என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    ஒரு ஹேர்டையை பயன்படுத்தும் முன் சிறிய அளவில் உபயோகித்து பார்த்து நமக்கு அது ஏதும் அலர்ஜி அல்லது எரிச்சம் ஏற்படுத்துகிறதா என்று சோதித்து விட்டு பின் உபயோகப்படுத்தலாம்.
    முகத்துக்கு பூசும் பவுடர் போல ஹேர் டையும் சாதாரண அலங்காரப்பொருட்களில் ஒன்றாக மாறியுள்ளது. நடுத்தர வயதை எட்டிய இளம் பெண்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகவே ஆகியுள்ளது. ஆனால் ஹேர் டையில் ரசாயனக்கலவைகள் இருப்பதால் தலைமுடி உதிர்தல், எரிச்சல் போன்ற பின்விளைவுகள் ஏற்படுமோ என்ற அச்சத்தால் பலன் ஹேர் டை பயன்படுத்த தயக்கம் கொண்டுள்ளனர்.

    ஹேர் டைகளில் பல்வேறு ரசாயனப்பொருட்களில் கலவை இருப்பது என்னமோ உண்மை தான். ஆனால் அவை அனைத்துமே கெடுதல் என்று சொல்லிவிட முடியாது. நாம் பயன்படுத்தும் ஷாம்புவில் கூட சில ரசாயன பொருட்கள் உள்ளன.

    * ஒரு ஹேர்டையை பயன்படுத்தும் முன் சிறிய அளவில் உபயோகித்து பார்த்து நமக்கு அது ஏதும் அலர்ஜி அல்லது எரிச்சம் ஏற்படுத்துகிறதா என்று சோதித்து விட்டு பின் உபயோகப்படுத்தலாம்.

    * தலைமுடியின் கருப்பு நிறம் சீக்கிரம் மங்கி விடாமல் இருக்க  சில வழிமுறைகளை ஹேர் டை பாக்கெட்டுகளில் குறிப்பிட்டு இருப்பார்கள். நாம் அவற்றை சரியாக பின்பற்றினால் மாதமாதம் ஹேர் டை போடுவதை தவிர்க்கலாம்.

    * இப்பொழுது நாட்டு மருந்து கடைகளில் மூலிகை ஹேர் டைகளும் விற்பனை ஆகின்றது. ரசாயன ஹேர் டை உபயோகிக்க விரும்பாதவர்கள் இது போன்ற முலிகை ஹேர் டைகளை பயன்படுத்தலாம்.

    வெள்ளை முடியுடன் இயற்கை தோற்றத்தில் இருப்பது ஒரு அழகு தான். மிகப்பெரிய ’ஹீரோக்கள் கூட சால்ட் அண்டு பெப்பர் லுககிற்கு மாறிவிட்டார்கள். ஆனால் ஒரு திருமண வரவேற்பு வேலைக்கான இன்டர்வியூ நம்மை விட வயதில் குறைந்தவர்கள மத்தியில் நாம் இருக்கும் போது வயதை குறைத்து காட்டுவதில் தவறில்லை. அதற்கு ஹேர் டை கைகொடுக்கும்.
    தாய்மையில் உணர்வுபூர்வமாக நடக்கும் நினைவுகளை தங்கள் வாழ்நாள் முழுவதும் நினைத்து ரசிப்பதற்கும், பொக்கிஷமாக பாதுகாப்பதற்கும் தான் மெட்டர்னிட்டி போட்டோ ஷூட் எனும் பெயரில் தற்போது புகைப்படங்களாகவும் வீடியோக்களாகவும் பதிவு செய்து கொள்கிறார்கள்.
    தாய்மை என்பது பெண்களின் வாழ்வில் மறக்கவே முடியாத நிகழ்வு. தான் கருவுற்றிருப்பதை முதன் முதலாக அறிந்ததும், அடிவயிற்றில் ஒரு பட்டாம்பூச்சி சிறகடித்து பறப்பதை உணரும் அந்த தருணம் முதலே அவள் தாய்மையை ரசிக்க ஆரம்பித்து விடுவாள். கன்னிப்பருவத்தில் இருந்து கல்யாணம் ஆகும் வரை எடையும், இடையும் கூடாமல் தங்களை பார்த்துக்கொள்ளும் பெண்கள், தாய்மை அடைந்ததும் வயிறு பெரிதாவதை கண்டு மகிழ்ச்சியில் பூரிக்கும் மாயம் தாய்மையில் மட்டுமே நிகழும்.

    முதல் நாளிலிருந்து முன்னூறு நாள் வரை தனக்குள் நடக்கும் மாற்றங்களை மகிழ்ச்சியும் பயமும் கலந்த உணர்வோடு அனுபவிப்பாள். தன் கருவை சுமக்கும் துணையையும், பிறக்கப்போகும் மழலையையும் நெஞ்சில் சுமந்து கொண்டிருக்கும் தந்தை ஆயிரம் எதிர்ப்பார்ப்புகளோடு காத்திருப்பார். இப்படி உணர்வுபூர்வமாக நடக்கும் இந்த பயணத்தின் நினைவுகளை தங்கள் வாழ்நாள் முழுவதும் நினைத்து ரசிப்பதற்கும், பொக்கிஷமாக பாதுகாப்பதற்கும் தான் மெட்டர்னிட்டி போட்டோ ஷூட் எனும் பெயரில் தற்போது புகைப்படங்களாகவும் வீடியோக்களாகவும் பதிவு செய்து கொள்கிறார்கள்.

    அந்த காலத்தில் கருவுற்ற பெண்ணை அடுத்தவர் பார்வைக்கு கூட வரவிடமாட்டடார்கள். பிறந்த குழந்தைகளை ஒரு வயது நிரம்பும் வரை புகைப்படம் எடுக்க விடமாட்டார்கள். ஆனால் இப்போது அப்படியில்லை. தங்கள் வாழ்வில் நடக்கும் இனிய நிகழ்வுகளை பதிவு செய்து வாழ்நாள் முழுவதும் ரசிக்க நினைப்பவர்கள் அதிகம். கர்ப்பகாலத்தின் ஏழாவது மாதம் முதல் வயிறு நன்றாக தெரியும் என்பதால் அப்போதிலிருந்து மெட்டர்னிட்டி போட்டோ ஷூட் எடுக்க தொடங்குவார்கள்.

