என் மலர்
ஆரோக்கியம்
கோடையில் உஷ்ணமும், வறட்சியும் உடலை கஷ்டப்படுத்தும். வெயில் காலத்தில் உடல் உஷ்ணத்தை குறைத்து உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள தினமும் 12 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
கோடையில் உஷ்ணமும், வறட்சியும் உடலை கஷ்டப்படுத்தும். சுற்றுப்புறமும் சூடாக இருப்பதால் உடலில் ஈரப்பதம் குறைந்துவிடும். இதனால் சோர்வு, உடல்வலி, தலை, கால் வலி, கொப்புளங்கள் போன்ற பாதிப்புகள் தோன்றலாம். வெயில் காலத்தில் உடல் உஷ்ணத்தை குறைத்து உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள தினமும் 12 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். இதில் 4 டம்ளர் தண்ணீர் தவிர்த்து, மற்றவை திரவ பானங்களாக இருந்தால் மிகவும் நல்லது. வெயிலால் உடலில் பொட்டாசியம் சத்து குறைந்து விடும். இதுதான் சோர்வு, வறட்சிக்கு காரணமாகிறது. இளநீர், மோர் மற்றும் பானகம், கரும்புச்சாறு போன்றவற்றை பருகுவதால் பொட்டாசியம் இழப்பை ஈடுகட்டலாம்.
தமிழகத்தில் கோடைகாலத்தில் நீர்மோர், பானகம் போன்றவை முக்கியமாக பருகப்படுகின்றன. பானகத்தில் புளி, பனை வெல்லம், சுக்கு எல்லாம் கலந்து தருவார்கள். இது தாது உப்புகளை துரிதமாக சீர்செய்யும் சக்தி கொண்டது. மோரில் கொழுப்பு சத்து குறைவாக இருக்கும். அதில் பொட்டாசியம், கால்சியம், லேக்டிக் அமிலம் இருப்பதால் வெயில் காலத்தில் ஏற்படும் தாதுக்களை ஈடுகட்டும்.
வெயில் காலத்தில் குளிர்ச்சிக்காக ‘கூல்டிரிங்ஸ்’ குடிப்பது நல்லதல்ல. அவை ஜீரண சக்தியை குறைக்கும் தன்மை கொண்டவை. குடித்த உடன் குளிர்ச்சி கிடைப்பதுபோல இருந்தாலும் அஜீரணத்துக்கு வழிவகுக்கும்.
கோடையில் கண்நோய்களும் அதிகமாக வர வாய்ப்பிருக்கிறது. எனவே வெளியில் சென்று வந்தவுடன் முகம் மற்றும் கை, கால்களை சுத்தமாக கழுவ வேண்டும். கோடைகாலத்தில் பகல் பொழுது நீண்டும், இரவுப் பொழுது குறைவாகவும் இருக்கும். எனவே பகலிலும் கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்தால் தப்பில்லை. வெயில் காலத்தில் அதிக உடற்பயிற்சியை தவிர்க்க வேண்டும்.
மண்பானைத் தண்ணீரில் நன்னாரி, விலாமிச்சை வேர், வெட்டிவேர், சந்தனத்தூள் கலந்து பருகி வந்தால் உஷ்ணம் உடலில் ஏறாது. சிலருக்கு வெப்பம் தாங்காமல் பித்தம் அதிகரிக்கும். இந்த உஷ்ண பித்தத்தை தணிக்க தர்ப்பூசணி, வெள்ளரி, கொத்தமல்லி, புதினா போன்றவற்றை சாப்பிடலாம்.
சிலருக்கு இந்தக் காலத்தில் சிறுநீர் கடுத்துப்போகும். இந்த சிறுநீர் சுருக்கத்திற்கு கொத்தமல்லி மற்றும் சீரகத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து பருகலாம். குளிக்கும்போது குளிர்ச்சிக்காக சந்தனாதி தைலம் தேய்த்து குளிக்கலாம். பூலாங்கிழங்கு, வெட்டிவேர், கார்போக அரிசி, சந்தனம், ரோஜா இதழ், காய்ந்த எலுமிச்சைப்பழத் தோல், பச்சைப்பயிறு ஆகியவற்றை அரைத்து அந்த மாவை தேய்த்து குளித்தால் சருமத்தில் வறட்சி ஏற்படாது. குழம்புகளில் பூசணிக்காய், சுரைக்காய், வெள்ளரிக்காய் போன்றவற்றை தினமும் சேர்த்துக்கொள்ளலாம். காரத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். உப்பு குறைவாக சேர்த்து சாப்பிட வேண்டும்.

முள்ளு முருங்கை இலை(கல்யாண முருங்கை) மருத்துவ குணம் நிறைந்தது. பாலூட்டும் தாய்மார்களுக்கு சிறந்த உணவாக கருதப்படுகிறது. நாள் பட்ட சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றை குணப்படுத்தும் சக்தி கொண்டது.
தேவையான பொருட்கள் :
இட்லி அரிசி - 1 கப்
உளுந்து - 1 கைப்பிடி
முள்ளு முருங்கை இலை - 10, 12
சிறிதாக நறுக்கிய வெங்காயம் -அரை கப்
மிளகு - 3/4 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
உப்பு- 1/2 தேக்கரண்டி
செய்முறை:
கீரையை சுத்தம் செய்து சிறிதாக நறுக்கிக்கொள்ளவும்.
