என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    புதிதாக பூப்பெய்திருக்கும் பிள்ளைகளை மனரீதியாக எப்படி தயார் படுத்துவது? அவர்களுக்கு எதை சொல்வது? எப்படி சொல்வது? என்பதை பெற்றோர் தெரிந்து கொள்வது அவசியம்.
    புதிதாக பூப்பெய்திருக்கும் பிள்ளைகளை மனரீதியாக எப்படி தயார் படுத்துவது? பெண் குழந்தைகள் உடல் மற்றும் மனதளவில் எதிர்கொள்ளக்கூடிய பிரச்சனைகளை எவ்வாறு கையாள்வது? அவர்களுக்கு எதை சொல்வது? எப்படி சொல்வது? என்பதை பெற்றோர் தெரிந்து கொள்வது அவசியம்.

    ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றம் காரணமாக பருவ வயது பெண்களின் மனநிலை மாறிக்கொண்டே இருக்கும், காரணமில்லாமல் கோபப்படுவார்கள். முதல் மாதவிடாயின் போது மட்டுமில்லாமல் ஒவ்வொரு மாதமும் இப்படியான மாற்றங்கள் பெண்களிடம் இருக்கவே செய்யும். ஹார்மோன் மாற்றங்களின் காரணமாக மன அழுத்தம் அதிகமாகலாம். இந்த பருவத்தில் பிடித்தவை பிடிக்காமல் போகும். பிடிக்காதவை பிடிக்கும்.

    பருவ வயது பெண் குழந்தைகள் ஏதாவது ஒன்றை செய்யும் போது குறிப்பாக விளையாடப்போகவா? என்று கேட்கும் போது நீ இன்னும் சின்னப்பொண்ணு இல்லை, பெரிய பெண்ணாயிட்ட என்று சொல்வதும், ஏதாவது ஒரு விவாதத்தின் போது குறுக்கிட்டு பேசினால் நீ பெரிய ஆளு மாதிரி பேசாத என்று சொல்வதும், குழந்தைக்கு குழப்பத்தை ஏற்படுத்தும். சிறு பெண்ணாகவும் இல்லாமல் பெரிய பெண்ணாகவும் இல்லாமல் இரண்டும் கெட்ட பருவமாய் இருக்கும் இந்த சமயத்தில் பெற்றோரின் கவனிப்பும் அக்கறையும் அதிகமாகவே தேவை.

    பெண் குழந்தைகளுக்கு இந்த சமயத்தில் ஆண்களின் மீதான ஈர்ப்பு இருக்கவே செய்யும். சிலருக்கு அதிகமாகவும், சிலருக்கு குறைவாகவும் இருக்கலாம். பருவ வயது பெண் குழந்தைகளுக்கு பெற்றோர், சில விஷயங்களை இலைமறை காயாக சொல்லி புரிய வைப்பது நல்லது. எல்லாவற்றையும் வெளிப்படையாக சொல்ல வேண்டியதில்லை. அப்பாவுக்கு குழந்தைக்கு சில விஷயங்களை புரிய வைக்க முயற்சிக்க வேண்டும். அண்ணனின் நண்பர்களோடு பழகும்போது எல்லைகள் வைத்து கொள்ள வலியுறுத்த வேண்டும். எல்லை மீறாமல் பேசவும், பழகவும் அனுமதிக்கலாம்.

    டீன்ஏஜ் பருவத்தில் அலைபேசி பயன்பாட்டில் கவனமாக இருக்க வேண்டும் அதிக நேரம் சோஷியல் மீடியாக்களில் உலவாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

    சுகாதாரத்தை பொறுத்தவரை பெண் குழந்தைகளிடம் பின்வரும் விஷயங்களை வலியுறுத்த வேண்டும்.

    மாதவிலக்காகி இருபது நாட்களை கடந்து விட்டாலே கைப்பையில் சானிட்டரி நாப்கின் வைத்து கொள்வது நல்ல. ஒருநாளைக்கு நான்கு முறை சானிட்டரி நாப்கின் மாற்றுவது சுகாதாரமானது.

    உடலின் மறைமுக பகுதிகளில் முடி வளர ஆரம்பிப்பதால் உடலில் அதிக வியர்வை நாற்றம் வெளியேற கூடும். அதனால் இருவேளை குளிப்பது, இருவேளை பல் துலக்குவது அவசியம். முகப்பரு ஏற்படாமல் இருக்க முகத்தை அடிக்கடி கழுவுவது, தலை சீவுவது, தலையணை உறை மாற்றுவது சீப்பை சுத்தமாக வைத்திருப்பது கட்டாயம்.

    தினமும் ஏதாவது ஒரு உடற்பயிற்சியை மேற்கொள்வது நல்லது. உடல் உழைப்பு அதிகமாக இருக்கும் போது மனம் தடுமாறாமல் இருக்கும். அதே போல் நீண்ட நேரம் பாடங்களை படிக்க சொல்லி வற்புறுத்தக்கூடாது.

