், அப்படி அழகுபடுத்தலாம் என திட்டம் வைத்திருப்பார்கள். ஆனால் அதை நிறைவேற்ற நினைப்பவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை. சமீபத்திய ஊரடங்கு அந்த ஆசைக்கு உத்தரவாதம் அளிப்பதாக அமைந்திருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, உங்கள் அறைகளை அலங்கரித்து கொள்ளுங்கள். குறைந்த நேரத்தில் உருவாக்கக்கூடிய சுவர் அலங்காரம் சிலவற்றை பார்க்கலாம்.

    பெரு நகரங்களில் வாழ்ந்தாலும் நம் கிராமங்களில் வாழ்வது போல இருக்க வேண்டும் என்று நினைத்தால் நாமே அதை உருவாக்க முடியும். மரம், பழுப்பு நிறம் போன்றவற்றை உபயோகித்தால் ஒரு பழமையான சூழல் கிடைக்கும். அந்த வகையில் நமக்கு எளிதில் கிடைக்கும் பொருள் குச்சிகள். அவற்றின் மூலம் சுவரில் நமக்குப் பிடித்த வடிவங்களை உருவாக்கிக் கொள்ளலாம்.

    வெவ்வேறு அளவுகளில் குச்சிகளைச் சேகரித்து வைத்துக்கொள்ளுங்கள். சிறிய அளவில் இருந்து பெரிய குச்சி வரை ஒவ்வொன்றையும் ஒட்டிக்கொள்ள வேண்டும். பிறகு பெரிய அளவில் இருந்து சிறிய குச்சிகள் வரை வரிசையாக ஒட்டிக்கொள்ள வேண்டும். தற்போது இரண்டையும் இணைத்தால் அழகான வடிவத்தை உருவாக்க முடியும். சுவரில் ஒட்டுவதற்கு முன்பு நாம் உருவாக்கிய வடிவத்தின் பின்புறத்தில் ஒரு குச்சியைக் கிடைமட்டமாக ஒட்ட வேண்டும்.
    பொதுவாக வீட்டில் ஆணி அடிக்க வேண்டும் என்றாலே அனைவர் மனதிலும் தயக்கம்தான் ஏற்படும். ஆனால், ஆணி அடிப்பதிலும் ஒரு கலை இருக்கிறது என்றால் அதைத் தவிர்க்க வேண்டிய தேவையே இல்லை. அந்த வகையில், ஆணியின் மூலம் உருவாக்கக் கூடிய சுவர் அலங்காரம் இதோ...

    தேவையான பொருட்கள்: ஆணி, கலர் நூல்கண்டு

    ஆணிகளை உங்களுக்குத் தேவையான உருவத்தில் அடித்துக்கொள்ள வேண்டும். அதாவது, எழுத்துக்கள் வேண்டுமென்றால் அதன் வடிவத்தில் அடிக்க வேண்டும். முதலில் பென்சிலில் வரைந்துகொண்டு ஆணி அடிப்பது நல்லது. பிறகு அனைத்து ஆணிகளையும் நூலால் கோர்த்தால், நீங்கள் விருப்பப்பட்ட வடிவம் கிடைக்கும். அதன்பிறகு, இரண்டு ஆணிகளாக, குறுக்கே நூலை கட்ட வேண்டும். ஆணிகளை வைத்து நூல் பின்னல் போட்டது போன்ற அழகான தோற்றம் இதில் கிடைக்கும். இதை வீட்டின் படிக்கும் அறையில் செய்தால் அழகாக இருக்கும்.

