என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    திருமண வாழ்க்கை சளிப்படையாமல் இருக்க தாம்பத்திய வாழ்க்கையும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த தாம்பத்திய வாழ்க்கை என்பது உறவில் பெரிய தாக்கத்தை உண்டாக்குகிறது.
    எந்த உறவாக இருந்தாலும் நெருக்கம் அதிகரித்தால்தான் அந்த உறவின் பலம் அதிகரிக்கும். நெருக்கம் தான் அவர்களை வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும். அதற்கு தாம்பத்திய வாழ்க்கை மிகவும் அவசியம்.

    திருமண வாழ்க்கை சளிப்படையாமல் இருக்க தாம்பத்திய வாழ்க்கையும் முக்கிய பங்கு வகிக்கிறது. அதுதான் அந்த உறவை ஆயுள் முழுவதும் நீட்டிக்கச் செய்கிறது. இந்த தாம்பத்திய வாழ்க்கை என்பது உறவில் பெரிய தாக்கத்தை உண்டாக்குகிறது.

    இருவரும் இணைந்து வாழும் வாழ்க்கையில் எத்தனை கவலைகள், சண்டைகள், நெருக்கடிகள் வந்தாலும் அவற்றிலிருந்து கொஞ்சம் ஓய்வு கிடைக்கிறது, மன நிம்மதி கிடைக்கிறது எனில் அதற்கு இருவரின் இணைப்புத்தான் முக்கிய காரணம். அவர்களின் மன அழுத்ததைக் குறைக்க செக்ஸ் சிறந்த மருந்தாகவும் இருக்கிறது. தம்பதிகளுக்கு இது சிறந்த பலன். ஸ்ட்ரெஸ் பஸ்டர்.

    இந்த தாம்பத்திய வாழ்க்கை என்பது வெறும் உடலளவில் மட்டும் நெருக்கத்தை உண்டாக்காது. மனதளவிலும் உணர்வுப் பூர்வமான நெருக்கத்தை உண்டாக்கும். இந்த உணர்வுப் பூர்வமான காதலை உருவாக்க செக்ஸுக்கு நிகர் எதுவும் இருக்க முடியாது.

    பல தகாத உறவுகளுக்கு தாம்பத்திய வாழ்க்கை சிறப்பாக இல்லாததும் காரணமாக இருக்கின்றன. எனவே திருமண வாழ்க்கையில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டை உடைக்காமல் பார்த்துக்கொள்வதும் இந்த தாம்பத்திய வாழ்க்கைதான். இருவருக்குள் இந்த உறவு ஸ்ட்ராங்காக இருந்தால் அவர்களுக்கு மற்றொருவர் மீது ஈர்ப்பு உண்டாகாது.

    நீங்கள் துணை மீது எவ்வளவு அன்பு வைத்துள்ளீர்கள் என்பதைக் காட்ட உடலுறவும் நல்ல வாய்ப்பு. அவர்கள் மீது நீங்கள் கொண்டுள்ள அக்கறை, காதல் அனைத்தையும் அதன் மூலம் வெளிப்படுத்த முடியும். எனவேதான் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க தாம்பத்தியம் அவசியம் என்கின்றனர்
    ரோஸ் வாட்டர் டோனரை முகத்தில் ஒரு முறை ஸ்பிரே செய்தால் போதும் வெயிலுக்கு புத்துணர்வை அளிக்கும். ரோஸ் வாட்டர் டோனரை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
    ரோஸ் வாட்டர் டோனரை முகத்தில் ஒரு முறை ஸ்பிரே செய்தால் போதும் வெயிலுக்கு புத்துணர்வை அளிக்கும். ரோஸ் வாட்டர் டோனரை வீட்டிலேயே தயாரிப்பது அத்தனை சிரமம் இல்லை. எளிதாக எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.

    ஒரு பவுல் நிறைய ரோஜா இதழ்களை எடுத்துக்கொள்ளுங்கள்.

    அதை ஒரு பாத்திரத்தில் பவுல் அளவு தண்ணீர் ஊற்றி , ரோஜா இதழ்களையும் சேர்த்து நன்குக் கொதிக்க விடுங்கள்.

    10 நிமிடங்கள் கொதித்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள். தற்போது பார்த்தால் தெரியும் ரோஜாவின் நிறம் வெளிர்ந்து அதன் நிறங்கள் தண்ணீரில் கரைந்திருக்கும்.

    அதை அப்படியே சூடு ஆற காற்றோட்டமாக வையுங்கள். சூடு தணிந்ததும் ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி முகத்தில் ஸ்பிரே செய்து பயன்படுத்துங்கள்.

    இதனால் முகத்திற்கு ஈரப்பதம், பருக்கள் இன்மை, கருமையின்மை, எண்ணெய் இல்லா சருமம் என பல நன்மைகளைப் பெறலாம்.
    தினமும் சாலட் சாப்பிடுவது ஒரு நல்ல உணவு பழக்கவழக்கமாக கருதப்படுகின்றது. எனவே இன்று முளைக்கட்டிய பயறு சேர்த்து சத்தான சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    முளை கட்டிய பச்சை பயறு - 1 கப்
    காய்ந்த மாங்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
    மிளகு துாள், சீரக தூள் - தலா 1/2 டீஸ்பூன்
    நறுக்கிய கொத்தமல்லிதழை - சிறிது
    துருவிய கேரட் - 2 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவைக்கு

    செய்முறை

    பச்சை பயிறை முதல் நாள் இரவு ஊறவைக்கவும். மறுநாள் நன்றாக வடித்து அதை ஹாட் பேக்கிலோ அல்லது துணியில் கட்டியோ ஒரு நாள் வைக்கவும். மறுநாள் பயறு நன்றாக முளைத்திருக்கும்.

