search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சிறுநீரகங்களை கவனியுங்கள்
    X
    சிறுநீரகங்களை கவனியுங்கள்

    சிறுநீரகங்களை கவனியுங்கள்

    ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ்வதற்கு சிறுநீரகங்களின் செயல்பாடுகள் சீராக இருக்க வேண்டியது அவசியமானது. சிறுநீரகங்கள் பாதிப்புக்குள்ளாவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவைகளை பற்றி பார்ப்போம்!
    இந்தியாவில் 8 பேரில் ஒருவருக்கு சிறுநீரகம் சார்ந்த பிரச்சினைகள் இருக்கக்கூடும் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ்வதற்கு சிறுநீரகங்களின் செயல்பாடுகள் சீராக இருக்க வேண்டியது அவசியமானது. சிறுநீரகங்கள் பாதிப்புக்குள்ளாவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவைகளை பற்றி பார்ப்போம்!

    ரத்த அழுத்தம் அதிகரிப்பது சிறுநீரகங்களுக்கு கேடு விளைவிக்கும். ரத்த அழுத்த அளவானது 140-க்கு அதிகமாகவும், 90-க்கு குறைவாகவும் இருப்பது சிறுநீரக செயலிழப்பதற்கு வழிவகுத்துவிடும். அதனால் ரத்த அழுத்த அளவை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியமானது.

    மதுப்பழக்கமும் சிறுநீரகங்களின் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. மதுப்பழக்கம் அதிகரிக்கும்போது சிறுநீரக செல்கள் சேதமடைய தொடங்கி பாதிப்பை அதிகப்படுத்திவிடும்.

    உடல் பருமன் பிரச்சினையும் சிறுநீரக செயலிழப்புக்கு காரணம். ரத்தத்தில் கொழுப்பின் அளவு கட்டுக்குள் இருப்பதும் இன்றியமையாதது. அதன் காரணமாக ரத்த நாளங்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கும், சீறுநீரகங்களுக்கு ரத்தம் சீராக செல்வதற்கும் வழிவகை ஏற்படும்.

    ரத்தத்தில் சர்க்கரையின் அளவும் கட்டுக்குள் இருக்க வேண்டும். அதன் அளவு அதிகரிக்கும்போது சிறுநீரக செல்கள் பாதிப்புக்குள்ளாகி சிறுநீரகம் சார்ந்த நோய்கள் ஏற்பட வழிவகுத்துவிடும்.

    உடலின் 70 சதவீதம் நீரால் சூழப்பட்டிருக்கிறது என்பதால் அதனை சமநிலையில் பராமரிப்பது அவசியம். தினமும் போதுமான அளவு தண்ணீர் பருக வேண்டும். அது சிறுநீரகங்கள் சீராக செயல்படுவதை உறுதி செய்யும்.

    உணவில் அதிக அளவு உப்பு சேர்ப்பதும் சிறுநீரகங்களை பாதிப்புக்குள்ளாக்கிவிடும். உப்பின் அளவு அதிகரிக்கும்போது ரத்த ஓட்டத்தில் பாதிப்பு நேரும். அது சிறுநீரகங்களை பாதிக்கும்.

    தினமும் உடற்பயிற்சி செய்து வருவது ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும். அது சிறுநீரகங்கள் சீராக செயல் படுவதற்கும் துணை புரியும்.
    Next Story
    ×