    எந்த சமயத்திலும், பெற்றோரின் அன்பும், அக்கறையும், அரவணைப்புமே பருவ வயது பெண் குழந்தைகளிடம் நல்ல மாற்றத்தை விதைக்கும்.
    காய்கறிகள் மற்றும் கீரைகளில் உள்ள சத்துக்கள் வீணாக்காமல் சமைக்கும் முறைகளில் ஒன்று துவையல். துவையல் மூலம் காய்கறிகள் மற்றும் கீரைகளில் உள்ள சத்துக்கள் அழியாமல், முழுமையாய் நமது உடலில் சேருகின்றன.
    தேவையான பொருட்கள்

    கொத்தமல்லி தழை - 1 கப்
    புதினா - 2 டேபிள்ஸ்பூன்
    வெல்லம் - 50 கிராம்
    உப்பு - சுவைக்கு
    எண்ணெய் - தேவையான அளவு
    மிளகாய் வற்றல் - 2
    கடுகு - 1 டீஸ்பூன்
    புளி - நெல்லிக்காய அளவு

    செய்முறை

    கொத்தமல்லி, புதினாவை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் காய்ந்த மிளகாய், கொத்தமல்லி தழை, புதினா, உப்பு, புளி சேர்த்து நன்றாக வதக்கவும்.

    அத்துடன் வெல்லம் சேர்த்து கலந்து ஆறவிட்டு மிக்சியில் சிறிது நீர்விட்டு கெட்டியாக அரைத்து கொள்ளவும்.

    பிறகு கடுகு தாளித்துக்கொட்டி பரிமாறவும்.

    இந்த துலையலை சூடான சாதத்தில் போட்டு நல்லெண்ணெய் ஊற்றி பிசைந்து சாப்பிடலாம். அல்லது மோர் சாதம், இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிடலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பட்ஜெட்டுக்கு ஏற்ப கட்டுமான பொறியாளர்கள் மற்றும் வல்லுனர்கள் சிக்கன செலவில் பணிகளை செய்து முடிப்பதற்காக குறிப்பிட்டுள்ள வழிகளை இங்கே காணலாம்.
    வங்கி கடன், கட்டுமான அனுமதி, மணல், செங்கல், கம்பி, சிமெண்டு, எலெக்ட்ரிக்கல், போர்வெல் அமைத்தல் உள்ளிட்ட இதர செலவினங்கள் கொண்ட கட்டுமான பணிகளை மேற்கொள்ளுபவர்கள், கையிலிருந்தும் குறிப்பிட்ட தொகையை செலவு செய்ய வேண்டும். அவர்களுடைய பட்ஜெட்டுக்கு ஏற்ப கட்டுமான பொறியாளர்கள் மற்றும் வல்லுனர்கள் சிக்கன செலவில் பணிகளை செய்து முடிப்பதற்காக குறிப்பிட்டுள்ள வழிகளை இங்கே காணலாம்.

    அஸ்திவாரம்

    குறிப்பிட்ட அளவுக்கு பள்ளம் எடுத்து அரை ஜல்லி, பெரிய ஜல்லி போட்டு, கருங்கல் அடுக்கி சிமெண்டு கலவை கொண்டு அஸ்திவாரத்தை உருவாக்கும் முறை பொதுவானது. ‘ஆர்ச் பவுண்டேஷன்’ முறையை பயன்படுத்தினால் குறைவான ஆழத்தில் உறுதியான அஸ்திவாரத்தை அமைக்க இயலும். ‘அண்டர் ரீம் பைல் பவுண்டேஷன்’ முறையிலும் அஸ்திவாரம் அமைக்கலாம். இந்த முறைகளால் அஸ்திவார செலவில் சுமார் 25 சதவிகிதம் சேமிக்கப்படும். இந்த முறைகளை கட்டுமான பொறியாளரது ஆலோசனை மற்றும் மேற்பார்வையில் அமைக்க வேண்டும்.

    சுற்றுச்சுவர்

    சுற்றுச்சுவர் அமைக்க செங்கலுக்கு பதிலாக கான்கிரீட் சாலிட் பிளாக் கல்லைப் பயன்படுத்தலாம். செங்கல் சுவரை ஒரே நேரத்தில் ஒரு மீட்டர் உயரத்துக்கு மேல் அடுக்கி சுவர் எழுப்ப இயலாது. ஆனால், சாலிட் பிளாக் கல்லை கொண்டு ஒரே நேரத்தில் 15 கல் உயர சுவர் கட்டலாம். ஒரு சாலிட் பிளாக் கல் 4 முதல் 5 செங்கல்களுக்குச் சமம் என்ற நிலையில் வேலை விரைவாக முடிவதுடன், கட்டுமான நேரம் மற்றும் லேபர் எண்ணிக்கையும் குறையும். சாலிட் பிளாக் சுவர் மேல் பூச்சு வேலையில் சிமெண்டு பூச்சை கொஞ்சம் குறைவாகப் பூசலாம். மேலும், சாலிட் பிளாக் கல்லை ரீயூஸ் செய்ய முடியும். சாலிட் பிளாக் கல் எண்ணிக்கையில் குறைவு என்பதால் ஏற்றி இறக்கும் வேலைகள் விரைவில் முடியும்.

