என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    கூகுளையே டாக்டர் என நினைத்து அதில் அறிகுறியை குறிப்பிட்டு அதற்கான தீர்வை அறிய முனைந்தால் அதிகமாக பயமும், பீதியும் மனோவியாதியும் தான் வந்து சேரும்.
    கூகுளில் நம் உடலில் உள்ள உபாதைகளை தேடி என்ன வியாதி என்ன வைத்தியம் என்று அறிந்து கொள்ள முயல்வதும் யூடியூப்பில் வரும் நம் ராசியின் பலாபலன்கள் அனைத்தும் நமக்கு நிகழப்போவதாக நம்பிக்கொள்வது ஒன்று தான்.

    உதாரணமாக...

    டாக்டர் எனக்கு கண்ணில் கிளக்கோமானு நினைக்கிறேன்.

    ஏன் அப்படி நினைக்கிறீங்க சார்..

    தூரத்துல உள்ளது தெரியுது. காலுக்கு பக்கத்துல கீழ உள்ளது தெரியல டாக்டர். கூகுள்ள அப்படி தான் போட்டிருந்தது.

    இல்லீங்க, நல்லா டெஸ்ட பண்ணிட்டேன் கிளக்கோமா இல்ல. நார்மலா இருக்கீங்க..

    இல்ல டாக்டர் கூகுள்ள...

    சார் உங்க தொப்பை தரையை மறைக்குது சார்...கூகுளுக்கு தெரியுமா உங்க 4xl size தொப்பை பற்றி...

    இது மாதிரியான உரையாடல்கள் இன்று டாக்டர் கிளினிக்குகளில் சகஜம்...

    இருமல் என்று தேடினாலே டிபி போன்ற பெரிய நோய்களை சொல்லி பயமுறுத்தும் கூகுள்.

    கூகுளில் சர்ச் செய்து மருந்துகளின் பக்கவிளைவு லிஸ்டை படித்தால் மைக்கேல் மத காமராஜன் மளிகைக்கடையில் படிக்கும் லிஸ்டைப்போலிருக்கும். எந்த மருந்தையுமே சாப்பிட முடியாது.

    கூகுளில் சந்தேகங்களை அடிப்படை விஷயங்களை அறிந்து கொள்ளப்பார்க்கலாம். அதுவும் உங்கள் டயக்னோசிஸ் என்ன என்று டாக்டர் சொன்ன பிறகு அதை பற்றி தெரிந்து கொள்ள பார்க்கலாம்.

    கூகுளையே டாக்டர் என நினைத்து அறிகுறிகளை குறிப்பிட்டு அதற்கான தீர்வை அறிய முனைந்தால் அதிகமாக பயமும், பீதியும் மனோவியாதியும் தான் வந்து சேரும்.

    ஏனெனில்சாதாரண அறிகுறிகளுக்கு கூட உச்சக்கட்ட வியாதி வரை கூகுள் விளக்குகிறது.

    எப்போதும் இருப்பதிலேயே பெரிசுக்கு ஆசைப்படும் நம் மனமோ வியாதியிலும் உச்சக்கட்ட வியாதிகளை பக்கவிளைவுகளை உருவகப்படுத்திக்கொள்ளும்.

    ஆகவே உங்களை நேரில் பரிசோதிக்கும் உங்கள் டாக்டருக்கு கூகுள் என்றுமே இணையாகாது.
    எலுமிச்சை மிளகு டீ கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூட்டு வலிகளைக் குறைப்பதற்கும் சிறந்தது என்றும் கூறப்படுகிறது. எந்தவொரு நோய்க்கும் எதிராகப் போராட உகந்தது.
    நல்ல ஆரோக்கியத்திற்காக மூலிகைத் தேநீர் பெரிதும் பயனளித்து வருகிறது . இஞ்சி, துளசி, புதினா, மிளகு மற்றும் இலவங்கப்பட்டை மிகவும் ஆரோக்கியமானவை, எந்தவொரு நோய்க்கும் எதிராகப் போராட உகந்தவை. இது கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூட்டு வலிகளைக் குறைப்பதற்கும் சிறந்தது என்றும் கூறப்படுகிறது.

    தேவையான பொருட்கள்

    எலுமிச்சை சாறு - 1 பழத்தினுடையது
    மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
    மிளகு - 1/4 தேக்கரண்டி
    தேன் - 1 1/2 தேக்கரண்டி

    செய்முறை:

    2 கப் தண்ணீரை அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க விடவும்.

    தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் மிளகு மற்றும் மஞ்சள் தூளை போட்டு நன்றாக கொதிக்க விடவும்.

    பின்னர் அதை வடிகட்டி அதில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் விட்டு குடிக்கலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பெண்கள் கடைக்கு சென்று துணிகளை வாங்கும்போது எம்ப்ராய்டரி செய்யப்பட்ட துணிகளை வாங்குவதற்கே முதலில் முக்கியத்துவம் தருவார்கள்.
    கடைக்கு சென்று துணிகளை வாங்கும்போது எம்ப்ராய்டரி செய்யப்பட்ட துணிகளை வாங்குவதற்கு முக்கியத்துவம் தருகிறோம். ஆனால், அவை கைகளினால் செய்யப்படும் எம்ப்ராய்டரியா அல்லது மெஷின் எம்ப்ராய்டரியா என்பது பலருக்கும் தெரிவதில்லை.

