search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளுக்கு வரும் கோடைகால நோய்களை தடுக்க என்ன செய்யலாம்
    X
    குழந்தைகளுக்கு வரும் கோடைகால நோய்களை தடுக்க என்ன செய்யலாம்

    குழந்தைகளுக்கு வரும் கோடைகால நோய்களை தடுக்க என்ன செய்யலாம்

    கோடைகாலம் வந்து விட்டது. எனவே குழந்தைகளுக்கு கோடையில் ஏற்படும் நோய் பாதிப்புகளை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது நல்லது.
    குழந்தைகளுக்கு கோடையில் வரும் அம்மை நோயை தடுக்க தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். உயர் சத்து இழப்பை சரிசெய்ய பழச்சாறு தேவை. எனவே கோடையில் ஏற்படும் நோய் பாதிப்புகளை தவிர்க்கவும். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது நல்லது.

    2-12 வயது குழந்தைகள் நிறைய தண்ணீர் குடிக்க வைக்க வேண்டும். 6 மாதம் வரை குழந்தைக்கு தாய்ப்பாலே போதுமானது. அதில் போதிய அளவு நீர் உள்ளது.

    6 மாதத்திற்குப் பின்னர் தாய்ப்பாலுடன் இணை உணவு தரும் போது போதிய நீர் தர வேண்டும். போதிய அளவு நீர் குடிக்காத நிலையில் சிறுநீர் கழிக்கும்போது சிறுநீர் கடுப்பு ஏற்படும். இதனால் வலி தாங்காமல் குழந்தைகள் அழும். 2-12 வயது குழந்தைகள் விளையாடி விட்டு வரும் போது அந்த குழந்தைகளை அழுக்கு போகும் வகையில் குளிப்பாட்ட வேண்டும். அந்தக் குழந்தைகள் 8-10 டம்ளர் தண்ணீரை தினமும் குடிக்கச் செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு காபி டீ தருவதைவிட எலுமிச்சை, ஆரஞ்சு பழ சாற்றினை தரலாம்.

    குளோரைடு இல்லாமல் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டால் குழந்தைகளுக்கு கண் உள்ளே இழுத்துக் கொண்டவாறு இருக்கும். சோடியம், பொட்டாசியம் குளோரைடு ஆகியவை முக்கியமானவை. இதில் இழப்பு ஏற்படுவதை சரி செய்ய உரிய செயல்பாடு மேற்கொள்ள வேண்டும். இந்த பாதிப்புகளை சரி செய்ய இளநீர் குடிக்கலாம்.

    அதில் சோடியம், பொட்டாசியம், குளோரைடு உள்ளது. தினமும் குளிக்க வேண்டும். குழந்தைகளை தினமும் குளிப்பாட்டுவதால் வியர்வை துவாரத்தில் உள்ள அழுக்குகள் நீக்கப்படும். கோடையில் அம்மை நோய் வர வாய்ப்புள்ளது. எனவே அதற்கான தடுப்பூசி போட்டுக் கொள்வது நல்லது. வருமுன் காப்போம். உரிய தற்காப்பு முறைகளை மேற்கொண்டு குழந்தைகளின் ஆரோக்கிய நலனில் துணை நிற்போம்.

    குழந்தைகள் நல டாக்டர் பா.அமுதா ராஜேஸ்வரி, வடமலையான் மருத்துவமனை
    Next Story
    ×