என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    கண்ணை கவரும் அழகிய இந்த செல்போன் ஆபத்தாக மாறி நமது நினைவாற்றல் குறைவதை காட்டுகிறது என்று ஆய்வில் கூறப்பட்டு உள்ளது.
    தினமும் பலமணி நேரம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தால் ஞாபகசக்தி குறைந்து விடும் என்று இங்கிலாந்து ஆய்வில் எச்சரிக்கப்பட்டு உள்ளது. செல்போனை அதிக நேரம் பயன்படுத்துவோரிடம் ஆன்லைனில் ஆய்வு நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் வெளியான முடிவுகள், தினமும் பலமணி நேரம் செல்போனில் பேசுபவர்களில் பாதிப்பேருக்கு தங்கள் வாழ்க்கை துணையின் நம்பர் கூட மறந்து விடுகிறது.

    10-ல் 7 பேருக்கு நெருங்கிய நண்பரின் போன் நம்பரை சட்டென நினைவுக்கு கொண்டு வர முடிவதில்லை. 51 சதவீதம் பேருக்கு பெற்றோரின் போன் நம்பர் ஞாபகத்தில் இருப்பதில்லை. தொடர்ந்து செல்போன் பயன்படுத்துபவர்களில் 10-ல் 9 பேருக்கு திடீரென கேட்டால் முக்கிய நம்பர்களை உடனடியாக சொல்ல முடிவதில்லை. 5 முதல் 10 வினாடிகள் யோசித்து தான் சொல்ல முடிகிறது.

    இதன் மூலம் கண்ணை கவரும் அழகிய இந்த செல்போன் ஆபத்தாக மாறி நமது நினைவாற்றல் குறைவதை காட்டுகிறது என்று ஆய்வில் கூறப்பட்டு உள்ளது. இதுபற்றி நிபுணர்கள் கூறுகையில், “நவீன தொழில் நுட்பங்களால் அதிக வசதிகள் ஏற்பட்டாலும் நினைவாற்றல் குறைய காரணமாகின்றன. அவசர நேரத்தில் முக்கிய பெயர்கள், நம்பர்கள் நினைவுக்கு வராது. இதற்கு கோல்டு பிஷ் மெமரி என்று பெயர்.

    இதனால் அவசர, ஆபத்தான சூழ்நிலையில் குடும்பத்தினர், நண்பர்களின் போன் நம்பர்கள் மறந்து விடும் என்றனர். இதற்கு முன் நடந்த ஆய்வு ஒன்றில் சராசரியாக ஒவ்வொருவரும் 5 முக்கிய போன் நம்பர்கள், பாஸ்வேர்டுகள், 2 வாகன நம்பர் பிளேட்டுகள், 3 செக்யூரிட்டி அடையாள எண்கள், 3 வங்கி கணக்கு எண்களை தினசரி வாழ்க்கையில் நினைவில் கொள்கின்றனர். அதற்கு மேல் மறதி ஏற்படுகிறது என்று கூறப்பட்டது.
    அமைதி, மன்னிக்கும் பெருந்தன்மை, மன உறுதி ஆகிய நற்பண்புகளை வளர்த்துக்கொள்ளுங்கள். இதன் மூலம் வாழ்வில் வளரத்தொடங்குவீர்கள்.
    * அமைதி, மன்னிக்கும் பெருந்தன்மை, மன உறுதி ஆகிய நற்பண்புகளை வளர்த்துக்கொள்ளுங்கள். இதன் மூலம் வாழ்வில் வளரத்தொடங்குவீர்கள்.

    * தவறை எண்ணி வருந்தப்படாதீர்கள். நமக்கு வழிகாட்டும் தெய்வமாக அவை இருக்கிறது. எனவே தவறை பெரும் பேறாகக் கருதுங்கள்.

    * விதையின் சக்தி தான் மரமாக வளர்கிறது. அது போல ஒவ்வொருவரின் வாழ்வும் அவரவர் கொண்டிக்கும் மன ஆற்றலை பொறுத்தே அமைகிறது.

    * அன்பின் மூலமாக செய்யப்படும் ஒவ்வொரு செயலும் மகிழ்ச்சியை கொண்டு வந்தே தீரும்.

    * மன ஒருமையுடன் பணியாற்றுங்கள். ஆர்வத்துடன் ஈடுபட்டால் பணிகளை சிறப்பாக செய்ய முடியும்.

    * பெற்றோரை மகிழ்ச்சிப்படுத்தும் பிள்ளைகள் கடவுளையும் மகிழ்ச்சி அடைய செய்கிறார்கள்.