    அதேபோல் எம்ப்ராய்டரி வகைகளில் எந்த வகை என்பதும் தெரிவதில்லை. எம்ப்ராய்டரி குறித்த சுவையான தகவல்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

    கை எம்ப்ராய்டரி:-

    புல்கரி, மிரர்/சீஷா வேலைப்பாடு, சிக்கன் கரி, கட்ச் எம்ப்ராய்டரி, காந்தத்தா வொர்க், ஜர்தோஷி எம்ப்ராய்டரி மற்றும் கஷிடா எம்ப்ராய்டரி போன்றவை மிகவும் பிரபலமான கை எம்ப்ராய்டரி வகைகள் ஆகும்.

    புல்கரி எம்ப்ராய்டரி:-

    பஞ்சாப் மாநிலத்தை பிறப்பிடமாக கொண்டது இந்த வகை எம்ப்ராய்டரி ஆகும். பலவிதமான மலர்களின் வடிவங்களை மிகவும் கண்கவர் வண்ணங்களில் குறிப்பாக டார்னிங் ஸ்டிட்ச் மூலம் எம்ப்ராய்டரியாக போடுவது புல்கரி வேலைப்பாடு ஆகும். இப்பொழுது பெரும்பாலும் ஜியாமெட்ரிகல் வடிவங்களிலேயே இந்த வகை எம்ப்ராய்டரி டிசைன்கள் ஆடைகளில் இடம்பெறுகின்றன.

    மிரர் / சீஷா வேலைப்பாடு:-

    பல வடிவமான கண்ணாடி துண்டுகளை வைத்து அவற்றை சுற்றி எம்ப்ராய்டரி செய்யப்படும் துணிகள் பார்ப்பதற்கு கவர்ச்சியான தோற்றத்தை தருவதுடன் மிகவும் டேஸ்லிங்காகவும் இருக்கும்.

    சிக்கன்கரி:-

    கிழக்கு வங்கத்தை பிறப்பிடமாக கொண்ட இந்த வகை எம்ப்ராய்டரி பெரும்பாலும் வெள்ளை நிறத் துணிகளில் காட்டன் நூல்களை கொண்டு செய்யப்பட்டு வந்தது. இப்பொழுது காட்டன், லினென், ஜியார்ஜெட் போன்ற லேசான எடையுள்ள துணிகளிலும் ஸேடின் ஸ்டிச், ஸ்டேம் ஸ்டிச், பேக் ஸ்டிச், பட்டன் ஹோல் மற்றும் ஜால் ஸ்டிச் இவற்றை கொண்டு மிகவும் அழகான எம்ப்ராய்டரி டிசைன்கள் வடிவமைக்கப்படுகின்றன.

    கட்ச் எம்ப்ராய்டரி:-

    குஜராத் மாநிலத்தில் உள்ள கட்ச் நகரம் இவ்வகை எம்ப்ராய்டரிக்கு பிரபலமாகும். கட்ச் எம்ப்ராய்டரியானது முக்கியமாக ஹெர்ரிங்கோன் தையல்களால் செய்யப்படுகிறது. இவற்றை சிந்தி எம்ப்ராய்டரி என்றும் அழைக்கிறார்கள்.

    சிறிய சதுரங்கள் கட்ச் எம்ப்ராய்டரியின் அடிப்படையாக அமைகின்றன.

    காந்த்தா எம்ப்ராய்டரி:-

    மிகவும் அழகான மற்றும் தனித்துவமான எம்ப்ராய்டரி பாணியை கொண்ட காந்த்தா வேலைப்பாடு மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்ததாகும்.

    இந்த எம்ப்ராய்டரி முழுவதும் எளிய தையல்களே பயன்படுத்தப்படுகின்றன. ராமாயணம், மகாபாரதம், புராண கதைகளின் காட்சிகள் மற்றும் இயற்கை காட்சிகள் இந்த வகை எம்ப்ராய்டரி மூலம் மிகவும் சிறப்பாக ஆடைகளை அலங்கரிக்கப்பதோடு பெண்கள் மனதிலும் இடம் பிடிக்கின்றன.

    ஜர்தோஷி எம்ப்ராய்டரி:-

    தங்க நிற மற்றும் வெள்ளி நிற நூல்களை கொண்டு செய்யப்படும் ஜர்தோஷி எம்ப்ராய்டரி வேலைப்பாடானது பெரும்பாலான மணப்பெண்களின் ஆடைகளில் இடம் பெற்றிருக்கும்.

    மிகவும் சிக்கலான மற்றும் அழகான வடிவங்களை கவுச்சிங் ஸ்டெம் ஸ்டிச், ரன்னிங் ஸ்டிச் மற்றும் ஸேடின் ஸ்டிச்களின் மூலம் ஜர்தோஷி எம்ப்ராய்டரியாக உருவாக்குகிறார்கள்.

    கஷிடா எம்ப்ராய்டரி:-

    காஷ்மீர் சால்வை மற்றும் கஃப்தான்கள் உலக அளவில் பிரபலமடைந்ததற்கு காரணம் கஷிடா எம்ப்ராய்டரி வேலைப்பாடு என்று உறுதியாக சொல்லலாம். கஷிடா எம்ப்ராய்டரி வேலைப்பாடு செய்யப்பட்ட துணியின் இரு புறமும் ஒரே மாதிரியாகவே காட்சியளிக்கும்.

    கிளிகள், மயில்கள், மரங்கொத்தி, இலைகள், ஆப்பிள்கள், பிளம்ஸ், செர்ரிஸ், திராட்சை கொத்து மற்றும் பலவிதமான மலர்களையும் இந்த வகை எம்ப்ராய்டரியில் மிகவும் தத்ரூபமாகவும், அழகாகவும் கொண்டுவர முடியும்.

