search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளுக்கு அவசியம் தேவை தடுப்பூசிகள்..
    X
    குழந்தைகளுக்கு அவசியம் தேவை தடுப்பூசிகள்..

    குழந்தைகளுக்கு அவசியம் தேவை.. ஐந்து தடுப்பூசிகள்..

    ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். குறிப்பிட்ட வயதில் வரையறுக்கப்பட்டிருக்கும் தடுப்பூசிகளை தவறாமல் போடுவதன் மூலம் நோய்த்தொற்று ஏற்படாமல் தற்காத்துக்கொள்ளலாம்.
    குழந்தைகளுக்கு சரியான காலகட்டத்தில் தடுப்பூசி போடுவது அவசியம். ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். அதனால் எளிதில் நோய்த்தொற்று பாதிப்புக்கு ஆளாகக்கூடும். குறிப்பிட்ட வயதில் வரையறுக்கப்பட்டிருக்கும் தடுப்பூசிகளை தவறாமல் போடுவதன் மூலம் நோய்த்தொற்று ஏற்படாமல் தற்காத்துக்கொள்ளலாம்.

    இந்தியாவில் ஆண்டுதோறும் 26 மில்லியன் குழந்தைகள் பிறக்கின்றன. இது மிக அதிகமான எண்ணிக்கையாகும். அதே நேரத்தில் இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளில் மூன்றில் இரண்டு பங்கினருக்கு சரியான நேரத்தில் தடுப்பூசிகள் போடப்படுவதில்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. குழந்தைகளின் ஆரோக்கியத்தை தீர்மானிப்பதில் தடுப்பூசிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தொடர்ந்து வழங்குவதிலும், சுற்றி இருப்பவர்களிடம் இருந்து பாதுகாப்பு கவசமாக செயல்படுவதிலும் தடுப்பூசிகளின் பங்களிப்பு இன்றியமையாதது.

    குழந்தை பிறந்த முதல் நான்கு மாதங்களுக்குள் முதன்மை தடுப்பூசிகளை தவறாமல் செலுத்தியாக வேண்டும். தடுப்பூசிக்கான அட்டவணையை தயாரித்து குறிப்பிட்ட நேரத்தில் தடுப்பூசி போடுவதை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். டி.பி.டி. எச்.ஐ.பி., போலியோ, ஹெபாடைடிஸ், நியூமோகோகல், ரோடா வைரஸ் தடுப்பூசிகள் இன்றியமையாதவை.

    பொதுவாக குழந்தை பிறந்த 5 வாரத்தில் இருந்து 14 வாரங்களுக்குள் தடுப்பூசி செலுத்தியாகவேண்டும். கொரோனா காலகட்டத்தில் தடுப்பூசி போடுவதில் தாமதம் ஏற்பட்டிருந்தால் மருத்துவரிடம் கலந்தாலோசித்து தேவையான தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளவேண்டும். இந்திய அரசாங்கமும் உலக சுகாதார அமைப்பும் குழந்தை பருவ தடுப்பூசிகளின் முக்கியத்துவத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

    உலக அளவில் கிட்டத்தட்ட 1 மில்லியன் குழந்தைகள் ஐந்து வயதை நிறைவு செய்வதற்குள்ளாகவே துரதிருஷ்டவசமாக இறந்துபோகிறார்கள். நான்கில் ஒருவர் வயிற்று போக்கு, நிமோனியா காரணமாக மரணத்தை தழுவுகிறார்கள். நோய் எதிர்ப்பு தன்மை இல்லாததே இதற்கு காரணம்.

    குழந்தைகளுக்கு மிக முக்கியமான ஐந்து தடுப்பூசிகள் என்னென்ன தெரியுமா?

    பி.சி.ஜி எனப்படும் பேசிலஸ் கால்மெட் குயரின் தடுப்பூசி: இது காச நோய்க்கான கட்டாய தடுப்பூசி. இந்த தடுப்பூசி போடாதவர்கள் காசநோய் பாதிப்புக்குள்ளாவதற்கு வாய்ப்புகள் அதிகம். இந்த தடுப்பூசியின் தாக்கம் 15 முதல் 20 ஆண்டுகள் வரை நீடிக்கும். அதுவரை நோய் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் திறன் கொண்டது.

    டி.பி.டி தடுப்பூசி: இது ஒருவகை ஆன்டிஜென் தடுப்பூசி. கொடிய நோய்களில் இருந்து பாதுகாக்கும் தன்மை கொண்டது. நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க செய்யும். இது டிப்தீரியா, பெர்டுசிஸ் மற்றும் டெட்டனஸ் என மூன்று வகையான தடுப்பூசி தன்மைகளை கொண்டது. குறிப்பிட்ட இடைவெளியில் குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசியை போடுவது அவசியம்.

    போலியோ: இது வாய் வழியாக வழங்கப்படுகிறது. நாட்டில் செயல்படுத்தப்படும் தடுப்பூசி திட்டங்களில் மிக முக்கியமான அங்கம் வகிக்கும் இது, முகாம்கள் வழியாக குழந்தைகளை எளிதில் சென்றடைகிறது. போலியோவுக்கு எதிராக குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்கிறது.

    ஹெபாடைடிஸ் பி தடுப்பூசி: ஹெபாடைடிஸ் என்பது கல்லீரலை தாக்கும் வைரசாகும். தாய்க்கு ஹெபாடைடிஸ் பாதிப்பு இருந்தால் எளிதில் குழந்தைக்கும் பரவி விடக்கூடும். அதனால் குழந்தை பிறந்த உடனே தடுப்பூசி போட வேண்டிய சூழல் ஏற்படும். தாய்க்கு ஏதும் பாதிப்பு இல்லை என்றால் சில வாரங்கள் கழித்து குழந்தைக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

    எம்.எம்.ஆர். தடுப்பூசி: தட்டம்மை, ரூபெல்லா, புழுக்கள் ஆகியவற்றில் இருந்து பாதுகாப்பு வழங்க இந்த தடுப்பூசி கட்டாயமானதாக கருதப்படுகிறது.
    Next Story
    ×