    ஜன்னல் மற்று கதவு

    தற்போது, வீடுகளுக்கான கதவு, ஜன்னல் போன்றவற்றை ரெடிமேடாக தேர்வு செய்வது பரவலாக உள்ளது. கதவு மரத்தால் இருந்தாலும், ஜன்னல்களும் மரத்தால் அமைப்பது அதிக செலவாகும். மேலும், மரத்தாலான பொருட்களுக்கான பராமரிப்பு மற்றும் அவற்றை அவற்றை பொருத்துவதற்கு முன்னர் மேற்கொள்ள வேண்டிய பூச்சி தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றில் கவனமாக செயல்பட வேண்டும். ஆரம்ப செலவு மற்றும் பின்னர் செய்ய வேண்டிய பராமரிப்புகள் ஆகியவற்றை மனதில் கொண்டு திட்டமிட வேண்டும். அதனால், ஜன்னல் அமைப்பில் இரும்பு அல்லது யு.பி.வி.சி ஜன்னல்களை தேர்வு செய்யலாம்.

    மேற்கூரை அமைப்பு

    ஒரு மாடி மட்டும் கொண்ட வீட்டின் கட்டுமான பணிகளில் கூரை அமைக்கும் செலவை சிக்கனமாக செய்ய இயலும். அதாவது, ‘கட்லின்டல் சன் ஷேடு’ அமைக்கப்பட்ட பின்னர் சிலாப் டெக்னாலஜி மூலம் கூரையை அமைக்கலாம். மற்றொரு தளம் அமைக்கும் நிலையில், அடித்தளம் அமைக்கப்பட்ட அதே ’மோல்டிங் டெக்னாலஜி’ மூலம் பிளிந்த் பீம் அமைக்கலாம். இந்த முறை செலவு குறைவாகவும், கட்டுமானங்களின் பாது காப்புக்கு ஏற்றதாகவும் இருக்கும். கூரை அமைப்பதில் செலவை குறைக்க பெர்ரோ சிமெண்டு சேனல், ஜாக் ஆர்ச் போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கான்கிரீட் செலவைக் குறைக்கலாம்.

    கட்டுமான பொருட்கள் கொள்முதல்

    கட்டுமான செலவை குறைக்க வேண்டுமென்றால் வீட்டுக்குத் தேவையான மொத்த பொருட்களையும் ஒரே தடவையில் வாங்கக்கூடாது. மழை, லேபர் பிரச்சினை போன்ற காரணங்களால் கட்டுமான பணிகள் தாமதமாகும் சமயங்களில் சிமெண்டு, கம்பி மற்றும் செங்கல் போன்றவை சேதமாகலாம். அதனால், பொருட்கள் கொள்முதலில் சரியான திட்டம் அவசியம். இரும்பு கம்பிகளில் ஐ.எஸ்.ஐ, ஐ.எஸ்.ஓ தரச்சான்று பெற்ற எந்த நிறுவனத்தின் கம்பிகளையும் பயன்படுத்தலாம். அதே போல ஆற்று மணலே வேண்டும் என்று இல்லாமல், எம் சாண்ட் பயன்படுத்தலாம். அருகிலிருந்தே பொருட்களை வாங்குவது போக்குவரத்துச் செலவை மிச்சப்படுத்தும்.
    நகங்களை பராமரிக்க கால்சியம் சத்துள்ள உணவுகள் உண்பது மிக அவசியம். நகங்களை எளிய முறையில் பராமரிப்பதும், பாதுகாப்பதும் எப்படி என்று அறிந்து கொள்ளலாம்.
    நகங்களைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமானது. ஆனால், பலர் நகங்களைக் கடிக்கிறார்கள்; கடினமான டிடர்ஜென்ட்களைப் பயன்படுத்துவதால் நகங்கள் சேதமடைகின்றன; கடினமானவற்றை உரிப்பது, திறப்பது என நகங்களை உடைத்துக்கொள்கிறார்கள். இவற்றுடன், நகங்களின் வேரும் பாதிப்படைந்துகொண்டே வரும். நகங்கள் வளராமல் இருப்பதற்கு அதுதான் காரணம். நகங்களுடைய ரூட் வலிமையிழந்துவிட்டால் நகங்கள் வளராது.

    நகங்களை வெட்டும் முன் அவற்றின் மேல் கொஞ்சம் எண்ணெய் தடவி கொண்டால் சுலபமாக வெட்டலாம்.