    மிகவும் பிரபலமான பஷ்மினா சால்வைகள், புடவைகள் மற்றும் படுக்கை விரிப்புகளில் இடம் பெற்றிருப்பவை இவ்வகை காஷ்மீரி எம்ப்ராய்டரி வேலைப்பாடு ஆகும்.
    குழந்தைகளைதொட்டுப் பேச வேண்டும் என்று உளவியலாளர்கள் கூறுகிறார்கள். இப்படி செய்வதால் குழந்தைகளின் மனநிலையில் நல்லதொரு மாற்றத்தை உருவாக்க முடியும் என்கிறார்கள் ஆய்வாளாகள்.
    தொட்டால் பூ மலரும் என்றுதானில்லை. தொட்டால் பூ போன்ற குழந்தைகளும் மலர்வார்கள். குழந்தைகளை ஒரு நாளில் மூன்று நேரத்தில் தொட்டுப் பேச வேண்டும் என்று உளவியலாளர்கள் கூறுகிறார்கள். இப்படி செய்வதால் குழந்தைகளின் மனநிலையில் நல்லதொரு மாற்றத்தை உருவாக்க முடியும் என்கிறார்கள் ஆய்வாளாகள். தொடுங்கள் குழந்தைகளிடம் மாற்றம் காணுங்கள்.

    காலை எழுந்ததும் குழந்தை அருகில் சென்று தூக்கி கொஞ்சி எழுப்ப வேண்டும். அப்படி கொண்டே வரலாம் அல்லது வீட்டுக்கு வந்ததும் உட்காரவைத்து தலையை கோதி முத்தமிட்டு அவர்களிடம் பேசி நடந்த விஷயங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம். இதனால் அவர்களது பள்ளியில் என்னநடந்தது, அசிரியர்கள் என்ன சொன்னார்கள், நண்பர்களுடன் விவாதம் நடந்ததா? என அனைத்தையும் உங்களிடம் சொல்ல துவங்குவார்கள். இது குழந்தைகளை சரியான வழியில் செல்லத்தூண்டும்.

    இரவு தூங்கபோகும் போது ஏதாவது ஒரு குட்டி கதையை சொல்வதோ அன்றைய நாளில் என்ன பிடித்தது என்ன பிடிக்கவில்லை என்று உரையாடுவதோ குழந்தைகளை சிந்திக் வைக்கும். அந்த நேரத்தில் குழந்தைகளின் கைகை பிடித்து கொண்டோ அல்லது அவர்களது முதுகில் கைவைத்து தடவியோ பேசுவது அவசியம்.

    தொடு உணர்வும், தொடர்ந்த உரையாடலும் குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் நெருக்கத்தை அதிகரிப்பதுடன் எதையும் மறைக்காமல் பெற்றோர்களிடம் சொல்லும் துணிவும் வரும்.
    நாற்பது வயது கொண்ட ஆரோக்கியமான பெண்கள்கூட இப்போது தங்களுக்கு குறிப்பிட்ட சில நோய்களுக்கான அறிகுறிகள் இருப்பதாக பயந்து இந்த பயமே நோயாக மாறுகிறது.
    நாற்பது வயது கொண்ட ஆரோக்கியமான பெண்கள்கூட இப்போது தங்களுக்கு குறிப்பிட்ட சில நோய்களுக்கான அறிகுறிகள் இருப்பதாகவும், அது பற்றி கூகுளில் சர்ச் செய்தபோது அது இன்னென்ன நோய் என்று தெரியவந்ததாகவும் கூறி, டாக்டர்களிடம் பயத்துடன் ஆலோசனை கேட்கிறார்கள். அது மட்டுமின்றி அவர்களே பரிசோதனை கூடங்களுக்கு சென்று சுயமாக தேவையற்ற பல்வேறு நோய்களுக்கான பரிசோதனைகளையும் மேற்கொள்கிறார்கள். இந்த மாதிரியான பயம் இப்போது பலரையும் சூழ்ந்திருக்கிறது. அந்த பயமே அவர்களுக்கு நோயாக மாறுகிறது.

    மார்பகத்தில் எந்த கட்டி ஏற்பட்டாலும் அது புற்றுநோய்க்கான கட்டியாகத்தான் இருக்கும் என்ற பயம் பெரும்பாலான பெண்களிடம் இருக்கிறது. இளம்பெண்களுக்கும் இந்த கவலை அதிகம் இருக்கிறது. ஆனால் பெரும்பாலான பெண்களுக்கு ‘பைப்ரோ அடினோமா’ என்ற கட்டிகளே இருக்கின்றன. அவை, மார்பகத்தில் அங்கும் இங்குமாக அசையும் மிருதுவான வலியற்ற கட்டிகள். இந்த கட்டிகள் புற்றுநோய் கட்டிகளாக மாறுவதற்கு வாய்ப்பே கிடையாது.

    சுவாசத் தடை ஏற்பட்டாலே அது ஆஸ்துமா தான் என்ற பயம் பெரும்பாலானவர்களிடம் இருக்கிறது. ஆனால் இதயத்தையும், சுவாச கட்டமைப்புகளையும் பாதிக்கும் பல்வேறு நோய்கள் மூலம் சுவாசத்தடை ஏற்படலாம். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவதால் ஏற்படும் அனீமியா, சுவாச தடைக்கு முக்கிய காரணமாகும். ரத்தத்தை ‘பம்பிங்’ செய்யும் ஆற்றல் இதயத்திற்கு குறையும்போது ஏற்படும் இதய செயலிழப்பை தொடர்ந்தும் சுவாசத்தடை உருவாகும். தலைசுற்றினால் அதை ஆபத்தின் அறிகுறியாக எடுத்துக்கொள்ளவேண்டியதில்லை. தலைசுற்றுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.