    * அடுத்தவர் கருத்தை கண்மூடித்தனமாக பின்பற்ற வேண்டாம். அனைத்தையும் ஆராய்ந்து பாருங்கள். அதில் உங்களுக்கு திருப்தி இருந்தால் பின்பற்றலாம். இல்லையெனில் உங்களது கருத்தில் உறுதியாக இருங்கள்.

    * எந்த வேலையையும் உங்களது விரும்பத்துக்கு ஏற்றதாக மாற்றிக்கொள்ளுங்கள்.

    * இடைவிடாமல் பணியாற்றுங்கள். எந்த பணிக்கும் அடிமையாகி விடாதீர்கள்.

    * பாமரன் பண்புள்ளவனாகவும், பண்புள்ளவன் தெய்வாகவும் உயரவே ஆன்மிகம் வழிகாட்டுகிறது.

    * வெற்றியோ, தோல்வியோ அதை விருப்பத்துடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    இவைகள்தான் வாழ்க்கையை வளமாக்கும் வழிமுறைகள்.
    புரதச்சத்து நிறைந்த ராஜ்மா தானியத்தை பலரும் வேக வைத்து மாலை நேரத்தில் சாப்பிடுவார்கள். ஆனால் அதைக் காட்டிலும் நல்ல சுவையில் என்றைக்காவது இப்படி கட்லெட்டாக சமைத்து சாப்பிடலாம்.
    தேவையான பொருட்கள் :

    ராஜ்மா - 1 கப்
    இஞ்சி - 1 துண்டு
    பூண்டு - 4
    பச்சை மிளகாய் - 3
    சீரகம் - 1/2 டீஸ்பூன்
    மஞ்சள் தூள்- 1/2 டீஸ்பூன்
    சாட் மசாலா - 1/2 டீஸ்பூன்
    காஷ்மீர் சிவப்பு மிளகாய் பொடி - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    பெரிய உருளைக்கிழங்கு - 1
    கொத்தமல்லி - சிறிதளவு
    புதினா - சிறிதளவு
    எலுமிச்சை சாறு - 1/2
    எண்ணெய் - 1 டீஸ்பூன்
    நெய் - 1 டீஸ்பூன்

    செய்முறை :

    ராஜ்மாவை இரவு ஊற வைத்துவிடுங்கள். மறுநாள் குக்கரில் போட்டு கொஞ்சம் உப்பு சேர்த்து 4 விசில் வர வேக வைத்துக்கொள்ளுங்கள். பின் அதை மிக்ஸியில் ஒன்றும் பாதியுமாக அரைத்துக்கொள்ளுங்கள்.

    உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளுங்கள்.

    கொத்தமல்லி, பெரிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம் போட்டு தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்குங்கள். 

    அடுத்து வெங்காயம், ப.மிளகாயை போட்டு வதக்கவும்.

    அடுத்து காஷ்மீர் சிவப்பு மிளகாய் பொடி, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்

    அடுத்து அரைத்த ராஜ்மாவை சேர்த்து கிளறுங்கள். மசாலாக்கள் ராஜ்மாவுடன் கலக்க வேண்டும். போதுமான உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள்.

    பின் அடுப்பை அணைத்துவிட்டு மசித்த உருளைக்கிழங்கு, கொத்தமல்லி, புதினா, எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக பிசைந்துகொள்ளுங்கள். 

    பிசைந்ததும் கைகளில் எலுமிச்சை அளவு உருண்டை எடுத்துக்கொண்டு கட்லெட் போல் கைகளில் வைத்து தட்டி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

    மீண்டும் அடுப்பில் தவா வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் செய்து வைத்த கட்லெட்டை போட்டு இரு புறமும் பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

    அவ்வளவுதான் சுவையான ராஜ்மா கட்லெட் தயார். 

    இதற்கு புதினா சட்னி பொருத்தமாக இருக்கும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தினம் ஒரு 10 நிமிடங்கள் ஒதுக்கி இங்கே சொல்லப்பட்டிருக்கும் குறிப்புகளை பயன்படுத்தி பாருங்கள். ஒரு மாதத்தில் உங்களிடமிருக்கும் மாற்றத்தை கண்டு ஆச்சரியப்படுவீர்கள்.
    இளமையான தோற்றம் ஒரு வரம். அது எளிதில் எல்லாருக்கும் கிடைக்காது. இயற்கையாகவே சிலருக்கு அமைந்தாலும் நாம் பராமரிப்பதும் இருக்கிறது. தினம் ஒரு 10 நிமிடங்கள் ஒதுக்கி இங்கே சொல்லப்பட்டிருக்கும் குறிப்புகளை பயன்படுத்தி பாருங்கள். ஒரு மாதத்தில் உங்களிடமிருக்கும் மாற்றத்தை கண்டு ஆச்சரியப்படுவீர்கள்.