    ஒரு சிலர் குழந்தை பிறந்து தவழ்வது நடப்பது வரையுமே பதிவு செய்வார்கள். இதற்காகவே இப்போது நிறைய புகைப்பபடக்கலைஞர்கள் உள்ளனர். சாதாரணமாக வீட்டில் எடுப்பது அல்லது வெளியிடங்ளை தேர்வு செய்து எடுப்பது என்று தங்கள் வாடிக்கையாளரின் விருப்பத்துக்கேற்ப அற்புதமாக படம் பிடித்து கொடுக்கிறார்கள்.

    மெட்டர்னிட்டி போட்டோ ஷூட்டில் கர்ப்பமாக இருக்கும் பெண்களோடு அவரின் கணவர், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரும்  இடம் பெறுவார்கள். பிரபலங்கள், திரைப்பட நடிகைகள் மட்டுமே எடுத்துவந்த இத்தகைய புகைப்படங்களை தற்போது அனைத்து தரப்பு மக்களும் எடுத்துக்கொள்கிறார்கள், வாடிக்கையாளரின் விருப்பதை பொறுத்து இடம், அணியும் உடை அனைத்தும் தேர்வு செய்யப்படுகின்றன.

    பெரும்பான்மையான தம்பதிகள் இயற்கையான சூழ்நிலையில் படம் பிடிப்பதையே விரும்புகின்றனர். அதிகமாக செலவு செய்து அரங்குகள் அமைத்து பிரமாண்டமாக பதிவு செய்து கொள்பவர்களும் இருக்கின்றனர். இயற்கையான சூழலில் எடுக்கும் மெட்டர்னிட்டி போட்டோ ஷூட் மிகவும் அருமையாக பதிவாகும். கர்ப்பணி பெண் மற்றும் கணவரின் உணர்வுகளை அருமையாக பதிவு செய்து கொடுப்பது இதில் சிறப்பு.
    மணமான பெண் அயல்நாடு பணிக்கு செல்கையில் பல்வேறு உளவியல் பிரச்சனைகளுக்கு உள்ளாக வேண்டியிருக்கிறது. காரணம் இன்னும் அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்.
    வெளிநாட்டு வேலை என்பது ஒருவருக்கு பிழைப்பு சம்பந்தப்பட்டது. இன்னொருவருக்கு பெருமை சம்பந்தப்பட்டது. படித்து முடித்ததும் வெளிநாட்டு வேலைக்கு செல்வோருண்டு. நல்ல வாய்ப்புகளினால் இங்கே இருக்கும் பணியை துறந்து செல்வோருமுண்டு. அங்கே பணியிலிருப்பவரை மணந்தால் வெளிநாட்டு வேலை அமையப்பெறும் பெண்களும் உண்டு. இவற்றில் ஏதுமில்லாமல், கல்யாணம், குழந்தை என்று ஆகிவிட்ட பெண்ணிற்கு, வெளிநாட்டில் வேலை கிடைத்தால்...? குடும்பம் துறந்து வெளிநாட்டு பணி என்பது எல்லாப்பெண்களாலும் ஏற்றுக்கொள்ள கூடியதில்லைதான். கட்டாயம் என்று ஒன்று நேர்கையில் விமானம் ஏறித்தான் ஆ க வேண்டும்.

    மணமான பெண் அயல்நாடு பணிக்கு செல்கையில் பல்வேறு உளவியல் பிரச்சனைகளுக்கு உள்ளாக வேண்டியிருக்கிறது. காரணம் இன்னும் அதிகரிக்கும் கட்டுப்பாடுகள். பெண் அதுவும் கல்யாணமாகி குழந்தையும் பெற்ற பெண் என்று அவன் மீதான நம்பிக்கை மற்றும் சந்தேக மனப்போக்கு கொண்டுள்ள சமூகம், எளிதில் எதையும் ஏற்றுக்கொள்வதில்லை. சுதந்திர மனப்போக்கிற்கு தயாராகாத சமூகத்தை எதிர் கொள்ள வேண்டிய கட்டாயம் உண்டாகிறது. பொருளெனும் வாழ்க்கை பொதுநோக்கு என்றாலும் எச்சூழலிலும் பணிக்கு செல்லும் ஆண் குற்றவாளி ஆக்கப்படுவதில்லை.

    குடும்பத்தை விட்டு செல்லுதல் என்பது மிகக் கடினமான முடிவு மட்டுமல்லாமல் உணர்ச்சிகளின் அடிமைத்தளைகளை தள்ளிவிட முடியாத சூழலாகவும் இருக்கிறது.

    நிலைக்கதவை தாண்டிவிட்டாலும் கழிகளுக்கு இடையில் புள்ளிகளாய் சிக்கிக் தவிக்கும் நிலை நன்கு படித்த சிந்திக்கக்கூடிய மேல் நடுத்தரக்குடும்பப்பெண்களுக்கும் இருக்கத்தான் செய்கிறது.

    வெளிநாட்டு பயண வாய்ப்புகள் அதிகம் கிடைக்கக்கூடிய தகவல் தொழில்நுட்ப துறைகளில் பணிபுரியும் பெண்கள் கூட மணமான பின்பறக்கும் தன் கனவுகளை மடிக்கணினிக்குள் மடித்து வைத்துவிடுகிறார்கள்.

    இருபதாம் நூற்றாண்டில் பெண் பயணத்திற்கு இரு தளர்வுகள் மட்டும் அளிக்கப்பட்டன். திருமணத்திற்கு முன் தனிப்பயணம் திருமணத்திற்கு பின் துணையுடன் பயணம். கணவனுடன் அன்றி மனைவியின் தனிப்பணயம் பலவித கேள்விகளுக்கு உட்படுத்தப்படுகின்றன.

    கணவன் என்ன செய்வார்? குழந்தைகள் தடுமாறும், பாசப்பிணைப்பு அறுந்துபோகும், நேசம் குறைந்து விடும் போன்ற அடுக்கடுக்கான கேள்விகளால் தனித்து பயணம் செய்வதை பொறுப்பற்ற ஒரு முடிவாய் கருதி கைவிடச் செய்யும் குழலுக்கு தள்ளிப்படுகிறார்கள். இதனால் வெளிநாட்டில் வந்து பணிபுரியும் மணமான பெண்களின் எண்ணிக்கை மிகசொற்பமாகவே இருக்கிறது.