    எளிமையான ஒரு சுவர் அலங்காரம் தான் டாட்ஸ். தேவையில்லாத கலர் பேப்பர்கள், கிப்ட் ராப்பர்களை வைத்திருந்தால் போதும். இதனை உருவாக்கிவிடலாம். பேப்பர்களை வட்டமாக வெட்டிக் கொள்ள வேண்டும். இதை எளிதில் தயார் செய்வதற்கு பஞ்சிங் இயந்திரம் தேவை. ஒரே அளவிலும் வெவ்வேறு அளவிலுமான வட்டங்கள் வரைந்து அதை வெட்டி வைத்து கொள்ளுங்கள். பின்பு, கேன்வாஸ் ஒன்றில் வரிசையாக கலர் பேப்பர்களை ஒட்ட வேண்டும். பின்பு கேன்வாஸை ப்ரேம் செய்து மாட்டினால் வேலை முடிந்தது. பேப்பர்களை ஒட்டும்போது நேர் கோட்டில் ஒட்ட வேண்டும். இங்கு உங்களுடைய கலை நயத்தைப் பயன்படுத்தி வெவ்வேறு விதமாக ஒட்டி , புதுப்புது உருவங்களை உருவாக்கலாம்.
    நம்மிடையே வாலிப வயதினர் தான் ஜிம்முக்குப் போக வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. அப்படி ஒன்று கிடையாது. டீன் ஏஜ் பிள்ளைகளும் ஜிம்முக்கு சென்று ஒர்க் அவுட் பண்ணலாம்.
    சிறுவர், சிறுமியரும் எந்நேரமும் உட்கார்ந்த இடத்திலே செல்போனில் கேம் விளையாடுகின்றனர். அதனால் உடல் பருமன், மன அழுத்தம் போன்ற பிரச்னைகளுக்கு ஆளாகின்றனர். அவற்றை தவிர்க்க டீன் ஏஜ் பிள்ளைகளும் ஜிம் பயிற்சிகளை மேற்கொள்ளலாம். அடுக்கடுக்காய் பாடம், இந்த கோச்சிங், அந்த கோச்சிங் என பிள்ளைகளுக்கு விளையாட்டு என்பதே இல்லாமல் போய் உடற்பருமன், பெண் பிள்ளைகள் சிறுவயதில் பூப்பெய்துதல் போன்றவை ஏற்படுகிறது.நோய் எதிர்ப்பு சக்தியும் குறைந்து காணப்படுகிறது.

    பள்ளியிலும் முன்பு பிள்ளைகள் விளையாட்டு வகுப்பில் நன்கு விளையாடுவார்கள். இப்போது சில பள்ளிகளில் அந்த விளையாட்டு நேரத்தையும் ஏதாவது பாட வகுப்பிற்கு பயன்படுத்திக்கொள்கிறார்கள். பிஸிகல் ஆக்டிவிட்டீஸ் குறையும் போது இளம் பிள்ளைகள் உளவியல்ரீதியாகவும் பாதிக்கப்படுவார்கள். இதனால் ஸ்ட்ரெஸ், டிப்ரெஷன் போன்ற பிரச்னைகள் அவர் களுக்கு ஏற்படுகிறது. இதனால் வளரும் போது அவர்களது குணத்திலும் மாறுபாடு தோன்றலாம்.

    முறையான பயிற்சிகள் அற்றுப்போகும் போது வளரும் பிள்ளைகளுக்கு இன்ட்யூரன்ஸ் லெவல் குறையும். இன்ட்யூரன்ஸ் லெவல் என்பது தூரத்தில் நிற்கும் பேருந்தை பிடிக்க ஓடும் போது முறையான பயிற்சிகள் செய்யும் குழந்தையால் ஓடிப்போய் அந்த பேருந்தை பிடிக்க முடியும். அதுவே பயிற்சியற்ற குழந்தையிடம் இன்ட்யூரன்ஸ் லெவல் குறைவாக இருக்கும்பட்சத்தில் அந்த குழந்தையால் அந்த தூரத்திற்கு ஓட முடியாமல் போகலாம் அல்லது நினைத்த நேரத்திற்கு ஓடிச்சென்று அந்த பேருந்தை பிடிக்க முடியாமல் போகலாம். இன்ட்யூரன்ஸ் லெவலை அதிகரிக்க ஜிம் பயிற்சிகள் உதவும்.

    அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு ஜிம் ஒரு நல்ல வரம். ஜிம்முக்குச் சென்று தேவையான பயிற்சிகளை மேற்கொண்டால் பிள்ளைகள் பலம் பெறுவார்கள். குறிப்பாக பெண் பிள்ளைகள். இப்போது இருக்கிற சமூக சூழ்நிலையில் பெண் பிள்ளைகள் நல்ல உடல் பலத்தோடு இருக்க வேண்டியது மிக அவசியமான ஒன்று. நம்மிடையே வாலிப வயதினர் தான் ஜிம்முக்குப் போக வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. அப்படி ஒன்று கிடையாது. டீன் ஏஜ் பிள்ளைகளும் ஜிம்முக்கு சென்று ஒர்க் அவுட் பண்ணலாம். அங்கே அவர்கள் வயதிற்கேற்ப பயிற்சிகள் கொடுக்கப்படும்.