    திங்கள் கிழமை : முதல் நாள் தேனிலிருந்து தொடங்குங்கள். தேன் ஒரு ஸ்பூன் எடுத்து அதனுடன் 2 துளி எலுமிச்சை கலந்து முகத்தில் தடவுங்கள். 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். முகம் அழுக்கில்லாமல் ஜொலிக்கும்.
     
    செவ்வாய் கிழமை : ஸ்ட்ரா பெர்ரி சதைப் பகுதியை மசித்து அதனுடன் பால் ஒரு ஸ்பூன் கலந்து முகத்தில் தேயுங்கள். காய்ந்ததும் கழுவினால் முகம் சுருக்கம் போய், இள்மையாக இருக்கும்.

    புதன் கிழமை : யோகார்ட் ஈரப்பதம் அளிக்கும். யோகார்டை முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவினால் கருமை, அழுக்கு அகன்று மென்மையாக மாறும்.

    வியாழக் கிழமை : கடலை மாவில் சிறிது தயிர் கலந்து முகத்தில் தடவி நன்றாக காய்ந்ததும் கழுவுங்கள். சருமம் தளர்வடைவது குறைந்து இறுகும். வயதான தோற்றத்தை தடுக்கும்.

    வெள்ளிக்கிழமை : முல்தானி மட்டியில் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் தடவுங்கள். காய்ந்ததும் கழுவினால் முகம் தொய்வடையாமல் பாதுகாக்கும்.

    சனிக் கிழமை : சுத்தமான தேங்காய் எண்ணெயில் சிறிது மஞ்சள் கலந்து முகத்தில் தடவுங்கள். 20 நிமிடம் கழித்து குளித்தால் என்றும் இளமை உங்கள் வசம்.

    ஞாயிற்றுக் கிழமை : ஞாயிறுகளில் அரிசி வேக வைத்த நீரில் அல்லது அரிசி கஞ்சியை எடுத்து முகத்தில் தடவுங்கள். முகம் கெட்டியாக இறுகியதும் முகம் கழுவினால் சருமம் பளபளக்கும்.
    பிறந்த குழந்தையைக் குளிக்க வைப்பதில் ஏற்படும் குழப்பமும், சந்தேகமும் இன்றளவும் நிலவுகிறது. அதற்கான விடைதான் இந்தக் கட்டுரை.
    பிறந்த குழந்தையைக் குளிக்க வைப்பதில் ஏற்படும் குழப்பமும், சந்தேகமும் இன்றளவும் நிலவுகிறது. அதில் ஒன்று தான் எந்த நேரத்தில் குளிக்க வைக்கலாம் என்பது..எனவே அதற்கான விடைதான் இந்தக் கட்டுரை.

    குழந்தைகளை வெப்பமான நாட்களில் காலை 9-10 மணிக்குள் குளிப்பாட்டலாம். குளிர் நாட்கள், குளிர் பிரதேசங்களில் உள்ள குழந்தைகளை வெயில் வந்த பிறகு குளிக்க வைக்கலாம்.

    அதேபோல் குழந்தையைக் குளிப்பாட்டும் முன்னர் தாய்ப்பால் கொடுக்கக் கூடாது. குழந்தை குளிக்க வைத்த பிறகு பால் கொடுத்து தூங்க வைக்கலாம்.

    அதேபோல் குழந்தையை தினமும் குளிப்பாட்டுவது நல்லது என்கின்றனர். குழந்தை பிறந்தவுடன் நாட்கள் செல்ல செல்ல அதன் தோல் உரிந்து புதிய தோல் தோன்றும். எனவே அதற்கு தினமும் குளிக்க வைத்து சுத்தமாக வைத்துக்கொண்டால் ஆரோக்கியமான வளர்ச்சி இருக்கும் என கூறப்படுகிறது.

    குளிர் நாட்களில் ஒருநாள் விட்டு ஒருநாள் குளிக்க வைக்கலாம். குளிக்க வைப்பது மட்டுமன்றி எண்ணெய் மசாஜ் அவசியம். எனவே எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்துவிட்டுக் குளிக்க வைப்பது நல்லது. இதை ஒரு நாள் விட்டு ஒருநாள் செய்யலாம்.