    நல்லெண்ணெய்யை சூடுபடுத்தி மசாஜ் செய்தால் நகங்கள் பளபளப்பாக இருக்கும்.

    இளஞ்சூடான தண்ணீரில் துளசி, புதினா மற்றும் வேப்ப இலையை போட்டு நகங்கள் மூழ்குமாறு -10-15 நிமிடங்கள் வைத்தால் கிருமிகள் அழிந்து நகம் சுத்தமாகும்.

    ஆரஞ்சுப்பழத்தோலை காயவைத்து பொடியாக்கி கொஞ்சம் உப்பு சேர்த்து எண்ணெயில் குழைத்து நகங்களில் தடவி வந்தால் பளபளப்பு கூடும்.

    மிதமான சூடுள்ள பாலில் பஞ்சை நனைத்து நகத்தை சுத்தப்படுத்தினால் பளபளவென்று இருக்கும்.

    நகங்களை பராமரிக்க கால்சியம் சத்துள்ள உணவுகள் உண்பது மிக அவசியம்.

    எலுமிச்சைச்சாறு சிறிதளவு எடுத்து நகங்களில் அப்ளை செய்ய வேண்டும். தொடர்ந்து அப்படிச் செய்துவர நகங்கள் வலிமை பெறும். எலுமிச்சையில் உள்ள கால்சியம் மற்றும் வைட்டமின் சி  நகங்களின் ஆரோக்கியத்துக்கு உதவும்.

    ஆயில் மசாஜ் நகங்களுக்கு மிகவும் நல்லது. ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயிலை எடுத்து லேசாகச் சூடுபடுத்திக்கொள்ள வேண்டும். அதை ஒவ்வொரு நகத்தின் வேர்ப் பகுதியிலும் விட்டு மசாஜ் பண்ண வேண்டும். ஒவ்வொரு விரலுக்கும் இருபது விநாடிகள் மசாஜ் கொடுத்தால் போதும். மசாஜ் செய்துவிட்டு அரை மணி நேரம் கழித்துக் கைகளைக்கழுவிக் கொள்ளவும். இதனால் நகங்கள் ஆரோக்கியமாக வளர்வதுடன் நகங்களைச் சுற்றியுள்ள க்யூட்டிகிள் பிளவுபடாமல் ஆரோக்கியமாக இருக்கும். நகங்கள் மஞ்சள் நிறத்தில் மாறாமலும் இருக்கும்.
    கர்ப்ப காலத்துல வர்ற மனஅழுத்தத்தோட பாதிப்பு நம்மை மட்டுமில்லாம குழந்தையையும் சேர்த்து பாதிக்குது. நமக்கு பிடிச்ச விஷயத்தை நாம் செய்ய ஆரம்பிச்சா கண்டிப்பாக மன அழுத்தமோ, சோர்வோ இருக்காது.
    எல்லா பெண்களுக்கும் மன அழுத்தம் வருவது இப்போ ரொம்ப இயல்பாயிடுச்சு. அதுவும் கர்ப்ப காலத்துல வர்ற மனஅழுத்தத்தோட பாதிப்பு  நம்மை மட்டுமில்லாம குழந்தையையும் சேர்த்து பாதிக்குது. கர்ப்ப காலத்துல மன அழுத்தம் வர்றதுக்கு முக்கிய காரணமான ஹார்மோன் சமநிலையை சொல்லலாம். பிறகு வாந்தி, தூக்கமின்மை, அல்லது  ரொம்ப நேரம் தூங்கறது, சாப்பிட பிடிக்காம இருக்கறது மற்றொரு முக்கியமான ஒன்று வீட்டுச்சூழல். இப்படி பல காரணம் இருக்குது.

    மன அழுத்தம் தவிர்க்க இந்த கர்ப்ப காலத்துல நம்மை சுத்தி  நல்ல விஷயங்களை மட்டுமே பேசற மாதிரி பார்த்து கொள்ள வேண்டும்.  ஏன்னா தேவையில்லாத பயத்தை, கோபத்தை ஏற்படுத்துறவங்க கிட்ட கொஞ்சம் தள்ளியே இருப்பது நல்லது.  எந்த எதிர்மறையான விஷயங்களும் நம்ம மனசுக்குள்ளே போகாம இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும் அல்லது அப்படியே போனாலும் அதிலிருந்து உடனே வெளிவர உங்களுக்கு புடிச்ச விஷயத்தை செய்யும் போது எளிதாக அந்த மனநிலையில இருந்து வெளியில வர முடியும்.

    உங்க கணவரோட மாலை நேரத்துல கண்டிப்பா ஒரு நடைப்பயிற்சி போங்க. அப்படி போகும் போது அவர் கூட மகிழ்ச்சியான விஷயங்களை மட்டும் பேசிட்டு போங்க.