    பல்வேறு வகையான நோய்கள் இருந்தாலும் எல்லா நோய்களும் மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துபவை அல்ல. அப்படி ஒருவேளை ஆபத்தை விளைவிக்கும் நோயாக இருந்தாலும் அதற்கான சரியான சிகிச்சையை பெறுவதற்கு விழிப்புணர்வுதான் தேவை. அதனால் இல்லாத நோய்களை நினைத்து பெண்கள் பயம் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. பயம், இல்லாத நோய்களையும் இருப்பதாக நம்பவைத்து தேவையில்லாத மனஉளைச்சலையும், கவலையையும் எற்படுத்திவிடும்.

    அதிர்ச்சியடைய வேண்டியதில்லை. அதற்காக உடனடியாக மருத்துவமனைக்கு சென்று ஈ.சி.ஜி. எடுக்கவேண்டிய அவசியமும் இல்லை. நெஞ்சுக்கூட்டில் நீர்கோர்த்திருத்தல் உள்பட பல்வேறு பிரச்சினைகளால் நெஞ்சுவலி ஏற்படுவதுண்டு. சுவாசப் பகுதிகளில் ஏற்படும் நெருக்கடிகளும் நெஞ்சுப் பகுதியில் அவஸ்தைகளை ஏற்படுத்துவதுண்டு. நெஞ்சின் நடுப்பகுதியில் பாரம் ஏற்றியதுபோலவோ, நெஞ்சுப் பகுதி உடைவதுபோலவோ கடுமையான வலி ஏற்படுதல். வேலை செய்யும்போது வலி தோன்றுதல், ஓய்வெடுக்கும்போது வலி அகலுதல். வலியோடு நெஞ்சுப் பகுதியில் துடிப்பு ஏற்படுதல், சுவாச தடை உருவாகுதல், அதிகமாக வியர்த்தல்,நெஞ்சுவலியோடு இடது கைகளுக்கோ, இரு கைகளுக்குமோ, கழுத்துக்கோ வலி பரவுதல் போன்றவை கவனிக்கத்தகுந்தவை.
    இந்த மாவை தினமும் முகத்திற்கு பயன்படுத்தினால், முகத்தில் ஆங்காங்கு உள்ள முகப்பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் மறைந்து, முகம் பொலிவாகும்.
    முந்தைய காலங்களில் பெண்கள் மஞ்சள் தூள், தயிர், பால், கடலை மாவு, பாசிப்பயறு மாவு போன்றவற்றை கொண்டே அழகை மேம்படுத்தி வந்தனர். ஏனெனில் இவை எவ்வித பக்க விளைவுகளையும் தருவதில்லை. பச்சை பாசிப்பயறு மாவை பயன்படுத்தி நமது சருமத்தை எப்படி பொலிவாக மாற்றுவது என்பது குறித்து பார்க்கலாம்.

    பாசிப்பயறு மாவை தினமும் முகத்திற்கு பயன்படுத்தினால், முகத்தில் ஆங்காங்கு உள்ள முகப்பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் மறைந்து, முகம் பொலிவாகும். 1 ஸ்பூன் பாசிப்பயறு மாவை, எடுத்து அதனுடன் 1/2 ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவுங்கள். 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். தினமும் இதனை தொடர்ந்து செய்து வந்தால் ஒரே வாரத்தில் முகப்பருக்கள் மட்டுமின்றி அதன் தழும்புகளும் மறைந்து விடும்.

    சில பெண்களுக்கு முழங்கை மற்றும் கழுத்துகளில் கருமையாக இருக்கும். இத்தகைய கருமையைப் போக்குவதற்கு ஒரு அருமையான மாஸ்க் என்றால் அது பாசிப்பயறு மாவு மாஸ்க் தான். அதற்கு பாசிப்பயறு மாவில் தயிர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கருமையாக உள்ள இடங்களில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். பின்னர் நல்லெண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால் கருமை விரைவில் போய்விடும்.

    1 ஸ்பூன் பாசிப்பயறு பொடியுடன் 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் மாஸ்க் போல் போடுங்கள். 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். தினமும் இதனை செய்து வந்தால் சரும நிறம் அதிகரிக்கும். உங்களுக்கு வறண்ட சருமமாக இருந்தால் எலுமிச்சை சாறுக்கு பதிலாக பால் கலந்து பயன்படுத்தலாம்.

    சில பெண்களுக்கு முகம் மற்றும் வாய்க்கு மேலே மீசை போன்று முடி வளரும். அத்தகைய முடியின் வளர்ச்சியை தடுப்பதற்கு பாசிப்பயறு மாவில் மஞ்சள் தூளை சேர்த்து நீர் ஊற்றி பேஸ்ட் செய்து தினமும் காலை மற்றும் மாலையில் முடி வளரும் இடத்தில் தடவி ஊற வைத்து கழுவி வந்தால் நாளடைவில் முடியின் வளர்ச்சி தடைபடுவதை உணரலாம்.