    முளைகட்டிய பச்சை பயறை, இரு நிமிடம் ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

    அதோடு, துருவிய கேரட், சீரகம், மிளகு துாள், மாங்காய் துாள், கொத்தமல்லித்தழை, உப்பு கலந்து பரிமாறவும்.

    சூப்பரான முளை கட்டிய பச்சை பயறு சாலட் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மொழிப் பாடங்களுக்கு சமீபகாலமாக வரவேற்பு அதிகரித்திருக்கிறது. அத்தகைய மொழிப்பாடங்களிலும், இலக்கியப்பட்டப் படிப்புகளிலும் உள்ளடங்கியிருக்கும் சாராம்சங்களை விரிவாக அலசலாம்.
    தமிழ், ஆங்கிலம், இந்தி, அரபு, பிரெஞ்சு போன்ற மொழிப் பாடங்களுக்கு சமீபகாலமாக வரவேற்பு அதிகரித்திருக்கிறது. அத்தகைய மொழிப்பாடங்களிலும், இலக்கியப்பட்டப் படிப்புகளிலும் உள்ளடங்கியிருக்கும் சாராம்சங்களை விரிவாக அலசலாம்.

    ஆசிரியர் துறையில் மொழிப்பாடம் படித்தவர்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. அதிலும், முன்னுரிமைக்காகக் காத்திருக்காது, தகுதித் தேர்வை எழுதித் தனக்கான அரசுப் பணியை உறுதி செய்துகொள்ளும் இளம்வயதினர் அதிகரித்துள்ளனர். அரசுப் பணி மட்டுமல்ல, தனியார் துறையிலும் அதற்கு நிகரான ஊதியம் கிடைக்கும் என்பதால் மொழி, கலைப் படிப்புகளில் தகுதியை வளர்த்துக்கொள்ளலாம்.

    ஆசிரியர் துறைக்கு நிகராக வேலை வாய்ப்புகள் கொண்டது ஊடகத் துறை. அச்சு, காட்சி, பண்பலை வானொலி, இணையம், விளம்பரத்துறை என பரந்து விரிந்திருக்கும் ஊடகத் துறையின் மீது ஆர்வமும், திறமையும் உள்ளவர்களுக்கு மென் பொருள் நிறுவனப் பணியாளர்களுக்கு இணையான ஊதிய வாய்ப்புகள் பொதிந்திருக்கின்றன.

    அடிப்படையான பட்டப்படிப்புடன், மின் பதிப்புத் துறைக்கான கணினி சார்ந்த குறுகிய காலப் படிப்புகளை கூடுதலாக மேற்கொண்டால் ஊடகத்துறைக்குள் தடம் பதிப்பதற்கான தகுதிகளை வளர்த்துக்கொள்ளலாம். படைப்புகளை எழுத, சரிபார்க்க, பிழை திருத்த, செய்திகளைச் சேகரிக்க, தொகுத்து வழங்க... என காட்சி ஊடகங்களில் திரைக்கு முன்னேயும், பின்னேயும் வேலைவாய்ப்புகள் அதிகமுண்டு.

    உலகம் திறந்த சந்தையான பிறகு மொழி பெயர்ப் பாளர்களுக்கு அதிகமான தேவை ஏற்பட்டுள்ளது. எழுத்து சார்ந்து மட்டுமல்ல, தொலைக்காட்சி, திரைத்துறை எனப் படைப்பு சார்ந்த அனைத்து வகையிலும் மொழிபெயர்ப்பாளர்கள் கோலோச்சுகிறார்கள். இதற்கு இரண்டு மொழிகளில் புலமை அவசியம். இந்த வரிசையில் ஒப்பிலக்கியத் துறையிலும் வேலை வாய்ப்புகள் உண்டு.

    பி.ஏ. பட்டப் படிப்போடு முதுநிலை மற்றும் ஆராய்ச்சி சார்ந்த படிப்புகளில் திறமையை மெருக்கேற்றிக்கொள்பவர்களுக்கு அதற்கேற்ற தரமான வேலைவாய்ப்புகள் வாய்க்கும். முதுநிலையிலும் இதே மொழி அல்லது இலக்கியத்தைப் பாடமாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது அவசியமில்லை. கல்வெட்டியியல், சுவடியியல், நாட்டுப்புறவியல், மகளிரியல், இதழியல்... எனத் தளங்களை மாற்றிக்கொள்ளலாம்.

    குடிமைப்பணி மற்றும் இதர போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வதற்கும் மற்ற பட்டப்படிப்புகளோடு மொழி பட்டங்களை தேர்வு செய்வது சிறப்பு. குடிமைத் தேர்வில் விருப்ப பாடமாக தாய்மொழியைத் தேர்வு செய்துகொள்ளலாம் என்பதால், இதர பட்டம் முடிப்பவர்களும் தமிழை விரும்பி தேர்ந்தெடுத்துக்கொள்கிறார்கள். இந்த வகையில் தமிழைப் பாடமாகப் படித்தால் தேர்வு மேலும் சுலபமாகும். அதுபோலவே அரசுப் பணியாளர் போட்டித் தேர்வுகள் மற்றும் ரெயில்வே, வங்கித்துறை போட்டித்தேர்வுகளிலும் இவர்கள் தங்கள் திறமையை நிரூபித்து சிறப்பான எதிர்காலத்தைத் தீர்மானித்துக்கொள்ளலாம்.