    மன அழுத்தத்தில் இருந்து வெளியே வர  உதவுவதில் உணவு  ஒரு நல்ல மருந்தாகும். ஒமேகா 3 அதிகமா இருக்கிற வால்நட் (walnut),  அளவாக டார்க் சாக்லேட் கூட சாப்பிடலாம். இதெல்லம் நம்ம மன நிலைமையை சரி பண்றதுக்கான உணவுகள் ஆகும்.

    குடும்ப சூழ்நிலை காரணமாகவும் மன அழுத்தம் இருக்குன்னா  நீங்க கண்டிப்பாக யோகா, மூச்சு பயிற்சி, தியானம் பண்ணலாம். நடந்த கசப்பான சம்பவங்களை நினைக்காம நம்ம குழந்தைக்காக நேர்மறையான விஷயங்களை மட்டும் யோசிக்கவோ இல்லனா பேசவோ பழகிக்கோங்க. இது நிச்சயமாக உங்களுக்கு ஒரு நல்ல மாற்றத்தை தரும்.

    இப்படி நமக்கு பிடிச்ச விஷயத்தை நாம் செய்ய ஆரம்பிச்சா கண்டிப்பாக மன அழுத்தமோ, சோர்வோ இருக்காது.
    கோடை காலத்தில் சூரிய கதிர்வீச்சுக்களின் தாக்கத்தில் இருந்து சருமத்தை பாதுகாக்க எண்ணெய் வகைகளை உபயோகப்படுத்த வேண்டியது அவசியமானது. இந்த 5 எண்ணெய்களை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் சரும பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கலாம்.
    கோடை காலத்தில் சூரிய கதிர்வீச்சுக்களின் தாக்கத்தால் சருமம் பாதிப்புக்குள்ளாகும். நோய் தொற்றுகளாலும் சருமத்தில் பிரச்சினை உண்டாகும். அதனை தவிர்க்க எண்ணெய் வகைகளை உபயோகப்படுத்த வேண்டியது அவசியமானது. லாவண்டர், ரோஸ்மேரி, சந்தனம், தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்றவை சரும நலனுக்கு ஏற்றது. அதனை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் சரும பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கலாம்.

    * லாவண்டர் எண்ணெய் பல்வேறு பிரச்சினைகளுக்கு விரைவான நிவாரணம் தரும். விபத்தில் ஏற்படும் காயங்கள், தீக்காயங்கள், தோல் அரிப்பு போன்ற பிரச்சினைகளை போக்கும். இந்த எண்ணெய்யை நுகர்ந்தால் மன அழுத்தமும் கட்டுப்படும்.

    * கோடை காலத்தில் வியர்வை அதிகமாக வெளியேறும். அவை உடலில் படியும்போது நோய் கிருமிகள் அதிக அளவில் உருவாகிவிடும். ரோஸ்மேரி எண்ணெய்யுடன் தண்ணீரையோ அல்லது தேங்காய் எண்ணெய்யையோ சிறிது கலந்து வியர்வை வெளியேறும் பகுதியில் தடவி வரலாம். எண்ணெயின் வாசத்தில் நோய் பரப்பும் கிருமிகள் அழிந்துவிடும். மனதுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும்.

    * சந்தனம் உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும். முகப்பரு பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் சந்தனத்தை தூள் செய்து பருக்கள் இருக்கும் இடத்தில் தடவி வரலாம். சருமத்தில் சிவப்பு நிற திட்டுக்கள் இருந்தால் அதற்கும் சந்தனத்தூள் நிவாரணம் தரும். சந்தன எண்ணெய் வெப்ப தாக்கத்தில் இருந்து சருமத்தை காக்கும். வீக்கத்தை குறைக்கவும் உதவும். வெளியே செல்லும்போது சருமத்தில் சந்தன எண்ணெய் தடவலாம்.

    * புதினா எண்ணெய் உடலுக்கு குளிர்ச்சி ஏற்படுத்தும் தன்மை கொண்டது. வீக்கம் மற்றும் குமட்டலையும் போக்கும். கழுத்து பகுதியில் புதினா எண்ணெய்யை தடவினால் குளிர்ச்சியை உணரலாம்.

    * கோடை காலத்தில் எலுமிச்சையின் பயன்பாடு அதிகமிருக்கும். எலுமிச்சை சாறையும் சருமத்திற்கு பயன்படுத்தலாம். அவை சருமத்திற்கு கூடுதல் பொலிவு சேர்க்கும். முகப்பரு, சரும வறட்சி உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு நிவாரணம் தரும்.