    எண்ணெய் தடவ செக்காடிய தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் பயன்படுத்தலாம். அதேபோல் பாதாம் எண்ணெய், ஆலிவ் எண்ணெயையும் பயன்படுத்தலாம். எந்த எண்ணெயாக இருந்தாலும் அதைக் சூடாக்கி குழந்தையின் உடல் பொறுக்கும் இளஞ்சூட்டில் தேய்த்து மசாஜ் செய்யுங்கள்.

    அதேபோல் தண்ணீர் சூடாக இல்லாமல் குழந்தையின் உடல் பொறுக்கும் இளஞ்சூடாக இருக்க வேண்டும். 
    குடும்பத்தில் கணவன், மனைவி இடையே சண்டை ஏற்படுவது சகஜமாகி விட்டது. கணவன்- மனைவி இடையே ஏற்படும் சண்டைகளால் குடும்பங்களே பிரிந்து விடுகின்றன.
    குடும்பத்தில் மனைவிகள் கோபம் அடைய, கணவன்களும் பல நேரங்களில் காரணமாகி விடுகின்றனர் என்பது அவர்களுக்கு புரிவதில்லை.

    உங்கள் கோபக்கார மனைவியை சமாளிக்க இதோ ஒரு சில டிப்ஸ்….

    உங்கள் மனைவியை பார்க்கும் போது புன்னகை செய்ய மறக்காதீர்கள். நீங்கள் புன்னகை செய்தாலே அடுத்த நொடியில் கோபத்தை மறந்து விடுவார்கள்.

    உங்கள் மனைவி தெரியாமல் செய்யும் சிறு சிறு தவறுகளைக் கூட சுட்டிக்காட்டி கண்டபடி திட்டாதீர்கள். அவர்கள் தவறு செய்து இருப்பின் பொறுமையாக தவறை எடுத்து கூறுங்கள்.

    முக்கிய வேலைகளில் ஈடுபடும் போது அன்பாய் பேச வேண்டுமே தவிர தொந்தரவு செய்வது போல மனைவியிடம் பேசி கொண்டே இருக்காதீர்கள். இதனால் மனைவி கோபமடைந்து, உங்களை திட்ட நேரிடும். இதனால் இரண்டு பேரும் கடுப்பாக வாய்ப்பு அதிகம்.

    வேலைக்கு செல்லும் மனைவியாக இருந்தால், வேலை முடிந்து வரும் போது அவர்களின் அனுபவங்களை கேட்டு அறிந்து கொள்ளுங்கள். அதேபோல நீங்களும் உங்கள் அனுபவங்களை, அவரிடம் பகிர்ந்துகொள்ளுங்கள். அவ்வாறு பகிர்ந்து கொள்வதன் மூலம் இருவருக்குள்ளும் அன்பு அதிகரிக்கும்.

    மனைவி செய்யும் சிறு உதவிகளுக்கும் அன்புடன் நன்றி கூறலாம். வாயினால் தெரிவிக்க கூடாது. அதனை சற்று கொஞ்சலாகவும் மனைவியை அணைப்பதன் வழியாகவும் நன்றி கூறலாம்.

    ஏதேனும் சிறு தவறு ஏற்படின் தவறுகளுக்காக உடனே மன்னிப்பு கேட்டு கொள்ளுங்கள். இதன்மூலம் மனைவியிடம் கோபம் நீடிப்பதை தவிர்க்க முடியும்.

    மனைவி செய்த தவறுகளை மனதில் வைத்து கொண்டு, அதனை குத்தி காட்டி பேச கூடாது. மேலும் சம்பந்தமே இல்லாமல் மனைவியின் பெற்றோரையும், குடும்பத்தையும் திட்ட கூடாது. இதனால் மனைவியின் மனதில் வெறுப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

    வேலைக்கு செல்லாத மனைவியாக இருந்தால், அவர்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி வந்து அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுங்கள். நேரம் கிடைக்கும் போது மனைவியை வெளி இடங்களுக்கு கூட்டி செல்லுங்கள்.

    கணவனும், மனைவியும் பேசும் போது பிடிவாதமாக பேசாமல், விட்டுக் கொடுத்து பேசுங்கள். மனைவியும் தனது கருத்தை தெரிவிக்க வாய்ப்பு அளிக்க தவறாதீர்கள்.

    மனைவி செய்தவைகள் குறிப்பாக சமையல் உள்ளிட்டவைகளை பார்த்து குறை கண்டுபிடிக்காதீர்கள். நன்றாக இருப்பதாக கூறிவிட்டு, மாற்றத்தை சாதூர்யமாக தெரிவிக்கலாம்.

