search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    தர்பூசணி
    X
    தர்பூசணி

    உடலுக்கும், பார்வைக்கும் குளிர்ச்சி தரும் தர்பூசணி

    கோடையில் ஏற்படும் எல்லா பிரச்சினைகளிலிருந்தும் நம்மை காக்கிறது தர்பூசணி. உடல் சூட்டைத் தணிக்கும்; வெப்பம் மிகுந்த இந்த காலத்தில் இது நமக்கு கிடைத்த வரப்பிரசாதம்.
    தர்பூசணியில் லைக்கோபீன் என்ற ஆன்டிஆக்ஸிடென்ட் அதிக அளவில் உள்ளது. இது மார்பு, நுரையீரல், கர்ப்பப்பை, பெருங்குடல் போன்ற இடங்களில் ஏற்படும் புற்றுநோயைத் தடுக்கும். பொட்டாசியமும் அதிக அளவில் உள்ளதால் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கும். இதயத்துடிப்பை சீராக்கும்.

    தர்பூசணியில் பீட்டா கரோட்டின், வைட்டமின் சி, லூடீன், சியாக்ஸன்தின் போன்ற ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் அதிகளவில் உள்ளன. இவை மாலைக்கண்நோய், கண்விழி மிகை அழுத்த நோய் போன்றவற்றிலிருந்து கண்களைப் பாதுகாக்கும். அதேபோல இதில் 90 சதவிகிதம் அளவுக்கு நீர் உள்ளது. கோடை காலங்களில் இதைச் சாப்பிட்டால் நீரிழப்பு பிரச்சினைகள் ஏற்படாது. இதைத் தொடர்ந்து சாப்பிட்டுவர எடை குறையும்.

    தர்பூசணி சாப்பிட்ட பிறகு அதன் தோல் பகுதியை தூக்கி எறியாமல், நம் சருமத்தில் தடவலாம். இதில் பாக்டீரியா தொற்று மற்றும் அலர்ஜிக்கு எதிரான தன்மை உள்ளது. முகப்பரு பிரச்சினைக்கும் இது நல்ல தீர்வு தரும். தர்பூசணியை தொடர்ந்துச் சாப்பிட்டுவந்தால், மனநிலை அமைதியாக, நன்றாக இருக்கும். கோடையில் ஏற்படும் எல்லா பிரச்சினைகளிலிருந்தும் நம்மை காக்கிறது தர்பூசணி. உடல் சூட்டைத் தணிக்கும்; வெப்பம் மிகுந்த இந்த காலத்தில் இது நமக்கு கிடைத்த வரப்பிரசாதம்.
    Next Story
    ×