    * லாவண்டர், ரோஸ்மேரி, சந்தனம், புதினா போன்ற எண்ணெய்களை அப்படியே பயன்படுத்தக்கூடாது. அவைகளுடன் தேங்காய், ஆலிவ் போன்ற ஏதாவதொரு எண்ணெய்யை கலந்து பயன்படுத்துவது நல்லது.
    டுவிட்டரில் பெண்கள் எதைப்பற்றியெல்லாம் பதிவுகளை செய்கிறார்கள் என்பது குறித்த சுவாரசிய தகவல்கள் ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளன.
    சர்வதேச பெண்கள் தினம் 8-ந்தேதி கொண்டாடப்பட்டது

    இதையொட்டி, டுவிட்டரில் பெண்கள் எதைப்பற்றியெல்லாம் பேசுகிறார்கள் என்பது ஆராயப்பட்டது.

    இதற்காக 700 பெண்களிடம் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.

    2019 ஜனவரி முதல் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரையில் 10 நகரங்களில் பெண்கள் வெளியிட்ட 5 லட்சத்து 22 ஆயிரத்து 992 பதிவுகளும் ஆராயப்பட்டன.

    இதில் பெண்கள் டுவிட்டரில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசுவது தெரியவந்துள்ளது. பெண்களின் டுவிட்டர் பதிவுகள் 9 பொருளை பிரதானமாக கொண்டுள்ளன.

    இந்த ஆய்வு முடிவில் வெளியான சுவாரசியமான தகவல்கள்:-

    * பெண்களின் டுவிட்டர் பதிவுகளில் 24.9 சதவீதம், பேஷன், புத்தகங்கள், அழகு குறிப்புகள், பொழுதுபோக்கு அம்சங்கள், சாப்பாடு பற்றி அமைந்துள்ளன.

    * நாட்டு நடப்புகள் பற்றி 20.8 சதவீத பதிவுகள் அமைந்திருக்கின்றன.

    * கொண்டாட்ட தருணங்கள் தொடர்பாக 14.5 சதவீத பதிவுகள் செய்யப்படுகின்றன.

    * சமூகம் தொடர்பாக 11.7 சதவீத பதிவுகளும், சமூக மாற்றங்கள் குறித்து 8.7 சதவீத பதிவுகளும் உள்ளன.

    * டுவிட்டரை பொறுத்தமட்டில் அன்றாட உரையாடல்கள், கொண்டாட்ட தருணங்கள்தான் அதிகபட்ச லைக்குகளையும், பதில்களையும் பெறுகின்றன.

    * நகரங்களில் சென்னை நகரத்தில்தான் கொண்டாட்ட தருணங்கள் பற்றி அதிகமாக பெண்களால் டுவிட்டர் பதிவுகள் வெளியிடப்படுகின்றன. சமூகம், சமூக மாற்றம் பற்றி பெங்களூரு பெண்கள் பதிவுகளை வெளியிடுகின்றனர். கவுகாத்தி பெண்கள் பேஷன் பற்றியும், விருப்பங்கள் குறித்தும், நாட்டு நடப்பு பற்றியும் பதிவுகளை வெளியிடுகிறார்கள்.

    இவ்வாறு டுவிட்டர் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
    கரித்தூள் கூந்தல், சருமம் மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு தகுந்த பொருட்களை கொண்டுள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் நமது தொப்பையை விரைவில் குறைக்க கரித்தூள் பயன்படுகிறது.
    தேவையான பொருட்கள்

    செயலாக்கப்பட்ட கரித்தூள்  - 1 டேபிள் ஸ்பூன்
    லெமன் ஜூஸ்  - 1 டேபிள் ஸ்பூன்
    தேன் - 1 டீஸ்பூன்
    வெதுவெதுப்பான நீர்  - 1 டம்ளர்

    செய்முறை

    ஒரு கிளாஸ் டம்ளர் வெதுவெதுப்பான நீரில் செயலாக்கப்பட்ட கரித்தூள், தேன் மற்றும் லெமன் ஜூஸை தேவையான அளவு கலந்து கொள்ளவும்.

    நன்றாக கலக்க வேண்டும். இந்த ஜூஸை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

    இந்த முறையை தினமும் செய்தால் கண்டிப்பாக உங்கள் தொப்பையை குறைத்து விடலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ்வதற்கு சிறுநீரகங்களின் செயல்பாடுகள் சீராக இருக்க வேண்டியது அவசியமானது. சிறுநீரகங்கள் பாதிப்புக்குள்ளாவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவைகளை பற்றி பார்ப்போம்!
    இந்தியாவில் 8 பேரில் ஒருவருக்கு சிறுநீரகம் சார்ந்த பிரச்சினைகள் இருக்கக்கூடும் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ்வதற்கு சிறுநீரகங்களின் செயல்பாடுகள் சீராக இருக்க வேண்டியது அவசியமானது. சிறுநீரகங்கள் பாதிப்புக்குள்ளாவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவைகளை பற்றி பார்ப்போம்!