    மற்றவர்கள் முன் மனைவியை கேவலமாக பேசுவது, திட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதால், மனைவி தனிமையாக இருப்பதாக உணர்ந்து தாய்வீ்ட்டு நினைப்பு வந்துவிடலாம்.

    எனவே வீட்டில் இருக்கும் போது மனைவிக்கு சிறு சிறு உதவிகள் செய்வதன் மூலம், இருவருக்கும் இடையே உறவும் பலப்படும், அன்பும் பெருகும். கோபம் இருந்த இடம் தெரியாமல் போகும்.

    சண்டை ஏற்பட்டால், முடிந்த வரைக்கும் சமாதான கொடியை பறக்கவிட காத்திருக்க வேண்டுமே தவிர, மேலும் சண்டையை வளர்க்க கூடாது. அன்பை வெளிப்படுத்தினால் இருவரும் மகிழ்ச்சியோடு வாழலாம்.
    தேன் என்றாலே நாவில் எச்சில் ஊறும். எது அசல் தேன்? எது கலப்பட தேன் என்பது பற்றி நாம் அறிந்து கொள்வது நல்லது. அது பற்றி பார்ப்போம்.
    தேன் என்றாலே நாவில் எச்சில் ஊறும். ஆம், அந்த எச்சில் முறையாக ஊறினாலே உடல் நலமாக இருக்கிறது என்று அர்த்தம். எது அசல் தேன்? எது கலப்பட தேன் என்பது பற்றி நாம் அறிந்து கொள்வது நல்லது. அது பற்றி பார்ப்போம்:-

    1) ஒரு வெள்ளைத்தாளில் ஒரு துளி தேனை விடுங்கள். அந்த தேனை, தேன் ஊற்றப்பட்ட காகிதம் உறிஞ்சாமலும் மேற்கொண்டு அந்த வெள்ளைத்தாளில் பரவாமலும் இருந்தால் அது அசல் தேன் என்பதை அறியலாம். ஒரு வேளை, அந்த காகிதம், அந்த ஒரு துளி தேனை உறிஞ்சினாலோ அல்லது பரவ விட்டாலோ அந்த தேன் கலப்படத் தேன் என்பதை அறியலாம்

    2) ஒரு டம்ளர் நிறைய தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள் அதில் ஒருதுளி தேனை விடுங்கள். அந்த ஒரு துளி தேன், தண்ணீரோடு கரையாமல் நேராக கீழே சென்று விழுந்தால், அது அசல் தேன் என்பதை அறியலாம். ஒருவேளை அந்த ஒரு துளி தேன் தண்ணீரோடு கலந்துவிட்டால், அது கலப்படத் தேன் என்பதை அறியலாம்.

    3) ஒரு தீக்குச்சியின் மருந்து பகுதியில் ஒரு துளி தேனை விட்டு, அந்த தீக்குச்சியை, தீப்பெட்டியின் பக்கவாட்டில் உள்ள மருந்து பட்டையில் உரசுங்கள், உடனே தீப்பற்றி எரிந்தால், அது அசல் தேன் என்பதை அறியலாம். ஒருவேளை அந்த தீக்குச்சி எரியாமல் போனால் அது கலப்பட தேன் என்பதை அறியலாம்.
    அடர் நிற(டார்க்) ஜீன்ஸை அப்படியே நிறம் மாறாமல் பாதுகாக்க, சில விஷயங்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் அவை என்வென்று அறிந்து கொள்ளலாம்.
    ஆடைகளில் இருந்து நறுமணம் வீசும். அடர் நிற(டார்க்) ஜீன்ஸை அப்படியே நிறம் மாறாமல் பாதுகாக்க, துவைக்கும் போதெல்லாம் வாஷிங் மிஷினில் கடைசியாக வெள்ளை (ஒயிட்) வினிகரை சேர்க்கவும். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ஜீன்ஸ் அப்படியே இருக்கும்.

    அதே நேரத்தில் வெளிறிய நிறத்தில் ஜீன்ஸ் வேண்டும் என்றால் வெந்நீரில் ஜீன்ஸை துவைக்க நீங்கள் விரும்பியபடி வெளிர் நிறத்தில் ஜீன்ஸ் மாறி விடும். உடையில் மை (இங்க்) கறை பட்டால், அந்த இடத்தை மட்டும் பாலில் ஊற வைத்து, சோப்பு போட்டு துவைக்க கறை காணாமல் போய் விடும். 