    இந்த சூழல் மாற்றத்திற்கு தேவை பயணிக்க துடிக்கும் பெண்ணின் துணிவும் அசையாத நம்பிக்கையும், குடும்பத்தினரின் ஊக்கமும்.

    பொருளை நோக்கிய பயணம் எனினும் திறமைகளை விரிவாக்கம் செய்யவும் மனம் தோய்ந்த நம்பிக்கைகளை மீள் உருவாக்கம் செய்யவும். தனக்கான தேவைகளை தனித்து நோக்கவும். பெண்கள் அதிகம் பயணம் செய்யவேண்டிய அவசியம் உள்ளது.
    மல்லிகைப்பூ இட்லியும் காரசாரமான மிளகாய் சட்னிக்கு ஈடில்லா இணையாகும். எளிதாக இருந்தாலும் சுவையோ அலாதி. காய்ந்த மிளகாயிலும் பச்சை மிளகாயிலும் பீட்டா கரோட்டின் என்கிற விட்டமின் ஏ சத்தானது அதிகம்.
    தேவையான பொருட்கள் :

    வரமிளகாய் - 5 அல்லது மிளகாய்த்தூள் 2 தேக்கரண்டி
    வெங்காயம் - 1 பெரியது
    தக்காளி - 1 பெரியது
    புளி  - சிறிது,
    பூண்டு - 5 பல்
    உப்பு- 1 /2 தேக்கரண்டி

    தாளிக்க:

    எண்ணெய் - 3 தேக்கரண்டி
    கடுகு - 1 தேக்கரண்டி
    உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
    பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
    கறிவேப்பிலை - 1 கொத்து

    செய்முறை :

    வெங்காயம் தோல் உரித்து பெரிதாக வெட்டிக்கொள்ளவும்

    தக்காளியைக்கழுவி பெரிதாக வெட்டிக்கொள்ளவும்

    வெங்காயம், தக்காளி, உப்பு, புளி, மிளகாய் அல்லது மிளகாய்த்தூள் 2 தேக்கரண்டி சேர்த்து நன்றாக அரைக்கவும்.

    குறிப்பு : மற்றொரு விதம் இந்தக்கலவையை வதக்கியும் அரைக்கலாம்.

    வாணலியில் எண்ணெய் காயவைத்து கடுகு, பெருங்காயம் தாளிக்கவும்.

    கறிவேப்பிலை, அரைத்த துவையலையும் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும்.

    சுவையான காரசாரமான மிளகாய் சட்னி தயார்.

    இது இரண்டு நாட்கள் வரை கெடாதிருக்கும் ஆகையால் சுற்றுலா பயணத்திற்கு கூட எடுத்துச்செல்லலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளை தாக்கும் பல் நோய்களுக்கான அறிகுறிகள் பற்றியும், அவற்றில் இருந்து தற்காத்துகொள்ளும் வழிமுறை குறித்தும் பார்க்கலாம்.
    குழந்தைகளை பொறுத்தவரை மிட்டாய்கள், சாக்லேட், குக்கீஸ்கள் போன்ற இனிப்பு பலகாரங்களை அதிகம் சாப்பிடுவது பல் நோய்களுக்கு வழிவகுத்துவிடும். இதனால் பல் நோய்கள் பெரியவர்கள் மட்டுமின்றி சிறுவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். குழந்தைகளை தாக்கும் பல் நோய்களுக்கான அறிகுறிகள் பற்றியும், அவற்றில் இருந்து தற்காத்துகொள்ளும் வழிமுறை குறித்தும் பார்க்கலாம்.

    குழந்தைகளுக்கு பற்சிதைவு ஏற்பட உணவு பழக்கம் மட்டுமே காரணம் அல்ல. பல்வலி, பல்லின் நிறத்தில் மாற்றம், ஏதாவது சாப்பிடும்போது அல்லது குடிக்கும்போது வலி ஏற்படுவது, துர்நாற்றம், எதை சாப்பிட்டாலும் கசப்பாக இருப்பது, எதிர்பாராதவிதமாக எடை இழப்பு போன்றவை பற்களில் நோய்தொற்று ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறிகளாகும்.

    இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால் பல் மருத்துவர்களை அணுகி ஆலோசனை பெறுவது அவசியமானது. குழந்தைகள் ஊட்டச்சத்துமிக்க உணவுகளை விரும்பி சாப்பிட மாட்டார்கள். குறிப்பிட்ட நேரத்திற்குள்ளும் சாப்பிட்டு முடிக்க மாட்டார்கள். இனிப்பு பலகாரங்களைத்தான் அதிகம் விரும்புவார்கள். அதனை குறைத்து ஊட்டச்சத்து கொண்ட உணவுகளை சாப்பிட பழக்கப்படுத்த வேண்டும். சாப்பிட்டவுடன் வாய் கொப்பளிக்கும் வழக்கத்தையும் பின்பற்றச் செய்ய வேண்டும்.

    தினமும் இருமுறை பல்துலக்குவதற்கும் பழக்கப்படுத்த வேண்டும். இனிப்பு பலகாரங்களை அதிகம் சாப்பிடுவதற்கு அனுமதிக்கக்கூடாது. குறிப்பிட்ட அளவுதான் சாப்பிட வேண்டும் என்று வரையறுத்து அதன்படி செயல்பட வைக்க வேண்டும். காலை, மதியம், இரவு நேரத்தில் குறிப்பிட்ட நேரத்திற்குள் சாப்பிட வைத்துவிட வேண்டும். பற்களை எப்போதும் சுத்தமாக வைத்திருந்தால் பற்களின் ஆரோக்கியத்தை காக்கலாம்.
    மலேரியா பாதிப்புக்குள்ளாகிறவர்கள் சூப் அருந்துவது நோய் பாதிப்பில் இருந்து மீண்டுவர வழிவகுக்கும் என்பது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
    உலக அளவில் மலேரியா நோய்க்கு ஆண்டு தோறும் 4 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள். 20 கோடி பேர் மலேரியா நோய் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். காய்ச்சல், சளி, வாந்தி, தலைவலி, தசை வலி, சோர்வு போன்றவை மலேரியா நோய்க்கான ஆரம்பக்கட்ட அறிகுறி களாக இருக்கின்றன. மலேரியா பாதிப்புக்குள்ளாகிறவர்கள் சூப் அருந்துவது நோய் பாதிப்பில் இருந்து மீண்டுவர வழிவகுக்கும் என்பது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