உளுந்து, அரிசியை 2 மணி நேரம் ஊறவைத்து, கீரை, மிளகு மற்றும் சீரகம் சேர்த்து அரைக்கவும்.
உப்பு, நறுக்கிய வெங்காயம் சேர்த்து கலக்கவும், மாவு தயார். இந்த மாவை புளிக்க வைக்கத் தேவையில்லை.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

சத்தான, சுவையான கல்யாண முருங்கை தோசை ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சோகங்கள் நடந்து சில வாரங்கள் ஆகியும் அதில் இருந்து மீள முடியாத மன அழுத்தத்தில் இருந்தால், அவர்களுக்கு மனோதத்துவ நிபுணரின் ஆலோசனை தேவைப்படும்.
சோகங்கள் இப்போது சொல்லிக்கொள்ளாமல் வந்து நிற்கின்றன. சோகத்தால் இழப்புகளை சந்திப்பவர்கள் நொறுங்கித்தான் போவார்கள். சோகத்தால் மனகவலை, பீதி, விரக்தி போன்றவை தோன்றும். அதனால் பசியும், உறக்கமும் இல்லாமல் தவிப்பார்கள். சமூகத்தோடு விலகி இருக்க நினைத்து தங்களை தனிமைப்படுத்திக்கொள்வார்கள். சோகத்தில் சிக்கிக் கொள்கிறவர்களில் ஒரு பகுதியினர் விரைவாக அதில் இருந்து மீண்டுவிடுவார்கள். இன்னொரு பகுதியினர் தகர்ந்துபோன மனதை சரிசெய்ய அதிக காலம் எடுத்துக் கொள்வார்கள்.
சோகத்தில் சிக்கி இருப்பவர்களை மீண்டும் இயல்பான வாழ்க்கைக்கு கொண்டு வர உறவினர்களும், நண்பர்களும் முயற்சிக்க வேண்டும்.
சோகத்தில் இருப்பவர் அழுதால், அதை தடை செய்யவேண்டாம். மனதில் தேங்கிக்கிடக்கும் கவலையையும், வலியையும் கண்ணீரின் வழியாக வெளியேற்றி விடும் போது, அவர்கள் மனதுக்கு அமைதியும், ஆறுதலும் கிடைக்கும். அவர்களை ஆறுதல்படுத்துவதற்காக நிறைய தத்துவங்களை உதிர்க்காதீர்கள்.
அவர்களை எப்போதும் வீட்டிலே முடங்கிக்கிடக்க அனுமதிக்காதீர்கள். அவர்களை வீட்டைவிட்டு வெளியே அழைத்துவர வேண்டும். எல்லா நேரங்களிலும் வீட்டிலே முடங்கிக்கிடப்பது, ஒழித்திருப்பது போன்ற மனநிலையை உருவாக்கிவிடும். வீட்டில் நடக்கும் மகிழ்வான நிகழ்ச்சிகளிலும் அவர்களை இணைத்துக்கொள்ளுங்கள்.
மனதை வேறு நிகழ்ச்சிகளில் திசை திருப்பினால் மனதில் இருக்கும் துக்கங்கள் நீங்கும். வேலைக்கு செல்பவராக இருந்தால், முடிந்த அளவு விரைவாக அலுவலகத்திற்கு சென்றுவிடுவது நல்லது. ‘நடந்தது நடந்ததுதான். இனி அதில் எந்த மாற்றத்தையும் உருவாக்க முடியாது’ என்று மனதை தேற்றிக்கொண்டு, அடுத்தடுத்த காரியங்களில் கவனத்தை செலுத்த முன்வரவேண்டும்.
சோகங்கள் நடந்து சில வாரங்கள் ஆகியும் அதில் இருந்து மீள முடியாத மன அழுத்தத்தில் இருந்தால், அவர்களுக்கு மனோதத்துவ நிபுணரின் ஆலோசனை தேவைப்படும். அதிக நாட்கள் நிலைத்து நிற்கும் சோக மனநிலைக்கு ‘போஸ்ட்ட்ரோமெட்டிக் ஸ்ட்ரெஸ் டிசார்டர்’ என்று பெயர். உற்சாகமின்மை, உறக்கமின்மை வீட்டில் முடங்கிக் கிடத்தல், எதிலும் ஆர்வமின்மை போன்றவை இதன் அறிகுறிகளாகும்.
வாழ்க்கையில் தகர்ந்துபோய் இருப்பவர்களை எந்தவிதத்திலும் குற்றம்சாட்டக்கூடாது. அவர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ள வேண்டும் என்று வீட்டில் இருக்கும் அனைவரிடமும் சொல்லிவையுங்கள். இறப்பையோ, இழப்பையோ சந்தித்தவராக இருந்தால் அவரை ஒருபோதும் வீட்டில் தனிமையில் விட்டுவிடாதீர்கள். இழப்பை சந்தித்தவர் உங்களுக்கு பிடிக்காதவராக இருந்தாலும் அவர் மீது அன்பு செலுத்துங்கள். காயங்கள் ஆறக்கூடியது. அது மனக்காயங்களுக்கும் பொருந்தும்.

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். குறிப்பிட்ட வயதில் வரையறுக்கப்பட்டிருக்கும் தடுப்பூசிகளை தவறாமல் போடுவதன் மூலம் நோய்த்தொற்று ஏற்படாமல் தற்காத்துக்கொள்ளலாம்.