    கிளிசரினும் பயன்படுத்தலாம். எவ்வளவு சோப்பு போட்டும் ஆடைகளில் வாசனை இல்லையா? துணிகளை அதிக நேரம் ஊற வைக்காமல், நன்றாக உலர்த்தி எடுத்தாலே போதும்.
    வேர்க்கடலையில் நல்ல கொழுப்புகள் உள்ளதால், உடலுக்கு தீங்கு விளைவிக்காது. இது ஆன்டி ஆக்ஸிடென்டாக செயல்பட்டு, இதய வால்வுகளைப் பாதுகாப்பதோடு, இதய நோய் வராமல் தடுக்கிறது.
    * வேர்க்கடலைக்கு ஆயுட்காலத்தையே நீட்டிக்கும் ஆற்றல் உடையது.

    * இதில் நல்ல கொழுப்புகள் உள்ளதால், உடலுக்கு தீங்கு விளைவிக்காது.

    * இதிலுள்ள வைட்டமின் பி மற்றும் சி சத்துக்கள் சருமத்திற்கு பளபளப்பைக் கொடுக்கிறது.

    * இதனை சாப்பிட்டால் மனஅழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம்.

    * இது கர்ப்பிணிகள் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க உதவுகிறது.

    * நியாசின்’-நிலக்கடலையில் அதிகமாக உள்ளதால், நினைவாற்றல் அதிகரிக்கிறது.

    * பெண்களின் கர்ப்பப்பை சீராகச் செயல்படவும், கட்டிகள், நீர்க்கட்டிகள் வராது தடுக்கும் வல்லமை இதற்குண்டு.

    * இது ஆன்டி ஆக்ஸிடென்டாக செயல்பட்டு, இதய வால்வுகளைப் பாதுகாப்பதோடு, இதய நோய் வராமல் தடுக்கிறது.

    * நிலக்கடலையில் உள்ள ‘பீட்டா கௌமரிக்’ என்ற அமிலம் குடலில் நச்சுப் பொருள் சேருவதைத் தடுக்கிறது. இதனால் குடல் புற்றுநோய் வருவதும்
    தடுக்கப்படுகிறது.

    * விட்டமின் ‘பி’ சத்து சார்ந்த ‘பயோட்டின்’ என்னும் வேதிப்பொருள் முடி வளர்ச்சியில் பெரும்பங்கு வகிக்கிறது; முடி உதிர்வதையும் தடுக்கிறது.

    * இதனை வேக வைத்து, வளரும் குழந்தைகளுக்குக் கொடுத்தால், ஊட்டச்சத்து அதிகரித்து, சீரான வளர்ச்சி கிடைக்கும். மூளையும் சிறப்பாக செயல்படும்.
    கர்ப்ப காலத்தில் மனநிலை மாற்றங்கள் ஏற்படுவது சாதாரண விஷயம் தான். அதனை சரிசெய்ய உதவிகள் தேவைப்பட்டால் யோசிக்காமல் கணவரிடமோ, குடும்பத்தினரிடமோ கேட்பதில் தவறில்லை.
    பெண்களின் கர்ப்ப காலத்தில் மனநிலை மாற்றங்கள் என்பது மிகவும் பொதுவான பிரச்சினை ஆகும். இதற்கு காரணம் உடலில் வேகமாக மாறி வரும் ஹார்மோன்கள், உடல் உபாதைகள் மற்றும் அடுத்தடுத்து ஏற்படும் வளர்ச்சி மாற்றங்கள் தான். மேலும், கர்ப்பிணிகள் ஒரே நேரத்தில் உடல் மாற்றங்களுடன் பல்வேறு உணர்ச்சி மாற்றங்களையும் சந்திக்கிறார்கள். பொதுவாக பெண்களின் உணர்ச்சி நல்வாழ்வு மற்றும் மனக் கண்ணோட்டம் கர்ப்ப காலத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதில் குறிப்பாக அவை குழந்தையின் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

    மனநிலை மாற்றங்களை சமாளிக்க கர்ப்பிணிகள் பின்வரும் சில வழிகளை முயற்சி செய்யலாம்:

    கர்ப்ப காலத்தில் உங்கள் மனதில் ஏற்படும் கோபம் மற்றும் எரிச்சல் போன்ற உணர்ச்சிகள் குறித்து பகிர்ந்து கொள்வது நல்லது. நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள் என்பது குறித்து உங்கள் கணவர், குடும்பத்தினர், நண்பர்களிடம் வெளிப்படையாக கூறுவது மனஅமைதியை தரும்.