    பிஸிகல் ஆக்டிவிட்டி இல்லாத பிள்ளைகளுக்கு அதற்கேற்றாற் போல் பயிற்சிகள், தொப்பை உடன் இருக்கும் பிள்ளைகளுக்கென்று வயிற்றுத் தசை பயிற்சிகள் என கற்றுத்தரப்படும். வளர்ச்சிக்காக ஸ்கிப்பிங், ஜம்பிங் போன்ற பயிற்சிகள், பொதுவாக பிள்ளைகளுக்கென்று உடலை வலுவாக்கும் பயிற்சிகள், த்ரெட் மில், சைக்கிளிங் போன்ற ப்ளோர் கார்டியோ ஒர்க் அவுட் போன்றவற்றை கற்றுக்கொடுப்பார்கள்.

    இதனால் அவர்களது எனர்ஜி லெவல் அதிகரிக்கும். அவர்கள் உடம்பின் தேவையற்ற கலோரிகள் எரிக்கப்படும். ஃபிட்னஸ் கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். உடம்பில் ப்ளக்ஸிபிலிட்டி இருக்கும். சாதாரணமாகவே ஒரு நாள் முழுவதும் கையை அசைக்காமல் வைத்திருந்தால் மறுநாள் வேலை செய்யும்போது கடினமாக இருக்கும். அதனால் முறையான பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ளும் போது உடம்பில் நல்ல வளைவுத்தன்மை இருக்கும்.

    சில குழந்தைகளுக்கு பிறப்பிலே தசைகள் பலவீனமாக இருக்கும். அவர்களால் எடை அதிகமுள்ள பொருளை தூக்க முடியாது. நீண்ட தூரம் ஓட முடியாது. வயிற்றில் இருக்கும் போது தேவையான ஊட்டச்சத்து கிடைக்காதது ஒரு காரணமாக இருக்கலாம். அப்படிப்பட்ட பிள்ளைகளும் தொடர் பயிற்சிகள் மேற்கொள்ளும் போது தசைகள் நல்ல வலுப்பெறும். அதுமட்டுமன்றி சில ஜிம்மில் யோகா, ஏரோபிக்ஸ் போன்ற பயிற்சிகளும் கற்றுத்தரப்படுகிறது.

    சில வீடுகளில் நீச்சல் போன்ற பயிற்சிகள் கற்றுக்கொள்ள உத்வேகம் தருகிறார்கள். அது நல்லது. ஆனால் ஜிம்முக்குப் போவதை யாரும் என்கரேஜ் செய்வதில்லை. ஜிம்முக்குச் சென்று பயிற்சிகள் செய்வதும் நல்லது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
    கொரோனா இரண்டாம் அலையில் இளைஞர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
    இந்தியாவில் தற்போது பரவி வரும் கொரோனா இரண்டாம் அலை பெருமளவில் நடுத்தர வயதுள்ளவர்களே அதிகளவில் பாதித்து வருகிறது. முதல் அலையின்போது இணைநோய் உள்ளவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இணை நோய் இல்லாதவர்களும் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது. தமிழகத்தில் ஜனவரி மாதத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களில் 18 சதவிகிதம் பேர் இணை நோய் இல்லாதவர்கள். மே 9ஆம் தேதி நிலவரப்படி, கொரோனாவுக்கு பலியானவர்களில் 39 சதவிகிதம் பேர் இணை நோய் இல்லாதவர்கள். அதுபோன்று, நேற்று உயிரிழந்த 298 பேரில், 78 பேர் இணை நோய் இல்லாதவர்கள்.

    இந்நிலையில், கடந்த நான்கைந்து மாதங்களில் கொரோனாவுக்கு இளைஞர்கள் உயிரிழப்பது அதிகரித்துள்ளது என கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் வசந்தமணி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஜனவரி முதல் மே மாதம் வரை 31-40 வயதுள்ள 37 சதவிகித்தினர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

    மத்திய அரசின் தகவலின்படி, முதல் அலையின்போது 30 வயதுக்கு கீழுள்ளவர்களின் பாதிப்பு விகிதம் 31 சதவிகிதமாக இருந்தது. இந்த எண்ணிக்கை 2021 ஆம் ஆண்டில் 32 ஆக உயர்ந்துள்ளது.