குழந்தைகளுக்கு சரியான காலகட்டத்தில் தடுப்பூசி போடுவது அவசியம். ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். அதனால் எளிதில் நோய்த்தொற்று பாதிப்புக்கு ஆளாகக்கூடும். குறிப்பிட்ட வயதில் வரையறுக்கப்பட்டிருக்கும் தடுப்பூசிகளை தவறாமல் போடுவதன் மூலம் நோய்த்தொற்று ஏற்படாமல் தற்காத்துக்கொள்ளலாம்.
இந்தியாவில் ஆண்டுதோறும் 26 மில்லியன் குழந்தைகள் பிறக்கின்றன. இது மிக அதிகமான எண்ணிக்கையாகும். அதே நேரத்தில் இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளில் மூன்றில் இரண்டு பங்கினருக்கு சரியான நேரத்தில் தடுப்பூசிகள் போடப்படுவதில்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. குழந்தைகளின் ஆரோக்கியத்தை தீர்மானிப்பதில் தடுப்பூசிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தொடர்ந்து வழங்குவதிலும், சுற்றி இருப்பவர்களிடம் இருந்து பாதுகாப்பு கவசமாக செயல்படுவதிலும் தடுப்பூசிகளின் பங்களிப்பு இன்றியமையாதது.
குழந்தை பிறந்த முதல் நான்கு மாதங்களுக்குள் முதன்மை தடுப்பூசிகளை தவறாமல் செலுத்தியாக வேண்டும். தடுப்பூசிக்கான அட்டவணையை தயாரித்து குறிப்பிட்ட நேரத்தில் தடுப்பூசி போடுவதை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். டி.பி.டி. எச்.ஐ.பி., போலியோ, ஹெபாடைடிஸ், நியூமோகோகல், ரோடா வைரஸ் தடுப்பூசிகள் இன்றியமையாதவை.
பொதுவாக குழந்தை பிறந்த 5 வாரத்தில் இருந்து 14 வாரங்களுக்குள் தடுப்பூசி செலுத்தியாகவேண்டும். கொரோனா காலகட்டத்தில் தடுப்பூசி போடுவதில் தாமதம் ஏற்பட்டிருந்தால் மருத்துவரிடம் கலந்தாலோசித்து தேவையான தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளவேண்டும். இந்திய அரசாங்கமும் உலக சுகாதார அமைப்பும் குழந்தை பருவ தடுப்பூசிகளின் முக்கியத்துவத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
உலக அளவில் கிட்டத்தட்ட 1 மில்லியன் குழந்தைகள் ஐந்து வயதை நிறைவு செய்வதற்குள்ளாகவே துரதிருஷ்டவசமாக இறந்துபோகிறார்கள். நான்கில் ஒருவர் வயிற்று போக்கு, நிமோனியா காரணமாக மரணத்தை தழுவுகிறார்கள். நோய் எதிர்ப்பு தன்மை இல்லாததே இதற்கு காரணம்.
குழந்தைகளுக்கு மிக முக்கியமான ஐந்து தடுப்பூசிகள் என்னென்ன தெரியுமா?
பி.சி.ஜி எனப்படும் பேசிலஸ் கால்மெட் குயரின் தடுப்பூசி: இது காச நோய்க்கான கட்டாய தடுப்பூசி. இந்த தடுப்பூசி போடாதவர்கள் காசநோய் பாதிப்புக்குள்ளாவதற்கு வாய்ப்புகள் அதிகம். இந்த தடுப்பூசியின் தாக்கம் 15 முதல் 20 ஆண்டுகள் வரை நீடிக்கும். அதுவரை நோய் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் திறன் கொண்டது.
டி.பி.டி தடுப்பூசி: இது ஒருவகை ஆன்டிஜென் தடுப்பூசி. கொடிய நோய்களில் இருந்து பாதுகாக்கும் தன்மை கொண்டது. நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க செய்யும். இது டிப்தீரியா, பெர்டுசிஸ் மற்றும் டெட்டனஸ் என மூன்று வகையான தடுப்பூசி தன்மைகளை கொண்டது. குறிப்பிட்ட இடைவெளியில் குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசியை போடுவது அவசியம்.
போலியோ: இது வாய் வழியாக வழங்கப்படுகிறது. நாட்டில் செயல்படுத்தப்படும் தடுப்பூசி திட்டங்களில் மிக முக்கியமான அங்கம் வகிக்கும் இது, முகாம்கள் வழியாக குழந்தைகளை எளிதில் சென்றடைகிறது. போலியோவுக்கு எதிராக குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்கிறது.
ஹெபாடைடிஸ் பி தடுப்பூசி: ஹெபாடைடிஸ் என்பது கல்லீரலை தாக்கும் வைரசாகும். தாய்க்கு ஹெபாடைடிஸ் பாதிப்பு இருந்தால் எளிதில் குழந்தைக்கும் பரவி விடக்கூடும். அதனால் குழந்தை பிறந்த உடனே தடுப்பூசி போட வேண்டிய சூழல் ஏற்படும். தாய்க்கு ஏதும் பாதிப்பு இல்லை என்றால் சில வாரங்கள் கழித்து குழந்தைக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
எம்.எம்.ஆர். தடுப்பூசி: தட்டம்மை, ரூபெல்லா, புழுக்கள் ஆகியவற்றில் இருந்து பாதுகாப்பு வழங்க இந்த தடுப்பூசி கட்டாயமானதாக கருதப்படுகிறது.