    அன்றாடம் பாசிப்பயறு மாவை முகம் மற்றும் உடல் முழுவதும் தேய்த்து குளித்து வந்தால், சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கும். மேலும் பாசிப்பயறு பொடியை 1 ஸ்பூன் எடுத்து அதனுடன் ரோஸ் வாட்டரை கலந்து கொள்ளுங்கள். இதனை முகம், கழுத்து பகுதியில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் 20 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். தினமும் இரவில் இப்படி செய்து வந்தால் சுருக்கங்கள் மறைந்து இளமையாக காணப்படுவீர்கள்.
    இரவு நேரங்களில் சிறுவர், சிறுமிகளுக்கு துரித உணவுகள் கொடுக்கலாமா? என்பது குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரி விளக்கியுள்ளார்.
    நம்முடைய கால சூழ்நிலைக்கு தகுந்தவாறு நமது உணவு பழக்கம் தற்போது மிகவும் மாறியுள்ளது. ஒரு காலத்தில் இயற்கை உணவுகளை உண்டு வந்த நாம், தற்போது செயற்கை உணவுகளை ருசிக்காக உண்பதை வழக்கமாக்கிக் கொண்டோம். அதனால் ஏற்படும் பின் விளைவுகளை அறியாமல் திரும்பத் திரும்ப அந்த உணவுகளை உட்கொள்வதால் வியாதிகள் வருவதோடு மட்டுமல்லாமல் வயது ஆக ஆக உடலில் பல்வேறு பக்க விளைவுகள் ஏற்பட்டு மரணம் வரை அது கொண்டு செல்கிறது.

    குழந்தைகள் அடம் பிடிக்கிறார்கள் என்று பெற்றோர்கள் அவர்கள் விரும்பும் துரித உணவுகளான பிரைட் ரைஸ், நூடுல்ஸ், புலாவ் ரைஸ் மற்றும் நாக்கில் எச்சில் ஊறும் சுவையான பலவிதமான உணவுகளை வாங்கித் தருகிறார்கள்.

    அதை உட்கொள்ளும் குழந்தைகள் சிறுவயது முதலே அதற்கு அடிமையாகி வளர வளர அந்த உணவை மட்டுமே உட்கொள்ளும் பழக்கம் ஆக்கிக் கொள்கிறார்கள். இந்த துரித உணவுகளில், எம்.எஸ்.ஜி எனப்படும் மோனோ சோடியம் குளூட்டாமேட் எனப்படும் உப்பானது அதிகளவில் சுவைக்காக சேர்க்கப் படுகிறது. இது வளரும் பருவத்தில் உள்ள குழந்தைகளுக்கு ரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது.

    இதை சாப்பிடும் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வயிற்று வலி, தலைவலி, வாந்தி மற்றும் நரம்புக் கோளாறுகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் இந்தத் துரித உணவுகளை இரவு நேரங்களில் குழந்தைகள் உட்கொள்ளும் போது அது விஷ உணவாக (புட் பாய்சன்) ஆக மாறி உடலில் அதிகளவு கேடு விளைவிக்கும். இது போன்ற துரித உணவுகள் குழந்தைகள் விரும்பினால் பெற்றோர்கள் மாதத்துக்கு ஒரு முறை பகல் வேலையில் கொடுக்கலாம்.

    ஆனால் அதுவே தவறு என்பது தான் எனது கருத்து. மேலும் தற்போது கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தமிழ்ச்செல்வன் உத்தரவின் பேரில், சூலூர் வட்டார பகுதிகளில் இது போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும் உணவுகளை தயாரிக்கும் ஓட்டல்கள், தள்ளுவண்டி பாஸ்ட் புட் கடைகள் மற்றும் இதர உணவு கடைகளில் அவ்வப்போது சோதனைகள் செய்யப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. இதுபோன்று தொடர்ந்து செயல்படும் கடைகளுக்கு வரும் காலத்தில் சீல் வைக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இந்த நிலையில், பிரைட் ரைஸ், நூடுல்ஸ் போன்ற துரித உணவுகளை குழந்தைகளுக்கு பெற்றோர்கள் கொடுக்கவே கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    குழந்தைகளுக்கு பழங்களை சாப்பிட கொடுத்தால் சாப்பிட மறுப்பார்கள். இந்த முறையில் பழங்களை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
    தேவையான பொருட்கள்

    ஸ்டார் ஃப்ரூட் - 2,
    மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு - தலா 1 சிட்டிகை,
    கருப்பு திராட்சை, லாலிபாப் குச்சிகள்.

    செய்முறை

    ஸ்டார் ஃப்ரூட்டின் விளிம்பை மட்டும் பீட்டரில் சீவி விடவும்.

    மேல்புறம், கீழ்புறம் நறுக்கவும். பிறகு வட்ட வட்டமாக நறுக்கினால்  இயற்கையாகவே ஸ்டார் வடிவம் கிடைக்கும்.

    மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு கலந்து நறுக்கிய பழத்தில் தூவவும்.

    லாலிபாப் குச்சியில்  முதலில் கருப்பு திராட்சை, ஸ்டார் பழம், மீண்டும் திராட்சை, ஸ்டார் பழம் என குத்தி அலங்கரித்து பரிமாறவும்.

    விரும்பினால் கருப்பு  திராட்சைக்கு பதில் பச்சை திராட்சை, செர்ரி குத்தி பரிமாறலாம்.