    நீங்கள் சோர்வாக இருந்தால் உங்கள் மனநிலையை நிர்வகிப்பது சற்று கடினமாக இருக்கும். எனவே உங்களுக்கு போதுமான தூக்கம் வருவதை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பகலில் சிறிது நேரம் தூங்குவதால் உங்கள் உடல் அதிக ஆற்றலைப் பெறவும், உங்கள் உணர்ச்சிகளை அமைதிப்படுத்தவும் உதவும். பகலில் தூங்குவது மனநிலை மாற்றங்களை நிவர்த்தி செய்வதற்கான மிகச் சிறந்த வழிகளில் ஒன்றாகும்.

    உங்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்கும், மனதை சுறுசுறுப்புடன் வைத்திருக்கவும் உடற்பயிற்சி ஒரு சிறந்த வழியாகும். நீங்கள் சோர்வாக இருப்பது போன்று உணர்ந்தால், நடைபயிற்சி அல்லது நீச்சல் போன்ற லேசான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். உடற்பயிற்சி செய்யும் போது உடலில் இருந்து எண்டோர்பின்கள் வெளியேறும், இதனால் மனதில் நேர்மறை மற்றும் மகிழ்ச்சியான உணர்வுகள் அதிகரிக்கும். மேலும் தினமும் யோகா, தியானம் போன்றவற்றையும் கடைபிடிப்பது நல்லது.

    எப்போதும் உங்களுக்காக சில மணி நேரத்தை செலவிட முயற்சி செய்யுங்கள். அந்த நேரத்தில் ஒரு நல்ல திரைப்படத்தை பார்க்கலாம், உங்கள் நண்பர்களிடம் பேசலாம், பூங்கா அல்லது சுற்றுலாவிற்கு செல்லலாம். அல்லது உங்கள் தோட்டத்தில் அமர்ந்து ஒரு நல்ல புத்தகம் படித்துக்கொண்டே ஓய்வெடுக்கலாம். உங்கள் கணவர் உதவியுடன் கை, கால்களை மசாஜ் செய்து கொள்ளலாம். நீங்கள் மகிழ்ச்சியாகவும், உற்சாகத்துடனும் இருக்க இதுபோன்று நேரங்களை செலவிடுவது நல்லது.
    இன்றைய பியூட்டி டிரெண்ட் அடர்த்தியான மற்றும் தடிமனான புருவங்கள்தான். உங்களுக்கு இயற்கையான புருவ அடர்த்தி வேண்டுமெனில் இந்த டிப்ஸை டிரை பண்ணுங்க...
    இன்றைய பியூட்டி டிரெண்ட் அடர்த்தியான மற்றும் தடிமனான புருவங்கள்தான். உங்களுக்கு இயற்கையான புருவ அடர்த்தி வேண்டுமெனில் இந்த டிப்ஸை டிரை பண்ணுங்க...

    * தினமும் விளக்கெண்ணெய் கொண்டு இரவு மசாஜ் செய்துவிட்டு அப்படியே படுத்துவிடுங்கள். முடி அடர்த்தியாக வளரும்.

    * தேங்காய் எண்ணெய் புருவங்களுக்கு வறட்சி இல்லாமல் எண்ணெய் பதம் அளிக்கும். இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். எனவே தேங்காய் எண்ணெயை தடவி 30 நிமிடங்களுக்கு மசாஜ் செய்யுங்கள்.

    * ஆலிவ் எண்ணெய் வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் ஏ சத்து நிறைவாக உள்ளது. எண்ணெயை புருவத்தில் மசாஜ் செய்து 2 மணி நேரம் ஊற வைத்து பின் கழுவிவிடுங்கள்.

    * வெங்காய சாறில் இருக்கும் சல்ஃபர், செலினியம், மினரல், வைட்டமின் பி மற்றும் சி முடி வளர்ச்சியை அதிகரிக்கும். எனவே அதன் சாறை புருவத்தில் அப்ளை செய்து மசாஜ் செய்யுங்கள். 1 மணி நேரம் கழித்து கழுவுங்கள்.