    இந்நிலையில், இரண்டாம் அலைக்கு இளைஞர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதற்கான காரணம் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குநர் விளக்கமளித்துள்ளார்.

    இதுகுறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குநர் பால்ராம் பார்கவா கூறுகையில், “கொரோனா முதல் அலையுடன், இரண்டாம் அலையை ஒப்பீடும்போது, 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். ஆனால், இரண்டாம் அலையில் இளைஞர்கள் பாதிக்கப்படுவது சற்று உயர்ந்துள்ளது. இளைஞர்கள் தேவையின்றி வெளியே செல்வது அதிகரித்துள்ளது. அவ்வாறு செல்லும்போது அலட்சியமாக முகக்கவசம் உள்ளிட்ட வழிமுறைகளை பின்பற்றாமல் செல்வது, மற்றும் நாட்டில் சில புதிய உருமாறிய கொரோனா வகைகளும்தான், இளைஞர்கள் மத்தியில் கொரோனா பரவ காரணம்” என்கிறார்.
    மார்பக புற்றுநோயால் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். மார்பக பகுதியில் வலி இல்லாத கட்டிகள் இருந்தால், பெண்கள் உடனடியாக டாக்டரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்.
    மார்பக புற்றுநோயால் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். காலதாமதமாக திருமணம் செய்வது, குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளிப்போடுவது போன்றவை இதற்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.

    புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் குணப்படுத்திவிடலாம். இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டுக்கு 5 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்தனர். இவர்களில் 4 லட்சம் பேர் உயிரிழந்தனர். ஆனால், தற்போது ஆண்டுக்கு 10 லட்சம் பேர் பாதிக்கப்படுகின்றனர். இவர்களில் 5.5 லட்சம் பேர் பெண்கள், 4.5 லட்சம் பேர் ஆண்களாகும். பாதிக்கப்பட்டவர்களில் 5 முதல் 6 லட்சம் பேர் இறக்கின்றனர். புற்றுநோயால் குறிப்பாக மார்பகப் புற்றுநோயால் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவதற்கு வாழ்க்கை முறை மாற்றமே முக்கிய காரணம்.

    மார்பக பகுதியில் வலி இல்லாத கட்டிகள் இருந்தால், பெண்கள் உடனடியாக டாக்டரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். இதே போல ஆண்கள் தொண்டை மற்றும் நுரையீரல் புற்றுநோயினால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு புகைபிடிப்பதே முக்கிய காரணமாக உள்ளது. தொண்டை புற்றுநோய் வருவதற்கு முன்பு குரலில் மாற்றம் ஏற்படுவது முக்கிய அறிகுறி என்கிறார்கள், மருத்துவர்கள்.
    நகைகளுக்கு பெண்களின் அலங்காரத்தில் மிக முக்கிய பங்கு உண்டு. அந்த வகையில் சணலால் செய்யப்பட்ட எடை குறைவான வண்ணமயமான நகைகள் இப்போது பெண்களின் கவனத்தை ஈர்க்கின்றன.
    நகைகளுக்கு பெண்களின் அலங்காரத்தில் மிக முக்கிய பங்கு உண்டு. தங்கம் மற்றும் வெள்ளியால் செய்த நகைகள் மட்டுமில்லாமல் காகிதக்கூழ், டெரகோட்டா, பட்டுநூலிலும் விதிவிதமாக நகைகள் செய்யப்படுகின்றன. அந்த வகையில் சணலால் செய்யப்பட்ட எடை குறைவான வண்ணமயமான நகைகள் இப்போது பெண்களின் கவனத்தை ஈர்க்கின்றன.

    ,சணல் நகைகள் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காதவை. நவீனமும், பாரம்பரியமும் கலந்த டிசைன்களில் கிடைக்கிறது. இவற்றின் நிறம் மங்குவதில்லை. தனித்துவமாகவும், குறைந்த விலையிலும் கிடைப்பதால் அனைத்து வயதினரையும் ஈர்க்கின்றன. இதனால் உலக சந்தையில் இவற்றுக்கு தனி மவுசு இருக்கிறது.

    சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உகந்த மெட்டீரியல்ல சணலுக்குத்தான் முதலிடம். சணல்ல இன்னிக்கு உடைகள், செருப்புகள் வரை சகலமும் பண்றாங்க. சணல் நகைகள் லேசானவை. ‘சணலா... சருமத்தை உறுத்தாதா’னு பயப்பட வேணாம். கொஞ்சம்கூட உறுத்தாது. எந்த கலர் டிரெஸ்ஸுக்கும் மேட்ச்சா சணல் நகைகள் பண்ண முடியும்கிறது இதுல சிறப்பு. பட்டு, காட்டன்னு எந்த மெட்டீரியலுக்கும், புடவை, சல்வார், வெஸ்டர்ன்னு எந்த டிரெஸ்ஸுக்கும் இந்த நகைகள் பொருத்தமா இருக்கும். குறிப்பா காட்டனுக்கு ரொம்பப் பிரமாதமா பொருந்தும்.

    சணல் துணி, சணல் கயிறு, சாயம், பசை, மரமணிகள், அலங்காரப் பொருட்கள், லேஸ் என இதற்குத் தேவையான பொருட்களுக்கான முதலீடாக 1,000 ரூபாய் போதும்.‘‘சணல் துணியைப் பதப்படுத்திச் செய்யற முறை, சணல் கயிறுகள்ல சாயம் ஏத்திச் செய்யற முறை, ஒட்டற முறை, தைக்கிற முறை, லேஸ் வைத்துச் செய்யற முறைனு இதுல 5 வகை உண்டு.

    சணல் வளையல்களையும் 2 விதமான செய்முறையில டிசைன் பண்ணலாம். இந்த 7 அடிப்படைகளைத் தெரிஞ்சுக்கிட்டாலே நூற்றுக்கணக்கான டிசைன்களை கற்பனைக்கேத்த படி உருவாக்க முடியும். 100 ரூபாய்லேருந்து அதிகபட்சமா 400 ரூபாய் வரை விற்கலாம். 50 சதவிகித லாபம் நிச்சயம். தோடு, ஜிமிக்கி, ஹாரம், வளையல், பிரேஸ்லெட், ஹேர் கிளிப், ஹேர் பேண்டு... இப்படி என்ன வேணா டிசைன் பண்ணலாம்..

    தினமும் ஒரு மூலிகை பானம் அருந்தினால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. இந்த வகையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆவாரம் பூ டீ தயாரிக்கும் முறையை தெரிந்து கொள்ளுங்கள்.
    தேவையான பொருட்கள்:

    ஆவாரம்பூ பொடி - ஒன்றரை டீஸ்பூன் (காயவைத்து அரைத்துக்கொள்ளவும்)
    இஞ்சி - சிறிய துண்டு ஒன்று
    கருப்பட்டி - சிறிய துண்டு
    மிளகு அரை - டீஸ்பூன்
    தண்ணீர் - ஒரு கப்
    ஏலக்காய் - 2

    செய்முறை :

    ஆவாரம் பூ பொடி, கருப்பட்டி, ஏலக்காய், மிளகு சேர்த்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும்.

    அடுப்பில் வாணலியை வைத்து தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் இஞ்சி, ஆவராம் பொடி கலவையைச் சேர்த்து கொதிக்கவிடவும்.

    நிறம் மாறியதும் இறக்கி வடிகட்டி குடிக்கவும்.

    வீட்டிலிருக்கும் பெண்கள் கணவர் குழந்தைகளுக்கான பொறுப்புக்களை முடித்து தனிமையில் இருக்கும்சூழலில் டிவி சமூக வலைத்தளங்கள் எனப்பலவற்றிலும் மனதை பாதிக்கும் விஷயங்களில் நேரத்தை செலவிடுகிறார்கள்.
    வேகமாக நகரும் எந்திர வாழ்க்கை முறையில் இல்லத்தரசிகள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளில் மன அழுத்தம் என்பது மிக முக்கியமானது. வேலைக்கு செல்லும் பெண்மணிகள் வெளிநபர்கள் சக பணியாளர்கள், நண்பர்கள் ஆகியோர்களிடம் பழகும் வாய்ப்பு கிடைப்பதால் மனஅழுத்தத்திலிருந்து தப்பி விடுகிறார்கள். வீட்டிலிருக்கும் பெண்கள் கணவர் குழந்தைகளுக்கான பொறுப்புக்களை முடித்து தனிமையில் இருக்கும்சூழலில் டிவி சமூக வலைத்தளங்கள் எனப்பலவற்றிலும் மனதை பாதிக்கும் விஷயங்களில் நேரத்தை செலவிடுகிறார்கள். அதனால் மனதில் தேவையற்ற எண்ணங்கள் உருவாகி மன அழுத்தம் ஏற்படுகிறது. ஒரு நாளில் சுமார் 20 ஆயிரம் வார்த்தைகளாவது பிறருடன் பேசும் போது தான் மனம் லேசாகிறது.