    அந்ததந்த சீசனில் கிடைக்கும் பழங்களை வைத்தும் இந்த ரெசிபியை செய்யலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நாம் நன்றாக இருக்கும் போதே திடீரென்று கண்கள் இருட்டிக்கொண்டு வர, நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாத அளவுக்கு மூளை வேலை நிறுத்தம் செய்ய, தடாலடியாக கீழே சாய்ந்து விழும் உடல் சார்ந்த மயக்கத்தை யாரும் விரும்புவதில்லை.
    நாம் நன்றாக இருக்கும் போதே திடீரென்று கண்கள் இருட்டிக்கொண்டு வர, நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாத அளவுக்கு மூளை வேலை நிறுத்தம் செய்ய, தடாலடியாக கீழே சாய்ந்து விழும் உடல் சார்ந்த மயக்கத்தை யாரும் விரும்புவதில்லை. உடல் சார்ந்த மயக்கத்தில் குறு மயக்கம், நெடு மயக்கம் என இரு வகை உண்டு. பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், மக்கள் அதிகமாக நடமாடும் பொது இடங்களிலும், அலுவலகங்களிலும் திடீரென்று யாராவது மயக்கமடைந்து தரையில் விழுவதை பார்த்திருப்பீர்கள். குறிப்பாகப் பள்ளிகளில் காலை இறைவணக்கம் நிகழ்ச்சி நடைபெறும் போது மாணவர்கள், இவ்வாறு மயக்கமடைவது வழக்கம். இதை குறு மயக்கம் என்கிறோம்.

    இதற்கு காரணம் மூளைக்கு ரத்தம் செல்ல தடை ஏற்படுவது தான். ஏதாவது ஒரு காரணத்தால் ரத்த ஓட்டம் சில நிமிடங்களுக்கு இடுப்புக்குக் கீழே நின்று விடுகிறது. மூளைக்குச் செல்லும் ரத்தம் குறைகிறது. இதனால் மயக்கம் ஏற்படுகிறது. மயங்கித் தரையில் விழுந்ததும் ரத்த ஓட்டம் சரியாகி விடுகிறது. இதனால் மயக்கமும் சரியாகிவிடுகிறது.

    காலை உணவைச் சாப்பிடாமல் பள்ளிக்கு வருவது முதல் காரணம். இதனைப் பசி மயக்கம் என்று கூறுகிறோம். இரவு தூக்கம் தேவையான அளவுக்கு இல்லாதது அடுத்த காரணம். ஒரே இடத்தில் அதிக நேரம் நிற்பது மூன்றாவது காரணம். குறிப்பாக, வெயிலில் நீண்ட நேரம் நின்றால் மயக்கம் வரும். உடல் சோர்வு, இந்த மயக்கத்தை வரவழைக்கும். அளவுக்கு அதிகமாக விளையாடுவது, உடற்பயிற்சி செய்வது, ஓடுவது போன்றவற்றாலும் குறு மயக்கம் வரலாம். மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள, காற்றோட்டம் குறைந்த இடங்களில் அதிக நேரம் இருந்தாலும் இந்த மயக்கம் வருவதுண்டு.

    மனக் கவலை, இழப்பு, சோகம், திகில், அதிர்ச்சி போன்ற உளவியல் காரணங்களால் வயதில் பெரியவர்களுக்கு குறு மயக்கம் ஏற்படுகிறது. இறப்பு, இழப்பு போன்ற அதிர்ச்சி தரும் செய்திகளை கேட்டதும் மயக் கம் வருவது, இதற்கு சரியான எடுத்துக்காட்டு. நீண்ட நேரம் அழும்போது ஏற்படும் குறு மயக்கமும் இதைச் சேர்ந்ததுதான். மரணம் அடைந்தவர் வீடுகளில் பெண்கள் மயக்கம் அடைவது, இதற்குப் பொருத்தமான ஓர் உதாரணம்.

    நீண்ட நேரம் சிறுநீர் கழிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு சிறுநீர் கழித்து முடித்ததும் மயக்கம் வரும். கழுத்து எலும்பில் பிரச்சினை உள்ளவர்கள் தலையை ஒரு பக்கமாகச் சாய்க்கும் போது குறு மயக்கம் வரலாம். வாந்தி, வயிற்றுப்போக்கு காரணமாக உடலில் நீர்ச்சத்து குறைந்துவிடும்போதும், உயரமாக ஏறும் போதும் மயக்கம் வரலாம். வெயிலில் அதிகமாக அலைவது, கடுமையான உடல் வலி, ரத்தசோகை, சத்துக்குறைவு, உணவு ஒவ்வாமை ஆகிய காரணங்களாலும் குறு மயக்கம் வருவதுண்டு.

    நின்ற மற்றும் உட்கார்ந்த நிலையிலோ இருக்கும் ஒருவர் திடீரென்று நினைவிழந்து, மயங்கி விழுவார். அடுத்த சில நிமிடங்களில் மயக்கம் தெளிந்து அவராகவே எழுந்து கொள்வார். மயக்கத்திலிருந்து விடுபட்டதும் சில நிமிடங்களுக்கு கைகால்களில் நடுக்கமும், தசைத்துடிப்பும் ஏற்படும். சிலருக்குக் குறு மயக்கம் ஏற்படுவதற்கு முன்பு படபடப்பு ஏற்படும். அடிக்கடி கொட்டாவி வருவது, ஊசி குத்துவது போன்ற உணர்வு, வியர்ப்பது, மூச்சு வாங்குவது, வாயைச் சுற்றி மதமதப்பு முதலிய அறிகுறிகள் தோன்றுவதுண்டு. இவை ஏற்பட்டவுடன் தரையில் அல்லது படுக்கையில் படுத்துவிட்டால் குறு மயக்கம் வராது.
    வீடானாலும் நாடானாலும் நிதி நிர்வாகத்தில் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் வளர்ச்சி என்பது கேள்விக்குறியாகி விடும். வீட்டின் நிதி நிர்வாகத்தை சரியான முறையில் மேற்கொள்வதற்கு சில வழிமுறைகள்...
    வீடானாலும் நாடானாலும் நிதி நிர்வாகத்தில் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் வளர்ச்சி என்பது கேள்விக்குறியாகி விடும். வீட்டின் நிதி நிர்வாகத்தை சரியான முறையில் மேற்கொள்வதற்கு சில வழிமுறைகள்...