    பி.ஏ. ஆங்கிலம் படித்தவர்கள் பி.பி.ஓ., கே.பி.ஓ. போன்ற அவுட்சோர்ஸிங் துறைகளிலும், மார்க்கெட்டிங் துறைகளிலும் மிளிருகிறார்கள். டெக்னிக்கல் ரைட்டிங் எனப்படும் நுகர்வோர் உபயோகப் பொருட்களின் விவரக்குறிப்புகளை எழுதுவது, இணைய தளங்களை வடிவமைப்பது போன்றவற்றில் அத்துறை வல்லுநர்களுக்கு இணையாக ஆங்கில மொழிபெயர்ப்பாளர்கள் தேவைப் படுகிறார்கள். அதிலும் மின்பதிப்புத் துறையில் ‘டிஜிட்டல் காப்பி ரைட்டர்’ பணிக்கு அதிகத் தேவை நிலவுகிறது.

    கலை அறிவியல் கல்லூரிகளுக்கு நிகராகப் பெருகி வரும் பொறியியல் கல்லூரிகளின் பாடத்திட்டம் ஆங்கிலத்தை சார்ந்திருப்பதால் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரிகளில் விரிவுரையாளராகவும் பணிபெறலாம்.

    வெளிநாடுகளுக்குப் படிக்க செல்லும் மாணவர்களுக்கான ஐ.ஈ.எல்.டி.எஸ். மற்றும் டி.ஓ.எப்.ஈ.எல். மையங் களின் தேவை அதிகமாக உள்ளது. ஆங்கிலப் பட்டம் முடித்தவர்கள் கூடுதலாக இதற்கென தனியாக பயிற்சியை முடித்தோ அதற்கான மையங்களின் அங்கீகாரம் பெற்ற கிளை பயிற்சி மையங்களை தொடங்கியோ சொந்தக்காலில் நிற்கலாம். கல்வி மற்றும் வேலைவாய்ப்புத்துறை தொடர்பான வழிகாட்டுதல் மையங்களை தொடங்கலாம். இதற்கு அத்துறை சார்ந்த நிறுவனத்தில் சில காலம் பணிபுரிந்த அனுபவமே கைகொடுக்கும்.

    இது தவிர, ஆங்கிலத்தில் சிறப்பாக பேச, எழுத தெரிவது என்பது பரவலான வேலை வாய்ப்புச்சந்தை. ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொள்பவர்கள் மற்றும் பணியில் இருப்பவர்கள் தங்களது ஆய்வறிக்கை அல்லது தொழில்சார் அறிக்கைகளை வடிவமைக்கும்போது மொழிசார் வல்லு நரின் உதவி அதிகமாகத் தேவைப்படும். வீட்டிலிருந்தபடி யும், வேறு பணியிலிருந்தபடியே பகுதி நேரமாகவும் சம்பாதிப்பவர்கள் அதிகரித்துள்ளனர். இது தவிர, இல்லத்தரசியாக இருந்தோ, பகுதி நேரப் பணியாகவோ இணையம் வாயிலாக ஆசிரியராக பணியாற்றி கணிசமாகச் சம்பாதிப்பவர்கள் நகர் பகுதிகளில் அதிகரித்திருக் கிறார்கள். அரசு மற்றும் தனியார் துறையில் மக்கள் தொடர்புத்துறை பணிகள், கொள்கை விளக்கங்கள், பிரசாரங்கள், பிரசுரங்களை உருவாக்குவது போன்ற வற்றிலும் கணிசமான வேலை வாய்ப்புகள் உண்டு. தற்போது முதுநிலை படிப்பாக சட்டம், மனிதவளத் துறை, மேலாண்மைத் துறை படிப்புகளை மேற்கொள்வதும் பரவலாகிவருகிறது.
    வீட்டுக் கடன் என்பது நிலையான பிணையம் என்ற ஆதாரத்தை கொண்டுள்ளதால் வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் அதற்கு முன்னுரிமை அளிக்கின்றன.
    கொரோனா பொது முடக்கத்திற்கு பிறகு தற்போது மெதுவாக ஏற்பட்டு வரும் பொருளாதார மீட்சி என்பது ரியல் எஸ்டேட் துறையில் அதிகமாக பிரதிபலிக்கும் என்று நிதி வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதற்கு ஏற்ற வகையில் தேசிய வங்கிகள் வீட்டுக் கடன் வட்டி விகிதங்களை கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைத்து அறிவித்து இருக்கின்றன. மேலும், வீட்டுக் கடன்களுக்கு வசூலிக்கப்படும் செயலாக்க கட்டணத்தை (Processing Fees) முற்றிலும் தள்ளுபடி செய்வது பற்றியும் பல்வேறு வங்கிகளும், வீட்டுக் கடன் நிதி வசதி நிறுவனங்களும் ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் தெரிய வந்துள்ளன.