    வீட்டில் தயாரிக்கப்படும் சூப், மலேரியா நோய் எதிர்ப்பு பண்புகளை கொண்டிருப்பதாகவும் ஆய்வாளர்கள் குறிப் பிடுகிறார்கள். இந்த ஆய்வை லண்டன் இம்பிரியல் கல்லூரி ஆராய்ச்சி குழுவினர் மேற்கொண்டுள்ளனர். இதற்காக உலகத்தின் பல பகுதிகளில் தயாரிக்கப்படும் சூப் வகைகளை ஆய்வுக்கு உட் படுத்தி இருக்கிறார்கள். அவை மலேரியா ஒட்டுண்ணிகளுக்கு எதிராக போராடும் தன்மை கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    காய்ச்சல் பாதிப்புக்குள்ளானவர் களுக்கு ஐந்து விதமான சூப் வகைகளை பருகக் கொடுத்து பரிசோதித்தபோது மலேரியா நோயை உருவாக்கும் ஒட்டுண்ணியின் வளர்ச்சியை அவை 50 சதவீதத்திற்கும் அதிகமாக கட்டுப்படுத்தி இருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் அவற்றுள் இரு சூப் வகைகள் மலேரியா நோய் எதிர்ப்பு மருந்தான டீஹைட்ரோ ஆர்டிமிசினேனின் தாக்கத்தை கொண்டிருப்பதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

    மலேரியா நோய் பாதிப்புக்கு ஆளானவர்கள் அதிக அளவில் தண்ணீர் பருக வேண்டும். இளநீர் மற்றும் பழ ஜூஸ்களையும் பருகலாம். பழங்களையும் அதிகமாக சாப்பிட வேண்டும். பப்பாளி, கேரட், பீட்ரூட், ஆரஞ்சு உள்ளிட்ட சிட்ரஸ் பழங்களை சாப்பிடலாம். புரதம் அதிகம் கொண்ட உணவு வகை களையும் சாப்பிட வேண்டும். அதேவேளையில் எண்ணெய் பலகாரங்கள், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.
    வயாகரா கண்டு பிடிக்கப்பட்டவுடன் மாத்திரை மூலமாக ஆண்மைக் குறைவை சரி செய்துவிடலாம் என்ற எண்ணம் உலகம் முழுவதும் உருவானது. ஆனால் ‘வயாகரா’ பற்றி அறிந்திராத அதிர்ச்சியான விஷயங்கள் உள்ளன. அவை என்ன தெரியுமா?
    உலக அளவில் கண்டுபிடிக்கப்பட்ட மாத்திரைகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, வயாகரா. ஆண்களின் பாலியல் செயல்பாட்டை மேம்படுத்தும் இந்த மாத்திரைகளை பெரும்பாலான நாடுகளில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ‘ஆண்கள் சமூகத்திற்கு கிடைத்த அற்புதம்’ என்றும் இதனை புகழ்கிறார்கள். ஆனால் இது கண்டு பிடிக்கப் பட்ட விதம் ரொம்பவும் வினோதமானது.

    பன்னாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்று, இதய நோயுள்ளவர்களுக்கு ரத்தத்தை அதிகமாக இதயத் தினுள் செலுத்தும் புதிய மருந்தைக் கண்டுபிடிப்பதில் ஈடுபட்டிருந்தது. அவர்கள் கண்டுபிடித்த மருந்தின் பெயர் ‘சில்டெனபில் சிட்ரேட்’. அதனை மூவாயிரம் பேர் களுக்குக் கொடுத்து ஆய்வு செய்ததில், அந்த மருந்து தோல்விக்குரிய ஒரு கண்டுபிடிப்பு என தெரியவந்தது. அதாவது இதயத்திற்குள் அது அதிக அளவில் ரத்தத்தை செலுத்தவில்லை.

    அதே நேரத்தில் அந்த மருந்தை உட்கொண்டவர்கள் தங்களுடைய உடலுறவில் இன்பம் அதிகரித்ததாகக் கூறினர். உடனே அந்த நிறுவனம் அதனை ஆண்மைக் குறைவு உள்ளவர்களுக்கான மருந்தாக ஆராய்ச்சி செய்து, மேம்படுத்தி வயாகரா என்ற பெயரில் வெளியிட்டது. உலகம் முழுவதும் அதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

    ஆண்மைக் குறைபாட்டை போக்க பலவகையான மருந்துகள் உள்ளன. எதனால் ஆண்மைக் குறைவு ஏற்பட்டிருக்கிறது என்பதைப் பொறுத்து அதற்காக பரிந்துரை செய்யப்படும் மருந்தும் மாறுபடும். ஆனால், வயாகரா கண்டு பிடிக்கப்பட்டவுடன் மாத்திரை மூலமாக ஆண்மைக் குறைவை சரி செய்துவிடலாம் என்ற எண்ணம் உலகம் முழுவதும் உருவானது. அதுவே, பரபரப்புக்கு ஒரு காரணம். வயாகரா சாப்பிடுவதன் மூலம் ரத்த ஓட்டம் குறிப்பிட்ட பகுதிக்கு பாய்ந்து விறைப்புத்தன்மையை ஏற்படுத்துகிறது.

    இதனால் பல்வேறு விதமான பின்விளைவுகளும் தோன்றின. தலைசுற்றல், வாந்தி, மயக்கம், கண்பார்வை மங்குதல் போன்றவை ஏற்பட்டன. இதய நோயுள்ளவர்கள் உயிர் இழக்கும் அபாயமும் ஏற்பட்டது. அதனால் வயாகராவை டாக்டரின் பரிந்துரையின்றி உட்கொள்ளக்கூடாது. நோயில்லாத அமெரிக்க ஆண்களில் நிறைய பேர் இதனை கண்டபடி பயன்படுத்தியதால், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்ததாகவும் அப்போது தகவல்கள் வெளியாகின. எய்ட்ஸ் நோய்-பால்வினை நோய்கள் பெருகியதாகவும் கூறப்பட்டது. வயாகரா மாத்திரையை நோயாளிகள் யாரும் பயன்படுத்திவிடக்கூடாது. தற்போது ஆண்மைக் குறைவுக்கு அதைவிட சக்திமிக்க, பின்விளைவுகளற்ற மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.
    இரவில் சருமம் மற்றும் கூந்தலில் சில பராமரிப்பு செயல்களை மேற்கொண்டால் அது காலை நேர மேக்கப்பை விட கூடுதல் பலன்தரும். சருமமும், கூந்தலும் ஆரோக்கியமாகவும் திகழும்.
    தினமும் காலை நேரங்களில் முகம் மற்றும் கூந்தல் அலங்காரம் செய்துகொள்ளும் பெண்களில் பலருக்கும் தெரியாத விஷயம் ஒன்று இருக்கிறது. அதாவது இரவில் சருமம் மற்றும் கூந்தலில் சில பராமரிப்பு செயல்களை மேற்கொண்டால் அது காலை நேர மேக்கப்பை விட கூடுதல் பலன்தரும். சருமமும், கூந்தலும் ஆரோக்கியமாகவும் திகழும்.

    இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு அழகில் செலுத்தவேண்டிய அக்கறை என்னென்ன தெரியுமா?

    இரவில் நன்றாக தூங்கி எழும்போது மனது புத்துணர்ச்சி பெறுவது போன்று, தூங்கி எழும்போது அன் றாடம் சருமமும் புத்துணர்ச்சி பெறும். தூங்கும் இரவு நேரத்தில் தூசுவோ, அழுக்கோ சருமத்தில் படாது. அசுத்தக்காற்றும் அண்டாது. வெயில், சூடு எதுவும் படாமல் சருமம் இரவு நேரத்தில் பாதுகாக்கப்படுகிறது. இத்தகைய பலன்கள் இரவில் சருமத்திற்கு கிடைப்பதால், தூங்கச் செல்வதற்கு முன்னால் சருமத்தை சுத்தப்படுத்தி தயார்படுத்துவதற்கு மறந்துவிடக்கூடாது.

    காலை நேரத்தில் முகத்தில் கிரீம் பூசி மேக்கப் போட்டிருப்பீர்கள். அதை முழுமையாக நீக்குவதற்கு கிளன்சிங் செய்வது மிக அவசியம். சருமம் நன்றாக சுவாசிப்பதற்காகவும், தானே புதுப்பித்துக்கொள்வதற்காகவும் இதை செய்யவேண்டும். முகத்தில் இருக்கும் தொற்றுக்கள், தூசுக்கள், எண்ணெய்த் தன்மை போன்றவைகளை போக்கி சருமத்தை சுத்தமாக்கும் பணியை கிளன்சிங் செய்கிறது. சருமத்திற்கு பொருத்தமான ‘பேஸ் வாஷ்’ பயன்படுத்தி முகத்தை சுத்தப்படுத்தவேண்டும்.

    பெண்கள் கிளன்சரை வீட்டிலேயே தயார் செய்துகொள்ளலாம். மூன்று பாதாம் பருப்பையும், இரண்டு பெரிய தேக்கரண்டி அரிசியையும் கலந்து நன்றாக அரைத்து தூளாக்குங்கள். அதனை காற்றுப்புகாத பாத்திரத்தில் அடைத்து வைத்துக்கொண்டு தேவைக்கு தக்கபடி பயன்படுத்தவேண்டும். அதில் சிறிதளவு பால் கலந்து கிளன்சராக பயன்படுத்த வேண்டியதுதான்.

    பசும்பாலை கொதிக்கவைக்காமல் அப்படியே குளிரச்செய்து அதனை பயன்படுத்தி இரவில் முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து கழுவலாம். வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு இது சிறந்த கிளன்சராக பயன்படும். எண்ணெய்த்தன்மை நிறைந்த சருமத்தைகொண்டவர்கள் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சம அளவு எடுத்து முகத்திற்கு கிளன்சராக பயன்படுத்தலாம். சாதாரண சருமமாக இருந்தால் எலுமிச்சை சாறுக்கு பதில் பால் சேர்த்துக்கொள்ளலாம்.

    சருமத்தில் இருக்கும் பி.எச்.அளவு சீரற்ற நிலையில் இருந்தால், சரும பிரச்சினைகள் தோன்றும். அதனால் சருமத்தில் ‘டோனிங்’ செய்து பி.எச். அளவை சீராக்கவேண்டும். இரவில் தூங்கச் செல்வதற்கு முன்னால் முகத்தை நன்றாக கழுவினாலும் சரும துவாரங்களில் அழுக்குகள் சேர்ந்திருக்கத்தான் செய்யும். அதனை முழுமையாக நீக்கினால்தான் முக அழகை பாதுகாக்கமுடியும். இதற்கு டோனிங் துணைபுரியும்.

    வறண்ட சருமத்திற்கும், எண்ணெய்த்தன்மையான சருமத்திற்கும் பொருத்தமான ‘டோனர்’களை அழகு சாதன பொருட்களை விற்கும் கடைகளில் வாங்கலாம். அதில் ஆல்கஹால் கலக்காததை தேர்வு செய்யவேண்டும்.

    கொதித்து ஆறிய நீரை சிறிய பாத்திரத்தில் எடுத்து, அதில் இரண்டு ரோஜா இதழ்களை போட்டு சூரிய வெளிச்சத்தில் ஒரு நாள் முழுக்க வைத்திருங்கள். பின்பு அந்த நீரை வடிகட்டி எடுங்கள். இதுதான் ரோஸ்வாட்டர். இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு இதில் பஞ்சை முக்கி, நன்றாக முகத்தை தேய்த்து சுத்தப்படுத்துங்கள். பிரிட்ஜில் குளிரவைத்த கிரீன் டீ அல்லது வெள்ளரிக்காய் சாறு போன்றவற்றையும் ஸ்கின் டோனராக பயன்படுத்தலாம்.

    இரவில் நீங்கள் கூந்தலை அவிழ்த்துவிட்டபடி தூங்குபவர்களாக இருந்தால், உங்களுக்கு கூந்தல் மீது அக்கறை இல்லை என்று அர்த்தம். தினமும் இரண்டு முறையாவது தலைமுடியை சீப்பால் நன்றாக சீவவேண்டும். மண்டை ஓட்டில் ரத்த ஓட்டம் அதிகரிக்கவும், கூந்தலின் ஆரோக்கியத்திற்கும் இது ஏற்றது.