உணவில் கோடை கால பழங்களை அதிகம் சேர்ப்பது உடலுக்கு குளிர்ச்சியையும், சக்தியையும் அளிக்கும். கோடைகால பழங்களில் சுவைக்காக எதையும் சேர்க்காமல் பழத்தை தனியாக அப்படியே சாப்பிடுவது மட்டுமே முழு பலனைத்தரும்.
கோடை காலத்தில் உடலில் ஏற்படும் நீரிழப்பை ஈடு செய்வதில் பழங்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. மற்ற பருவ காலங்களில் விளையும் பழங்களை விட கோடை காலத்தில் கிடைக்கும் பழங்கள் அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கும். அவற்றின் சுவையும் பிரமாதமாக இருக்கும். உணவில் கோடை கால பழங்களை அதிகம் சேர்ப்பது உடலுக்கு குளிர்ச்சியையும், சக்தியையும் அளிக்கும். இருப்பினும் சில வகை கோடை கால பழங்களில் அதிக சர்க்கரையும், அதிக கலோரியும் உள்ளது.
கோடை கால பழங்களில் மாம்பழத்திற்குதான் முதலிடம். அமெரிக்க வேளாண்மைத்துறையின் ஆய்வின்படி, 100 கிராம் மாம்பழத்தில் 60 கலோரி உள்ளது. குறைந்த கலோரி உணவுகளை சாப்பிட விரும்புபவர்கள் மாம்பழத்தை தேர்ந்தெடுக்கலாம். இருப்பினும் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகம் கொண்டவர்கள் மாம்பழங்கள் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
கோடைகாலத்தில் தர்ப்பூசணி, முலாம் பழங்கள் அதிக அளவில் விளையும். 100 கிராம் தர்ப்பூசணி பழத்தில் 30 கலோரி இருக்கிறது. முலாம் பழத்தில் 34 கலோரி உள்ளது. உஷ்ணத்தை குறைக்க இதனை சாப்பிடுவது ஆரோக்கியமானது.
ஸ்ட்ராபெர்ரி மற்றும் பெர்ரி வகை பழங்களும் கோடை காலத்தில் கிடைக்கும். 100 கிராம் மல்பெரி பழத்தில் 43 கலோரியும், ஸ்ட்ராபெர்ரி பழத்தில் 33 கலோரியும் இருக்கிறது.
ஆசிய நாடுகளில் அதிகம் விளையக்கூடிய லிச்சி பழங்களில் இருந்து கோடைகாலத்தில் பழச்சாறு தயாரித்து பரிமாறப்படுகிறது. 100 கிராம் லிச்சி பழச்சாறில் 66 கலோரி உள்ளது.
சிவப்பு நிற செர்ரி பழங்கள் பல இனிப்பு உணவுகளில் சேர்க்கப்படுகின்றன. பழச்சாறாகவும் பயன்படுத்தலாம். 100 கிராம் சிவப்பு செர்ரி பழத்தில் 50 கலோரி உள்ளது.
கோடை காலத்தில் சாத்துக்குடி பழங்களின் பயன்பாடு அதிகமாக இருக்கும். இது சருமம், கூந்தல் உள்பட ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். 100 கிராம் சாத்துக்குடி சாறில் 43 கலோரி இருக்கிறது.
100 கிராம் பப்பாளி பழத்தில் 43 கலோரி இருக்கிறது. இது எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுவதோடு ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் துணைபுரியும். நோய் எதிர்ப்பு சக்தி மேம்படவும் உதவும்.
கோடைகால பழங்களில் சுவைக்காக எதையும் சேர்க்கக்கூடாது. பழத்தை தனியாக அப்படியே சாப்பிடுவது மட்டுமே முழு பலனைத்தரும்.
நீரிழிவு மற்றும் உடல் பருமன் பிரச்சினை கொண்டவர்கள் டாக்டர்களின் ஆலோசனை பெற்றே பழங்களை சாப்பிடவேண்டும்.

உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ள வாழை இலையை சரும ஆரோக்கியத்திற்கும், அழகிற்கும் எப்படி பயன்படுத்தலாம் என்பதை இங்கே காண்போம்.
வாழை இலையில் உடலுக்கு நன்மை தரும் பல்வேறு சத்துக்கள் உள்ளன என்பது நம் அனைவருக்கும் தெரியும். இவை தவிர சரும ஆரோக்கியத்திற்கும், அழகிற்கும் வாழை இலையை பயன்படுத்தலாம் என்பதை இங்கே காண்போம்.
சரும பிரச்சனைகளான பொடுகுத் தொல்லை, சொறி, சிரங்கு மற்றும் தீப்புண் போன்றவற்றிற்கு வாழையிலையை அரைத்து பூசி வந்தால், நல்ல பலன் கிடைக்கும். வடிகட்டிய வாழையிலை சாற்றினை குளிர்பதன பெட்டியில் உறைய வைத்து ஐஸ்கட்டியாக்கி அதனை சருமத்தில் தேய்த்தால் சருமம் மென்மையடையும்.