    முதலீடு : திட்டமிடப்பட்ட ம்ற்றும் வழக்கமான முதலீடுகளை செய்வது மிக முக்கியமானது. வருமானத்திலிருந்து ஒரு பகுதியை முதலீடு செய்வதற்குபயன்படுத்த வேண்டும். அதிலிருந்து நமக்கு ஒரு சிறிய வருமானம் கிடைக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. நம்மால் முடிந்தவரை தங்கத்திலோ, மற்றவற்றிலோ முதலீடு செய்ய வேண்டும்.

    நிதி இலக்கு : நிதி இலக்கு நிர்ணயித்து செயல்படுதல் வாழ்க்கையில் பல்வேறு அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு தேவையான பணத்தை சேமிப்பதற்கு உதவி செய்யும். குழந்தைகளின் கல்வி, திருமணம் அல்லது குடும்பத்துடன் வெளிநாட்டு பயணம் போன்றவற்றுக்கு நிதி இலக்குகளை அமைத்து செயல்படுதல் அவசியமானது.

    சேமிப்பு : சேமிப்பு என்பது நமது வருமானத்திலிருந்து எதிர்கால பயன்பாட்டிற்காக எதிர்பாராத தேவைகளுக்கு ஒரு தொகையை ஒதுக்குவது நமது சிறுவயதில் நம் அம்மா, பாட்டி போன்றவர்கள் சமையல் அறையில் சிறு உண்டியல் வைத்து சேமிப்பதை பார்த்திருப்போம். தேவையான தருணங்களில் அந்த பணம் மிகவும் உதவியாக இருந்திருக்கும். தற்போது சேமிப்பதற்கு பல வழிகள் உள்ளன. ஒவ்வொருவரும் சேமிக்கும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.

    கடன்கள் : முடிந்தவரை கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும். இருக்கும் கடன்களை அடைப்பதற்கான செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். சிறு சிறு கடன்களையும, வட்டிக்தொகை சேரும் கடன்களையும், முதலில் அடைத்தல் நல்லது. கடன் அட்டைகளை கூடியவரை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்.

    அவசரகால நிதி : வருமானத்தில் ஒரு பகுதியை அவசர கால நிதியாக ஒதுக்கி வைத்தல் முக்கியமானது. இநத நிதி நாம் எதிர்பாராத நேரங்களில் ஏற்படும் தேவைகளுக்கு கைக்கொடுக்கும். இதனால் நிதிப்பற்றாக்குறை காரணமாக ஏற்படும் மனஅழுத்தத்தை தவிர்க்கலாம்.
    சக்தி மிக்க ஆன்டிஆக்சிடென்ட் ஊட்டச்சத்து பல்வேறு பழங்கள் மற்றும் காய்கறிகளில் காணப்படுகிறது, அவற்றுள் ஒன்று சிவப்பு மிளகாய். சிவப்பு மிளகாய் பற்றி உங்களுக்குத் தெரியாத சுவாரஸ்ய விஷயங்களை பார்க்கலாம்.
    மிகவும் பாதுகாப்பான மற்றும் சிறந்த ஊட்டச்சத்துகளில் ஒன்றாக அறியப்படுவது வைட்டமின் சி சத்து. இது நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு ஆதரவாக செயல்படுகிறது மற்றும் உடலை செயல்பாட்டுடன் வைத்து கொள்ள உதவுகிறது. இந்த சக்தி மிக்க ஆன்டிஆக்சிடென்ட் ஊட்டச்சத்து பல்வேறு பழங்கள் மற்றும் காய்கறிகளில் காணப்படுகிறது, அவற்றுள் ஒன்று சிவப்பு மிளகாய். இந்த சிவப்பு மிளகாய் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டது.

    ஒற்றைத்தலைவலி மற்றும் அதனால் ஏற்படும் வலியைக் குறைக்க உதவுகிறது, சளிக்கான அறிகுறிகளைக் குறைகிறது, மேலும் உங்கள் ஆயுட்காலத்தை நீட்டிக்க உதவுகிறது. மேலும் ஆரஞ்சு பழத்தை விட அதிக அளவு வைட்டமின் சி சத்தை சிவப்பு மிளகாய் கொடுக்கிறது. சிவப்பு மிளகாய் 3க்கு 1 என்ற அளவில் நோயெதிர்ப்பு அதிகரிக்கும் ஊட்டச்சத்துகளை வழங்கி ஆரஞ்சு பழத்தை வெற்றி கொள்கிறது. அரை கப் நறுக்கிய சிவப்பு மிளகாயில் 107.8 மிகி அளவு வைட்டமின் சி சத்து உள்ளது.