    கூந்தலை சீவிவிடாமல் இருந்தால் பொடுகு அதிகரிக்கும். பிளாஸ்டிக் சீப்பிற்கு பதில் மரத்தாலான சீப்பை பயன்படுத்தினால் முடி உடைந்துபோவதை ஓரளவு தடுக்கலாம். முடியை நன்றாக சீவி கட்டிவைத்துக்கொண்டு தூங்கவேண்டும். கூந்தலை அவிழ்த்துவிட்டபடி தூங்கினால் தலையணை, போர்வையில் முடி உரசி, உடைந்துபோகும்.

    சருமத்தில் தண்ணீர்த்தன்மையை நிலைநிறுத்த துணைபுரிவது, மாய்ஸ்சரைசர். எந்த வகை சருமமாக இருந்தாலும் அதில் மாய்ஸ்சரைசர் பயன்படுத்தலாம். முகத்தில் சுருக்கம் ஏற்பட்டு முதுமை தெரியாமல் இருக்க சருமத்திற்கு தண்ணீர்த்தன்மை மிக முக்கியம். வறண்ட சருமத்தினர் கிரீமை அடிப்படையாகக் கொண்டவற்றையும், எண்ணெய் சருமத்தினர் ஜெல்லை அடிப்படையாகக் கொண்டவற்றையும் வாங்கி பயன்படுத்த வேண்டும். டோனரை சருமம் நன்றாக உறிஞ்சிய பின்பு மாய்ஸ்சரைசரை பயன்படுத்தவேண்டும். ஒரு பெரிய தேக்கரண்டி நிறைய தேங்காய் எண்ணெய்யை எடுத்து அதில் மூன்று துளி வைட்டமின் ஈ ஆயில் கலந்து மாய்ஸ்சரைசராக முகத்தில் பூசலாம்.
    குழந்தைகள் டீன் ஏஜ் வயதை தொட்டதும், பெற்றோருக்கு இனம் புரியாத பதற்றம் தொற்றிக்கொள்ளும். பிள்ளைகளுடன் பெற்றோர் நட்பாக பழகுவதன் மூலம், அவர்களை சிறப்பாக வழிநடத்த முடியும். அதற்கான 10 வழிகள் இதோ...
    குழந்தைகள் டீன் ஏஜ் வயதை தொட்டதும், பெற்றோருக்கு இனம் புரியாத பதற்றம் தொற்றிக்கொள்ளும். ஏனெனில் டீன் ஏஜ் பருவத்தில் தடம் தவறி செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு என்ற கவலை பெற்றோரை வாட்டும். அந்த சமயத்தில் பிள்ளைகளுடன் பெற்றோர் நட்பாக பழகுவதன் மூலம், அவர்களை சிறப்பாக வழிநடத்த முடியும். அதற்கான 10 வழிகள் இதோ...

    1. பொழுதுபோக்கை தேர்ந்தெடுங்கள்:

    பிள்ளைகள் வீட்டிலிருக்கும் நேரங்களில் அவர்கள் உங்களுடன் நேரத்தை செலவிடும் வகையில் இருவருக்கும் பிடித்தமான பொழுதுபோக்கை தேர்ந்தெடுங்கள். இருவரும் புத்தகங்களைப் படித்து விவாதிக்கலாம். யோகா, நீச்சல், இசை, நடனம் போன்ற வகுப்புகளுக்கு சேர்ந்து செல்லலாம்.

    2. பயணம் செய்யுங்கள்:

    இருவரும் சேர்ந்து சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களில் அருகில் உள்ள இடங்களுக்கு செல்லுங்கள். அவ்வாறு செல்லும்போது நிறைய விஷயங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். மாதம் ஒருமுறை பிள்ளைகளின் நண்பர்களுடன் சேர்ந்து மலையேற்றம், மினி சுற்றுலா என வித்தியாசமாக ஏதாவது செய்யலாம். ஒரே விஷயங்களை தொடர்ந்து பின்பற்றாமல் மாற்றங்களை புகுத்துவது இருவருக்கும் இடையே இணக்கத்தை அதிகப்படுத்தும்.

    3. குழந்தைகளிடம் மாணவராகுங்கள்:

    பெற்றோர் கற்ற விஷயங்களுக்கும், குழந்தைகள் கற்கும் விஷயங்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். பாடத்திட்டம், தொழில்நுட்பம் என புதிய விஷயங்களை பிள்ளைகள் வழியே கேட்டறிந்து ஆர்வத்துடன் கற்றுக்கொள்ளுங்கள். பிள்ளைகள் சொன்ன விஷயத்தை முயற்சித்து பார்க்கும்போது ‘நீ சொன்ன விஷயத்தை கடைப்பிடித்தேன். பயனுள்ளதாக இருந்தது’ என்று மனம் விட்டு பாராட்டுங்கள். அப்போதுதான் மேலும் பல விஷயங்களை உங்களுடன் பகிர முன்வருவார்கள்.

    4. ஆசைகளுக்கு முக்கியத்துவம் அளியுங்கள்:

    டீன் ஏஜ் பருவத்தை நெருங்கும்போது டிரெண்டிங்கான சிகை அலங்காரம், உடைகளை தேர்வு செய்வது பலருக்கும் பிடிக்கும். அவர்களின் ஆசைக்கு அணைபோடாதீர்கள். சூழலுக்கு ஏற்றவாறு அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுங்கள். தற்போது, ஆண் பிள்ளைகள் குடுமி வைத்துக்கொள்வது, தலையில் கோடு போல முடி வெட்டிக்கொள்வது பேஷனாக இருக்கிறது. இதுபோன்ற ஆசைகளை அவர்களது விடுமுறை காலங்களில் செய்துகொள்ள அனுமதியுங்கள்.

    5. உணர்வுகளைப் புரிந்துகொள்ளுங்கள்:

    இப்பருவத்தில் காரணமே இல்லாமல் கோபப்படுவார்கள். சட்டென்று சந்தோஷமாவார்கள். அத்தகைய மாறிவரும் உணர்வுகளை புரிந்துகொண்டு அதற்கேற்ப அவர்களை வழிநடத்துங்கள். ‘நீ எப்படி கோபப்படலாம்? நான் சொல்வதைத்தான் நீ கேட்க வேண்டும்’ என அடக்க முயற்சி செய்யாதீர்கள்.