வாழையிலையில் அழகை கூட்டும் அலட்டாயின் எனும் சத்து உள்ளது. அரைத்த வாழையிலையுடன் தயிர் அல்லது பன்னீர் சேர்த்து சருமத்தில் பூசி வந்தால் சரும பொலிவு அதிகரிக்கும். மேலும் வாழையிலையில் அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் காணப்படுகின்றன. இவை சருமப் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து வயதான தோற்றம் ஏற்படுவதை தடுக்கின்றன.
வாழையிலை சாற்றை தலையில் தடவி குளித்து வந்தால், பொடுகு தொல்லை நீங்கும். வெயிலினால் சரும பாதிப்பு ஏற்பட்டு இருந்தால் அந்த இடத்தில் வாழை இலை விழுதை தடவினால் விரைவாகவே குணமாகும்.

ஆரோக்கியமான சரிவிகிதச் சத்துணவு உங்கள் மேனியழகில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. பெண்களே நீங்கள் என்றும் 16 ஆக ஜொலிக்க விரும்பினால் ஆரோக்கியத்தில் இந்த 5 விஷயங்களை மறக்கக்கூடாது.
நீங்களும் அழகு ராணி போல் ஜொலிக்க ஐந்து வழிகள்:
1. சரியான உணவு
ஆரோக்கியமான சரிவிகிதச் சத்துணவு உங்கள் மேனியழகில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. எண்ணெய்ப் பதார்த்தங்கள் மலச்சிக்கல் மற்றும் வாயுத் தொந்தரவுகளை உண்டாக்கக்கூடும். அதற்காக நீங்கள் முற்றிலுமாக பக்கோடா, பஜ்ஜி, வடை போன்ற எண்ணெய்ப் பதார்த்தங்களைத் தவிர்க்கவேண்டும் என்கிற அவசியமில்லை. எப்போதாவது குறைந்த அளவில் மட்டும் ருசிக்கலாம். அவற்றை விரும்பி, அதிக அளவில் பசிக்காகச் சாப்பிடுவது நல்லதல்ல!
பசுமையான பச்சைக் காய்கறிகளையும், கீரை வகைகளையும், பழவகைகளையும் உங்கள் அன்றாட உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொள்ளுங்கள்! உங்கள் மேனி பளபளக்கும்! கீரை வகைகளில் முருங்கைக்கீரை, அகத்திக்கீரை, அரைக்கீரை போன்றவையும், பழங்களில் ஸ்ட்ராபெர்ரி, புளுபெர்ரி, ராஸ்பெர்ரி போன்றவையும், சிட்ரஸ் பழங்கள் என்று சொல்லப்படும் ஆரஞ்சு, நெல்லிக்கனி மற்றும் எலுமிச்சைக் கனிகளும், ஆப்பிள், வாழைப்பழம் போன்ற சத்தான பழங்களும் உங்கள் மேனியை வசீகரிக்கும் வனப்புடன் திகழச்செய்யும்!
2. உடற்பயிற்சி
உடற்பயிற்சிக் கூடங்களில் தினமும் அதிகாலையில் நீங்கள் செய்யும் உடற்பயிற்சி உங்கள் உடலின்ரத்த ஓட்டத்தைச் சீராக்கி உங்களை உடல் பாரமின்றி எடை குறைந்து எழில்மிகு மேனியுடன் வலம்வரச் செய்யும்..! உடற்பயிற்சியின்போது வெளிவரும் வியர்வையில் உடலில் உள்ள நச்சுப்பொருட்களும் வெளி வருகின்றன. ஆதலால் உடற்பயிற்சியின் இன்றியமையாமையை எளிதில் புரிந்து கொள்ளலாம்!
3, தளதள உடம்புக்கு தண்ணீர்
நல்ல உடலுக்கு நாள் ஒன்றிற்கு 8 கப் தண்ணீர் குடிக்க வேண்டும். இந்த நீராகாரப் பழக்கம் உடலின் ஜீரணப் பாதையைச் சுத்தமாக்கி மலச்சிக்கலைத் தவிர்த்து மேனியையும் சருமத்தையும் சுத்தமாக்கி சுறுசுறுப்படையச் செய்யும்! சருமம் மென்மையாகி ஜொலிக்கவும் செய்யும்.
உங்கள் மேனி உலர்ந்துவிடாமல் இருக்க தினமும் குளிப்பதும், அடிக்கடி முகத்தை நீரால் அலம்புவதும் அவசியம்! சூரியக் குளியல் எனப்படும் காலை மாலை இளவெயில் மேனியில் படுதலும் அழகிய மேனிக்கு அவசியத் தேவையாகும்.
4, நிறைவான மனம்
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சே! அதிகப்படியான அழகு சாதனங்களை பயன்படுத்தி உங்கள் மேனியழகைப் பாழாக்குவதும் அதுபோன்றதே. முக அழகு கிரீம் பூசாமல் என் முகத்தை வெளியே காட்டவே முடியாது என்று நினைக்க வேண்டாம். படுக்கைக்குப் போகும்முன்பு நீரால் முகத்தை கழுவி மென்மையாக துடைத்துவிட்டு தூங்கச்செல்லுங்கள்.
5. தூக்கம் சொர்க்கம்
ஆண்களையும், பெண்களையும் என்றென்றும் இளமை அழகுடன் மிளிரச்செய்வது ஆழ்ந்த நிம்மதியான தூக்கம்தான். ஆழ்ந்த தூக்கமானது உங்கள் முகத்தில் தோன்றும் கருவளையங்களை நீக்கிட பேருதவி புரிகின்றது! தினமும் 6 முதல் 8 மணி நேர ஆழ்ந்த தூக்கம் சருமத்திற்கு பொலிவைத் தருகிறது. முகத்திற்கு பளபளப்பை தருகிறது. அதனால் தான் அழகு ராணிகள் ஆழ்ந்த தூக்கத்திற்கு அடிமையாக இருக்கிறார்கள்.