    சிவப்பு மிளகாயில் வைட்டமின் சி சத்து உயர்ந்த அளவு உள்ளது. இதனால் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமை அடைகிறது, மேலும் இதய நோய் போன்ற நாட்பட்ட உடல் பாதிப்புகளுக்கான அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. சிவப்பு மிளகாயில் வைட்டமின் ஏ, பி, ஈ, கே , தாமிரம், பொட்டாசியம் போன்ற இதர சத்துக்கள் உள்ளன. மேலும் சிவப்பு மிளகாயில் பல்வேறு இதர தாவர கூறுகள் உள்ளன. அவைகள் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன. மிளகாய்க்கு கார தன்மையை வழங்கும் காப்சைசின் என்பது ஒரு ஆன்டிஆக்சிடெண்ட் தாவர கூறாகும்.

    குடல் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், நுரையீரல், கணையம், லுகேமியா போன்ற 40 வகையான புற்றுநோயுடன் தொடர்புடைய அணுக்களை அழிக்க இந்த அற்புதமான ரசாயனம் உதவுவதாக சில ஆய்வு கூட ஆராய்ச்சிகள் குறிப்பிடுகின்றன. புற்றுநோய் அணுக்களுடன் தொடர்புடைய சில மரபணுக்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதையும் அவற்றை வளரவிடாமல் தடுப்பதையும் காப்சைசின் மாற்றக்கூடும் என்று சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர் . இருப்பினும், சில ஆய்வுகள் மிளகாய் உட்கொள்வதால் புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பதாக கூறுவதால், இது குறித்த கூடுதல் ஆராய்ச்சி தேவைப்படுகிறது.

    ​சிவப்பு மிளகாய் குறித்த முக்கிய குறிப்புகள் :

    1. சிவப்பு மிளகாயில் பல்வேறு ஊட்டச்சத்துகள், ஆன்டிஆக்சிடெண்ட் மற்றும் வைட்டமின் சி சத்து ஆகியவை உள்ளன. இவை அனைத்தும் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன.

    2. சிவப்பு மிளகாய் உலகின் பெரும் பகுதிகளில் பயன்படுத்தப்படும் ஒரு மசாலா பொருள். சிவப்பு மிளகாயில் உள்ள காப்சைசின் என்னும் பயோஆக்டிவ் என்னும் உயிரிமுனைப்புக் கொண்ட ஒரு தாவர கூறு பல்வேறு அற்புத ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டது.

    3. இந்த பிரபலமான மசாலாப்பொருள் சேர்க்கப்பட்ட உணவு நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தவும், எடை இழப்பை ஊக்குவிக்கவும், ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

    உலகம் முழுவதிலும் மிகப் பிரபலமான ஒரு உணவுபொருள் சிவப்பு மிளகாய். இவற்றில் வைட்டமின், மினரல் மற்றும் ஆன்டிஆக்ஸிடெண்ட் போன்றவை அதிகம் இருப்பதால், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, வளர்சிதை மாற்றத்தை வேகப்படுத்தி, அழற்சியை எதிர்த்து போராடுகிறது. சிவப்பு மிளகாய் ஒரு இயற்கையான நுண்ணுயிர் எதிர்ப்பியாகும், அதாவது உணவை பாழ்படுத்தும் கிருமிகள் மற்றும் நுண்ணுயிர்களை கொல்லும் தன்மைக் கொண்டவை. இதனை உங்கள் உணவில் இணைத்துக் கொள்வது என்பது ஒரு ஆரோக்கியமான தேர்வாகும்.
    அல்சர் இருப்பவர்கள் முட்டைக்கோஸ் ஜூஸை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அல்சரை ஏற்படுத்திய பாக்டீரியாக்கள் அழித்து, அல்சர் பிரச்சனையை குணமாக்குகிறது.
    முட்டைக்கோஸ் ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், நமது உடலில் ஏற்படும் அற்புத மாற்றம் இதோ!

    முட்டைக்கோஸில் லாக்டிக் அமிலம் அதிகம் உள்ளது. எனவே இது குடலில் உள்ள நோய்த்தொற்றுக்களை அழித்து, குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

    முட்டைக்கோஸ் ஜூஸ் சுவாசப் பாதையில் உள்ள அழற்சியை சரிசெய்து, மூச்சுக்குழாய் அழற்சி அல்லது ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து விடுபட உதவுகிறது.

    முட்டைக்கோஸில் உள்ள க்ளுட்டமைன் என்னும் அமினோ அமிலம், செரிமான மண்டலத்தின் ஆரேக்கியத்தை மேம்படுத்தி, செரிமான பிரச்சனை வராமல் தடுக்கிறது.

    முட்டைக்கோஸில் உள்ள சல்ஃபோரபேன், குறிப்பிட்ட புற்றுநோய்களின் தாக்கங்களைத் தடுக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றது.

    முட்டைக்கோஸ் ஜூஸில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி பொருள், ஆர்த்ரிடிஸ் போன்ற உள்காயங்களை சரிசெய்து, மூட்டு அழற்சி பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது.

    அல்சர் இருப்பவர்கள் முட்டைக்கோஸ் ஜூஸை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அல்சரை ஏற்படுத்திய பாக்டீரியாக்கள் அழித்து, அல்சர் பிரச்சனையை குணமாக்குகிறது.

    முட்டைக்கோஸ் ஜூஸை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அது உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனையை தடுத்து, கல்லீரலை சுத்தம் செய்கிறது.

    முட்டைக்கோஸ் ஜூஸில் உள்ள க்ளுக்கோஸினோலேட்டுகள், உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையடையச் செய்து, உடலை நோய்க்கிருமிகளின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.

    ×