    ரத்த அழுத்தம் அதிகரிப்பது சிறுநீரகங்களுக்கு கேடு விளைவிக்கும். ரத்த அழுத்த அளவானது 140-க்கு அதிகமாகவும், 90-க்கு குறைவாகவும் இருப்பது சிறுநீரக செயலிழப்பதற்கு வழிவகுத்துவிடும். அதனால் ரத்த அழுத்த அளவை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியமானது.

    மதுப்பழக்கமும் சிறுநீரகங்களின் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. மதுப்பழக்கம் அதிகரிக்கும்போது சிறுநீரக செல்கள் சேதமடைய தொடங்கி பாதிப்பை அதிகப்படுத்திவிடும்.

    உடல் பருமன் பிரச்சினையும் சிறுநீரக செயலிழப்புக்கு காரணம். ரத்தத்தில் கொழுப்பின் அளவு கட்டுக்குள் இருப்பதும் இன்றியமையாதது. அதன் காரணமாக ரத்த நாளங்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கும், சீறுநீரகங்களுக்கு ரத்தம் சீராக செல்வதற்கும் வழிவகை ஏற்படும்.

    ரத்தத்தில் சர்க்கரையின் அளவும் கட்டுக்குள் இருக்க வேண்டும். அதன் அளவு அதிகரிக்கும்போது சிறுநீரக செல்கள் பாதிப்புக்குள்ளாகி சிறுநீரகம் சார்ந்த நோய்கள் ஏற்பட வழிவகுத்துவிடும்.

    உடலின் 70 சதவீதம் நீரால் சூழப்பட்டிருக்கிறது என்பதால் அதனை சமநிலையில் பராமரிப்பது அவசியம். தினமும் போதுமான அளவு தண்ணீர் பருக வேண்டும். அது சிறுநீரகங்கள் சீராக செயல்படுவதை உறுதி செய்யும்.

    உணவில் அதிக அளவு உப்பு சேர்ப்பதும் சிறுநீரகங்களை பாதிப்புக்குள்ளாக்கிவிடும். உப்பின் அளவு அதிகரிக்கும்போது ரத்த ஓட்டத்தில் பாதிப்பு நேரும். அது சிறுநீரகங்களை பாதிக்கும்.

    தினமும் உடற்பயிற்சி செய்து வருவது ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும். அது சிறுநீரகங்கள் சீராக செயல் படுவதற்கும் துணை புரியும்.
    தற்போதைய சூழ்நிலையில் குழந்தை வளர்ப்பு முறையில் அதிக கவனம் செலுத்துவது அத்தியாவசியமான ஒன்று. அப்படி செய்தால் மட்டுமே நாளைய சமுதாயத்தை சிறப்பானதாக உருவாக்க முடியும்.
    தற்போதுள்ள காலகட்டத்தில் பெற்றோர்களின் தலையாய கடமையாக கருதப்படுவது குழந்தை வளர்ப்பு முறை.

    நாம் வளர்ந்த காலகட்டத்தில் குழந்தை வளர்ப்பிற்கென்று தனிக்கவனம் செலுத்தப்படாதற்கு காரணம் நாம் கூட்டு குடும்ப அமைப்பில் வளர்ந்ததே. தாய் தந்தை தவிர நம்மை அரவணைக்க வீட்டில் மற்ற உறவினர்களும் இருந்ததால் அதற்கான அவசியம் எதுவும் ஏற்படவில்லை, ஆனால் தற்போது கூட்டுக்குடும்பங்கள் தனிக்குடும்பங்களாக மாறியிருக்கின்றன. அதிலும் தாய் தந்தை இருவரும் வேலைக்கு செல்வதாலும் ஒற்றை பெற்றோர்களின் நிலை பெருகி வருவதாலும், குழந்தை நிலை கேள்விக் குறியாகியுள்ளது. மேலும் தொழில்நுட்பத்தின் அபரிமித வளர்ச்சியால் குழந்தைகளை நாம் சரியான பாதையில் வழிநடத்த வேண்டிய கட்டாயமும் அதிகரித்துள்ளது.

    எனவே தற்போதைய சூழ்நிலையில் குழந்தை வளர்ப்பு முறையில் அதிக கவனம் செலுத்துவது அத்தியாவசியமான ஒன்று. அப்படி செய்தால் மட்டுமே நாளைய சமுதாயத்தை சிறப்பானதாக உருவாக்க முடியும்.

    அதனால் பெற்றோராக நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பதை தெளிவாக அவர்களிடம் பேசிவிடுவது சிறந்தது. மேலும் முந்தைய தலைமுறையில் இதை செய்யாதே என பெற்றோர் சொன்னால் அதை அப்படியே பின்பற்றி நடந்த குழந்தைகள் தான் அதிகம். ஆனால் இன்றைய தலைமுறையினருக்கு, காரணங்கள் தேவைப்படுகிறது.