அகத்திக்கீரை உடல் சூட்டை தணித்து உடலுக்கு குளிர்ச்சியை தரும். பித்தம் தொடர்பான நோய்கள் நீங்கும். மலச்சிக்கலை தடுக்கும். வயிற்றுப்புண் குணமாகும்.
தேவையான பொருட்கள்
அகத்தி கீரை- 1 கட்டு
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 4
பால் - 1கப்
உப்பு- 1 டீஸ்பூன்
மஞ்சள்பொடி- 1டீஸ்பூன்
கறிவேப்பிலை - தேவையான அளவு
செய்முறை
அகத்திக்கீரையை தண்ணீரில் ஒருமுறைக்கு இருமுறை நன்றாக மண் தூசி இல்லாமல் அலசி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.
தக்காளியை நான்கு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
பச்சை மிளகாயை இரண்டாக கீறிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் இரண்டு தம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.
நீர் லேசாக சூடானதும் அதில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், உப்பு போட்டு கொதிக்க விடவும்.
வெங்காயம், தக்காளி வெந்ததும் அகத்திக்கீரையை அள்ளி போட்டு மேலும் சிறிது நேரம் கொதிக்கட்டும்.
கீரை வெந்ததும் ஐந்து நிமிடத்திற்கு பிறகு பாலை ஊற்றுங்கள்.
பால் கொதி வந்ததும் கறிவேப்பிலையை போட்டு இறக்கிவிடலாம்.
அகத்திக்கீரை சொதி தயார்.

இந்த சொதியை சாதத்துடன் மட்டுமல்லாமல் ஆப்பம், இடியாப்பத்துடனும் சேர்த்து சாப்பிடலாம்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளுக்கு எண்ணெயுடன் மசாஜ் செய்வது அவர்களின் எடை அதிகரிப்பை மேம்படுத்தும். மேலும் பல்வேறு உடல் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும்.
குழந்தைக்கு மசாஜ் செய்வது புதிய தாய்மார்களுக்கு பிரசவத்திற்கு பிறகான மன அழுத்தத்திலிருந்து வெளியேற உதவுகிறது என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன, ஏனெனில் இது குழந்தையுடன் ஒரு வலுவான பிணைப்பு, கண்ணுக்கு-கண் தொடர்பு ஆகியவற்றை உருவாக்குகிறது.
குழந்தைகளுக்கு எண்ணெயுடன் மசாஜ் செய்வது அவர்களின் எடை அதிகரிப்பை மேம்படுத்தும். வயிறு உட்பட உடலின் பிற முக்கிய உறுப்புகளுடன் மூளையை இணைக்கும் ஒரு முக்கிய நரம்பு – வேகஸ் நரம்பு தூண்டுகிறது என்பதால் இது எடை குறைந்த, முன்கூட்டி பிறந்த குழந்தைகளுக்கு அதிசயங்களைச் செய்கிறது. இது புதிதாகப் பிறந்தவர்களில் செரிமான செயல்முறையை மேம்படுத்துகிறது, எடை அதிகரிக்க உதவுகிறது.
ஒரு நல்ல மசாஜ் தொடர்ந்து உங்கள் குழந்தைக்கு நல்ல தூக்கத்தைப் பெற உதவும். இது உறுப்புகளை ஒழுங்குபடுத்துவதில் நரம்பு மண்டலத்திற்கு உதவுகிறது மற்றும் முன்கூட்டி பிறந்த குழந்தையின் இதயத் துடிப்பை சீரான வேகத்தில் வைத்திருக்க உதவுகிறது.
குழந்தைகளின் முழங்கால்களைப் பிடித்து, வாரத்திற்கு குறைந்தது மூன்று முதல் நான்கு தடவைகள் வயிற்றுக்குள் மெதுவாகத் தள்ளுவது குழந்தைக்கு அமைதியான நிலையை கொடுக்கும். பல தொந்தரவுக்கு இது சிறந்தது.
குழந்தைக்கு மசாஜ் செய்யும் போது குடும்பத்தில் உள்ள தாய்மார்கள் அல்லது பெரியவர்கள் தங்கள் சிறப்பு நேரத்தைப் பெறுகிறார்கள், மேலும் இது ஒரு அழகான பிணைப்பை உறுதிப்படுத்த வழிவகுக்கிறது. மசாஜ் குழந்தையின் உடல் மற்றும் மூளை செயல்பாட்டின் வளர்ச்சியை வளர்க்க உதவுகிறது.
மசாஜ் செய்வது எப்படி ?
ஒரு வசதியான நிலையில் உட்கார்ந்து உங்கள் குழந்தையை கால்களில் அல்லது மென்மையான பாயில் படுக்க வைக்கவும்.
மசாஜ் செய்ய எண்ணெய்கள் அல்லது குழந்தை மாய்ஸ்சரைசர்களைப் பயன்படுத்துங்கள்.
இந்தியாவில், எள் எண்ணெய் குழந்தைகளுக்கு மசாஜ் செய்வதற்கான முதல் தேர்வாகும், ஏனெனில் இது தசைகள் மற்றும் எலும்புகளுக்கு போதுமான பலத்தை அளிக்கிறது.
