search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல்
    X
    சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல்

    சிறுநீர் கழிக்கும்போது எரிச்சலா? அப்ப இந்த பாட்டி வைத்தியம் பலன் தரும்

    சிறுநீர் கழிக்கும் போது சிலருக்கு எரிச்சல் ஏற்படும். இந்த பிரச்சனைக்கான காரணத்தையும் அதனை தடுக்கும் பாட்டி வைத்தியத்தையும் அறிந்து கொள்ளலாம்.
    சிறுநீர் கழிக்கும் போது சிலருக்கு எரிச்சல் ஏற்படும். இதற்கு பொதுவான காரணம் என்னவென்றால் கிருமிகள் சிறுநீர் வடிகுழாயின் மூலமாக உடலினுள் நுழையும் போது தொற்று ஏற்படுத்தும். சிறுநீர் பாதையில் வளர்ச்சியடையும் பாக்டீரியாக்களின் விளைவாக அதனை சுற்றியுள்ள திசுக்களில் வீக்கம் ஏற்படுத்துவதன் காரணமாக, வலி மற்றும் எரிச்சல் உண்டாகிறது.

    இது தவிர, உடலில் நீர் வறட்சி, சிறுநீரக கற்கள், கல்லீரல் பிரச்சனை, அல்சர், விந்து அல்லது விரைகளில் உள்ள தொற்றுநோய், பால்வினை நோய், நீரிழிவு, ஊட்டச்சத்துக் குறைவு, குறுகிய சிறுநீர் பாதை போன்றவையும் காரணம் ஆகும்.

    எரிச்சலுக்கான தீர்வு என்ன?

    உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால், சிறுநீரானது அடர்ந்த மஞ்சள் நிறத்தில் வருவதோடு, எரிச்சலோடும் இருக்கும்.

    ஆகவே ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை 2-3 டம்ளர் தண்ணீர் குடிப்பதை பழக்கமாக கொள்ள வேண்டும்.

    சிட்ரஸ் பழத்தின் ஜூஸ், எலுமிச்சை ஜூஸ் ஆகியவை சிறுநீர் எரிச்சலை சரிசெய்யும், ஏனெனில் சிட்ரஸ் பழங்கள் பாக்டீரிய கிரிமிகளை அழிக்கவல்லது.

    தேங்காய் நீர் உடலில் ஏற்படும் நீர்வறட்சியை தடுக்க வல்லது. அதிலும் இதை உடலில் நீர் வறட்சியின் போது 2-3 டம்ளர் குடித்து வந்தால், அந்த எரிச்சலானது போய்விடும். இதனால் வலியுடன் சிறுநீர் வெளியேறுவது குணமாகும்.

    ஒரு டம்ளர் தண்ணீருடன், 1 டேபிள் ஸ்பூன் மல்லித் தூளை சேர்த்து, இரவில் படுக்கும் முன் ஊற வைத்துவிட்டு, மறுநாள் காலையில், அதில் சர்க்கரை சேர்த்து குடித்தால் சிறுநீர் எரிச்சல் சரியாகிவிடும்
    Next Story
    ×