    பொதுத்துறை வங்கிகள் மற்றும் வீட்டுவசதி நிதி நிறுவனங்கள் ஆகியவை தற்போது வீட்டுக் கடன் வாங்கும் வாடிக்கையாளர்கள் பக்கம் திரும்பியுள்ளன. வீட்டுக் கடன் என்பது நிலையான பிணையம் என்ற ஆதாரத்தை கொண்டுள்ளதால் வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் அதற்கு முன்னுரிமை அளிக்கின்றன. மேலும் மாதாந்திர சம்பளதாரர்கள் மற்றும் சுயதொழில் செய்வோர் ஆகியோருக்கு வீட்டுக் கடன் பெறுவதில் பெரிய சிக்கல்கள் இருப்பதில்லை. சில வங்கிகள் வட்டி விகிதங்களை நடப்பு காலாண்டில் குறைத்து அறிவித்து இருப்பதுடன், வீட்டுக் கடன் விண்ணப்பம் செய்தவர்களுடைய கிரெடிட் புள்ளிகள் மற்றும் லோன் டூ வேல்யூ (Loan to Value) ஆகியவற்றை குறைக்கப்பட்ட வட்டி விகிதங்களை இணைத்து கணக்கிடுகின்றன.

    வீட்டுக் கடன் பெறுவதற்கான நடைமுறைகள் தற்போது எளிமையாக மாற்றப்பட்டு இருப்பதால் வீடு மற்றும் மனை வாங்குவோர் தங்களுடைய கனவை நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கடன் பெற விரும்புபவர்கள் வங்கிகள் அளிக்கக்கூடிய சலுகைகளை பெற வேண்டும் என்றால் அவர்களுடைய சிபில் ரேட் என்ற கணக்கீட்டை சரியான அளவில் இருக்கும்படி கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது முன்னதாக வாங்கிய கடனுக்கான மாதாந்திர தவணைகளை சரியான காலகட்டத்தில் திருப்பி செலுத்தி இருக்க வேண்டும். மேலும் அவர்களுடைய கடன் திருப்பிச் செலுத்தக்கூடிய தகுதிக்கு உட்பட்ட அளவிலேயே கடன்களை பெற்றிருக்க வேண்டும்.

    வங்கிக் கடன் பெற்று சொந்த வீடு வாங்க திட்டமிட்டுள்ளவர்கள் கடனுக்கான மொத்த பட்ஜெட், கையில் உள்ள பணம் மற்றும் தங்களுடைய மாதத் தவணை செலுத்தக்கூடிய திறம் ஆகியவற்றை கச்சிதமாக கணக்கிட்டு சொந்த வீடு, மனை என்ற இலக்கை அடையலாம் என்றும் பரிந்துரை செய்துள்ளனர்.

    பெண்கள் வீட்டுக் கடன் பெறும் பொழுது வங்கிகள் அவர்களுக்கு பல்வேறு சிறப்பு சலுகைகளை அளிக்கின்றன. அதுமட்டுமல்லாமல் பெண்களை இணை கடன்தாரராக கொண்டு பெறக்கூடிய வீட்டுக் கடன்களுக்கும் பல்வேறு சலுகைகள் அளிக்கப்படுகின்றன. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஒரு முன்னணி வங்கி பெண்களுக்கான வட்டி விகிதத்தில் சிறப்பு சலுகையை அறிவித்து இருக்கிறது. சொந்த வீடு வாங்க திட்டமிட்டுள்ள பெண்களுக்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கக் கூடும்.
    பெண்கள் எப்போதுமே தங்களின் பிறப்புறுப்பை சுத்தமாகவும், துர்நாற்றமின்றியும் வைத்துக் கொள்ளாவிட்டால் அவ்விடத்தில் துர்நாற்றம் மட்டுமின்றி, தொற்றுகளும் ஏற்பட்டு தீவிரமான பிரச்சனையை சந்திக்கக் கூடும்.
    ஒவ்வொரு பெண்ணுக்கும் சுத்தமாக இருப்பது தான் பிடிக்கும். அப்படி சுத்தம் என்று வரும் போது அதில் அனைத்து உறுப்புகளும் அடங்கும். மேலும் பெண்கள் எப்போதுமே தங்களின் பிறப்புறுப்பை சுத்தமாகவும், துர்நாற்றமின்றியும் வைத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், அவ்விடத்தில் துர்நாற்றம் மட்டுமின்றி, தொற்றுகளும் ஏற்பட்டு தீவிரமான பிரச்சனையை சந்திக்கக் கூடும்.

    குறிப்பாக பெண்கள் உறவில் ஈடுபடும் போது தன் துணை முகம் சுளிக்காதவாறு தன் மீது எந்த ஒரு துர்நாற்றமும் வரக் கூடாது என்று அதிக சுத்தத்தைப் பின் பற்றுவார்கள். இப்படி பிறப்புறுப்பை சுத்தமாகவும், துர்நாற்றமின்றியும் வைத்துக் கொள்ள நிறைய பொருட்கள் கடைகளில் விற்கப்பட்டாலும், அவை சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.