ஆலிவ் எண்ணெய் மற்றொரு சிறந்த தேர்வாகும். உங்கள் குழந்தைக்கு எது பொருத்தமானது என்பதை அறிய குழந்தை மருத்துவரிடம் பேசுங்கள்.
படுக்கை நேரத்திற்கு முன் பிசுபிசுப்பு இல்லாத மாய்ஸ்சுரைசரை கொண்டு மசாஜ் செய்வது உங்கள் குழந்தை நன்றாக தூங்க உதவும்.

தொல்லை தரும் சகப்பணியாளர்கள் பல்வேறு வடிவங்களில் வருகின்றனர். ஒரு நிறுவனத்தில் தன் அருகாமையில் பணியாற்றும் பணியாளர்களால் வரும் சிக்கல்களுக்கு தீர்வு தரும் ஆலோசனைகள்.
தொல்லை தரும் சகப்பணியாளர்கள் பல்வேறு வடிவங்களில் வருகின்றனர்.அவர்களைத் தவிர்த்து விட்டு, அவர்களாகவே விலகி செல்வார்கள் என்று நம்புவது பயனளிக்காது. பாதிக்கப்பட்ட பணியாளர் புத்திசாலித்தனமாக நடந்து கொண்டு, சகப்பணியாளர்களை சமாளிப்பது எப்படி? என்று தெரிந்து கொள்வதே பலனளிக்கும். எல்லா நிறுவனங்களிலும் இதுபோன்ற ஆட்கள் இருப்பார்கள் என்பதை மறக்காதீர்கள். இப்போது நீங்கள் சமாளிக்க வேண்டிய வாய்ப்புள்ள பல்வேறு வகையான தொல்லை தரும் சகப் பணியாளர்களைப் பற்றி காணலாம்.
தாங்களாக செய்து முடிக்காத பல்வேறு வேலைகளுக்காக பெயரும் புகழும் வாங்கி கொள்வதற்காக எந்த வெட்கமும் அடைய மாட்டார்கள். “அவர்களுடைய தந்திரங்களை கண்டறிவதில் புத்திசாலித்தனமாக இருந்திடுங்கள். எடுத்துக்காட்டாக, அதுபோன்றவர்களுக்கு தரப்படும் ஒரு வேலையின் பெரும் பகுதியை நீங்கள் செய்து வந்தால் அதற்காக ஆச்சர்யமடையாதீர்கள். ஆனால் சகப்பணியாளர் பிரசண்டேஷன் நேரத்தில் மட்டும் திடீரென்று தோன்றி எல்லாவற்றையும் தான் செய்ததாகக் காட்டிக் கொண்டு பெயரைத் தட்டிச் செல்வார்.
தந்திரங்களும், ஈகோ நிறைந்த பேச்சுவார்த்தைகளும் அடிக்கடி செய்யும் இதுபோன்றவர்கள், கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உங்களை தோற்கடிக்க முயற்சி செய்வார்கள். குறிப்பாக அவர்களுடைய யோசனைகளை அல்லது பரிந்துரைகளை நீங்கள் நடைமுறைப்படுத்தாத நேரத்தில். இதுபோன்றவர் உங்களுக்கு மேல் அதிகாரம் நிறைந்தவராக இருந்தால், அவருடைய பயமுறுத்தும் விடாப் பிடியான நடவடிக்கைகள் உங்கள் மன அழுத்தத்தைத் தொடர்ந்து அதிகரிக்கும்.
தொல்லை தருபவர்கள் பொதுவாக நீங்கள் எதிர்க்கும் போது விலகி ஓட முயற்சி செய்வார்கள்.அலுவலகத்தில் உங்களுக்குத் தொல்லை தருபவருக்கும் உங்களுக்கும் இடையே உணர்வு பூர்வ இடைவெளியை உருவாக்கும் வழிகளை கண்டறிந்து விட்டால், உங்களுக்கு குறைவான பாதிப்புகள் ஏற்பட வழி வகுக்கும். விஷயம் என்னவென்றால், உங்கள் இடைவெளியை பராமரித்து, அசட்டையுடன் சமாளித்தாலே போதுமானது என்பதே.
புரளி பேசுபவர்கள் ஆபத்தானவர்கள், எந்தவொரு நிறுவனத்திலும் உங்கள் வேலையை அதிக சிக்கலாக மாற்றி விடக் கூடியவர்கள். உங்களைப் பற்றி உங்கள் மேலாளர்களிடம் வேறொருவர் தவறாக பேச அனுமதிக்கக் கூடாது. “உங்கள் மேலாளர்களிடம் உங்களைப் பற்றி தவறாக கூறப்பட்டுள்ளதா என்று உங்களுக்குத் தெரியாது, ஆனால் அறிகுறிகளைத் தேடுங்கள். எடுத்துக்காட்டாக, அவர்களுடைய எதிர்வினை உங்களிடம் திடீரென்று இறுக்கமாக மாறி விட்டதா என்று பாருங்கள். அப்படி என்றால், அவர்களிடம் நேரடியாக பேசி என்ன பிரச்சனை என்று கேளுங்கள். நேரடியான பேச்சுவார்த்தையில், பல விஷயங்கள் சரியாக வாய்ப்பு கிடைக்கும். உங்கள் மீது உருவாக்கப்பட்ட கெட்டபெயரையும் சரிசெய்ய முடியும்.”