    * கற்றாழையும் முடி வளர்ச்சியை தூண்ட உதவும். எனவே அதன் சதையை எடுத்து புருவத்தில் தேய்த்து 15 நிமிடங்களுக்கு மசாஜ் செய்யுங்கள்.
    ஒரு வயது நிறைந்த குழந்தைக்கு புரதச்சத்து நிறைந்த உணவுகளைக் கொடுப்பதால் குழந்தையின் வளர்ச்சி சீராக இருக்கும். எனவே புரதம் நிறைந்த உணவுகளில் குழந்தைக்கு எதையெல்லாம் தரலாம் என்று பார்க்கலாம்.
    ஒரு வயது நிறைந்த குழந்தைக்கு செரிமானம் வளர்ச்சி அதிகரிக்கும். அந்த நேரத்தில் புரதச்சத்து நிறைந்த உணவுகளைக் கொடுப்பதால் குழந்தையின் வளர்ச்சி சீராக இருக்கும். மருத்துவர்கள் 1-3 வயது நிறைந்த குழந்தைக்கு தினசரி 1300 கலோரிகளும் 16 கிராம் புரதமும் கொடுக்க வேண்டும் என்கின்றனர். எனவே புரதம் நிறைந்த உணவுகளில் குழந்தைக்கு எதையெல்லாம் தரலாம் என்று பார்க்கலாம்.

    ஒரு கப் பாலில் 8 கிராம் புரதம் உள்ளது. பாக்கெட் பால் சுத்திகரிக்கப்படுவதால் கொழுப்பு, புரத அளவு மாறுபடலாம். எனவே பசும்பால் எருமைப் பால் இருந்தால் காய்ச்சி கொடுங்கள். அதேபோல் அதில் மற்ற பவுடர்கள் எதுவும் கலக்காமல் பால் மட்டும் கொடுத்தாலே நிறைவான புரதச்சத்தைப் பெறலாம்.

    கிவி பழம், அத்திப்பழம், நாவல் பழம், பலாப்பழம், கொய்யா பழம் கொடுக்கலாம். பலாப்பழம் கொடுக்கும்போது அளவாகக் கொடுக்க வேண்டும். விரைவில் செரிமானம் ஆகாது. நன்கு பழுத்ததாக கொடுங்கள். மற்ற பழங்களையும் மசித்து ஊட்டலாம் அல்லது ஜூஸாக அரைத்து கொடுக்கலாம்.

    துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு தினசரி உணவில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். இட்லி , தோசைக்கு சாம்பாரில் பருப்பு கூடுதலாக சேர்த்து ஊட்டுங்கள். அதேபோல் பாதாம், முந்திரி, வேர்க்கடலையும் கொடுக்கலாம். வேர்க்கடலையை அதிகம் தர வேண்டாம். செரிமானம் பாதிக்கும். இவற்றில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பருப்பு வகையாகக் கொடுங்கள்.

    பசலைக் கீரையில் புரதச்சத்து அதிகம் உள்ளது. எனவே இதை நன்கு வேக வைத்து குழைத்து சாதத்துடன் கலந்து ஊட்டுங்கள். அரை வேக்காட்டில் கொடுக்க வேண்டாம்.

    முட்டையை நன்கு வேக வைத்து மசித்துக் கொடுக்க வேண்டும். மதிய உணவுக்கு முன் 10-11 மணி அளவில் வேக வைத்து தனியாக ஊட்டலாம்.

    நன்கு வேக வைத்த மீனை முள் இல்லாமல் பார்த்து கவனமுடன் கொடுங்கள். இல்லையெனில் வயிற்றில் உபாதையை ஏற்படுத்தக் கூடும்.

    கோழியை நன்கு வேக வைத்து கைகளில் மசித்துக் கொடுங்கள். குழந்தை அப்படியே விழுங்குகிறதா என்பதையும் கவனியுங்கள். ஏனெனில் விரைவில் ஜீரணிக்காது. உபாதையாகலாம். பிராய்லர் கோழியைவிட நாட்டுக்கோழி வாங்கி ஊட்டுவது நல்லது. கறியாக கொடுத்தால் சாப்பிடவில்லை எனில் வேக வைத்த தண்ணீரைக் கூட கொடுக்கலாம்.

    தயிர் /நெய் இவை இரண்டிலும் போதுமான அளவு புரதச்சத்து உள்ளது. எனவே தயிர் சாதம் ஊட்டலாம். புளிக்காத தயிராக ஃபிரெஷாக இருக்க வேண்டும். நெய் சாதத்துடன் தினமும் சிறிதளவு பிசைந்து ஊட்டலாம்.

    மேலே குறிப்பிட்டுள்ள உணவுகள் உங்கள் குழந்தைக்கு ஒத்துக்கொள்கிறதா அல்லது ஒவ்வாமையை ஏற்படுத்துகிறதா என பார்த்துவிட்டுக் கொடுங்கள். அதேபோல் குழந்தை அவற்றை சாப்பிடவில்லை எனில் அவர்கள் மறுக்காதவாறு வேறெந்த வழிகளில் கொடுக்கலாம் என சிந்தித்து சுவை கொண்டதாக ஊட்டிப் பாருங்கள்.
    ×