    ஆகவே எந்த ஒரு பக்க விளையும் ஏற்படாமல் இருக்க, பிறப்புறுப்பை சுத்தமாக வைத்துக் கொள்ள என்ன வழி உள்ளது என்று ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். எலுமிச்சை மிகவும் சிறப்பான துர்நாற்றத்தைப் போக்க உதவும் பொருள். அத்தகைய எலுமிச்சையின் இலையைப் பயன்படுத்தி பிறப்புறுப்பை சுத்தம் செய்தால், துர்நாற்றம் வீசுவது நீங்கும். ஏனெனில் எலுமிச்சையின் இலையில் லிமோனின் என்னும் பொருள், பிறப்புறுப்பில் எவ்வித தொற்றுகளும் வராதவாறு நல்ல சிறப்பான பாதுகாப்பை வழங்கும். மேலும் எலுமிச்சையின் இலை பிறப்புறுப்பில் pH-ன் அளவை சீராக பராமரித்து, பிறப்புறுப்பை ஆரோக்கியமாகவும் சுத்தமாகவும் பராமரிக்கும்.

    ஆப்பிள் சீடர் வினிகரை பெரிய டப்பில் உள்ள குளிக்கும் நீரில் சிறிது கலந்து, அந்த நீரில் 15 நிமிடம் உட்கார வேண்டும். இதனால் ஆப்பிள் சீடர் வினிகர் பிறப்புறுப்பை சுத்தம் செய்து விடும். அதிலும் ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள அசிடிக் பிறப்புறுப்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். கற்றாழையின் ஜெல்லை எடுத்து, அதனை 1 கப் நீரில் கலந்து, பின் அந்த நீரைக் கொண்டு பிறப்புறுப்பை கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், பிறப்புறுப்பில் இருந்து துர்நாற்றம் வீசுவது நீங்கும்.

    பேக்கிங் சோடாவும் பிறப்புறுப்பில் இருந்து வீசும் துர்நாற்றத்தைப் போக்கும். அதற்கு குளிக்கும் டப்பில் உள்ள நீரில் 1/2 கப் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து, அந்த நீரில் 20 நிமிடம் உட்கார்ந்து வந்தால், பேக்கிங் சோடா உடலின் pH அளவை சீராக்கி, உடலில் இருந்து துர்நாற்றம் வீசுவது நீங்கும். தினமும் தயிரை பிறப்புறுப்பில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் பிறப்புறுப்பில் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு குறைவதோடு. துர்நாற்றமும் குறையும்.

    நெல்லிக் காய் சாற்றினை நீரில் கலந்து, அதனைக் கொண்டு பிறப்புறுப்பைக் கழுவ வேண்டும். இப்படி தினமும் ஒருமுறை செய்து வந்தால், துர்நாற்றம் வீசுவதைத் தடுக்கலாம், வெந்தயம் பெண்களுக்கு மிகவும் நல்லது. இந்த வெந்தயத்தை தினமும் சாப்பிட்டு வந்தாலோ அல்லது வெந்தயத்தை ஊற வைத்த நீரைக் கொண்டு பிறப்புறுப்பைக் கழுவினாலோ, துர்நாற்றம் போய் விடும்.
    சரும பிரச்சனை முதல் மூல நோய் பிரச்சனை வரை அனைத்திற்கும் தீர்வை அளிக்கும் நட்சத்திர பழத்தில் உள்ள மருத்துவக்குணங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.
    நட்சத்திர வடிவத்தில் இந்த பழம் இருப்பதால் இதனை நட்சத்திரப் பழம் என்று அழைக்கிறோம். இந்த பழம் மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் காணப்படும். இனிப்பும் புளிப்பும் கலந்த சுவை கொண்டது. இதில் அதிக அளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது.

    இதனை சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கசடுகள் வெளியேறும். தாய்மார்களுக்கு ஒரு வரப்பிரசாதம் இந்த பழம். பால் சுரப்பதற்கான ஹார்மோனை தூண்டி தாய்ப்பாலை நன்கு சுரக்கச் செய்கின்றது.

    அஜீரண கோளாறு வாயுவின் சீற்றம் அதிகமாக இருக்கும்போது மூலநோய் உண்டாகிறது. இந்த மூல நோயின் பாதிப்பிலிருந்து விடுபட இந்த நட்சத்திர பழத்தை இரவு சாப்பிட்டு வந்தால் மூல நோய் குணமாகும்.

    மழைக்காலத்தில் உள்ள சரும பிரச்சனைகளுக்கு இந்த பழம் சிறந்த தீர்வினை அளிக்கின்றது. இப்பழம் உண்ணும்போது சருமமானது நீர் சுத்தத்துடன் சுருக்கங்கள், பருக்களின்றி பளபளப்பாக இருக்கும்.

    தாது உப்புகள், நரம்புகள் மற்றும் தசைகளின் செயல்பாடுகளை சீராக்கி வலுப்படுத்த இந்த பழம் பயன்படுகிறது. எடையைக் குறைப்பவர்களுக்கு இந்தப் பழம் நல்ல பலனைத் தருகின்றது. நட்சத்திர பழம் கிடைக்கும் காலங்களில் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இந்த பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருவதால் ரத்த ஓட்டமும் சீராகும்.
    பெண்கள் விரும்பும் சாதாரண விஷயங்களைக்கூட ஆண்கள் புறக்கணிக்கும் போது அவர்கள் வெறுப்படைகின்றனர். ஆண்களே..., இந்த விஷயங்களை சரி செய்து விட்டால் போதும், பெண்கள் உற்சாகமாக இருப்பார்கள்!
    பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன? இந்த கேள்விக்கு பதில் தெரியாமல், ஆண்கள் எல்லாரும் பெண்களை ஒதுக்கித் தள்ளுகின்றனர். பெண்கள் மிகவும் சாதாரண விஷயங்களைத்தான் விரும்புகின்றனர். அதை ஆண்கள் நிறைவேற்றாமலோ அல்லது புறக்கணிப்பதாலோ தான் பெண்கள் வெறுப்படைகின்றனர். ஆண்களே...வெறும் 25 விஷயங்களை சரி செய்து விட்டால் போதும், பெண்கள் உற்சாகமாக இருப்பார்கள்!