    மன அழுத்தம் காரணமாக சீரான மாத விடாய் சுழற்சியில் சிக்கல், குழந்தையின்மை, முறை தவறும் மெனோபாஸ் என பல பாதிப்புகளும் ஏற்படுகின்றன. அதனால் உடல் எடை அதிகரிப்பு பசியின்மை, ஞாபகமறதி, தேவையற்ற கோபம், தவறான பழக்க வழக்கம் உள்ளிட்ட பல்வேறு விரும்பத்தகாத விளைவுகளும் ஏற்படக்கூடும். மன அழுத்தத்திலிருந்து எளிதாக விடுபடுவதற்கான சில வழிகள்..

    தனிமையை புறந்தள்ளுங்கள்

    தனிமையில் இருக்கும் போது மனதை கெடுக்கும் எதிர்மறை எண்ணங்களுக்கு இடம் கொடுக்காமல் எதிர்காலத்தை வளமாக்கும் நேர்மறை விஷயங்களை சிந்தியுங்கள். மனதை அமைதிப்படுத்த தியானம், யோகா போன்றவற்றை மேற்கொள்ளுங்கள். கண்ணாடி முன் நின்று உங்களிடம் நீங்களே பேசுவதும் ஒரு நல்ல வழியே.

    பிடித்த வேலையை செய்யுங்கள்..

    அன்றாட கடமைகள் முடித்த பின்னர் எந்த வேலையை செய்தால் மனதுக்கு பிடித்தமாக தோன்றுகிறதோ, அதை செய்யுங்கள். வசதியற்ற குழந்தைகளுக்கு இலவசமாக பாடம் கற்று கொடுப்பது, புதிய விஷயங்களை கற்றுக்கொள்வது போன்ற விஷங்களில் ஈடுபடலாம். பகுதிநேர தொழிலை மேற்கொள்வதால் குடும்ப பொருளாதார நிலை உயர்வதுடன் தேவையற்ற சிந்தனைகளிலிருந்தும் விடுபடலாம்.

    ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள்

    எண்ணெயில் பொரித்த உணவுகள், மசாலா சேர்த்த உணவு வகைகள் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதுடன், மனதையும் பாதிக்கக்கூடும். காய்கறிகள், பழங்கள் போன்ற இயற்கை உணவு வகைகளை உண்பதால் மனமும் உடலும் லேசாக மாறுவதை உணரலாம்.

    ஆலோசனை பெறுங்கள்

    ஆரம்ப நிலையிலேயே மன அழுத்த உணர்வை கண்டறியுங்கள். அனைத்து பிரச்சனைக்கும் தீர்வு உள்ளது என்ற அடிப்படையில் தகுந்த நபரிடம் ஆலோசனை பெறலாம்.

    பழக்கங்களை மாற்றுங்கள்

    மற்றவர்களை விமர்சனங்கள் செய்வது மனதை சலனமாக்கும் பொழுதுபோக்கு விஷயங்களில் ஈடுபடுவது ஆகியவற்றை தவிர்த்து, புத்தகங்களை வாசிப்பது, இசை கேட்பது போன்ற செயல்களில் ஈடுபடலாம். நாய், பூனை போன்ற வளர்ப்பு பிராணிகளுடன் நேரத்தை செலவிடுவதால் மனம் லேசாகி அழுத்தம் குறையும்.
    உடல்நலத்தைக் காக்கவும் குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்த்து எடுப்பதில் கொஞ்சம் மெனக்கெடுவது அவசியம். குழந்தைகளுக்கு சில உணவுகளைத் தர கூடாது எனப் பட்டியல் இருக்கிறது.
    குழந்தைகள் விருப்பப்பட்டு கேட்டால் உடனே வாங்கி கொடுத்து விடுகிறோம். நல்லதா, கெட்டதா என சற்றும் சிந்திக்காமல் செய்கிறோம். கடைகளில் அழைத்து சென்று பாருங்கள். பில் போடும் இடத்தில் சாக்லெட், லாலிபாப், இன்னும் பல குழந்தைகளுக்கான உணவுகளை வைத்து அடுக்கி இருப்பார்கள். இதெல்லாம் பிஸினஸ் டெக்னிக். குழந்தைகளுக்கு சில உணவுகளைத் தர கூடாது எனப் பட்டியல் இருக்கிறது. அதைப் பற்றி இங்குப் பார்க்கலாம்.