    எனவே இதை செய்யாதே எனக்கூறாமல் இதை செய்தால் என்னென்ன விளைவுகளை சந்திக்க நேரிடும் எனக்காரணத்தோடு கூறினால் அவர்கள் அதை எளிதில் ஏற்றுக்கொள்வார்கள். தவறான குழந்தை வளர்ப்புமுறை ஒரு குடும்பத்தின் எதிர்காலத்தையே பாதிப்புக்குள்ளாக்கி விடும் என்றும் சொல்கிறார்.
    இரவு படுக்கும்போது பிரா அணியலாமா? வேண்டாமா என்பது அவரவர் விருப்பம் மற்றும் சௌகரியத்தைப் பொருத்தது. ஆனால் இரவில் தூங்கும் போது இறுக்கமான பிரா அணிந்தால் என்ன பிரச்சனைகள் வரும் என்று அறிந்து கொள்ளலாம்.
    தூங்கும்போது பிரா அணியலாமா என்னும் கேள்வி பல பெண்களிடம் இருக்கிறது. ஆனால் எதுவாயினும் அது அவர்களுடைய சௌகரியத்தைப் பொருத்தது என சிலர் கருத்துக்களை முன் வைப்பார்கள். அது அவரவர் விருப்பம் என்பதை விட அவ்வாறு செய்வதால் மருத்துவ ரீதியாக நல்லதா கெட்டதா என்னும் வாதமும் முன் வைக்கப்படுகிறது.

    உண்மையில் மருத்துவர்களின் வாய் வழியில் இரவு பிரா அணிவதால் மார்பகங்கள் தளர்வடைவதை தவிர்க்கலாம் என்கின்றனர். ஆனால் அலுவலகம் செல்லும் பெண்கள் நாள் முழுவதும் இறுக்கமான பிராவை அணிந்திருப்பதால் வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாக அதை கழட்டி எறிவதைதான் பெரிய ரிலீஃபாக நினைக்கின்றனர். எனவே அவர்கள் சௌகரியத்தைதான் பெரிதாக நினைக்கின்றனர்.

    பொதுவாக மார்பகங்கள் தளர்வடைதல் என்பது வயது செல்ல செல்ல இயற்கையாக நிகழக்கூடியது. அதை பிரா அணிவதால் தடுக்கமுடியாது. இருப்பினும் தளர்ந்து தொங்கும் மார்பகங்கள் பெண்களுக்கு சங்கடத்தையும், அசௌகரியத்தையும் கொடுக்கலாம். எனவே இதுபோன்ற பிராக்கள்தான் அவர்களுக்கான வரமாக உள்ளது. அதேபோல் பெரிய மார்பகங்கள் கொண்ட பெண்களுக்கும் பிரா அணிவது சௌகரியத்தை தரும். இரவு புரண்டு படுக்கும்போது அவை அதிக வலியை தரலாம். எனவே பிரா நல்ல சாய்ஸாக இருக்கும்.

    எதுவாயினும் உங்களுக்கு ஃபிட்டான , சரியான அளவிலான பிராக்களை அணியுங்கள். காட்டன் துணியால் ஆனா பிரா அணிவது காற்றோட்டமாக இருக்கும். இறுக்கமான பிரா அணிவது வேறு ஏதேனும் பக்கவிளைவுகளை உண்டாக்கலாம்.
    சுகாதாரத்தில் அக்கறை செலுத்தவில்லை என்றாலும் அல்லது ஒவ்வாமை காரணமாகவும் கழுத்தை சுற்றிலும் கருமை வரலாம். அப்படி வந்துவிட்டால் எப்படி நீக்குவது என்று பார்க்கலாம்.
    கற்றாழையில் சதையை மட்டும் தனியாக எடுத்து தினமும் முகத்தில் தேய்த்து மசாஜ் செய்து ஊற வையுங்கள். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் சரியாகும்.

    ஆப்பிள் சிடர் வினிகரில் பஞ்சை நனைத்து கழுத்தை சுற்றிலும் தடவி வர கருமை நீங்கும்.

    பாதாம் எண்ணெயை இரவு தூங்கும் முன் கழுத்தை சுற்றிலும் தேய்த்து மசாஜ் செய்துவிட்டு அப்படியே தூங்கிவிடுங்கள். மறுநாள் காலை சுடுதண்ணீரில் கழுவிவிடுங்கள். தொடர்ந்து செய்தால் பலன் கிடைக்கும்.

    தயிரை கழுத்தை சுற்றிலும் தடவிக்கொள்ளுங்கள். 20 நிமிடங்கள் கழித்து கழுவிவிடுங்கள். தினமும் செய்ய கருமை நீங்கும்.

    கருமை நிறத்தை நீக்குவதில் உருளைக்கிழங்கு சாறு ஆற்றல் மிக்கது. எனவே உருளைக்கிழங்கு சாறை கழுத்தை சுற்றிலும் தேய்த்து 20 நிமிடங்கள் ஊற வையுங்கள். பின் தண்ணீரில் கழுவிவிடுங்கள்.
    ×