    6. பேசக்கூடாத விஷயங்களை பேசுங்கள்:

    ஆண், பெண் இணைந்து வாழும் வாழ்வில் பாலுறவு பற்றி பேசுவதும், முழுமையாக தெரிந்துகொள்ளுவதும் அவசியம். அதை பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வம், எதிர்பாலின இனக்கவர்ச்சி போன்றவை டீன் ஏஜ் பருவத்தில் ஏற்படும். அவர்கள் கேட்காமலேயே பாலின ஈர்ப்பு பற்றிய அறிவியல் உண்மையை விளக்குங்கள். அதில் ஏற்படும் சந்தேகங்களை உங்களிடமே கேட்குமாறு அன்புடன் சொல்லுங்கள். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கேற்ப பக்குவமான பதில்களைச் சொல்லுங்கள். எந்த கேள்விக்கும் பதில் சொல்லாமல் தவிர்க்காதீர்கள்.

    7. சொந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள்:

    இப்படிச் செய்யாதே; அப்படிச் செய்யாதே என்று சொல்வதைவிட, அது போன்ற செயல்களை செய்தபோது ஏற்பட்ட உங்கள் சொந்த அனுபவத்தை சுவாரசியமாக சொல்லுங்கள். அது அவர்கள் மனதில் எளிதாக பதிந்துவிடும். பின்பு சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுக்க பழகிவிடுவார்கள்.

    8. சமூகத்தோடு பழக வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுங்கள்:

    குழந்தைகளைச் சமூகத்தின் சிறந்த மனிதனாக உருவாக்குவது ஒவ்வொரு பெற்றோரின் கடமை. குழந்தைகளுக்கும் சமூகத்துக்கும் நிறைய தொடர்பு உள்ளது என்பதை உணர்த்துவதற்கான வாய்ப்பை வழங்குங்கள். முதியோர் இல்லங்களுக்கு சென்று பெரியவர்களிடம் பழகுதல், ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவுதல் போன்ற வழக்கத்தை ஏற்படுத்துங்கள்.

    9. திட்டுதல், அடித்தல் வேண்டாம்:

    பிள்ளைகளின் சுயமரியாதையைப் பாதிக்கும் வகையில் பேசுவதோ, திட்டுவதோ வேண்டாம். இந்த வயதில் சமூக வலைத்தளம், எலக்ட்ரானிக் கேஜட்ஸ் போன்றவற்றின் மேல் ஆர்வமாக இருப்பார்கள். அதனால், சில தவறுகளும் நடக்கலாம். அதுபோன்ற சூழலில், நிலைமையைப் புரிந்துகொண்டு பின்விளைவுகளை எடுத்துக்கூறி வழிநடத்துங்கள். அதைவிடுத்து திட்டுவதும், அடிப்பதும் பிரச்சினையைத் தீர்க்காது.

    10. மனதை ஒருமுகப்படுத்த உதவுங்கள்:

    டீன்-ஏஜ் பருவத்தில் மனதை ஒருமுகப்படுத்த தியானம், யோகா, உடற்பயிற்சி போன்றவற்றை அறிமுகப்படுத்துங்கள். இறைவழிபாட்டை கற்றுக்கொடுங்கள். அதன் மூலம் உடலும், மனமும் புத்துணர்வு பெறுவதை உணர்வுப்பூர்வமாக உணர்வார்கள்.
    மருத மர பட்டைமாரடைப்பு பிரச்சினையை 50 சதவீதம் வரை குறைக்கும் என்பது இதன் சிறப்பம்சம். மூச்சுத்திணறல் பிரச்சினையை சரி செய்யவும் உதவுகிறது.
    தேவையான பொருட்கள் :

    மருதம் பட்டை பவுடர் - 4 கிராம்
    டீ தூள் - சிறிதளவு
    தண்ணீர் - 350 மி.லி.
    வெல்லம் அல்லது கருப்பட்டி - தேவையான அளவு
    பசும் பால் - 40 மி.லி.

    செய்முறை:

    பாத்திரத்தில் மருதம் பட்டை பவுடர், டீ தூள், தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

    100 மி.லி. அளவுக்கு வற்றியதும் அதனுடன் வெல்லம், பால் சேர்த்து வடிகட்டி பருகவும்.

    மருதம் பட்டை பவுடர் மூலிகை மருந்து கடைகளில் கிடைக்கும்.

    ஆரோக்கிய பலன்: மருதம் பட்டை மருத்துவ குணம் கொண்டது. நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்தது. மாரடைப்பு பிரச்சினையை 50 சதவீதம் வரை குறைக்கும் என்பது இதன் சிறப்பம்சம். மூச்சுத்திணறல் பிரச்சினையை சரி செய்யவும் உதவுகிறது. இந்த மருதம் பட்டை டீயை இரண்டரை மாதம் பருகலாம். பின்னர் சில காலம் இடைவெளி விட்டு தொடர்ச்சியாக பருகலாம். ஆண்டு முழுவதும் பருகக்கூடாது.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இந்த பழத்தில் கொழுப்புச் சத்து மிகவும் குறைவு. உடலின் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் இந்த பழத்தை அடிக்கடி விரும்பி சாப்பிடலாம்.
    உலகிலேயே நியூசிலாந்தில்தான் இந்த பழம் அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது. நியூசிலாந்து நாட்டு மக்களை ‘கிவிஸ்' என்று செல்லமாக அழைப்பது உண்டு. ‘கிவி' என்று இந்த பழத்திற்கு பெயர் ஏற்பட்டதும் அதன் தொடர்ச்சிதான். நியூசிலாந்துதான் ‘கிவி’ பழத்தை அதிகம் விளைவிக்கும் நாடு என்றாலும், அந்த பழத்துடன் பாரம்பரிய தொடர்பு கொண்ட நாடு சீனா. அதனால் இந்த பழத்துக்கு ‘சீனத்து நெல்லிக்கனி’ என்ற மற்றொரு பெயரும் உண்டு. பல ஆயிரம் ஆண்டுகளாக கிவி பழமானது சீனாவில் விளைவிக்கப்படுகிறது. தவிர, இத்தாலியிலும் இது விளைகிறது.