    சிவிங் கம்

    நிறைய சுவைகளில், நிறைய பிராண்ட்களில் சிவிங் கம் வருகிறது. 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு இதை வாங்கித் தர கூடாது.
    தவறுதலாக குழந்தைகள் விழுங்கிவிட்டால் பின்னர் பிரச்னைதான். இந்த சிவிங் கம் வயிற்றில் செரிமானமாகாது, வயிறு வலி போன்ற தொல்லைகளை ஏற்படுத்தி குழந்தையின் உடலைக் கெடுத்துவிடும். மலம் மூலமாக வெளியே வரவில்லை என்றால் மருத்துவரின் சிகிச்சைதான் தீர்வாக இருக்கும். எனவே சிவிங் கம்களைக் குழந்தைகளுக்கு தரவே கூடாது.

    சாக்லெட்

    சாக்லெட்கள் இன்றைய குழந்தைகளின் விருப்பமான உணவு. அதிகபடியான சர்க்கரையும் சுவையூட்டிகளும் சேர்க்கப்படுவதால் முடிந்தவரை சாக்லெட்களை தவிர்த்துவிடுங்கள். முக்கியமாக பல வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்ட சாக்லெட்டை தவிருங்கள்.குழந்தை மிகவும் அடம்பிடித்தால் கொகோ கலந்த தரமான டார்க் சாக்லெட்டை வாங்கித் தரலாம். ஆனால் இந்த டார்க் சாக்லெட்டையும் அளவுடன் சாப்பிடுவது நல்லது.

    பிஸ்கெட்

    கடையில் அடுக்கி வைக்கப்பட்டு அழகாகக் காட்சி அளிக்கும் இந்த பிஸ்கெட்கள். எண்ணற்ற பிராண்டுகள் உள்ளன. இதைக் குழந்தைகளுக்கு தராமல் வளர்ப்பது கொஞ்சம் சவாலான விஷயம்தான். எனினும் நீங்கள் தராமல் இருப்பதே நல்லது. அனைத்து பிஸ்கெட்டும் மைதாவால்தான் செய்யப்படுகிறது. பிஸ்கெட்டுகான அடிப்படை பொருளே மைதாதான். குழந்தை பிஸ்கெட் கேட்டு அடம் பிடித்தால், ஆர்கானிக் சிறுதானிய பிஸ்கெட்களை வாங்கித் தாருங்கள்.கடையில் விற்கும் க்ரீம் பிஸ்கெட்டில் கெட்ட கொழுப்பு உள்ளன. இவற்றைக் கட்டாயம் தவிர்க்கவும்.

    கடையில் பொரித்த எண்ணெய் உணவுகள்

    கடையில் விற்கும் பொரித்த எண்ணெய் உணவுகளான சமோசா, பக்கோடா, ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் போன்ற திண்பண்டங்களை வாங்கித் தர கூடாது. வேண்டுமென்றால் வீட்டிலே செய்து கொடுங்கள். கடைகளில் பொரிக்கும் எண்ணெயும் மீண்டும் மீண்டும் பயன்படுத்த கூடியதாக இருக்கிறது. இதனால் வயிறு கெடும். வயிறு தொடர்பான தொல்லைகள் வரும்.நீங்கள் வீட்டிலே ஆரோக்கியமான முறையில் பஜ்ஜி, போண்டா, வடை செய்து கொடுக்கலாம்.  

    குளிர்பானங்கள்

    இந்தக் குளிர்பானங்கள் மிகவும் ஆபத்தானது. இதன் லேபிள் கீழேயே இதைச் சாப்பிட கூடாது. குழந்தைகள், கர்ப்பிணிகளுக்குக் கொடுக்க கூடாது என எழுதி இருப்பார்கள். மேலும் பழங்களின் சுவைகளில் வரும் சில குளிர்பானங்கள், செயற்கை பழச்சாறுகள், செயற்கை மில்க் ஷேக் போன்ற அனைத்தையும் குழந்தைகளுக்கு தரக் கூடாது. ஏனெனில் உணவுப் பொருட்கள் ஃப்ரெஷ்ஷாகதான் சாப்பிட வேண்டும். உணவுகள் 2-3 நாட்களில் கெட்டு போகும். ஆனால் கடைகளில் விற்கப்பட்டும் பாட்டில் பழச்சாறுகள், மில்க் ஷேக் 2 -6 மாதங்கள் வரை கெட்டுப் போகாது. அவ்வளவும் கெமிக்கல்கள். இது குழந்தைகள் மட்டும் அல்ல பெரியவர்களுக்கும் ஆபத்துதான்.