    1. உங்கள் அம்மா போல் யாராலும் சமைக்க முடியாதுதான். ஆனாலும், மனைவியின் சமையலை ஆகா, ஓகோ என பாராட்ட வேண்டும். அவர்களும் நன்றாக சமையலை கற்றுக் கொள்ள கொஞ்சம் நாட்கள் ஆகும் அல்லவா?

    2. வாய் பேச முடியாத வேலைக்காரி போல மனைவி இருக்க வேண்டும் என ஆசைப்படக் கூடாது. சினிமாவில் தான் அப்படிப்பட்ட கதாபாத்திரத்தை எதிர்பார்க்க முடியும். உண்மையான வாழ்க்கையில் மனைவியையும் சரி சமமாக நடத்த வேண்டும்.

    3. சிறந்த ஆண் மகனாக, எல்லாராலும் பாராட்டப்படக் கூடியவராக இருக்க வேண்டும். திறமையை வெளிப்படுத்துபவராக இருக்க வேண்டும்.

    4. காலையில் வேலைக்குச் செல்லும் போது, கண்ணாடி எங்கே, சாவி எங்கே என்றெல்லாம் கேட்டு, தொந்தரவு செய்யக் கூடாது. பொறுப்பாக அவர்களும் நடந்து கொள்ள வேண்டும்.

    5. விடுமுறை நாட்களில் விரும்பிய படி ஓய்வு எடுக்க அனுமதிக்க வேண்டும். அன்றும் விசேஷமாக சமையல் செய்ய வேண்டும் என வற்புறுத்தக் கூடாது.

    6. எல்லாவற்றையும் அவசர, அவசரமாக செய்ய வேண்டும் என தொந்தரவு செய்யக் கூடாது

    7. சமையல் அறையில் மனைவிக்கு கணவரும் உதவ வேண்டும்.

    8. இந்த டிரஸ் உனக்கு நன்றாக இருக்கிறது என பாராட்ட வேண்டும்

    9. கணவன் கார் ஓட்டும் போது மனைவியோ, மனைவி கார் ஓட்டும் போது கணவனோ பின் சீட்டில் உட்காரக் கூடாது.

    10. குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்றால் மனைவியை திட்டக் கூடாது. குழந்தையை பராரமரிக்கும் பொறுப்பு இருவருக்கும் உண்டு.

    11. தினமும் ஒருமுறையாவது இரண்டு பேரும் சேர்ந்து விவாதித்து, நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

    12. வருமானம் முழுவதும் கணவனிடமே இருந்தால், மனைவியை மற்றவர்கள் மதிக்க மாட்டார்கள் என்பதை ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    13. படுக்கை அறையில் போர் அடிக்கும் வகையில் கணவர் நடந்து கொள்ளக் கூடாது.

    14. பெண்களை மகிழ்விக்கும் வகையில் திடீரென சிறு சிறு பரிசுகளை கொடுத்தாலே போதும்.

    15. அவ்வப்போது குடும்பத்துடன் சுற்றுலா செல்ல வேண்டும். திருப்தியான, கை நிறைய சம்பாதிக்கும் வேலை வேண்டும்.

    16. பெண்களுக்கு தலை வலி தருவதே, டிரசுக்கு ஏற்ற செருப்பு முதல் ஜாக்கெட் வரை எதுவும் கிடைக்காதது தான். அதை சரி செய்ய உதவ வேண்டும்.

    17. சனிக்கிழமை இரவு உறவினர்களுடன் விருந்துக்கு செல்வது, சினிமா செல்வது என பொழுதை போக்க வேண்டும். 'வேலை இருக்கிறது, டிவியை பார்த்துக் கொண்டு தூங்கு' என கணவர்கள் சொல்லக் கூடாது.
    வெயில் காலத்தில் உடல் சூட்டால் அவதிப்படுபவர்கள் சப்ஜா விதையை உணவில் சேர்த்து கொள்ளலாம். இன்று தர்பூசணி, சப்ஜா விதை சேர்த்து ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தர்பூசணி - 150 கிராம்,
    சப்ஜா விதை - 1 டீஸ்பூன்,
    எலுமிச்சைச்சாறு - 1/2 டீஸ்பூன்,
    தேன் - தேவைக்கு,
    புதினா இலை - சிறிது.

    செய்முறை :

    தர்பூசணியை தோல் விதை நீக்கி அரைத்துக் கொள்ளவும்.

    சப்ஜா விதையை தண்ணீர் ஊற்றி 8 மணி நேரம் ஊற வைக்கவும்.

    தர்பூசணி ஜூஸ், ஊறிய சப்ஜா விதை, தேன், எலுமிச்சைச்சாறு, புதினா இலை கலந்து ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து ஜில்லென்று பரிமாறவும்.