    இந்தியாவுக்குள் கிவி பழங்களை இறக்குமதி செய்ய வேண்டியது இருப்பதால் அதன் விலை சற்று அதிகமாக இருக்கிறது. ஆனாலும், அந்த பழத்தில் உள்ள நிறைந்த மருத்துவக் குணங்களுக்காக அவற்றை நாம் சாப்பிடலாம். ‘கிவி’ பழத்தில் கொழுப்புச் சத்து மிகவும் குறைவு. உடலின் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் இதை விரும்பி சாப்பிடலாம். வைட்டமின் 'சி' அதிகம் கொண்ட இந்தப் பழம், மனிதனுக்கு நோய் தடுப்பாற்றல் சக்தியை அதிகம் தரக்கூடியது. உடலில் பொட்டாசியத்தின் அளவு குறைந்தால், இதயத் துடிப்பில் சீரற்ற நிலை ஏற்படக்கூடும். கிவி கனியில் அதிக அளவு பொட்டாசியச் சத்து இருப்பதால், இந்த சத்தானது இதயத் துடிப்பை சீரான நிலையில் வைத்துக் கொள்ள உதவுகிறது.

    மாரடைப்பை தடுப்பதிலும் கிவி முக்கிய பங்காற்றுகிறது. இதய தமனிகளில் ரத்தக் கட்டி உருவாகாமல் தடுக்கவும் 'கிவி' பழம் உதவுகிறது. குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு தேவையான போலேட் என்ற சத்தும், ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலமும் மற்ற பழங்களைவிட கிவி பழத்தில் மிகவும் அதிக அளவில் உள்ளது. கிவி பழம், இனிப்பானதுதான் என்றாலும், அதன் சர்க்கரை குறியீடின் அளவானது மிகவும் குறைவு. அதனால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை மற்ற பழங்களைப் போன்று விரைவாக அதிகமாக்காமல், கொஞ்சமாகவும் நிலையாகவும் நிலை நிறுத்துவதால், நீரிழிவு நோயாளிகள் இதை உண்ணலாம் என டாக்டர்கள் கூறுகிறார்கள்.

    மலச்சிக்கலுக்கு மருந்தாக கிவி பயன்படுகிறது. இந்த பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், மலச்சிக்கலை மிகவும் எளிதாக அகற்ற முடியும். சருமத்தை இளமைப் பொலிவுடன் வைத்திருக்கவும் உதவுகிறது.
    குறிப்பிட்ட ஒரு மனை அல்லது இடம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் கிராம நிர்வாக அலுவலகத்தில் உள்ள பல்வேறு பதிவேடுகளில் பராமரிக்கப்பட்டு வரும்.
    நிலம் என்பது பாதுகாப்பான நிரந்தர முதலீடு என்ற பொருளாதார அடிப்படையில் வீட்டு மனைகள் உள்ளிட்ட இதர நில வகைகளின் மதிப்பு மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப அதிகரித்து வருகிறது. குறிப்பாக, நகர்ப்புறம் மற்றும் புற நகர்ப்பகுதிகள் ஆகியவற்றில் அமைந்துள்ள வீட்டு மனைகள் உள்ளிட்ட நில வகைகளை வீடு கட்டவோ அல்லது முதலீட்டு நோக்கிலோ வாங்க திட்டமிடுபவர்கள் அவற்றின் பட்டா பற்றிய விவரங்களை அறிந்து கொண்ட பின்னரே தக்க முடிவெடுப்பதுதான் முதலீட்டுக்கு பாதுகாப்பானது.

    குறிப்பிட்ட ஒரு மனை அல்லது இடம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் கிராம நிர்வாக அலுவலகத்தில் உள்ள பல்வேறு பதிவேடுகளில் பராமரிக்கப்பட்டு வரும். குறிப்பிட்ட மனை அல்லது இடம் யாருக்கு பாத்தியப்பட்டது என்பதை அறிந்து கொள்ள அங்கு உள்ள பதிவேடுகள் பயன்படுகின்றன. மேலும், இடம் பற்றி கூடுதல் தகவல்களை அறிந்து கொள்ளவேண்டிய நிலையில் வட்ட (Bl-o-ck) அளவில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் பயன்படுகின்றன. கீழே குறிப்பிடப்பட்டுள்ள அத்தகைய பதிவேடுகளின் மூலம் நிலம் பற்றிய கூடுதல் தகவல்களையும் அறிந்து கொள்ளலாம்.

    A- பதிவேடு : கிராம கணக்கு மற்றும் சம்பந்தப்பட்ட வட்டம் ஆகிய இரு நிலைகளில் பராமரிக்கப்படும். இந்த பதிவேட்டில் புல எண், உட்பிரிவு மாற்றம், நிலம் ஒப்படைப்பு ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கும். (இது கிராமக் கணக்கில் இருக்கும்)

    B-பதிவேடு : பழைய கால எஸ்டேட் இனாம் நிலங்கள் மற்றும் 1963-ம் ஆண்டுக்கு முன்பாக கிராமக் கணக்கில் உள்ள நிலங்கள் பற்றி இந்தப்பதிவேடு மூலம் தெரிந்து கொள்ளலாம்.

    B -1 பதிவேடு : இந்த பதிவேட்டில் தர்ம காரியங்கள் சம்பந்தமாகவும், கோவில்கள் மற்றும் இதர வழிபாட்டு தலங்களுக்கு தானமாக அளிக்கப்பட்ட நிலம் பற்றிய தகவல்களும், அறக்கட்டளை மற்றும் கிராம நலன் பொருட்டு அளிக்கப்பட்ட நிலங்கள் பற்றியும் தகவல்கள் பதியப்பட்டிருக்கும்.

    C-பதிவேடு : அரசின் குத்தகை நிலங்கள் பற்றிய தகவல்கள் இந்த பதிவேட்டில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

    D-பதிவேடு : பொருளாதார ரீதியாக நலிவுற்றவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் ஆகியோர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலங்கள் பற்றிய விவரங்கள் இந்த பதிவேட்டில் இருக்கும்.

    F-பதிவேடு : அரசின் ஒரு துறையிலிருந்து, மற்றொரு துறைக்கு நில உரிமை மாற்றம் செய்தது பற்றிய தகவல்கள் இந்த பதிவேட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

    G - பதிவேடு : வாரிசுதாரர்கள் இல்லாததால் அரசால் எடுத்துக்கொள்ளப்பட்ட நிலங்களின் விவரங்கள் இந்தப் பதிவேட்டில் பராமரிக்கப்படும்.

    மேற்கண்டவை தவிர இன்னும் பல உட்பிரிவுகளில் பதிவேடுகள் வட்ட அளவில் அரசால் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
    ×