    ஐஸ்கிரீம்

    5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் தரக் கூடாது. சளி, காய்ச்சல், தொண்டை வலி, வயிற்றுப்போக்கு ஏற்படலாம். ஐஸ்கிரீம் தயாரிக்கும் தண்ணீர் சுகாதாரமின்றி இருந்தால் குழந்தைகளை நிச்சயம் பாதிக்கும். குழந்தைகளுக்கு நீங்கள் வீட்டிலே தயாரித்த பழக்கூழை சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்துக் கொடுக்கலாம். இதை ஹோம்மேட் ஐஸ்கிரீம் எனச் சொல்லி கொடுங்கள்.

    நூடுல்ஸ்

    முழுக்க மைதாவில் செய்யப்படும் உணவு. இதனுடன் வரும் மசாலாவில் சுவையூட்டியும் அதிகபடியான உப்பும் மோனோ சோடியம் குளுட்டமேட் எனும் கெமிக்கலும் கலக்கப்படுகின்றன. இதில் கலக்கப்பட்டிருக்கும் அதீத உப்பால் உடல்நலக் கோளாறுகள் வரும். இந்த நூடுல்ஸ் செரிக்க 2-3 நாட்கள் ஆகும். அவ்வளவு நாள் வயிற்றுக்குள் இருந்து கெட்டு போய், மலக்காற்று துர்நாற்றமாக வரும். இதைக் குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது.
    ராகி சேமியா, இடியாப்ப சேவை போன்றவற்றில் காய்கறிகள் சேர்த்து வீட்டிலே அரைக்கக் கூடிய மசாலா சேர்த்து நூடுல்ஸ் எனச் சொல்லி குழந்தைக்கு கொடுக்கலாம்.

    பாக்கெட் உணவுகள்

    ஒரு வாய் வைத்த உடனே சட்டென்று சுவை நாவில் ஒட்டிக் கொள்ளும். அந்த அளவுக்கு சுவையூட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன. சில பாக்கெட் நொறுக்கு தீனிகளில் மெழுகு சேர்க்கப்படுவதாக சொல்லப்படுகிறது. நெருப்பில் இட்டால் அவை எரியும். இது குழந்தைகளின் வயிற்றுக்குள் சென்று பல்வேறு உபாதைகளை உருவாக்கும். பாக்கெட் நொறுக்கு தீனிகளைத் தவிர்த்து விட்டு வீட்டிலே செய்யகூடிய ஆரோக்கிய நொறுக்கு தீனிகளைக் கொடுக்கலாம். கடலைமிட்டாய், எள்ளு உருண்டை, முறுக்கு போன்றவற்றை வீட்டிலே செய்து கொடுக்கலாம்.

    சிப்ஸ் வகைகள்

    ஏராளமான சிப்ஸ்கள் தற்போது கிடைக்கின்றன. உருளைக்கிழங்கு, மரவள்ளிகிழங்கு, பாகற்காய், பலா, வெண்டைக்காய் போன்ற நிறைய சிப்ஸ்கள் உள்ளன. இவையெல்லாம் காய்கறிகளாக இருந்தாலும் இதைப் பொரிக்க கூடிய எண்ணெயில்தான் பிரச்னை இருக்கிறது. மீண்டும் மீண்டும் சுட கூடிய எண்ணெயில் கெட்ட கொழுப்பு மிகுதியாக இருக்கும். இதனால் உடல்பருமன், தொப்பை, வயிறு உப்புசம், நெஞ்செரிச்சல் போன்ற தொல்லைகள் வரும். குழந்தைகள் விருப்பப்பட்டால் வீட்டிலே தரமான எண்ணெயில் பொரித்து, கொஞ்சமாக மிளகுத் தூள் தூவி கொடுக்கலாம். 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தரலாம். 
    ×