    குளுகுளு தர்பூசணி சப்ஜா ஜூஸ் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பெண்கள் அதிகம் விரும்புவது கூந்தல் அடர்த்தியாக, உதிராமல் இருக்க வேண்டும் என்பதுதான். பெண்கள் கூந்தலை பாதுகாக்கவும், அழகைப் பேணவும் சில ஆலோசனைகள்.
    கூந்தல் பளபளப்புடன் இருக்க வாரம் ஒரு முறை ஆலிவ் எண்ணெயைக் கொதிக்க வைத்துத் தலையில் நன்றாகத் தேய்க்க வேண்டும். சுத்தமான ஆலிவ் எண்ணெய் மருந்துக் கடைகளில் கிடைக்கும். தலையில் தடவுவதற்கு எத்தனையோ விதம் விதமான ஹேர் ஆயில்கள் இன்று இருக்கின்றன. இந்த ஹேர் ஆயில்களெல்லாம் தலைமுடியின் ஆயுளைக் குறைத்து விடுகின்றன.

    சுத்தமான நல்லெண்ணெயையும் சுத்தமான தேங்காய் எண்ணெயையும் தவிர வேறு எதையும் தலையில் படவிடக் கூடாது. சிறிது சாதம் வடித்த கஞ்சியில் ஷாம்பூவை ஊற்றி கலந்து தலையில் தேய்த்து குளித்துப் பாருங்கள் எண்ணெய்ப் பசை மற்றும் அழுக்கு நீங்கி கூந்தல் பட்டுப் போல் பளபளக்கும்.

    தலைமுடி வறண்டு, சீராக இல்லாமல் இருந்தால் முகத்தின் தோற்றப் பொலிவும் குறையும். ஆகவே மறுநாள் காலையில் விழா என்றால் முதல் நாள் இரவில் கூந்தலை சீராக்குவது அவசியம். முதல் நாள் மாலையில் கூந்தலை எப்போதும் போல் ஷாம்பு மற்றும் சீயக்காய் வைத்து அலசி விடவும். அடுத்தநாள் கூந்தலை அலசி, துடைத்து விட்டு அலங்காரம் செய்தால் கூந்தல் பளிச்சென இருக்கும். முகமும் தோற்றப் பொலிவுடன் அனைவரையும் கவரும்.

    அழகு நிலையங்களுக்கு சென்று தலை முடியை கலரிங் செய்து விட்டு, ஷாம்பு மூலம் சுத்தம் செய்யும் போது கூந்தலில் உள்ள சில சத்துக்கள் அழிந்து போகும். இதற்கு வீட்டில் ஷாம்பு போட்டு முடித்த பின்னர், தண்ணீரில் கொஞ்சம் வினிகரை கலக்கி கூந்தலை கழுவி அலசவும். இதனால் கூந்தல் பளபளப்பாகும்.
    நீங்கள் ஒரு குழந்தைக்கு தாயாக போகிறீர்கள் அல்லது குழந்தைகளின் தாயாக இருக்கிறீர்கள் என்றால் இந்த பதிவு குழந்தைகளோடு சேர்ந்து நீங்களும் வளர உதவியாக அமையும்,
    குழந்தைகளை பரிவோடு பார்த்து பார்த்து வளர்ப்பதில் அம்மாக்களின் பங்கு முக்கிய அங்கமாக உள்ளது. தாயின் அன்பு கிடைக்காத குழந்தைகள் முழுமையடைவதில்லை. பேசக்கூட தெரியாத குழந்தையின் அழுகுரலில் எது பசி எது வலி என்பதை ஒரு பிரியமுள்ள தாய் உடனடியாக உணர்கிறாள். இது அவளுக்கு மட்டுமே கிடைத்த தனிப்பட்ட சக்தி.

    ஒரு குழந்தை வெறும் குழந்தை மட்டும்தானா. இல்லை. நல்ல மனிதனாக அது வளர வேண்டும் என்றால் அம்மாவின் பங்கு இங்கே அவசியம் தேவை. உங்கள் குழந்தையை அருகில் இருக்கும் வளரும் குழந்தைகளோடு ஒப்பிடாதீர்கள். அதற்கு பதிலாக உங்கள் குழந்தை கொண்டுள்ள நல்ல குணங்களை பாராட்டுங்கள். தவறு செய்கையில் அது தவறு என்பதை அதன் மொழியில் புரிய வையுங்கள்.

    குழந்தைகள் தவறு செய்ததை நீங்கள் அறிந்தால் நிச்சயம் கண்டிக்க வேண்டும். கண்டு கொள்ளாமல் இருக்க கூடாது. கண்டிப்பு என்பது அதற்கு புரியும் வகையில் கண்டிக்க வேண்டும். அம்மா ஏன் நம்மோடு பேசவில்லை என்பதை அவர்கள் உணர்வது அவசியம்.

    முரட்டுத்தனமான குழந்தைகளை அப்படியே விடக்கூடாது. பெரியவர்களிடம் யோசனை கேளுங்கள். அல்லது குழந்தை நல ஆலோசகரின் உதவி உங்களுக்கு அவசியம் தேவைப்படும். கோபம் வந்தால் பொருள்களை உடைப்பது, வீசி எறிவது, அடிப்பது போன்ற காரியங்கள் குழந்தைகளை செய்ய அனுமதிக்காதீர்கள். கொஞ்ச நேரம் வீட்டிற்கு வெளியே நிற்க வையுங்கள். தனிமை அவர்களுக்கு பயத்தை கொடுக்கும். கொஞ்சம் முரட்டுத்தனம் குறையும்.

