search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    நகங்கள் உடையாமல் அழகாக இருக்க கொஞ்சம் அக்கறை எடுத்தால் போதும்
    X
    நகங்கள் உடையாமல் அழகாக இருக்க கொஞ்சம் அக்கறை எடுத்தால் போதும்

    நகங்கள் உடையாமல் அழகாக இருக்க கொஞ்சம் அக்கறை எடுத்தால் போதும்

    நகங்களை பராமரிக்க கால்சியம் சத்துள்ள உணவுகள் உண்பது மிக அவசியம். நகங்களை எளிய முறையில் பராமரிப்பதும், பாதுகாப்பதும் எப்படி என்று அறிந்து கொள்ளலாம்.
    நகங்களைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமானது. ஆனால், பலர் நகங்களைக் கடிக்கிறார்கள்; கடினமான டிடர்ஜென்ட்களைப் பயன்படுத்துவதால் நகங்கள் சேதமடைகின்றன; கடினமானவற்றை உரிப்பது, திறப்பது என நகங்களை உடைத்துக்கொள்கிறார்கள். இவற்றுடன், நகங்களின் வேரும் பாதிப்படைந்துகொண்டே வரும். நகங்கள் வளராமல் இருப்பதற்கு அதுதான் காரணம். நகங்களுடைய ரூட் வலிமையிழந்துவிட்டால் நகங்கள் வளராது.

    நகங்களை வெட்டும் முன் அவற்றின் மேல் கொஞ்சம் எண்ணெய் தடவி கொண்டால் சுலபமாக வெட்டலாம்.

    நல்லெண்ணெய்யை சூடுபடுத்தி மசாஜ் செய்தால் நகங்கள் பளபளப்பாக இருக்கும்.

    இளஞ்சூடான தண்ணீரில் துளசி, புதினா மற்றும் வேப்ப இலையை போட்டு நகங்கள் மூழ்குமாறு -10-15 நிமிடங்கள் வைத்தால் கிருமிகள் அழிந்து நகம் சுத்தமாகும்.

    ஆரஞ்சுப்பழத்தோலை காயவைத்து பொடியாக்கி கொஞ்சம் உப்பு சேர்த்து எண்ணெயில் குழைத்து நகங்களில் தடவி வந்தால் பளபளப்பு கூடும்.

    மிதமான சூடுள்ள பாலில் பஞ்சை நனைத்து நகத்தை சுத்தப்படுத்தினால் பளபளவென்று இருக்கும்.

    நகங்களை பராமரிக்க கால்சியம் சத்துள்ள உணவுகள் உண்பது மிக அவசியம்.

    எலுமிச்சைச்சாறு சிறிதளவு எடுத்து நகங்களில் அப்ளை செய்ய வேண்டும். தொடர்ந்து அப்படிச் செய்துவர நகங்கள் வலிமை பெறும். எலுமிச்சையில் உள்ள கால்சியம் மற்றும் வைட்டமின் சி  நகங்களின் ஆரோக்கியத்துக்கு உதவும்.

    ஆயில் மசாஜ் நகங்களுக்கு மிகவும் நல்லது. ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயிலை எடுத்து லேசாகச் சூடுபடுத்திக்கொள்ள வேண்டும். அதை ஒவ்வொரு நகத்தின் வேர்ப் பகுதியிலும் விட்டு மசாஜ் பண்ண வேண்டும். ஒவ்வொரு விரலுக்கும் இருபது விநாடிகள் மசாஜ் கொடுத்தால் போதும். மசாஜ் செய்துவிட்டு அரை மணி நேரம் கழித்துக் கைகளைக்கழுவிக் கொள்ளவும். இதனால் நகங்கள் ஆரோக்கியமாக வளர்வதுடன் நகங்களைச் சுற்றியுள்ள க்யூட்டிகிள் பிளவுபடாமல் ஆரோக்கியமாக இருக்கும். நகங்கள் மஞ்சள் நிறத்தில் மாறாமலும் இருக்கும்.
    Next Story
    ×