கோடையில் ஏற்படும் எல்லா பிரச்சினைகளிலிருந்தும் நம்மை காக்கிறது தர்பூசணி. உடல் சூட்டைத் தணிக்கும்; வெப்பம் மிகுந்த இந்த காலத்தில் இது நமக்கு கிடைத்த வரப்பிரசாதம்.
தர்பூசணியில் லைக்கோபீன் என்ற ஆன்டிஆக்ஸிடென்ட் அதிக அளவில் உள்ளது. இது மார்பு, நுரையீரல், கர்ப்பப்பை, பெருங்குடல் போன்ற இடங்களில் ஏற்படும் புற்றுநோயைத் தடுக்கும். பொட்டாசியமும் அதிக அளவில் உள்ளதால் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கும். இதயத்துடிப்பை சீராக்கும்.
தர்பூசணியில் பீட்டா கரோட்டின், வைட்டமின் சி, லூடீன், சியாக்ஸன்தின் போன்ற ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் அதிகளவில் உள்ளன. இவை மாலைக்கண்நோய், கண்விழி மிகை அழுத்த நோய் போன்றவற்றிலிருந்து கண்களைப் பாதுகாக்கும். அதேபோல இதில் 90 சதவிகிதம் அளவுக்கு நீர் உள்ளது. கோடை காலங்களில் இதைச் சாப்பிட்டால் நீரிழப்பு பிரச்சினைகள் ஏற்படாது. இதைத் தொடர்ந்து சாப்பிட்டுவர எடை குறையும்.
தர்பூசணி சாப்பிட்ட பிறகு அதன் தோல் பகுதியை தூக்கி எறியாமல், நம் சருமத்தில் தடவலாம். இதில் பாக்டீரியா தொற்று மற்றும் அலர்ஜிக்கு எதிரான தன்மை உள்ளது. முகப்பரு பிரச்சினைக்கும் இது நல்ல தீர்வு தரும். தர்பூசணியை தொடர்ந்துச் சாப்பிட்டுவந்தால், மனநிலை அமைதியாக, நன்றாக இருக்கும். கோடையில் ஏற்படும் எல்லா பிரச்சினைகளிலிருந்தும் நம்மை காக்கிறது தர்பூசணி. உடல் சூட்டைத் தணிக்கும்; வெப்பம் மிகுந்த இந்த காலத்தில் இது நமக்கு கிடைத்த வரப்பிரசாதம்.

சிறுநீர் கழிக்கும் போது சிலருக்கு எரிச்சல் ஏற்படும். இந்த பிரச்சனைக்கான காரணத்தையும் அதனை தடுக்கும் பாட்டி வைத்தியத்தையும் அறிந்து கொள்ளலாம்.
சிறுநீர் கழிக்கும் போது சிலருக்கு எரிச்சல் ஏற்படும். இதற்கு பொதுவான காரணம் என்னவென்றால் கிருமிகள் சிறுநீர் வடிகுழாயின் மூலமாக உடலினுள் நுழையும் போது தொற்று ஏற்படுத்தும். சிறுநீர் பாதையில் வளர்ச்சியடையும் பாக்டீரியாக்களின் விளைவாக அதனை சுற்றியுள்ள திசுக்களில் வீக்கம் ஏற்படுத்துவதன் காரணமாக, வலி மற்றும் எரிச்சல் உண்டாகிறது.
இது தவிர, உடலில் நீர் வறட்சி, சிறுநீரக கற்கள், கல்லீரல் பிரச்சனை, அல்சர், விந்து அல்லது விரைகளில் உள்ள தொற்றுநோய், பால்வினை நோய், நீரிழிவு, ஊட்டச்சத்துக் குறைவு, குறுகிய சிறுநீர் பாதை போன்றவையும் காரணம் ஆகும்.
எரிச்சலுக்கான தீர்வு என்ன?
உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால், சிறுநீரானது அடர்ந்த மஞ்சள் நிறத்தில் வருவதோடு, எரிச்சலோடும் இருக்கும்.
ஆகவே ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை 2-3 டம்ளர் தண்ணீர் குடிப்பதை பழக்கமாக கொள்ள வேண்டும்.
சிட்ரஸ் பழத்தின் ஜூஸ், எலுமிச்சை ஜூஸ் ஆகியவை சிறுநீர் எரிச்சலை சரிசெய்யும், ஏனெனில் சிட்ரஸ் பழங்கள் பாக்டீரிய கிரிமிகளை அழிக்கவல்லது.
தேங்காய் நீர் உடலில் ஏற்படும் நீர்வறட்சியை தடுக்க வல்லது. அதிலும் இதை உடலில் நீர் வறட்சியின் போது 2-3 டம்ளர் குடித்து வந்தால், அந்த எரிச்சலானது போய்விடும். இதனால் வலியுடன் சிறுநீர் வெளியேறுவது குணமாகும்.
ஒரு டம்ளர் தண்ணீருடன், 1 டேபிள் ஸ்பூன் மல்லித் தூளை சேர்த்து, இரவில் படுக்கும் முன் ஊற வைத்துவிட்டு, மறுநாள் காலையில், அதில் சர்க்கரை சேர்த்து குடித்தால் சிறுநீர் எரிச்சல் சரியாகிவிடும்