    குழந்தைகள் அவர்கள் சூழலை அனுசரித்துதான் தங்கள் நடவடிக்கைகளை செய்கிறார்கள். அவர்கள் முன்னிலையில் நீங்கள் கத்துவது சண்டையிடுவது போன்றவற்றை செய்யாதீர்கள். முக்கியமாக குடும்ப சண்டைகளை அவர்கள் முன்னிலையில் தவிருங்கள். அதனால் அவர்கள் மனம் உடையும் வாய்ப்பு அதிகம்.

    மற்றவர்களோடு பகிர்ந்து உண்ணும் பழக்கத்தை நீங்கள் உங்கள் குழந்தைக்கு சிறு வயதிலேயே பழக்குங்கள். அதே போல மற்ற குழந்தைகள் உங்கள் குழந்தையால் காயப்படா வண்ணம் பார்த்து கொள்ளுங்கள். விளையாட்டாக குழந்தைகள் பொய் சொல்வார்கள். அதனை ஆதரிக்காதீர்கள். அது தவறு என்று கூறுங்கள். மற்றவரை மரியாதையை இல்லாமல் குழந்தை பேசினால் உடனே கண்டியுங்கள். நாம் கண்டிக்காவிட்டால் அதனையே அது வெளியிலும் போய் பேசும்படி ஆகி விடும்.

    குழந்தை வளர்ப்பில் ஆண் பெண் பாகுபாடுகள் வேண்டாம். ஒரு பெண்ணாகிய நீங்களே இந்த கொடுமைக்கு துணை போகாதீர்கள். குழந்தைகள் எது விரும்புகிறார்களோ அதற்கான விஷயங்களை தேடி அலசி ஆராய்ந்து அது பற்றி அவர்களுக்கு புரிய வைத்து பின்னர் அதில் ஈடுபட வையுங்கள்.

    மனமார பாராட்டுங்கள். உங்கள் பாராட்டுக்கள் அவர்களை மேலும் நன்றாக வளர உதவி செய்யும். நன்மைகள் தீமைகள் பற்றிய தெளிவை அவர்களுக்கு சொல்லி கொடுங்கள். கொஞ்சம் அன்பு.. கொஞ்சம் கண்டிப்பு.. நிறைய அக்கறை என்கிற விகிதத்தில் அவர்களை நீங்கள் வளர்ப்பது எதிர்கால தலைமுறைக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும்.
    கோடைகாலம் வந்து விட்டது. எனவே குழந்தைகளுக்கு கோடையில் ஏற்படும் நோய் பாதிப்புகளை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது நல்லது.
    குழந்தைகளுக்கு கோடையில் வரும் அம்மை நோயை தடுக்க தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். உயர் சத்து இழப்பை சரிசெய்ய பழச்சாறு தேவை. எனவே கோடையில் ஏற்படும் நோய் பாதிப்புகளை தவிர்க்கவும். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது நல்லது.

    2-12 வயது குழந்தைகள் நிறைய தண்ணீர் குடிக்க வைக்க வேண்டும். 6 மாதம் வரை குழந்தைக்கு தாய்ப்பாலே போதுமானது. அதில் போதிய அளவு நீர் உள்ளது.

    6 மாதத்திற்குப் பின்னர் தாய்ப்பாலுடன் இணை உணவு தரும் போது போதிய நீர் தர வேண்டும். போதிய அளவு நீர் குடிக்காத நிலையில் சிறுநீர் கழிக்கும்போது சிறுநீர் கடுப்பு ஏற்படும். இதனால் வலி தாங்காமல் குழந்தைகள் அழும். 2-12 வயது குழந்தைகள் விளையாடி விட்டு வரும் போது அந்த குழந்தைகளை அழுக்கு போகும் வகையில் குளிப்பாட்ட வேண்டும். அந்தக் குழந்தைகள் 8-10 டம்ளர் தண்ணீரை தினமும் குடிக்கச் செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு காபி டீ தருவதைவிட எலுமிச்சை, ஆரஞ்சு பழ சாற்றினை தரலாம்.

    குளோரைடு இல்லாமல் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டால் குழந்தைகளுக்கு கண் உள்ளே இழுத்துக் கொண்டவாறு இருக்கும். சோடியம், பொட்டாசியம் குளோரைடு ஆகியவை முக்கியமானவை. இதில் இழப்பு ஏற்படுவதை சரி செய்ய உரிய செயல்பாடு மேற்கொள்ள வேண்டும். இந்த பாதிப்புகளை சரி செய்ய இளநீர் குடிக்கலாம்.

    அதில் சோடியம், பொட்டாசியம், குளோரைடு உள்ளது. தினமும் குளிக்க வேண்டும். குழந்தைகளை தினமும் குளிப்பாட்டுவதால் வியர்வை துவாரத்தில் உள்ள அழுக்குகள் நீக்கப்படும். கோடையில் அம்மை நோய் வர வாய்ப்புள்ளது. எனவே அதற்கான தடுப்பூசி போட்டுக் கொள்வது நல்லது. வருமுன் காப்போம். உரிய தற்காப்பு முறைகளை மேற்கொண்டு குழந்தைகளின் ஆரோக்கிய நலனில் துணை நிற்போம்.

    குழந்தைகள் நல டாக்டர் பா.அமுதா ராஜேஸ்வரி, வடமலையான் மருத்துவமனை
    ×